Jump to content

சிறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருந்து கிராமத்தை மீட்கப் போராடும் முள்ளிக்குளம் மக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருந்து கிராமத்தை மீட்கப் போராடும் முள்ளிக்குளம் மக்கள்!

sritha 14 hours ago கட்டுரை 13 Views

 

mullikulam-puthinappalakai-1-300x200.jpgஎனது அப்பா, எனது அப்பாவின் அப்பா, அவரின் அப்பா என எமது தலைமுறையினர் முள்ளிக்குளம் கிராமத்திலேயே வாழ்ந்துள்ளனர்.  எனது பாட்டனாரின் காலத்திலேயே எமது குடும்பத்தினர் வணங்கும் தேவாலயம் அமைக்கப்பட்டது. எமது கிராமத்தின் ஊடாக நான்கு ஆறுகள் ஓடுகின்றன.இவற்றில் ஒரு ஆற்றை நாங்கள் குளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தினோம்.

கடலில் மீன்பிடிக்க முடியாத காலத்தில், இந்த  ஆறுகளிலேயே நாங்கள் மீன் பிடித்தோம். எமது கிராமத்தில் வயல், பசுக்கள், கோழிகள், எருதுகள் என எல்லா வளங்களும் நிறைந்து காணப்பட்டன. இதனால் எமக்கு குடிப்பதற்கோ அல்லது சாப்பிடுவதற்கோ பஞ்சமே இல்லை.

நாங்கள் பின்னேரங்களில் ஒன்றுகூடி நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துவோம். எமது கிராமத்தில் வாழ்ந்த அனைவரும் மிகவும் மகிழ்வுடனேயே வாழ்ந்தோம். எமக்கு அருகில் வாழ்ந்த முஸ்லீம் மக்களுடன் இணைந்து நாங்கள் மிகவும் அமைதியான வாழ்வை வாழ்ந்தோம்.

யுத்த காலத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டபோது, நிலைமை சீராகும் வரை நாங்கள் எமக்கருகில் வாழ்ந்த முஸ்லீம் மக்களின் வீடுகளில் அடைக்கலம் புகுவோம். நிலைமை சீராகிய பின்னர் மீண்டும் நாங்கள் எமது கிராமத்திற்குத் திரும்புவோம். மீண்டும் நாங்கள் அனைவரும் அமைதியாக வாழவேண்டும் என இறைவனை ஒவ்வொரு நாளும் பிரார்த்திப்பேன். நான் இந்தப் பூமியை விட்டுப் போகும் போதாவது நாங்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும்’ என முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 88 வயதான எம்.பிரான்சிஸ் வாஸ் தெரிவித்தார். இவர் 2007 தொடக்கம் இன்னமும் தனது சொந்த ஊருக்குச் செல்லவில்லை.

மீண்டும் மூன்று நாட்களில் கிராமத்திற்குத் திரும்பலாம் என செப்ரெம்பர் 08, 2007 அன்று சிறிலங்கா இராணுவத்தினரால் வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால் பத்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட, இந்தக் கிராமத்து மக்கள் தமது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பிச் செல்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த மக்கள் தமது வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்வதற்குக் கூடத் தமது சொந்தக் கிராமத்திற்குச் செல்ல முடியவில்லை. 2007ல் இந்த மக்கள் தமது சொந்தக் கிராமமான முள்ளிக்குளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், இங்கு வட- மேற்கு  மாகாணங்களுக்கான கடற்படை கட்டளைத் தலைமையகம் அமைக்கப்பட்டது. இந்த மக்கள் கடந்த பத்தாண்டாக தமது சொந்தக் கிராமத்திற்கு விடுமாறு கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். மகஜர்களைக் கையளித்தனர். பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொண்டனர். இவர்களின் இந்த முயற்சிகள் பொய்யான வாக்குறுதிகளால் இடைநிறுத்தப்பட்டன.

மறிச்சுக்கட்டி என்கின்ற கிராமத்துடன் இணைந்த முள்ளிக்குளம் கிராமமானது முஸ்லீம் மக்களுடன் அமைதியாக வாழ்ந்த வாழ்வை முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முதியவரான பிரான்சிஸ் வாஸ் நினைவுபடுத்தினார். பல்வேறு கடினமான தருணங்களில் முஸ்லீம், தமிழர் என எவ்வித பாகுபடுமின்றி இவ்விரு இனத்தவர்களும் எவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்தனர் என்பது இங்கு நினைவுகூரப்பட்டுள்ளது.

mullikulam-puthinappalakai (1)

இந்நிலையில் தமது வீடுகளுக்குத் தாம் திரும்பிச் செல்ல வேண்டும் எனக் கோரி அண்மையில் முள்ளிக்குளம் மக்களால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது மன்னார்-புத்தளம் வீதியில் அமைந்துள்ள முள்ளிக்குளம் கிராமத்திற்கு அருகிலுள்ள முஸ்லீம்  ஒருவரின் வீட்டிலேயே மேற்கொள்ளப்பட்டது.

நிலங்களை மீள ஒப்படைக்குமாறு கோரியும் காணாமற் போனவர்கள் தொடர்பில் உண்மை மற்றும் நீதி எட்டப்பட வேண்டும் எனக் கோரியும் வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான போராட்டங்கள் மூலம் முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது சொந்த ஊருக்குச் செல்லமுடியும் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.

கேப்பாப்பிலவு போன்ற இடங்களிலுள்ள நிலங்களைத் தம்மிடம் மீள ஒப்படைக்குமாறு கோரி பொதுமக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதன் பயனாக அவர்களது சொந்தக் கிராமம் கடந்த மாதம் அவர்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டதானது முள்ளிக்குளம் கிராம மக்களுக்கும் நம்பிக்கையை அளித்துள்ளது.

மலன்காடு என்கின்ற இடத்தில் முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 120 குடும்பங்கள் தற்காலிகமாக வாழ்வதுடன், இக்கிராமத்தைச் சேர்ந்த 150 குடும்பங்கள் காயக்குளியிலும் வாழ்வதுடன் கிட்டத்தட்ட 100 குடும்பங்கள் யுத்தத்தின் போது இந்தியாவிற்கும் தப்பிச் சென்றுள்ளனர். ஆனால் தமது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற ஆவலுடன் இந்த மக்கள் காத்திருக்கின்றனர்.

‘மலன்காடு மற்றும் காயக்குளியைச் சேர்ந்த எமது கிராமத்தைச் சேர்ந்த 50 வரையான கிராமத்தவர்கள் ஒன்று சேர்ந்து மார்ச் 25 காலை எட்டு மணி தொடக்கம் எமது போராட்டத்தை ஆரம்பித்தோம். எமது நிலங்களை எம்மிடம் மீள ஒப்படைக்குமாறு கோரியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ‘ஏன் இங்கு போராட்டம் செய்கிறீர்கள்?’ எனவும்    ‘மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யாமைக்கான காரணம் என்ன? நீங்கள் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்குத் தேவையான பேருந்து வசதியை நாங்கள் ஒழுங்குபடுத்தித் தருகிறோம். நாங்கள் உங்களுக்கு பல உதவிகளைச் செய்த போதிலும் நீங்கள் எம்மை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்’ எனவும் கடற்படையினர் எம்மிடம் தெரிவித்தனர்’ என முள்ளிக்குளம் கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.

mullikulam-puthinappalakai (3)

சிறிலங்கா கடற்படையின் பொறியியல் பாடசாலையாக மாறியுள்ள முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலை

கடற்படையினர் எமக்கு எவ்வித உதவியையும் செய்யத் தேவையில்லை, பதிலாக அவர்கள் எம்மிடம் எமது நிலங்களைத் திருப்பித் தந்தால் அதுவே போதும்’ என கிராம மக்கள் தெரிவித்தனர்.

‘நாங்கள் 2007ல் எமது சொந்தக் கிராமத்தை விட்டு வெளியேறிய போது, 100 வரையான வீடுகள் நல்ல நிலையிலும் 50 வரையான வீடுகள் கூரை வீடுகளாகவும் காணப்பட்டன. அத்துடன் தேவாலயம், கூட்டுறவுச் சங்கம், மூன்று பாடசாலைக் கட்டடங்கள், முன்பள்ளி, இரண்டு வைத்தியசாலைக் கட்டடங்கள், நூலகம், அஞ்சலகம், மீனவர் கூட்டுறவுச் சங்கக் கட்டடம், ஆசிரியர் விடுதி, கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம், ஆறு பொது மற்றும் நான்கு தனியார் கிணறுகள் மற்றும் ஒன்பது குளங்கள் என பல்வேறு வசதிகளுடன் எமது கிராமம் காணப்பட்டது’ என கிராமத்தவர்கள் நினைவுபடுத்தினர்.

தற்போது இக்கிராமத்தில் 27 வீடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஏனையவை கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஏனைய வீடுகள் அழிக்கப்பட்டு விட்டதாக கடற்படையினர் கூறுகினர். தற்போது இங்கு விவசாயம் செய்வதற்கான அனுமதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வீதி வழியாக தேவாலயத்தைச் சென்றடைவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நீர்தாங்கி அணைக்குச் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தாம் விரும்பும் போதெல்லாம் தேவாலயத்திற்குச் சென்று வணங்க முடியாத நிலையில் முதியோர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஞாயிறு பிரார்த்தனைக்குச் செல்வதற்கு கடற்படையினர் பேருந்து ஒழுங்குபடுத்தியுள்ளனர். இதில் மட்டுமே அங்கு செல்ல முடியும். வழமையாக மலன்காடு மற்றும் காயக்குளியிலிருந்து முள்ளிக்குளத்திற்கு குறுகிய வழியாக நடந்து செல்வதற்கு 50-100 மீற்றர் மட்டுமே எடுக்கும். ஆனால் தற்போது முள்ளிக்குளம் தேவாலயத்திற்குச் செல்வதற்கு 3 – 10 கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.

இதேபோன்று முள்ளிக்குளத்திலுள்ள பாடசாலைக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்களை கடற்படையினர் தமது பேருந்தில் ஏற்றிச் செல்கின்றனர். இங்கு தரம் ஒன்பது மட்டுமே கல்வி கற்கமுடியும் என்பதால் இதன் பின்னர் தொலைவிலுள்ள பாடசாலைக்கு மாணவர்கள் கற்கச் செல்வதுடன் விடுதிகளில் தங்கி கல்வி கற்கின்றனர்.

முள்ளிக்குளம் கிராமத்து மக்கள் அடிப்படையில் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலை  மேற்கொள்கின்றனர். ஆகவே இவர்கள் கடலுக்குச் செல்வதற்கான தூரமும் குறைவாகவே இருக்க வேண்டும். மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதிலும் பல தடைகள் காணப்படுகின்றன. 2007ல் முள்ளிக்குளத்தை விட்டு வெளியேறும் போது இந்த மக்கள் தம்மிடம் வைத்திருந்த 64 வரையான படகுகள், 90 தெப்பங்கள் மற்றும் 3 மீன் வலைகள் போன்றவற்றை அங்கேயே விட்டுச் சென்றனர்.

mullikulam-puthinappalakai (2)

‘நீங்கள் போராட்டத்தை நிறுத்தாவிட்டால், கடலில் நாங்கள் எமது பலம் என்ன என்பதை உங்களுக்குக் காண்பிப்போம்’ என கடற்படையினர் ஆர்ப்பாட்டத்தின் முதல் நாளன்று கிராம மக்களை அச்சுறுத்தினர். ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டு முதல் சில நாட்களாக கடற்படையினர் மற்றும் சிலாவத்துறையைச் சேர்ந்த காவற்துறையினர் எனப் பலரும் இந்த மக்களின் போராட்டத்தில் தலையீடு செய்தனர். போராட்டம் இரண்டாம் வாரத்தை எட்டிய போது, கடற்படையைச் சேர்ந்த பிராந்தியக் கட்டளைத் தளபதி மற்றும் முக்கிய அதிகாரிகள் இந்த மக்களிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன் தமது தலைமைப் பீடத்திற்கு அறிவிப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் இது தொடர்பில் கொழும்பு அமைதி காத்தது. தேவாலயத் தலைவர்கள் இது தொடர்பில் கொழும்புடன் தொடர்பு கொண்ட போதிலும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

சிறிலங்கா கடற்படையினர் மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும் இந்த நிலங்களுக்குப் பதிலாக வேறு நிலங்கள் வழங்குவதாக உத்தேசித்தால் இது தொடர்பில் மக்களின் விருப்பங்கள் என்ன என்பது கண்டறியப்பட வேண்டும் எனவும், மக்கள் பலவந்தமாகக் குடியேற்றப்படக் கூடாது எனவும் மனித உரிமை ஆணைக்கு தனது அறிக்கையில் தெரிவித்தது.

மார்ச் 23 அன்று மாவட்டச் செயலரும் அவருடைய பிரதிநிதிகளும் முள்ளிக்குளம் வாழ் மக்களைச் சந்திப்பதற்காகச் சென்றனர். ஆர்ப்பாட்டத்தின் மூலம் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது எனவும், மக்களின் கோரிக்கைகைள் அடங்கிய கடிதம் ஒன்றைத் தம்மிடம் தருமாறும் அதனை தமது மேலதிகாரிகளிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் மக்களைக் கேட்டுக் கொண்டனர். முள்ளிக்குளம் கிராமத்தின் பெரும்பாலான நிலங்கள் மக்களுக்கும் மன்னார் கத்தோலிக்க திருச்சபைக்கும் சொந்தமானதாகும். எஞ்சிய நிலங்கள் அரச காணிகளாகவும் உள்ளன.

இந்த மக்களுக்கு வேறு வீடுகள் வழங்கப்பட்ட போதிலும் இந்த மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன என மாவட்டச் செயலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வினவினார். தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதற்காகவே போராடுவதாகவும் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள வீடுகளை ஏற்றுக் கொள்வதிலும் இந்த மக்கள் தயக்கம் காண்பித்தனர். ‘நாங்கள் எமது சொந்த வீடுகளுக்குச் செல்ல வேண்டும்’ என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

‘எம்மிடம் அனைத்து வளங்களும் இருந்தன. தற்போது நாங்கள் காடுகளில் வாழ்கிறோம். இங்கு நாங்கள் எவ்வாறு வாழமுடியும்? அனைத்தையும் திரும்பப் பெறுவோம் என நான் நம்புகிறேன். எமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளாவது சொந்தக் கிராமத்தில் சந்தோசமாக வாழ வேண்டும்’ என்பதே எனது ஒரேயொரு ஆசை என முதியவரான பிரான்சிஸ் வாஸ் தெரிவித்தார்.

வழிமூலம்       – Ground views
ஆங்கிலத்தில்  – Marisa de Silva,  Nilshan Fonseka and Ruki Fernando
மொழியாக்கம் – நித்தியபாரதிhttp://www.kuriyeedu.com/?p=60305

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம்

“எனது தந்தை, எனது தந்தையின் தந்தை, எனது தந்தையின் பாட்டன் என எல்லோருமே இங்கு வாழ்ந்துள்ளார்கள். பரம்பரை பரம்பரையாக முள்ளிக்குளமே எங்கள் வதிவிடமாக இருந்துவந்துள்ளது. எங்கள் தேவாலயம், நான் பிறப்பதற்கு முன்னரே எனது முப்பாட்டன் காலத்தில் கட்டப்பட்டது. எங்கள் ஊரினூடாக 4 வாய்க்கால்கள் ஓடுகின்றன. குளிப்பதற்கு மட்டுமென்றே ஒரு ஆறும் இருந்தது. கடலிலே போய் மீன்பிடிக்கமுடியாத சந்தர்ப்பங்களில் வாய்க்கால்களில் மீன்பிடிப்போம். பயிர்ச்செய்கை, மாடு, கோழி, எருமை என அனைத்தும் அபரிமிதமாகவும், உண்பதற்கும் பருகுவதற்கும் போதுமானதாகவும் இருந்தது. மாலைவேளைகளில் ஒன்றுகூடி நடன, நாடக நிகழ்வுகள் ஏற்பாடுசெய்து அனைவரும் அகமகிழ்ந்தோம். எமது முஸ்லிம் சகோதரர்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததுடன், யுத்தகாலத்தில் தாக்குதல் தீவிரமடையும் போதெல்லாம் அவர்களுடனேயே தங்கியிருந்து, நிலைமை சுமூகமடைந்ததும் வீடு திரும்புவது வழக்கம். நிச்சயம் இந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு நல்லது நடக்கும் என உறுதியாக நம்புகிறேன். நாங்கள் எல்லோரும் ஒன்றாக சமாதானமாக வாழ்வோம் என ஒவ்வொரு நாளும் நான் பிரார்த்தனை செய்கிறேன். நான் இந்த மண்ணைவிட்டுப் போகுமுன்பாவது அது நடந்துவிடவேண்டும்”

2007ஆம் ஆண்டிலிருந்து வீடுதிரும்ப முடியாமல் இருக்கின்ற, முள்ளிக்குளத்தைச் சேர்ந்த 88 வயதான எம். பிரான்சிஸ் வாஸ் என்கிற முதியவர் தனது நினைவுகளை இவ்வாறு மீட்டினார்.

Village-Elder-M.-Francis-Vaz-e1493025117347-1024x764.jpg?resize=665%2C496 எம். பிரான்சிஸ் வாஸ்

வீடுதிரும்புவதற்கான தமது போராட்டத்தை மீண்டும் ஆரம்பம்

மூன்று நாட்களுக்குள் திருப்பி அழைக்கப்படுவார்கள் என்கிற வாக்குறுதியுடன் செப்டெம்பர் 8, 2007இல், இராணுவத்தினரால் மூர்க்கமான முறையில் முழுகிராமமும் வெளியேற்றப்பட்டது. பத்து வருடங்களுக்குப் பின்னரும்கூட முள்ளிக்குளம் மக்கள் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பி பாரம்பரிய தொழில்களில் ஈடுபடுவதற்கு, இன்னமும் அனுமதி வழங்கப்படாமல் இருக்கிறார்கள். 2007இல் முள்ளிக்குளத்திலிருந்து அவர்கள் அகற்றப்பட்டதிலிருந்து முழு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் வட மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகம் அங்கு நிறுவப்பட்டுள்ளது. பல ஆர்ப்பாட்டங்கள், மனுக்கள், உரையாடல்கள், போலி வாக்குறுதிகள்[ii] என ஒரு தசாப்தகாலமாக நீட்சிபெற்று வந்த போராட்டமானது, உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கின்ற பாதிக்கப்பட்ட ஏனைய மக்களின் செய்திகள் கொடுத்த உந்துதலினாலும், இனமத வேறுபாடின்றி பலர் கொடுத்த ஆதரவினாலும், தற்போது மீண்டும் இவ்வூர் மக்களை வீதிகளுக்குக் கொண்டுவந்திருக்கின்றது.

Appeal letter signed by 136 villagers from Mullikulam, to former President Rajapaksa in Sept. 2011 - 1
Appeal letter signed by 136 villagers from Mullikulam, to former President Rajapaksa in Sept. 2011 - 2

தங்களது சொந்த நிலத்தில் மீள்குடியேற்றுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு 2011 செப்டெம்பர் மாதம் அனுப்பப்பட்ட மனு.

Mullikulam villagers forced to set up in jungle - Malankaadu - June 2012 - pic via NAFSO 2
Mullikulam villagers forced to set up in jungle - Malankaadu - June 2012 - pic via NAFSO

வௌியேற்றப்பட்ட முள்ளிக்குளம் மக்கள் மலன்காட்டுப் பகுதியில் வசித்தபோது – 2012 ஜூன் (படம் – NAFSO)

முள்ளிக்குளத்தைச் சேர்ந்த இம்மக்கள், மன்னார் -புத்தளம் பிரதான வீதியிலிருந்து தமது மூதாதையரின் கிராமத்திற்குத் திரும்புகின்ற வளைவில் அமைந்துள்ள முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த, ஆதரவும் அனுதாபமும் மிக்க ஒருவரின் வீட்டுவளாகத்தினை தங்கள் அண்மைய ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு தெரிவுசெய்தமையிலிருந்து, அப்பிரதேச முதியவர் பிரான்ஸிஸ் வாஸ் கூறியபடி, கஷ்டப்படுகின்றவேளைகளில் ஊரையொட்டி அமைந்துள்ள மரிச்சுக்கட்டு பிரதேசவாழ் முஸ்லிம்களுடன் சமாதானமாக வாழ்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்துவந்ததாக அவர் மீட்டிய நினைவுகள் மீள்உறுதிசெய்யப்பட்டு உயிரூட்டப்பட்டிருக்கிறது.

அண்மைக்காலங்களில் வடக்கு – கிழக்கு முழுவதும் காணிகளை மீளக்கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உண்மையும் நீதியும் வேண்டியும் பரந்த அளவில் நடாத்தப்படுகின்ற தொடர் ஆர்ப்பாட்ட அலைகளின் தாக்கமானது, 2007 முதற்கொண்டு சட்டவிரோதமான முறையில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற தம் சொந்த கிராமங்களுக்குத் திரும்புவதற்கான முள்ளிக்குளம் வாசிகளின் போராட்டத்திற்கு ஒருவகையான புத்துயிரைக் கொடுத்திருக்கிறது. கடந்த மாதம் இடம்பெற்ற கூட்டமொன்றில் (மேரி மாதா சங்கம்) முள்ளிக்குளத்தைச் சேர்ந்த வயதானப் பெண்கள், நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற கேப்பாபுலவு மக்களின் காணிமீட்பு போராட்டத்தைப்பற்றி கலந்துரையாடி, தாமும் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக மீள்-போராட்டத்தை ஆரம்பிக்கவேண்டுமென்று தீர்மானித்திருந்தார்கள். அதன்பின்னர் அவர்கள் கிராமத்தில் உள்ள ஆண்களிடம் தங்கள் தீர்மானத்தைக் கூற அவர்களும் அதற்கு ஒத்துழைப்பதற்கு இணங்கியுள்ளனர்.

Appeal banner addressed to the President
Navy school bus pass protestors as they drop Mullikulam displaced children back to Malankaadu
Protest banners
Silavathurai Police OIC and Intelligence personnel watch on throughout our 2+ hour meeting with the villagers
Villagers prepare meals in makeshift kitchen

தற்போது சுமார் 120 குடும்பங்கள் மலன்காட்டிலும்[iii], 150 குடும்பங்கள் காயாக்குழியிலும் தற்காலிகமாக குடியேற்றப்பட்டு இருக்கின்றனர். அத்துடன், போர் மற்றும் இடப்பெயர்வின் நிமித்தம் இந்தியாவுக்குச் சென்றுள்ள சுமார் 100 குடும்பங்கள் காணிகள் மீட்கப்படும் பட்சத்தில் மீண்டும் நாடு திரும்புவதற்கு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

“வியாழக்கிழமை (மார்ச் 23) காலை 8 மணியளவில் நாம் (மலன்காடு மற்றும் காயக்குழி பிரதேசத்திலிருந்து சுமார் 50 கிராமத்தவர்கள்) எமது காணிமீட்புப் போராட்டத்தை ஆரம்பித்தோம். அப்போது கடற்படையினர் அங்கு வந்து “ஏன் இங்கு ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள், ஏன் மாவட்டச் செயலகத்துக்கு முன் செய்யவில்லை? அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு பேரூந்துகளைக்கூட வழங்குகிறோம். நாங்கள் உங்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருந்தும் நீங்கள் எங்களுக்கு எதிராக செயற்படுகிறீர்கள் என்று கேட்கிறார்கள்” என அந்த மக்கள் கூறினர். “அவர்கள் எங்கள் காணிகளை திருப்பித்தந்தால், அவர்கள் எங்களுக்கு உதவவேண்டிய அவசியமேயில்லையே” எனவும் கூறினர்.

முள்ளிக்குளத்திலிருந்து இடப்பெயர்வும் அதன்பின்னரான பிரச்சினைகளும்

“2007இல் நாங்கள் வெளியேறியபோது, கிட்டத்தட்ட 100 வீடுகள் நல்ல நிலையிலும் 50 மண்குடிசைகளும் காணப்பட்டன. அத்துடன், எங்கள் ஞாபகத்திற்கேற்ப இங்கு ஒரு கிறிஸ்தவ திருச்சபையும், கூட்டுறவுத்துறை நிலையமும், மூன்று பாடசாலைகளும், ஒரு முன்பள்ளியும், இரு மருத்துவமனைகளும், ஒரு நூலகமும், தபால் நிலையமும், மீனவர் கூட்டுறவுச்சங்கமும், ஆசிரியர் விடுதியும், மாவட்டசெயலாளர் கட்டடமும் ஆறு பொதுமக்களுக்கான மற்றும் நான்கு தனிநபர்களுக்குச் சொந்தமான கிணறுகளும் ஒன்பது நீர்த்தாங்கிகளும் இருந்தன” என இக்கிராமத்தவர்கள் நினைவுபடுத்திக்கொண்டனர். தற்போது அந்த நீர்த்தாங்கிகளையும் பொதுஇடங்களையும் பயன்படுத்துவதற்கு அவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதுடன், பயிர்ச்செய்கை நிலத்திற்கு வரையறுக்கப்பட்ட அனுமதியே இருக்கிறது.

150 வீடுகளில் 27 வீடுகளே தற்போது எஞ்சியிருப்பதுடன், அதில் கடற்படை அதிகாரிகள்[iv] குடியிருக்கின்றனர். மீதி வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக கிராமத்தவர்கள் கூறுகின்றார்கள். வேறொரு வழியினூடாகவே தேவாலயம் செல்லக்கூடியதாக இருப்பதுடன், வாய்க்கால் – வரப்பினூடான குறுக்குப்பாதை கடற்படையினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. விரும்பும்போதெல்லாம் தேவாலயம் சென்று பிரார்த்திப்பதற்கு பல முதியவர்கள் சிரமப்படுகிறார்கள், ஞாயிறு திருப்பலிப்பூசைக்கு சென்றுவருவதற்கு கடற்படையினரின் பேரூந்துசேவையில் தங்கியிருக்கவேண்டியிருக்கிறது. ஆலயத்திற்குச் செல்வதற்கு 50-100 மீற்றராக இருந்த நடைதூரம், தற்போது மலன்காட்டிலிருந்தும் காயற்குழியிலிருந்தும் 3 கி.மீ – 10 கி.மீ தூரமாக மாறியுள்ளது. சிறுவர்கள் பாடசாலைக்குச் சென்றுவருவதற்கு, கடற்படையினர் தினசரி பேரூந்து வசதி செய்துகொடுப்பதுடன், அப்பாடசாலையில் ஆண்டு 9 வரையிலேயே கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதற்குப் பின் அண்மையிலுள்ள ஏனைய பாடசாலைகளுக்குச்[v] சிறுவர்கள் தாமாகவே சென்றுவரவேண்டிய அல்லது தூரமாக இருந்தால் விடுதியில் தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

முள்ளிக்குளம் மக்கள், பிரதானமாக விவசாய மற்றும் மீனவ சமூகமாகவே இருப்பதால் கடலுக்கு அண்மித்திருப்பது, அவர்களுக்கு அத்தியாவசியமானது. முதலில் இறால் மற்றும் ஏனைய நன்னீர் மீன்பிடிப்பதற்கான 9 ‘பாடு’களுக்கு[vi](கரைவலை அனுமதி) அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும் தற்போது நான்கிற்கு[vii] மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஏனைய கரைவலைகள் கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இந்தக் கிராமத்தவர்கள் 2007இல் முள்ளிக்குளத்திலிருந்து அகற்றப்பட்டபோது பின்வருவன ஒவ்வொன்றிலும் எண்ணிக்கைப்படி 64 மீன்பிடிசாதனங்களை விட்டுவிட்டு சென்றிருக்கின்றனர் – நவீன படகுகள், மோட்டார்கள், வலைகள், கயிறுகள், வேறும் மீன்பிடி உபகரணங்கள், 90 தெப்பங்கள் மற்றும் 3 இழுவை-வலைகள்.[viii]

List of property left behind in 2007 as compiled by 61 villagers from Mullikulam (2012) - 1
List of property left behind in 2007 as compiled by 61 villagers from Mullikulam (2012) - 2

கண்காணிப்பும் அச்சுறுத்தலும்

“நீங்கள் இந்தப் போராட்டத்தை நிறுத்தாவிடில், நாங்கள் கடலில் எங்கள் அதிகாரத்தை உங்களுக்குக் காண்பிப்போம்” என்று ஆர்ப்பாட்டத்தின் முதல்நாளிலேயே கடற்படையினர் மக்களை மிரட்டியுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் மீதும் அவர்களை வெளிப்பகுதிகளில் இருந்து சந்திக்க வருபவர்களின் மீதும் கடற்படையினராலும் சிலாவத்துறை பொலிஸாரினாலும் (போக்குவரத்து பொலிஸ் உட்பட) பாரிய அளவிலான கண்காணிப்பும் அச்சுறுத்தலும்[ix] ஆரம்ப நாட்களில் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், 2ஆவது வார போராட்டங்களின் போது கடற்படை அதிகாரிகள், தங்கள் வீரியத்தை குறைத்துக்கொண்டதுடன், கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்புத்துறையின் எந்தத் தீர்மானத்திற்கும் ஏற்ப செயற்பட, தாம் தயாராக இருப்பதாக, இந்தப் பகுதிக்கான கடற்படைத் தளபதியும் ஏனைய அதிகாரிகளும், ஆர்ப்பாட்டக்காரருக்கும் தேவாலயத் தலைவர்களுக்கும் தெரிவித்தனர். ஆனாலும் கிட்டத்தட்ட இருவாரங்களாக தேவாலய தலைவர்களின் முயற்சிக்கும் அப்பால், இந்தவிடயத்தில் கொழும்பு மௌனமாகவே இருந்துவருகின்றது.

Navy takes pix of protestors, visitors and protest banners
Silavathurai Traffic Police Constable - W.M.Y.M. Warnasooriya (Serial No. 66405) takes pix of protestors and visitors

காணியின் சட்டரீதியான நிலையும் மாவட்ட செயலகத்தின் பதிலுரையும்

தனிநபர்களுக்குச் சொந்தமான காணிகளை, கடற்படையினர் தகாதமுறையில் ஆக்கிரமித்துள்ளனரென இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதுடன், வேறுகாணிகளை வழங்குவதற்கு உத்தேசித்திருக்கும் பட்சத்தில் மக்களின் பூரணசம்மதம் கருத்திற்கொள்ளப்படவேண்டுமெனவும், வேறு இடங்களில் குடியேறும்படி அவர்களை வற்புறுத்தக்கூடாதெனவும் சிபாரிசுசெய்துள்ளது.[x]

மாவட்டச் செயலாளரும் அவரது பிரதிநிதிகளும் மார்ச் 23ஆம் திகதியே மக்களைச் சந்தித்து, போராடுவதினால் பெரிதாக எதுவும் அடையமுடியாது எனவும் மக்களின் கோரிக்கைகளை ஒரு கடிதத்தில் வரைந்து தம்மிடம் கொடுக்கும்படியும், இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தாம் அதனை மேலதிகாரிகளிடம் கையளிப்பதாகவும் கூறியுள்ளனர். காணிகளின் பெரும்பான்மையான பகுதி தனிப்பட்ட நபர்களுக்கும், மன்னார் கத்தோலிக்க திருச்சபைக்குச் சொந்தமானது. நிலங்களின் ஏனைய பகுதி, காணிஅபிவிருத்தி கட்டளையின் பிரகாரம் வழங்கப்பட்ட அனுமதி மற்றும் மானியம் அடிப்படையிலானவையும் அரசாங்கம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமானவையும் ஆகும்.

Breakdown-of-Title-Lands-Mullikulam-HRCS

மாற்றுவீடுகள் கொடுக்கப்பட்ட பின்னரும் அவர்கள் ஏன் இன்னமும் போராடுகிறார்கள் என மாவட்ட செயலாளர் அவர்களிடம் வினவியுள்ளார். சொந்த நிலங்களைக்கோரி தாம் தொடர்ச்சியாகப் போராடிவந்ததாகவும், இடைக்காலத்தில் கொடுக்கப்பட்ட தற்காலிக வீடமைப்பை விருப்பமின்றியே ஏற்றுக்கொண்டதாகவும் கிராமத்தவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக குரலெழுப்பினர். “வீடு திரும்பவேண்டுமென்கிற நிலைப்பாட்டுடனேயே நாங்கள் எப்போதும் இருந்தோம்” என்றனர்.

“எம்மிடம் அனைத்தும் இருந்தது. இப்போதோ காட்டில் வாழ்கிறோம். இவ்வாறு எப்படி வாழ முடியும்? எல்லாவற்றையும் நாங்கள் திரும்பப் பெற்றுக்கொள்வோமென எனக்கு நம்பிக்கை இருக்கிறது. குறைந்தபட்சம் எங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமாவது நாங்கள் வளர்ந்த வீட்டைக் கண்டுகளிக்கவேண்டும்” என்பதே ஊர் முதியவர் பிரான்சிஸ் வாஸின் ஆசையாகும்.

Village Elder1
Village Elder2
Village Elder3
Village Elder4
Village Elder5
Village Elder6
Village Elder7
Village Elder8

மரிசா டி சில்வா, நில்ஷான் பொன்சேகா, ருகி பெர்னான்டோ

 Sky No Roof, Edited by Kusal Perera, Annexes – Letter by villagers of Mullikulam to the President dated 13th September, 2011 – https://drive.google.com/file/d/0BzO8SAlmDKanZmN0TXRRdjNyR1k/view

[ii] WATCHDOG, Sri Lanka Navy vs. the people of Mullikulam – http://groundviews.org/2013/01/24/sri-lanka-navy-vs-the-people-of-mullikulam/

[iii] Ruki Fernando, The struggle to go home in post war Sri Lanka: The story of Mullikulam – http://groundviews.org/2012/08/01/the-struggle-to-go-home-in-post-war-sri-lanka-the-story-of-mullikulam/

[iv] WATCHDOG, Mullikulam: The continuing occupation of a school by the Sri Lankan Navy – http://groundviews.org/2012/09/11/mullikulam-the-continuing-occupation-of-a-school-by-the-sri-lankan-navy/

[v] Schools in Nanattan, Mannar town, Kondachchi, Silavathurai, Murunkan and Kokkupadayan.

[vi] 1 Paadu = 450 meters.

[vii] WATCHDOG, Mullikulam: Restrictions on fishing, cultivation, access to the church and school continue – http://groundviews.org/2013/03/15/mullikulam-restrictions-on-fishing-cultivation-access-to-the-church-and-school-continue/

[viii] WATCHDOG, Mullikulam: Restrictions on fishing, cultivation, access to the church and school continue – http://groundviews.org/2013/03/15/mullikulam-restrictions-on-fishing-cultivation-access-to-the-church-and-school-continue/

[ix] Heavy surveillance by #Navy Intel & #Police at #Mullikulam protest today. OIC asked us who we were & why we had come – https://twitter.com/Mari_deSilva/status/845184613085462529 & https://twitter.com/Mari_deSilva/status/845187308412272643

[x] Sky No Roof, Edited by Kusal Perera, Private Land Occupied by the Security Forces – Mullikulam, study report by the National Protection and Durable Solutions for Internally Displaced Persons Project of the Human Rights Commission of Sri Lanka, June 2011, Pg. 5 – https://drive.google.com/file/d/0BzO8SAlmDKanZmN0TXRRdjNyR1k/view

http://maatram.org/?p=5867

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.