Jump to content

டோணியை பிடிக்காவிட்டால்... உங்களுக்கு மருத்துவர் தேவைப்படுகிறார் என அர்த்தம்... ரசிகர்கள் கலக்கல்


Recommended Posts

டோணியை பிடிக்காவிட்டால்... உங்களுக்கு மருத்துவர் தேவைப்படுகிறார் என அர்த்தம்... ரசிகர்கள் கலக்கல்

 டெல்லி: டோணி யின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ஹேஷ்டேக்கை உருவாக்கி ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே தோனியை அவமதிக்கும் நோக்கில் கருத்து பதிவிட்ட புனே அணி உரிமையாளரின் சகோதரர் ஹர்ஷ் கோயங்காவுக்கு தோனியின் மனைவி சாக்ஷி பதிலடி கொடுத்த நிலையில் தற்போது தோனி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்துள்ளனர்.

புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோணி அண்மையில் நீக்கப்பட்டார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸமித், அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், முதல் ஆட்டத்தில் புனே அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதைத்தொடர்ந்து புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா சகோதரர் ஹர்ஷ் கோயங்கா, டோணியைக் குறை கூறும் வகையில் ஸ்டீவன் ஸ்மித்தைப் புகழ்ந்து, ஒரு ட்விட் செய்திருந்தார். அதில், 'ஸ்டீவன் சிங்கம் என்று நிரூபித்துள்ளார். தோனியை மிஞ்சி விட்டார். ஸ்டீவனை கேப்டனாக்கியது நல்ல முடிவு' எனக் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் புனே அணி தோல்வியடைந்தபோது, புனே வீரர்களின் சராசரியை 'ஸ்கிரீன் ஷாட் ' எடுத்து, மற்றொரு ட்விட் செய்தார். ஸ்டீவனின் சராசரியாக இரு போட்டிகளில் 110, டோணி இரு போட்டிகளில் 17. ஹர்ஸ் கோயங்காவின் ட்விட்டுக்கு டோணி எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

ஆனால், சாக்‌ஷி கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில் டோணியை நீக்க வேண்டும் என காலையில் டிவிட்டரில் டிரெண்ட் செய்தனர் அவரின் ஹேட்டர்கள். இதைத்தொடர்ந்து டோணிக்கு நாங்கள் ஆதரவு என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

C9Xes-QUMAQJRu-.jpg

#WeStandByDhoni Love to be #msdian My fav captain forever@msdhoni

டாக்டரை பார்க்க வேண்டும்

எனது ஃபேவரைட் கேப்டன் டோணி என்றும் டோணியை பிடிக்காதவர்கள் டாக்டரை பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

லெஜன்ட் டோணிக்கு மரியாதை

குழந்தைகள் டோணி நீக்கப்பட்டார் என ட்ரென்ட் செய்வர்.. ஆண்கள் டோணிக்கு நாங்கள் ஆதரவு என ட்ரென்ட் செய்வர்... லெஜன்ட் டோணிக்கு மரியாதை என ட்ரென்ட் செய்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்..

 

 

#WeStandByDhoni For #MSDhoniIPL_MSDhoni.png, personal milestones have never been the priority But winning the laurels for his nation has always been one!

முன்னுரிமை அளித்ததில்லை

தோனியை பொறுத்தவரை தனிப்பட்ட மைல்கற்களுக்கு முன்னுரிமை அளித்ததில்லை... ஆனால் அவரது தேசத்தின் கவுரத்துக்காக எப்போதும் வென்றுள்ளார்..

 

நீங்கள் விலைமதிப்பற்றவர்

நீங்கள் விலைமதிப்பற்றவர் என்பதை அறியாதவர்கள் தான் உங்களை மதிக்காமல் இருப்பார்கள்..

 

டோணி மீண்டும் நிரூபிப்பார்

ஃபார்ம் என்பது தற்காலிகம்.. க்ளாஸ் என்பது நிரந்தரம்... டோணி மீண்டும் நிரூபிப்பார் என்கிறது இந்த டிவிட்...

 

டோணி நிறைவேற்றினார்..

இந்தியர்களின் கனவுகளை டோணி நிறைவேற்றினார்.. யாராலும் செய்ய முடியாததை அவர் செய்தார்...


Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2017-ms-dhoni-fans-trend-westandbydhoni-on-twitter-279827.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.