Jump to content

லண்டனில் கைதானார் தொழிலதிபர் விஜய் மல்லையா!


Recommended Posts

லண்டனில் கைதானார் தொழிலதிபர் விஜய் மல்லையா!

 
 

கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான விஜய் மல்லையா, லண்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

vijay mallya

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தவில்லை. பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் கடனாக வாங்கி, திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பிய விஜய் மல்லையாவைக் கைதுசெய்து அழைத்துவரும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருந்தது இந்திய அரசு.

இதனிடையே, கடந்த 13-ம் தேதி விஜய் மல்லையாவுக்கு, பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணையை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்தது. அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக, விஜய் மல்லையா மீது இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 

இந்த நிலையில், விஜய் மல்லையாவைக் கைதுசெய்வது தொடர்பாக இங்கிலாந்திடம் உதவி கோரியிருந்தது இந்திய அரசு. வேண்டுகோளை ஏற்ற ஸ்காட்லாண்டு யார்டு போலீஸார், அவரை இன்று கைதுசெய்துள்ளனர். கைதான அவர், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.

http://www.vikatan.com/news/world/86808-vijay-mallya-arrested-in-london.html

Link to comment
Share on other sites

விஜய் மல்லையா லண்டனில் கைது

 

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் இன்று கைது செய்யப்பட்டார்.

 
 

விஜய் மல்லையாவை தாங்கள் கைது செய்துள்ளதை லண்டன் பெருநகர போலீஸ் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக லண்டன் பெருநகர போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இந்திய அதிகாரிகளின் சார்பாக லண்டன் பெருநகர போலீஸின் நீதிமன்ற விசாரணைக்கு நாடு கடத்தும் பிரிவு கைது செய்துள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

தற்போது செயலிழந்த நிலையில் உள்ள விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான சேவை நிறுவனத்தில் நடந்த நிதி மோசடிகள் மற்றும் இந்திய வங்கிகளுக்கு 9000 கோடி ரூபாய் செலுத்த தவறியதாக குற்றம் சாட்டப்பட்ட விஜய் மல்லையாவை பிரிட்டனினில் இருந்து நாடு கடத்த வேண்டும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

தற்போது விஜய் மல்லையா எந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்று தெளிவாக தெரியவில்லை.

இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜர்படுத்தப்படுவார்.

http://www.bbc.com/tamil/india-39629330

Link to comment
Share on other sites

லண்டனில் மல்லையா கைதாகி ஜாமினில் விடுதலை

 

லண்டன்: பல்வேறு கடன் சர்ச்சையில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.

வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் விஜய் மல்லையா லண்டன் தப்பி சென்றார். அங்கிருந்து அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக கோர்ட் மூலம் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய அரசு சார்பில் அவரை நாடு கடத்தவும் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், லண்டனில் ஸ்காட்லாந்து போலீசார் விஜய் மல்லையாவை கைது செய்தனர். பண மோசடி வழக்கில், இந்திய அதிகாரிகள் கோரிக்கையை ஏற்று மல்லையாவை கைது செய்ததாக போலீசார் கூறினர்.
தொடர்ந்து மல்லையா வெஸ்ட் மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1753969

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இந்திய மக்களை முட்டாள்ஆக்கும் நாடகம் தொடங்கி விட்டுது 

என்ன பெருமாள் புதுசா சொல்றீங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

என்ன பெருமாள் புதுசா சொல்றீங்க.

புதுசா சொல்ல என்ன இருக்கு இவர் கடன் வேண்டின காசில் மகனின் பெயரில் சொத்துக்களை மாற்றி விட்டு bjp,காங்கிரஸ் இரண்டு அரசியல்வாதிகள்யும் நன்கு கவனித்து விட்டு தப்பி வந்துவிட்டார் கனக்க வேண்டாம் மகனின் சொத்துக்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது எண்டு நோன்டினாலே காணும் ஆனால் அதை செய்ய மாட்டார்கள் இவரை பேருக்கு கைது பண்ணி நம்ம பிள்ளையான் போல் விளயாட வெளிகிட்டுவிட்டார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

என்ன பெருமாள் புதுசா சொல்றீங்க.

இந்தியாவிலுள்ள ஊழல் மன்னர்கள் மன்னிகள்  அனைவரையும் உள்ளே வைத்தாச்சு

இப்ப வெளியில பிடிக்க வெளிக்கிட்டாச்சு என்கிறார் போலும்..:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது...விஜய் மல்லையா உட்பட 
அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது...
திருடராய் (விஜய் மல்லையா)  பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது 
Link to comment
Share on other sites

வங்கிக் கடன் மோசடி புகார் தொடர்பாக லண்டனில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு மூன்று மணி நேரங்களில் ஜாமீன் கிடைத்துள்ளது.

 
 
 
 
கைதான 3 மணி நேரத்தில் ஜாமீன் பெற்ற விஜய் மல்லையா
 

லண்டன்: 

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதை திரும்பச் செலுத்தவில்லை. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில், விஜய் மல்லையா தனது சிறப்பு பாஸ்போர்ட்டை பயன்படுத்தி திடீரென வெளிநாட்டுக்கு சென்று விட்டார். 

லண்டனில் தங்கி இருக்கும் அவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாகவில்லை. எனவே, அவருக்கு எதிராக கோர்ட்டு மூலம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. 

அத்துடன் அவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது. அவரை நாடு கடத்தும்படி பிரிட்டன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து, அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தது. அவற்றை பிரிட்டன் வெளியுறவுத்துறை சமீபத்தில் சரிபார்த்து, மேல் நடவடிக்கைக்காக மாவட்ட நீதிபதிக்கு அனுப்பி வைத்தது. 
201704181757169091_s._L_styvpf.gif
இந்நிலையில், லண்டனில் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இன்று கைது செய்தனர். பின்னர் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். கைது செய்யப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

ஜாமீனில் வெளிவந்த விஜய் மல்லையா டுவிட்டரில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அதில், ‘எப்போதும் போல இந்திய ஊடகங்கள் மிகைப்படுத்தி உள்ளன. எதிர்பார்த்தது போன்று இந்தியா கொண்டு வருவது தொடர்பான விசாரணையானது கோர்ட்டில் இன்று தொடங்கியது’ என கூறியுள்ளார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

இந்நிலையில், லண்டனில் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இன்று கைது செய்தனர். பின்னர் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். கைது செய்யப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்த இந்தியாவே உந்த செய்தியை பாத்து ஆச்சரியப்பட்டிருக்கும்.....ஏனெண்டால் இந்தியாவிலைதான் உப்புடியான அதிசயங்கள் நடக்கிறது.....இப்ப என்னடாவெண்டால் வெள்ளைக்காரனே 16அடி பாயுறாங்கள்.

இஞ்சை ஒரு அஞ்சு ரூபாய் கடனெடுத்துட்டு திருப்பி கட்டாட்டில் அங்காலை இஞ்சாலை அரக்கேலாமல் கிடக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

ஒட்டுமொத்த இந்தியாவே உந்த செய்தியை பாத்து ஆச்சரியப்பட்டிருக்கும்.....ஏனெண்டால் இந்தியாவிலைதான் உப்புடியான அதிசயங்கள் நடக்கிறது.....இப்ப என்னடாவெண்டால் வெள்ளைக்காரனே 16அடி பாயுறாங்கள்.

இஞ்சை ஒரு அஞ்சு ரூபாய் கடனெடுத்துட்டு திருப்பி கட்டாட்டில் அங்காலை இஞ்சாலை அரக்கேலாமல் கிடக்கு...

மல்லையா இதை எதிர்பார்த்து கன காலமாக இருந்தவர், அந்த கால இடைவெளியில் அதற்குரிய ஏற்பாடுகளை நிச்சயம் செய்திருப்பார்.

Link to comment
Share on other sites

 

:D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னப்பா இது....

இங்கிலீஸ் சட்டமே புரியாமல், இந்திய சட்ட அறிவுடன், உடனே விட்டாச்சு என, பலர் புலம்பித் தள்கின்றனர். 

இங்கிலீஸ் சட்டப்படி, கீழ் நீதிமன்று தண்டித்தால், சிறை அனுப்பினால்.... நேர உள்ள... நோ பெயில்..... உள்ள இருந்து தான் அப்பீல்.

இந்தியாவில் நேர் எதிர்... உச்ச நீதி மன்று உறுதி செய்யும் வரை ஜெ, சசி கும்பல் பெயிலில்...

என்ன குற்றத்துக்காக, குன்காவின் கீழ் நீதிமன்றம் தண்டித்ததோ... அதே குற்றத்தை தொடர்ந்தார்கள், குமாரசாமியின் மேல் நீதிமன்ற தீர்ப்பால்.

கொலைக்குற்றச் சாட்டில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உச்ச நீதிமன்றில் அப்பீல் பண்ணி இன்னும் வெளியே தான்.

கேட்டால் இந்திய சட்டம் அப்படி என்பார்கள். இந்திய சட்டங்களின் மூலமான ஆங்கில சட்டமோ... முன்னைய தீர்புக்களினால் கிடைத்த பட்டறிவினை கொண்டு மாறுகிறது.

இந்திய அரசியல்வாதிகள் சுயநலமே இந்தியாவை நாசமாக்குகிறது.

மல்லையாவை சிறையனுப்பும் குற்றமெதுவும் பிரிட்டனில் அவர் செய்யவில்லை. மேலும் அவரை உள்ளே வைத்து சாப்பாடு போடும் செலவை இந்தியா தரப் போவதில்லை. அவர் மேலுள்ளது. கடன் நிலுவை... பொருளாதார வழக்கு. கிரிமினல் வழக்கல்ல... உள்ள போட.

கீழ் நீதிமன்று பெயில் விட்டால் அதன் கருத்து, அவர் பாஸ்போட் நீதிமன்றிடம்... அனுமதி இன்றி நாட்டை விட்டு போக முடியாது. அதேவேளை தனது சட்ட ஆலோசனைகள் பெற வசதியாக வெளியில் விடப்படுகிறார்.

அதேவேளை உயர் நீதிமன்றே அவரை நாடு கட்த்தும் வழக்கை விசாரிக்கும். பணம் இருப்பதால்.... இந்தியாவில்.. உயிராபத்து அதுதான் வந்தேன் என்று சொல்ல முடியும்.... பணம் அங்கேயும் பாயும் என்பதால், வழக்கு முகாந்தரம் பலவீனமாக இந்திய தரப்பில் அமையும்.

இது உண்மையில், மல்லையாவின் பிரித்தானிய தங்குதலை, சட்டரீதியாக்கி... இந்திய அரசு மீதான, மீடியாக்களின் அழுத்தத்தை இல்லாமல் செய்யும் முயற்சி.

மற்றப்படி அங்கே வழக்குகளுக்கு எனது வக்கீல்கள் மூலம் முழூ ஒத்துழைப்பு குடுக்கிறேனே என்பார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.