Jump to content

சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்குவோம் : சசிகலா அணியில் இருந்த அமைச்சர்கள் அதிரடி!


Recommended Posts

சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்குவோம் : சசிகலா அணியில் இருந்த அமைச்சர்கள் அதிரடி!

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், நேற்று முதல் ஆலோசனையில் ஈடுபட்டுவந்தனர்.

Jayakumar

குறிப்பாக, இன்றும் தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு, அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம்,  "தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆட்சியை நடத்துவோம். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. தினகரன் குடும்பத்துக்கு இனி கட்சியில் இடம் கிடையாது. பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வந்தால், அவருடன் பேசத்  தயார். தினகரன் குடும்பத்தின் தலையீடு, கட்சியிலும் ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக்கூடாது. ஒற்றுமையாகக் கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும்.  கட்சியை வழிநடத்த குழு அமைக்கப்படும். ஒற்றுமையாக இருந்து இரட்டை இலையை மீட்டு, சிறப்பான ஆட்சியைத் தொடர்வோம். முதலமைச்சர் உள்பட, அனைத்து அமைச்சர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பர்.

சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆட்சியைத் தொடர்ந்து சிறப்பாக நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது" என்றார்.

"தினகரன் குடும்பத்தால் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலேயே முடிவு எடுக்கப்பட்டுள்ளது . பன்னீர்செல்வம் எப்போது வந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார்" என்று அமைச்சர் சி.வி சண்முகம் கூறினார்.

"அனைவரின் ஒட்டுமொத்த முடிவைதான் ஜெயக்குமார் கூறினார். அனைவரும் சேர்ந்து இரட்டை இலையை பெறுவோம்" என்று நடராஜன் கூறினார்.

'ஜெயலலிதா விருப்பத்தின்படி ஆட்சியை கொண்டு செல்வோம்' என்று வைத்திலிங்கம் கூறினார்.

'கட்சியில் பிரிவு இருக்கக்கூடாது என்பதே அனைவரின் விருப்பம்" என்று அமைச்சர் மணிகண்டன் கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/86861-we-will-remove-sasikala-and-family-says-minister-jayakumar.html

Link to comment
Share on other sites

தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

 

 
அமைச்சர் ஜெயக்குமார் | கோப்புப் படம்.
அமைச்சர் ஜெயக்குமார் | கோப்புப் படம்.
 
 

தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, வீரமணி, அன்பழகன், சி.வி.சண்முகம், பெஞ்சமின், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''ஆட்சியை தொடர்ந்து சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசித்தோம். தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது. அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அனைவருமே கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளோம்.

ஆட்சியைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். தொண்டர்கள் விருப்பப்படி குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இன்றி, டிடிவி தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கிவிட்டு வழிநடத்த வேண்டும் என்பதே அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள், தமிழக மக்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது. எனவே, தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்து விட்டு ஆட்சி நடத்துவோம். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம்.

கட்சியை வழி நடத்த குழு அமைப்போம். தொடர்ந்து 4 ஆண்டு கால ஆட்சியை நாங்கள் நிறைவு செய்வோம். ஓபிஎஸ் பேச்சுவார்த்தைக்கு வந்தால் அவருடன் பேச்சு நடத்தப்படும்'' என்றார்.

முன்னதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை, இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் அளித்தது ஆகிய விவகாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணைவதற்காக தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

'அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்து பேசத் தயார்' என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கட்கிழமை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 'ஒற்றுமையாக இருக்க ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்' என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

இதையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் தமிழக அமைச்சர்கள் திங்கட்கிழமை இரவு திடீர் ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''இரு அணிகள் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து வரவேற்கத்தக்கது. ஒற்றுமையுடன் செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம்'' என்றார்.

'சசிகலாவின் குடும்பம் அதிமுகவில் இருக்கக்கூடாது என்பதே எங்களின் அடிப்படை கொள்கை' என தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, 'ஓ.பன்னீர்செல்வத்தை நிபந்தனைகளுடன் சேர்க்கும் அவசியம் எங்களுக்கு இல்லை' என்று அதிமுக அம்மா கட்சியின் எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். இதனிடையே, அதிமுகவின் இரு அணிகளும் இணைய முதல்வர், 6 அமைச்சர் பதவிகள் வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதிப்பதாக வெற்றிவேல் எம்.எல்.ஏ குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அதற்குப் பிறகு முதல்வர் பழனிசாமி இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். அனைத்து நிர்வாகிகளுடன் கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/தினகரன்-குடும்பத்தின்-தலையீடு-கட்சியிலும்-ஆட்சியிலும்-எள்ளளவும்-இருக்கக்-கூடாது-அமைச்சர்-ஜெயக்குமார்-பேட்டி/article9647673.ece?homepage=true

Link to comment
Share on other sites

gallerye_234908659_1754086.jpg

சென்னை: சசிகலா குடும்பத்திற்கு எதிரான தர்மயுத்தத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் சாதித்து காட்டியுள்ளார். அ.தி.மு.க., வில் இருந்து, தினகரன் கும்பல் அடியோடு வெளியேற்றப்பட்டது. முதல்வர் வீட்டில், அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக்கு பின், அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தொண்டர்களின் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது.

 

Tamil_News_large_175408620170418234829_318_219.jpg

அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைப்பது தொடர்பான பேச்சு, நேற்று முன் தினம் துவங்கியது. நேற்று காலையில், 'இரு அணிகளும் இணைய, சசிகலா குடும்பத்தை, கட்சி, ஆட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அதிரடி நிபந்தனை விதித்தார்.
அது தொடர்பாக, நேற்று காலை, அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன் ஆகியோர், சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியுடன் அவசர ஆலோசனை நடத்தி னர். பின், அமைச்சர்கள் முடிவை, தினகரன் வீட்டுக்கு சென்று, அவரிடம் கூறினர்.
 

விவாதித்தனர்


மாலை,6:30 மணியில் இருந்து, 7:30 மணி வரை, தலைமை செயலகத்தில், அமைச்சர்கள் கூடி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர்.

அதன் முடிவில், சசிகலா குடும்பத்தை, கட்சி, ஆட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பது என, முடிவு செய்தனர். அதை, அனைத்து அமைச்சர் களும், கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு சென்று, முதல்வர் பழனிசாமியிடம் தெரிவித்தனர்.
அங்கு இரவு, 8:00 மணியில் இருந்து, 9:20 மணி வரை, முதல்வர் தலைமையில், இறுதிகட்ட ஆலோசனை நடந்தது. இக்கூட்டத்தில், அமைச்சர்களுடன், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும்கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள பிளவுக்கும், குழப்பத்திற்கும் தீர்வு காண, கட்சியிலும், ஆட்சியிலும் இருந்து, சசிகலா, தினகரன் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை, விலக்கி வைப்பது தான் ஒரே வழி என, முடிவு செய்தனர். அதை, நிதியமைச்சர் ஜெயகுமார் அதிகாரப்பூர்வமாக, இரவு அறிவித்தார்.

இதுகுறித்து, அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:
கட்சியையும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியையும், வரும் நான்கு ஆண்டுகள் மட்டுமல்ல, ஆண்டாண்டு காலம் தொடர, உரிய நடவடிக்கை மேற்கொள்வது குறித்து பேசி னோம். அனைவருடைய ஒரு மித்த கருத்து, அ.தி.மு.க., தொண்டர்களின் ஒட்டு மொத்த விருப்பம், தமிழக மக்களின் ஒரே கோரிக்கை எல்லாமே, கட்சியும், ஆட்சியும், ஒரு குடும்பத் தின் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான்.
அதற்காக, தினகரன் சார்ந்த குடும்பத்தை, முழுமையான அளவிற்கு ஒதுக்கி விட்டு, கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்த முடிவுசெய்துள்ளோம்.

 

 

அமைச்சர்கள் விருப்பம்


இது, தொண்டர்கள் விருப்பம்; பொது மக்கள் விருப்பம்; தலைமை நிர்வாகிகள் விருப்பம்; எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள் விருப்பம். அது, நிறைவேற்றப்பட்டு உள்ளது. தினகரன் குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி விட்டு, எள்ளளவும் கட்சியிலும், ஆட்சியிலும், அவர்களின் தலையீடு இல்லாமல், கட்சியை, ஆட்சியை வழி நடத்துவோம்.

கட்சியை வழி நடத்த, அன்றாட நடவடிக்கை கள் மேற்கொள்ள, குழு அமைக்கப்படும். இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியிடப் படும். அனைத்து அமைச்சர்களும், எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும், இந்த கருத்தை ஆதரிக்கின்றனர்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'பேச்சுவார்த்தைக்கு தயார்' என்றார்; நாங்களும் தயார் என்றோம். நாளையே வந்தாலும் பேசத் தயார். அனைவரும் ஒற்றுமையாக இருக்க விரும்புகிறோம். கட்சியை கட்டுக்கோப்புடன் கொண்டு செல்ல விரும்புகிறோம். இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும்.

தொண்டர்கள், பொது மக்கள் உணர்வுக்கு மதிப்பு அளித்து, அந்த குடும்பத்தை ஒதுக்கி வைத்து, கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துவோம்.இவ்வாறு ஜெயகுமார் தெரிவித்தார்.
அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.பி., வைத்திலிங்கம் ஆகியோர் கூறும்போது, 'பன்னீர் அணியினர் பேச வந்தால், பேசத் தயாராக உள்ளோம். அவர்கள் கூறும் கருத்தை ஏற்பது குறித்து, குழு கூடி முடிவு செய்யும்' என்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1754086

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.