Jump to content

இரு அணிகள்.. ரகசிய சந்திப்பு... பேச்சுவார்த்தை! இணைகிறதா அதிமுக..?!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für ஓபிஎஸ்  Bildergebnis für எடப்பாடி

சசி, தினகரனை விரட்டி... இணையும் ஓபிஎஸ் - எடப்பாடி அணிகள்! 
இருதரப்பு பேச்சுக்கு.... தலா ஐவர் குழு அமைப்பு!

சசிகலா, தினகரனை ஓரம் கட்டி அதிமுகவையும் கட்சியையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் மும்முரமாக இறங்கியுள்ளன. இது தொடர்பாக இருதரப்பிலும் தலா 5 பேர் கொண்ட ரகசிய குழுக்கள் அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. 

சசிகலா, தினகரனின் ஆதிக்கத்தால் அதிமுக சுக்கு நூறாக சிதைந்து போய் எஞ்சிய 4 ஆண்டுகால ஆட்சி பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் இனி அதிமுக ஆட்சிக்கே வரமுடியாத நிலை உள்ளது.

இதனால் ஆட்சிக் காலத்தை தக்க வைப்பதில் அதிமுக மூத்த தலைவர்கள் மும்முரமாக உள்ளனர். குறிப்பாக சசிகலா, தினகரனை ஓரம்கட்டினால் ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி இணைந்துவிடும். ஆட்சிக்கும் கட்சியின் சின்னத்துக்கும் பிரச்சனை இல்லாமல் போய்விடும் என்பது அதிமுக மூத்த தலைவர்களின் கருத்து.

இதைத்தான் தினகரனிடம் நேரடியாகவே தம்பிதுரை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூறினர். ஆனால் தினகரனோ, நான் ஆட்சியை கவிழ்த்துவிடுவேன் என மிரட்டி வருகின்றார்.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் சசிகலா, தினகரனை ஓரம்கட்டிவிட்டு அதிமுக கட்சி, ஆட்சியை எப்படி நடத்துவது என மும்முரமாக விவாதித்து வருகின்றனராம். இதற்காவே இருதரப்பிலும் தலா 5 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

யார் யார்? 
ஓபிஎஸ் அணியில் கேபி முனுசாமி, மாஃபா பாண்டியராஜன், மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி அணியில் தம்பிதுரை, வைத்திலிங்கம், சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறதாம். அதிகாரப்பூர்வமாக இக்குழுக்கள் அறிவிக்கப்படாத நிலையில் ரகசிய பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெறுகின்றன.

அதாவது இரு அணிகளும் இணைகிறபோது யாருக்கு என்ன பதவிகள் என்பதுதான் முதல் அஜெண்டாவாக இருக்கிறது. அதையடுத்து இரு அணிகளும் இணைகிறபோது தினகரன் மேற்கொள்ளும் கவிழ்ப்பு முயற்சிகளை முறியடிப்பது எப்படி என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.

தினகரன் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தால் பதவியை இழக்க விரும்பாத எம்.எல்.ஏக்கள் அவரது பக்கம் போகமாட்டார்கள். விஜயபாஸ்கர் போன்ற ஒருசிலர்தான் தினகரனுடன் இருப்பார்கள் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறதாம் ஓபிஎஸ்- எடப்பாடி அணிகள். இதனால் இருதரப்பும் பேச்சுவார்த்தைகளை தீவிரமாக்கியுள்ளதாம்.

- நன்றி  தற்ஸ் தமிழ். -

Link to comment
Share on other sites

இரு அணிகள்.. ரகசிய சந்திப்பு... பேச்சுவார்த்தை! இணைகிறதா அதிமுக..?!

 
 

சசிகலா-ஓபிஎஸ் பிரிவுக்கு பிறகு இரு அணிகளாய் பிளவுண்ட அதிமுக, மீண்டும் இணையும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இரு அணிகளின் தரப்பில் முக்கியத் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

17_ok_22593.jpg

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் முழு அதிகாரத்தை செலுத்த முயன்றார் சசிகலா. இதனால், ஓ.பன்னீர் செல்வத்தின் முதலமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. இதையடுத்து, இரு அணிகளாய் உடைந்தது அதிமுக. மூத்த உறுப்பினர்கள் பலரும் ஓபிஎஸ் பக்கம் நகர, பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் சசிகலா தரப்பிடம் சரணடைந்தனர். இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரு அணிகளாக பிரிந்து நின்றனர், வெவ்வேறு சின்னங்களில்! இந்நிலையில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக கூறி இடைத்தேர்தலை தள்ளி வைத்தது தேர்தல் ஆணையம். இப்படி தொடர்ந்து அதிமுகவில் நடக்கும் குழப்படிகளால் கழகத்தின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைவதாக அதிமுகவினர் உணர்ந்து கொள்ள தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து, சசிகலா குடும்பத்தாரை ஓரம்கட்டிவிட்டு பழைய அதிமுகவாகவே திரும்பி வர 'ரத்தத்தின் ரத்தங்கள்' விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிமுக(அம்மா) அணி தரப்பில் முக்கிய அமைச்சர்கள், ஓபிஎஸ் அணியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், தினகரன் துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தினகரனுக்கு ஆதரவாக சிலர் குரல் எழுப்பினாலும், கொங்கு பகுதியின் எண்ணங்கள் அவருக்கு எதிராகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருக்கும்பட்சத்தில், ஓபிஎஸ் கழக பொதுச்செயலாளராக நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் அணிவகுத்து காத்திருக்கின்றன என கழகத்தினர் தரப்பு தெரிவிக்கிறது. மேலும், தற்போது ஓபிஎஸ் இல்லத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாகும் தகவல் வெளியாகியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/86652-admk-party-to-reunite.html

Link to comment
Share on other sites

“பன்னீருடன் பேசிய கொங்கு அமைச்சர்”- முடிவுக்கு வரும் 3 மாத பிரிவு!

 
 

Depth_111_02371.jpg

மூன்று மாதங்களை தொட்ட அ.தி.மு.க.வின் பிரிவுக்கு முடிவுரை எழுதப்படுகிறது. பன்னீருடன்  கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவினால் கட்சியின் சின்னம் பறிபோய் கட்சியின் எதிர்காலமே கேள்விகுறியாகியுள்ளது. சசிகலா உறவுகள் அ.தி.மு.க.விலும், ஆட்சியிலும் இருக்கும் வரை நாங்கள் கட்சி மீதும் ஆட்சி மீதும் கனைகளை தொடுக்காமல் விடமாட்டோம் என்று பி.ஜே.பி தரப்பு திட்டவட்டமாக அ.தி.மு.க அம்மா அணியின் முக்கிய நிர்வாகிகளிடம் தகவலை கசியவிட்டுவிட்டது. மத்திய அரசு சொன்னது போலவே செய்து காட்டவும் ஆரம்பித்தது. இரட்டை இலை சின்னத்தை முடக்கி தங்கள் ஆட்டத்தை ஆரம்பித்து, விஜயபாஸ்கர் வீடு ரெய்டு, ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து என்று அ.தி.மு.க.வுக்கு ஆட்டம் காட்டி தற்காலிகமாக ஆட்டத்தை நிறுத்தியுள்ளது.

மத்திய அரசு, ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்களுக்கு எச்சரிக்கையும் செய்துள்ளது. அதில் “அ.தி.மு.க என்ற கட்சியும், ஆட்சியும் இருக்க வேண்டும் என்றால் தினகரனை கழற்றிவிடுங்கள். ஓ.பி.எஸ் அணியுடன் இணைந்து செயல்படுங்கள். அப்போது தான் கட்சியும் காப்பாற்றப்படும், ஆட்சியும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கும்” என்று ஓபனாகவே சொல்லபட்டது. இந்தத் தகவல் தினகரன் காதுக்கும் எட்டியுள்ளது. விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த போதே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர் தினகரன் வீட்டுக்குச் சென்று “நீங்கள் இருப்பது தான் பிரச்னையாகின்றது. முதலில் விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றுங்கள். நீங்கள் தற்காலிகமாகவது ஒதுங்கியிருங்கள். உங்களை பொறுப்பில் வைத்திருப்பதால் தான் மத்திய அரசு கட்சியையும் ஆட்சியையும் காலி செய்யப்பார்க்கின்றது” என ஓபனாக எகிறி உள்ளார். அப்போது தினகரன் டென்ஷனாகி, “நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எனக்கு புத்தி சொல்ல வேண்டாம்” என்று சொன்னதும், கடுப்பில் வெளியே வந்துள்ளார் அந்த அமைச்சர்.

Depth_1_600_02126.jpg

தினகரன் வீட்டுக்கு இரண்டு தினங்களுக்கு முன் தம்பிதுரையுடன் சென்றனர் முக்கிய அமைச்சர்கள் சிலர். தினகரன் வீட்டில் விஜயபாஸ்கர் விவகாரம் குறித்தும், மத்திய அரசின் நெருக்கடி குறித்தும் அப்போது விவாதிக்கபட்டுள்ளது. விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து துாக்க வேண்டும் என்று சில அமைச்சர்கள் சொன்னதும் முகம் சிவந்த தினகரன், அதெல்லாம் வேண்டாம் என்று முரண்டுபிடித்துள்ளார். அதன் பிறகு தான் கொங்கு மண்டல அமைச்சர்கள் ஒரு குழுவாக ஆலோசனை செய்துள்ளார்கள். முதல்வர் எடப்பாடி அனுமதியோடு தான் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில், “கட்சியை காப்பாற்ற வேண்டிய நெருக்கடி வந்துவிட்டது. மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. பன்னீர் அண்ணன் இருந்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது. சசிகலா குடும்பத்தின் தலையீடு இனியும் இருந்தால் ஆட்சிக்கும் ஆபத்து வந்துவிடும். அவர்களாக ஒதுங்க மாட்டார்கள், இனி நாம் தான் ஒதுக்க வேண்டும். நாம் அவர்கள் பக்கம் இருந்தால் தான் ஆட்சியும் கட்சியும் அவர்கள் பக்கம் இருக்கும். நாம் விலகிவிட்டால் நடப்பது என்ன என்று அவர்களுக்கும் தெரியும். நமக்கு இருக்கும் ஓரே வழி பன்னீர் அணியும் நாமும் இணைந்து செயல்படுவது தான்” என்று பேசியதும், அந்த பேச்சிக்கு எதிர் கருத்துகளே இல்லையாம். 

இந்த ஆலோசனை தகவல் பன்னீர் தரப்பை சென்றைடைந்ததும், பன்னீர் தரப்பில் இருந்தே இரண்டு அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்கள். அப்போது, “அண்ணன் சொன்னால் இனி நாங்கள் காரியத்தில் இறங்கத் தயார்” என்று அமைச்சர்கள் சொல்லியுள்ளார்கள். இந்தத் தகவல் பன்னீருக்கு சொல்லபட்டதும், ஞாயற்றுக்கிழமை மாலை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சரோடு பன்னீர் தொடர்பு கொண்டார். பன்னீரிடம் அந்த அமைச்சர், “நானும் மற்றொரு அமைச்சரும் முதலில் உங்கள் பக்கம் வருகிறோம். மேலும் பத்து எம்.எல்.ஏக்களையும் கூட்டி வருகிறோம். இரண்டே நாள்களில் ஒட்டு மொத்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் உங்கள் பக்கம் வருவார்கள். முதல்வர் பதவி, கட்சி பதவி குறித்து நாம் பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று சொன்னதும் பன்னீர் தரப்பும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது, வெளிமாவட்டத்தில் இருக்கும் அந்த இரண்டு அமைச்சர்கள் மேலும் சில அமைச்சர்களிடமும் எம்.எல்.ஏக்களிடமும் பேசி வருகிறார்கள். கட்சியை பன்னீர் தலைமையில் ஒன்றிணைத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும். இல்லையென்றால் மத்திய அரசு கட்சியை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார்கள் என்று பேசியுள்ளார். அனைத்து இடங்களிலும் கிரீன் சிக்னல் வந்துவிட்டதால், அடுத்த சில நாள்களில் பன்னீர்செல்வம் வீட்டுக்கு அமைச்சர்களின் படையெடுப்புகள் ஆரம்பமாக உள்ளன. 

அமைச்சர் தன்னுடன் பேசியதை பன்னீர் அணியின் முக்கிய நிர்வாகிகள் உறுதி செய்துள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை பன்னீர்செல்வம் வீட்டில் இது குறித்த தீவிர ஆலோசனை நடைபெற்றுள்ளது. எந்த நேரத்திலும் இரண்டு அமைச்சர்கள் பன்னீரை வந்து சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. மூன்று மாத போராட்டமும் முடிவுக்கு வந்துவிட்டதாக அ.தி.மு.க அம்மா அணியினர் உறுதி செய்கின்றார்கள். அதோடு சசிகலா குடும்பம்  இல்லாத அ.தி.மு.க விரைவில் செயல்பட போகிறது என்ற ஒரே அஜெண்டாவை தான் இரண்டு அணியிலும் உள்ள நிர்வாகிகளும்  ஓபனாக சொல்லியுள்ளார்கள். 

“சித்திரை பிறப்பு சிறப்பாக இருக்கிறது ” என்கிறார்கள் பன்னீர் அணியினர் உற்சாகமாக!

http://www.vikatan.com/news/tamilnadu/86658-three-months-split-of-admk-is-nearing-an-end-as-two-kongu-ministers-spoke-with-opannerselvam.html

Link to comment
Share on other sites

சசிகலா அணியினருக்கு பன்னீர்செல்வம் பகிரங்க அழைப்பு!

 

'அ.தி.மு.க-வின் இரு அணிகளும் ஒன்றாக இணைவது தொடர்பாக சசிகலா அணி எங்களை அணுகினால், அவர்களுடன் பேச நாங்கள் தயார்' என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

paneerselvam


ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது.  ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க, 'புரட்சித்தலைவி அம்மா அணி' எனவும், சசிகலா தலைமையிலான அ.தி.மு.க, 'அம்மா அணி'  எனவும் செயல்படுகின்றன.  ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், மதுசூதனன் மற்றும் டி.டி.வி.தினகரன் இரு அணிகளின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இரு அணிகளும் தீவிர பிரசாரம்செய்துவந்த நிலையில்,  ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துசெய்யப்படுவதாகத்  தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது.

ஆர்.கே.நகரில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தில், தேர்தல் ரத்துசெய்யப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை, பணப்பட்டுவாடா என, தொடர்ந்து அ.தி.மு.க-வுக்கு அடி மேல் அடி விழுந்தது. இதனால், மக்கள் ஆளும் கட்சி மீது அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றனர். இரு அணிகளாக இருக்கும் அ.தி.மு.க மீண்டும் இணைந்தால் மட்டுமே இதற்குத் தீர்வு கிடைக்கும் என அ.தி.மு.க நிர்வாகிகள் கருதுவதாகவும், இரு அணிகளும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தகவல் வெளியானது.

சென்னை விமான நிலையத்தில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், இரு அணிகள் இணையும் வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பன்னீர்செல்வம், ”இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக டெல்லியில் இன்று விசாரணை நடக்கிறது. இரட்டை இலைச் சின்னம் எங்கள் அணிக்குத்தான் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. சசிகலா அணியினர் எங்களை அணுகினால், அ.தி.மு.க அணிகள் ஒன்றுசேர்வது பற்றி பேச்சுவார்த்தை நடத்தத் தயார்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவர் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தச் சூழலில், சசிகலாவைச் சந்திக்க இன்று தினகரன் பெங்களூரு செல்கிறார். சிறையில் உள்ள சசிகலாவைச் சந்தித்துப் பேசிய பின்னர், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்கிறது அ.தி.முக. வட்டாரங்கள்!

http://www.vikatan.com/news/tamilnadu/86680-admk-teams-likely-to-reunite.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டை இலை பெற லஞ்சம்

சசி கும்பல் இல்லாத அதிமுக- பேச்சுவார்த்தைக்கு அதிகாரப்பூர்வமாக பச்சைக்கொடி காட்டிய ஓபிஎஸ்!

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது பற்றி இதுவரை யாரும் பேசவில்லை. யாராவது பேச வந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் அதிமுக சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. தொடர்ந்து, கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்ற இரு அணிகளும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

இதனிடையே, கடந்த 12ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு, அதிமுக கட்சி பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. தொடர்ந்து நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையால், இறுதியில் ஆர்.கே.,நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

டிடிவி தினகரனையோ, சசிகலா குடும்பத்தினரையே ஏற்றுக்கொள்ள தொண்டர்கள் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இரு அணிகளும் இணைந்தால் மட்டுமே கட்சி, சின்னம், ஆட்சியை காப்பாற்ற முடியும் என்பதை இரு அணியினருமே அறிந்துள்ளனர். எனவே தினகரனை ஒதுக்கிவிட்டு இணைந்து பேச அனைவரும் விரும்புவதாக தகவல் வெளியானது.

இரட்டை இலை பெற லஞ்சம்: இரட்டை இலை சின்னதை பெற ரூ.60 கோடி பேரம் பேசப்பட்டு 1 கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட உள்ளது. டிடிவி தினகரன் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளதால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெறும் விசாரணையில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர் செல்வம் இன்று டெல்லி சென்றார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

யாராவது பேச்சுவார்த்தைக்கு வரும் பட்சத்தில் அமர்ந்து பேச தயாராக உள்ளதாகவே கூறிய ஓ.பன்னீர் செல்வம், இரட்டை சின்னமும், அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

நன்றி தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

பேச்சுவார்த்தை நடத்த இரு அணிகளும் தயார்.... இணையுமா  அதிமுக?

 
 

”இரண்டு அணிகளாக பிளவுப்பட்டுள்ள அ.தி.மு.க ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. ஓ.பி.எஸ் அணியினர் முன்வந்தால் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார்” என்று மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

thambidurai
 

தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று திடீரென சந்தித்துப் பேசினார். சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, தமது தொகுதி பிரச்னைகள் தொடர்பாக முதலமைச்சரை சந்தித்ததாகவும், கிருஷ்ணகிரியில் தடுப்பணை  கட்டுவது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார்.

பின்னர் அ.தி.மு.கவின் இரு அணிகளும் மீண்டும் இணைவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தம்பிதுரை, ‘அ.தி.மு.கவில் இரு அணிகள் கிடையாது. சில கருத்து வேறுபாடுகள் உள்ளது. அவற்றை சரி செய்து, மக்கள் விரும்புவது போன்று ஒற்றுமையாக செயல்படுவோம். அ.தி.மு.க ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியதை வரவேற்கிறேன். ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முன்வந்தால் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார்” என்று தெரிவித்துள்ளார்.

இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த ஓ.பி.எஸ், சசிகலா அணியினர் பேச்சுவார்த்தை நடத்தினால் இணைந்து செயல்படத் தயார் என்று கூறிய நிலையில் தம்பிதுரையும் இதே கருத்தை தெரிவித்துள்ளது அதிமுக மீண்டும் இணையும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/86740-admk-teams-ready-to-hold-talk-about-reunion.html

Link to comment
Share on other sites

'உடனே சென்னைக்கு கிளம்பி வாங்க' - அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பறந்த உத்தரவு..!

 
 

அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் உடனடியாக கிளம்பி சென்னைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

edappadi

சசிகலா - ஓ.பன்னீர் செல்வம் மோதலால் பிளவுண்டது அதிமுக. இரு அணியாக மோதிக்கொண்ட இவர்கள், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி - அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி என பிரிந்து மோதினர். தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் தாவல், கட்சியின் முக்கியத் தலைகள் அணி மாற்றம், இரட்டை இலைச் சின்னம் முடக்கம், தொண்டர்கள் பிளவு, இடைத்தேர்தல் ரத்து என அதிமுக அஸ்திவாரம் ஆட்டம் கண்டது. 

இந்நிலையில், கட்சியின் நலன் கருதி இரண்டு அணிகளும் இணையலாம் என கூறப்பட்டது. இரண்டு அணிகளும் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவலும் வெளியானது. இதற்கு ஆதரவான கருத்தை ஓ.பி.எஸ், தம்பிதுரை ஆகியோர் உதிர்த்தவாறு இருந்தனர். தற்போது, அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் உடனடியாக சென்னைக்கு கிளம்பி வருமாறு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆனால், எம்.எல்.ஏக்களின் திடீர் அழைப்புக்கு வேறொரு காரணத்தை கூறியுள்ளனர். 

ins chennai

சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐ.என்.எஸ் சென்னை போர்க்கப்பலை பார்வையிட்டு, அதில் பயணிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/86747-cm-edappadi-palanisamy-orders-admk-mlas-to-come-chennai.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவில்  IPL
பகலில் TPL

திண்ணையில் அப்டெட்ஸ் போட்டு தினமும் ஒரே மஜாதான்..!

டிஸ்கி :

எப்பா..! கூவாத்தூர் ரெசாட் ஓனர்..! ஒட்டடை சுண்ணாம்பு  எல்லாம் அடித்து ரெடியா வச்சிருக்கியாப்பா..?


குத்தாட்டம் -  II  பார்க்க ரெடியா இருக்கம்.. :cool:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.