• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ஜீவன் சிவா

வத்தகைப் பழம்

Recommended Posts

வத்தகைப் பழமும் தித்துள் கட்டியும் // இந்த அகோர வெயிலுக்கு ஒரு வரப்பிரசாதம்.

IMG_1429.jpg

IMG_1443.jpg

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

வத்தகப் பலத்தை கத்தியால் வெட்டி அதை அவமானப் படுத்தி சாப்பிடக் கூடாது, கல்லில குத்திப் பிளந்து வாயில வைக்க ஐஸ்கிரீம் மாதிரி அப்படியே உருகிக் கொண்டு உள்ளிறங்கும்....!  tw_blush: 

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, suvy said:

வத்தகப் பலத்தை கத்தியால் வெட்டி அதை அவமானப் படுத்தி சாப்பிடக் கூடாது, கல்லில குத்திப் பிளந்து வாயில வைக்க ஐஸ்கிரீம் மாதிரி அப்படியே உருகிக் கொண்டு உள்ளிறங்கும்....!  tw_blush: 

தலைவா கல்லில குத்தி தின்ன இது என்ன மாங்காயா :grin:

நாங்களெல்லாம் வெடிச்ச  பழமா வாங்கி கையால பிச்சு தின்னுவமே 

Share this post

Link to post
Share on other sites

சிஷ்யா கவனமாய் கேட்பாயாக....!

பிள்ளையாருக்கு , குட்டி தோப்புக் கரணம் போடுவதும், 

ஆசிரியர் டமார் என தலையில் குட்டுவதும் 

மாங்காயை குத்தித் தின்னுவதும் 

அவற்றினுடே செறிந்திருக்கும் அமிர்த நீர் எல்லா இடமும் பரந்து சென்று சுவையை மேம்படுத்தத் தான். அங்கனமே வாக்கப் பழத்துக்கும் பொருந்தும். பிச்சு துண்ணுறது பானுக்குத்தான் சரிவரும்....!  tw_blush:

டுடே சப்ஜக்ட் ஓவர்.....! 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

கலோ யாழ்ப்பாணமா எப்படி சூடு ஓவர் ஓவர் மண்டை காயுது சார் வெயில் இதை வெள்ளரிப்பழம் என்பார்கள் கிழக்கில்  வெயிலுக்கு நல்ல சாமான் ஆனால் என்ன இடுப்புக்க பிடிக்கும்  அவ்வளவுதான் 

Share this post

Link to post
Share on other sites

நன்றாக பழுத்த  வத்தகைப் பழத்தின் வாசனையும், சுவையும் இப்போதும் மனதை விட்டு அகலாமல் உள்ளது. :love:
இந்தப் பழம் அநேகமாக நல்லூர் திருவிழா மாதங்களில் எல்லா கடைகளிலும் கிடைக்கும். அப்போது தான் இதன் அறுவடைக்காலம் என எண்ணுகின்றேன். இதனை சுவைத்து கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகி விட்டது.
அண்மையில் ஏதோ ஒரு பதிவுக்கு இதன் பெயர் கடைசி வரையும் நினைவில் வரவே இல்லை. அந்தளவுக்கு இதனை மறந்து விட்டிருந்தேன்.  அதனை படத்துடன் இணைத்து, மீண்டும்  நினைவு ஊட்டியமைக்கு நன்றி ஜீவன் சிவா.

Share this post

Link to post
Share on other sites
On 17.4.2017 at 3:00 PM, தமிழ் சிறி said:

இந்தப் பழம் அநேகமாக நல்லூர் திருவிழா மாதங்களில் எல்லா கடைகளிலும் கிடைக்கும். அப்போது தான் இதன் அறுவடைக்காலம் என எண்ணுகின்றேன்.

இல்லை சிறீ 

சாவகச்சேரி, நுணாவில், மட்டுவில் போன்ற இடங்களில் வயல் அறுவடை செய்த கையுடன் பயிரிடுவார்கள் - அது இப்பதான் காய்த்து குலுங்கி ஆடி அசைந்து சந்தை முதல் வீதியோரம் வரை, அழகான பனை ஓலை சட்டையுடன் குந்தி இருக்கும்.

இந்த சீசனில் தவற விட்டீங்களோ, அம்புட்டுதான் // அப்புறம் வருஷம் பூரா தேடினாலும் கிடைக்காது....

போன வருடம் மொக்கன் மாதிரி தேடின அனுபவம் கற்றுத்தந்த பாடம் இது.

உங்களுக்காக கித்துள் கட்டி கீழே // என்ஜோய் யுவர் வத்தகைப் பழம் வித் கித்துள் :grin:

IMG_1449.jpg

Share this post

Link to post
Share on other sites
On 17.4.2017 at 8:15 AM, ஜீவன் சிவா said:

வத்தகைப் பழமும் தித்துள் கட்டியும் // இந்த அகோர வெயிலுக்கு ஒரு வரப்பிரசாதம்.

IMG_1429.jpg

தம்பி! உது வத்தகைப்பழமில்லை. உது வெள்ளரிப்பழம் கண்டியளோ...உங்கடை ஊரிலை உதுதான் வத்தகைப்பழமெண்டால் நான் ஒண்டும் செய்யேலாது...:grin:
என்ரை ஊரிலை இதுதான் வத்தகைப்பழம்.:cool:

Bildergebnis für வத்தகைப்பழம்

Share this post

Link to post
Share on other sites
On 17.4.2017 at 11:10 AM, முனிவர் ஜீ said:

கலோ யாழ்ப்பாணமா எப்படி சூடு ஓவர் ஓவர் மண்டை காயுது சார் வெயில் இதை வெள்ளரிப்பழம் என்பார்கள் கிழக்கில்  வெயிலுக்கு நல்ல சாமான் ஆனால் என்ன இடுப்புக்க பிடிக்கும்  அவ்வளவுதான் 

16 hours ago, குமாரசாமி said:

தம்பி! உது வத்தகைப்பழமில்லை. உது வெள்ளரிப்பழம் கண்டியளோ...உங்கடை ஊரிலை உதுதான் வத்தகைப்பழமெண்டால் நான் ஒண்டும் செய்யேலாது...:grin:
என்ரை ஊரிலை இதுதான் வத்தகைப்பழம்.:cool:

Bildergebnis für வத்தகைப்பழம்

ஜீவன்  சிவா.... 
முனிவர் ஜீ,  குமாராசாமி அண்ணை கூறியது போல் இதனை  வெள்ளரிப் பழம்  என்று தான் குறிப்பிடுவார்கள்.
உள்ளே..... வெள்ளை நிறம் உள்ளதால், அதன் பெயரைப் பார்த்தாலே. புரிந்து கொள்ள முடியும்.
வத்தகை பழம்,   உள்ளே சிவப்பு நிறமாக இருக்கும். இதனை தமிழ்நாட்டில் தர்பூஸ்  என்பார்கள்.
தர்பூஸ் என்று  துருக்கிய மொழியிலும் சொல்வார்கள். இந்தியாவை... மொகலாயர் ஆண்ட போது, இந்தச் சொல் தமிழ் நாட்டிற்கும் அறிமுகமாகி இருக்கலாம்.

Share this post

Link to post
Share on other sites
21 hours ago, குமாரசாமி said:

தம்பி! உது வத்தகைப்பழமில்லை. உது வெள்ளரிப்பழம் கண்டியளோ...உங்கடை ஊரிலை உதுதான் வத்தகைப்பழமெண்டால் நான் ஒண்டும் செய்யேலாது...:grin:
என்ரை ஊரிலை இதுதான் வத்தகைப்பழம்.:cool:

Bildergebnis für வத்தகைப்பழம்

5 hours ago, தமிழ் சிறி said:

ஜீவன்  சிவா.... 
முனிவர் ஜீ,  குமாராசாமி அண்ணை கூறியது போல் இதனை  வெள்ளரிப் பழம்  என்று தான் குறிப்பிடுவார்கள்.
உள்ளே..... வெள்ளை நிறம் உள்ளதால், அதன் பெயரைப் பார்த்தாலே. புரிந்து கொள்ள முடியும்.
வத்தகை பழம்,   உள்ளே சிவப்பு நிறமாக இருக்கும். இதனை தமிழ்நாட்டில் தர்பூஸ்  என்பார்கள்.
தர்பூஸ் என்று  துருக்கிய மொழியிலும் சொல்வார்கள். இந்தியாவை... மொகலாயர் ஆண்ட போது, இந்தச் சொல் தமிழ் நாட்டிற்கும் அறிமுகமாகி இருக்கலாம்.

இதையும் சொல்ல மாட்டார்கள் வத்தகைப்பழம் என்று இது தர்பூசணி அல்லது தண்ணிப்ப்ழம் என்பார்கள்  வத்தகைப்பழம் ,வத்தகைக்காய் சொதி வைப்பார்கள் அதன் படன் தேடினேன் கிடைக்கவில்லை கிழக்கில் தற்போது இந்த வெள்ளரிப்பழம் சீசன்  நல்ல தொழில்  வெயில் காலம் என்பதால் உடலுக்கு நல்லதும் கூட tw_blush:

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this