Jump to content

சம்பியன் கிண்ணத்துக்கான விஷேட தூதுவராக குமார் சங்கக்கார


Recommended Posts

சம்பியன் கிண்ணத்துக்கான விஷேட தூதுவராக குமார் சங்கக்கார

 
ICC Champions Trophy Ambassador
singer-league-2017-728.jpg

சர்வதேச கிரிக்கெட் வாரியமானது, தற்போதைய காலத்தில் கிரிக்கெட்டில் ஜாம்பவன்களாக காணப்பட்டிருந்த எட்டு முன்னாள் வீரர்களை இந்த வருட கோடை காலத்தில் ஆரம்பமாகவிருக்கும் சம்பியன் கிண்ணத்திற்கு விஷேட தூதுவர்களாக நியமனம் செய்துள்ளது.  

எதிர்வரும் ஜூன் மாதம்  1 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சின் முக்கிய மூன்று மைதானங்களில் நடைபெற இருக்கும் ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்திற்கான மாபெரும் மோதலிற்கு  இலங்கை சார்பாக குமார் சங்கக்காரவும், பாகிஸ்தான் சார்பாக சஹீட் அப்ரிடியும், பங்களாதேஷ் அணியின் சார்பாக ஹபிபுல் பஷாரும் தொடரை நடத்தும் நாடான இங்கிலாந்து சார்பாக இயன் பெல்லும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா சார்பாக முறையே ஷேன் போண்ட், மைக் ஹஸ்ஸி, ஹர்பஜன் சிங் ஆகியோரும் விஷேட தூதுவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான சம்பியன் கிண்ணத்தின் முதலாவது போட்டி நடைபெற சரியாக 50 தினங்களுக்கு முன்னர் முன்னணி வீரர்கள் அடங்கிய இந்த பெயர் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

இத்தொடரிற்கு விஷேட தூதுவர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் வீரர்கள் தம்மிடையே 1774 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருப்பதோடு, 48 சதங்களுடன் தம்மிடையே மொத்தமாக 51,906 ஓட்டங்களினையும் குவித்து 838 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டேவிட் றிச்சர்ட்சன் தூதுவர்கள் தொடர்பாக பேசும் போது,

சம்பியன் கிண்ணத்தொடர் ஆரம்பாக 50 நாட்களின் முன்னர் தலைசிறந்த வீரர்கள் குழாமொன்றினை சம்பியன் கிண்ணத்திற்கான விஷேட தூதுவர்களாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எமது இந்த நிகழ்ச்சித்திட்டம் மூலம் முன்னோடி வீரர்களான இவர்கள் இடையிலும் புதிய தலைமுறை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இடையில் இணைப்பு பாலம் ஒன்று உருவாகும் என நம்புகின்றோம். இன்னும் கிரிக்கெட்டினை மேலும் சிறந்ததாக மாற்றக்கூடிய வாய்ப்பும் உருவாகும்  என்றார்.

அத்துடன்,

தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்த குழாம், ஐ.சி.சி இன் உத்தியோகபூர்வ இணையதளம் ஊடாக சம்பியன் கிண்ணத்தில் நடைபெற இருக்கும் 15 போட்டிகள் பற்றிய தமது கருத்துக்களையும், போட்டிகள் பற்றிய தமது அனுபவ ரீதியிலான கண்ணோட்டங்களினையும் வழங்கும். இவை அனைத்தையும் நிச்சயமாக  நாம் விரும்பி வாசிப்போம் என்றும் றிச்சர்ட்சன் தெரிவித்திருந்தார்.  

சம்பியன் கிண்ணத் தொடரில், 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிகளில் பங்கேற்றிருக்கும் குமார் சங்கக்கார தனது கருத்தினை வெளியிட்டிருந்த போது,

இத்தொடரின் விஷேட தூதுவராக நியமிக்கப்பட்டிருப்பதையும், போட்டிகள் பற்றிய ஆய்வாளராய் செயற்படப்போவதையும் கெளரவமாகக் கருதுகின்றேன். அத்துடன் இந்த வாய்ப்பு எனக்கு கிட்டியமைக்காக சந்தோசமும் அடைகின்றேன். நான் பங்கேற்று ரசித்து விளையாடியிருந்த தொடரொன்றிற்காக நெருங்கி வேலை செய்வதிலும் மகிழ்ச்சி கொள்கின்றேன். அத்துடன் இத்தொடரிற்காக எனது பங்களிப்பினை சிறந்த முறையில் வழங்கவும் எதிர்பார்த்துள்ளேன்என்றார்.

மேலும்,இலங்கை இத்தொடரில்  எதிர்பார்ப்புக்களுடன் இருக்கும் இளம் அணி. இத்தொடரினை இதே நிலமைகளுடன் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து 2019இல் நடைபெற இருக்கும் ஐ.சி.சி உலகக் கிண்ணத்திற்காக சரியான வாய்ப்பாக எம் நாட்டு வீரர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதில் உறுதியோடு இருக்கின்றேன். “  

என்று குமார் சங்கக்கார சம்பியன் கிண்ணத்தில்  இலங்கை அணி பற்றிய தனது கருத்தினை  தெரிவித்திருந்தார்.

http://www.thepapare.com

Bild könnte enthalten: 1 Person, machen Sport, Baseball und Text

Bild könnte enthalten: 4 Personen, Personen, die lachen, Text

Link to comment
Share on other sites

ICC யின் தொலைக்காட்சி வர்ணனையாளராக குமார் சங்கக்கார

 
Kumar Sangakkara
singer-league-2017-728.jpg

எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளுக்கான கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பட்டியலை ICC வெளியிட்டுள்ளது.

அதேநேரம், நேரடி ஒளிபரப்பிற்கான வரைபு திட்டங்களை சர்வதேச கிரிக்கெட் சபை முதல் தடவையாக வெளியிட்டுள்ள நிலையில், வீரர்களை கண்காணிக்கும் புகைப்படக் கருவி (Camera) தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படவுள்ளது.

முன்னாள் அணித் தலைவர்களான, அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங், நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம், இலங்கை அணியை வழிநடத்தியிருந்த குமார் சங்கக்கார மற்றும் தென்னாபிரிக்காவின் கிரகம் ஸ்மித் ஆகியோர் முதல் தடவையாக ICC தொலைகாட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளர்களாக தோன்றவுள்ளனர்.  

ஏனைய பிரசித்தி பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சௌரவ் கங்குலி, ஷேன் வோர்ன், மைக்கல் ஸ்லேட்டர், நசார் ஹுசைன், மைக்கல் ஆர்த்தடன், ஷோன் பொல்லொக், சஞ்சய் மஞ்ஞேக்கர், இயன் பிஷொப்,  ரமிஸ் ராஜா, சைமன் டூல் மற்றும் அத்தர் அலி கான் ஆகியோரும் நேரடி வர்ணனை செய்யவுள்ளனர்.  

ரிக்கி பொண்டிங்:ஒரு கிரிக்கெட் வீரராக நான் எப்பொழுதும் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளை எதிர்பார்த்திருப்பேன். இரண்டு தடவைகள் கிண்ணத்தை கைப்பற்றியது என்னை சிலிர்ப்பூட்டுகின்றது. இம்முறை வர்ணனையாளர் குழுவுடன் இணைந்து வர்ணனையாளராக திறமைகளை வெளிப்படுத்தவுள்ளேன். இறுதிப் போட்டிக்கு பெட் கம்மிங்ஸ் மற்றும் ஜேசன் ரோய் ஆகியோருடன் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெறும் என்று எதிர்பார்கின்றேன். “  

பிரண்டன் மெக்கலம் : “ICC சம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் என்று சொல்லும் பொழுது பல பழைய இனிய நினைவுகள் மலர்கின்றன. அத்துடன், அனைத்து அணிகளும்,கிண்ணத்தை வெல்ல முயற்சிக்கும். இந்த 50 ஓவர் போட்டிகளில் முத்திரை பதிக்க சகல அணிகளும் ஆர்வத்துடன் விளையாடும். பெருமை மிக்க இந்த பெரும் நிகழ்வில் வர்ணனை செய்ய காத்திருக்கின்றேன். அத்துடன், பொண்டிங், கங்குலி மற்றும் ஸ்மித் போன்றவர்களுடன் வேலை செய்வது மிகவும் குதூகலமாக இருக்கப் போகின்றது. அத்துடன், கிரிக்கெட் ரசிகர்களுக்கு தனித்தன்மை மற்றும் விரிவான களநிலவரங்களை வழங்கவிருக்கின்றோம்

கிரகம் ஸ்மித் : “இவ்வருடத்துக்கான சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளுக்கு வர்ணனை செய்ய கேட்ட போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அத்துடன் அதனை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டவில்லை. இந்த மாபெரும் போட்டியில் எல்லா அணிகளுக்கும் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் உள்ளன . நிச்சியமாக  பல ஆச்சரியங்கள் மற்றும் புதுமைகள் காத்திருகின்றன. அதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளேன்

குமார் சங்கக்கார : “சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் முக்கியம் வாய்ந்த போட்டியாகும். நான் மிகவும் நேசித்த மற்றும் இந்த போட்டிகளில் நான் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றினேன். அத்துடன், கிடைத்த வெற்றிகளை கௌரவத்துடன் ருசித்தேன். இப்போது ஒரு வர்ணனையாளராக பங்குபற்றுகின்றேன். இந்த மாபெரும் போட்டியில் பங்குபற்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன். அத்துடன் சிறந்த வீரர்களுக்கு மத்தியில் அணிகளுக்கிடையே பலத்த போட்டி காணப்படுகின்றது. அதனால் நிறைய அணிகளுக்கு கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பு இருகின்றது. அதனால் மூன்று வாரத்துக்கான விறுவிறுப்பான போட்டிகளை கண்டுகளிக்கலாம் என்று உறுதியாகச் சொல்லலாம்.“

ICC தொலைக்காட்சியானது, தயாரிப்பு நிறுவனங்களான சன்செட் மற்றும் வைன் (Sunset + Vine) என்ற நிறுவனங்களின் உதவியுடனும் இலத்திரனியல் உபகரண உதவி நிறுவனமான NEP Broadcast Solutions நிறுவனத்தின் பங்களிப்புடன் நடைபெறவுள்ள அனைத்துப் போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது.ICC TV commentary

எட்டு அணிகள் பங்குபற்றும் இந்தத்  தொடரில் முதலாவது போட்டியாக சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து அணியுடன் பங்களாதேஷ் அணி ஜூன் மாதம் 1ஆம் திகதி ஓவல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றது.

இப்போட்டி அதி நவீன தொழிநுட்பத்துடன் நேரலையாக ரசிகர்களை சென்றடைய உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் 34 கெமராக்கள் பயன்படுத்தப்படவுள்ள நிலையில், பல புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய கருவிகளும் பயன்படுத்தப்படவுள்ளன.  

ஒவ்வொரு  போட்டியிலும் 6 வீரர்களுக்கான கண்காணிப்பு கெமெராக்கள் உபயோகப்படுத்தப்படவுள்ளன. அத்துடன், ஜூன் 18ஆம் திகதி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சிறப்பு ஒளிபரப்புக்காக ட்ரோன் (Drone) கெமராக்களும் பயன்படுத்தப்படவுள்ளன.

இவை தவிர ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இந்த கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பில், சில நுணுக்கமான தொழில்நுட்பம் பயன்படுத்தவுள்ள அதேவேளை, கிரபிக் உலகில் முன்னணி நிறுவனமான சிரோன் ஹீகோ (Chyron Hego)  நிறுவனத்தின் உதவியுடன் வீரர்களின் புள்ளிவிபரவியல் மற்றும் கிரிக்கெட் புள்ளிவிபரவியல் ஆய்வு போன்றன துல்லியமாக வழங்கப்படவுள்ளன.

போட்டிகளின் போது நேரடி ஒளிபரப்பில் முக்கியமான புள்ளி விபரங்கள் பற்றிய விடயங்களை விளையாட்டு கிரபிக் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நிறுவனமான Alston Elliott என்ற நிறுவனம் வழங்கவுள்ளதோடு,  அப்புள்ளி விபரம் DixonBaxi என்ற நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட புதிய வகையில் உருவாக்கப்பட்ட கிரபிக் வேலைப்பாடுகளுடன் கண்ணைக்கவரும் வகையில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

போட்டி ஆரம்பிபதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக நாணய சுழற்சி மற்றும் துடுப்பாட்ட களத்தின் நிலவரம் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட புள்ளி விபரங்களும் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன.   

அத்துடன், இன்னிங்ஸ் இடைவேளையின்போது கிரிக்கெட் ரசிகர்களை கவரும் வகையில் போட்டியின் முக்கிய விடயங்கள் குறித்து மீள்பார்வை செய்யப்படும். அத்துடன், வெற்றி இலக்கு குறித்து முன்னோட்டம், பழைய சாதனைகள் என்பன ICC சம்பியன்ஸ் கிண்ண முன்னாள் நட்சத்திர வீரர்களினால் ஆய்வு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

அத்துடன் ICC தொலைக்காட்சியானது போட்டி குறித்த விபரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை, உத்தியோகபூர்வ ஒளிபரப்பு மற்றும் உத்தியோகபூர்வ ஊடக பங்குதாரர்களுக்கும் ICC இன் விபரங்கள் பகிர்ந்தளிக்கும் சேவையினூடாக வழங்கப்படவுள்ளது. இந்த உள்ளடக்க கோவையில் வீரர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் அணிகளை பற்றிய விரிவான செய்திகளும் அடங்கும்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.