Jump to content

சாம்பியன்ஸ் டிராபி செய்திகள்...


Recommended Posts

இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. ஐ.சி.சி.யால் இந்தத் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது

 

 

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸி. அணி அறிவிப்பு: ஸ்டார்க், லின் சேர்ப்பு; பால்க்னெர் அவுட்

சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி ஆல் ரவுண்டரான பல்க்னெருக்கு இடம் கிடைக்கவில்லை. ஸ்டார்க், லின் இடம்பிடித்துள்ளனர்.

 
 
 
 
சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸி. அணி அறிவிப்பு: ஸ்டார்க், லின் சேர்ப்பு; பால்க்னெர் அவுட்
 
மெல்போர்ன், ஏப்.20-

இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. ஐ.சி.சி.யால் இந்தத் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது என்பதால் அனைத்து அணிகளும் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நினைப்பில் உள்ளது. கடந்த முறை நடைபெற்ற தொடரில் டோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

இரண்டு முறை ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியுள்ளது. 3-வது முறையாக அந்த அணி கோப்பையை கைப்பற்றும் எண்ணத்தில் உள்ளது.

இதற்கேற்ற வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. இந்திய டெஸ்ட் தொடரின்போது காயத்தால் விலகிய மிட்செல் ஸ்டார்க், ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய கிறிஸ் லின் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முன்னணி ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னெருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல் ஷேன் மார்ஷ், கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஜார்ஜ் பெய்லி போன்றோருக்கும் இடம் கிடைக்கவில்லை.

சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

1. ஸ்டீவன் சுமித் (கேப்டன்), 2. வார்னர், 3. ஆரோன் பிஞ்ச், 4. மேக்ஸ்வெல், 5. மேத்யூ வடே, 6. கிறிஸ் லின், 7. ஹென்றிக்ஸ், 8. கம்மின்ஸ், 9 ஹாஸ்டிங்ஸ், 10. ஹசில்வுட், 11. டிராவிஸ் ஹெட், 12. பேட்டின்சன், 13. மிட்செல் ஸ்டார்க், 14. ஸ்டோய்னிஸ், 15. ஆடம் ஜம்பா.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/20134704/1080908/Australia-announce-squad-for-Champions-Trophy-2017.vpf

Link to comment
Share on other sites

  • Replies 236
  • Created
  • Last Reply

சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; டேல் ஸ்டெய்ன் இல்லை

 

டேல் ஸ்டெய்ன். | கோப்புப் படம்.
டேல் ஸ்டெய்ன். | கோப்புப் படம்.

இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் இடம்பெறவில்லை.

அதே போல் காயமடைந்த வெர்னன் பிலாண்டருக்கும் அணியில் இடமில்லை.

ஆனால் வேகப்பந்து வீச்சாளர் மோர்னி மோர்கெல், சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மஹராஜ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஏ.பி.டிவில்லியர்ஸ் கேப்டனாக நீடிப்பார்.

பவுலிங் ஆல்ரவுண்டர்களான கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னெல் ஆண்டைல் பெலுக்வயோ, டிவைன் பிரிடோரியஸ் ஆகியோர் அணியில் உள்ளனர். அபாய வீச்சாளர் ரபாதாவும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணி வருமாறு:

ஏ.பி.டிவில்லியர்ஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, குவிண்டன் டி காக், டுபிளெசிஸ், டுமினி, டேவிட் மில்லர், ஃபர்ஹான் பிஹார்டீன், கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னெல், ஆண்டைல் பெலுக்வயோ, கேகிசோ ரபாடா, இம்ரான் தாஹிர், டிவைன் பிரிடோரியஸ், கேஷவ் மஹராஜ், மோர்னி மோர்கெல்.

http://tamil.thehindu.com/sports/சாம்பியன்ஸ்-டிராபி-தென்-ஆப்பிரிக்க-அணி-அறிவிப்பு-டேல்-ஸ்டெய்ன்-இல்லை/article9650112.ece

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் டிராபி: மொர்டசா தலைமையில் வங்கதேச அணி அறிவிப்பு

 
படம்.| ஏ.எஃப்.பி.
படம்.| ஏ.எஃப்.பி.
 
 

இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம், மஹ்முதுல்லா, ஷாகிப் உல் ஹசன், மோர்டசா உள்ளிட்ட அனுபவ வீரர்களுடன் மெஹதி ஹசன் மிர்சா போன்ற இளம் வீரர்களும் கலந்த மொர்டசா தலைமை வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2015 உலகக்கோப்பையில் இங்கிலாந்தை வங்கதேசம் வீழ்த்தியது நினைவிருக்கலாம்.

வங்கதேச அணி வருமாறு:

மஷ்ரபே மொர்டசா (கேப்டன்), தமிம் இக்பால், சவுமியா சர்க்கார், இம்ருல் கயேஸ், முஷ்பிகுர் ரஹிம், ஷாகிப் உல் ஹசன், மஹ்முதுல்லா, சபீர் ரஹ்மான், மொசாடெக் ஹுசைன், மெஹதி ஹசன் மிராஸ், சுன்சாமுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, ரூபல் ஹுசைன், ஷபியுல் இஸ்லாம்.

http://tamil.thehindu.com/sports/சாம்பியன்ஸ்-டிராபி-மொர்டசா-தலைமையில்-வங்கதேச-அணி-அறிவிப்பு/article9653799.ece

Link to comment
Share on other sites

11 hours ago, நவீனன் said:

சாம்பியன்ஸ் டிராபி:

ஆமா, இதுக்கு யாழ்களத்தில போட்டி கீட்டி கிடையாதா நவீனன்.

Link to comment
Share on other sites

2 hours ago, ஜீவன் சிவா said:

ஆமா, இதுக்கு யாழ்களத்தில போட்டி கீட்டி கிடையாதா நவீனன்.

நீங்கள்  எல்லோரும் போட்டியில் பங்குபற்ற தயார் என்றால் போட்டி நடத்தலாம்..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

நீங்கள்  எல்லோரும் போட்டியில் பங்குபற்ற தயார் என்றால் போட்டி நடத்தலாம்..:)

தாராளமாய் நடத்துங்கள், நாங்கள் ரெடி.... எங்கள் தலைக்குள் அவ்வளவு டேலண்ட் கொட்டிக் கிடக்கு.....!  tw_blush:

Link to comment
Share on other sites

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்து, வங்காள தேசத்திற்கு எதிராக இந்தியா பயிற்சி போட்டியில் விளையாடுகிறது

ஐ.சி.சி. சாம்பயின்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி, நியூசிலாந்து மற்றும் வங்காள தேசம் அணிகளுக்கு எதிராக தலா ஒரு பயிற்சி ஆட்டத்தில் மோத இருக்கிறது.

 
 
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்து, வங்காள தேசத்திற்கு எதிராக இந்தியா பயிற்சி போட்டியில் விளையாடுகிறது
 
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அவை ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பிரிவில் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்தியா ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், இலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்தியா ஜூன் 4-ந்தேதி பாகிஸ்தானையும், 8-ந்தேதி இலங்கையையும், 11-ந்தேதி தென்ஆப்பிரிக்காவையும் சந்திக்கிறது.

இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் 6 பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியா இரண்டு போட்டிகளில் விளையாடுகிறது. 28-ந்தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்தையும், 30-ந்தேதி அதே மைதானத்தில் வங்காள தேச அணியையும் எதிர்கொள்கிறது.

ஐ.பி.எல். தொடர் மே 21-ந்தேதி முடிவடைகிறது. இந்த தொடர் முடிந்த உடனே இந்தியா இங்கிலாந்து புறப்பட்டுச் செல்லும். இந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களும் நடப்பு சாம்பியனான இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

‘ஏ’ பிரவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் வங்காள தேசம் அணிகள் இடம்பிடித்துள்ளன.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/21155015/1081139/ICC-Champions-Trophy-India-to-play-warm-up-matches.vpf

Link to comment
Share on other sites

6 hours ago, நவீனன் said:

நீங்கள்  எல்லோரும் போட்டியில் பங்குபற்ற தயார் என்றால் போட்டி நடத்தலாம்..:)

முடிஞ்சா நடத்தித்தான் பாருங்களேன்.

நாங்க ரெடி நீங்க ரெடியா

 

Link to comment
Share on other sites

இலங்கை அணி இன்று அறிவிக்கப்படும்

 

 

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

SLC.jpg

எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாநது மற்றும் வேல்ஸில் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. 

ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியில்முதல் 8 .டங்களைப் பிடித்துள்ள அணிகள் இந்தத் தொடரில் மோதவுள்ளன. அதன்படி இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய 8 அணிகள் இதில் மோதுகின்றன.

இந்தத் தொடரில் மோதவுள்ள அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் தங்களுடைய அணியை அறிவித்து விட்டன. 

இந்நிலையில் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் ஆடப்போகும் இலங்கை அணி இன்று அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை அணித் தலைவர் மெத்தியூஸ் இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐ.பில்.எல்.தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருகின்றார்.

இந்நிலையில் நேற்றுக்காலை அவர் அவசரமாக நாடு திரும்பியதாகவும் அதைத் தொடர்ந்து தெரிவுக்குழுவுடன் இணைந்து அணி வீரர்களின் தெரிவு இடம்பெற்றதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி இலங்கை அணி இங்கிலாந்துக்கு பயணிக்கவுள்ளது. அதேவேளை, தொடர் ஆரம்பமாவதற்கு முன் சில பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத்தில் தனது முதல் போட்டியில் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/19329

Link to comment
Share on other sites

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு: மெக்கிளெனகன், கோரி, ஆடம் மில்னே சேர்ப்பு

 

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் ஐ.சி.சி. சாம்பயின்ஸ் டிராபி தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கோரி, மில்னே, மெக்கிளெனகன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு: மெக்கிளெனகன், கோரி, ஆடம் மில்னே சேர்ப்பு
 
ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வங்காள தேச அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது அணியை அறிவித்துள்ளன. காயத்தால் விளையாடாமல் இருந்து கோரி ஆண்டர்சன், ஆடம் மில்னே மற்றும் மெக்கிளெனகன் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

நியூசிலாந்து அணியில் ஐந்து சிறப்பு பேட்ஸ்மேன்கள், நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், மூன்று வேகப்பந்து ஆல்ரவுண்டர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் விக்கெட் கீப்பர் இடம்பிடித்துள்ளனர்.

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் மெக்கிளெனகன் மும்பை இந்தியன்ஸ் அணியிலும், கொலின் டி கிராண்ட்ஹோம் கொல்கத்தா அணியிலும், கோரி ஆண்டர்சன் டெல்லி அணியிலும் விளையாடி வருகின்றனர்.

சாம்பயின்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. கேன் வில்லியம்சன் (கேப்டன்), 2. கோரி ஆண்டர்சன், 3. ட்ரென்ட் போல்ட், 4. நீல் ப்ரூம், 5. கொலின் டி கிராண்ட்ஹோம், 6. மார்ட்டின் கப்தில், 7. டாம் லாதம், 8. மிட்செல் மெக்கிளெனகன், 9. ஆடம் மில்னே, 10. ஜிம்மி நீஷம், 11. ஜீத்தன் பட்டேல், 12. லூக் ரோஞ்சி. 13. மிட்செல் சான்ட்னெர், 14. டிம் சவுத்தி, 15. ராஸ் டெய்லர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/24111800/1081600/BLACKCAPS-squad-announced-for-ICC-Champions-Trophy.vpf

Link to comment
Share on other sites

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு! : முக்கிய வீரர்கள் அணியில் இணைப்பு

இங்கிலாந்தில் எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

18136992_10207187389397793_614460683_n.j

சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இலங்கை அணி தலைவராக எஞ்சலோ மெத்தியுஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், உப தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாமில், இலங்கை அணியின் அனுபவ வீரர்கள் சிலர் இணைக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக தமது திறமைகளை வெளிப்படுத்திவரும் வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை அனுபவம் வாய்ந்த முக்கிய வீரர்களான திசர பெரேரா, லசித் மலிங்க, சாமர கபுகெதர மற்றும் நுவான் குலசேகர அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியின் முழுவிபரம் :

1. எஞ்சலோ மெத்தியுஸ் (அணித் தலைவர்)

2. உபுல் தரங்க (உப தலைவர்)

3. நிரோஷன் டிக்வெல்ல

4. குசல் ஜனித் பெரேரா

5. குசால் மெண்டிஸ்

6. சாமர கபுகெதர

7. அசேல குணரத்ன

8. தினேஷ் சந்திமால்

9. லசித் மலிங்க

10. சுராங்க லக்மால்

11. நுவான் பிரதீப்

12. நுவான் குலசேகர

13. திசர பெரேரா

14. லக்ஷான் சந்தகன்

15. சீகுகே பிரசன்ன

இதேவேளை மேலதிக வீரர்களாக டில்ருவான் பெரேரா மற்றும் தனுஷ்க குணதிலக ஆகியோரை  இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளதுடன், செம்பியன் கிண்ணத்துக்கு அவசரமாக வீரர்கள் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அங்கு அனுப்பிவைப்பதற்காக மேலதிக ஐந்து வீரர்கள் கொழும்பில் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பார்கள் எனவும் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

குறித்த ஐவரின் பெயர்கள் பின்வருமாரு :

1. விகும் சஞ்சய

2. லஹிரு குமார

3. சச்சித்ர பத்திரன

4. மிலிந்த சிறிவர்தன

5. அகில தனஞ்சய

http://www.virakesari.lk/article/19339

Link to comment
Share on other sites

ICC சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் இலங்கை அணியின் சாதனைகள் – ஒரு கண்ணோட்டம்
Cover-pic4.jpg

ICC சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் இலங்கை அணியின் சாதனைகள் – ஒரு கண்ணோட்டம்

singer-league-2017-728.jpg

ICC சம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் எனும் பொழுது இலங்கை அணியைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் பல சாதகமான பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்திருந்தது.

அத்துடன் எதிரணிகளுக்கு அச்சுறுத்தல் மிக்க அணியாகத் திகழ்ந்திருந்தது என்பதில் சந்தேகமில்லை. எனினும், தற்பொழுது நிலைமை சற்று மாறியுள்ளது. அண்மைய காலங்களில் இலங்கை அணியிலிருந்து மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கரா மற்றும் TM டில்ஷான் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஓய்வு பெற்றதிலிருந்து இம்முறை சம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடருக்கு இலங்கை அணி பாரிய சவால்களுக்கு மத்தியில் களமிறங்கவுள்ளது.

இதுவரை நடைபெற்ற அனைத்து சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்களிலும் பங்குபற்றியுள்ள இலங்கை அணியானது, எட்டாவது முறையாகவும் இம்முறை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்குபற்றவுள்ளது.  

கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்களில் மொத்தமாக 24 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி அரைவாசிக்கும் மேற்பட்ட போட்டிகளில் வென்றுள்ளது. 13 போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்தும் இரண்டு போட்டிகள் வெற்றி தோல்வியின்றியும் முடிவுற்ற நிலையில், 9 போட்டிகளில் மாத்திரமே தோல்வியுற்றுள்ளது.

அத்துடன், இலங்கை மண்ணில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண தொடரின் போது இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவானது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

2002ஆம்  ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியின் போது மழை காரணமாக போட்டியில் தடங்கல் ஏற்பட்டிருந்தது. அதனால், ஒதுக்கப்பட்ட மற்றுமொரு நாளுக்கு போட்டி பிற்போடப்பட்டது. எனினும் அந்த நாளும், மீண்டும் மழையினால் போட்டிக்கு இடையூறு ஏற்பட்டதனால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த இந்திய அணியுடன் இலங்கை அணியும் சேர்ந்து கூட்டு சம்பியனாக முடி சூடிக்கொண்டது.

கடந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்களில் இலங்கை அணி சிறப்பாக விளையாடியுள்ளது. எனினும் இம்முறை நடைபெறவுள்ள ICC சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் பாரிய சவால் மற்றும் பலம் வாய்ந்த அணிகளுக்கு மத்தியில் தனது திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இலங்கை அணி காணப்படுகின்றது.

அந்த வகையில் எதிர்வரும் ICC சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ள நிலையில் கடந்த காலங்களில் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் இலங்கை வீரர்களால் நிலை நாட்டியுள்ள சாதனைகள் மற்றும் புள்ளி விபரங்களை சற்று நோக்குவோம்.

  • அதிகளவான சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் பங்கெடுத்த வீரர்களாக மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில், 2000ஆம் ஆண்டு முதல் 2013ஆம் வரை நடைபெற்றுள்ள போட்டிகளில் மொத்தமாக 22 போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர்.
  • 2017ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அணியில் எட்டு வீரர்கள் – லசித் மலிங்க, அணித் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ், நுவன் குலசேகற, உபுல் தரங்க, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், திசர பெரேரா மற்றும் சாமர கபுகெதர ஆகிய வீரர்கள் இதற்கு முன்னதாக சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர்.
  • அத்துடன், தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை அணி சார்பாக அதிகளவு சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றியுள்ள லசித் மலிங்க, 2015ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • துடுப்பாட்டத்தில், அதிகூடிய ஓட்டங்களாக முன்னாள் அணித் தலைவர்களான மஹேல மற்றும் சங்கக்கார ஆகியோர் முறையே 742, 683 ஓட்டங்களை சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் குவித்துள்ளனர்.
  • Sangaஒரு போட்டியில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக குமார் சங்கக்கார ஆட்டமிழக்காமல் பெற்ற 134 ஓட்டங்களை, 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் பதிவு செய்தார்.
  • இலங்கை அணி சார்பாக அதிக சதங்கள் பெற்றவர்களில் உபுல் தரங்க இரண்டு சதங்களைப் பதிவு செய்துள்ள அதேநேரம், ஐந்து போட்டிகளில் விளையாடி சராசரியாக 53.53 என்ற ஓட்ட விகிதத்தைக் கொண்டுள்ளார். அத்துடன், இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க இரண்டு போட்டிகளில் மாத்திரம் பங்குபற்றி சிறந்த சாராசரியான 94 என்ற ஓட்ட விகிதத்தைக் கொண்டுள்ள அதேநேரம் 90 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டங்களாகப் பதிவு செய்துள்ளார்.
  • பந்து வீச்சில், சூழல் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 17 போட்டிகளில் பங்குபற்றி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேநேரம் இறுதி ஓவர்களில், சிறப்பாக பந்துவீசும் லசித் மலிங்க 22 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். எதிர்வரும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை அணி சிறப்பாக விளையாடினால், லசித் மலிங்கவுக்கு முத்தையா முரளிதரனின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.
  • 2006/07ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில், பர்வீஸ் மஹ்ரூப் 15.83 சாராசரியில் 5.27 ஓட்ட விகிதத்தில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு சம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளராகத் திகழ்கின்றார்

Mahaஅந்தப் போட்டியில், மஹ்ரூபின் சிறந்த பந்து வீச்சினால் (6/14) மேற்கிந்திய தீவுகள் அணியின் சகல விக்கெட்டுகளையும் 30.4 ஓவர்களில் 80 ஓட்டங்களுக்கு இலங்கை அணி கைப்பற்றியிருந்தது. அத்துடன், அப்போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

  • 2009ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில், தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 319 ஓட்டங்களைப் பெற்றுள்ளதே இலங்கை அணியின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது. குறித்த போட்டியில், TM டில்ஷான் 106 ஓட்டங்களைக் குவித்த அதேநேரம் ஜயவர்தன மற்றும் சங்கக்கார ஆகியோர் முறையே 77, 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

பல சாதனைகளை  நிலைநாட்டிய வீரர்கள் இல்லாத நிலையில், எதிர்வரும் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரை இலங்கை வீரர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை சற்று பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் அறிவிப்பு

இங்கிலாந்தில் நடக்க உள்ள டாப்-8 அணிகள் மட்டுமே பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் அறிவிப்பு
 
லாகூர் :

டாப்-8 அணிகள் மட்டுமே பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடரில் ஏற்பட்ட தோல்விக்காக கழற்றிவிடப்பட்ட அசார் அலி, உமர் அக்மல் மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். அதே சமயம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தொடர்நாயகன் விருதை பெற்ற கம்ரன் அக்மல் நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி விவரம்: சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), அகமது ஷேசாத், அசார் அலி, முகமது ஹபீஸ், பாபர் அசாம், சோயிப் மாலிக், உமர் அக்மல், இமாத் வாசிம், பஹார் ஜமான், பஹிம் அஷ்ரப், முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஜூனைட் கான், ஹசன் அலி, ஷதப் கான்.

இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜாக் பால், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹாலஸ், லியாம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/26091443/1081985/Champions-Trophy-Pakistan-England-Teams-Announced.vpf

Link to comment
Share on other sites

சாம்பியன் டிராபியில் இருந்து இந்திய அணி விலகாது

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணி விலகாது என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

 
சாம்பியன் டிராபியில் இருந்து இந்திய அணி விலகாது
 
புதுடெல்லி:

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் ‘டாப் 8’ நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்தப்போட்டிக்கான அணி வீரர்களை அறிவிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. இந்தியாவை தவிர மற்ற 7 நாடுகளும் இந்தப்போட்டிக்கான அணிகளின் வீரர்களை அறிவித்துவிட்டன.

இதனால் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியானது. வருவாய் பகிர்வு தொடர்பாக ஐ.சி.சி. தலைவர் சசாங்க மனோகரின் யோசனையை இந்திய கிரிக்கெட் வாரியம் நிராகரித்து இருந்தது. அதோடு வீரர்களை அறிவிக்காமலும் இருந்தது. இதன் காரணமாக இந்த சந்தேகம் உருவானது.

இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இருந்து இந்திய அணி விலகாது என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. வருவாய் பகிர்வு பிரச்சினை தொடர்பாக ஐ.சி.சி. கூட்டத்தில் இந்தியா பிரச்சினை கிளப்பும் என்று தெரிகிறது.

ஐ.சி.சி.யின் கூட்டத்துக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணியை கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும் 28-ந்தேதி இந்திய வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கும் முன்பு ஐ.சி.சி. வருவாயில் அதிக பங்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்த விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டு அனைத்து கிரிக்கெட் சங்கங்களுக்கும் ஒரே மாதிரியான வருவாயை வழங்க ஐ.சி.சி. விதியை திருத்தியது.

இதனால் வருவாய் இழப்பு ஏற்படும் என்று இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதை ஈடுசெய்ய ரூ.650 கோடியை கூடுதலாக வழங்க ஐ.சி.சி. முன்வந்த யோசனையை இந்தியா நிராகரித்துவிட்டது. ஐ.சி.சி. கூட்டத்தில் இதுபற்றி இறுதி முடிவு செய்யப்படும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/26115949/1082038/Indian-team-will-not-step-down-from-championship-trophy.vpf

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் டிராஃபி 7 அணி வீரர்கள் அறிவிப்பு. யார் IN யார் OUT?

 

மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி பதினெட்டாம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் எட்டு அணிகள் கலந்துகொள்ள உள்ளன. இந்தியாவைத் தவிர மற்ற ஏழு அணிகளும் இந்த தொடருக்கான  வீரர்களை அறிவித்து விட்டன. எந்த அணியில் யார் யார் இடம்பெற்றிருக்கிறார்கள், யார் அவுட் என்பதை பார்ப்போமா?

ஆஸ்திரேலியா :-

உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஜேம்ஸ் ஃபால்க்னர் ஆகியோரை நீக்கியிருக்கிறது ஆஸ்திரேலிய நிர்வாகம். நீண்ட இடைவெளிக்கு பிறகு மோசஸ் ஹென்றிக்ஸ், கிறிஸ் லின் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

australia

அணி விவரம் :-

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்) , டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், ஆரோன் பின்ச், ஜான் ஹாஸ்டிங்ஸ், ஜாஸ் ஹாஸில்வுட், டிராவிஸ் ஹெட், மோசஸ் ஹென்றிக்ஸ், கிறிஸ் லின், கிளென் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் பட்டின்சன், மிச்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மாத்யூ வேடு, ஆடம் ஜாம்பா 

 வங்கதேசம் : -

 வேகப்பந்து வீச்சாளர்   ஷபிபுல் இஸ்லாம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் உடன் ஷபிபுல்லும் இணைவதால் அணி பலமடைகிறது. 

அணி  விவரம் : -

தமீம் இக்பால், சவுமியா சர்க்கார், இம்ருல் கயஸ், முஸ்தாபாசுர் ரஹ்மான்,  ஷகிப்  அல் ஹசன், மகமதுல்லா, சபீர் ரஹ்மான், மொசாதக் ஹுசேன், மெஹந்தி ஹாசன், சன்ஸாமுல் இஸ்லாம், மஷ்ரஃபே மோர்தாசா (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், தஸ்கின் அகமது, ரூபல் ஹுசேன், ஷபிபுல் இஸ்லாம். 

இங்கிலாந்து  :- 

காயத்தால் அவதிப்பட்டிருந்த மார்க்வுட், டேவிட் வில்லி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

அணி விவரம் :- 

இயான் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பார்ஸ்டோ, ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், லயாம் பிளங்கட், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட்.

நியூசிலாந்து :-

மிச்சேல் மெக்லாகன், ஆடம் மில்னே, கோரே ஆண்டர்சன் ஆகிய மூன்று பேரும் காயத்தில் இருந்து மீண்டதால் அணிக்கு திரும்பியிருக்கின்றனர்.  இஷ் சோதி நீக்கப்பட்டிருக்கிறார். 

அணி விவரம் :-

கேன் வில்லியம்சன் (கேப்டன்) , கோரே ஆண்டர்சன், ட்ரென்ட் போல்ட், நெயில் ப்ரூம், கோலின் டி கிராண்ட்ஹோம், மார்ட்டின் கப்தில், டாம் லாதம், மிச்சேல் மெக்லாகன், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், ஜிதன் படேல், லுக் ராஞ்சி, மிச்செல் சான்ட்னர், டிம் சவுதி, ராஸ் டெய்லர்.

பாகிஸ்தான் :- 

கம்ரன் அக்மலை நீக்கியிருக்கிறது பாக் நிர்வாகம். அவருக்கு பதிலாக அவரது தம்பி உமர் அக்மல் அணியில் இடப்பெற்றிருக்கிறார். அசார் அலியும்  அணிக்குத் திரும்பியிருக்கின்றனர்.

அணி விவரம் :-

சர்பராஸ் அகமது (கேப்டன்) , அசார் அலி, அகமது சேஷாத், முகமது ஹபீஸ், பாபர் அசாம், சோயிப் மாலிக், உமர் அக்மல், பஹார் ஜமான், இமாத் வாசிம், ஹசன் அலி, பஹிம் அஷ்ரப், வஹாப் ரியாஸ், முகமது ஆமீர், ஜுனைத் கான், ஷதாப் கான். 

தென் ஆப்ரிக்கா :-

டேல் ஸ்டெயின், அணியில் சேர்க்கப்பட வில்லை. மோர்னே மோர்கல் மீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கிறார்.

சாம்பியன்ஸ் டிராஃபி

அணி விவரம் :- 

ஏபி டி வில்லியர்ஸ் (கேப்டன்) , ஹாஷிம் ஆம்லா , குயின்டன் டீ காக், பாப் டூ பிளசிஸ்,  ஜே பி டுமினி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், வேய்ன் பார்னெல், ஆண்டிலே பெலுக்வாயோ, ககிஸோ ரபாடா, இம்ரான் தாகீர், டுவைன் ப்ரோடோரியஸ், கேஷவ் மகராஜ், பர்ஹான் பெகர்தீன், மோர்னே மோர்கல் 

இலங்கை :- 

லசித் மலிங்கா, ஆஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் அணிக்குத் திரும்பியிருக்கிறார்கள். 

அணி விவரம் :-

ஆஞ்செலோ மேத்யூஸ்,  உபுல் தரங்கா, நிரோஷன் டிக்வெல்லா, குசால் பெரேரா, குஷால் மெண்டிஸ், சமாரா கப்புகெதரா, அசேலா குணரத்னே, தினேஷ் சந்திமால், லசித் மலிங்கா, சுரங்கா லக்மல், நுவான் பிரதீப், நுவான் குலசேகரா, திசேரா பெரேரா, லக்ஷன் சடங்கன், செக்யூகே பிரசன்னா.

http://www.vikatan.com/news/sports/87687-seven-teams-announced-the-players-details-for-champions-trophy.html

Link to comment
Share on other sites

வலுக்கும் ஐசிசி, பிசிசிஐ மோதல்!- சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா இடம்பெறுமா?

 
 
BCCIa_3158823f.jpg
 
 
 

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் அறிவிக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐசிசி) வருமான பகிர்வு தொடர்பான பிரச்சினையால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக யூகங்கள் எழுந்துள்ளன.

ஜூன் 1ஆம் தேதி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இதற்கான அணிகள் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என ஐசிசி அறிவித்திருந்தது. பங்கேற்கும் மற்ற 7 அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்டாலும் இந்திய கிரிக்கெட் வாரியம் கடைசி தேதி கடந்தும் இன்னும் அணி விவரத்தை அறிவிக்கவில்லை.

ஐசிசி, தனது நிதி அமைப்பு மற்றும் நிர்வாக அமைப்பில் சில மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளது. இதனால் பிக் த்ரீ (Big Three) என அழைக்கப்படும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வாரியங்களின் செல்வாக்கு மற்றும் வருமானம் குறையும் நிலை ஏற்படும். இந்திய கிரிக்கெட் வாரியம் அந்த மாறுதல்களை எதிர்த்து வருகிறது. இதையொட்டியே தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் - ஐசிசிக்கும் பிரச்சினை எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

துபாயில் நடந்த ஐசிசியின் நிர்வாகக் கூட்டத்தில் இந்த புது நிதி அமைப்பு, உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்தும், நிறைவேற்றப்பட்டது. இந்த கருத்து வேறுபாடால், சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்தே இந்திய அணி விலகலாம் என்றும் யூகங்கள் எழுந்துள்ளன.

புது விதிமுறைகளால், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 277 மில்லியன் டாலர் வரை அடுத்த 8 ஆண்டுகளில் வருமானம் குறைய வாய்ப்பு உள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அடுத்த சில நாட்களில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/வலுக்கும்-ஐசிசி-பிசிசிஐ-மோதல்-சாம்பியன்ஸ்-கோப்பையில்-இந்தியா-இடம்பெறுமா/article9667277.ece?homepage=true

Link to comment
Share on other sites

390 மில்லியன் டாலர் தர ஐசிசி ரெடி: 450 மில்லியன் கேட்கும் பி.சி.சி.ஐ.- சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பங்கேற்குமா?

 

புதிய நடைமுறைக் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் குறைகிறது. தற்போது 390 மில்லியன் டாலர் தர ஐ.சி.சி. தயாராக உள்ளது. ஆனால், பிசிசிஐ 450 மில்லியன் டாலர் கேட்கிறது.

 
390 மில்லியன் டாலர் தர ஐசிசி ரெடி: 450 மில்லியன் கேட்கும் பி.சி.சி.ஐ.- சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பங்கேற்குமா?
 
ஐ.சி.சி. வருமானம் பகிர்வில் புதிய திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதில் இந்தியாவிற்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய முறையை ஏற்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுக்கிறது.

இந்த திட்டத்தின்படி இந்தியாவிற்கு முதலில் 293 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு இந்தியா சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்தியா குறைந்தது 450 மில்லியன் டாலர் தந்தால்தான் முடியும் என்று கேட்டது. ஆனால் ஐ.சி.சி. 390 மில்லியன் டாலர் வழங்க முன்வந்துள்ளது. இதுகுறித்து மே மாதம் நடைபெற இருக்கும் கூட்டத்தில் திருத்தம் கொண்டு வர சம்மதம் தெரிவித்துள்ளது.

450 மில்லியன் டாலர் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது. மேலும், ஐ.சி.சி. சாம்பியன் தொடருக்கான இந்திய அணி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஐ.சி.சி. உடனான பிரச்சினை முடிந்தால்தான் இந்திய வீரர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிகிறது. ஐ.சி.சி. முடிவு குறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக, சிறப்பு பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரை புறக்கணிப்பது குறித்து முடிவு எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேவேளையில் ஐ.சி.சி.யும் இந்திய அணியை தகுதி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/27211359/1082376/ICC-still-ready-to-pay-USD-390m-BCCI-wants-USD-450m.vpf

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் டிராஃபி.. இந்திய அணி ஏன் இன்னும் அறிவிக்கப்படவில்லை? #ChampionsTrophy

 

மினி உலகக்கோப்பை என்று கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடர், வருகின்ற ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் கலந்து கொள்ளக்கூடிய இந்திய அணியை, அதற்கான காலக்கெடு கடந்துவிட்ட நிலையிலும் (ஏப்ரல் 25, 2017), இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) இந்நாள்வரை அறிவிக்கவில்லை. ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது என்றால், சாம்பியன்ஸ் டிராஃபியில் பங்கேற்கும் மொத்தமுள்ள 8 அணிகளில், 7 அணிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டன! இதுதவிர வர்ணனையாளர்கள் குழு மற்றும் தூதுவர்கள் பட்டியலும் வெளிவந்துவிட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐசிசி) போட்டிகளில் கிடைக்கும் வருமானத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக எழுந்துள்ள பிரச்னையாலேயே, அணியை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தற்போது தகவல்கள் வந்துள்ளன!

பிரச்னை என்ன?

தனது நிதியமைப்பு மற்றும் நிர்வாகக் குழுவில், சில அதிரடியான மாற்றங்களை, ஐசிசி கொண்டு வந்துள்ளது. இதன் வெளிப்பாடாக, கிரிக்கெட் உலகின் The Big Three எனச் செல்லமாக அழைக்கப்படும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களின் தற்போதைய செல்வாக்கு மற்றும் வருமானத்தின் அளவுகள், இதனால் முன்பைவிடக் கணிசமாகக் குறையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் வாரியங்கள், இதற்குப் பெரியளவில் ஆட்சேபனை  தெரிவிக்காவிட்டாலும், அந்த மாற்றங்களை ஆரம்பம் முதலே கடுமையாக எதிர்த்து வருவது இந்திய கிரிக்கெட் வாரியம்தான்! எனவேதான் பிசிசிஐக்கும் - ஐசிசிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சாம்பியன்ஸ் டிராஃபி

(PC: BCCI)

இந்திய அணி அறிவிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்துக்குக் காரணமாக, இந்திய அணி கேப்டன் விராட் கோலி உட்பட அணி வீரர்கள் அனைவரும், தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகள் விளையாடி வருவதால், அணி நிர்வாகிகளை ஒரே இடத்தில் சேர்ப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், முதற்கட்டமாகச் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் கிரிக்கெட் போட்டிகளால் ஐசிசிக்குக் கிடைக்கக்கூடிய வருமானத்தைப் பங்கிடுவதில், பிசிசிஐ ஒரு குறிப்பிட்ட தொகையை முன்வைக்க -  ஐசிசி ஒரு குறிப்பிட்ட தொகையை முன்வைக்க, இழுபறி ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவாகவே, இந்திய அணியைத் தாமதமாக அறிவிப்பதை, பிசிசிஐ ஒரு மிரட்டல் உத்தி போலக் கடைபிடிப்பதாகச் சொல்லப்படுகிறது. 

ICC
(PC: ICC)

கடந்த ஏப்ரல் 24, 2017 அன்று துபாயில் நடந்த ஐசிசி கூட்டத்தொடரில், பிசிசிஐ சார்பில் அதன் செயலாளர் அமிதாப் சவுத்ரி மற்றும் CEO ராகுல் ஜோரி ஆகியோர் பிரதிநிதிகளாகப் பங்கேற்றனர். அப்போது புதிய நிதியமைப்பு குறித்து பேசப்பட்ட போது, உலகின் செல்வச் செழிப்பான கிரிக்கெட் வாரியம் என்ற புகழுக்குச் சொந்தக்காரரான பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தாலும் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவுடன் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் எழுந்த பிரச்னையால், சாம்பியன்ஸ் டிராஃபி தொடரிலிருந்தே, நடப்புச் சாம்பியனான இந்திய அணியே விலகுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக யூகங்கள் எழுந்துள்ளன.

வருங்காலம் எப்படி இருக்கும்?

தற்போது ஐசிசியிடமிருந்து, கிரிக்கெட் போட்டிகளால் பிசிசிஐக்குக் கிடைக்கும் வருவானம், 570 மில்லியன் டாலர்கள்! ஆனால் ஐசிசியின் புதிய விதிமுறைகளால், அடுத்து வரவிருக்கும் 8 ஆண்டுகளில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானம், 290 மில்லியன் டாலர் வரையில் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பிசிசிஐக்கு, 400 மில்லியன் டாலர்கள் வரை அளிக்க ஐசிசி முன்வந்திருப்பதாகத் தெரிகிறது.  இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர், வரும் சில நாட்களில் சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

http://www.vikatan.com/news/miscellaneous/87882-is-defending-champion-team-india-planning-to-skip-champions-trophy-2017.html

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் தொடருக்கான இந்திய அணியை உடனடியாக அறிவியுங்கள்; நிர்வாகக்குழு உத்தரவு

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை உடனடியாக அறிவியுங்கள் என்று பி.சி.சி.ஐ.யை வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

 
சாம்பியன்ஸ் தொடருக்கான இந்திய அணியை உடனடியாக அறிவியுங்கள்; நிர்வாகக்குழு உத்தரவு
 
ஐ.சி.சி-க்கும், பிசிசிஐ-க்கும் இடையிலான பிரச்சினை காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த மாதம் 25-ந்தேதிதான் இறுதிக் கெடு. இருந்தாலும் இந்தியா அணி அறிவிக்கவில்லை. இதனால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்குமா? என்ற சந்தேகம் எழுந்து கொண்டிருக்கிறது.

நாளுக்கு நாள் இந்த சந்தேகம் அதிகரித்து வருகிறது. முன்னாள் வீரர்கள் அனைவரும் இந்தியா இந்த தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழு இன்று பிசிசிஐ-க்கு ஒரு இ-மெயில் அனுப்பியுள்ளது. அதில் ‘‘இந்திய கிரிக்கெட் அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்ளாது என யூகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதற்கு விரைவில் முடிவு கட்டுங்கள்.

இந்திய அணியை ஏப்ரல் 25-ந்தேதிக்குள் நாம் அணிந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை நாம் அணி வீரர்களை அறிவிக்கவில்லை என்பதை நாம் அறிவோம். தயவு செய்து தேர்வுக்குழுவை கூட்டி இந்திய அணியை உடனடியாக அறிவியுங்கள். பிசிசிஐ-யின் சட்டஉரிமைக்கு எந்தவித குந்தகம் இல்லாமல் ஐ.சி.சி. இந்திய வீரர்களின் பட்டியலை அறிவிக்க முடியும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/04202302/1083558/CoA-tells-BCCI-to-select-Champions-Trophy-squad-immediately.vpf

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்கிறது இந்தியா! விரைவில் வீரர்கள் அறிவிப்பு

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணி விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரர்கள் குறித்த அறிவிப்பு திங்களன்று வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

india

தரவரிசைப் பட்டியலில் உள்ள முதல் 8 அணிகளைத் தேர்வு செய்து சாம்பியன்ஸ் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. கடந்த 2013ல் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இதனிடையே இந்திய கிரிக்கெட் சம்மேளனமான பிசிசிஐ-க்கும் ஐசிசி-க்கும் நிலவி வந்த பிரச்னை காரணமாக, சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் கமிட்டி, 'சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கு விளையாடப் போகும் இந்திய அணியை உடனடியாக அறிவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது. 

 

இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணி திங்கட்கிழமை அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா பங்கேற்க வேண்டும் என பி.சி.சி.ஐயின் தற்போதைய செயல் தலைவர் சி.கே.கண்ணா தெரிவித்துள்ளார். இதையடுத்து நடப்பு சாம்பியனான இந்திய அணி இத்தொடரில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.vikatan.com/news/sports/88597-india-to-play-in-champions-trophy-confirms-ck-khanna.html

Link to comment
Share on other sites

சாம்பியன் ட்ராஃபியில் இந்திய பேட்ஸ்மென்களை தெறிக்க விடுவோம்' - அஃப்ரிடி

 
 

இந்திய கிரிக்கெட் சம்மேளனமான பிசிசிஐ-க்கும் ஐசிசி-க்கும் நிலவி வந்த பிரச்னை காரணமாக, சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் கமிட்டி, 'சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கு விளையாடப் போகும் இந்திய அணியை உடனடியாக அறிவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது. 

Afridi


இதற்கான இந்திய  அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது. சாம்பியன் ட்ராஃபி தொடர், ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. குரூப் பி-ல் இந்தியா, பாகிஸ்தான் உள்ளன.


இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் அஃப்ரிடி கூறுகையில், "சாம்பியன் ட்ராஃபிக்கு, இன்னும் ஒரு மாதம்தான் உள்ளது. கோடிக் கணக்கான ரசிகர்களைப் போல, இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நானும் உற்சாகத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, உலக போட்டிகளில் இந்தியா உடன் நல்ல ரொக்கார்டை உருவாக்க முயல்வோம். 


இந்தியா சிறப்பான அணி. பேட்டிங், பௌலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்படுகிறது. பாகிஸ்தான் அணி வல்லமை மிக்க, பௌலிங் பிரிவை கொண்ட அணி. இதுபோன்ற ஒரு பௌலிங் பிரிவு மூலம், இங்கிலாந்து போன்ற தட்பவெப்ப சூழல்களில், இந்திய பேட்ஸ்மென்களுக்கு நாங்கள் கடுமையான நெருக்கடி கொடுப்போம்" என்றார்.

http://www.vikatan.com/news/sports/88651-paksitan-bowler-will-fire-against-india-batsmen-in-champion-trophy-says-afridi.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.