கவிப்புயல் இனியவன்

தமிழ் அகராதி சொல்லில் கவிதைகள்

15 posts in this topic

அ ன்பு உள்ளங்களே..... 
அ ன்பு காலை வணக்கம் .....
அ திகாலை எழுத்தவன் ......
அ திசக்தி ஆதவ்னையே.....
அ ருகில் வரவைப்பான்......!

அ ன்பினால் ...
அ கிலத்தையே வெல்லலாம் ....
அ ங்கிகள் தொடக்கம் ...
அ ருகில் உள்ள உயிர்வரை ...
அ ன்பு செலுத்துங்கள் .....!

அ ற்புதங்கள் என்பது ....
அ திசயம் செய்வதல்ல ...
அ ன்புக்கு கட்டுபட்டு ...
அ ண்ட சராசரத்தோடு ....
அ டக்கமாவதே .........!

அ ன்று சொன்னதை செய்ததை ....
அ ன்றே மறப்பவனே ....
அ தி உயர் மனிதன் ....
அ தையே நினைத்துகொண்டிருந்தால் ...
அ ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!

அ ந்தி சாயும் நேரம் ....
அ ன்றைய நிகழ்சிகளை ...
அ சைபோட்டுபாருங்கள் ....
அ ருவருப்பான செயல் எது ...?
அ ரவணைப்பு செயல் எதுவென .....!

&
கவிப்புயல் இனியவன்

3 people like this

Share this post


Link to post
Share on other sites

உயிர் வந்ததால் மெய் மறந்தேன், உயிர்மெய் யில் கவிதை வந்தால் உயிர் தரிப்பேன்....இல்லையேல் மீதமுண்டு ஆய்தம் ....! tw_blush:

2 people like this

Share this post


Link to post
Share on other sites

ஆதவன் துயில் எழமுன் ....
ஆராவாரத்துடன் எழுந்த .....
ஆருயிர் நண்பர்களே ....
ஆண்டவன் கிருபையால் .....
ஆசீர் வதிக்கப்படுகிறோம்.....!!!

ஆனந்தம் பொங்கிட ....
ஆத்மா திருப்தியுடன் ....
ஆரம்பிப்போம் பணிகளை ....
ஆயிரம் பணிவந்தாலும் ....
ஆர்வத்துடன் பணிசெய்வோம் ....!!!

ஆரம்பிக்கும் வாழ்க்கை ...
ஆலயத்துக்கு சமனாகட்டும்....
ஆண்டவன் வீட்டில் குடிகொள்ளடும் ....
ஆனந்தத்தால் பொங்கி வழியட்டும் ...
ஆருயிர் உறவுகளே வாழ்க வளமுடன் ......!!!

ஆத்திரமே பகையின் சூத்திரவாதி ....
ஆத்திரத்தை வென்றவன் ...
ஆண்டவனை வெல்கிறான் ....
ஆண்டாண்டுகாலம் நட்புடன் ....
ஆட்சி செய்கிறான் உலகை .....!!!

ஆதியும் அந்தமும் இல்லாத ....
ஆண்டவனை தினமும் தொழு ....
ஆயிரமளவு அதிஷ்டம் குவியும் ....
ஆருயிர் குடும்பத்துடன் ....
ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்

Share this post


Link to post
Share on other sites
On 15.4.2017 at 5:34 AM, கவிப்புயல் இனியவன் said:

அ ன்று சொன்னதை செய்ததை ....
அ ன்றே மறப்பவனே ....
அ தி உயர் மனிதன் ....
அ தையே நினைத்துகொண்டிருந்தால் ...
அ ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!

- கவிப்புயல் இனியவன் -

 

1 hour ago, கவிப்புயல் இனியவன் said:

ஆத்திரமே பகையின் சூத்திரவாதி ....
ஆத்திரத்தை வென்றவன் ...
ஆண்டவனை வெல்கிறான் ....
ஆண்டாண்டுகாலம் நட்புடன் ....
ஆட்சி செய்கிறான் உலகை .....!!!

- கவிப்புயல் இனியவன் -

தமிழ் அகர வரிசை கவிதைகள்...  நன்றாக உள்ளது கவிப்புயல் இனியவன். :)

1 person likes this

Share this post


Link to post
Share on other sites
On ‎15‎.‎04‎.‎2017 at 5:34 AM, கவிப்புயல் இனியவன் said:

அ ந்தி சாயும் நேரம் ....
அ ன்றைய நிகழ்சிகளை ...
அ சைபோட்டுபாருங்கள் ....
அ ருவருப்பான செயல் எது ...?
அ ரவணைப்பு செயல் எதுவென .....!

&
கவிப்புயல் இனியவன்

ஒவ்வொருவரும் மனப்பாடம் செய்து மாலையில் மறக்கக்கூடாத வரிகள். :unsure: :rolleyes:

2 people like this

Share this post


Link to post
Share on other sites

இனிய 
இனிமையான 
இன்பமான 
இல்லத்தில் 
இறையருள்மிக்க 
இல்லறவாழ்க்கை 
இன்றும் என்றும் 
இறையருளால் 
இடையூறுகள் நீங்கி 
இன்பமே 
இடைவிடாமல் கிடைக்க 
இந்தநாள் மட்டுமல்ல 
இதயத்துடிப்பு உள்ளவரை 
இன்பலோகத்தில் வாழ 
இந்த 
இனியவனில் 
இதயம் கனிந்த 
இனிய வணக்கம் 
இயன்றவரை அயலவரையும்
இன்பமாய் வைத்திருங்கள் 
இறைவன் விரும்புவதும் 
இவ்வுலகில் எல்லோரும் 
இன்பமாய் வாழவைக்கும் 
இயல்புடைய மனிதனை தான் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்

Share this post


Link to post
Share on other sites

ர விழிகளை திறந்து ....
சன் நினைவில் இருக்கும்
ரமான இனிய உள்ளங்களே ...
ரேழுலக இன்பம் பெற ...
சன் அடிபணிந்து வாழ்த்துகிறேன் ....!!!

கை கொண்ட இதயம் ...
சன் குடியிருக்கும் இதயம் ....
கையுடன் வாழ்பவர்கள் ....
ரேழு தலைமுறை வாழ்வர் ....
கை தலைமுறை காக்கும் ....!!!

ட்டி முனைபோல் பேசாதே ....
விரக்கமின்றி துன்பம் செய்யாதே ....
கையை விளம்பரமாக்காதே ...
ன செயல் எதையும் செய்யாதே ....
ன்ற தாய்க்கு இழுக்கி வைக்காதே ...!!!

ரமான பார்வையே இரக்கபார்வை....
ரமான செயலே உயர் சேவை ....
ரமான ஈரமான என்றால்....?
சனை இதயத்தில் நினைத்து ....
சனைபோல் வாழும் வாழ்கை ...!!!

&
அகராதி தமிழில் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, கவிப்புயல் இனியவன் said:

ர விழிகளை திறந்து ....
சன் நினைவில் இருக்கும்
ரமான இனிய உள்ளங்களே ...
ரேழுலக இன்பம் பெற ...
சன் அடிபணிந்து வாழ்த்துகிறேன் ....!!!

கை கொண்ட இதயம் ...
சன் குடியிருக்கும் இதயம் ....
கையுடன் வாழ்பவர்கள் ....
ரேழு தலைமுறை வாழ்வர் ....
கை தலைமுறை காக்கும் ....!!!

ட்டி முனைபோல் பேசாதே ....
விரக்கமின்றி துன்பம் செய்யாதே ....
கையை விளம்பரமாக்காதே ...
ன செயல் எதையும் செய்யாதே ....
ன்ற தாய்க்கு இழுக்கி வைக்காதே ...!!!

ரமான பார்வையே இரக்கபார்வை....
ரமான செயலே உயர் சேவை ....
ரமான ஈரமான என்றால்....?
சனை இதயத்தில் நினைத்து ....
சனைபோல் வாழும் வாழ்கை ...!!!

&
அகராதி தமிழில் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

வணக்கம்,

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 53 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து பச்சைப்புள்ளிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

Share this post


Link to post
Share on other sites

உள்ளம் தூய்மையாக இருப்பின்... 
உள்ளிருக்கும் மனது இறைவன்......!
உள்ளத்தூய்மை என்பது ....
உயிரினங்கள் அனைத்திலும் ....
உள்அன்பை செலுத்துவதாகும் ....!!!

உறவுகளே எனது இனிமையான ....
உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள் ....
உழைப்பை உயிராய் மதிப்போம் ....
உற்றார் உறவினரை மகிழ்விப்போம் .....
உற்சாகமாய் வாழ்ந்திடுவோம் .....!!!

உள்ளொன்று வைத்து புறம்பேசாதே.....
உள்ளவனுக்கு பகட்டுக்கு உதவிசெய்யாதே .....
உண்டு களித்தே உடலை நோயாக்காதே.....
உண்மை அன்பை உதறி விடாதே .....
உள்ளத்தை ஊனமாக்கிடாதே.....!!!

உள்ளதை கொண்டு இன்பமாய் வாழ்வோம் ....
உலகிற்கு ஏதேனும் செய்துவிட்டு இறப்போம் .....
உள்ளதில் ஓரளவேணும் ஈகை செய்வோம் ....
உள்வரவு எதிர்பார்க்காமல் உதவி செய்வோம் 
உயிர்பிரிந்தபின்னும் உலகோடு வாழ்வோம் ......!!!

&
அகராதி தமிழில் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
 

Share this post


Link to post
Share on other sites

ஊரோடு ஒற்றுமையாய் வாழ்...
ஊன் இல்லாதோருக்கு கொடுத்துதவு.....
ஊனம் என்பது உடலில் இல்லை .....
ஊத்தை கொண்ட உள்ளம் இருப்பதே ....
ஊர்போற்ற வாழ்ந்து காட்டு ....!!!

ஊரூராய் நல்லவை செயப்பழக்கு.....
ஊட்டி வளர்த்த உறவுகளை மறவாதே .....
ஊதாரியாய் செலவு செய்யாதே .....
ஊர்வனவற்றை சித்திரைவதை செய்யாதே ....
ஊகத்தில் பேசிப்பழகாதே ......!!!

ஊக்கத்துக்கு எப்போது ஊக்கம் கொடு ....
ஊதியத்தை இயன்றவரை பெற்றுவிடு ....
ஊழியம் செய்வதை உயர்வாய் நினை ....
ஊழி அழியும்வரை உயர்வாய் வாழ்வாய் ....
ஊர்ச்சிதம் ஆகும் உன் பிறப்பின் உன்னதம் ....!!!

ஊர் கண் விழிக்கமுன் துயில் எழு ....
ஊற்றுபோல் பெருக்கிவிடு அறிவை .....
ஊர் உலகம் தேடிவரும் உன்னடியில் ....
ஊன்றிவிடு உன் உழைப்பை உலகத்துக்கு ....
ஊன்று கோளாய் இரு இளையோருக்கு ....!!!

&
அகராதி தமிழில் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் 

Share this post


Link to post
Share on other sites

எழுந்திரு மனிதா ....
எழுச்சி மிகு வெற்றி காத்திருக்கிறது ....
என்றும் இனிமையாய் வாழ்வதற்கு .....
எழுந்திரு அதிகாலை - விரைந்திடு ....
எட்டு திசையும் பரப்பிடு பணியை ....!!!

எவன் பிறருக்காய் வாழ்கிறானோ .....
எவன் பிறர் துன்பம் துடைகிறானோ.....
எவனல்ல அவன் - இறைவன் .....!
எல்லோர் இதயத்திலும் இருக்கும் 
எல்லையற்றவன் அவன் ....!!!

எங்கே செல்கிறோம் சரியாக தீர்மானி ....
எப்போது செல்கிறோம் உறுதியாக முடிவெடு ...
எதற்கு செல்கிறோம் நிதானமாக இருந்திடு ....
எந்த தடைவரினும் அனைத்தையும் உடைத்தெறி .....
எல்லாம் சிறப்பாக நிச்சயம் அமைந்திடும் ....!!!

எதிரியென்று ஒருவனை நினைத்துவிடாதே ....
எடுப்பார் கைபிள்ளைபோல் வாழ்ந்துவிடாதே .....
எல்லாம் எனக்கே என்று ஆசைபடாதே .....
எடுத்த காரியத்தை இடையில் நிறுத்தி விடாதே .....
எல்லாம் வல்ல இறைவன் இருப்பதை மறந்துவிடாதே .......!!!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்

Share this post


Link to post
Share on other sites

ஏன் என்று கேள்வி கேள் ....
ஏளனமாக இருந்துவிடாதே ....
ஏராளமான பிரச்சனைக்கு காரணம் ....
ஏன் நமக்கு இந்த வில்லங்கம் என்று ....
ஏளனமாக இருந்தமையே .....!

ஏகாதிபத்தியம் பல தோன்றியதால் ....
ஏழைகளின் வாழ்க்கை இறங்கிசெல்ல....
ஏற்றமானவர் வாழ்கை ஏறிசெல்கிறது ....
ஏற்றத்தாழ்வை தோற்றுவித்தது ...
ஏகாதிபத்திய பொருளாதாரம் ......!

ஏணிபோல் படிப்படியாக வாழ்கையில் ....
ஏறிசென்று வாழ்க்கை உச்சத்தையடை.....
ஏகலைவன் போல் குருபக்தி கொண்டிரு ....
ஏகன் அடியே போற்றியேன்று சரணடை ...
ஏழேழு ஜென்மத்துக்கு இன்பமடைவாய் .....!

ஏர் பூட்டிய விவசாயியே ஏகன் ....
ஏடு தொடக்கிய ஆசானும்  ஏகன் .....
ஏமாற்றுபவனை காட்டிலும் ....
ஏமாறுபவனே புத்தி அற்றவன் .....
ஏமாறாதே அத்துடன் ஏமாற்றாதே .....!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன் 

Share this post


Link to post
Share on other sites

ஐம் பொறியை அடக்கி ....
ஐயங்களை தெளிவுபடுத்தி ....
ஐம்பூதத்தை வசப்படுத்தி .....
ஐந்து வகை நிலத்தை ஆழும் ...
ஐயன்- நீ - விழிப்போடு வாழ் மனிதா ....!!!

ஐயங்களை தூக்கி எறிந்து விடு ....
ஐக்கியத்தோடு வாழ்ந்து பழகு ....
ஐயக்காட்சிக்கு இடமளிக்காதே .....
ஐயமின்றிஇனிமையாய் பேசிப்பழகு .....
ஐயங்கரன் என்றும் துணையிருப்பான் ......!!!

ஐசுவரியத்தை  நேர்மையாய் உழை ....
ஐக்கிய உணர்வோடு எப்போது வாழ் .....
ஐயிரண்டு கைவிரலால் கடினமாய் போராடு ....
ஐயிரண்டு கால்விரலால் இலக்கில் பயணம் செய் .....
ஐம்முகன் ஆசி என்று உனக்கு இருக்கும் ....!!!

ஐயா என்று பணிபோடு முதியோரை அழை ....
ஐயர் (தேவர் ) ஆசீர்வாதம் உனக்கு வரும் ....!
ஐம்புல அறிவோடு அகிலத்தை நேசி .....
ஐவாய் (சிங்கம் ) போல் அரசனாய் வாழ்வாய் ...!
ஐயனே என் அன்பனே என்றும் இன்பமாய் இரு ...!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்  

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

ஒளி கொண்ட இதயங்களே .....
ஒன்றுபட்டு வாழ்வோம் வாருங்கள் ....
ஒற்றுமைதான் உலகத்தின் தேவை ....
ஒன்றே குலம் ஒருவனே தேவன் ......!

ஒடுக்கு முறைகள் நிலைப்பதில்லை .....
ஒன்று கூடியே துடைத்தெறிவோம்....
ஒற்றர் கூட்டம் ஒற்றுமையை கெடுக்கும் ....
ஒரு அணியில் வாழ்வோம் வாரீர் .....!

ஒழுக்கமாக வாழ்ந்தால் உலகை .....
ஒரு குடையின் கீழ் கொண்டு வரலாம் .....
ஒற்றுமையின்றியும் ஒழுகமின்றியும்.......
ஒற்றர்களின் நோக்கமே நிறைவேறும் .....!

ஒளிவட்டம் போல் இதயத்தை மாற்று .....
ஒளிவு மறைவின்றி பேசிப்பழகு .....
ஒளி கொண்ட அறிவை பெருக்கிடு .....
ஒடுக்கு முறைக்கு ஒடுக்கு முறைசெய்....!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்   

Share this post


Link to post
Share on other sites

ஓகோ என்று வாழ ஆசைப்படாதே .....
ஓர்மம் மட்டும்கொண்டும் வாழ்ந்திடாதே ....
ஓடம்போல் தத்தளிக்கும் முடிவெடுக்காதே .....
ஓடு ஓடு இலக்கு அடையும் வரை ஓடு .....!!!

ஓட்டுக்காக அரசியல் நடத்தாதீர் .....
ஓரங்கட்டி மக்களை ஒத்துக்காதீர் ....
ஓரம்போய் மக்களை விற்காதீர் .....
ஓலமிட்டு மக்களை மயக்காதீர் .....!!!

ஓவியம் போல் மனதை அழகாக்கு....
ஓசையின் சொற்களை இனிமையாக்கு ....
ஓலை போல் விழுந்தாலும் பயன் கொடு .....
ஓய்வெறாலும் அளவோடு பயன்படுத்து .......!!!

ஓர் அறிவு தாவரம் முதல் அன்பு செய் ....
ஓராயிரம் உதவிசெய். பெருமைகொள்ளாதே....
ஓதல் மூலம் உலகை விழிப்படைய செய் ...
ஓரினமே உண்டு அதுவே மனித இனம் ....!!!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்    

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now