Jump to content

அமைச்சர்கள் கைது எப்போது? போலீஸ் அதிகாரிகள் மும்முரம்


Recommended Posts

அமைச்சர்கள் கைது எப்போது?
போலீஸ் அதிகாரிகள் மும்முரம்
 
 
 

சென்னை:வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டியது உள்ளிட்ட வழக்குகளில், அமைச்சர் களை கைது செய்ய, போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

Tamil_News_large_175270920170417002713_318_219.jpg

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், ஏப்., 7ல், வருமான வரித்துறை அதிகாரிகள்

சோதனை நடத்தினர். அப்போது, இடைத்தேர்தல் நடக்க இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில், ஓட்டுக்கு, 89 கோடி ரூபாய், பணம் பட்டுவாடா செய்வதற்கான ஆதாரங்கள் சிக்கின.

அப்போது, அமைச்சர்கள்காமராஜ், ராதாகிருஷ்ணன், ராஜு மற்றும் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர், விஜயபாஸ்கர் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தனர். வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டியதோடு, பறிமுதல் செய்த ஆவணங்களையும் கிழித்து எறிந்து உள்ளனர்
.
இது குறித்து, வருமான வரித்துறைஅதிகாரிகள் கொடுத்த புகாரை அடுத்து, அபிராமபுரம் போலீசார், அமைச்சர்கள் உள்ளிட்ட நான்கு பேர் மீதும், அரசு ஊழியர்களை மிரட்டியது உட்பட, நான்கு பிரிவு களில் வழக்கு பதிவு செய்துஉள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி

 

வருகின்றனர்.அதற்காக, போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ள னர்.

இதையறிந்த, அமைச்சர்கள் உள்ளிட்ட நான்கு பேரும்,முன் ஜாமின் பெறும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1752709

Link to comment
Share on other sites

சிபிஐ விசாரணை கோர உள்ளதா வருமானவரித்துறை?: அதிர்ச்சியில் அமைச்சர்கள்

 
 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையின் ரெய்டு, ஆளும் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, வருமான வரித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

FIR filed against TN ministers


குறிப்பாக, அவர்கள் பெண் அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் விடுத்ததாக, வருமான வரித்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தது. அதேபோல சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது, அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும், வருமானவரித்துறையினர் தரப்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. 


இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது போலீஸ் வழக்குப்பதிவுசெய்தது. ஆனால், வருமான வரித்துறைக்கு இதில் திருப்தி இல்லையாம். காரணம்,  வருமான வரித்துறை சார்பில் அமைச்சர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு செய்ய கோரப்பட்டு இருந்ததாம்.


ஆனால் காவல்துறையோ, அமைச்சர்கள் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவுசெய்துள்ளதாம். இதனால் அப்செட்டான வருமான வரித்துறை, இந்த விவகாரத்தில் விரைவில் சிபிஐ விசாரணை கோரி, நீதிமன்றத்துக்குப் படியேற உள்ளதாகக் கூறப்படுகிறது. 


இதனால், இந்த விவகாரம் மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/86671-it-likely-to-urge-cbi-enquiry-in-raid-issue.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.