Jump to content

ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தினகரன் திடீர் ஆலோசனை... முக்கிய முடிவு எடுக்கப் போவதாக தகவல்!


Recommended Posts

ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தினகரன் திடீர் ஆலோசனை... முக்கிய முடிவு எடுக்கப் போவதாக தகவல்!

 
 

TTV_3_23560.jpg

அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு என்று தொடர் சம்பவங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்று தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, 'தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆட்சியை நடத்துவோம். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வந்தால், அவருடன் பேசத் தயார்.' என்று அமைச்சர்கள் கூறினர்.

இந்நிலையில், அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அடையாறு வீட்டில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த 6-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   
 

http://www.vikatan.com/news/tamilnadu/86867-ttv-dinakaran-is-in-discussion-with-his-support-mlas.html

Link to comment
Share on other sites

'தினகரன் தலைமையில் அ.தி.மு.க விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுக்கும்...!'- நாஞ்சில் சம்பத் திட்டவட்டம்

 

nan_2_01222.jpg

அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அடையாறில் இருக்கும் அவரது வீட்டில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அ.தி.மு.க அம்மா அணி செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் அங்கு வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து அவர், 'அ.தி.மு.க.வின் திசையை தீர்மானிக்க காலம் தந்த தலைவன் டி.டி.வி.தினகரன். இந்தக் கட்சியை வலுவோடும் பொலிவோடும் தினகரன் வழி நடத்துவார். டெல்லியில் இருக்கும் பா.ஜ.க.வின் அற்பத்தனமான மிரட்டுலுக்கு பயந்து ஆதாயச் சூதாடிகள் எடுக்கிற முடிவுகள் எங்களைக் கட்டுப்படுத்தாது. அ.தி.மு.க உடையவில்லை. ஜெயக்குமாரை நிதி அமைச்சராக உட்கார வைத்து அழகு பார்த்ததே தினகரன் தான். தினகரன் தலைமையில் அ.தி.மு.க விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுக்கும்.' என்று பேசினார்.

முன்னர், தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, 'தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆட்சியை நடத்துவோம். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வந்தால், அவருடன் பேசத் தயார்.' என்று அமைச்சர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/tamilnadu/86871-admk-will-flourish-under-the-leadership-of-dinakaran-says-nanjil-sampath.html

Link to comment
Share on other sites

அனைத்து எம்.எல்.ஏ.க்களும் என்னிடம் உள்ளனர்: டிடிவி. தினகரன்

கட்சியில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் என்னிடம் தான் உள்ளனர். விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று டி.டி.வி தினகரன் கூறினார்.

 
 
அனைத்து எம்.எல்.ஏ.க்களும் என்னிடம் உள்ளனர்: டிடிவி. தினகரன்
 
சென்னை:

டி.டி.வி. தினகரன் இன்று காலை 9.30 மணிக்கு பெசன்ட் நகர் இல்லத்தில் இருந்து கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக புறப்பட்டார். அப்போது அவரிடம் நிருபர்கள் சரமாரி கேள்விகள் கேட்டனர்.

அதற்கு பதில் அளிக்கையில் டி.டி.வி தினகரன் கூறியதாவது:-

கட்சியில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் என்னிடம் தான் உள்ளனர். விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.

என் பலத்தை யாருக்கும் நிரூபிக்க வேண்டியது இல்லை. கட்சி, ஆட்சி நலனுக்கு உகந்த முடிவை எடுக்க எனக்கு தெரியும்.
 
201704191112447561_bas-dinakaran-adyar-0

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க.வின் குழப்பத்துக்கு பா.ஜனதா தான் காரணமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, இது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/19111234/1080679/TTV-Dinakaran-Says-majority-of-MLAs-are-supporting.vpf

தினகரன் ஏற்பாடு செய்திருந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ரத்து

 

சென்னை : இன்று பிற்பகல் 3 மணிக்கு தினகரன் ஏற்பாடு செய்திருந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

கூட்டம் ரத்து :


தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் பிற்பகல் 3 மணிக்கு எழும்பூர் கோர்ட்டில் தினகரன் ஆஜராக வேண்டும். இதனால் அதே நேரத்தில் நடக்க இருப்பதாக இருந்த ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் உடனான கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கூட்டம் நடத்த முடியாது :

 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை நடத்த முடியாது என தெரிவித்துள்ளார். தினகரன் இன்று அழைப்பு விடுத்திருந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், தினகரனுக்கு எதிராக செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1754625

 

 

 

கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்! டி.டி.வி.தினகரன் தடாலடி பேட்டி

 
 
 

ttv_dinakaran_intervier_2aa_11110.jpg

அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கியதால் நான் வருத்தப்படுவில்லை. நேற்றே கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டேன் என்று டி.டி.வி.தினகரன் தடாலடியாக கூறியுள்ளார்.


சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க அம்மா அணியிலிருந்து ஒதுக்கப்பட்டதற்காக தான் வருந்தவில்லை. நேற்று இரவே கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டேன். அமைச்சர்கள் தற்போது நடத்திய கூட்டத்தில் என்னையும் அழைத்திருந்தால் சென்றிருப்பேன். கட்சியும் ஆட்சியும் பிளவுபட தான் ஒருபோதும் காரணமாக இருக்கமாட்டேன்.

கட்சியில் சிலருக்கு ஏற்பட்ட அச்சத்தால் மட்டுமே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவசரக்கதியில் அமைச்சர்கள் தங்கள் முடிவை அறிவித்துள்ளனர். கட்சியில் இருந்து நான் நேற்றே ஒதுங்கிவிட்டதால் கட்சிக்கு நன்மை அளிக்கும் எந்த முடிவுக்கும் நான் ஒத்துழைப்பேன் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டி.டி.வி.தினரகன் ஆதரவு எம்எல்ஏவான தங்கதமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அமைச்சர்களின் அவசர நடவடிக்கையில் ஏதோ பின்னணி உள்ளது. அமைச்சர்கள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர்.
எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்ட எங்களுக்கு அதிகாரம் உள்ளது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை டி.டி.வி.தினகரன் நடத்த முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/86893-wasnt-upset-for-being-destituted-from-the-party.html

Link to comment
Share on other sites

முற்றும் நெருக்கடி: திணறும் தினகரன்

 

 
ttv_dinakaran_3133243f.jpg
 
 
 

தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அந்நிய செலாவணி வழக்கில் இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான தினகரன் மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறவிருந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது போன்ற கூட்டம் நடைபெறாது, நடத்த முடியாது என்று அவைத்தலைவர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.

ரத்தாகும் டெண்டர்கள்?

சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து துறை செயலாளர்களும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், தினகரன் ஆதரவாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டெண்டர்களை ரத்து செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தலைமை செயலக வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடையவை

http://tamil.thehindu.com/tamilnadu/முற்றும்-நெருக்கடி-திணறும்-தினகரன்/article9648813.ece?homepage=true

Link to comment
Share on other sites

‘இனி யாரும் தினகரனை ஆதரிக்க வேண்டாம்!’ - திவாகரனின் ‘திடீர்’ உற்சாகம் #VikatanExclusive

 
 

நடராசன்-திவாகரன்

அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதில் சசிகலாவின் தம்பி திவாகரன் உள்பட குடும்பத்தினர் பலரும் மகிழ்ச்சியாக உள்ளனர். 'அமைச்சர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சரியான முடிவை எடுத்துள்ளனர். அம்மாவின் ஆட்சியைத் தொண்டர்கள் தொடர வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்' எனவும் அதிர வைக்கின்றனர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே மருத்துவமனையின் இரண்டாவது மாடியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது திவாகரன் குடும்பம். மருத்துவமனை வாசலில் நின்றபடியே, நிர்வாகிகளுக்கு உத்தரவிடுவது என வலம் வந்தார் திவாகரன். ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தார் அவருடைய மகன் ஜெயானந்த். அவருடைய மகள் ராஜமாதங்கியும் அப்போலோவிலேயே தங்கினார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்பட முக்கிய புள்ளிகள் ஜெயலலிதா உடல்நலனை விசாரிக்க வந்தபோதும், அவரது குடும்பமே முன்னிலை வகித்தது. ஜெயலலிதா இறந்த பிறகு, ராஜாஜி ஹாலில் திவாகரனே முன்னின்றார். ஆனால், அடுத்து வந்த நாட்களில் இந்தக் குடும்பத்தை ஓரம்கட்டிவிட்டு தினகரனும் டாக்டர்.வெங்கடேஸும் லைம் லைட்டுக்கு வந்தனர். சசிகலாவின் நடை, உடை, பாவனைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்தார் தினகரன்.

'இனி சசிகலா குடும்பத்தில் யாருக்கும் இடமில்லை' என டி.டி.வி. அளித்த பேட்டியால் கொந்தளித்துப் போனார் திவாகரன். 'குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடம் இல்லை என்றால், இவர் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்? அவருக்குத் தேவையில்லாமல் அதிகாரத்தை வழங்கிவிட்டீர்கள். அவர் நம் குடும்பத்தை மட்டுமல்ல. ஆட்சியையே கவிழ்க்கப் போகிறார். தளவாய் சுந்தரத்தை வைத்துக் கொண்டு ஆடுகிறார். அமைச்சர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்' என பெங்களூரு சிறையிலேயே சசிகலாவிடம் எடுத்துச் சொன்னார். "சசிகலாவையே ஓரம்கட்டும் அளவுக்கு தினகரனின் நடவடிக்கைகள் எல்லை மீறிப் போய்விட்டன. அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ' அமைதியாக இருந்து காரியம் சாதிக்கலாம்' என குடும்பத்தின் மூத்தவர்கள் சொன்னதையும் கேட்காமல், தன்னைத்தானே வேட்பாளராக அறிவித்துக் கொண்டார். இதுதான் வினையாகிப் போனது" என விவரித்த சசிகலா குடும்ப உறவினர் ஒருவர், 

ஜெயானந்த் திவாகரன்

" ஜெயலலிதா இறந்த பிறகு, கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான வேலைகளில் திவாகரன் இறங்கினார். மத்திய அரசின் நெருக்கடிகளை உணர்ந்து, ' இது ஆரியர் கட்சி அல்ல. திராவிடர் கட்சி' எனவும் ஆவேசப்பட்டார். சசிகலாவின் கணவர் நடராசனும், 'ஆமாம். நாங்கள் குடும்ப ஆட்சியை செய்வோம்' எனக் கொதித்தார். திவாகரன் கை ஓங்கும் நேரத்தில், சசிகலாவை கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டார் தினகரன். ' குடும்ப ஆட்சி என்று வெளியில் விமர்சனம் செய்கிறார்கள். ஆட்சி அதிகாரத்துக்குள் அவர்கள் ஜெயானந்த்தலையிடுகிறார்கள். அமைச்சர்களால் சுயமாக முடிவெடுக்க முடியவில்லை. யாருக்குக் கட்டுப்படுவது என அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களை ஒதுங்கியிருக்கச் சொல்லுங்கள்' எனக் கூறிவிட்டார். சசிகலாவும், ' கார்டன் நிர்வாகத்தை வெங்கடேஷும் கட்சி நிர்வாகத்தை தினகரனும் கவனித்துக் கொள்ளட்டும்' எனக் கூறிவிட்டே சிறை சென்றார். இதனை திவாகரன் தரப்பினர் ரசிக்கவில்லை.

முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்கும்போதும், ஆளுநர் வித்யாசாகர் ராவை தனியே சந்தித்தார் திவாகரன். ' தங்களால்தான் விவகாரம் எளிதாக முடிந்தது' என டி.டி.விக்கு சுட்டிக் காட்டினர். இதன்பின்னரும் திவாகரன் சம்பந்தியான போலீஸ் அதிகாரி ஜெயச்சந்திரனை கரூருக்கு இடமாற்றம் செய்து குடும்ப உறவுகளின் கோபத்தை சம்பாதித்தார். 'இதற்கு மேலும் தினகரனை வளர்த்துவிட்டால், அனைவருக்கும் ஆபத்து' என்று உணர்ந்ததால்தான், இணைப்பு முயற்சிகளுக்கு அவரும் ஆதரவு தெரிவித்தார்.

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் இறந்தபோது, தினகரனையும் திவாகரனையும் அழைத்து சமசரம் பேசினார் நடராசன். 'நீங்கள் ஒற்றுமையாக இருக்கவில்லையென்றால், எல்லாம் நம் கையைவிட்டுப் போய்விடும். அமைதியாக இருங்கள்' என வலியுறுத்தினார். இந்த சமசரத்துக்கு தினகரன் உடன்படவில்லை. எதிர்பார்த்தது போலவே, ஆட்சியும் கட்சியும் கையைவிட்டுப் போய்விட்டது. இதனால் திவாகரன் தரப்புக்கு எந்த இழப்பும் இல்லை" என்றார் விரிவாக. 

அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதை வரவேற்று கருத்து தெரிவித்திருந்தார் திவாகரன் மகன் ஜெயானந்த். இதுகுறித்து அவருடைய விளக்கத்தை அறிய தொடர்பு கொண்டோம். "தொண்டை வலி அதிகமாக இருப்பதால், அவரால் பேச முடியவில்லை" என விவரித்த அவருடைய உதவியாளர், "முன்னாள் முதல்வர் அம்மாவின் உழைப்பால் உயர்ந்த கட்சி இது. கழகத்தின் மூத்தவர்களும் தொண்டர்களும் இணைந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதுதான் திவாகரனின் விருப்பம். இப்படியொரு முடிவை நாங்களும் வரவேற்கிறோம். கட்சி உடையாமல் காக்க இது ஒன்றுதான் ஒரே வழி" என்றார். 

http://www.vikatan.com/news/tamilnadu/86909-divakaran-excited-about-dinakarans-situation.html

Link to comment
Share on other sites

தினகரன் பின்வாங்கியது எப்படி?அசைய வைத்த அனுராதா

 

 

சென்னை:
கட்சியில் இருந்து தினகரன், சசிகலா ஆகியோரோடு, அவர்களது குடும்பத்தினரும் ஒதுங்க வேண்டும் என்று, தமிழக அமைச்சர்கள், முதல்வர் பழனிச்சாமி தலைமையில் கூடி முடிவெடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக, தினகரனின் மனைவி அனுராதா ரொம்பவே கவலை அடைந்தார். இதற்கிடையில், தினகரன் இல்லத்துக்கு, தங்கதமிழ்ச் செலவன், வெற்றிவேல், சுப்பிரமணியன் உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் மட்டும் சென்றனர். அவர்கள், இனியும் நாம் சும்மா இருக்க வேண்டாம்; நம்முடைய ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம். இனிமேல் ஒரு நாள் கூட பழனிச்சாமி ஆட்சி தொடரக் கூடாது. அமைச்சர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டால், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் இளிச்சவாயர்களா? இவர்கள் சொல்வது படியெல்லாம் கேட்பதற்கு நாம் தலையாட்டி பொம்மைகள் அல்ல என்று சீற்றத்துடன் கருத்துச் சொல்லியிருக்கின்றனர்.தங்கத் தமிழ்ச் செல்வனும், வெற்றிவேலும்தான், பழனிச்சாமி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பேசியதாக தெரிகிறது. அதையடுத்தே, தலைமைக் கழகத்தில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்தப்படும்; அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என, நடு இரவில் தெரிவித்தார் தினகரன்.

 

அனுராதா அட்வைஸ்?:

 

ஒட்டுமொத்த சம்பவங்களையும் கவனித்துக் கொண்டிருக்கும் தினகரன் மனைவி அனுராதா, இதெல்லாம் தேவையில்லாத வேலை என்று, கணவருக்கு அட்வைஸ் செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்தே, தினகரன் தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிக் கொண்டு, அமைச்சர்கள் விருப்பப்படி ஒதுங்கி இருக்கிறேன் என அறிவித்து விட்டார் என, தினகரனுக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:அமைச்சர்கள், முதல்வர் வீட்டில் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இரவிலும் கூடி, விவாதித்த அத்தனை விஷயங்களையும், தனது தொடர்புகள் மூலமாக தனியாக திரட்டினார் தினகரன் மனைவி அனுராதா. அதில், ஆறு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே, தினகரனுக்கு ஆதரவாக திரண்டிருப்பதாகவும், அதிலும் சிலர், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் போய்விடக் கூடும் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது.இதற்கிடையில், தினகரன் கூடவே இருந்து, மத்திய அரசை பகைத்துக் கொள்வதில் இருந்து, அமைச்சர்களையும், கட்சியின் மூத்த தலைவர்களையும் பகைத்துக் கொள்வது வரையில், எல்லா விஷயங்களுக்கும் காரணமாக இருந்த அந்த சுந்தரத் தலைவர் மீது, அடுக்கடுக்கான புகார்கள், அனுராதாவுக்கு வந்து கொண்டே இருந்தன.
அவரின் தவறான வழிகாட்டுதல்தான் இத்தனைக்கும் காரணம் என்றும் அவர் அறிந்து கொண்டார். உடனே, அவர், தனக்கு நேரடி தொடர்பில் இருக்கும் சில அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு, உண்மையில் நடந்தது என்ன என்று கேட்டறிந்தார். அமைச்சர்கள் பலரும், தினகரன் சமீப நாட்களில் நடந்து கொண்ட அத்தனை விதங்களைக் கூறி வருத்தப்பட்டுள்ளனர்.தேர்தல் கமிஷனில் சசிகலாவின் பொதுச் செயலர் பதவிக்கு சிக்கல் வந்தது, தினகரன் மீதான பெரா வழக்கு திடீர் என உயிர் பெற்றது, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த பிரச்னையில் சிக்கியிருப்பது என பல்வேறு விஷயங்கள் ஒரே நேரத்தில் தினகரன் கழுத்தை நெரிப்பதற்குக் காரணம், நிலைமை புரியாமல், தினகரன் நடந்து கொண்டதுதான் என்பதை அறிந்து கொண்டார்.

 

பாதிப்பால் ஆத்திரம்:

தினகரனுக்கு ஆதரவாளர்களாக அணி திரளும் அத்தனை எம்.எல்.ஏ.,க்களும், சிலரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த ஆத்திரத்தையெல்லாம், தினகரனை வைத்துக் கொண்டு அவர்கள் மேல் காட்டினர். அதெல்லாம் கூட, தினகரனுக்கு எதிரான பிரச்னை தலைக்கு மேல் செல்வதற்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது.

 

அமைச்சர்கள் பல்டி:

நேற்று வரை, தினகரன் அணியில் இருந்த உடுமலை ராதாகிருஷ்ணன், ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, ஆர்.காமராஜ், ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜூ, தங்கமணி, வீரமணி, வேலுமணி, வெல்லமண்டி நடராஜன், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும், அப்படி அப்படியே தினகரனை கழட்டி விட்டு விட்டு, எடப்பாடி பழனிச்சாமி பக்கம் அணி திரண்டு, ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களையெல்லாம் நம்பி தினகரன் அரசியல் செய்ததே தவறு.
இப்படி மொத்த விவரங்களையும் திரட்டிய அனுராதா, தினகரனிடம் நிறைய பேசினார். அப்போது, நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தினகரனிடம் கூறி, அமைதியாக, அமைச்சர்கள் விருப்பம் போல ஒதுங்கி விடுங்கள். இல்லையென்றால், அவர்கள் தொண்டர்களை திரட்டி உங்களை விரட்டி அடிக்கக் கூடும். அது, அவமானத்தை ஏற்படுத்தி விடும். இனி, எக்காரணம் கொண்டும் போயஸ் தோட்டம் பக்கமோ, தலைமைக் கழகம் பக்கமோ போக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.இது என்னுடைய கருத்து மட்டுமல்ல; ஒட்டுமொத்த நம் குடும்பத்தினரின் கருத்தும்தான். மன்னார்குடி குடும்பம் மாபியா குடும்பம் என்று எல்லா மட்டங்களிலும் சொல்லப்படுகிறது. இந்த மன்னார்குடி குடும்பத்தின் ஒட்டுமொத்த கருத்தும் கூட, சசிகலாவும், தினகரனும் கட்சி ஆட்சியில் இருந்து ஒதுங்க வேண்டும் என்பதுதான்.
குடும்பமும் கைவிட்ட பின்னால், யாரை நம்பி நீங்கள் எதிர்த்து நிற்கப் போகிறீர்கள். உங்களை ஆதரிப்பதாக கூறும் ஆறு எம்.எல்.ஏ.,க்களும் கூட, நாளையே கூட, அந்தப் பக்கம் போய் விடுவர். அதனால், மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்க வேண்டாம். பெரும் ஆபத்தில் முடியும். எனவே, அமைதியாக, ஒதுங்கி விடலாம். அதுதான், நமக்கும் நமது குடும்பத்துக்கும் நல்லது. இப்போதைக்கு ஒதுங்குங்கள். பிறகு எப்படி போகிறது என பார்த்துவிட்டு, அதன்படி செயல்படலாம் என்று உறுதிபட கூறியிருக்கிறார் அனுராதா. தினகரன் தீர்க்கமாக அதன்பின் யோசித்திருக்கிறார். அதைத் தொடர்ந்தே, அவர், அமைச்சர்கள் விருப்பப்படி, கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தார். இவ்வாறு அந்த உறவினர்கள் கூறினர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1754643

Link to comment
Share on other sites

ட்விட்டரில் டி.டி.வி.தினகரன் உருக்கம்!

 
 

'தனக்கு ஒத்துழைப்பு தந்த நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி' என ட்விட்டரில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார் டி.டி.வி.தினகரன்.

dinakaran

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், தான் நேற்றே கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டேன் எனக் கூறி, இன்று காலை அதிரவைத்தார், டி.டி.வி தினகரன். மேலும், 'அ.தி.மு.க-வில் இருந்து என்னை ஒதுக்கியதால் நான் கவலைப்படவில்லை. என்னை ஒதுக்குவதால் அவர்களுக்கு நன்மை என்றால், அதுவே நடக்கட்டும். கட்சியோ ஆட்சியோ, பிளவுபட நான் காரணமாக இருக்க மாட்டேன். நேற்றே நான் ஒதுங்கிவிட்டேன்' எனத் தெரிவித்து, இன்று அவர் தலைமையில் நடக்க இருந்த எம்எல்ஏ-க்கள் கூட்டத்தையும் ரத்துசெய்வதாக அறிவித்தார். 

ttv dinakaran

தற்போது, தனது விலகல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுவரும் தினகரன், 'இக்கட்டான சூழ்நிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டேன். ஏதோ ஒரு அச்சம் காரணமாக அமைச்சர்கள் என்னையும், குடும்பத்தினரையும் ஒதுங்கி இருக்கச் சொல்கிறார்கள். பொது வாழ்க்கையில் அச்சம் இருக்கக்கூடாது. நான் ஒதுங்கி இருப்பதனால் கட்சிக்கு நன்மை என்றால், ஒதுங்கியிருப்பதில் தப்பில்லை என நினைக்கக்கூடிய முதிர்ச்சி உள்ளவன்.

கட்சியும் ஆட்சியும் பலவீனம் ஆவதற்கு நான் என்றும் காரணமாக இருக்க மாட்டேன். எனக்கென்று ஒரு பொறுப்பு உண்டு என்ற எண்ணத்தில் சொல்கிறேன், எந்தக் காரணத்தைக்கொண்டும் கட்சி பிளவுபட்டுவிடக்கூடாது; அனைவரும் ஒற்றுமையாக இருங்கள். எனக்கு இதுவரை ஒத்துழைப்பு நல்கிய அத்துணை கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/politics/86918-ttvdinakaran-conveys-his-gratitude-in-twitter.html

Link to comment
Share on other sites

தினகரன் மீதான புகார்: சுகேஷ் சந்தரை சென்னைக்கு அழைத்து வருகிறது டெல்லி போலீஸ்

இரட்டை இலை சின்னம் வழங்க லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்தரை டெல்லி போலீசார் இன்று சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.

 
 
 
 
தினகரன் மீதான புகார்: சுகேஷ் சந்தரை சென்னைக்கு அழைத்து வருகிறது டெல்லி போலீஸ்
 
சென்னை:

அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு சசிகலா அணியும், ஓ.பி.எஸ். அணியும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது. அத்துடன், இரட்டை இலையை யாருக்கு வழங்குவது? என்பது குறித்து இரு தரப்பினரிடமும் பிரமாணப் பத்திரங்கள் பெற்று அதன் அடிப்படையில் முடிவு செய்ய உள்ளது.

இந்த சூழ்நிலையில், டெல்லியில் கைது செய்யப்பட்ட இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில், இரட்டை இலை சின்னத்தை பெற்றுக் கொடுப்பதற்காக டி.டி.வி.தினகரனிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாக தெரிவித்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் சென்னை வந்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
201704191904018920_vote._L_styvpf.gif
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்தரை 8 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், மேலும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சுகேஷ் சந்தருடன் டெல்லி போலீசார் இன்று மாலை சென்னைக்கு புறப்பட்டனர். இன்று இரவு சென்னை வந்து சேர்கிறார்கள். பின்னர், சுகேஷ் சந்தர் கொடுத்த தகவலின் அடிப்படையில் லஞ்சப் புகார் தொடர்பாக சென்னையில் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/19190351/1080789/delhi-police-to-arrive-soon-in-chennai-today-to-investigate.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.