Jump to content

தர்மயுத்தத்துக்கு முதல் வெற்றி! பன்னீர்செல்வம் அடடே பேட்டி


Recommended Posts

தர்மயுத்தத்துக்கு முதல் வெற்றி! பன்னீர்செல்வம் அடடே பேட்டி

 
 

1a_12142.jpg

'அ.தி.மு.க-விலிருந்து சசிகலா குடும்பத்தை விலக்கிவைப்பது என்று முதல்வர் பழனிசாமி தரப்பில் முடிவெடித்திருப்பது,  நாங்கள் நடத்திய தர்மயுத்தத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி' என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடிதூக்கியுள்ள நிலையில், பன்னீர்செல்வத்துடன் இணைந்து அ.தி.மு.க-வையும், சின்னத்தையும் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவே இருக்கிறோம் என்று பழனிசாமி அணியினர் அறிவித்தனர். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு ஒன்றை அமைப்பது குறித்து முதல்வர் பழனிசாமி இல்லத்தில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வம் இல்லத்துக்கு இன்று காலை வந்த மைத்ரேயன் எம்பி., முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், எம்எல்ஏ-க்கள் செம்மலை, மாஃபா பாண்டியராஜன் மற்றும் ராஜகண்ணப்பன், விஸ்வநாதன், மோகன், சண்முகநாதன், நிர்மலா பெரியசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார் பன்னீர்செல்வம்.

இந்த ஆலோனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், "புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தை உருவாக்கினார். மக்கள் இயக்கமாக அ.தி.மு.க-வை உருவாக்கி வளர்த்துவந்தார். ஜெயலலிதாவும் 29 ஆண்டுகளாக கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து, கட்சிக்கு வந்த சோதனைகளையெல்லாம் வென்றெடுத்து, இயக்கத்தைத் தொண்டர்கள் இயக்கமாகவும் மக்கள் இயக்கமாகவும் எம்.ஜி.ஆர் வழிவந்த பாதையில் இயக்கத்தை நடத்திவந்தார். ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னால் அ.தி.மு.க சசிகலா குடும்பத்துக்குள் சென்றுவிடதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் எங்களுடைய தர்மயுத்தம், அறப்போராட்டம் தொடங்கப்பட்டது.

4a_12420.jpg

தொண்டர்களுடைய விருப்பம், மக்களுடைய விருப்பமாகத்தான் மாபெரும் தலைவர்களுடைய கொள்கையின்படியும் எங்களது அடிப்படைக் கருத்தாக வைத்து தர்மயுத்தம் தொடங்கப்பட்டது. அந்த தர்மயுத்தத்துக்கு இன்றைக்கு முதல் வெற்றியாக சசிகலா குடும்பத்தை விலக்கிவைப்பது என்று அவர்கள் தரப்பில் முடிவெடித்திருக்கிறார்கள். தொடர்ந்து, எங்களது தர்மயுத்தம் எந்த நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ, அதன்படி தொடர்ந்து மக்களுடைய எண்ணத்தின்படியும் தொண்டர்களின் விருப்பத்தின்படியும் இயங்குவது, அ.தி.மு.க தொண்டர்களின் இயக்கம்தான் என்பதை நிரூபித்துக்காட்டுவோம்" என்று கூறினார்.

முதல்வர் பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த, உங்கள் தரப்பில் இருந்து குழு அமைக்கப்பட்டுவிட்டதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த பன்னீர்செல்வம், தொண்டர்களின் விருப்பம் எதுவோ; மக்களுடைய விருப்பம் எதுவோ அதை நடைமுறைப்படுத்துவதற்கு இரு தரப்பும் உட்கார்ந்து பேசி முடிவெடுப்போம் என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/86901-its-a-first-success-panneerselvams-victorious-interview.html

Link to comment
Share on other sites

அமைச்சர்கள் முடிவை வரவேற்ற சசிகலா குடும்பத்தினர்!

 

vivek_jayaraman_14111.jpg

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்படுவதை சசிகலா குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

'அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்ற நாளில் இருந்து, குடும்ப உறவுகளை முழுமையாக ஒதுக்கிவைத்திருந்தார் தினகரன். அவருக்கு வேண்டிய ஆட்கள் மட்டும் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சத் தொடங்கினர். இதனால் எரிச்சலான திவாகரன், பெங்களூரு சிறையிலேயே சசிகலாவைச் சந்தித்து முறையிட்டார்.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலைச் சின்னம் பிரச்னை தீவிரமாக வெடித்ததால், இரு அணிகளும் ஒன்றுசேர்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கிவிட்டனர். இதனை எதிர்பார்க்காத தினகரன், 'நேற்றே கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டேன்' எனப் பேட்டியளித்தார்.

vivek_jayaraman_1_15499.jpg

இதுகுறித்து, ஃபேஸ்புக்கில் கருத்தைத் தெரிவித்த திவாகரன் மகன் ஜெயானந்த், 'சசிகலாவைத் தவிர அந்தக் குடும்பத்தில் இருந்து யாரும் வரமாட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பே இதை நாங்கள் வலியுறுத்தினோம். அப்போது இதை யாரும் ஏற்கவில்லை. தாமதமான முடிவு என்றாலும் வரவேற்கிறோம்' எனத் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பின்னூட்டமாக இளவரசி மகன் விவேக், 'ஸ்மைலி' சின்னத்தைப் பதிவுசெய்திருந்தார். 'தினகரனை ஒதுக்கிவைக்கும் முடிவை, குடும்பத்தினர் அனைவரும் ஏகமனதுடன் வரவேற்கின்றனர் என்பது இதன்மூலம் தெரிகிறது' என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

http://www.vikatan.com/news/tamilnadu/86923-sasikalas-family-welcomes-ministers-decision.html

Link to comment
Share on other sites

எந்த தர்மம் வெல்லும்? - அ.தி.மு.க மானஸ்தர்களுக்கு சில கேள்விகள்

 
 

பிரேக்கிங் செய்திகள், இன்டர்வெல் ட்விஸ்டுகள் என அடுத்தடுத்து நடக்கிற அரசியல் ஸ்டன்ட்கள் எல்லாம் இப்போது சாமானிய மக்களுக்கும் அத்துப்படி. 'நீங்க எந்த எந்த நேரத்துல எப்படி டைப் டைப்பா முழிய வெச்சுக்குவீங்கனு எங்களுக்கு நல்லாத் தெரியும்' என மக்களே கரைவேட்டிகளுக்கு டைமிங் கவுன்டர் கொடுக்கிறார்கள். 

அ தி மு க - இரட்டை இலை

'அரசியல்வாதி பேச்சு சொன்ன அடுத்த நிமிஷமே போச்சு...' என்பதுதான் லேட்டஸ்ட் சொலவடை. முன் தின இரவு ஒரு அணிக்கு ஆதரவாக உயிரைக் கொடுத்துக் கத்தும் ஒருவர் விடிந்தும் விடியாததுமாக எதிரணியில் தஞ்சம் புகுந்து ப்ளேட்டையே திருப்பிப் போட்டுத் தலைகீழாக தோசை சுடுவதெல்லாம் சமீபத்திய தமிழக அரசியலின் சாதனைகள். 

* 'தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்'னு உலகத்தில் எல்லோரையும் விட அதிகமாகச் சொன்ன அ.தி.மு.க அனுதாபிகளே... மந்தையிலிருந்து பிரிந்த இரண்டு ஆடுகள் சேரத் துடிக்கிற இந்தத் தருணத்தில் யாருடைய தர்மம் வென்றது? யாரோ ஒருவருடைய தர்மம் வென்றதானால் சூதுகவ்வியது உங்களில் ஒரு அணியைச் சேர்ந்தவர்களா அல்லது இந்தமுறையும் வழக்கமாக நீங்கள் மொட்டையடிக்கும் மக்களா?

* நீங்கள் தெய்வமாக வணங்கிய 'சின்னம்மா' சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தனி அணியை உருவாக்கியதும் 'பன்னீர்செல்வம் ஒரு பச்சைத் துரோகி' என நரம்பு புடைக்க, நா வறழக் கத்திய ரத்தத்தின் ரத்தங்களே... இப்போது உங்கள் வளர்ச்சிக்காக அதே 'பச்சைத் துரோகி'யோடு கைகோக்க ஆயத்தமாகிவிட்டீர்களே... அப்போது சொன்னதற்கு நேர்மாறாக 'விசுவாசம் என்றால் ஓ.பி.எஸ்' என இப்போது அந்தர்பல்டி அடிக்கிறீர்களே... இதற்குப் பெயர் என்ன?

* 'அ.தி.மு.க எனும் தன்மான இயக்கத்தை அழிக்க நினைத்த பன்னீர்செல்வம் அணியினரின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது' என சின்னம்மா குடும்பத்தினருக்கு வெகுவாக முட்டுக்கொடுத்து முதல்வர் பதவியைப் பிடித்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் இப்போது ஏன் தினகரனை நட்டாற்றில் விட்டுவிட்டு முகத்திரை கிழிக்கப்பட்ட பன்னீர்செல்வத்தை நாடுகிறார்?

* சசிகலாவை பொதுச்செயலாளராக்கிய போதும் 'ஒன்றரைக் கோடித் தொண்டர்களின் முடிவு' என்று கூறினீர்கள். சசிகலாவை முதல்வராக்க முயற்சித்த போதும் 'ஒன்றரைக் கோடித் தொண்டர்களின் முடிவு இது' எனக் கூறினீர்கள். தினகரனைப் துணைப் பொதுச் செயலாளர் ஆக்கியபோதும் அதையேதான் சொன்னீர்கள். அவரை ஆர்.கே.நகர் வேட்பாளராகக் களமிறக்கியபோதும் அதையேதான் கூறினீர்கள். இப்போது சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைப்பதற்கும் 'ஒன்றரைக் கோடித் தொண்டர்களின் விருப்பம்' எனச் சொல்லிவருகிறீர்கள்? அப்படியெனில் இடையிடையே பன்னீர்செல்வம் பின்னால் சென்றவர்கள், தீபா தலைமையேற்க விரும்பியவர்கள் எல்லோரும் தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க போன்ற பிற கட்சியைச் சேர்ந்தவர்களா..? 

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

* சசிகலாவின் ஆதிக்கத்தை எதிர்த்து ஓ.பி.எஸ் தனி அணியைத் தொடங்கியபோது இதற்குக் காரணம், 'அவருக்கு பா.ஜ.க ஆதரவு இருக்கிறது; தி.மு.க-வுடன் மறைமுகக் கூட்டு இருக்கிறது' எனப் பேசினீர்களே... இப்போது நீங்கள் பன்னீருடன் இணையத் துடிப்பதற்குப் பின்னால் என்ன இருக்கிறது? அது முழுக்க முழுக்கப் பதவி வெறி என எடுத்துக் கொள்ளலாமா..?

* ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு விலகியதால் கட்சிக்கு எந்த நஷ்டமும் இல்லை எனச் சொன்ன மானஸ்தர்களே... இப்போது ஏன் தொண்டர்களின் ஆதரவு துளியும் இல்லாததாக நீங்கள் அப்போது சொன்ன ஓ.பி.எஸ் வீட்டுப் பூட்டை ஆட்டிக் கொண்டிருக்கிறீர்கள். 

* சமீபகாலமாக உங்கள் கட்சி நிர்வாகிகள் இரவு நேரங்களில் மட்டுமே ஆலோசனை செய்து அறிக்கை வெளியிடுகிறீர்களே..? உங்கள் கழகத்தின் சகோதர நிறுவனமான(!?) 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' வீக்கெண்ட் விடுமுறை நாட்களில் மட்டும் செயல்படுவதைப் போல நடுராத்திரியில் மட்டும் செயல்படும் முடிவில் இருக்கிறீர்களா..? 

* பணம் கொடுத்து சின்னத்தை வாங்கிவிடலாம் என நினைத்த தினகரனும், பதவிக்காகத் தங்கள் நிலைப்பாட்டை எந்த நேரத்திலும் மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிற சீனிவாசனும், எடப்பாடி பழனிசாமியும் ஆர்.பி.உதயகுமாரும் சூழ்ந்ததுதானா உங்கள் கட்சி?

* வருமான வரித்துறை ரெய்டில் வலுவாகச் சிக்கிய விஜயபாஸ்கர் இன்னும் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கப்படவில்லை. சின்னம் வாங்க லஞ்சம் கொடுத்த புகாரில் கட்சிக்கு அவப்பெயர் வாங்கிக் கொடுத்த தினகரனை முழுமையாகப் புறக்கணிக்கவும் இல்லை. மக்கள் நலனும் இல்லை; கட்சி நலனும் இல்லை; பதவி ஆசை மட்டுமே உங்கள் அரசியல் வாழ்வுக்கான ஒரே நோக்கம் எனப் புரிந்துகொள்ளலாமா?   

http://www.vikatan.com/news/politics/86925-some-questions-for-admk-people.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.