Jump to content

கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் என்னெல்லாம் நடக்கப்போகுது தெரியுமா? #BigBoss


Recommended Posts

கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் என்னெல்லாம் நடக்கப்போகுது தெரியுமா? #BigBoss

 

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழுக்கு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லோனேவாலாவில் பிரமாண்டமான வீடு தயாராகி வருகிறது. 

பிக் பாஸ்

பிக் பாஸ், இந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த பிரபல நிகழ்ச்சி. இது 10 சீசன்களை கடந்து அங்கு சாதனை படைத்துள்ளது. இது கன்னடத்திலும் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பானது. தற்போது தமிழுக்கு வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். விஜய் டிவியில் வரும் ஜூலையில் பிக் பாஸ் ஒளிபரப்பாக உள்ளது. 

பிக் பிரதர்

முதலில் ‘பிக் பாஸ்’ வரலாறை பார்ப்போம். எண்டமால், நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு தனியார் தயாரிப்பு நிறுவனம். இது பல்வேறு நாடுகளின் டிவி சேனல்களுக்காக ரியாலிட்டி ஷோ உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்துத் தருகிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஜான் டி மால் என்பவர் டிசைன் செய்த ரியாலிட்டி ஷோ பார்மெட்தான் ‘பிக் பிரதர்’. 

கான்செப்ட்

குறிப்பிட்ட போட்டியாளர்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு வீட்டில் தங்க வைக்கப்படுவார்கள். நிகழ்ச்சி தொடங்கிய அன்று அந்த வீட்டிக்குள் அனுமதிக்கப்படுபவர்கள், எலிமினேட் செய்யப்பட்டாலோ அல்லது நிகழ்ச்சி முடிந்தாலோதான் அந்த வீட்டில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். அந்த வீட்டில் தொலைக்காட்சி, தொலைபேசி, செல்போன், இணையம், கடிகாரம், பேனா, பென்சில், பேப்பர்... எந்தத் தொலைத் தொடர்புக்கும் அனுமதி கிடையாது. போட்டியாளர்கள் வெளிஉலகத் தொடர்பில் இருந்து முற்றிலும் விலக்கி வைக்கப்படுவார்கள். கழிவறை, குளியலறை தவிர அந்த வீட்டின் அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டு போட்டியாளர்களின் செயல்பாடுகள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும். 

அவர்களுக்குள் போட்டிகள், கேம்கள் நடத்தப்படும். இவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து பொதுமக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். குறைவான வாக்குகளைப் பெறுபவர்கள் வாரம் ஒருவராக போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இறுதி வாரத்தில் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். அவர்களில் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்பட்டு அவருக்கு பரிசு வழங்கப்படும். இதுதான் ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியின் கான்செப்ட். 

பிக் பாஸ்

பிக் பாஸ்

இந்த ‘பிக் பிரதர்’ 2006ல் ‘பிக் பாஸ்’ என்ற பெயரில் இந்தியாவுக்கு வந்தது. ‘எண்டமால்’ நிறுவனமே பிக்பாஸையும் தயாரித்தது. அப்போது பிக் பாஸுக்காக ஒரிஜினல் நிகழ்ச்சியில் இருந்து ஒரு சின்ன மாற்றம் செய்தார்கள். ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் சாமானியர்கள். ஆனால் பிக் பாஸில் போட்டியாளர்கள் அனைவரும் பிரபலங்கள். ‘பிக்பாஸ்’ இதுவரை இந்தியாவில் 10 சீசன்களை கண்டுள்ளது. இவற்றை தொகுத்து வழங்கிய அனைவரும் சினிமா பிரபலங்களே. அதிகபட்சமாக சல்மான்கான் ஆறு சீசன்களையும், அமிதாப், ஷில்பா ஷெட்டி, சஞ்சய் தத், அஷ்ரத் வர்ஷி ஆகியோர் தலா ஒரு சீசனையும் தொகுத்து வழங்கியுள்ளனர். 

விதிகள்:

கலந்து கொள்ளும் நபர்கள் தங்களின் சகாக்களுடன் இந்தி தவிர வேறு எந்த மொழியிலும் பேசக்கூடாது. கோபப்பட்டு வீட்டில் உள்ள எந்தப் பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தக் கூடாது. பகல் நேரத்தில் உறங்க அனுமதி கிடையாது. அவர்களுக்கான வெளியேறும் நேரம் வரும் வரை வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது. சில நேரங்களில் விதிகளை மீறுதல், வேறு ஏதாவது முக்கியமான பிரச்னை வரும்போது, அதற்குக் காரணமான அந்த நபர், நேயர்களின் வாக்கு இல்லாமலேயே வெளியேற்றப்படுவார். இதுதான் இந்தி பிக்பாஸ் விதிகள். 

‘பிக் பாஸ்’ பெரிய பிரச்னை பாஸ்:

சன்னி லியோன், வீணா மாலிக் உள்ளிட்ட கவர்ச்சி நடிகைகள் கலந்துகொண்டது, முதல் சீசனில் நுழைந்த ராக்கி சாவந்த் பண்ணிய அதகளங்கள், கஜோலின் தங்கை தனிஷாவும் நடிகர் அர்மான் கோஹ்லியும் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சி வெளியானது, ‘அர்மான் கோலி என்னை துடைப்பத்தால் தாக்கினார்’ என்ற நடிகை சோபியா ஹயாத்தின் புகாரின் பேரில் நடிகர் அர்மானை போலீசார் கைது செய்தது, ‘பிக் பாஸ் வீட்டில் புகைப்பிடிக்கும் அறையில் வைத்து சல்மான் கானை கன்னத்தில் ஓங்கி அறைந்தேன்’ என்ற சாமியார் ஓம் பேட்டியளித்தது... என்று பிக் பாஸில் சர்ச்சைகள் மிகச் சாதாரணம். ஆனால் பொழுதுபோக்குக்கு கியாரண்டி.   

தமிழ் பிக்பாஸ்

இந்த சூழலில் கடந்த மூன்றாண்டுகளாக பிக் பாஸை தமிழ் பேச வைக்க எண்டமால் நிறுவனம் முயற்சி செய்து வந்தது. ஆனால் அதற்கான சூழல் தற்போதுதான் அமைந்து வந்துள்ளது. நிகழ்ச்சியை ஒளிபரப்புவது விஜய் டிவி, தொகுப்பாளர் கமல்ஹாசன் என்பது மட்டுமே இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதி அல்லது ஜூலையில் ஒளிபரப்பு என்பது அவர்களின் திட்டம். ‘தமிழ் பிக் பாஸ்’ உடன் தொடர்பில் உள்ள சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது:

‘‘10 முதல் 12 போட்டியாளர்கள். இவர்கள் அனைவரும் பிரபலங்களே. ஷூட்டிங், பார்ட்டி என்று எந்நேரமும் மேக்கப் கலையாத முகத்துடன் பார்த்து பழக்கப்பட்ட இவர்களை ஒரே வீட்டில் இயல்பான முகம், குணத்துடன் 100 நாட்கள் பார்க்கப்போகிறோம். மகிழ்ச்சி, துக்கம், இக்கட்டு... வெவ்வேறு சூழல்களை வெளி உலகத் தொடர்பு இன்றி அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை நேரடியாகக் காணப்போகிறோம். போட்டியாளர்களுக்கு 15 நாட்கள் கொண்ட ஒரு பயிற்சி முகாமுக்கான ஏற்பாடு நடக்கிறது. 

வீடு

பிக் பாஸுக்கான பிரத்யேக வீடு புனேவில் உள்ள லோனோவாலாவில் அமைக்கப்பட்டு வருகிறது. பரிசோதனைக்குப்பிறகே அந்த வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அங்கு வீட்டில் புகைப்பிடிக்கவோ, மது அருந்தவோ அனுமதி இல்லை. விதிகளை மீறுபவர்கள் போட்டியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். அனைத்து வசதிகளும் கொண்ட அந்த சொகுசு வீட்டில் கழிவறை, குளியலறை தவிர அனைத்து இடங்களிலும் 60 முதல் 80 கேமராக்கள் வரை பொருத்தப்படும். 24 மணிநேரமும் அதன் மூலம் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். 

‘இந்தி பிக் பாஸில் ஆண், பெண் போட்டியாளர்கள் ஒரே அறையில் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் தமிழில் வெவ்வேறு அறைகள். இப்படி நம் கலாசாரத்தை மனதில் வைத்து சில மாற்றங்களை செய்துள்ளோம். மற்றபடி அதே கான்செப்ட்தான். 100 நாள், 100 எபிசோட். தினமும் இரவு நேரத்தில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சி மறுநாள் மதிய நேரத்தில் மறுஒளிபரப்பு செய்யப்படும். தொகுப்பாளர் வாரத்துக்கு ஒருநாள் மட்டுமே வருவார். அப்போது போட்டிகள், கலந்துரையாடல்கள் இருக்கும். நிறைய சவால்களை சந்தித்து சாதனை படைப்பவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக அளிக்கப்படும்.

பிக் பாஸ்

கமல்

இந்த நிகழ்ச்சியை நடத்த ஆர்வத்துடன் காத்திருக்கும் கமல் சார், அதற்கான தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். கமல் சார் சமூக சீர்திருத்தம் குறித்து சிந்திப்பவர், முற்போக்கு கருத்துக்களை கொண்டவர், அவருக்கென அரசியல் பார்வை உண்டு. இலக்கியவாதி. இப்படிப்பட்ட பன்முகம் கொண்டவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது இதன் தரம் வேறு தளத்தில் இருக்கும் என்பது நிச்சயம்.”

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/86984-big-boss-reality-show-in-vijay-tv-anchor-by-kamal.html

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 20/04/2017 at 8:49 AM, நவீனன் said:

‘10 முதல் 12 போட்டியாளர்கள். இவர்கள் அனைவரும் பிரபலங்களே. ஷூட்டிங், பார்ட்டி என்று எந்நேரமும் மேக்கப் கலையாத முகத்துடன் பார்த்து பழக்கப்பட்ட இவர்களை ஒரே வீட்டில் இயல்பான முகம், குணத்துடன் 100 நாட்கள் பார்க்கப்போகிறோம். மகிழ்ச்சி, துக்கம், இக்கட்டு... வெவ்வேறு சூழல்களை வெளி உலகத் தொடர்பு இன்றி அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை நேரடியாகக் காணப்போகிறோம். போட்டியாளர்களுக்கு 15 நாட்கள் கொண்ட ஒரு பயிற்சி முகாமுக்கான ஏற்பாடு நடக்கிறது. 

முதலில் கமலிடமிருந்து இந்த பெண்களை  எப்படி காப்பாற்றப்போகிறார்களோ??

எப்படியும் கமலுக்கு  அடுத்த  .........  நிச்சயம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

முதலில் கமலிடமிருந்து இந்த பெண்களை  எப்படி காப்பாற்றப்போகிறார்களோ??

எப்படியும் கமலுக்கு  அடுத்த  .........  நிச்சயம்

big-dancing-banana-smiley-emoticon.gif

பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான் உங்களுக்கு ஏன் சார் கொடையுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, முனிவர் ஜீ said:

big-dancing-banana-smiley-emoticon.gif

பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான் உங்களுக்கு ஏன் சார் கொடையுது 

பொது நலம் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, முனிவர் ஜீ said:

big-dancing-banana-smiley-emoticon.gif

பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான் உங்களுக்கு ஏன் சார் கொடையுது 

இது பக்கத்து இலைக்கு பருப்பு என்பது...

ஆனால்  நாங்க பக்கோடாக்கள் சூழத்தான் ஏற்கனவே வாழ்கின்றோம்..:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/22/2017 at 1:27 PM, MEERA said:

பொது நலம் தான் 

 

On 4/22/2017 at 2:49 PM, விசுகு said:

இது பக்கத்து இலைக்கு பருப்பு என்பது...

ஆனால்  நாங்க பக்கோடாக்கள் சூழத்தான் ஏற்கனவே வாழ்கின்றோம்..:rolleyes:

எள்ளுக்காயுது என்று இல்லாமல் எலி புளுக்கையும்  சேர்ந்து காஞ்சிதாம் என்ற மாதி தானே இருக்கு உங்களிருவரினதும்  கத கய்யோ கய்யோ

இதுல் ஒரு ஆள் பக்கோடாக்கள் சூழத்தான் வாழ்கிறாராம் tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் கமல்

 

 
கமல் | கோப்பு படம்
கமல் | கோப்பு படம்
 
 

தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சி தொகுப்பாளராகிறார் கமல்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கமல், தொலைக்காட்சியில் அடியெடுத்து வைக்கிறார். சர்வேதேச நாடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற நிகழ்ச்சிதான் பிக் பாஸ். தற்போது விஜய் தொலைக்காட்சி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. விரைவில் ஒளிபரப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் நூறு நாட்கள் இணைந்து வசிக்கப் போகின்றனர். அதுவும் வெளியுலக தொடர்பில்லாமல் நூறு நாட்கள் தொடர்ந்து வசிக்கப் போகின்றனர் அதுதான் இந்த நிகழ்ச்சியின் சாராம்சம். அவர்களுக்கு மொபைல் போன், லாண்ட் லைன் போன்ற எந்த தொலைத்தொடர்பும் வழங்கப்பட மாட்டாது. அந்த வீட்டில் கடிகாரம், நாளிதழ்கள், பேப்பர் பேனா போன்ற எந்த உபகரணங்களும் இருக்காது. இப்படியாக அவர்கள் நூறு நாட்கள் அந்த வீட்டில் வசிக்கவேண்டும் .

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாக இருப்பது குறித்து கமலிடம் கேட்ட போது, "விஜய் தொலைக்காட்சி என்னை முதலில் அணுகியபோது நான் சிரித்தேன். என்னைத் தவிர வேறு யார் சரியாக இருக்க முடியும் என்று. என் வாழ்க்கையில் பொது விஷயங்களோ அல்லது தனிப்பட்ட விஷயமோ, எனது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டுதான் வந்துள்ளது.

தற்போது எதிர்மறையாக இருக்கப் போகிறது. மக்களுடன் சேர்ந்து இந்த வீட்டில் வசிப்பவர்களை நான் கண்காணிக்கவேண்டும். இந்த பிக் பாஸ் வீட்டில் பிரபலங்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கப் போகிறேன். இந்த வீட்டில் நூறு நாட்கள் வரை வசித்து வெற்றியை தக்கவைக்க போகிறார்களா என்பதை பார்க்கப் போகிறேன் " என்று கூறினார்.

எண்டமோல் நிறுவனத்தின் பிக் பிரதர் நிகழ்ச்சியை இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்க பத்து சீஸன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பியது. மேலும் இந்த நிகழ்ச்சி பெங்காலி மற்றும் கன்னட மொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பானது. போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் போட்டிகள் தவிர்த்து, ஒவ்வொரு போட்டியாளரும் தன்னுடன் இருக்கும் சக போட்டியாளரை வாரம் ஒரு முறை நிகழ்ச்சியில் இருந்து நீக்கவேண்டும்.

விஜய் தொலைக்காட்சியின் பொது மேலாளர் கிருஷ்ணன்குட்டி பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கூறுகையில், "இந்த புதுவிதமான நிகழ்ச்சியை நேயர்களுக்காக வழங்குவதில் மிகவும் ஆர்வமாக உள்ளோம். தமிழ் மக்களுக்கு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மீது உள்ள ஆர்வம் மற்றும் கமல் போன்ற ஒரு தலைசிறந்த நட்சத்திரம் இதில் பங்கேற்கும் போது இதன் தன்மை மேலும் சிறப்படைகிறது" என்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு அன்று இரவு 8.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகிறது.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/தமிழில்-பிக்-பாஸ்-நிகழ்ச்சியை-தொகுத்து-வழங்குகிறார்-கமல்/article9678349.ece?homepage=true

Link to comment
Share on other sites

கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 அரசியல்வாதிகள் 2 கிரிக்கெட் வீரர்கள்

கமல் நடத்தவிருக்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்குபெறும் 15 பேரில் 2 அரசியல்வாதிகளும், 2 கிரிக்கெட் வீரர்களும் அடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 
 
201705041657072373_2-cricketers-2-politi
 
இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி உலகமெங்கும் புகழ்பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது தமிழிலும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் விதிமுறையானது, 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் இணைந்து வசிக்க வேண்டும். போன், நாளிதழ், உள்ளிட்ட எந்த உபகரணங்களும் அங்கே இருக்காது. வெளியுலக தொடர்புகளும் இருக்காது. கமல் மட்டுமே அவர்களை அவ்வப்போது வந்து சந்திப்பார். யார் கடைசி வரை அங்கேயே வசிக்கிறார்களோ? அவரே வெற்றியாளர்.

201705041657072373_kamal233-X._L_styvpf.

இந்த நிகழ்ச்சிக்காக சென்னையை அடுத்துள்ள ஈவிபி பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட அரங்கு ஒன்றை அமைக்கிறார்கள். வருகிற ஜுன் 18-ந் தேதியில் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 8.30 மணிக்கும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியில் இப்போதைக்கு 2 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 2 அரசியல்வாதிகள் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதைத் தவிர்த்து சில நடிகர்களும், கலையுலகினரும் போட்டியாளர்களாக பங்கேற்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/05/04165702/1083526/2-cricketers-2-politicians-among-15-in-Kamal-big-boss.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/20/2017 at 1:49 AM, நவீனன் said:

கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் என்னெல்லாம் நடக்கப்போகுது தெரியுமா? #BigBoss

 

 

 

 

 

 

தமிழ் பிக்பாஸ்

இந்த சூழலில் கடந்த மூன்றாண்டுகளாக பிக் பாஸை தமிழ் பேச வைக்க எண்டமால் நிறுவனம் முயற்சி செய்து வந்தது. ஆனால் அதற்கான சூழல் தற்போதுதான் அமைந்து வந்துள்ளது. நிகழ்ச்சியை ஒளிபரப்புவது விஜய் டிவி, தொகுப்பாளர் கமல்ஹாசன் என்பது மட்டுமே இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதி அல்லது ஜூலையில் ஒளிபரப்பு என்பது அவர்களின் திட்டம். ‘தமிழ் பிக் பாஸ்’ உடன் தொடர்பில் உள்ள சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது:

‘‘10 முதல் 12 போட்டியாளர்கள். இவர்கள் அனைவரும் பிரபலங்களே. ஷூட்டிங், பார்ட்டி என்று எந்நேரமும் மேக்கப் கலையாத முகத்துடன் பார்த்து பழக்கப்பட்ட இவர்களை ஒரே வீட்டில் இயல்பான முகம், குணத்துடன் 100 நாட்கள் பார்க்கப்போகிறோம். மகிழ்ச்சி, துக்கம், இக்கட்டு... வெவ்வேறு சூழல்களை வெளி உலகத் தொடர்பு இன்றி அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை நேரடியாகக் காணப்போகிறோம். போட்டியாளர்களுக்கு 15 நாட்கள் கொண்ட ஒரு பயிற்சி முகாமுக்கான ஏற்பாடு நடக்கிறது. 

வீடு

பிக் பாஸுக்கான பிரத்யேக வீடு புனேவில் உள்ள லோனோவாலாவில் அமைக்கப்பட்டு வருகிறது. பரிசோதனைக்குப்பிறகே அந்த வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அங்கு வீட்டில் புகைப்பிடிக்கவோ, மது அருந்தவோ அனுமதி இல்லை. விதிகளை மீறுபவர்கள் போட்டியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். அனைத்து வசதிகளும் கொண்ட அந்த சொகுசு வீட்டில் கழிவறை, குளியலறை தவிர அனைத்து இடங்களிலும் 60 முதல் 80 கேமராக்கள் வரை பொருத்தப்படும். 24 மணிநேரமும் அதன் மூலம் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். 

‘இந்தி பிக் பாஸில் ஆண், பெண் போட்டியாளர்கள் ஒரே அறையில் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் தமிழில் வெவ்வேறு அறைகள். இப்படி நம் கலாசாரத்தை மனதில் வைத்து சில மாற்றங்களை செய்துள்ளோம். மற்றபடி அதே கான்செப்ட்தான். 100 நாள், 100 எபிசோட். தினமும் இரவு நேரத்தில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சி மறுநாள் மதிய நேரத்தில் மறுஒளிபரப்பு செய்யப்படும். தொகுப்பாளர் வாரத்துக்கு ஒருநாள் மட்டுமே வருவார். அப்போது போட்டிகள், கலந்துரையாடல்கள் இருக்கும். நிறைய சவால்களை சந்தித்து சாதனை படைப்பவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக அளிக்கப்படும்.

 

 

அப்ப நாங்கள் அவர்கள் கத்தரிக்காய் வெட்டி 
கறிவைப்பதையா பார்க்கிறது ?

பெயர்  மட்டும்தான் பிக் பாக்ஸ்
மாட்டார் ஒன்றும் பெருசா இருக்காது போலத்தான் இருக்கு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Maruthankerny said:

அப்ப நாங்கள் அவர்கள் கத்தரிக்காய் வெட்டி 
கறிவைப்பதையா பார்க்கிறது ?

பெயர்  மட்டும்தான் பிக் பாக்ஸ்
மாட்டார் ஒன்றும் பெருசா இருக்காது போலத்தான் இருக்கு.  

மாட்டார் ஒன்றும் பெரிசா இருக்காது தான் அண்ண மறைச்சு போடுவாங்கள் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நவீனன் said:

கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 அரசியல்வாதிகள் 2 கிரிக்கெட் வீரர்கள்

உதுக்கை கௌதமியையும் தள்ளிவிட்டால் எப்பிடியிருக்கும்?tw_yum:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

உதுக்கை கௌதமியையும் தள்ளிவிட்டால் எப்பிடியிருக்கும்?tw_yum:

என்ன கமல்  புகுந்து விட மாட்டார் போட்டியில் நடத்துங்கடா  நீங்கள் என்று போட்டு போட்டி போட கலந்து விடுவார் tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா அந்தச் சின்னப்புள்ளையளை பாடவைச்சு கழுத்தறுத்து உழைக்கிறது காணாதுன்னா... கொஞ்ச நாள் கெளதமி.. இப்ப இவரு. விஜய்க்கு வியாபாரம் ஆகனுமே. tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கும்?

 

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்த வழங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலின் பார்வையில் என்ன நடக்கும் என்று தெரியுமா?

 
201705271056363685_What-will-be-going-in
 
சமீபத்தில் எங்கும், எல்லோராலும் பேசப்படும் ஒரு விஷயம் பிக் பாஸ். இதன் முதல் பார்வை வெளியான நாளில் இருந்தே இது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை  மக்கள் மனதில் உருவாக்கியுள்ளது. இதை தொகுத்து வழங்க இருப்பது உலகநாயகன் கமல்ஹாசன் என்பது கூடுதல் சிறப்பு. 5 வயதில் இருந்து, கடந்த 58 வருடமாக சினிமாவிலேயே இருந்து கலைச்சேவை ஆற்றி வரும் சகலகலா வல்லவன் கமல்ஹாசனை விட சிறப்பான ஒரு தொகுப்பாளர் கிடைக்க மாட்டார்.

இந்நிலையில், பிக் பாஸ் புரோமோவை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசும்போது, "சினிமாவில் இதுவரை வில்லனாக, குள்ளனாக, நாயகனாக, போலீஸாக, அமெரிக்கனாக, இந்தியனாக நடித்திருக்கிறேன். நிஜத்தில் இந்தியனாக வாழ்ந்து வருகிறேன்.

201705271056363685_biggbosskamal2._L_sty

இந்த நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு தமிழக குடும்பத்துக்குள்ளும் சென்றடைய ஒரு நல்ல வாய்ப்பாக இதை எடுத்துக் கொள்கிறேன். அமிதாப் பச்சன் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் வித்தியாசமாக செய்திருந்தார். அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

14 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் எந்த வெளியுலக தொடர்பும் இல்லாமல் தங்குவார்கள். அவர்களை 30 கேமராக்கள் பதிவு செய்யும். அவற்றை நான் அவ்வப்போது கண்காணிப்பேன். கேமராக்கள் இருப்பதால் யதார்த்தம் போய் விடும் என்பது தவறு. பிக் பாஸ் வீட்டுக்குள் போன கொஞ்ச நேரத்தில் கேமரா இருப்பதையே பிரபலங்கள் மறந்து விட்டு, இயல்பாகி  விடுவார்கள். நிச்சயம் இது யதார்த்தமான ஒரு நிகழ்ச்சியாக அமையும் என நம்புகிறேன். பல சமயங்களில் நாங்கள் கூட கேமரா இருப்பதை மறந்து ஏதோதே பேசி சர்ச்சையில் சிக்கியதுண்டு என்று தன் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார் கமல்ஹாசன்.

201705271056363685_biggbosskamal3._L_sty

இந்தியில் அமீர்கான் செய்த சத்யமேவ ஜயதே போல நிகழ்ச்சி ஏதும் செய்யாமல், இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறீர்களே? என ஒரு நிருபர் கேட்டதற்கு, அந்த மாதிரி விஷயங்களை நிகழ்ச்சி மூலம் தான் செய்ய வேண்டுமென்று இல்லை. அவரை விடவும் அதிகமாக, நான் கடந்த பல வருடமாக செய்து வருகிறேன். இதை நான் பெருமையாக சொல்லிக் கொள்வேன்" என்றார் கமல்ஹாசன்.

ஜூன் 25-ஆம் தேதி முதல் தொடங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வார இறுதி நாட்களில் கமல் கலந்து கொள்ளுமாறு எபிசோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
 

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/05/27105636/1087444/What-will-be-going-in-Kamalhaasans-Bigboss.vpf

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

‘விரைவில்... வெப் சீரிஸில்!’ பிக்பாஸ் கமல்

 

உலக நாயகன் சின்னத்திரை என்ட்ரியான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி வரும் ஞாயிறு இரவு 8.30 மணிக்கு விஜய் டி.வி-யில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. மிக பிரமாண்டமாக ஈ.வி.பி பிலிம் சிட்டில் பெரிய வீட்டையே நீச்சல் குளம், ஜிம் அமைப்புடன் கட்டி இருக்கிறார்கள்.

கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி, பல கோடி ரூபாய் பட்ஜெட், 14 செலிபிரிட்டிகள், அவர்களை சுற்றி 53 கேமரா என முதன்முறையாக தமிழில் என எக்கச்சக்க விஷயங்கள் இருக்கின்றன இந்த ஷோவில். இந்த ஷோவிற்காக  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. தன் அக்மார்க் சிரிப்போடு கருப்பு சூட் சகிதம் கச்சிதமாக ஆஜரானார் கமல்.

பிக் பாஸ்

தொகுப்பாளர் ரம்யா இந்த பத்திரிகையாளர் சந்திப்பை தொகுத்து வழங்கினார். கமலை வரவேற்று பேசியவர், "விஜய் டிவி-யில் அடுத்த சில நாட்களில் 14 புதிய நிகழ்ச்சிகள் தொடங்க இருக்கிறோம். விஜய் டிவியின் லோகோவையும் மாற்ற இருக்கிறோம். இந்த புதிய லோகா 'பிக் பாஸ்' நிகழ்ச்சி முதல் விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகும். இனி விஜய் டிவி-யில் எங்களுக்கு எல்லாம் மூத்த தொகுப்பாளர் கமல் சார்தான். அவர்தான் இனி எங்களை வழி நடத்துவார்" என்றார். 

புதிய லோகோ திரையில் காண்பிக்கப்பட்டது. ஸ்டாருடன் 'Vijay'' என ஆங்கிலத்தில் இருந்ததை தமிழில் அதே ஸ்டாருடன் 'விஜய்' என மாற்றி இருக்கிறார்கள். புதிய லோகோவின் டேக்லைன் 'எதிலும் புதுமை தமிழன் பெருமை'.  

அடுத்து பேசத் தொடங்கிய கமல், "புதிய லோகோ சிம்பிளாக இருந்தாலும். நல்லா இருக்கு. குட்.  சின்னத்திரையில் பல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்தாலும், ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இதுவே முதல்முறை. கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. சின்னத்திரைக்கு வருவது கீழ் இறங்கி வருவது கிடையாது. ஏற்கெனவே ஹாலிவுட், பாலிவுட்டில் பல பெரிய நடிகர்கள் எல்லாம் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். அதை அவர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். நானும் தொகுத்து வழங்குவதை அப்படித்தான் நினைக்கிறேன்." என்றார். 

பிக்பாஸ்

அதன்பின் பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தொடங்கினார் கமல்ஹாசன்.

இந்த நிகழ்ச்சியில் உங்க பங்கு என்ன? உங்களிடம் இருந்து நாங்க என்ன எதிர்பார்க்கலாம்?”

“எதிர்பாராததை எதிர்பாருங்கள். பார்க்கும் பார்வையாளர்களின் கருத்தை என் கருத்தாக பாவித்து ஆவணம் செய்வது இந்த நிகழ்ச்சியில் என் வேலையாக இருக்கும்.”

“இந்த 'பிக் பாஸ்'நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் மைலேஜை வைத்து உங்க படங்களை முடிக்க போகிறீர்களா?”

“கண்டிப்பாக. அதில் தவறொன்றும் இல்லையே! இப்ப நான் முடிக்க வேண்டிய புராஜக்ட் 'விஸ்வரூபம்-2' அடுத்து 'சபாஷ் நாயுடு'. அதற்கு பிறகு ஒரு ஸ்கிரிப்ட்டை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.”
 

bigboss_11373.jpg

பெட்ரூம் முதல் கிச்சன் வரை... பிக் பாஸ் வீடு எப்படி இருக்கிறது? சிறப்பு ஆல்பத்தை காண க்ளிக் செய்க..

 

“இன்னும் இதுபோல நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவீர்களா?”

“இது எக்ஸாம்ல நல்லா மார்க் எடுத்துட்டேன்னா.. அடுத்தடுத்து பண்ணவேண்டியதுதான்”

“இந்தப் போட்டியின் முக்கிய விதிமுறையே செல்போன் போன்ற தொலைதொடர்பு சாதனங்கள் பயன்படுத்தக்கூடாது என்பதுதான். நீங்கள் இதில் தொகுப்பாளராக இல்லாமல் போட்டியாளராக இருந்தால் அப்படி இருக்க முடியுமா?”

“நாங்கள் அந்தக் காலத்தில் போன் எல்லாம் பயன்படுத்தாமல்தானே இருந்தோம். நீங்க போன் பயன்படுத்தாம இருக்க முடியுமா என கேட்பதே ஆச்சர்யமா இருக்கு. இப்ப காலையில எழுந்ததும் கை தடவி உள்ளங்கை பார்க்கிற மாதிரி போனை பார்க்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது. என்னால் மொபைல் பயன்படுத்தாமல் இருக்க முடியும்னு நம்புறேன்”.

“சின்னத்திரைக்கு வந்துவிட்டீர்கள். இப்போதைய ட்ரெண்ட் வெப் சீரிஸ்தான். அதில் நடிப்பீர்களா?”

“நிச்சயம் அந்த ஏரியாவிலும் முயற்சி செய்வேன். சின்னத்திரை தாண்டி எல்லாருடைய மொபைல் போன்களிலும் நுழைய ஆசை. அதற்கான முயற்சிகளை அடுத்ததாக எடுக்கவுள்ளேன்”.

“உலக நாயகனை எப்போது மருதநாயகமாக பார்க்கலாம்?”

“அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எந்த வடிவில் வேண்டுமானாலும் நடக்கலாம். சீக்கிரமே நடக்கும் என நம்புகிறேன்”.

 

பிக்பாஸ் ஷோவும் நல்லா நடந்தா சூப்பர்தான்!

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/93262-biggboss-pressmeet.html

Link to comment
Share on other sites

எகிறிய 'பிக் பாஸ்' பல்ஸ்... ஏமாற்றிய கமல்: ஒரு பத்திரிகையாளரின் நேரடி அனுபவம்

 

 
 
 
 
பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் | கோப்புப் படம்: பிஜாய் கோஷ்.
பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் | கோப்புப் படம்: பிஜாய் கோஷ்.
 
 

விஜய் டிவி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சி வரும் ஞாயிறு (25-ம் தேதி) முதல் ஒளிபரப்பாக உள்ளது. நாளிதழ்கள், பேருந்து நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் கண்ணாடி அணிந்த கமல் தோன்றும் 'பிக் பாஸ்' விளம்பரங்கள் அந்த நிகழ்ச்சி மீதான ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்துகின்றன.

இந்நிலையில், 'பிக் பாஸ்' நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்பதை அனுபவப்பூர்மாக உணர்ந்து பார்க்க, 14 பத்திரிகையாளர்கள் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி நடைபெறும் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் நானும் ஒருவன்.

பூந்தமல்லியை அடுத்த தண்டலத்தில், ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது 'பிக் பாஸ்' வீடு. மனதை மயங்க வைக்கும் உள் அலங்காரம், பார்த்தாலே தூக்கம் வர வைக்கும் படுக்கை, நம்மை குழந்தையாக்கும் நீச்சல் குளம் என அந்த வீடு, ஆர்ட் டைரக்டர் யார் எனக் கேட்க வைத்தது. அந்த வீட்டில் மொத்தம் 53 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. உங்களின் ஒவ்வொரு சின்ன அசைவையும் அந்த கேமராக்கள் கண்காணிக்கும்.

கைபேசி பயன்படுத்தக் கூடாது, புத்தகம் படிக்கக் கூடாது, கடிகாரத்தை எடுத்துச் செல்லக் கூடாது என்று ஏகப்பட்ட கெடுபிடிகள். எல்லாவற்றுக்கும் தலையாட்டி விட்டு நாங்கள் 14 பேரும் 'பிக் பாஸ்' வீட்டுக்குள் சென்றோம். அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது. அங்கு எஃப்.எம். கேட்க முடியாது, டி.வி. பார்க்க முடியாது, பகல் நேரத்தில் தூங்க முடியாது (மீறித் தூங்கினால் நாய் குறைக்கும் சத்தத்தை ஒலிக்கவிடுவார்கள். படுக்கையைவிட்டு நீங்கள் எழும் வரை அந்தச் சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கும்), அந்த 14 பேரைத் தவிர வெளி ஆட்கள் வேறு எவரையும் பார்க்க முடியாது… எனப் பல 'முடியாதுகள்'!

'ஆஹா… வசமா மாட்டிக்கொண்டோமே' என்றிருந்தது. வீட்டுக்குள் நுழைந்த முதல் இரண்டு மணி நேரங்கள் நாங்கள் 'கேமரா கான்சியஸ்' ஆக இருந்தோம். நாங்கள் 14 பேரும் அன்றுதான் முதன்முறையாக ஒருவருக்கொருவர் அறிமுகமாகினோம். எங்களில் பலருக்கு மனம் விட்டுப் பேசுவதில் தயக்கமிருந்தது. காரணம், எங்கள் கழுத்தில் தொங்கிய மைக்ரோஃபோன். நாம் பேசுவது எல்லாம் கேமராவில் பதிவாகும். அதனால் கேமரா பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற நினைப்பில், சிறிது நேரத்துக்கு ஏன், எதற்கு என்று காரணமில்லாமல் வாய் வலிக்கப் புன்னகைத்துக் கொண்டேயிருந்தேன். ஆனாலும் கேமராவுக்கு முன்னால் நமது பயம் தெரியாதபடி நடிப்பது ரொம்பவும் கஷ்டம்தான்.

ஆரம்ப கட்ட அறிமுகங்கள் முடிந்ததும் செய்வதற்கு எங்களுக்கு வேறு வேலைகள் எதுவும் இருக்கவில்லை. அதனால் டைனிங் டேபிளைச் சுற்றி உட்கார்ந்து 'அந்தாக்‌ஷரி' தொடங்கினோம். பத்து நிமிடம்தான்… திடீரென்று எங்கிருந்தோ ஒரு கணீர் குரல்… 'இது பிக் பாஸ். நீங்கள் அனைவரும் லிவிங் ரூமில் உள்ள சோஃபாவில் வந்து அமரவும்' என்று ஒரு கட்டளை. வேறு யார்… கமலின் குரல்தான்!

பிறகு, ஒவ்வொருவராக 'கன்ஃபெஷன்' ரூமுக்கு (ஆமாம்… பாவ மன்னிப்பு அறையேதான்!) அழைக்கப்பட்டோம். எங்களில் சிலருக்கு சில பணிகள் கொடுக்கப்பட்டன. அதை நாங்கள் தங்கியிருக்கும் அந்த 24 மணி நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். இது ஒரு பக்கமிருக்க, எங்களில் ஒருவர் ரகசிய உளவாளியாக நியமிக்கப்பட்டார். அது யாரென்று அந்த 24 மணி நேரம் முடியும் வரை எங்களுக்குத் தெரியாது. அவருக்கு ஒரு முக்கியமான பணி தரப்பட்டிருந்தது. ஆனால் அதை அவரால் வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியவில்லை.

கூட இருந்த பத்திரிகையாளர் ஒருவர், ''அப்புறம் சார்..? கமல்ஹாசன்லாம் இந்த புரோகிராமுக்கு வருவாருன்னு நினைக்கிறீங்க..?'' என்றார்.

''சார்… அவர் செம பெர்ஃபெக்‌ஷனிஸ்ட் சார். அதனால நிச்சயமா வருவாருங்க. நம்மோட ஒவ்வொரு அசைவையும் அவர் நோட் பண்ணிக்கிட்டிருக்கார் நண்பரே!'' என்றேன்.

''அப்படியா சார்… அப்ப நாம அவரைப் பார்க்கும்போது ஒரு 'எக்ஸ்க்ளூசிவ்' போட்டுரணும் சார். நம்ம பத்திரிகைக்கு இந்த வாரத்துக்கு ஒரு மேட்டர் தேத்தணுமில்ல'' என்றார் அவர். நான் மெல்ல தலையை ஆட்டி வைத்தேன்.

மூன்று வேளையும் தவறாமல் உணவு வந்தது. நாங்கள் எல்லோரும் 'எக்ஸ்பீரியன்ஸ் டூர்' வந்திருப்பதால் எங்களுக்கு இந்தச் சலுகை. இதுவே நிஜமான போட்டியாளர்கள் என்றால், நூறு நாட்களும் அவர்களே சமைத்துச் சாப்பிட்டுக் கொள்ள வேண்டுமாம்.

மாலை சுமார் 6 மணி வேளையில், எங்களுக்கு 'போர்' அடித்துப் போய்விடக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் (?) 'மியூசிக் சேர்' விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகூட எங்களுக்கான சலுகைதான். நிஜ போட்டியாளர்களுக்கு இதுவும் கிடையாது. அந்தப் போட்டியாளர்களை எல்லாம் நினைத்துப் பார்த்தால் ரொம்பப் பாவமாக இருக்கிறது.

எங்களில் சிலர் 'ஹார்ட்கோர்' சினிமா பத்திரிகையாளர்கள். அடுத்த நாள் நடிகர் விஜய்யின் பிறந்தநாள். முந்தின நாள் அவரின் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என்பதால், அந்தப் பத்திரிகையாளர்கள் மிகவும் பரபரப்பாக இருந்தனர். ஆனால் சோகம்… எங்களால்தான் வெளி உலகைத் தொடர்புகொள்ள முடியாதே! எனவே அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு பொறுமை காத்தார்கள்.

நாங்கள் அனைவரும் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்பது அந்த நிகழ்ச்சியின் விதிகளில் ஒன்று. நல்லவேளை எங்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர அனைவரும் தமிழ் தெரிந்தவர்கள். எனவே, எங்களில் தெலுங்கு மொழி தெரிந்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்ற நினைப்பில் அடுத்த நாள் காலை டிபனுடன் தெலுங்கு நாளிதழ் ஒன்றை வைத்து அனுப்பினார்கள், 'பிக் பாஸ்' குறும்பு டீம். ஆனால், எங்களில் ஒருவருக்கு தெலுங்கு மொழி தெரியும். நாளிதழை எடுத்தவுடன், விஜய்யின் புதிய பட டைட்டில் குறித்த செய்தியைத்தான் தேடினார்கள். செம 'மெர்சல்!'

இறுதியாக, எங்களில் ஒருவரை அந்த வீட்டிலிருந்து 'எலிமினேட்' செய்ய வேண்டிய தருணம் வந்தது. எங்கள் எல்லோரிடமும் கருத்து கேட்கப்பட்டது. நாங்கள் பரிந்துரைத்த பெயர்களில் எந்தப் பெயர் அதிகமாக சொல்லப்பட்டதோ, அவர் வெளியேற்றப்பட்டார். நல்லவேளை, எலிமினேட் செய்யப்பட்டவர், எங்களை எல்லாம் பார்த்து டாட்டா காட்டி, சிரித்துக்கொண்டேதான் சென்றார்!

இறுதியிலும் இறுதியாக, அந்த ரகசியம் உடைக்கப்பட்டது. எங்களோடு இருந்த அந்த ரகசிய ஏஜென்ட் யார் என்பது தெரிய வந்தது. அவருக்குக் கொடுக்கப்பட்ட மிஷன் என்ன என்பதும் தெரிய வந்தது. 'கமல் எங்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறார்' என்ற பொய்யை எங்களிடத்தில் நம்ப வைப்பதுதான் அந்த மிஷன்!

'எக்ஸ்க்ளூசிவ்' போட நினைத்த அந்தப் பத்திரிகையாளர் என்னைப் பார்த்து முறைத்தார். நான் வழக்கம் போல என் முப்பத்தி இரண்டு பற்களும் தெரியும்படி சிரித்து வைத்தேன்!

http://tamil.thehindu.com/opinion/reporter-page/எகிறிய-பிக்-பாஸ்-பல்ஸ்-ஏமாற்றிய-கமல்-ஒரு-பத்திரிகையாளரின்-நேரடி-அனுபவம்/article9736053.ece?homepage=true

Link to comment
Share on other sites

கடிகாரம், மொபைல், டி.வி... எதுவும் இல்லை...! நிருபரின் 24 மணி நேர திக்திக் ‘பிக் பாஸ்’ அனுபவம் #BiggBoss

 

ஒருநாள் முழுவதும் மொபைல் பயன்படுத்தாமல் உங்களால் இருக்க முடியுமா? கையில் சல்லிப் பைசா இல்லாமல் பயத்துடன் அலையும் திக்திக் நொடிகளை நினைத்துப் பார்க்கமுடிகிறதா? வெளியுலகோடு சுத்தமாக தொடர்புகள் அறுந்து நேரம் காலம் கூடத் தெரியாமல் உலா வர உங்களால் முடியுமா? சுற்றிலும் கேமராக் கண்கள் கூர்ந்து நோக்க, நீங்கள் மூச்சு விடும் சத்தத்தைக் கூட ஒருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை கற்பனை செய்ய முடிகிறதா? பெரிதாக பரிச்சயம் இல்லாத 13 பேரோடு நூறு நாள்கள் பொழுதைக் கழிக்க வாய்ப்பிருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் உங்களின் பதில் ஆம் என்றால்... வெல்கம் டு 'பிக்பாஸ்'

பிக் பாஸ்

 

கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி, பல கோடி ரூபாய் பட்ஜெட், பதினான்கு செலிபிரிட்டிகள், முதன்முறையாக தமிழில் என எக்கச்சக்க விஷயங்கள் இருக்கின்றன இந்த ஷோவைப் பற்றிச் சொல்ல. அதை எல்லாம் தாண்டி சொல்ல வேண்டியது அந்த ஒரு க்ரவுண்டு வீடு உங்களுக்குள் நிகழ்த்தும் உளவியல் மாற்றங்களைத்தான். பிக் பாஸ் குழுவின் சார்பில் அந்த வீட்டில் 24 மணிநேரம் வசிக்க வருமாறு எங்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்புதான் இந்த மாற்றங்கள் எங்களுக்குள் நிகழ்ந்ததற்கான தொடக்கப் புள்ளி. நாங்கள் இருவர், பிற ஊடகங்களில் இருந்து 12 பேர் என பதினான்கு போட்டியாளர்கள். மொத்தம் 53 கேமராக்கள். மெயின் ஷோவிற்கான ட்ரெய்லராக இருந்தது இந்த 24 மணிநேர அனுபவம் - எங்களுக்கும் பிக் பாஸ் குழுவிற்கும்!

வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு அவர்களின் ரேடாரில் இருந்து தப்பிப் பிழைப்பது நாம் போட்டிருக்கும் ஆடைகள் மட்டும்தான். உணவு வகைகளுக்கு உள்ளே அனுமதி கிடையாது. மருந்து மாத்திரைகளைக் கூட தீவிர பரிசோதனைக்குப் பின்பே அனுப்புகிறார்கள். பாக்கெட்டில் இருக்கும் மொபைலுக்கு அனிச்சையாய் கை போவது நம் எல்லாருக்குமே பழக்கம்தான். அப்படிப் போகும் கை வெறுமையாய் திரும்புவதில் தொடங்குகிறது முதல் பயம். பிடித்தவர்களுடனான சாட் தடைபடுவது தொடங்கி வேலை சம்பந்தப்பட்ட போன்கால்கள் வரை... மூச்! பிக்பாஸ் வீட்டிற்குள் மொபைல் மட்டுமல்ல, எந்தவித எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கும் அனுமதி இல்லை. தீவில் தனித்திருக்கும் தருணத்திலும் புத்தகம் சிறந்தத் துணை என்பதால் இங்கே அதற்கும் அனுமதி இல்லை. பேனா, பேப்பருக்குக் கூட கொடுத்து வைக்காது உங்களுக்கு! சுருங்கச் சொன்னால்... உங்களைச் சுற்றி இருக்கும் அந்த 13 பேரும் ஸ்பீக்கரின் வழி அவ்வப்போது கசியும் எந்திரக் குரலும்தான் அடுத்த நூறு நாள்களுக்கான உலகம்.

பிக் பாஸ்

 

இப்படி சும்மாவே இருந்தால் எப்படி பொழுது போகும்? வேறென்ன வழி? வாய் வி.ஆர்.எஸ் வாங்கும்வரை பேசிப் பேசி பொழுதுகளைத் தீர்க்கவேண்டும். அதிலும் ஒரு செக்மேட். உங்கள் கழுத்தோடு ஒரு குட்டி மைக்ரோபோனை எந்நேரமும் மாட்டிக்கொள்ள வேண்டும். குளிக்கும்போது மட்டுமே அதைக் கழற்றிக்கொள்ள அனுமதி. நாள்கள் ஆக ஆக, வெளியே இருப்பவர்களை பற்றி எல்லாம் பேசித் தீர்த்து வெறுத்து உங்களின் சக ரூம்மேட்களைப் பற்றியே பேசத் தொடங்குவீர்கள். முதல் கொஞ்ச நாள்கள்தான், மைக் இருப்பது உறுத்தி நல்லவர் வேஷம் எல்லாம். ஒரு கட்டத்தில், பொறுமை இழந்துவிடுவோம். நல்லதும் கெட்டதுமாக நீங்கள் பேசும் அந்த ஒலிக்குறிப்புகள் நாளை ஊரே பார்க்கும்படி டிவியில் வெளியாகும். முதல் மூன்று மணிநேரம் அமைதி காத்த நம்மால், அதற்கு மேல் வாயைக் கட்ட முடியவில்லை. ட்ரம்ப் தொடங்கி தண்டையார்பேட்டை குழாயடி சண்டை வரை மற்ற மீடியா நண்பர்களோடு பேசித் தீர்த்தோம். மைக் வழி கேட்டவர்களின் நிலைமை 'ஒய் பிளட் சேம் பிளட்தான்'! நல்லவேளை அவை எதுவும் ஒளிபரப்பாகாது.  

‘வாய் வலிக்குது பாஸ். தூங்குறோம்' என்றெல்லாம் பிக்பாஸை ஏமாற்றிவிடலாம் என்றுதான் நாங்களும் நினைத்தோம். ஆனால், நினைத்த நேரம் தூங்கவும் முடியாது. நண்பர் ஒருவர் அசதியில் லேசாக கண்ணசர விசித்திரமான ஒலிகளை அலறவிட்டு அவரை பதற வைத்தார்கள். தூக்கம் பாவம் பல கி.மீ தூரம் தள்ளிப்போயிருக்கும். அவர்களாக விளக்குகளை அணைக்கும்போதுதான் நீங்கள் தூங்கவேண்டும். எங்குமே கடிகாரம் இருக்காதென்பதால் பகல் இரவு மட்டுமே தெரியுமே தவிர டைம் தெரிய வாய்ப்பே இல்லை. அவர்கள் விளக்குகளை அணைக்கும்போதுதான் உங்களுக்கு குட்நைட் டைம்!

பிக் பாஸ்

 

பிக்பாஸின் பிரதான மந்திரமே 'ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது' என்பதுதான். வீடும் அதைப் போலவே! 53 கேமராக்கள்! குளியலறை, கழிவறை மட்டுமே விதிவிலக்கு. அங்கேயும் நீங்கள் உள்ளே சென்று கதவை மூடிக்கொள்ளும் வரை கேமராக்கண்கள் கண்காணிக்கும். மறைப்பில்லாத பொதுவான படுக்கையறை, கிச்சன், இருபாலருக்கும் பொதுவான ரெஸ்ட்ரூம்கள் என வீட்டின் அமைப்பே அயர்ச்சியைத் தருகிறது. காலைக்கடன்களை முடிப்பதற்குள் இரண்டு சின்னச் சின்ன சண்டைகளுக்கு நாட்டாமை பண்ணவேண்டிய நிலைமை எங்களுக்கு! வீட்டின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் வீடு முழுக்கத் தெரியும்படி வடிவமைக்கப்பட்டிருப்பதால் தும்முவதைக் கூட சங்கடத்தோடு செய்யவேண்டிய நிலை. 

பிக் பாஸ்

 

வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது, பாத்திரங்களைக் கழுவுவது, துணி துவைப்பது என எல்லாவற்றையும் அவரவர்களே செய்துகொள்ள வேண்டும். இங்குதான் பெரும்பாலான சண்டைகள் தொடங்கும். அதிகபட்சம் மூன்று பேர் மட்டுமே ஒருநேரத்தில் சமைக்க முடியும் என்பதால் யார் யார் எப்போது சமைப்பது என்பதில் சிக்கல் வரும். எங்களில் ஒருவருக்கு பசி வர அவர் பத்துப் பேரையும் மறந்து காச்மூச் என கத்தத் தொடங்கிவிட்டார். வெளியுலகில் இருந்து உங்களுக்கு வரும் அதிகபட்ச உதவி சமைப்பதற்கான மளிகைப் பொருட்களும், மைக்கிற்கான பேட்டரிகளும்தான். அதுவும் பூட்டிய அறைக்குள் இருக்கும். பெல் அடித்தவுடன் ஓடிச் சென்று அந்த அறை திரும்பப் பூட்டிக்கொள்வதற்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக, நீங்கள் பார்க்கப்போவது 13 பேர் மற்றும் கமல் என மொத்தம் 14 பேரின் முகங்களை மட்டும்தான்.

குறிப்பிட்ட இடைவேளைகளில் விளையாட்டுகள், போட்டிகள் போன்றவை நடக்கும். நம்மை ஒரு பெட்ரூமில் அடைத்து ஸ்கீரீன் போட்டு மூடி தேவையான ஏற்பாடுகளை செய்தபின் திறந்துவிடுவார்கள். இந்தச் சின்ன சின்ன விளையாட்டுகள்தான் உங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை குலைத்து குரோதத்தை வளர்க்கப் போகும் வில்லன். ‘அவன் போங்கு பண்ணிட்டான்டா’, ‘இந்தப் பொண்ணுக்கு விளையாடவே தெரியலை’ என நீங்கள் அடிக்கும் கமென்ட்களை நாளை டிவியில் உங்களுக்குத் தெரிந்தவர்களே பார்ப்பார்கள். நீங்கள் கட்டிக் காப்பாற்றிய குட் பாய் இமேஜ் எல்லாம் காற்றில் பறக்க வாய்ப்பிருக்கிறது. எங்களுக்கு இப்படி நடத்தப்பட்ட போட்டியில் போராடி ஜெயித்தார் ஒரு ஊடக நண்பர். மறுநாள், 'ஏன்டா ஜெயித்தோம்?' என்றாகிப்போனது அவருக்கு. 

பிக் பாஸ்

 

வாரம் ஒரு முறை அங்கிருக்கும் confession அறைக்கு போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்படுவார்கள். அவர்களிடம், 'நீங்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற்ற விரும்பும் நபர் யார்? என்ன காரணத்துக்காக வெளியேற்ற நினைக்கிறீர்கள்? என இரண்டு கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் அந்த வாரம் முழுவதும் போட்ட சண்டைகள், வளர்த்த நட்புகள் ஆகியவையே இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தீர்மானிக்கும். அதிகமான போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நபர் உடனடியாக வெளியேற்றப்படுவார். இரண்டு பேருக்கு சமமான ஓட்டுகள் விழுந்தால், மற்றவர்கள் குழுவாய் பேசி அவர்களில் ஒருவரை ஒருமனதாக வெளியே அனுப்பவேண்டும். முதல் நாள் போட்டியில் ஜெயித்த நண்பர் மற்றவர்களின் வயிற்றெரிச்சலை ஏராளமாக கிளறியிருப்பார் போல. அவருக்கு எதிராக எக்கச்சக்க ஓட்டுகள் விழுந்திருந்தன. அவரோடு ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவரே எதிராக வாக்களித்திருந்தார். யெஸ்... பிக்பாஸ் வீட்டிற்குள் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை. 24 மணிநேரம் அந்த வீட்டில் இருந்ததே விவரிக்க முடியாத வித்தியாச காக்டெயில் அனுபவமாக இருக்கிறது. நூறு நாள்கள் அந்த உலகத்தில் இருந்துவிட்டு திரும்பும்போது நிறையவே மாறியிருக்கும்... உங்களுக்கு உள்ளும் புறமும்!

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/93263-an-article-about-the-24-hour-experience-in-bigg-boss-house.html

Link to comment
Share on other sites

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டுப் பெண்: கமல் பாராட்டு!

 

 
julie890xx

 

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். நேற்று முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். 

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகவுள்ளது.

நேற்று தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியில் பங்குபெறும் 14 பேரும் அறிமுகம் செய்யப்பட்டார்கள். இதில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்று, கோஷங்கள் மூலம் அரசியல்வாதிகளை விமரிசனம் செய்து புகழ்பெற்றவரான ஜூலியானாவும் போட்டியாளர்களில் ஒருவராக அறிமுகம் செய்யப்பட்டார்.  

ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்ற சமயத்தில் இவருடைய கோஷங்கள் வீடியோக்களாக சமூகவலைத்தளங்கில் அதிகம் பகிரப்பட்டன. அப்போது, வீரத்தமிழச்சி என்கிற பட்டமும் அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு அவர் கொடூரமாகக் கொலை  செய்யப்பட்டதாக வாட்ஸப்பில் வதந்திகள் உருவாகியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு ஒரு பேட்டியில், தான் நலமுடன் உள்ளதாக ஜூலி அறிவித்தார்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அவர் அறிமுகமானது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. இந்த நிகழ்ச்சியின் மூலமாகப் புதிய குடும்ப உறுப்பினர்களைப் பெறப்போகிறேன் என்று நட்புணர்வுடன் பதில் அளித்து கமலிடம் பாராட்டுப் பெற்றார் ஜூலி.

julie11.jpg

 

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jun/26/big-boss--jallikattu--kamal----juliana-2727379.html

Link to comment
Share on other sites

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கும் 15 நபர்கள் யார்?- முழுவிவரம்

 

கமல் | கோப்பு படம்
கமல் | கோப்பு படம்
 
 

விஜய் தொலைக்காட்சியில் நேற்று (ஜூன் 26) முதல் ஆரம்பிக்கப்பட்ட 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில், 15 பங்கேற்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

கமல்ஹாசன் தொகுப்பாளராக பங்கேற்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் நேற்று (ஜூன் 26) முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் 14 நபர்கள் யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தார்கள்.

நேற்றைய ஒளிபரப்பில், பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி வைத்தார் கமல். 14 போட்டியாளர்கள், 53 கேமிராக்கள், ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்று விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், போட்டியாளர்களில் ஒருவரை அதிகப்படுத்தி 15- ஆக ஆக்கியுள்ளது விஜய் தொலைக்காட்சி நிறுவனம்.

15 போட்டியாளர்கள்

ஸ்ரீ - 'வழக்கு என் 18/9', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'வில் அம்பு' மற்றும் 'மாநகரம்' படங்களில் நடித்தவர்

அனுயா - 'சிவா மனசுல சக்தி', 'நகரம்', 'நண்பன்' மற்றும் 'நான்' படங்களில் நடித்தவர்

வையாபுரி - பல்வேறு படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர்

காயத்ரி ரகுராம் - 'சார்லி சாப்ளின்', 'ஸ்டைல்', 'பரசுராம்' உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர். தற்போது பல்வேறு படங்களில் நடன இயக்குநராகவும் பணிபுரிந்து வருகிறார்.

பரணி - 'நாடோடிகள்', 'தூங்காநகரம்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர படங்களில் நடித்தவர்.

ரைசா வில்சன் - இவர் ஒரு மாடல்

சிநேகன் - தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவர். 'யோகி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

ஓவியா - 'களவாணி', 'மெரினா', 'கலகலப்பு' உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர்.

ஆர்த்தி கணேஷ் - பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நாடகங்கள் உள்ளிட்டவற்றிலும் பங்கேற்றுள்ளார்.

ஆரர் - இவர் ஒரு மாடல்

கஞ்சா கருப்பு - பல்வேறு படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர படங்களில் நடித்தவர்.

ஜூலியனா - மெரினாவில் நடைபெற்ற ஜல்லிகட்டுப் போராட்டத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஜூலியனா

கணேஷ் வெங்கட்ராம் - பல்வேறு படங்களில் நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் கணேஷ் வெங்கட்ராம்

சக்தி வாசு - இயக்குநர் பி.வாசுவின் மகன். தற்போது படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

நமீதா - நாயகியாகவும், பல்வேறு படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

பங்கேற்பாளர்களுக்கான விதிமுறைகள்:

பூந்தமல்லியை அடுத்த தண்டலத்தில், பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த ’பிக் பாஸ்’ வீட்டில் மொத்தம் 53 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் ஒவ்வொரு அசைவையும் அந்த கேமராக்கள் கண்காணிக்கும்.

இந்த வீட்டுக்குள் கடிகாரம், கைப்பேசி, இணையதளம், தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை. எனவே போட்டியாளர்களால் வெளி உலகைத் தொடர்புகொள்ள முடியாது. அவர்களுக்கான‌ உணவை அவர்களே சமைத்துக்கொள்ள வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு மைக்ரோ போன் வழங்கப்படும் அதை எப்போதும் அவர்கள் தங்கள் கழுத்தில் மாட்டிக்கொள்ள வேண்டும். ஏதேனும் தேவை ஏற்பட்டால், போட்டியாளர்கள் அந்த மைக்ரோஃபோன் மூலமாகத்தான் நிகழ்ச்சி அமைப்பாளர்களை தொடர்புகொள்ள முடியும்.

போட்டியாளர்கள் அனைவரும் ஒரே ஹாலில் போடப்பட்டிருக்கும் கட்டிலில்தான் உறங்க வேண்டும். அதேபோல 2 கழிவறைகள், 2 குளியலறைகள் மட்டுமே உள்ளன. அங்கிருக்கும் நீச்சல் குளத்தை ஒரே சமயத்தில் 5 பேர் மட்டுமே பயன்படுத்த முடியும். இதுபோன்ற காரணங்களால், போட்டியாளர்களுக்குள் போட்டி மனப்பான்மை ஏற்பட்டு, நிறைய சவால்கள் உருவாகும். அது இந்நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முதல் ஒளிபரப்பாகும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில், வீட்டிற்குள் பங்கேற்பார்களின் நிலைமை என்ன என்பது ஒளிபரப்பாகவுள்ளது. சனிக்கிழமை அன்று மீண்டும் கமல் கலந்து கொள்ளவுள்ளார்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/பிக்-பாஸ்-நிகழ்ச்சியில்-பங்குபெற்றிருக்கும்-15-நபர்கள்-யார்-முழுவிவரம்/article9737183.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'பிக் பாஸ்' பார்வையாளர்கள் 3 கோடியைக் கடந்தது: விஜய் தொலைக்காட்சி தகவல்

 

'பிக் பாஸ்' போஸ்டர் | கோப்பு படம்
'பிக் பாஸ்' போஸ்டர் | கோப்பு படம்
 
 

'பிக் பாஸ்' பார்வையாளர்கள் 3 கோடியைக் கடந்து விட்டதாக விஜய் தொலைக்காட்சி தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஜூன் 25-ம் தேதி முதல், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து சமூகவலைத்தளத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தினமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை உடனுக்குடன் கலாய்த்து மீம்ஸ்கள் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. இதில் கலந்து கொண்டுள்ள 15 பேரில், அனுயா மட்டும் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் "உலகநாயகன் கமல்ஹாசனுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான பார்வையாளர்கள் 3கோடியே 60 லட்சம் ஆனது. நன்றி மக்களே" என்று தெரிவித்துள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை 'பிக் பாஸ்' வீட்டுக்குள் நடக்கும் நிகழ்வுகளும், சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களில் கமல் கலந்து கொண்டு வீட்டுக்குள் இருப்பவர்களிடம் பேசும் நிகழ்வு ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/பிக்-பாஸ்-பார்வையாளர்கள்-3-கோடியைக்-கடந்தது-விஜய்-தொலைக்காட்சி-தகவல்/article9753297.ece?homepage=true

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

வீட்டுச் சுவரைத் தாண்டினால் `பிக் பாஸ்' என்ன செய்வார் தெரியுமா?

 

நாளுக்கு நாள் பரபர ட்விஸ்டோடு பயணித்துக்கொண்டிருக்கிறது `பிக் பாஸ்' நிகழ்ச்சி. ஆர்த்தி, காயத்ரி மற்றும் ஜூலியானாவுக்கு இடையே நடந்த வாக்குவாதம், கஞ்சா கருப்பு வெளியேற்றம் போன்றவை ஒவ்வொரு நாளும் மக்களிடையே பலதரப்பட்ட விவாதங்களை உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் வெளியான இந்த நிகழ்ச்சியின் புரொமோ, `பிக் பாஸ்' பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, நெட்டிசன்கள் மீம்ஸ் மழை பொழிந்துகொண்டிருக்கிறார்கள். அந்த புரொமோ வீடியோவில் நடிகர் பரணி, விரக்தியின் உச்சத்தில் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்து, காம்பவுண்ட் சுவரில் ஏறிக்கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட இதேபோன்று ஒரு சம்பவம் இந்தி `பிக் பாஸ்' நிகழ்ச்சியிலும் நடந்துள்ளது.

பிக் பாஸ்

 

`பிக் பாஸ் - 7' நிகழ்ச்சியின் போட்டியாளரான குஷால் தான்டோன் என்பவர்தான் அங்கே வீட்டுக் காம்பவுண்டைத் தாண்டிக் குதித்தது. குஷாலுக்கும் அவரின் சகப்போட்டியாளரான தனிஷா முகர்ஜிக்கும் ('உன்னாலே உன்னாலே' படத்தின் நாயகி. பிரபல இந்தி நடிகை கஜோலின் தங்கை ) வாக்குவாதம் ஏற்பட, அதில் கடுப்பான குஷால், `இனி இங்கே இருக்க முடியாது' எனச் சொல்லி, வீட்டின் சுவரில் ஏறி வெளியே குதித்திருக்கிறார். 2013-ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம், இந்தித் தொலைக்காட்சி உலகைப் பரபரப்பாக்கியது. பின்னர், `பிக் பாஸ் - 8' நிகழ்ச்சியிலும் அலி க்யுலி மிர்சா என்பவர், ``மற்ற போட்டியாளர்கள் அனைவரும் என்னை விரோதியாகப் பார்க்கிறார்கள்'' எனச் சொல்லி, வீட்டிலிருந்து தப்பிக்க சுவரில் ஏறியிருக்கிறார். இந்த இரு போட்டியாளர்களுமே சமாதானம் செய்யப்பட்டு மீண்டும் `பிக் பாஸ்' வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/tamilnadu/94947-what-will-happen-when-contestants-tries-to-escape-from-big-boss-house.html

Link to comment
Share on other sites

'’வீட்டுக்குப் போகலை... தனியறையில் வச்சிருக்காக!’' - பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே கஞ்சா கருப்பு

 
 

அடுத்தடுத்து நட்சத்திரங்கள் வெளியேறுவதால், பிக் பாஸ் நிகழ்ச்சி எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டைவிட்டு கஞ்சா கருப்பு வெளியேறுவதாகச் சொல்லப்பட்டது. ஆனால், 'நான் எங்கேயும் செல்லவில்லை. 100 நாள்கள் முடியும் வரையில், எங்கேயும் செல்ல அனுமதியில்லை. அவர்கள் கொடுத்த அறையில்தான் தங்கியிருக்கிறேன்' என்கிறார் நடிகர் கஞ்சா கருப்பு. 

ganja karppu


14 அத்தியாயங்களைக் கடந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில், தற்போது வரையில் நடிகை அனுயா, நடிகர் கஞ்சா கருப்பு ஆகிய இருவரும் வெளியேறியுள்ளனர். தொடக்கத்தில், உடல்நலமின்மையைக் காரணம் காட்டி நடிகர் ஶ்ரீ வெளியேறினார். மீதமுள்ள 12 போட்டியாளர்களில் யாருக்கு வெற்றி என்பதில், மிகப் பெரும் மோதலே நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து வரப் போகும் 83 நாள்களில் இதற்கான விடை கிடைக்க இருக்கிறது. இன்றைக்கு வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ காட்சியில், நடிகர் பரணி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆவலை, தொடர்ச்சியாகத் தக்க வைக்கும் முயற்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது அனைவரையும் கட்டி பிடித்த நடிகர் கஞ்சா கருப்பு, நடிகர் பரணியை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், இப்போது கஞ்சா கருப்பு என்ன செய்கிறார் என்பதை அறிய, அவரைத் தொடர்பு கொண்டோம். 

ganja karppu

" வணக்கம் சார் எப்படி இருக்கீங்க..?" 

" நல்லா இருக்கேன்..!"

" பிக் பாஸ் அனுபவம் எப்படி சார் இருந்தது?" 

" நான் இப்போ பேட்டியே கொடுக்க மாட்டேன்! தப்பா நினைச்சுகாதீங்க..!" 
 
" ஏன் சார்..? என்ன காரணம்..?"

" அக்ரீமென்ட் போட்டுயிருக்காங்க.. அதாவது நூறு நாளைக்கு, இந்த ஷோ முடியறவரைக்கும் இன்டெர்யூ கொடுக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க.."  

"உங்க அனுபவத்தைக்கூட சொல்ல மாட்டீங்களா?" 

"சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன். இப்போகூட அவங்க வேலையாத்தான் (பிக் பாஸ்) ரூம் போட்டு கொடுத்திருக்காங்க. நான் போன்ல பேசக்கூடாது, தவறா நினைக்காதீங்க!"   

"அப்போ... அவங்க கொடுத்திருக்கிற ரூம்லதான் இருக்கீங்களா, வீட்டுக்குப் போகலையா?" 

"ஆமா, வீட்டுக்குப் போக மாட்டேன். நூறு நாள் முடியுற வரைக்கும், வீட்டுக்குக் கூட போகக்கூடாது. எல்லா வசதியும் இந்த ரூமில இருக்கு". 

"உங்கள் குடும்பத்தார்கிட்ட பேசுனீங்களா?" 

 

" ஆ... பேசுவேன்.. பேசுவேன். ஆனா, இதுக்குமேல உங்ககூட பேச மாட்டேன். தவறா நினைக்காதீங்க. நன்றி வணக்கம்..!’’

http://www.vikatan.com/news/cinema/94975-do-not-go-home-keep-it-in-private---bigg-boss-ganja-karuppu.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.