Sign in to follow this  
நவீனன்

ஒரு நிமிடக் கதை: மருமகள்

Recommended Posts

ஒரு நிமிடக் கதை: மருமகள்

 

 
 
176_1997088h.jpg
 

அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அண்ணனின் போன் வந்ததும் சங்கர் அப்பாவைப் பார்க்க கிராமத்துக்கு கிளம்பினான்.

ஆபீஸில் இருக்கும் போது போன் வந்ததால், மனைவி சித்ராவிடம் கூட சொல்லாமல் கிராமத்துக்கு சென்றான். அங்கிருந்து மனைவிக்கு போன் செய்து தான் ஊருக்கு வந்திருப்பதைச் சொன்னான்

அடுத்தநாள் மாலை ஊரில் இருந்து கிளம்பி திங்கள்கிழமை நேராக அலுவலகத்துக்கு சென்றான் சங்கர். இரவு வீடு திரும்பியவனுக்கு அதிர்ச்சி. வீட்டில் மனைவி சித்ரா இல்லை. குழந்தைகள் பள்ளியை விட்டு வந்து பள்ளி சீருடையைக் கூட மாற்றாமல் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

அதைப் பார்த்த சங்கருக்கு எரிச்சலாக வந்தது. வீட்டிலிருந்த வேலைக்காரியிடம் “அவ எங்க போய் தொலைஞ்சா...?” என்று கத்தினான்.

“எனக்கு தெரியாது, சார்!... காலையில யாருக்கோ போன் பண்ணாங்க. உடனே ‘நான் அவசரமா வெளியப் போகணும். நான் வர்றவரைக்கும் பிள்ளைங்களைப் பார்த்துக்கோ’ன்னு மட்டும் சொல்லிட்டுப் போனாங்க!" என்று அவள் சொல்ல உடனே சித்ராவின் ‘செல்’லுக்கு சங்கர் போன் செய்தான்.

சித்ரா போனை எடுத்ததும், “வீட்ல இல்லாம நீ எங்க போய் தொலைஞ்சே...!?” கடுப்புடன் கத்தினான்.

“உங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டதும், உடனே பேருக்குன்னு போய் பார்த்துட்டு அம்போன்னு அந்த கிராமத்துல வசதியில்லாத உங்க அண்ணனை நம்பி விட்டுட்டு வந்திட்டீங்க. அதான் நான் கிளம்பி வந்து சிட்டியில நல்ல ஹாஸ்பிட்டல்ல அவரை சேர்த்திருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன். அதுவரைக்கும் நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. ப்ளீஸ்!” என்றாள்.

இதைக் கேட்டதும் குற்ற உணர்ச்சியில் சங்கர் தலை குனிந்தான்.

http://tamil.thehindu.com

Share this post


Link to post
Share on other sites

நீதி : கதையாக இருந்தாலும் கூட காசு முழுதும் கட்டினவளின் கண்ரோலில்தான் போல.....!  tw_blush:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 18.4.2017 at 11:40 PM, suvy said:

நீதி : கதையாக இருந்தாலும் கூட காசு முழுதும் கட்டினவளின் கண்ரோலில்தான் போல.....!  tw_blush:

வாசித்து விட்டு போகாமல் உங்கள் கருத்தையும் பதிந்து ஊக்கம் தருவதுக்கு நன்றி..:)

Share this post


Link to post
Share on other sites

நான் வாசித்து விட்டுத்தான் கருத்தெழுவது நவீனன்....! வாசிக்க விரும்பியும் நேரமின்மை காரணமாக வாசிக்காமல் இருக்கும் பதிவுகள் நிறைய இருக்கு. அவற்றையும் வாசிக்க வேண்டும்....! tw_blush:

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  

 • Similar Content

  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதைகள்
    

   ஒரு நிமிடக் கதைகள்     பார்த்துப் பார்த்து... அம்மாவுக்குப் பட்டுப்புடவை, தங்க வளையல், அப்பா வுக்கு விலை உயர்ந்த கைக் கடிகாரம், பாலியெஸ்டர்வேட்டி எனப் பார்த்துப் பார்த்து வாங்கி வந்திருந்தாள், மூத்த மகள் சங்கரி. ஆனால், அதற்காகப் பெரிதும் மகிழவில்லைஅவள் பெற்றோர், அன்று மாலை சங்கரியின் தங்கை நீலா வந்தாள்.
   ‘‘இந்தாம்மா... பித்த வெடிப்பு மருந்து. ராத்திரி படுக்கப் போறப்ப காலை வெந்நீர்ல கழுவிட்டு இதைப் போட்டுக்கோ. ரெண்டே நாள்ல சரியாகிடும். அப்பா, இந்தாங்க, உங்களுக்குப் பன்னீர்ப் புகையிலையும், வாசனை சுண் ணாம்பும். இது கண் மருந்து. ராத்திரி போட்டுவிடறேன். இந்தாம்மா, உனக்குப் பிடிச்ச மலைப் பழம். இது வெங்காய பக்கோடா... அப்பாவுக்கு!’’
   நீலா தன் பையிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து நீட்ட, அப்பா அம்மாவின் முகத்தில் எழுந்த சந்தோஷத்துக்குக் காரணம் புரிந்தது சங்கரிக்கு!
   - புள்ளமங்கலம் ரா.லதா
    
    
     நல்லதாக நாலு!
   தாத்தா பெரிய கல்விமான். அவர் சாகும் போது தன் பேரனை அருகில் அழைத்து, “தந்தை சொல் படி நடக்காதே; தாயின்செலவுக் குப் பணம் தராதே; உட்கார்ந்து சாப்பிடாதே; படுத்துத் தூங்காதே! இந்த நான்கையும் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் முன்னேறுவாய்’’ என்று சொல்லிவிட்டு மறைந்தார்.
   யாருக்கும் எதுவும் புரியவில்லை. ஏதோ உளறுகிறார் என்று நினைத்தார்கள். அங்கே வந்திருந்த தமிழ் ஆசிரியர்தான் விளக்கினார்.
   “சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் உன் தாத்தா! உன் தந்தை என்ன சொல்வார்... ஒழுங்காகப் படி, நல்ல பையன் என்று பேர் எடு என்றுதானே? அவர் அப்படிச் சொல்லும்படி ஏன் வைத்துக்கொள் கிறாய்? அதற்கு முன் நீயாகவே அப்படி நடந்துகொண்டுவிடு! அதுபோல், தாயின் செலவுக்கு நீ பணம் தராதே. உன் சம்பளத்தைத் தாயிடம் அப்படியே கொடுத்துவிட்டு, உன் செலவுக்கு அவரிடம் கேட்டு வாங்கிக்கொள்! பிறர் உழைக்க, அதில் நீ உட்கார்ந்து சாப்பிடாதே! சோம்பேறிதான் படுக்கையில் புரண்டுவிட்டுப் பின் தூங்குவான். கடினமாக உழைத்தால், படுப்பதற்கு முன்பே தூக்கம் கண்ணைச் சுழற்றும்! புரிகிறதா?’’
   - ஆ.கிருஷ்ணன்
    
    
    
    
     புத்தி! ஷேர் மார்க்கெட்டில் புகுந்து விளையாடுபவன் தருண். அவன் மனைவி சாந்தி கிராமத்துப் பெண்... பாவம், ஒன்றும் தெரியாத அப்பிராணி. அவளிடம் இவன் தன் மேதாவித்தனத்தை அடிக்கடி காட்டி, மக்கு, மடசாம்பிராணி என்று அவளை மட்டம் தட்டிப் பேசுவான்.
   அன்றைக்கு டி.வி-யில் செய்திகள் பார்த்துக்கொண்டு இருந்த தருண், திடீரென ‘‘சே! என்னத்த செய்தி சொல்றாங்களோ? வணிகச் செய்திகளை வாசிக்காம, வெறுமே வாசகங்களை மட்டும் போடுறாங்களே, உன்னை மாதிரி மரமண்டைகள் எப்படிப் படிச்சுப் புரிஞ்சுக்கும்?’’ என்றான்.
   குபீரென்று கிளம்பிய எரிச்சலைஅடக்கிக்கொண்டு சாந்தி சொன்னாள்... ‘‘என்னைப் போல மர மண்டைகளுக்கு எதுக்குங்க வணிகச் செய்தி? அதெல்லாம் உங்களைப் போலப் படிச்சுட்டு பிஸினஸ் செய்யறவங்களுக்கும், பங்குச் சந்தையில் இருக்கிறவங்களுக்கும்தானே? அதை எழுத்துல போட்டா போதாதா? எங்களுக்குத் தேவையான செய்தி களா இருந்தா கண்டிப்பா வாசிப்பாங்க’’ என்றாள்.
   அடுத்த விநாடி, ‘தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்- வழங்குபவர்கள்...’ என ஓங்கி ஒலித்தது டி.வி.
   - ஆர்.தங்கராஜ்
   https://www.vikatan.com
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை: கோலமாவு
    
    
    
   "இங்க பாருங்க...நீங்க ப்ராடக்ட்டை வாங்கி ஒரு வருஷமாயிட்டுது. ஆமாங்க .... சொன்னோம் ... டேர்ம்ஸ்சை அக்ரீமெண்ட்டுலே பாருங்க .. என்ன ... இல்லையா ... எங்கோ வெச்சுட்டீங்களா .... அதுக்கும் நாங்க தான் பொறுப்புன்னு சொல்லிடப்போறீங்க ... பாருங்க, இது இரு மல்டி நேஷனல் கம்பெனி...வாக்கு கொடுத்தா தவற மாட்டோம். ஒரு வருஷத்திற்கு ஃப்ரீ சர்விஸ் வீட்டுக்கு வந்து செய்து கொடுப்போம்.. . அப்புறம் செய்வது எல்லாம் பெயிட் சர்விஸ் தான். என்ன...உங்களுக்கு வயசாயிடுத்தா.. அதுக்கு நான் என்னங்க செய்ய முடியும்... யாரையாவது திணைக்கு கூட்டிவாங்க.... நான் கம்பெனி வைஸ் பிரெசிடெண்ட்.... இந்த விஷயமெல்லாம் என் கையிலே இல்ல... யாரிடமோ நம்பர் வாங்கி போன் பண்ணிட்டீங்க. அதுனால பொறுமையா பதில் பேசறேன்... "
   மிகவும் உயர்த்திய குரலில் அவன் பேசிக்கொண்டிருக்கும்போது அதை விட உயர்ந்த குரலில் மனைவி குரல் கொடுத்தாள்..
   "என்னங்க...வாசல்ல கோல மாவு போறது பாருங்க....கொஞ்சம் வண்டியை நிப்பாட்டுங்க...சனி ஞாயிறு விட்டா ஆள் வரவேமாட்டான்."
   போனை படக்கென்று ஆப் செய்துவிட்டு வாசலுக்கு விரைந்தான்.
   " ஏய்...கோலமாவு.. நில்லு. நில்லு..."
   மோட்டார்சைக்கிளில் முன் புரத்தில் லெளட் ஸ்பீக்கரில் கோலமாவு. கோலமாவு குரலை சத்தமாக வழியவிட்டபடி, ஜீன்ஸ் பான்ட் டீ ஷர்ட் சகிதம் கால்களின் இடுக்கில் கோலமாவு பை யுடன் வாசலுக்கு வந்தது ஒரு வாலிபன். அவன் எதிர்பார்க்கவில்லை.
   முகம் கூட எங்கேயோ பார்த்தார்போல் இருக்கிறதே.. ?
   " சார், ஒரு படியா இரண்டா? என்னை நினைவில்லையா சார்? ப்ரோக்ராமர் வேலைக்கு இண்டர்வ்யூ செய்து உங்க கம்பெனியிலே எடுத்தீங்களே.. .என்னை ப்ரிலியண்ட் பாய்ன்னுகூட பாராட்டினீங்களே"
   சட் என்று நினைவில் வந்தது.
   "அட...ஆமாம், அது சரி...நீ இப்போ வேலையிலே இல்லியா.. கோலமாவு விக்க கிளம்பிட்டே...?"
   "இல்ல சார், வேலையிலேதான் இருக்கேன். நமக்கு சனி ஞாயிறு விடுமுறைதானே.. .அதான் ..இந்த வேலை"
   அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. மற்ற நிறுவனங்களைவிட அதிகம் கொடுப்பதாக அவன் கம்பெனிக்கு வெளியில் பெயருண்டு. அது போதவில்லையா? இந்த கோலமாவு விற்பனையில் அவனுக்கு என்ன கிடைத்துவிடும்?
   கேட்டான்.
   " சார் இது பணத்துக்காக செய்யலை...தாத்தா , அப்புறம் அப்பான்னு இந்த ஏரியாவிலேதான் கோலமாவு வித்தாங்க....அது விட்டுப்போயிடக்கூடாதுல்ல..."
   " சரிப்பா.... பாதிவீட்டுலே கோலம் போடுவதைக்கூட நிறுத்திட்டாங்க"
   " சார், அந்த ஒண்ணு ரெண்டு வீட்டிலே என் தாத்தா அப்புறம் அப்பா , இப்ப நானு...எங்ககிட்டமட்டும்தான் மாவு வாங்குவாங்க...மண்ணு கலக்காம எங்க மாவுல தான் பளிச்சுனு கோலம் மங்களகரமா இருக்குதாம்.... அப்பாவோட ஆசை சார்.
   நம்ம கஸ்டமருங்க...அவங்க சந்தோஷமா இருக்கணும்ன்னு....ஆனால் அப்பா தாத்தா போல என்னால கூவ முடியலை அதான் வாய்ஸ் ரெகார்ட் செய்து ஸ்பீகர்லே போடறேன் ...."
   அவன் பேசிக்கொண்டே இருந்தான்.
   ஒப்பந்தம் போடப்படாவிட்டாலும் கொடுக்கப்படும் இந்த கஸ்டமர் சாடிஸ்ஃபாக்ஷனுக்கு புது அர்த்தம் கற்பித்தபடி.
   http://www.kamadenu.in
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதைகள்
    

   ஒரு நிமிடக் கதைகள்     தாய்+அம்மா
   தாயம்மா செத்துட்டா. ஊரே திரண்டு அவ வீட்டு முன்னாடி கூடிருச்சு. ஊர்சனங்களுக்கு எத்தனை உபகாரம் பண்ணியிருப்பா! யாருக்கு என்ன கஷ்டம்னாலும் ஓடி ஓடி உதவி பண்றவளாச்சே..!
   “யேம்ப்பு! நேரம் போயிட்டே இருக்குதே! அதான் எல்லாரும் வந்தாச்சுல்ல... இன்னும் எதுக்காகக் காத்திருக்கணும்? சட்டுபுட்டுனு எடுத்துர வேண்டியதுதானே?” என்றார் ஒரு பெரியவர்.
   தாயம்மாவின் மகன் குறுக்கிட்டான்... “இல்லீங்கய்யா! எங்க ஆத்தா சாகுற வரைக் கும் யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுத் தது இல்லை. இந்த வெந்து எடுக்குற வெயில்ல பொணத்தை எடுத்தா, சுடுகாடு போற வரைக்கும் அம்புட்டுப் பேரும் கஷ்டப்படணும். அதை எங்க ஆத்தாவோட ஆத்மா ஒப்புக்காது. கொஞ்சம் பொறுங்க, வெயில் தாழட்டும். பொழுதுக்க எடுத்துரலாம்!”
   - எஸ்.எஸ்.பூங்கதிர்
    
    
    
    
     காலிப் பெட்டி?! விடிந்தால் புத்தாண்டு. வீட்டை அலங்கரிப்பதற்காக வாங்கி வைத்திருந்த தங்க நிறப் பேப்பர்களைத் தன் எட்டு வயதுப் பெண் குழந்தை கத்தரித்து நாசம் செய்துவிட்டாள் என்று எரிச்சலோடு, அதன் முதுகில் ஒரு அடி வைத்துவிட்டுக் கடுப்போடு தூங்கப் போனான் ரமேஷ். மறுநாள், அவன் தலைமாட்டில் ஒரு சின்ன தங்க நிற அட்டைப் பெட்டி இருந்தது. மேலே, ‘அன்புள்ளடாடிக்கு, என் புத்தாண்டுப் பரிசு! - சுசி’ என்று எழுதியிருந்தது.
   முதல் நாள் குழந்தையை அடித்துவிட்டதை நினைத்து வருத்தப்பட்டான் ரமேஷ். பாவம் குழந்தை, தனக்குப் பரிசு கொடுப்பதற்காகத்தான் இந்த பேப்பரை எடுத்திருக்கிறது! பெட்டியைத் திறந்து பார்த்தான். உள்ளே ஒன்றுமில்லை.
   “என்ன சுசி, காலிப் பெட்டியையா பரிசா கொடுப்பே?” என்றான் ஏமாற்றமாக.
   “அது காலிப் பெட்டி இல்ல டாடி! உனக்காக நான் அதுக்குள்ளே நூறு முத்தம் வெச்சிருந்தேனே!” என்றது குழந்தை பாவமாக!
   - ஆர்.ஷைலஜா
    
    
    
     என்னடி பண்ணுவே?
    
   ‘‘ராத்திரி நேரத்துல இப்படியா!’’
   ‘‘நீ என்ன பெரிய பத்தினியா?’’
   ‘‘ச்சீ... வாயை மூடு!’’
   ‘‘என்னடி பண்ணுவே?’’
   ‘‘பல்லை உடைப்பேன்!’’
   ‘‘என்ன, திமிரா?’’
   ‘‘சரிதான் போடா!’’
   ‘‘அட! தோ, பார்றா!’’
   ‘‘தோடா... யார்கிட்ட..?’’
   ‘‘உனக்கென்னடா மரியாதை?’’
   ‘‘போடா பொறம்போக்கு!’’
   ‘‘போடி பொடிமாசு!’’
   இதையெல்லாம் வரிசையாக எழுதி எடுத்துக்கொண்டு, தனது டைரக்டரைப் பார்க்கக் கிளம்பினான் உதவியாளர் ஜெகன், இவற்றில் எதைத் தனது அடுத்த படத்துக்குத் தலைப்பாக ஓ.கே. செய்யப் போகிறாரோ என்கிற யோசனையோடு!
   -மை.பாரதிராஜா
   https://www.vikatan.com
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை: பேப்பர் வழக்கு
    
    
    
   கணேசன் புது வீடு மாறி வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. அக்கம் பக்கம் யாரும் இன்னும் நண்பர்கள் ஆகவில்லை. புன்சிரிப்புக்களோடு மட்டும் அறிமுகங்கள் முடிந்துவிட்டன. 
   கனேசனுக்கு எப்போதும் நியூஸ்பேப்பர் ராசி மிக அதிகமாகவே உண்டு. அனைவருக்கும் காலை பேப்பர் வந்துவிடும். இவருக்கு மட்டும் லேட்டாக வரும். சரி, பக்கத்து வீட்டில் போடும் ஆளுக்கு மாற்றிப்பார்கலாம் என்றால் அவர்கள் வீட்டிலிருந்தே விசிறி அடித்த பேப்பர் சுருள் வாசல் தண்ணீரில் நனைந்து, எடுக்கும்போதே எண்ணெய்யில் விழுந்த பூரி போல் சொட்டச்சொட்ட கைகளுக்கு வந்து ஒரே விரிப்பில் பிசுபிசுத்து துண்டுகளாகப் போய்விடும். சரி இவனும் வேண்டாம் என்று ஆள்மாற்றினால், மாதத்தில் பாதி நாட்கள் பேப்பர் போடாமல் தொந்தரவு.
   இப்படிப்பல கஷ்டங்களை அனுபவித்துபின் தானே காலையில் கடைக்குச்சென்று பேப்பர் வாங்கத் தீர்மானித்து வாங்கிப்பழகியும் இருந்தார்.
   சில வருடங்களாகப் வாங்கி வந்த பேப்பர் கைகளில் கிடைத்தும் சிரமமாகித்தான் போய்விட்டது. ரிடையர் ஆகி வீட்டில்தானே இருக்கிறாய், நாங்கள் ஆபீஸ் போவதற்குள் படித்துவிட்டுத்தருகிறோம் என்று இரண்டு பிள்ளைகள் அடுத்து அவர்கள் மனைவிகள் என்று ரூல்படி பேப்பர் கைமாறி, பத்துமணிக்கு மேல்தான் அவர் கைகளில் கிடைக்கிறது. பேப்பர் பார்க்காமல் உறிஞ்சப்படும் காபி ருசிப்பதே இல்லை.
   ஆனால் அவர் பேப்பர் வாங்கப்போகும் போது பக்கத்து வீட்டின் வாசலில் பேப்பர் கிடப்பதைத் தினமும் பார்க்கிறார். திரும்பி வரும்போது தொண்ணூறு வயதான தாத்தா பேப்பர் படித்தபடி வாசலில் இருப்பதையும் தினமும் பார்க்கிறார்.
   அவர்கள் வீட்டிலும் ஆபீஸ் போகும் தாத்தாவின் பிள்ளைகள், பேரன்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் காலையில் பேப்பருடன் அமரும் தாத்தா மத்தியானம் சாப்பாட்டுக்குத்தான் பேப்பருடன் உள்ளே செல்வார்.
   லேசாகப் பொறாமையாகத்தான் இருந்தது.
   அந்தக் கிழவரைப்போல் தனக்கும் பிள்ளைகள் நல்லவர்களாக இருந்திருந்தால் இப்படி காலையில் பேப்பருக்கு ஏங்கத் தேவை இல்லாதிருந்திருக்கும்.
   எப்படி இப்படி அவர்கள் வீட்டில் மட்டும். அவருக்குத் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.
   இன்று போய் கேட்டுவிடுவது என்ற தீர்மானத்தோடு மெதுவாக அவர்கள் வீட்டு கலிங்பெல்லை அழுத்தினார்.
   வாசல் வராண்டாவில் எப்போதும் போல் பெரியவர் கைகளில் பேப்பருடன்.
   " நமஸ்காரம், பக்கத்துவீட்டுக்கு புதுசா வந்திருக்கிறோம். தினம் பார்கறோம் பேசமுடிகிறதில்லை. இன்றைக்கு ஞாயிறு எல்லோரும் லிஷேர்லியா இருப்பீங்க..அதான் வந்தேன்." பேச்சு தொடர்ந்தது.கடைசியாகச் சொல்லிக்கொண்டு கிளம்பினார்.
   " உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும். என் வீட்டில் நான் ரிடையர் ஆனதாலே எல்லோரும் படித்து முடிச்சு பின் தான் காலை பேப்பர் என் கைக்கு வரும். உங்க வீட்டிலே காலையிலிருந்து மதியம் வரை வாசலில் உள்ள உங்க அப்பா கையிலேயே பேப்பர் பார்க்கிறேன். வாசலில் ஒரு பேப்பர் மட்டும்தான் கிடக்கு...நீங்க யாரும் பேப்பர் படிச்சு பழக்கமில்லையோ...??"
   சிரித்துக்கொண்டே பக்கத்துவீட்டுக்காரர் சொன்னார்.
   " அப்பா என்ன படிக்கிறார் என்று பார்த்துவிட்டு வாங்க"
   கணேசன் பெரியவர் அருகில் சென்றார்.
   " நமஸ்காரம். பேப்பர் படிக்கிறீங்கபோல....என்ன செய்தி.."
   அவர் ஹெட்லைன்ஸ் படித்துச்சொன்ன செய்தி ஒரு வாரத்திற்கு முன் வந்த செய்தி.
   குழப்பத்தோடு விழித்தார்.
   " இங்கே வேண்டாம்...உள்ளே வாங்க..."
   மேலும் குழம்பி உள்ளே சென்றார்.
   " சார், அப்பாவுக்கு எதுவும் நினைவில் இருக்காது. டிமென்ஷியா. ஆனால் காலையில் முதலில் தான் தான் பேப்பர் படிக்கவேண்டும் என்ற பழக்கம் மட்டும் மறக்கவில்லை. அதனால் கைகளில் கிடைக்கும் ஏதோ ஒரு பேப்பரை கொடுத்துவிடுவோம். அதைப்படிப்பார் ஆனால் எதுவும் நினைவில் இருக்காது. நாங்கள்
   எல்லோரும் அபீஸ் போன பின்பு இன்றைய பேப்பரை என் மனைவி கொடுப்பா. அதையும் படிப்பார் இதைத்தான் நான் காலையிலேயே படிச்சுட்டேனே என்று சொல்லிக்கொண்டு....வேற என்ன சார் செய்யறது?"
   http://tamil.thehindu.com/
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை: காதலின் பொன் வீதியில்
    
    
    
   சேகரின் பிள்ளைக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருந்த செய்தியைக்கேள்விப்பட்டு , அவனைப்பார்க்கச்சென்றேன்.
   " வா சரவணா... இன்னும் நிச்சயதார்த்த தேதி முடிவுசெய்யவில்லை. அப்புறம் சொல்ல நினைத்தேன்"
   அவன் கைகளைப்பிடித்து குலுக்கினேன்.
   " நமக்குள் என்ன பார்மாலிடீஸ், ஆமாம், உன் பையனும் உன்னைப்போல் ரொமாண்டிக்கா, அதான் லவ் மேரேஜ்ஜா?"
   அவன் மிகவும் அவசரமாக
   " சே..சே..இல்லடா.... இது நாங்க பார்த்து செஞ்சு வைக்கும் கல்யாணம் தான்.என்ன , பையனும் பொண்ணும் ஒரே காலேஜ், ஆனால் டிபார்ட்மெண்ட் வேற பாரு , சந்திச்சிருப்பாங்க ஆனால் லவ்வெல்லாம் இல்லை..."
   எனக்கு லேசாகச் சிரிப்பு வந்தது..
   " டேய் நீ இவ்வளவு அவசரமா மறுத்துச்சொல்வதிலேயே நீ இன்னும் பழசை மறக்கவில்லன்னு தெரியுது.... உன் காதல் திருமணம் என்ன அமர்க்களத்தில் நடந்தது. உங்க அப்பா மறுக்க நீ அடம் பிடிக்க உங்க அம்மா நெஞ்சு வலியாலே ஹாஸ்பிடல் சென்று படுக்க...ஆனால் ஒன்று சொல்லணும்டா...நீ தில்லா நின்னு நினைச்சபொண்ணையே கட்டிகிட்டே பாரு... உங்க அப்பா அம்மாவும் இப்போ உன் மனைவியைத் தலையிலே வெச்சு கொண்ட்டாடுறாங்க....." நான் பழசையெல்லாம் பேசிக்கொண்டே போக...சேகர் அச்சுவாரஸ்யமாக்க உச்சு கொட்டிக்கொண்டிருந்தான்.
   பேச்சை மாற்றி கல்யாண ஏற்பாடுகள் மண்டபம் , சமையல் என்று நான் பேச்சை மாற்ற அவனையும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.
   பேசி முடித்து வீடு திரும்பும்போது நான் நினைத்துக்கொண்டேன்
   "அடேய் மடையா.,..எனக்குத்தெரியும் உன் பிள்ளையும் காதல் கல்யாணம் தான் என்று. என் பையனும் அதே காலேஜ்தான்...விஷயம் எனக்குத்தெரியாமல் எப்படி இருக்கும்? ஆனால் நீ தெரியாது...தெரியக்கூடாது என்று நம்புகிறாய்...பிரச்சனை இல்லை , நான் தெரிந்ததாக காட்டிக்கொள்ள மாட்டேன்...ஆனால் இவ்வளவு வருடங்களாக நீ உன் அப்பாவை மீறிக் காதலித்தது தவறு என்ற எண்ணத்தில் அல்லவா இருக்கிறாய்... சந்தோஷமாக என் பிள்ளையும் லவ் மேரேஜ் தான் என்று சொல்லியிருந்தால் உன் காதலில் அர்த்தம் இருந்திருக்கும். பாவம்டா நீ ஜெயித்ததாக நினைத்த உன் காதல் என் அளவில் தோல்விதான்."
   அவனுக்குமாக சேர்த்து நலம் வேண்டிக்கொண்டேன்.
   http://www.kamadenu.in
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை: கடி
    
    
    
   "என்னது...உடம்பு அரிக்கிறதா....எரிச்சலா...அரிப்பா?"
   கோமதியிடம் நூறாவது முறையாகக் கேள்வி கேட்கப்பட்டது. இந்தக் கேள்விகளுக்கான ஆரம்பம் நேற்று அவள் சொன்ன சில வார்த்தைகள்...அவை
   " என்னன்னு தெரியலை... ஒரு வாரமாகவே இரவு முழுவதும் உடல் அரிக்கிறது. தூங்கப் போகும்போது இருப்பதில்லை...."
   சொல்லிமுடிப்பதற்குள் தலைக்குத்தலை முடிவுகள் சொல்லப்பட்டது..
   " கோமதி... வீட்டிலே சுகர் ஹிஸ்டரி இருக்கு...எனக்கென்னவோ இது அதன் அறிகுறி போல்தான் தெரிகிறது" இது கணவர்.
   " அம்மா, எதைச்சாப்பிட்ட....எனக்கென்னவோ அலர்ஜிதான்னு தோணறது..." இது மகன்.
   " மஞ்சள்காமலைக்குக்கூட உடல் அரிப்பு வரும்" இது மருமகள்.
   இப்படிப் பல தீர்வுகளுக்குப்பின் முதலில் கூறப்பட்ட கேள்வி கடைசி முறையாக டாக்டர் வைகுண்டத்தினால் கேட்கப்பட்டது .
   " சரி...முதலில் சுகரை எலிமினேட் செய்து பார்ப்போம். " வேகமாக டெஸ்டிற்கு எழுத்கிக்கொடுத்தார்.
   " டாக்டர் , வரிசையா நிறைய டெஸ்டுக்கள் போட்டுருக்கீங்க..?"
   " ஆமாம், ஒரு.வாரமான்னு சொல்றீங்க . நிறைய டைம் வேஸ்ட் செய்ய முடியாது பாருங்க....அதான் சைமல்டேனியஸ்ஸா... லிவர் ஸ்கான், யூட்ரஸ் ஸ்கான், விடமின் டெஸ்ட், ப்ளட் டெஸ்ட்ன்னு எழுதிக்கொடுத்திருக்கிறேன். மொத்தம் பத்தாயிரம்.கார்ட்டுலே கூட பே பண்ணலாம். இப்ப
   செஞ்சுடுங்க.... நெக்ஸ்ட்.. ." தன் பிழைப்பைத்தொடர்ந்தார்.
   மெதுவாகக் கோமதி கணவரின் கைகளைப்பிடித்து அழுத்தினாள்.
   " எனக்கென்னவோ இது இப்பத்தேவை இல்லைன்னு படறது. வாங்க... நாளைக்கு வருவதாகச்சொல்லிப் போய்விடலாம்."
   " போடி பயித்தியம்....எங்கே போனாலும் இப்படித்தான். உடம்புக்கு வரக்கூடாது. வந்துவிட்டால்......" பேச்சை முடிக்காமல் நிறுத்தினார்.
   டெஸ்ட் ரிசல்டோடு மறுபடியும் உள்ளே அனுப்பப்பட்டனர்.மிகவும் சுகமாக காதைக்குடைந்து கொண்டிருந்தார் டாக்டர்.ஒவ்வொன்றாக ரிப்போர்ட் ஒவ்வொன்றையும் உச் கொட்டிக்கொண்டே தள்ளினார்.
   " எல்லாம் சரியா இருக்கே... ஏம்மா.... கரெக்டா சொல்லுங்க. எப்போது அரிப்பு இல்ல எரிச்சல் வருதுன்னீங்க...."
   " டாக்டர், படுத்துக்கப்போகும்போது சரியாகத்தான் இருக்கு. பத்து மணிக்கு தூங்கப் போயிடுவேன்.நடுவிலே ஒரு பன்னிரண்டு மணிக்கு ரெஸ்ட்ரூம் போயிட்டு வருவேன். அரிப்பு அப்புறமாகத்தான் டாக்டர் வருது.... _அதுவும் கை கால்களில்தான் அதிகமாக "
   " ஐ காட் இட்....அம்மா உங்க யூரினரி ட்ராக்ட்லேதான் இன்ஃபெக்ஷன். நாளை காலைலே வெறும் வயத்திலே வந்துடுங்க....வேற சில டெஸ்ட் எடுத்துடலாம்.. .கொஞ்சம் சீரியசா இருக்குமோன்னு சந்தேகம்...எனிவே... காட் இஸ் க்ரேட்.. சார் ,நீங்க ஒரு பத்தாயிரத்திற்கு ரெடி பண்ணிக்குங்க... "
   கோமதிக்கு சடாரென்று உடம்பு வலுவிழந்ததுபோல் தோன்றியது. ஏதாவது டாக்டர் சொல்வதுபோல் சீரியசா
   இருக்குமோ...தள்ளாட்டத்தோடு வீடு வந்து சேர்ந்து படுக்கையில் விழுந்தாள்.
   " ஏம்மா....ஒடம்பு முடீலியா...நல்லாத்தானே இருந்த, சரி ரெஸ்ட் எடு... ஆமா...நானும் ஒரு வாரமா சொல்லனும்னு நினைச்சு மறந்துடறேன்..இந்த அட்டாசிடு கக்கூச் கதவு ஒரு வாரமா நான் காலையிலே பெருக்கோசொல்ல திறந்து கிடக்கு... கை கால புடுங்கி எடுக்குது. வூடு முழுக்க கொசு நெட் போட்டே...கக்கூசுக்கு போட்டியா....பாரு எப்படி கொசு உள்ளாற வந்திருக்கு பார்.. இனிமேலோ மூடி வெய்..."
   குப்பையை பக்கெட்டில் அள்ளியபடியே துடப்பத்தை ஆட்டியபடி சென்றவளுக்கு பின்னால் அதிர்ச்சியில் வாயைப்பிளந்து அமர்ந்திருந்த கோமதி கண்களில் படத்தான் இல்லை.
   http://www.kamadenu.in
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை: யானை
    
    
    
   மன்னரின் கை நாடியைப் பிடித்துப் பார்த்த அரண்மனை வைத்தியர் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை அமைச்சர் நல்லசிவம் உணர்ந்தார்.
   “வைத்தியரே... மன்னர்..”
   உதட்டைப் பிதுக்கினார் வைத்தியர்.. தலையை இருபக்கமும் அசைத்தார்.
   “துடிப்பு குறைகிறது.. தாங்காது.”
   திரைக்கு அப்பால் அறையின் வெளியே தளபதி, ராஜகுரு, பிரதானி கள், பிரபுக்கள், நிலக்கிழார்கள், ஜமீன்தார்கள்.
   “சரி விஷயம் நம்முடன் இருக்கட்டும்.. வெளியே கசிய வேண்டாம்.”
   திரைக்கு வெளியே வந்த அமைச்சர்.. “மன்னர் நலமாக இருக்கிறார்.. கவலை வேண்டாம்..ஆனால் ஒரு வாரத்துக்குள் புதிய மன்னரைத் தேர்ந்தெடுத்து விடுவது நல்லது” என்றார்.
   “நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்... திருமணம் செய்து கொள்ளாது அல்லும் பகலும் உழைத்தவர்.. வாரிசு என வும் யாரும் இல்லை.. இப்போது என்ன செய்யலாம்?” என்றார் தளபதி.
   அமைச்சர், “வழக்கம் போல யானை தும்பிக்கையில் மாலை கொடுக்க வேண்டியதுதான்..இவரும் அப்படி மன்னர் ஆனவர் தானே” என்றார்.
   யானைப் பாகன் வரவழைக்கப்பட்டான்.
   நிறைந்த பவுர்ணமியன்று மாலையை யானையிடம் தந்தனர்.
   முரசு அடித்து அறிவித்தபடி கூட்டத்தில் நின்ற ஒரு இளைஞனின் கழுத்தில் யானை மாலையைப் போட, மக்களின் வாழ்த்து கோஷத் துடன் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டான் புதிய மன்னன்.
   இரவு இருட்டியதும், அமைச்சர் மாளிகையில், “சரி போய் வா.. இந்தா பத்தாயிரம் காசுகள். நான் சொன்ன ஆளை சரியாக அடையாளம் வைத்து மாலை போட யானையைப் பழக்கியதற்கு உனக்குப் பரிசு” என்று கூறி பொற்கிழியை வழங்கினார் அமைச்சர். அவரை வணங்கி விடைபெற்றான் பாகன்.
   http://www.kamadenu.in
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை: விழுதுகள்
    
    
    
   அ+ அ- தோட்டத்தில் சாய்ந்து கிடந்த மரங்களை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் அருணகிரி.
   “பாருங்க , புள்ளைய போல பாத்து பாத்து முப்பது வருஷமா வளர்த்து வந்தீங்க.. ஒரே நாள்ல அடிச்ச புயல்ல எல்லாம் சாஞ்சிடுச்சு” என்றார் அவரது மனைவி கமலா.
   அருணகிரி ஓய்வு பெற்ற அரசு அலுவலர். எழுபது வயதாகிறது உழைத்து சம்பாத்தித்து கட்டிய வீட்டைச் சுற்றி தென்னை, மா, கொய்யா, வாழை என மரங்களை நட்டு ஆசையாக வளர்த்து வந்தார்.
   அவரின் இரண்டு மகன்களும் வெளிநாட்டில் செட்டிலான பிறகு, அவருக்கும், கமலாவுக்கும் அந்த மரங்கள்தான் துணை. அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி செய்யவும், நண்பகலில் ஆசுவாசப்படுத்துவதும், மாலை நேரங்களில் பறவைகளின் ஒலியை கேட்கவும், அந்த மரங்கள்தான் அவர்களுக்கு துணையாக இருந்தன.
   விழுந்து கிடந்த மரக்கிளை ஒன்றை வாஞ்சையுடன் தடவியவாறு அதை ஓரமாக இழுத்துப் போட்ட அருணகிரியிடம், “உங்களுக்கு எதுக்குங்க இந்த வேலை? ஆளைக் கூட்டி வந்து எல்லாத்தையும் சுத்தப்படுத்திட்டு இந்த எடத்துல ஒரு அறையை கட்டிவச்சா வெளிநாட்டுல இருந்து நம்ம பசங்க வந்தா தாங்குவாங்க” என்றார் கமலா.
   அதை காதில் போட்டிக்கொள்ளாத அருணகிரி, “கமலா, இங்க பாரேன்” என்றார். அவர் காட்டிய இடத்தில் பறவை கூடு ஒன்று கீழே விழுந்து பறவை முட்டைகள் நொறுங்கிக் கிடந்தன.
   கண் கலங்கிய அருணகிரி, “30 வருஷம் இந்த மரங்களை வளர்த்து வீணாகிடுச்சுன்னு வருத்தப்பட்டியே.. முப்பது வருஷம் வளர்த்த நம்ம புள்ளைங்க மட்டும் நம்மள விட்டுட்டு போகலையா? ” என்றார்.
   “அது அவங்கவங்க ஆசாபாசம்ங்க . அவங்களை வளர்க்கறதோட நம்ம கடமை முடிஞ்சுடுது” என்றார் கமலா.
   “வெளிநாட்டுக்கு போன உன் புள்ளங்களுக்காக வீடு கட்டணும்னு நினைக்கிற. இந்த மரங்களை நம்பி இங்க வந்து கூடு கட்டுன பறவைகளோட கதியை பாரு. நம்மை நம்பி வர்ற பறவைகளுக்கு நாம ஏன் திரும்பவும் இருப்பிடம் தரக்கூடாது?” என்றார் அருணகிரி.
   மறுநாளே தன் தோட்டத்தில் புதிய மரக்கன்றுகளை நட குழி வெட் டியவாறு, “இந்த மரம் வளர்ந்து நிக்கறப்போ நாம இருக்க மாட் டோம். ஆனா பறவைங்க இங்க நிச்சயம் இருக்கும்” என்றார் நம்பிக்கையுடன்.
   http://www.kamadenu.in/
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை: பாட்டீஸ் டே அவுட்
    
    
    
   கார் A 4 போலீஸ் ஸ்டேஷன் வாசலில் டயர்களைத் தேய்த்தபடி நின்றது. லேசான கால் நடுக்கத்தோடு பின் இருக்கையிலிருந்து ஜானகி பாட்டி இறங்கினாள். உடல்
   ஒரு ஆட்டம் ஆடி சம நிலைக்கு வந்தது.
   "அய்யோ பாட்டி கீழே விழுந்து கிழுந்து வெச்சுடப்போற... நில்லு, என் கைய புடிச்சுகிட்டு வா"
   போனில் தன் ப்ரமோஷனுக்குத் தேவையான பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் காக்கி உடையை விட அதிக மொறமொறப்புடன் விழித்துக் கண்களை
   உருட்டினார். ஒரு பக்கத்து ஐப்ரோவையும் ப்ரியா வாரியர் கணக்கா மேலே தூக்கி என்ன விஷயம் என்று பேசாமல் பேசினார்.
   "இந்த அம்மா, ரோடுலே என் காருல அடிபட இருந்தாங்க. கீழே இறங்கி விசாரித்ததுலே லாங் டேர்ம் மெமரி லாஸ் போல எது கேட்டாலும் முழிக்கிறாங்க. பெயர் மட்டும்
   சொல்லத்தெரியுது. வீடு எங்கேன்னு கேட்டால் 'அங்க இருக்குன்னு' பொத்தாம்பொதுவாக சொல்றாங்க. தெரியாமல் தொலைஞ்சு போயிட்டாங்க போல"
   "ஏம்மா.... அட்ரஸ் என்ன... புள்ளைங்க இருக்கா, கணவர் இருக்காரா?"
   "இவர் நடராஜன்... என்ன தனியாவிட்டுட்டு போய் சேர்ந்துட்டாரு...வீடு...வீடு...அதான் அந்தப் பெரிய துணிக் கடை பக்கம் இருக்குமே"
   “இருக்கும் வேலையிலே இது வேற..அம்மா S2 இந்தம்மாவை போட்டோ பிடிச்சு வாட்ஸப்லே போடு. நம்ம ஜீப் எடுத்துகிட்டு இவங்க சொல்லும் துணிக்கடை பக்கம்
   இட்டுண்டு போ... யாராவது கண்டுபிடிச்சு கேட்கராங்களா பார்கலாம். இவுங்கலைப்பார்த்தால் சாப்பாட்டுக்கு கஷ்டப்படறவங்க போல் இல்ல.கைல காதுல நகை வேற
   இருக்கு..சரி போய் பாரு”
   "அம்மா, ஏதானு சாப்பிட்றீங்களா..."
   "ஜில்லுனு ஏதானு...லஸ்ஸி, ஐஸ்க்ரீம்..."
   ஜில்லுவின் கூடவே டிபன் முடிந்தது.
   அந்தப்பெரிய புடவைக்கடை இருந்த ஒவ்வொரு ஏரியாவும் சென்றார்கள்.
   'இங்கேயா...?'
   "இல்லியே..."
   "பச்... இத்தோடு தாம்பரம், புரசைவாக்கம், தி நகர், போரூர்...எல்லாம் பாத்துட்டோம்..சரி அண்ணா நகர் போங்க டிரைவர்"
   "அம்மா... அங்கே வேண்டாம். ஏதோ ஒரு பள்ளிக்கூடத்திலே பாம் வெச்சுட்டாங்களாம்..ஏரியாவே அல்லோலப்படுது.."
   ஜானகி துள்ளி அமர்ந்தாள்
   "அய்யோ என் பேரன் அங்கே ஒரு பள்ளியில் படிக்கிறானே...அப்பா, புண்ணியமா போகட்டும்...அங்கே மொதல்ல போப்பா..."
   S2 திடுக்கிட்டாள்
   "பாட்டி, எல்லாம் நினைவிருக்கில்ல... பின்ன எதற்காக நடிச்ச..?"
   ஜானகி கண்களில் குறும்பு கொப்புளிக்க
   "பின்ன, வயசாயிடுத்துனால் வீட்டுலேயே அடைஞ்சு கிடக்கணுமா..? வெளியே எங்கும் போக விடமாட்டேங்கிறாங்க..nஜில்லுனு எதுவும் நாக்குல படக்கூடாதாம், ஹோட்டல்
   சாப்பாடு உடலுக்கு ஒத்துக்கொள்ளாதாம்... பாரு ஒரு நாள் முழுக்க எப்படி சென்னையை சுற்றிப்பார்த்தேன்"
   S2 மயக்கம் போட்டு விழுந்தார்.
   http://www.kamadenu.in/news/stories
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை: நம்பிக்கை!
    
    
    
   ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் மகனையும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளையும் அழைத்துக்கொண்டு உள்ளூர் பள்ளிக்குச் சென்றபோதுதான் அதைப் பார்த்தேன். மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் தன் மகளைப் பள்ளி வேனில் ஏற்றிவிட காத்துக்கொண்டிருந்தார் தேவி டீச்சர். இவர் என் பிள்ளைகள் படிக்கும் அரசுப் பள்ளியின் ஆசிரியை.
   அவரைப் பார்த்ததும் எனக்கு எரிச்சல் வந்தது. பிள்ளைகளைப் பள்ளிக்குள் அனுப்பிவிட்டு, தேவி டீச்சரின் வருகைக்காக பள்ளிக்கூட வாசலில் காத்திருந்தேன். சரியான நேரத்துக்கு அவர் வந்துவிட்டார். கொப்பளித்து வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, சிரித்தபடியே கேட்டேன், ‘‘உங்க மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனால் உங்க மேலயே உங்களுக்கு நம்பிக்கை இல்லையே?’’
   ‘‘என்ன சார் சொல்றீங்க?’’
   ‘‘நீங்க நல்லா சொல்லித் தருவீங்க என்ற நம்பிக்கையிலதான் என் பிள்ளைகளை உங்க பள்ளிக்கு அனுப்புறேன். ஆனால், நீங்க உங்க பிள்ளையைப் பக்கத்து ஊருல இருக்கிற மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு அனுப்புறீங்களே? ’’
   மெலிதாகப் புன்னகைத்த ஆசிரியை, ‘‘என் மகள் ஒன்றாம் வகுப்பு படிக்கிறா. நான் ஒன்றாம் வகுப்பு டீச்சர். நம்ம பள்ளியில எல்லா வகுப்புலயும் ஒவ்வொரு பிரிவுதான் இருக்கு. இதே பள்ளியில, அதுவும் என் வகுப்பிலேயே என் மகளும் படிச்சா, என்னை அறியாம என் கவனம் முழுவதும் அவள் மேலதான் இருக்கும். மத்த குழந்தைகளை நல்லா கவனிக்க முடியாதுன்னுதான், அவளை அந்தப் பள்ளியில சேர்த்திருக்கேன். இந்த ஒரு வருஷம்தான். அடுத்த வருஷம் ரெண்டாம் வகுப்பு படிக்க நம்ம பள்ளிக்கே வந்துடுவா’’ என்று கூறிவிட்டு பள்ளிக்குள் சென்றார்.
   அவர் மீதான நம்பிக்கை பலமடங்கு உயர்ந்திருந்தது.
   http://www.kamadenu.in/