Jump to content

சினிமாலஜி


Recommended Posts

புதிய பகுதி: சினிமாலஜி 01 - வேலு நாயக்கரின் தமிழ்ப் பற்று!

 

 
 
 
maniratnam_3154170f.jpg
 
 
 

(முன்னறிவிப்பு: இந்தத் தொடரில் வரும் சம்பவங்களும் உரையாடல்களும் முழுக்க முழுக்க கற்பனையே!)


சினிமாலஜி - இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இம்முறை சினிமா வகுப்பு எடுக்கச் சிறப்பு அழைப்பாளராக வருகிறார் இயக்குநர் மணிரத்னம்.

கல்லூரிக்குள் பரபரப்பாக நுழைந்த பார்த்தாவை மடக்கிய விரைவுரையாளர் மேகநாதன், “அப்படி என்ன அவசரம்?” என்றார். “இன்னிக்கு சினிமாலஜில மணி சார்” என்றபடியே பறந்தான் பார்த்தா. கடைசி இருக்கைக்குச் சென்றவன், செல்பேசியை எடுத்து, “மணி சாருடன் இன்று” என்று ஃபேஸ்புக்கில் நிலைத்தகவல் இட்டு அமர்ந்தான். வகுப்பறையில் நிசப்தம். மணி ரத்னம் உள்ளே நுழையவும் மாணவர்கள் எழுந்து நிற்க முற்படவும் மிகச் சரியாக இருந்தது. எல்லோரையும் உட்காரும்படி சைகையில் சொன்னார்.

“வணக்கம். உங்களை மீட் பண்றதுல சந்தோஷம்” என்று சன்னமாகப் பேசினார்.

“இந்த செஷனை ஒரு டிக்ஸஷன் மாதிரி வச்சிப்போம்” என்றுதும் 33 வினாடிகள் அமைதி நிலவியது.

ராஜேஷ் முதல் கேள்வி தொடுத்தான்.

“ஒரு சினிமாவோட நோக்கம் 'மெசேஜ்' சொல்றதா? மணி சார் படம்னாலே ஒரு மெசேஜ் இருக்கும்னு சொல்றது உண்டே?” “நோ நோ...” எனச் சற்றே பதற்றம் அடைந்தவர், “ப்ரீச் பண்றதுக்கு படம் எடுக்கக் கூடாது. அதை நான் பண்ணினதே இல்லை. என்னை பாதிச்ச விஷயங்களை எடுத்துக்குறேன். அது மூலமா எனக்கு ஏற்பட்ட எமோஷன்ஸை சினிமாவா மக்கள்கிட்ட ஷேர் பண்றேன். இது வந்து, நம் உணர்வுகளைப் பல வடிவங்களில் ஒண்ணு சேர்த்து பகிர்ந்துக்குற கலைதான் சினிமா. ஒரு கதையை எடுத்துக்கிட்டு, அதுல உருவாக்குற கதாபாத்திரங்கள் மூலமாக நாம விரும்புறதை சொல்றதுதான் நல்ல சினிமாவா இருக்கும்னு நம்புறேன்.”

அப்போது குறுக்கிட்ட கவிதா, “ரோஜா படத்துல தீவிரவாதம் வேண்டாம்னு மெசேஜ் சொன்ன மாதிரி இருந்துச்சு. பம்பாய்ல மதவாதம் கூடாதுன்னு பாடம் நடத்தின மாதிரியும் இருந்துச்சு. ஆய்த எழுத்து இளைஞர்கள் அரசியலுக்கு வரணும்னு சொன்ன மாதிரி இருந்துச்சு. ஆனா, இப்பல்லாம் அப்படித் தோணவே இல்லை சார். உதாரணமா, 'ஓ காதல் கண்மணி'யில எது சரி, எது தப்புன்னு சொல்லாம பார்வையாளர்களே தீர்மானிச்சுக்கிற மாதிரி இருந்துச்சு!”

கவிதாவை உற்று நோக்குகிறார்.

“ஓ காதல் கண்மணியில் இளம் தலைமுறை தாட் ப்ராசஸையும், மூத்த தலைமுறை டிரெடிஷனையும் காட்டினேன். ரெண்டு தரப்பையும் சொல்றது மூலமா எது பெட்டர்னு பாக்கறவங்க முடிவு பண்ணட்டும்ன்றதுதான் மோட்டிவ். இளைஞர்கள் மனநிலையை ரிஃப்ளெக்ட் பண்றதுலதான் முழு கவனமும் இருந்துச்சு” என்று மணிரத்னம் சொல்லி முடிப்பதற்குள் மூர்த்தி கேட்டான்:

“உங்க கிட்ட வேற லெவல்ல படங்கள் எதிர்பார்த்துட்டு இருக்கோம். ஆனா, இன்னமும் காதலை விட்டுட்டு வெளியே வர மாட்டேன்னா எப்படி சார்?”

சட்டென எழுந்தான் ரகு. “ஏன் கூடாது? முப்பது வருஷமா மூணு தலைமுறை இளைஞர்களோட பல்ஸை கரெக்ட்டா பிடிச்சி வெச்சிக்குறது சும்மா இல்லை. எங்க அப்பா மெளன ராகம் பார்த்துட்டு ரொமான்டிக்கா திரிஞ்சாரு; என் அண்ணன் அலைபாயுதே ரேஞ்சுல கல்யாணம் பண்ணிகிட்டான். இதோ நான் ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடைன்னு என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன். தமிழ் சினிமாவுல வேற யாரால முடிஞ்சிருக்கு?” என்று பொங்கினான்.

“கடல் வெறும் காதல் படம் இல்லை. அது, நம்ம சமூகத்துல இருக்குற கடவுள்களுக்கும் சாத்தான்களுக்கும் இடையிலான போர். அதுல நிறைய குறியீடுகள் இருக்கு... இதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியாதா?” என்றான் பிரேம்.

“கூல். இதுல ஜஸ்டிஃபை பண்ண எதுவுமே இல்லை. ஒரு சுதந்திரமான படைப்பாளியா சினிமா எடுக்குறேன். அதைப் பார்க்குற மக்கள் வெவ்வேறு விதமா எப்படி வேணுன்னாலும் அணுகட்டும்” என்று சூட்டைத் தணித்தார் மணிரத்னம். விவாதப் பொருளை மாற்ற முற்பட்ட கவிதா, “நம்ம சினிமாவுல பெண்களுக்கு உரிய முக்கியத்துவமே கொடுக்குறது இல்லை. உங்கள் படங்களில் சரியான அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுறதைப் பார்க்க முடியுது. ஒரு படம் எடுக்கும்போது, அதுல ஜெண்டர் பேலன்ஸ் எப்படி எல்லாம் இருக்கணும்?” என்று கேட்டாள்.

“சிம்பிள். மக்கள்தொகையில் பாதிப் பேரு பெண்கள்தான். நாயகன் கதாபாத்திரத்துல கிளாரிட்டி இருக்கணும்னா, நாயகி கதாபாத்திரத்துலயும் தெளிவு இருக்கணும். நான் பார்க்குற பெண்கள்ல பலரோட இன்ஸ்பிரேஷன்ஸ்ல கதாபாத்திரங்களை உருவாக்குறேன். சினிமா ரியலிஸ்டிக்கா வர்றதுக்கு இப்படித்தான் பண்ணணும்னு தோணுது. பாலச்சந்தர் என்னைவிட பெண்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்திருப்பாரு.”

அப்போது, காரியத்திலேயே கண்ணாக இருக்கும் ஜிப்ஸி கேட்டான்: “ஒரு திரைப் படைப்பாளிக்கு என்னென்ன தகுதிகள் வேணும்? அதை எப்படி வளர்த்துக்கணும்?”

சீரியஸ் மோடுக்குத் திரும்பிய மணிரத்னம் விரிவாகவும் நிதானமாகவும் பேசினார்.

“சினிமா படைப்பாளிக்கு எந்த குவாலிஃபிகேஷனும் தேவை இல்லை. ஆனா, ஃபிலிம் ஷுட் பி குவாலிஃபைடு. நீங்க என்ன பண்ணீங்க, ஒரு படத்தை எப்படிப் பண்றீங்கன்றது முக்கியமில்லை. ஒரு படத்தை எடுத்து முடிச்சுட்டுப் பார்க்கும்போது அதுல ஒரு முழுமை இருக்கணும். அதான் முக்கியம். உங்களை ரொம்ப பாதிச்ச விஷயத்தை கதையா டெவலப் பண்ணலாம். அதைத் திரைக்கதையா மாத்தணும். உயிர் கொடுக்கணும். அதான் சினிமா. இது பெரிய டீம் ஒர்க்தான். அதுக்கு வேவ்லெங்த் செட் ஆகக்கூடிய டீம் அமையணும்.

இங்க சினிமா எடுக்குறது தொழில்தான். நாம கமர்ஷியல் படம்தான் பண்றோம். அதுக்குள்ள கலைத்தன்மை புகுத்த முயற்சி பண்ணனும். ஒவ்வொரு காட்சிகளையும் ரியலிஸ்டிக்கா கொண்டுவரணும். சினிமா மேல காதல் வரணும். நாம யாரைப் பத்தி கதை சொல்லப் போறோமே அவங்களோட வாழ்க்கையை கவனிக்கணும். சொல்லப்போனா ரிஃப்ளக்‌ஷன்ஸ் ஆஃப் எவ்ரிதிங்தான் சினிமா. சினிமாவுல எதைப் பண்ணனும், எதைப் பண்ணக் கூடாதுன்ற தெளிவு வேணும்…”

மணி ரத்னம் தன் அனுபவத்தை அடுக்கிக்கொண்டிருக்க, அதுவரை “மணி சார் க்ளாஸை என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன். ஃபீலிங் பிளஸ்டு” என்று தான் இட்ட நிலைத்தகவலுக்கு விருப்பமிட்டவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த பார்த்தா எழுந்து நின்றபோது சக மாணவர்களுக்கு ஆர்வம் தொற்றியது.

“உங்களோட முக்கியமான படம் நாயகன். அதுல உங்களோட தமிழ்ப் பற்றை என்னால புரிஞ்சிக்க முடிஞ்சுது சார்!” மணிரத்னம் அமைதியாக இருந்தார். பார்த்தாவே தொடர்ந்தான்.

“சின்ன வயசுல இருந்து தாத்தா ஆகுற வரைக்கும் வேலு நாயக்கர் மும்பைல இருந்தாலும், அவருக்கு ஒரு வார்த்தைகூட இந்தி கத்துக்கலைன்ற விஷயம்தான் தமிழ்ப் பற்றைக் காட்டுச்சு.”

மெல்லிதாகச் சிரித்தார் மணிரத்னம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/புதிய-பகுதி-சினிமாலஜி-01-வேலு-நாயக்கரின்-தமிழ்ப்-பற்று/article9638092.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சினிமாலஜி 02 - சரணாகதி ஆவதுதான் பெண்களின் விதியா?

 

 
maniratnam_3156284f.jpg
 
 
 

(முன்னறிவிப்பு: இந்தத் தொடரில் வரும் சம்பவங்களும் உரையாடல்களும் முழுக்க முழுக்க கற்பனையே!)

மாணவர்களின் பக்கம் வந்து அமர்ந்தார் மணி ரத்னம். ‘ராவணன்' முதல் ‘காற்று வெளியிடை' வரை சமீபத்திய வர்த்தகப் பின்னடைவுகளுக்குத் திரைக்கதையில் அவர் சொதப்பியதே காரணம் என நினைத்த பிரேம் எழுந்தான்.

“சார், ஹாலிவுட்ல பெரும்பாலும் ஒரு இயக்குநர் இயக்கம் மட்டும் பார்த்துக்குறார். இங்கேதான் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே ஒருத்தரே செய்றார். உங்க கிட்ட ஒரு நல்ல ஸ்கிரிப்ட் அனுப்பினா, அதை இயக்குவீங்களா?”

“ம்ம்ம்.... (உற்சாகமாக). எழுதுவது கஷ்டமான விஷயம். ஆனா, அந்த ஸ்கிரிப்ட் எனக்கு ஈடுபாட்டைத் தரணும். அப்படி இருந்தா, நீங்க ஸ்கிரிப்ட்டை எனக்கு நேராவே வந்து தரலாம்...”

“உங்க படக் காட்சிகளைப் பார்த்தவுடனே இது மணி ரத்னம் படம்னு தெரிஞ்சிடுதே... நீங்க அழகுணர்ச்சியோட வைக்கிற வழக்கமான ஃப்ரேம்தான் க்ளிஷே ஆகிடுதோ?” என்றான் ரகு.

“சினிமாவுக்கு ஃப்ரேம் ரொம்ப முக்கியம். அது கதையையும் காட்சியையும் சொல்றதுக்கான கருவிகளில் ஒண்ணு. நான் வளர்ந்தபோது எனக்குப் பிடிச்ச ‘சிட்டிசன் கேன்' மாதிரியான படங்கள், குரோசோவா படங்கள் எல்லாமே என் மனசுல பதிஞ்சது. என் முதல் படத்தோட கேமராமேன் பாலு மகேந்திரா. அவர்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன். நாம பார்க்கும் படங்களில் ஒரு ஃப்ரேம் ரொம்ப பாதிச்சா, அது நம்ம மனசுக்குள்ள இருக்கும். அதையெல்லாம் ரசிக்க ஆரம்பிச்சுதான் நம்ம டேஸ்டை டெவலப் பண்ணிக்கிறோம்” என்றதும், “ஓஹ்ஹ்... அதான் அகிரா குரோசாவா வைத்த ஃப்ரேம்களின் பாதிப்பில் இருந்து இன்று வரை இவர் மீளவில்லையோ?!” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான் பார்த்தா.

“சரி சார். ஒரு கதைக்கான கருவை எங்கிருந்து பிடிக்கிறது?” - ஜிப்ஸி

“என்னை ஏதோ ஒரு விஷயம் பாதிக்குது. அது அரசியலா இருக்கலாம். உணர்வுபூர்வமான சமூகப் பிரச்சினையா இருக்கலாம். அதுபத்தி உடனே கருத்து சொல்றதைவிட, முழுசா புரிஞ்சுட்டு, மனசுக்குள்ளயே ரொம்ப நாள் டிராவல் பண்ணிட்டு, தேவைப்படுற இடத்துல ஒரு சினிமாவுக்குள்ள அதைக் கொண்டுவருவேன். இலங்கைத் தமிழர் பிரச்சினை எப்பவோ ஆரம்பிச்சுது. ஆனா, அதை ஒரு கதைக்களமா நான் ரொம்ப லேட்டாதான் எடுத்துக்கிட்டேன். ஒரு சின்னக் குழந்தைக்கும் பயலாஜிக்கல் அம்மாவுக்கும் இடையிலான உறவு சம்பந்தமா ‘டைம்' பத்திரிகையில் ஒரு செய்திக் கட்டுரை வந்தது. அதுல இருந்த நேர்மையான உணர்வுகளை எடுத்து, இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பின்புலமா வெச்சு ‘கன்னத்தில் முத்தமிட்டால்' திரைக்கதையை அமைச்சேன்.”

“ஆனா, உங்க படத்துல வர்ற கதாபாத்திரங்கள் எல்லாமே எலைட்டாவே இருக்காங்களே. விளிம்பு நிலை...?” என்று கவிதா கேள்வியை முடிப்பதற்குள் மீண்டும் முகம் மாறினார் மணி ரத்னம்.

அதை கவனித்த பிரேம், “பகல் நிலவு, நாயகன், அஞ்சலி, தளபதி, திருடா திருடா, ஆய்த எழுத்துல வர்ற மாதவன் - மீரா ஜாஸ்மின் போர்ஷன், கடல்... இதுல வர்ற முக்கியக் கதாபாத்திரங்கள் எல்லாரும் எலைட்டா?” என பதில் கேள்வியை முன்வைத்தான்.

சற்றே நிதானம் அடைந்த மணி ரத்னம், “நீங்க எலைட்னு எதைச் சொல்றீங்கன்னு சரியா தெரியல. நீங்க சொல்ற மாதிரி மனிதர்கள் பத்தி பாலா போன்ற இயக்குநர்கள் ரொம்ப அழகாவே பண்றாங்களே. எல்லா விதமான மக்களோட உணர்வுகளையும் சினிமா பிரதிபலிக்கணும். ஒரு மகாராஜாவைப் பற்றி கதை இருந்தாலும், அதுக்குள்ள உண்மை இருக்கணும். மகாராஜாவைப் பத்தி கதை எடுக்காதீங்கன்னு சொல்லக் கூடாது. எந்த ஒரு படைப்பாளியையும் அவரோட பின்னணியை வெச்சு மதிப்பிடுறதுல எனக்கு உடன்பாடு இல்லை. படைப்பாளி, படைப்பு ரெண்டுமே வேற வேற” என்றபோது அவரிடம் ஒருவித அலுப்பு தெரிந்தது.

“ஒரு படம் எடுக்கும்போது, இந்தத் தவறுகள் எல்லாம் பண்ணக் கூடாதுன்னு உங்களோட அனுபவத்தை வெச்சு சொல்ல முடியுமா?” - இது பிரேம்.

“நிச்சயமா. நாம நிறைய சோதனை முயற்சி செய்றோம். அதைச் செய்யும்போதே தவறுகள் நமக்குத் தெரியவரும். ஆனா, கால் வைச்சுட்டதால பின்வாங்க முடியாது. ‘ராவணன்' நல்ல உதாரணம். இரண்டு மொழிகளில் எடுக்கும்போதே நேட்டிவிட்டி பாதிக்கப்பட்டுச்சு. அப்படி இருந்தும் இயன்ற வரை நம்பகத்தன்மையோட கொடுக்க முயற்சி பண்ணினோம். சினிமாவுல மிகைப்படுத்துறது இருக்கலாம். இருக்குறதை இருக்கறபடியே காட்ட இது ஒண்ணும் டாக்குமென்ட்ரி இல்லை.”

“காற்று வெளியிடைக்கு வருவோம். பலருக்கும் நெருக்கமாவே இல்லையே. எனக்கும் அப்படித்தான் தோணுச்சு” என்று கொளுத்திப் போட்டான் ராஜேஷ்.

“ஸீ... இது உறவுக் கதை. காஷ்மீரும் காலகட்டமும் களம், பின்னணி மட்டும்தான். ஃபைட்டர் பைலட், டாக்டர்ன்றது அவங்க ரெண்டு பேரு கதாபாத்திரங்களை வரையறுக்குற விஷயம்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டதை கவிதா ஏற்கவில்லை.

“லீலாவின் தன்மானத்தை வி.சி. காயப்படுத்திட்டே வர்றான். ஆனா, உறுதியா எதிர்வினையாற்றாமல் இறுதி வரை சரணாகதி ஆவதுதான் பெண்களோட விதியா?” - ஆம், இது கவிதாதான்.

இதைக் கேட்டுப் படபடப்புடன் பேசத் தொடங்கிய ரகு, “எனக்கு இது அற்புதமான படம். அவ்வளவு ஆழமாக ஒரு தீர்க்கமான காதலை சமீபத்துல எந்தப் படத்துலயும் பார்க்கலை. ஆண்களிடம் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம், கயமை, கர்வம், சுயநலம் எல்லாத்தையும் பிரதிபலிக்கிற வி.சி., தன்னிடம் லீலா காட்டிய பேரன்புல எல்லா எதிர்மறை மனோபாவத்தையும் துறந்துட்டு சரணாகதி ஆகிறான்...” என்று இழுக்கும்போதே மணி ரத்னம் இடைமறித்தார்.

“ஒரு சினிமாவைத் தங்களோட பார்வைக்கு ஏற்ற மாதிரி எப்படி வேணுன்னாலும் அணுகிக்கலாம். உங்களை மாதிரி ஆரோக்கியமா விவாதிக்கலாம். ஒரு படத்தை எடுத்தவனே இதுல நான் இதைத்தான் சொன்னேன்னு சொன்னா, அப்புறம் அதைப் பத்தி பேச ஒண்ணுமே இருக்காது.”

“அதெல்லாம் ஓகே சார்... நம்பகத்தன்மை பத்தி சொன்னீங்க. காற்று இடைவெளியில் பாகிஸ்தான் ஜெயில்ல இருந்து அவ்ளோ ஈஸியா கிளம்பி வர்ற மாதிரி ஃபீல் இருந்துச்சே?” என்று சன்னமாகக் கேட்டான் பார்த்தா.

சளைக்காத மணி ரத்னம், “அதுக்குப் பின்னால ஒரு உண்மைக் கதை இருக்கு. பாகிஸ்தானில் போர்க் கைதியாக இருந்த திலீப் பாரூல்கர் 1972-ம் ஆண்டு மல்விந்தர் சிங் கிரேவால், ஹரிஷ் சின்ஜி ஆகிய சக கைதிகளுடன் ராவல்பிண்டி சிறையிலிருந்து தப்பித்தார். அதை 'Four Miles to Freedom' என்ற புத்தகம் முழுசா விவரிக்கும்” என்று பின்னணி உண்மைக் கதை குறித்து விரிவாக கோனார் உரையாற்றியபோது பார்த்தா முனகியது:

அப்படின்னா, ‘இந்தப் படத்தில் வரும் கதை, கதாபாத்திரங்கள் உண்மையிலேயே இருந்திருந்தா, அது தற்செயல்'னு டிஸ்க்ளைமர் போடுறதே ஒரு தற்செயலா?

“இருவர் படம் வெளிவந்து சரியா ஓடவும் இல்லை. பலரும் கழுவியூத்தினாங்க. ஆனா, இன்னிக்கு எங்களுக்கு அந்தப் படமே பாடம் நடத்துது. எல்லாருமே கொண்டாடுறாங்க. நீங்க ரொம்ப அட்வான்ஸா இருக்கீங்க. அதான் விஷயம்” என்று புகழாரம் சூட்டிய அதேநேரத்தில் பார்த்தா பதிந்துகொண்டிருந்த ஃபேஸ்புக் நிலைத்தகவல்:

“காற்று வெளியிடை ரீலீஸை 2027-க்கு ஒத்திவைத்திருந்தால் படம் வேற லெவல் ஹிட் உறுதி என்கிறான் நண்பன் பிரேம்.”

அந்தப் பதிவுக்கு சிரிப்பு விருப்பங்கள் பெருகிக்கொண்டிருந்த வேளையில், சிறப்பு வகுப்புக்கு மணி ரத்னம் வழங்கிக்கொண்டிருந்த முடிவுரை:

“டெக்னாலஜி டெவலப்மென்ட்ஸ் நடந்துட்டே இருக்கு. அதனால படம் எடுக்குறது ஈஸினு நினைக்காதீங்க. சினிமா இன்னும் துல்லியமா இருக்கணும்னு ஆடியன்ஸ் எதிர்பார்ப்பாங்க. அது மிஸ் ஆச்சுனா நாம ஃபெயில் ஆயிடுவோம். சோ, டெக்னாலஜிலயும் அப்டேட்டா இருக்கணும், எமோஷன்ஸையும் ரியலிஸ்டிஸையும் கூடுதலா கவனிக்கணும்!”

அதைக் கேட்ட பார்த்தாவும் பக்குவம் உணர்ந்தவனாக மணி ரத்னத்தைப் பார்த்தான்!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமாலஜி-02-சரணாகதி-ஆவதுதான்-பெண்களின்-விதியா/article9653618.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

சினிமாலஜி 03 - மஞ்சு எனும் கெத்தழகி!

 
ருத்ரய்யா | ஓவியம்: லெணா பாரதி ராஜா
ருத்ரய்யா | ஓவியம்: லெணா பாரதி ராஜா
 
 

(முன்னறிவிப்பு: இந்தத் தொடரில் வரும் சம்பவங்களும் உரையாடல்களும் முழுக்க முழுக்க கற்பனையே!)

வகுப்பறையில் அவ்வப்போது முக்கியமான படங்கள் திரையிடப்பட்டு, அவை குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம். விரிவுரையாளர் சலீம் ஒருங்கிணைப்பில் ‘அவள் அப்படித்தான்' பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. இருள் சூழ்ந்த வகுப்பறையில் புரொஜக்டர் எதிரே இருந்த திரை முன்பு நின்றார் சலீம்.

“ ‘அவள் அப்படித்தான்’ படத்தை எத்தனை பேர் பார்த்திருக்கீங்க?”

மூன்று பேர் மட்டுமே கை உயர்த்தினர்.

“ம்... 1978-ல் ருத்ரய்யா இயக்கத்தில் ஸ்ரீப்ரியா, கமல், ரஜினி நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் உங்களுக்கு மிக முக்கியமான அனுபவமா இருக்கும். நிறைய கத்துக்கப் போறீங்க. ரொம்ப ஆச்சரியமாகவும் இருக்கலாம். படம் பார்த்து முடிச்சுட்டு, இப்ப இருக்குற தமிழ் சினிமாவில் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களோட இதை ஒப்பிட்டு விவாதிக்கலாம்” என்றார் சலீம்.

அனைவரின் விழிகளும் திரையில் ஆர்வத்துடன் பதிய, பார்த்தா மட்டும் சலீம் சார் சொன்ன பெயர்களின் வரிசையை நுட்பமாக ஆராய்ந்தபடி படம் பார்க்கத் தொடங்கினான்.

‘ரஜினி, கமல், ஸ்ரீப்ரியான்னு தானே சொல்லணும். இவரு ஏன் ஸ்ரீப்ரியா, கமல், ரஜினின்னு சொன்னாரு?!'

ஊசியைக் கீழே போட்டால் ஓசை எழும் அமைதி. படம் முடிந்தது. வெளிச்சம் பரவியது. பார்வைகளில் பரவசம் தெரிந்தது. சலீம் சார் சொன்ன ஆர்டரின் உள்ளர்த்தமும் பார்த்தாவுக்குப் புரிந்தது. மாணவர்கள் எதிர்பார்த்ததைவிட அசந்துவிட்டதான் பூரிப்பு மேலிடத் திரை முன்பு நின்றார் சலீம்.

“என்ன படம் சார் இது... ஏதோ இன்னிக்கு தியேட்டர்ல ரிலீஸ் ஆனது மாதிரி அவ்ளோ ஃபிரஷ்ஷா இருக்கு!” வியப்புடன் ஆரம்பித்தான் ஜிப்ஸி.

சலீம் சார் சிறு அறிமுகக் குறிப்பு தந்தார்:

“சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர் ருத்ரய்யா. படிப்பை முடித்த கையோடு எழுத்தாளர் வண்ணநிலவன், இயக்குநர் ராஜேஷ்வர் உடன் சேர்ந்து இந்தத் திரைக்கதையை வடித்தார். இந்தப் படம் உருவான விதத்தை வைச்சே ஒரு படம் எடுக்கலாம். அவ்வளவு சுவாரசியமானது. ருத்ரய்யா ரெண்டாவதா ‘கிராமத்து அத்தியாயம்'னு ஒரு படம் எடுத்தார். அதுதான் அவரோடக் கடைசி படமும். இணையத்தில் தமிழில் தேடினால் ருத்ரய்யா பற்றியும் ‘அவள் அப்படித்தான்' உருவான விதம் பற்றியும் நிறையத் தகவல் கிடைக்கும்.

ரஜினி, கமல், ஸ்ரீபிரியா மூணு பேருமே ரொம்ப பிஸியா இருந்தப்ப இந்தப் படத்தை எடுத்துருக்காங்க. கொஞ்சம் ஓய்வா இருக்கும்போது நடிச்சு கொடுத்துட்டுப் போனாங்க. ஆனா, முழு ஈடுபாட்டோடு அற்புதமா நடிச்சாங்க.”

“ஓஹ்...! அதான் மூணு பேரும் ஒண்ணா இருக்குற மாதிரி காட்சி அதிகம் இல்லையோ. ஒரு சீன்ல மூணு பேருமே இருப்பாங்க. ஆனா, தனித்தனியாகத்தான் காட்டுவாங்க. ஒயிட் ஆங்கிள்ல மூணு பேரும் ஒண்ணா இருக்குற மாதிரி எந்த ஷாட்டும் இருக்காது. ஆனா, சூப்பரா இருந்துச்சு” என்று தன் சினிமா அறிவை முன்வைத்து பாராட்டினான் பிரேம்.

“இதே படத்தை இப்ப எடுத்தாலும் செம்மயா இருக்கும். அஜித், விஜய் மாதிரியான ஹீரோக்கள் ஒத்துப்பாங்களா?” - பார்த்தா முன்வைத்த கேள்வி இது.

“மஞ்சு கேரக்டர் நயன்தாராவுக்குதான்!” - சட்டென விருப்பம் பதித்தான் மூர்த்தி.

“ஆஹான்... ஆளுக்கு அஞ்சு பஞ்ச் டயலாக், ரெண்டு ஓபனிங் சாங்ஸ், தெறிக்கவிடுற மாதிரி சண்டை. இதெல்லாம் சேர்த்துட்டா ருத்ரய்யா ஆன்மா தற்கொலை பண்ணிக்கும்” என்று சன்னமாகச் சொன்னாள் கீர்த்தி.

“ முயற்சி பண்றதுல தப்பில்லையே...” என்று பார்த்தா இழுக்க, “ரஜினி, கமல் மாஸுன்னாலும் எப்பவும் அவங்களுக்குள்ள ஒரு கிளாஸ் தூங்கிட்டு இருக்கும். ஆனா இவங்க எல்லாரும் வெறும் மாஸ். அப்படியெல்லாம் நடந்தா தமிழ் சினிமாவை அடிச்சிக்க எவனாலயும் முடியாது” என்று கீர்த்தி குரலை உயர்த்தினாள்.

“ஒத்துகிட்டா மட்டும் போதுமா? ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா மூணு பேருமே எதிர்ல சக நடிகர் இல்லாமலே நீளமான வசனத்தைச் சரியான பாவனைகளோட பர்ஃபெக்டா நடிச்சிருப்பாங்க. அந்த மாதிரி பெர்ஃபாமன்ஸுக்கு எங்க போறது? ” என்று ரகு இன்னும் கொளுத்திப் போட, அதைத் தடுத்த சலீம் சார் “கன்டென்ட் பத்தி மட்டும் பேசுவோமே?” என்று சற்றே கோபத்துடன் பேச அமைதி நிலவியது.

மவுனம் கலைத்த கவிதா, “திருமணத்துக்கு முந்தைய பாலுறவு, சட்டபூர்வ கருக்கலைப்பு, பெண்களுக்கு இடஒதுக்கீடு, பெண் சுதந்திரம், ஆணாதிக்கம், பெண்ணியம், குடும்பக் கட்டுப்பாடு, பர்தா போன்ற உடை கட்டுப்பாடுகள்... எப்படிப் பல விஷயங்களைத் தொட்டிருக்காங்க. அதுல எந்தப் பிரச்சினையும் இவ்ளோ வருஷத்துக்கு அப்புறமும் முழுசா தீரலைன்றதுதான் கொடுமை. ஆண் - பெண் உறவின் உளவியல் சிக்கல்கள், பெண்ணியம், பெண் சுதந்திரத்தைப் பற்றி இவ்ளோ நுட்பமாவும், அற்புதமான திரைமொழியோடும் தமிழ்ல வேற எந்தப் படத்தையும் என்னால சொல்ல முடியல...” என மூச்சுவிடாமல் பேசப் பேச, பார்த்தாவின் காதுகளில் ‘லா லா லா லா' பின்னணி இசை ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

“பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குற படம் அப்பப்ப வந்துட்டுதானே இருக்கு. ஜோ நடிச்ச '36 வயதினிலே' நீ பார்க்கலையா?” என்று எப்போதாவது வகுப்பில் வாய் திறக்கும் மேனகா கேட்டாள்.

“நான் சொன்னது பெண்ணியம் சார்ந்தது. திருமணத்துக்கு அப்புறம் தனிப்பட்ட வாழ்க்கையே இல்லாமல் முடங்கும் ஒரு பெண், தன் குடும்பத்தினரால் ஒதுக்கப்படும்போது எப்படி மீண்டும் எழுச்சி அடையறான்னு அந்தப் படம் காட்டுச்சு. நல்ல படம்தான். இல்லைன்னு சொல்லல. ஜோதிகா கேரக்டர் மேல அனுதாபம் வர்றதுக்காக அலுவலக சகாக்கள், கணவன், மகள் என எல்லோரையும் கிட்டத்தட்ட வில்லன்களாகக் காட்டின விதம் டிராமாவா தெரியல? ”

கவிதாவின் சீற்றம் அடங்காத நிலையில், “ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன் மேனகா... 'ஹவ் ஓல்டு ஆர் யூ' மலையாளப் படத்தின் ரீமேக்தான் 36 வயதினிலே. சரி, கவிதா... தமிழ் சினிமால இப்ப இருக்குற முக்கியமான இயக்குநர்கள் கூட பெண்களை ப்ரொட்டாகனிஸ்டா காட்டுற்து இல்லைன்றியா. நம்ம செல்வா கூடவா?” என்றது - ஆம், பார்த்தாவேதான்.”

“மஞ்சு ஒரு கெத்தழகி. அவளை மாதிரியான பொண்ணுங்கள தினம் தினம் நேர்ல பார்க்குறோம். ஆனா, படங்கள்ல அப்படி யாரையுமே பார்க்க முடியறது இல்லை. செல்வராகவன் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் அவ்ளோதான். அதுக்காக, அவரை ருத்ரய்யா லிஸ்டல்லாம் இப்போதைக்கு சேர்க்க முடியாது. 'மயக்கம் என்ன' படத்துல யாமினியை புரொட்டாகனிஸ்டா காட்டி, கார்த்திக்கை சப்போர்டிவ் கேரக்டரா ஆக்கியிருந்தாகூட சூப்பரா இருந்துருக்கும்” என்ற கவிதாவின் ஆவேசம் அடங்குவதாகத் தெரியவில்லை.

“நீ 'இறைவி' பாக்கலையா ராசா?” - அலட்சியமாகக் கேட்ட பார்த்தாவின் கேள்விக்குள் உள்குத்து இல்லாமல் இல்லை.

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 'இறைவி'யைக் கழுவியூற்றியே கவனம் ஈர்த்த ரகு பேச எழுந்தபோது வகுப்பில் அனைவரின் முகத்திலும் ஆர்வம் படர்ந்தது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமாலஜி-03-மஞ்சு-எனும்-கெத்தழகி/article9666707.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சினிமாலஜி 04 - அவள் அப்படித்தானில்’ அஜித், விஜய், நயன்தாரா!

 
 
 
Desktop_3163424f.jpg
 
 
 

(முன்னறிவிப்பு: இந்தத் தொடரில் வரும் சம்பவங்களும் உரையாடல்களும் முழுக்க முழுக்க கற்பனையே!)

‘அவள் அப்படித்தான்' திரையிடலுக்குப் பிறகு, வகுப்பறையில் விவாதத்துக்குப் பதிலாக வாதம் தலைதூக்க ஆரம்பித்ததை உணர்ந்த விரிவுரையாளர் சலீம், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முனைந்தார்.

“நாம் இங்கே பார்த்த படம் பற்றி விரிவாக விவாதிக்கிறதுதான் முறை. அதை விட்டு, தங்களோட வாதம்தான் சரின்னு நிரூபிக்க வாய்கிழிய பேசுறதுக்கு இது ஒண்ணும் டிவி நிகிழ்ச்சி இல்லை” என்று சலீம் சத்தமாகப் பேசியதும், அப்புறம் பேசிக்கொள்ள முடிவுசெய்து ரகு வாய் திறக்கவில்லை. வகுப்பில் அமைதி நிலவியது. ’

உட்கார்ந்தபடியே பேசிய ப்ரியா, “பெண்களோட பார்வையில் காதலையும் உணர்வுகளையும் சொல்லுற படம் அரிதினும் அரிது. அந்த வகையில் 'அவள் அப்படித்தான்' படத்தை மிக முக்கியமானதா பார்க்குறேன்” என்று பார்த்தாவுக்கு பாயின்ட் எடுத்துக் கொடுத்தாள்.

“அதேதான். 'ஆட்டோகிராப்' மாதிரியே ஒரு பொண்ணு தன்னோட பழைய காதல்களைத் தேடி கல்யாணப் பத்திரிகை கொடுக்க போனா, அந்தப் படம் வெள்ளி விழா காணுமா?” - ரொம்பவே பழைய வாதத்தை வைத்தது பார்த்தாவேதான்.

“இது இன்னைக்கு வரைக்கும் தொடருதே... ‘ப.பாண்டி'யில ரேவதி கதாபாத்திரம் தன் முதல் காதலை தேடிப் போயிருந்தா எப்படி இருந்திருக்கும்?” என்று கேள்வி எழுப்பினாள் கீர்த்தி.

அப்போது குறுக்கிட்ட ஜிப்ஸி, “இப்படியே சமகால சினிமாவை நொட்டை சொல்லிட்டே போனா எப்படி? இப்பகூட பெண் கதாபாத்திரங்களை மையமா வைத்து வர்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்குது. ‘மகளிர் மட்டும்' படத்தோட ட்ரெய்லர், இந்திய அளவில் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் வந்ததை கவனிச்சேன்” என்றான்.

அதற்குப் பதிலடி தரும் வகையில், “அந்த ட்ரெய்லரை நானும் பார்த்தேன். புல்லட்ல கெத்தா வந்துட்டா அது உமன் சென்ட்ரிக் மூவி ஆகிடுமா? படம் முழுக்கப் பெண்களே இருக்குறதுதான் பெண்களை மையப்படுத்தும் படைப்பா?” எனப் பொங்கினாள் கவிதா.

“அதே பிரம்மாவோட முதல் படம் ‘குற்றம் கடிதல்'. அதுவும் பெண் கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்திய படைப்புதான். ஒரு படம் வெளியாகுறதுக்கு முன்னாடி இப்படி பேசுறது சரியில்லை. ‘மகளிர் மட்டும்' வெளிவரும்வரை காத்திருப்போம். ‘இறைவி'ன்னு பேரு வெச்சிட்டு வந்தப் படத்துல முழுக்க முழுக்க ஆண்கள். அதுக்கு என்ன சொல்றது?” என்று தன் காரியத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினான் ரகு.

“அது, ஆண்கள் ஆதிக்கம் செலுத்துற சமூகத்தில் பெண்களோட நிலைமையைப் பதிவு பண்ணின படம். உனக்குப் புரியலைன்னா அதுக்கு என்ன பண்றது?” என்று ரகுவை முடக்க நினைத்தாள் ப்ரியா.

“எல்லாத் துறையைப் போலவே சினிமாவும் எண்ணிக்கையில் ஆண்களை அதிகமாகக் கொண்டதுதான். அங்கிருந்து வர்ற படைப்புகள் எல்லாமே அப்படித்தான் இருக்கும். வாங்க, பெண்கள் பலரும் சினிமாவுக்கு வாங்க. உங்களோட கோணத்துல படம் எடுங்க. நாங்க பார்க்குறோம். கொண்டாடுறோம்” என்று லாஜிக் பேச முற்பட்டான் பார்த்தா.

சட்டென உள்ளே புகுந்த விரிவுரையாளர் சலீம், “நீங்கள்லாம் திரும்பத் திரும்ப விவாதம்ன்ற பேர்ல சண்டைதான் போடுறீங்க. ‘அவள் அப்படித்தான்’ பத்தி மட்டும் பேசுங்களேன். இறைவி பற்றி கார்த்திக் சுப்புராஜ் வர்ற அன்னைக்கு வெச்சிக்கலாம்” என்று நொந்துகொண்டார்.

“என்னா கேமரா ஆங்கிள் சார்! ஒவ்வொரு ஆங்கிளுமே சினிமா மேதமையைச் சொல்லும். க்ளோசப் ஷாட்ஸை இவ்ளோ பக்காவா வேற யாரும் யூஸ் பண்ணின மாதிரியே தெரியல. அதுவும் லைட்டிங்ஸ்... சான்சே இல்லை!” என்று ‘அவள் அப்படித்தான்’ படத்தின் திரைமொழியை சிலாகித்தான் பிரேம்.

“அதைவிட என்னை ரொம்பக் கவர்ந்தது, அந்தப் படத்தோட வசனம்தான். அதுவும் மஞ்சு, தியாகு கதாபாத்திரங்களோட உரையாடல் வேற லெவல். தன்னோட கொந்தளிப்பைக் காட்டும்போது, தானாகவே கெட்ட வார்த்தைகள் கொட்டும். அதை எழுதினதும், அதைப் படமாக்கினதும், அதை சென்சார் அனுமதிச்சதும் ஆச்சரியமா இருக்கு. சென்சார்ல அப்ப இருந்தவங்களை இப்ப இருக்குறங்க ஃபாலோ பண்ணணும்” என்றான் மூர்த்தி.

“அதே காலகட்டத்தில் பாலச்சந்தரும் பெண்களை மையப்படுத்தி முக்கியமான படைப்புகளைக் கொடுத்ததையும் பதிவு செய்தே ஆகணும்” என்று எடுத்துக் கொடுத்தார் விரிவுரையாளர் சலீம்.

“உண்மைதான் சார். நான் ரொம்ப நாளா 'அவள் அப்படித்தான்' படமும் பாலச்சந்தர் எடுத்ததுன்னு நினைச்சிட்டு இருந்தேன். அவரோட படங்கள்ல மிகைப்படுத்துதல் அதிகமா இருக்கும்னு தோணுது. இயல்புத் தன்மை குறைவு. ரித்விக் கட்டக்கோட ‘மேக தக்க தாரா' படத்தைக் கலைச்சிப் போட்டு ‘அவள் ஒரு தொடர்கதை'யில சிதைச்சதையெல்லாம் தயவுசெஞ்சு யோசிக்க வைக்காதீங்க சார்” என்று குமுறினான் பார்த்தா.

“ஓகே... அதை இன்னொரு நாள் வெச்சுப்போம்” என்று மட்டும் சொன்னார் சலீம்.

“1978-ல் வெளியான ‘அவள் அப்படித்தான்' பேசியவை எல்லாமே நம் சமூகத்துக்கு இப்போதும் கச்சிதமாகப் பொருந்தும் என்பதைக் காட்ட நான் கொஞ்சம் விரிவாகப் பேச நினைக்கிறேன்” என்றாள் ப்ரியா.

அனைவரும் ஆர்வத்துடன் அனுமதித்தனர்.

ரஜினி சொல்வார்: “...இந்தப் பொண்ணுங்களுக்கு ரெண்டு வெறி இருக்கக் கூடாது. ஒண்ணு காம வெறி, இன்னொன்னு தன் காலிலேயே நிக்கணுங்குற வெறி. லேடீஸ் ஆல்வேஸ் டிப்பண்டன்ட். இந்த ரெண்டு வெறியும் பிடிச்ச பொண்ணுதான் மஞ்சு. இவங்களெல்லாம் குடும்பத்துக்கே லாயக்கு இல்லை...”

இந்த மனோபாவம் இருக்குற ஆண்களோட எண்ணிக்கைதான் இன்னைக்கும் அதிகம். ஆனாலும், தன்னை இந்தச் சமூகம் எப்படிப் பார்த்தாலும் பரவாயில்லை, இயல்பை மாற்றிக்கொள்வதில்லை என்ற மஞ்சுவைப் போன்ற பெண்கள் இப்ப நிறைய பேரு இருக்குறது ஆறுதல். ஆனா, அவங்க வாழ்க்கை முழுக்க போராட்டமாவே போயிடுது. இன்னும் அவங்களை நாம முழுசா புரிஞ்சிக்க முடியல.

இதைவிட கொடுமை, கமல் நடிச்ச அருண் கதாபாத்திரம். பேசுறது ஒண்ணு; எழுதுறது ஒண்ணு தன்னை போராளிகளா வெளிப்படுத்துற இவங்கள இப்ப சமூக வலைதளங்களில் நிறையவே பார்க்கலாம். பெண்ணியம் அது இதுன்னு பேசிட்டு கடைசில சரிதா கேரக்டர் மாதிரியானவங்களைக் கல்யாணம் பண்ணிட்டு இந்த மாதிரி அடக்கமான பொண்ணுதான் நமக்குப் பாதுகாப்புன்னு போயிடுவாங்க” என்றாள் ப்ரியா.

அப்போது குறுக்கிட்ட ரகு,

“அதேபோல 'வித்தியாசமா இருக்கிற மாதிரி காட்டிக்கிறது ஒரு ஃபேஷன்'னு ஒரு டயலாக் வரும். அது வெறும் கவன ஈர்ப்புக்காக மஞ்சு மாதிரி மாறத் துடிக்கும் பெண்களுக்கும் பொருந்தும்” என்று கடகடவெனச் சொன்னான்.

மீண்டும் தொடர்ந்த ப்ரியா, “மொத்தத்துல கலாச்சாரம்ன்ற பேருல நாம பண்ற அலப்பறைகளை அப்பட்டமா காட்டிச்சு. ஆண்களின் நிஜ முகங்களை அம்பலப்படுத்துச்சு. முற்போக்கு சிந்தனைகளில் பெரிதும் ஆர்வக்கோளாறாதான் இருக்கும், உண்மையான ஆர்வம் அரிதுன்றதையும் தோலுரித்துக் காட்டிச்சு. இப்ப மட்டும் இல்லை, இன்னும் முப்பது ஆண்டுகள் ஆனாலும் எப்பவுமே இப்படித்தான்னு தோணுது. அதனால, ‘அவள் அப்படித்தா’னுக்கு இப்போதைக்கு எக்ஸ்பைரி டேட்டே கிடையாது” என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்ததுடன் திரையிடல் - விவாத வகுப்பு முடிந்தது.

அப்போது பார்த்தா பகிர்ந்துகொண்ட ஃபேஸ்புக் பதிவு:

“இப்போதும் வியக்கத்தக்க திரைக்கதை வடிவத்தைக் கொண்டிருக்கும் ‘அவள் அப்படித்தான்' படத்தை செல்வராகவன் ரீமேக் செய்து இயக்க, அஜித், விஜய், நயன்தாரா நடித்தால் எப்படி இருக்கும்?”

இந்தப் பதிவுக்கு முதலில் வந்தது, ஒற்றைக் கண்ணீர்த் துளி எட்டிப் பார்க்கும் சோக விருப்பக் குறி!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமாலஜி-04-அவள்-அப்படித்தானில்-அஜித்-விஜய்-நயன்தாரா/article9693054.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சினிமாலஜி 05 - ‘தளபதி'யே மசாலா படம்தானே!

 

 
 
cinemaology_3168224f.jpg
 
 
 

அது ஒரு மாலை நேரம். சூரியன் சற்று இளைப்பாற, பரபரப்பாக இருந்தது காபி ஷாப். பார்த்தா, ரகு, ப்ரியா, கவிதா ஆகியோர் அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். எதிரே இருந்த டேபிளில் தனியாக உட்கார்ந்திருந்தவரை உற்றுப் பார்த்தான் பார்த்தா.

“ப்ரியா, அது டைரக்டர் நலன் குமாரசாமிதானே?”

திரும்பிப் பார்த்த ப்ரியா, “ஆமாம் அவரேதான்!” என்றாள்.

“பேசலாமா?” என்றான் பார்த்தா.

“வேணாம். அது அவ்வளவு நல்லா இருக்காது” என்று தடைபோட்டாள் கவிதா.

பார்த்தா சட்டென எழுந்து நலன் குமாரசாமி அருகே சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். அங்கிருந்து அவன் அழைக்க, அனைவரும் நலன் குமாரசாமியைச் சூழ்ந்து அமர்ந்தனர்.

“எங்களை மாதிரி சினிமா ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இன்ஸ்பிரேஷன்ஸ்ல நீங்களும் ஒருத்தர் சார். உங்களோட ‘சூது கவ்வும்' நிறைய நம்பிக்கையை கொடுத்துருக்கு” என்று ஆரம்பித்தான் ரகு.

“ஒரே ஒரு நிமிஷம்...” என்று கேட்டுக்கொண்ட நலன் குமாரசாமி தன் செல்போனில் பேசினார்.

“தலைவா... இங்க திடீர்னு வேறொரு கமிட்மென்ட். வர்றதுக்கு ரெண்டு மணி நேரம் ஆகும்” என்று அவர் சொன்னபோது நால்வரின் முகத்திலும் மகிழ்ச்சி.

“தம்பி, அதுக்கு நான் மட்டுமே காரணம் இல்லை. என் டீம். குறிப்பாக, என் ஸ்கிரிப்ட்டை புரிஞ்சுகிட்டு என் மேல நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கு” என்று நிதானமாகச் சொன்னார் நலன்.

“அதேதான் சார்... அந்தப் படத்தோட கதையைச் சொல்லி, தயாரிப்பாளரை ஏத்துக்க வெச்சதை நினைக்கும்போது ஆச்சரியமா இருக்கு. ஏன்னா, அந்தக் கதையை விவரிக்கிறதே கஷ்டமான விஷயம்னு நினைக்கிறேன்” என்றாள் ப்ரியா.

nalan_3168407a.jpg

“அதேபோல ப்ளாக் ஹுயூமர், பொலிட்டிகல் சட்டையர், க்ரைம் த்ரில்லர், சைக்கலாஜிக்கல் ட்ரீட்மென்ட்... இப்படி எல்லாத்தையும் ஒரே படத்துல அணுக முடிஞ்சுது” என்று ஆர்வம் பொங்கினான் ரகு.

“எல்லாத்துக்குமே தனித்தனியா கவனம் செலுத்தணும்னு அவசியமே இல்லை. ஒரு மையக் கதை எடுத்துக்கணும். அதன் கதாபாத்திரங்களை தெளிவா வடிவமைச்சு திரைக்கதை பண்ணினா, அந்தக் கதைக்கு தேவையான எல்லாமே தானாவே உள்ளே வந்துடும். என்னோட தயாரிப்பாளருக்கு சினிமா பற்றிய புரிதல் நல்லாவே இருந்துச்சு. முழு ஸ்கிரிப்டையும் வாசிச்சார். எல்லாமே அமைஞ்சுது” என்றார் இயல்பாக.

“நீங்க திரைக்கதையில் வலுவானவர். இப்போதைய தமிழ் சினிமாவை எடுத்துக்கிட்டா நல்ல கதைக்கும் திரைக்கதைக்கும்தான் பஞ்சம்னு நினைக்கிறேன்?” என்றாள் ப்ரியா.

“அது உண்மைதான். இங்க கதை, திரைக்கதை மேல உரிய கவனம் செலுத்துறது அரிதாகத்தான் நடக்குது. நான் ரொம்பவே டைம் எடுத்துப்பேன். ஒரு கதையைப் பிடிக்கிறதுக்கும், அதையொட்டி திரைக்கதை அமைக்கிறதுக்கும் போதுமான நேரம் தேவைப்படுது. ஆனா, இங்க உடனுக்குடன் படம் பண்ணனும்ற தேவையில்லாத நெருக்கடியும் இருக்கு. ஓர் இயக்குநரே எழுத்தையும் கவனிக்கணும்னு அவசியம் இல்லை. நல்ல கதைகளையும் திரைக்கதைகளையும் அவர் சிறப்பாகப் படமாக்கினாலே போதும். சினிமாவுக்கான மொழியில மட்டும் இயக்குநர்கள் கவனம் செலுத்தினா இன்னும் சிறப்பா இருக்கும்.

சினிமாவுக்கு ஒரு கதையோ அல்லது திரைக்கதையையோ உருவாக்குறதுன்றது சாதாரண விஷயம் இல்லை. அது ஒரு பெரிய ப்ராசஸ். நிறைய வாசிக்கணும். நிறைய அனுபவம் இருக்கணும். அதுக்கான வடிவத்துல தெளிவு இருக்கணும். இன்னைக்கு திரைக்கதையை எத்தனையோ புத்தகங்கள் எளிதா சொல்லித் தருது. நம்ம ஊருல நமக்குக் கிடைச்ச அனுபவத்தையும் எழுத்துத் திறமையையும் பின்புலமா வெச்சு திரைக்கதைகள் எழுதப்படணும். அது ஓரளவு இங்க நடத்துட்டுதான் இருக்கு. ஆனா, அது போதாது” என்றார் விரிவாக.

“எல்லாம் சரிதான் சார். ‘சூது கவ்வும்’ பார்த்துட்டு, அதே மாதிரியான சினிமா அனுபவம் தரும்னு நம்பி போனேன். ‘காதலும் கடந்து போகும்' கவுத்திடிச்சே. ரொம்ப மெதுவா கடந்து போன ஃபீலிங்...” என்று இழுத்தான் பார்த்தா.

அப்போது குறுக்கிட்ட ரகு, “நீ இன்னும் வளரணும் பார்த்தா. ‘சூது கவ்வும்' ஒரு மாதிரியான பாய்ச்சல்னா, 'காகபோ' வேற லெவல் பாய்ச்சல். எனக்கு ரெண்டுல ‘காகபோ'தான் ஃபேவரிட். 2010-ல் வெளியான ‘மை டியர் டெஸ்பிராடோ' என்கிற கொரிய திரைப்படத்தின் உரிமையை விலை கொடுத்து வாங்கி, அதை அதிகாரபூர்வமாகத் தமிழில் கச்சிதமாக ரீமேக் செய்ததை நேர்மையான அணுகுமுறையா பார்க்குறேன். உனக்கு ஸ்லோ மூவிக்கும், போரிங் ஃபிலிமுக்குமான வித்தியாசம் தெரியலை. பரபர ஃபாஸ்ட் மூவி பலருக்கு போரிங்காக இருக்கலாம். அதே நேரத்தில், ஒரு தாத்தா நடந்து போறதை நாலரை நிமிடம் காட்டும் ‘வீடு' போன்ற படங்கள் பலருக்கு அற்புத அனுபவம் தரலாம். அப்படி ஒரு செம்ம படம் இது...” என்றதும் கவிதா சேர்ந்துகொண்டாள்.

“கரெக்ட். கொஞ்சம் யோசிச்சுப் பாரு. நம்ம வாழ்க்கை மெதுவாகத்தானே நகருது. ஆனால், போர் அடிக்கிறதா? நம் அன்றாட வாழ்க்கையே மெதுவாகச் செல்லும்போது, அதை சினிமா எனும் கலை வடிவில் பார்க்கும்போது பெரும் பரபரப்பாக இருப்பதுபோல் காட்டுவதும், அப்படித்தான் இருக்கணும்னு நினைக்கிறதும் எவ்வளவு பெரிய அபத்தம்? ‘காகபோ’ திரைக்கதையும் இயல்பான வேகத்தில் மெதுவாகவே நகர்கிறது. ஆனால், எந்த இடத்திலும் அலுப்பு ஏற்படல. ரசிக்க முடிஞ்சுது” என்றாள் கவிதா.

“சரி... ரொம்ப சூடா டிஸ்கஷன் பண்றீங்க. நான் காபி வாங்கிட்டு வரேன்” என்று எழுந்த நலன், நால்வருக்கும் தானே காபி வாங்கி வந்து கொடுத்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

“தம்பி... என்னோட படங்களைப் பாக்க முன்முடிவோட தியேட்டருக்கு ரசிகர்கள் வர்றதை விரும்பல. இப்படித்தான் இருக்கும்னு கணிக்கிற அளவுக்கு ஒரே மாதிரியான படங்கள் தர்றதுல என்ன இருக்கு? எனக்கு எல்லா விதமான ஜானர்லயும் படம் பண்ண பிடிக்கும். அதைத்தான் ‘சூது கவ்வும்’ படத்துக்கு அப்புறம் ராம்-காம் ட்ரை பண்ணினேன். எனக்கு அதுல திருப்திதான்!” என்று காபி அருந்தியபடியே மிக நிதானமாகச் சொன்னார் நலன் குமாரசாமி.

“ராம்-காம்னா?” - இது பார்த்தா.

“ரொமான்டிக் காமெடிடா. இதுகூடத் தெரியாதா?” என்று சின்ன இடைவெளியில் கலாய்த்தான் ரகு.

“தமிழ் சினிமாவுக்கே உரிய முக்கியமான ஜானர் - மசாலா படம். அது உங்களால முடியுமா?” என்று பார்த்தா கிண்டலாகக் கேட்டான்.

அதற்கும் சிரித்த முகத்துடன் பதிலளித்த நலன், “தம்பி, மசாலா படம் எடுக்குறதும் ரொம்ப கஷ்டம். அதை ஒரு ஜானர்னே வெச்சுக்குவோம். அதுக்குள்ள எவ்ளோ மெனக்கெடல் இருக்கு தெரியுமா? ஆனா, நம்ம தமிழ் சினிமாவுல தரமான மசாலா படம்ன்றதே ரொம்ப அரிதா இருக்கு. ஒரு உருப்படியான மசாலா படம் கொடுக்குறதுக்கும் தனித்திறமை வேணும். 'தளபதி'யும் ஒரு சூப்பரான மசாலா படம்தான். ஒரு மசாலா படத்துக்கு உரிய எல்லா அம்சமும் அதுல இருக்கு. ஆனா, ரொம்ப நேர்த்தியா எடுக்கப்பட்ட படம். நீங்க சொல்ற மாதிரி நானும் ஒரு மசாலா படம் எடுக்க தயாராகிட்டு இருக்கேன். அந்த ஜானர்லயும் எடுப்போமே... செம்ம எங்கேஜிங்கா எல்லா பொழுதுபோக்கு விஷயங்களும் இருக்குற பக்காவான மசாலா படத்தை எடுத்துதான் காட்டுவோமேன்னு தோணுது. பார்க்கலாம்” என்றபோது சற்றே வியப்படைந்தார்கள் நால்வரும்.

“என்ன சார்... ஒரு பக்கம் மாஸ், மசாலான்னு தமிழ் சினிமா போவுது. உங்களை மாதிரி படைப்பாளிகள்தான் வலுவான திரை மொழியோட நல்ல படங்கள் கொடுக்கிறீங்கன்னு பார்த்தா நீங்களுமா?” என்று கேட்டாள் ப்ரியா.

“அதிலென்ன தப்பு?” என்று இன்னும் சற்று விளக்கம் அளிக்க முற்பட்டார் நலன் குமாரசாமி.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமாலஜி-05-தளபதியே-மசாலா-படம்தானே/article9712590.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான விவாதங்கள்....!  tw_blush:

Link to comment
Share on other sites

சினிமாலஜி 06 - பாட்டும் டான்ஸும் தப்பே இல்லை!

 

 
nalan_3170483f.jpg
 
 
 

“மசாலா படங்கள் எடுப்பதும், அவை நல்லா ஓடுவதும் ஆரோக்கியமற்ற போக்கு கிடையாது. உண்மையில், தமிழ்நாட்டு ரசிகர்கள் மாதிரி ரசனைக்காரர்கள் எந்த ஊரிலும் இல்லை!” என்றார் நலன் குமாரசாமி.

நால்வருக்கும் வியப்பு.

“என்ன சார் சொல்றீங்க? தென்னிந்தியாவிலேயே கேரளாவில்தான் நல்ல திரைப்பட ரசனை இருக்கு. அங்கதான் வர்த்தகமும் தரமும் பேலன்ஸ்டா இருக்குன்னு நினைச்சிட்டு இருக்கோம்” என்று ஆர்வம் பொங்கச் சொன்னான் பார்த்தா.

“பார்த்தா... சனி, ஞாயிறுகளில் படம் பார்ப்பது நம்ம மக்களோட முக்கியமான பொழுதுபோக்கு. அவங்களை ஏதோ ஒரு வகையில் திருப்திபடுத்திட்டா போதும், ஈஸியா ஜெயிச்சிடலாம். இந்த இடத்துலதான் நான் மசாலா படங்களோட முக்கியத்துவத்தைச் சொல்ல வர்றேன். வெறும் ஃபார்முலாவை வெச்சுட்டு மசாலா படம் எடுத்திட முடியாது. அதுக்குள்ள தனித்துவமும் தரமும் தேவைப்படுது. அதுல கவனம் செலுத்துறது அவசியம். அப்படி மெயின் ஸ்டிரீம் சினிமாவை தரமா எடுக்க ஆரம்பிச்சிட்டா, அதுக்கு மாற்றாக ப்யூர் சினிமாவும் கவனம் ஈர்க்க ஆரம்பிச்சிடும். இதற்கு, ‘காக்கா முட்டை'தான் சரியான உதாரணம்.”

“அதுக்கு நிறைய ப்ரோமோஷன் இருந்துச்சு சார். பெரிய பேனர், நிறைய விளம்பரம், ரிலீஸான தியேட்டர்களோட எண்ணிக்கை அதிகம்” என்று லாஜிக் பேசினான் ரகு.

“நான் அப்படிப் பார்க்கலை. அதோட தொடர்ச்சியா நிறைய நல்ல படங்கள் பெரிய புரோமோஷன்ஸ் இல்லாம ஓடியிருக்கு. 'துருவங்கள் 16', 'மாநகரம்' போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறதைப் பார்க்கிறோமே. பெரிய பேனர், விளம்பரம், ப்ரொமோஷன்ஸ், தியேட்டர்கள் எண்ணிக்கை எல்லாமே ஓரளவுக்குத்தான் உதவும். ஒரு படம் ஓடுறதுக்கு இதெல்லாம் கரெக்டான ஃபேக்டர்ஸ் இல்லைன்னு நினைக்கிறேன். ரிலீஸான படம் நல்லா இருந்துச்சுன்னா, தமிழக ரசிகர்கள் அதற்குரிய அங்கீகாரத்தை நிச்சயம் கொடுப்பாங்க.”

“கேட்க நல்லா இருக்கு. ஆனா, இது எல்லாமே நம்மை நாமே தேத்திக்கிற மாதிரிதான் தோணுது. ‘ஆரண்ய காண்டம்' ஏன் சார் ஓடலை?” என்று திடுக்குமுக்காட வைக்க முயற்சி செய்தாள் கவிதா.

அதற்கும் அசராத நலன், “சில படங்கள் வர்த்தக ரீதியில போகலைன்னா உடனே மக்களை குறை சொல்லிடுறோம். அது தப்பு. ‘ஆரண்ய காண்டம்' மாதிரியான படங்கள் நமக்கு அரிதினும் அரிது. ஃபிலிம் மேக்கர்ஸ் ஃபிலிம்னுகூட சொல்லலாம். அந்த மாதிரியான படங்களை ரசிக்கவைக்க, சினிமா படைப்பாளிகள்தான் பொறுப்பு ஏத்துக்கணும். மக்களோட சினிமா ரசனையை உயர்த்துற மாதிரி

திரைமொழிகளை உள்ளடக்கிய படங்களை அப்பப்ப கொடுக்கணும். அதோட எண்ணிக்கை அதிகமா இருக்கணும். அப்படியான முயற்சிகள் ரொம்ப மெதுவா நடக்கும்போது இந்த மாதிரியான அட்வான்ஸ் ஆன படங்கள் வர்த்தக ரீதியில் பாதிக்கப்படுறதை தவிர்க்க முடியலை.”

“அந்த முயற்சிகள் இப்ப வேகமெடுத்து இருக்கா?” - இது பார்த்தாவேதான்.

“ஓரளவு நல்லாவே வேகமெடுத்துருக்கு. நாங்கள்லாம் ஒரு டீமாவே இதுக்கு வேலை பாக்குறோம்!” என்று சொன்னதும் நால்வருக்கும் ஆச்சரியம்.

“ஓஹ்... அதோட விளைவுதான் 'உறியடி' படத்தின் இணைத் தயாரிப்பா?” என்ற ப்ரியா அப்டேட்டாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாள்.

“செம்ம சார்... ‘உறியடி' ரிலீஸுக்கு உங்களோட பங்களிப்பு இருக்குறதைப் பார்க்கும்போதே தெரியுது, நீங்க ஒரு குரூப்பாதான் இயங்குறீங்கன்னு. அந்த அனுபவம் எப்படி?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் கவிதா.

“அதோட சினிமா மொழியே பயங்கரமா இருந்துச்சு. இந்தப் படத்தை நிச்சயம் கொண்டுபோய் சேர்த்தே ஆகணும்ன்ற மாதிரி இருந்துச்சு. அதோட இன்டர்வல் ப்ளாக்கா இருக்கட்டும்... கடைசி இருபது நிமிடமா இருக்கட்டும்... அந்த மாதிரி ஒரு பொலிட்டிகல் த்ரில்லரே தமிழ்ல புதுசு. வர்த்தகப் பின்னடைவுகளைத் தாண்டி, அந்தப் படத்தை தீவிர சினிமா ரசிகர்கள்கிட்ட கொண்டு போய் சேர்த்ததே மிகப் பெரிய வெற்றியா பார்க்குறேன். விஜய்குமாரை கொண்டாடுறதுன்றது பல புதிய திறமையான இளைஞர்களுக்கு நிச்சயமா உத்வேகம் தரக்கூடிய விஷயம்” என்றார் பெருமிதத்துடன்.

“இந்த மாதிரி வேற என்ன ப்ளான் சார் வெச்சிருக்கீங்க? நாங்களும் நாளைய இயக்குநர்கள்தான். எங்களையும் உங்க கூட சேர்த்துப்பீங்களா?”

சிரித்துக்கொண்டே “நிச்சயமா. கார்த்திக் சுப்புராஜ், மணிகண்டன் தொடங்கி இப்ப வந்திருக்குற '8 தோட்டாக்கள்' ஸ்ரீகணேஷ் வரைக்கும் எல்லாருமே தேவையானபோது தொடர்புலதான் இருக்கோம். சினிமாவை இண்டஸ்ட்ரீன்னுதான் சொல்றோம். அதனால, வர்த்தகமும் லாபமும் முக்கியம்தான். அதுக்குள்ள ப்யூர் சினிமாவை கொடுக்க முயற்சி பண்றோம்.அது சிறப்பா நடக்குது.நாளைக்கு நீங்களும் டீஃபால்டா எங்க கூட சேர்ந்துப்பீங்க” என்றார் அந்தச் சிரிப்பு மாறாமல்.

“ஓஹ்... அப்படி பேலன்ஸ் பண்றதாலதான் உங்க படங்கள்லயும் குரூப் டான்ஸ், பாட்டு எல்லாம் தொடருதா..? இதெல்லாம் எப்ப நிறுத்துவீங்க?” என்றதும் அதே பார்த்தா தான்.

சற்றே சீரியஸ் தொனிக்கு மாறிய நலன், “ஏன் நிறுத்தணும். பாட்டு நம்ம சினிமாவோட தனித்துவங்கள்ல ஒண்ணு. நான் தியேட்டருக்குப் போறப்ப இந்த மாதிரி பாடல்களை எஞ்சாய் பண்றேன். அதையே நானும் கொடுக்குறேன். இது நம்ம சினிமா. நாம என்ன வேணுன்னாலும் பண்ணலாம். அதை எப்படி பண்றோம், அதோட ரிசல்ட் என்னன்றதுதான் முக்கியம். 'சூதுகவ்வும்' படத்துல 'காசு பணம் துட்டு...', காகபோ-வுல 'காகபோ...' பாட்டெல்லாம் அப்படி நான் ரசிச்சு வெச்சதுதான். பாடல் இல்லாம படம் எடுத்தா ஓகேதான். ஆனா, ஒரு நல்ல சினிமாவுக்கு பாடல்கள் இருக்கக் கூடாதுன்றதை எல்லாம் ஏத்துக்கவே முடியாது” என்றதும் பார்த்தா சமாதானம் அடைந்தான்.

“ஹாலிவுட்லயே ஆறேழு பாட்டு சொருகி நம்மளை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ‘லா லா லேண்டு' பத்திதான் சொல்றேன். அதை விடுங்க. கதாபாத்திர உருவாக்கம் பத்தி சொல்லுங்க. உங்க ரெண்டு படத்தோட ப்ரொட்டாகனிஸ்டுமே வித்தியாசமானவங்களாவும் இருக்காங்க. இயல்பு மீறாமலும் இருக்காங்க. கதிர் கேரக்டர் பார்க்கும்போது எனக்கு 'ஃபாரஸ்ட் கம்ப்' நினைவுக்கு வந்தான். தான் யோசிக்கிறதைப் பின்விளைவுகள் பத்தி கவலைப்படாம செய்றது சூப்பர். அதுவும் அந்த இன்டர்வ்யூ சீன்ல தன்னையே ரொம்ப தாழ்த்திகிட்டு நடந்துகிட்ட விதம் சிரிப்பிலும் மனசை சிலிர்க்க வெச்சுது...”

“அந்த மாதிரி மனிதர்களை வெளிய எங்கேயும் தேட வேண்டாம். நமக்குள்ளேயே இருக்காங்க. வெளியுலகத்துக்கு கெத்தா இருக்கணும்னு நினைப்போம். ஆனாலும், இயல்பான மனிதர்களாதான் வலம் வருவோம். நமக்குள்ள ஆழமான காதல் இருக்கு. அதை ரொம்ப சாதாரணமாதான் வெளிப்படுத்துறோம். கதிரும் அப்படித்தான். உணர்வுகளை ரொம்ப இயல்பா காட்டிக்கிறான். உங்களை சுத்தி இருக்கறங்கவளை பார்த்தாலே போதும். நூற்றுக்கணக்கான திரைக் கதாபாத்திரங்கள் கிடைப்பாங்க. அப்படியே கதையையும் டெவலப் பண்ணிக்கலாம்” என்றார் தெளிவாக.

“சூப்பர் சார். உங்க ரூட்லயே இண்டஸ்ட்ரிக்குள்ள நுழைஞ்சு, அடுத்த லெவல் சினிமாவை எடுக்கக்கூடிய புதிய அலை படைப்பாளிகளா நாங்களும் வர முடியும்ன்ற நம்பிக்கை கிடைச்சுருக்கு...” - சற்றே கூடுதல் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் பார்த்தா.

“ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விதமான சூழல் இருக்கும். இதுதான் பாதைன்னு சினிமாவுக்கு கிடையாது. ஆனா, உள்ளே இறங்கும்போது எல்லாம் தெரிஞ்சுடும். ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லி எழுந்தார் இயக்குநர் நலன் குமாரசாமி.

நலன் குமாரசாமியுடன் நால்வரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி, பார்த்தாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் அப்டேட்டப்பட்டு லைக்குகளைக் குவித்துக்கொண்டிருந்தது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமாலஜி-06-பாட்டும்-டான்ஸும்-தப்பே-இல்லை/article9717690.ece

Link to comment
Share on other sites

சினிமாலஜி 07 - தமிழ் சினிமாவின் 'காப்பி'யங்கள்!

 
devar_magan_3172958f.jpg
 
 
 

கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரியில் கூடிய சினிமாலஜி மாணவர்களில் நம்ம க்ரூப் முதலில் கேன்டீனில் குழுமியது. எல்லாரும் டீ சொல்ல, பார்த்தா மட்டும் காபி ஆர்டர் செய்தான்.

“பார்த்தா கமல் ரசிகன்ல, அவனுக்கு எப்பவும் காப்பிதான் பிடிக்கும்” எனக் கிளப்பிவிட்டான் ப்ரேம்.

“ஏண்டா, தேவை இல்லாம தலைவன் மேலயே கை வைக்கிற?” - சற்றே பொங்கினான் பார்த்தா.

“காப்பி அடிக்கிறதுல ஆர்வம் அதிகமா இருக்குறவங்களுக்கு, காப்பி குடிக்கிறதுலயும் ஈடுபாடு இருக்கும்னு எங்க ஊர்ல சொல்வாங்க!”

“என் தலைவன் பண்றது இன்ஸ்பிரேஷன். இப்பல்லாம் ஒன்லி ஒரிஜினல்தான். ஆனா, உங்க மணி சார்... அவரோட படத்துல இருந்தே சீன்ஸையும் ஃப்ரேம்ஸையும் அவரே உருவிடுறாரே அதுக்கு என்ன சொல்ற?”

மணி மீது கை வைத்தால் ப்ரேம் பம்மிவிடுவான் என்பது பார்த்தாவின் நம்பிக்கை. ஆனால், அது நடக்கவில்லை.

‘நாயகன்’, ‘தேவர் மகன்’ ரெண்டும் ‘காட் ஃபாதர்’, ‘ரோஷமான்’ல இருந்து ‘விருமாண்டி’... இதையெல்லாம்தானே இன்ஸ்பிரரேஷன்ஸுன்னு சொல்லித் தேத்திக்கிற? ஆனால், உங்க ஆண்டவரோட லிஸ்ட் ரொம்ப பெருசு தல!” - ப்ரேம் விடுவதாக இல்லை. தேநீர் குடித்தபடியே காப்பி பட்டியல் போட்டான்!

“ ‘எனக்குள் ஒருவன்’, ‘ராஜபார்வை’, ‘சதிலீலாவதி’, ‘குணா’, ‘அவ்வைசண்முகி’, ‘தெனாலி’... அய்யோ, யோசிக்கமாலே லிஸ்ட் நீளுதே... நெட்ல கொஞ்சம் அகழ்வாராய்ச்சி செஞ்சா ஒரு சினிமா லைப்ரரியே வைக்கலாம்.”

நக்கலான சிரித்த ப்ரேமுக்கு பக்க வாத்தியம் வாசித்த ப்ரியா, “ஆமா, கமலுக்கு ராபின் வில்லியம்ஸ் படங்களை மட்டுமல்ல; ராபின் வில்லியம்ஸ் நடிப்பைகூட ரொம்ப ஆழமா கவனிப்பாருன்னு நினைக்கிறேன். ஆனா, என்னதான் இருந்தாலும் ஒரிஜினல் ஒரிஜினல்தான் நிரூபிச்சிடுவாரு. ‘மிசஸ் டவுட் ஃபயர்’ல ராபின் வில்லியம்ஸ் லேடி இல்லைன்னு அந்தக் குழந்தை கண்டுபிடிக்கிற இடம் செம்மயா இருக்கும். ‘ஷி இஸ் ஹி... ஹி இஷ் ஷி...’, ஆனா ‘அவ்வை சண்முகி’யில அது ரொம்ப மொக்கையா இருக்கும்” என்றாள்.

“உங்களுக்கெல்லாம் நக்கலா இருக்கு. பாரதி சொன்னதை ஃபாலோ பண்றவங்களோட அருமை இப்போதைக்கு உங்களுக்குப் புரியாது!” என்று பகீர் கருத்து ஒன்றை முன்வைத்தான் பார்த்தா.

அதிர்ச்சியில் உறைந்த மேனகா, “கொஞ்சம் டீட்டெய்லா சொல்லேன் பார்த்தா!” என்றாள் ஆர்வத்துடன்.

“பாரதி என்ன சொல்லியிருக்கார்?”

‘...பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்...’

இது இலக்கியத்துக்கு மட்டுமில்லை. சினிமாவுக்கும் பொருந்தும். இன்டர்நெட், ஃபிலிம் ஃபெஸ்டிவல், டிவிடி, ராக்கர்ஸ், டாரன்ட் இல்லாத காலகட்டத்துல நம்ம நாட்டு மக்களுக்கு வெளிநாடுகளில் வெளியான நல்ல படங்களை நம்ம மொழியில பெயர்த்து நேரடியா தந்ததுக்கு நீங்க கொடுக்குற பட்டம்தான் காப்பியா?

சரிப்பா, அப்போதைக்கு என்ன ரூல்ஸ், புரொசீஜர்ஸ் தெரியல. இப்பல்லாம் அதிகாரபூர்வமாதானே நல்ல படங்களை நமக்குப் பெயர்த்து தர்றாரு. ‘தூங்காவனம்’ பாக்கலையா நீங்க?”

அப்போது குறுக்கிட்ட ஜிப்ஸி, “கடுப்பேத்தாத பார்த்தா! ‘ஸ்லீப்லெஸ் நைட்’டுன்ற பிரெஞ்ச் படத்தோட அதிகாரபூர்வ உரிமை வாங்கி ஃப்ரேம் பை ஃப்ரேம் அப்படியே எடுத்த படம்தான் ‘தூங்காவனம்’ ஒத்துக்குறேன். ஆனா, டைட்டில் கார்டுல ‘ஸ்லீப்லெஸ் நைட்’ ஸ்பெல்லிங்கைப் பார்க்குறதுக்குள்ளவே ஒரு கண்சிமிட்டும் நேரத்துக்குள்ள போட்டு தூக்குறது எல்லாம் ஓவரு” என்றான்.

“அதுகூடப் பரவாயில்லப்பா. ஓசில சுட்டுக்காம துட்டு கொடுத்து வாங்கிக்கிட்டாங்கன்னு வெச்சுப்போம். ஆனா, சம்பந்தமே இல்லாம கடைசி சீன்ல கமலும் த்ரிஷாவும் ஹீரோயிஸ பில்டப் காட்டுனதைத்தான் என்னால சகிச்சிக்கவே முடியல” என்று ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்தான் மூர்த்தி.

எப்படிப் பந்து போட்டாலும் பவுண்டரி விளாசுகிறார்களே என வருத்தமுற்றான் பார்த்தா. அப்போது கவிதா உள்ளே புகுந்தது அவனுக்குச் சற்றே ஆறுதல் தந்தது.

“உங்களுக்கு எல்லாம் காப்பி என்பதற்கும், எடுத்தாள்வது என்பதற்கும் வித்தியாசமே தெரியல.”

“இவனுங்களுக்கு விளங்குற மாதிரி நீ சொல்லு கவிதா” எனப் பெருமூச்சு விட்டான் பார்த்தா.

nayagan_3172957a.jpg

“அன்பே சிவம் மாதிரியான படங்கள் எல்லாமே எடுத்தாளப்பட்ட வகை. அது எல்லா ஊர் இலக்கியத்திலும் சினிமாவிலும் உண்டு. கமல் ஹாசனோட எத்தனையோ படங்கள், காட்சிகள், திரைமொழிகள் பலரால எடுத்தாளப்பட்டிருக்கே. இவ்வளவு ஏன்... ‘ஆளவந்தான்’ படத்துல வர்ற அசையும் காமிக்ஸ் மாதிரியான கிராஃபிக்ஸ் சீன்களைப் பார்த்துட்டு, கொடூரமான வன்முறையை மட்டுப்படுத்திக் காட்டுறதுக்காக அதே திரை உத்தியைத் தன்னோட ‘கில் பில்’ சீரிஸ்ல பயன்படுத்தி இருந்ததை டாரன்டீனோவே சொல்லியிருக்கார்னு நியூஸ் படிச்சிருக்கேன். அப்போ அதையும் காப்பின்னு சொல்லலாமே. முதல்ல காப்பிக்கும் எடுத்தாள்றதுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிஞ்சிக்கணும்” என்று கேன்டீனிலேயே விரிவுரையாற்றினாள் கவிதா.

“பார்த்தாவுக்குக் கவிதா சப்போர்ட்டா? உனக்குள்ள தூங்கிட்டுருக்க கமல் ஹாசன் பக்தர் வெளியே வந்தாச்சா?” என்று ப்ரேம் கலாய்த்தான்.

அசராத கவிதா, “இதோ பாரு, இப்போதைய நிலைமையை விட்ருவோம். நமக்கு சினிமாவுல நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்துருக்கிற நம்ம லெஜெண்ட்ஸ் பாலசந்தரும் பாலு மகேந்திராவும் ஒரு படத்தை எடுத்தாள்றதைப் பத்தியும், காப்பி அடிக்குறதைப் பத்தியும்கூட சொல்லிக் கொடுத்திருக்காங்க. அங்கிருந்துதான் தமிழ் சினிமாவின் ‘காப்பி’யங்கள் பத்தி பேசத் தொடங்கணும். ச்சும்மா, கமல் ஹாசன் மட்டும்தான் ‘காப்பி’ய நாயகன்ற ரேஞ்சுல பேசி குறை சொல்லியே மேதை ஆகலாம்னு உளறக் கூடாது...” என்று நீட்டினாள்.

காப்பி அடிக்கிறதுக்கும் பாலச்சந்தர் - பாலு மகேந்திராவுக்கும் என்ன சம்பந்தம்?

எல்லோர் மனதிலும் எழுந்தக் கேள்விக்கு நிதானமாக விளக்கத் தொடங்கினாள் கவிதா.

“சத்யஜித் ரேயைவிட எனக்கு ரொம்ப பிடிச்ச பெங்கால் டைரக்டர் ரித்விக் கட்டக். அவர் 1960-ல் இயக்கி வெளிவந்த படம் ‘மேக தக்க தாரா’. மேகங்கள் மறைத்த நட்சத்திரம்னு அந்த டைட்டிலுக்கு அர்த்தம்னு நினைக்கிறேன். அந்தப் படத்தை எடுத்தாண்டு மேற்கொள்ளப்பட்ட காப்பிதான் பாலச்சந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’. இங்க காப்பி என்பதும் நிகழ்த்தப்பட்டிருக்கும். எடுத்தாளுதல் என்பதும் நடந்திருக்கும். ஒரு படத்தை எப்படி எடுத்தாளணும் - தேவையான இடத்துல காப்பி அடிக்கணும்னு இந்த ஒரு படத்தை வெச்சு கத்துக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் ‘மேக தக்க தாரா’ எனும் அற்புதமான படத்தோட மிக மலிவான வெர்ஷன்தான் ‘அவள் ஒரு தொடர்கதை.’

ஒரு படத்தைக் காப்பி அடிக்கும்போதோ அல்லது எடுத்தாளும்போதே அந்தப் படத்தின் கதைக்கும் திரைக்கதைக்கும் மதிப்பு குறையாம பாத்துக்கணுன்றது மிகக் குறைந்தபட்ச நேர்மை. அது ‘அவள் ஒரு தொடர்கதை’யில் துளியும் ஃபாலோ பண்ணல. ஆனால், அந்த நேர்மை கமல் ஹாசன்கிட்ட நிறையவே இருக்கும். அவர் கதையையும் கதாபாத்திரங்களையும் சீர்குலைக்க மாட்டார். கொஞ்சம் ஹீரோயிஸம் கூட்ட ட்ரை பண்ணுவாரே தவிர ரொம்ப மோசமா அணுக மாட்டார்.”

“சரி, கமல் ஒரு பக்கம் இருக்கட்டும். நீ ‘அவள் ஒரு தொடர்கதை’மேட்டரைக் கொஞ்சம் டீட்டெய்லா சொல்லு” என்றாள் கீர்த்தி.

கவிதா இந்த சினிமா உலகத்துக்கு ஏதோ சொல்ல வருகிறாள் என்கிற ரீதியில், அவளை உற்று நோக்கிக்கொண்டிருந்தனர் எல்லோரும்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமாலஜி-07-தமிழ்-சினிமாவின்-காப்பியங்கள்/article9722717.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

சினிமாலஜி 08 - ‘அவள் ஒரு தொடர்கதை’யில் படுகொலைகள்!

 

 
cinemalogy_3175570_3175649f.jpg
 
 
 

‘மேக தாக தாரா’ கதையை விவரிக்கத் தொடங்கினாள் கவிதா.

“ஒரு ஏழைக் குடும்பம். தம்பி, தங்கை எல்லாருக்குமே நீதாவின் சம்பளம்தான் வாழ்வாதாரம். அண்ணனுக்குப் பாடகனாவதே லட்சியம். கலை மீது கொண்ட மோகத்தால் குடும்பப் பொறுப்பைச் சுமக்க மறுக்கிறான். நீதா ஒற்றை ஆளாக மொத்தக் குடும்பத்துக்கும் சோறுபோடுகிறாள்.”

“ஆமா, இதே மாதிரி தானே ‘அவள் ஒரு தொடர்கதை’யும்?!” என்று ஆர்வமானான் பார்த்தா.

“ஆனா, தமிழ்ல பல படுகொலைகள் நடந்திருக்கு. நீதாவின் காதலன், அவள் தங்கையை மணப்பது பக்குவமான உணர்வுபூர்வ விஷயம். ‘அவள் ஒரு தொடர்கதை’யில ரொம்ப கேவலமா காட்டியிருப்பாங்க. ஸ்ரீப்ரியாவோட நிழல் தெரியும். அது ரொம்ப செக்ஸியா இருக்கும். அதைப் பார்த்து கவிதாவின் காதலன் திலக் கவிழ்ந்திடுற மாதிரி இருக்கும். என்ன கொடுமை இது?”

“நீதான் சொன்னியே. எடுத்தாளுறதுண்ணு. அதான் இது” என்று நக்கலாகச் சொன்னான் மூர்த்தி.

“உன் பேர்லயே அந்தப் படத்துல ஒரு கேரக்டர் இருக்கும். ஜெய்கணேஷ் நடிச்சிருப்பாரு. குடிகாரனா, உதவாக்கரையா சித்தரிச்சிருப்பாங்க. கடைசில திருந்துற மாதிரி காட்டிட்டு க்ளோஸ் பண்ணிடுவாங்க. அந்த கேரக்டர்தான் ரொம்ப ரொம்ப மட்டமான தன்மை கொண்டது. கவிதா கேரக்டரைத் தூக்கிப் பிடிக்கிறதுக்காக, அவளோட அண்ணனான மூர்த்தியோட கதாபாத்திரத்தையே கொச்சைப்படுத்தியிருப்பாங்க.”

இன்னும் நம் கவிதாவின் ஆத்திரம் அடங்குவதாக இல்லை. “உண்மையிலேயே ‘மேக தாக தாரா’வுல நீதாவை முழுசா புரிஞ்சிகிட்ட ஒரே ஜீவன் அவளோட அண்ணன்தான். தான் வெளியூர் போய்ப் பெரிய பாடகனாகிட்டு ஊருக்குத் திரும்புனதும் நீதாவோட நிலைமையைப் பார்த்துட்டுத் துடிச்சிப் போயிடுவான். காசநோயுடன் மனசு உடைஞ்சு சீர்குலைஞ்சுபோன தங்கையை அவன்தான் மீட்டெடுப்பான். எவ்ளோ அற்புதமான கேரக்டரை எப்படித்தான் அசாசினேட் பண்ண மனசு வந்துச்சோ” என்று பொங்கினாள் கவிதா.

“சரி விடும்மா, ஒருவேளை அந்த அண்ணன் தமிழ்நாட்ல பொறந்திருந்தா அப்படித்தான் இருந்திருப்பான்போல. இதல்லாம் ஒரு மேட்டரா? நம்ம சமூகச் சூழலை எவ்ளோ சிறப்பா நம்ம ‘அவள் ஒரு தொடர்கதை’ பிரதிபலிச்சுது? இதைவிட வேறென்ன வேணும்?”

“கிழிச்சிது. அதுல முதல் சீன்... நீதா வேலைக்குப் போவா. அவளோட ரப்பர் செருப்பு பிஞ்சிடும். அதை பின் குத்தி சரி பண்ணிட்டு நடந்து போவா. தமிழ்ல அதே சீனை பஸ்ல வெச்சிருப்பாங்க. நீதாவோட கதை முடிஞ்சதும், அதே மாதிரி ஒரு சீன். ஆனா, அது வேற ஒரு இளம்பெண். அதாவது, நீதாக்கள் பிறந்துட்டே இருக்காங்க. நம்ம சமூக நிலைமை அப்படியே இருக்குன்னு இதைவிட சிறப்பா எப்படிக் காட்ட முடியும்? ஆனா, தமிழ்ல அதே கவிதாவை கடைசில முதல் சீன்ல காட்டின மாதிரியே காட்டி, தன்னோட கேரக்டர் மீது மட்டும் இரக்கம் வர வைக்கிறமாதிரி ரொமான்டிசைஸ் பண்ணியிருப்பாங்க. இதான் கொடுமை” என்று சற்றே அடங்கினாள் கவிதா.

“இந்த விஷயத்துல பாலுமகேந்திரா எவ்ளோ பெட்டர்னு தோணுது. ‘ரெட்டைவால் குருவி’, ‘ஜூலி கணபதி’ மாதிரியான ‘காப்பி’யங்களை எந்த விதமாவும் சீர்குலைக்காம அப்படியே அச்செடுத்திருப்பார்” என்று கிளப்பிவிட்டான் ப்ரேம்.

“இதுல காப்பியின் உச்சம்னா, அது ‘ஜூலி கணபதி’தான். ஃப்ரேம் பை ஃப்ரேம் உருவப்பட்டிருக்கும். அந்தப் படத்தைப் பார்த்துட்டு மிரண்டு போயிட்டேன். ச்சே... பாலுடா!-ன்னு காலரைத் தூக்கிவிட்டுக்கிட்டேன். கொஞ்ச நாள் கழிச்சி டிவில ‘மிசரி’-ன்னு ஒரு படம் பார்த்தேன். செத்துட்டேன். அப்படியே ஜூலி கணபதியை அட்ட காப்பி அடிச்சியிருந்தாங்க. அப்புறம்தான் தெரிஞ்சுது, மிசரி ரீலீஸ் ஆனது 1990. ஜூலி கணபதி 2003” என நொந்தான் பார்த்தா.

“இன்னொரு கொடுமை... ஜூலிகணபதியில சரிதா செம்மயா நடிச்சிருப்பாங்க. அவங்களோட ஈடுபாடும் அர்ப்பணிப்பும் எவ்ளோ வேஸ்ட் ஆவுது. இந்த மாதிரியான திறமையை அசலான படத்துல காட்டுற வாய்ப்புக் கிடைச்சா அது அவங்களுக்கு ரொம்பப் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்தானே!” என்று கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னாள் மேனகா.

“உங்களை எல்லாம் பார்த்தா, பெரிய பெரிய ஜாம்பவான்களை காப்பின்னு கழுவியூத்தியே தங்களை அறிவுஜீவின்னு காட்டிக்கிற கோஷ்டியோன்னு டவுட்டா இருக்கு” என்று சூடானான் மூர்த்தி.

“அப்படி இல்லை மூர்த்தி. இங்க மட்டும் இல்லை, எல்லா நாட்டுலயுமே காப்பின்றது தொன்றுதொட்டு வந்துட்டுதான் இருக்கு. பாலச்சந்தரும் பாலுமகேந்திராவும் எப்பவுமே நாம கொண்டாட வேண்டிய லெஜெண்ட்ஸ்தான். அவங்க நமக்குக் கொடுத்துட்டுப் போன பொக்கிஷங்கள் ஏராளம். ஆனா, அவங்க கிட்டயும் இன்ஸ்பிரேஷன் - காப்பி மேட்டர்ல தடுமாற்றம் இருந்திருக்கு. அது இன்னிக்கு வரைக்கும் நீடிக்குது. அதைத்தான் சொல்ல வந்தேன்” என்றாள் கவிதா.

“இதெல்லாம்கூடப் பரவாயில்லை. நீங்கள்லாம் கேள்விப்படாத, தியேட்டருக்கு வந்ததே தெரியாத எவ்ளோ காப்பிப் படங்கள் இருக்கு. அதுல ரெண்டு மூணு படங்கள் பார்த்து நான் நூடுல்ஸான அனுபவங்களைக் கேட்டா, உங்க காதுல ரத்தம் வரும். அதெல்லாம் சுட்ட படத்தைப் பார்த்து சூடு போட்டுகிட்ட சொல்லப்படாத உண்மைக் கதை” - இது பார்த்தா.

மேலும் தொடர்ந்தவன், “ஒருநாள் யூடியூப்ல பெருசு-ன்ற படத்தை பார்ட் பார்ட்டா பார்த்தேன். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு. இந்த மாதிரி ஒரு படத்தைத் தமிழ் சினிமா ரசிகர்கள் ஏன் கொண்டாடலைன்னு வருத்தப்பட்டு, நண்பர்களுக்கு லிங்க் அனுப்பினேன். அதுல ஒருத்தன் என்னை வெச்சி செஞ்சிட்டான். அப்புறம்தான் தெரிஞ்சுது அது ‘சிட்டி ஆஃப் காட்’ படத்தோட ஜெராக்ஸுன்னு. அதுகூடப் பரவாயில்லை. ‘லியோன்’ படத்தைப் புரட்டிப் போட்டு ‘சூர்ய பார்வை’ன்னு அர்ஜுன் நடிச்ச படத்தைக் கூட விட்ருலாம். ஆனால், அவரோட ‘துரை’ எதுல இருந்து காப்பி அடிச்சதுன்னு சொன்னா நீங்கள்லாம் சினிமாலஜி கோர்ஸுக்கே முழுக்குப் போட்டுடுவீங்க?”

“அப்படி என்ன படம்?” என ஆர்வம் காட்டினான் ப்ரேம்.

“கிளாடியேட்டர். அது என்ன மாதிரியான படம்! அந்தப் படக் கதையை அப்படியே ராவிட்டு ‘துரை’யா எடுத்த விதம் இருக்கே... அதெல்லாம் நமக்கு வாழ்க்கைப் பாடம்டா. முடியல...” என்று புலம்பினான் பார்த்தா.

“எனக்கும் அப்படி நிறைய அனுபவம் இருக்கு. அதுல அல்டிமேட் ‘காதல் கிறுக்கன்’. ரிச்சர்டு கியர், எட்வர்ட் நார்டன் அசத்துன ‘பிரைமல் ஃபியர்’ படத்தைக் கலைச்சிப் போட்ட அந்தப் படத்துல பார்த்திபனும் வினீத்தும் நடிச்சிருப்பாங்க. செம்ம காமடி அது. ம்... இப்பவும் காப்பி போடுறது நிறைய நடக்குது. ஆனா, கொஞ்சம் நாசூக்கா நடக்குது. கடந்த சில ஆண்டுகளை எடுத்துப் பார்த்தா, நாம கத்துக்குறதுக்கு நிறைய ஸ்கோப் உள்ள மேட்டர்களும் இதுல அடங்கியிருக்கு” என்று தன் பங்குக்குக் குறிப்பு ஒன்றைக் கிள்ளிப் போட்டான் ப்ரேம்.

எல்லோரும் ஆர்வமாக இருக்க, அவனே தொடர்ந்தான். “எஸ்.பி.ஜனநாதன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கினோட சில படங்களை ரெஃபரன்ஸா எடுத்துகிட்டா, இன்ஸ்பிரேஷன்ஸ் - காப்பி பற்றி இன்னும் ஆழமா கத்துக்க முடியும்?”

“என்னது... எஸ்.பி.ஜனநாதனா?” - வாய்ப்பிளந்தான் மூர்த்தி.

அவன் வியப்பு அடங்குவதற்குள் ‘இயற்கை’, ‘பேராண்மை’ பற்றிப் பேசத் தொடங்கினான் ப்ரேம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமாலஜி-08-அவள்-ஒரு-தொடர்கதையில்-படுகொலைகள்/article9727785.ece

Link to comment
Share on other sites

சினிமாலஜி 09 - சினிமாவுக்கு இதுவும் அவசியம்!

 
ஸ்ட்ரே டாக்ஸ் (Stray Dogs)
ஸ்ட்ரே டாக்ஸ் (Stray Dogs)
 
 

“நான் ரொம்பவே மதிக்கிற இயக்குநர்களில் ஒருத்தர் எஸ்.பி.ஜனநாதன். அவரைப் போய் காப்பி விஷயத்துல கோக்குறது சரியில்லை” என்று ஆதங்கப்பட்டான் மூர்த்தி.

“இப்ப இதுவரைக்கும் நாம பேசின படைப்பாளிகளில் யாரையுமே நாம குறைச்சி மதிப்பிடலை. எத்தனை பெரிய இயக்குநர்களா இருந்தாலும் காப்பி - இன்ஸ்பிரேஷன்ஸ் மாதிரியான விஷயங்களில் ஒருவிதக் குழப்பம் நீடிச்சிட்டு இருக்குன்னுதான் சொல்றோம். நம்ம முக்கியப் படைப்பாளிகள் எல்லாருமே தனித்துவத்தோட இயங்குறவங்கதான். அவங்களைப் பாதிக்கிற படைப்புகளை ஏதோ ஒரு விதத்துல ஆராதிக்கணும், தன்னோட மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கணும்ன்ற உந்துதலில்தான் அப்படிச் செய்றாங்க. ஆனா, சில நேரங்களில் அது சொதப்பிடுது. அவ்வளவுதான்” என்று கொந்தளிப்பைத் தணித்தாள் கவிதா.

1_3178145a.jpg

“சரி, இப்ப நான் பேசலாமா?” என்று மெல்லிய குரலில் அனுமதி கேட்டுத் தொடங்கினான் ப்ரேம்.

“1972-ம் ஆண்டு வெளியான ரஷ்ய படம் ‘தி டான்ஸ் ஹியர் ஆர் கொயிட்’ (The Dawns Here Are Quiet). இதே தலைப்பில் போரிஸ் வசீலியெவ் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். இரண்டாம் உலகப் போர் நடந்தப்ப 1941-ல் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும் சதித் திட்டத்துடன் கரேலியாவுக்கு ஜெர்மெனிப் படையினர் 16 பேர் வர்றாங்க. காட்டுப் பகுதியில் அவர்களைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்குகிறது ஒரு சிறு குழு. வான்வழித் தாக்குதல் தடுப்பில் பயிற்சி பெறும் 5 பெண்களுடன், அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் பயிற்சியாளரையும் சேர்த்தால் ஆறு பேர். இப்போ ‘பேராண்மை’நினைவுக்கு வருதா?” என்று கேட்டான் ப்ரேம்.

“இதான் படத்தை ஒழுங்கா பாக்கணும்ன்றது. டைட்டில் கார்டுலயே ‘அதிகாலையின் அமைதியில்’ படைப்புக்கு கிரெடிட் கொடுத்திருப்பாங்க” என்று நக்கல் தொனியில் சொன்னான் மூர்த்தி.

“ஹி ஹி... நான் ரெண்டாவது தடவை பார்க்கும்போது கவனிச்சேன். ‘அதிகாலையின் அமைதியில்’ நினைவுகளுடன்-னு போட்டிருப்பாங்க. எவ்ளோ சேஃப் கேம். அந்த ஒரிஜினல் நாவலைத் தழுவி எடுத்திருந்தால்கூட எடுக்கிற காட்சிகளில் வித்தியாசம் காட்டியிருக்கலாம். ஆனால், அந்தக் காட்டுப் பகுதியில் நடக்குற அத்தனை காட்சிகளும் ஃப்ரேம் பை ஃப்ரேம் அப்படியே ரஷ்ய படத்துல இருந்து ஜெராக்ஸ் பண்ணியிருப்பாங்க. இதுக்குப் பேருதான் நினைவுகளுடனா?” - மடக்கினான் ப்ரேம்.

“நீ இன்னும் சரியா டைட்டில் கார்டு ஒழுங்காவே பார்க்கல. கதை, வசனம், இயக்கம் மட்டும்தான் எஸ்.பி.ஜனநாதன். திரைக்கதை என்.கல்யாண்கிருஷ்ணன்” - மூர்த்தியை ஆதரித்தான் பார்த்தா.

2_3178144a.jpg

“வாங்க, தோழர் பார்த்தா! அதெப்படி, கதை - வசனம் எழுதி இயக்கியவருக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாம திரைக்கதை உருவாகியிருக்கா? ஆனாலும், இயக்குநரின் நேர்மையை மெச்சிக்கிறேன். என்னதான் இருந்தாலும் நானும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மிகப் பெரிய ரசிகன்தான். ‘பேராண்மை’யின் காப்பித்தன்மை வேணுன்னா எனக்கு அதிருப்தி தரலாம். ஆனா, ‘இயற்கை’ படத்தை அவர் கையாண்ட விதம் ஒண்ணு போதும், அவர் எனக்கு ஆல்டைம் ஃபேவரைட்டா இருக்க!”

“அதென்ன ‘இயற்கை’ மேட்டர். அது ‘வெண்ணிற இரவுகள்’ நாவலில் இருந்து இன்ஸ்பையர் ஆனதுதானே?”

மேனகாவின் ஆர்வம் அடங்குவதற்குள் சொல்லத் தொடங்கிய ப்ரேம், “அதுவும் கரெக்ட்தான். ஆனா, அது வெறும் மேலோட்டமான விஷயம். 2001-ல் வெளியான டச்சு படம் மகோனியா (Magonia). யதேச்சையா யுடிவி வேர்ல்ட் மூவீஸ் சேனல்ல ஒருநாள் பார்த்தேன். மூன்று வெவ்வேறு கதைகள் கொண்ட சினிமா. அதுல ஒண்ணோட கதை இதுதான்: கடலும் கடல் சார்ந்த துறைமுகப் பகுதி.

அவள் ஒரு பேரன்பும் பேரழகும் மிக்கவள். பாலியல் தொழிலாளின்னு நினைக்கிறேன். தன்னைக் காதலித்த மாலுமிக்காக 6 ஆண்டு காலமாகக் காத்திருப்பாள். அவளிடம் தொழில் நிமித்தமாகப் போய், அவள் அழகிலும் அரவணைப்பிலும் மயங்கி ஓர் இளைஞன் காதலிப்பான். அவளுக்கும் அவன் மேல அன்புதான். ஆனாலும் அந்த கேப்டனுக்காக வெயிட் பண்ணுவா. ஒரு வழியா கன்வின்ஸ் ஆகுற ஸ்டேஜில முன்னவன் வந்துடுவான். சுபம்...” என்று இழுத்தான் ப்ரேம்.

“இயற்கை படத்துக்கும் கல்யாண்கிருஷ்ணன்தான் திரைக்கதை. தமிழ்ல புத்தம்புது களத்துல அற்புதமா தரப்பட்ட ஒரு படைப்பை தெரியாத ஒரு படத்தோட முடிச்சிப் போடுறது எல்லாம் ஓவர்” என்று பொங்கினான் பார்த்தா.

“ஆமா, ‘இயற்கை’ ஓர் அற்புதமான படம். நான் ஒத்துக்கிறேன். ஜஸ்ட் என்னோட எக்ஸ்பீரியன்ஸைச் சொன்னேன். ஒருவேளை, மகோனியாவுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாம கூட இருக்கலாம். ஒரே மாதிரி பலரும் சிந்திக்கிறதும் யதேச்சையான விஷயம்தானே. ஆனாலும், இயக்குநர் ஜனநாதனின் நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு தோழர் பார்த்தா!” என்று இந்த விவகாரத்தை முடிக்க முயன்றான் ப்ரேம்.

“அது இருக்கட்டும். கவுதம் வாசுதேவ் மேனன் சொன்னியே... ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’தானே? ‘டிரெயில்டு’ படத்தோட அட்டக்காப்பி. அதைத்தானே சொல்லப் போற” என்று முந்திக்கொண்டான் மூர்த்தி.

“ ‘காக்க காக்க’ கடைசி காட்சிகளில் வர்ற தலை துண்டிப்பு மேட்டர் எல்லாம் ‘செவன்’லயே பார்த்தாச்சு. ‘வேட்டையாடு விளையாடு’ உட்பட பல படங்களில் செம்ம சீன்ஸ் எல்லாம் வெவ்வேறு படங்களிலிருந்து உருவினதுதான். ‘நடுநிசி நாய்கள்’ அப்படியே ‘சைக்கோ’வின் பிரதியா இருந்தாலும் ரொம்ப தைரியமான முயற்சி. யாரும் தொடுறதுக்குத் தயங்குற உறவுமுறை உளவியல் சிக்கலைக் கையாண்ட விதத்துக்கே அந்தப் படத்தை வரவேற்கலாம்.

கவுதம் மேனனுக்குப் பிடிச்ச மாதிரி கதையும் ஸ்கிரிப்ட்டும் கிடைச்சாலுமேகூட, அவரைப்போல தமிழ்ல ஸ்டைலிஷா படம் எடுக்க யாருமே இல்லைன்றதுதான் உண்மை. காப்பி மேட்டர் பத்தி பேச ஆரம்பிச்சா, அது ரொம்ப நீண்டுகிட்டே போகும். பேசிப் பேசியே டயர்டு ஆகிடுவோம். பரவாயில்லையா?” என்று அலுத்துக்கொண்டான் ப்ரேம்.

“முடிவா என்னதான் சொல்ல வர்ற? எப்படி காப்பியடிச்சா ஓகே? உருப்படியான இன்ஸ்பிரேஷனுக்கு சமீப உதாரணம் ஏதாவது சொல்ல முடியுமா?” - இது கவிதா.

“8 தோட்டாக்கள்... பணம் மட்டுமே முக்கியா இருக்குற நம்ம சமூகத்தால பாதிக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதர் வசப்படுத்திய போலீஸ் துப்பாக்கி குறிவைக்கிற 8 தோட்டாக்கள்தான் கதைக்கரு. ஒரு சோஷியல் - க்ரைம் திரில்லரா நம்ம சூழலுக்கு ஏத்த மாதிரி திரைக்கதை நகர்த்தப்பட்ட விதம் அபாரம். 1940-ல் வெளிவந்த ஜப்பானிய திரைப்படம் ‘ஸ்ட்ரே டாக்’ (Stray Dog). அகிரா குரசோவா இயக்கிய அந்தப் படத்தோட கதையை நகர்த்துற மையத்தை மட்டும் எடுத்துட்டு முழுக்க முழுக்க நமக்கு ஏத்த மாதிரி திரைக்கதையை அமைச்சி ‘8 தோட்டாக்கள்’ எடுக்கப்பட்டிருக்கு.

8_thottakal_3178143a.jpg

அகிராவுக்கு மட்டும் இல்லாமல் வேற யாரெல்லாம், எந்தப் படமெல்லாம் இன்ஸ்பைரிங்கா இருந்துச்சோ எல்லாத்துக்குமே படம் முடிவில் கிரெடிட் கொடுத்திருப்பாங்க. இதான் நேர்மையான அணுகுமுறைக்கு அழகு. ஒரு சிறந்த சினிமா படைப்பாளி காப்பி பண்ண விரும்ப மாட்டார்; எடுத்தாளுதல் மூலமா உருப்படியான சினிமாவைத் தர முயல்வது அவசியம்.”

“சரி ப்ரேம்... மிஷ்கின் பத்தி ஏதோ சொல்ல வந்தியே?!” - கிளறினான் பார்த்தா.

“அதான் கூடிய சீக்கிரமே அவரை மீட் பண்ணப் போறோமே... அப்ப வெச்சிக்கலாம். இப்ப க்ளாஸ் போகலாம்” என்று கேன்டீனில் இருந்து எழுந்தான் ப்ரேம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமாலஜி-09-சினிமாவுக்கு-இதுவும்-அவசியம்/article9734142.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

சினிமாலஜி 10 - எச்சரிக்கை! இது படமல்ல...

 

 
 
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் சிம்பு
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் சிம்பு
 
 

சினிமாலஜி வகுப்பறையில் பேரமைதி. உறவை இழந்த பெருந்துயரத்தில் இருந்து மீளமுடியாத துக்கத்தை ஒத்த துன்பியல் பார்வையைப் பக்குவமாக மறைக்க முயன்று தோற்றார் சலீம் சார்.

“இந்த மாதிரி ஒரு வாய்ப்பு எப்பவாச்சும்தான் கிடைக்கும். அது இப்ப உங்களுக்குக் கிடைச்சிருக்கு. உங்க எல்லாருக்கும் தனித்தனியா டிக்கெட் போட்டாச்சு. வந்து வாங்கிக்கலாம். சினிமாவைப் பார்த்து சினிமாவைக் கத்துக்கிறது ரொம்ப முக்கியம். அப்படி ஒரு படத்தை இப்பப் பார்க்கப் போறீங்க. நேத்தே இந்தப் படத்தைப் பார்த்துட்டேன். என்னால இயல்பா இருக்க முடியல. இந்த டிக்கெட்டுகளை உங்ககிட்ட கொடுத்துட்டு வீட்டுக்குப் போயிடலாம்னுதான் இப்ப கிளாஸுக்கே வந்தேன். இன்னிக்குப் படம் பாருங்க. இரவு முழுக்க இந்தப் படத்தைப் பத்தி எழுதுங்க. நாளைக்குக் காலைல எனக்கு நீங்க ரிப்போர்ட் சப்மிட் பண்ணனும்.”

விம்மி விம்மி பேசியவர் முன் சென்ற பார்த்தா, ‘கட்டளையே சாசனம்’ என்று தன் டிக்கெட்டை வாங்கிப் பார்த்து திடுக்கிட்டான். அந்தப் படத்தின் பெயர்: ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’.

மறுநாள். வகுப்பறையில் மயான அமைதி. ஒவ்வொருவரின் திரைப் பார்வைக் கட்டுரைகளையும் நிதானம் தவறாது வாசித்துக்கொண்டிருந்தார் சலீம் சார். அந்தத் திரை அனுபவப் பார்வைகளின் துளிகள் இதோ:

ப்ரேம்:

‘துபாய் - விவேகானந்தர் தெருவுக்குள் தொடங்கும் கதைக்களத்தை அறிமுகப்படுத்திய விதம் ஆகச் சிறப்பு. இல்பொருள் உவமை அணியைத் திரைமொழியில் புகுத்தும் விதமாக ‘டான்’ என்பவரைக் காட்டாமல், அந்த டான் குறித்த பிம்பத்தைப் பார்வையாளர்களிடம் கட்டமைத்ததை ‘காட்ஃபாதர்’ வகையறா படக்குழுக்கள் பார்த்துத் திருந்தத்தக்கது. பெண் அதிகாரியின் தோற்றமும் பாவனையும் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஹாலிவுட்காரர்கள் சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்து கஸ்தூரி கதாபாத்திரத்தைக் காண வேண்டும்...’

கவிதா:

‘... சமகால சமுதாயத்தில் பெண்களை பாலியல் வக்கிரப் பார்வையுடன் அணுகுவதையும், இழிவுபடுத்துவதையும் அழுத்தம் திருத்தமாகக் காட்சிக்குக் காட்சி காட்டியிருப்பது, ‘ட்ரிபிள் ஏ’ஒரு சமூக அக்கறை மிகுந்த படைப்பு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. குறிப்பாக, புரொட்டகனிஸ்ட்டாக வலம் வரும் சிம்புவை வைத்தே பெண்களைக் கீழ்த்தரமாக கலாய்த்திருப்பது துணிகரச் செயல். தன் இமேஜுக்காகப் பெண்களை மதிப்பது போல் திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் பாசாங்கு இல்லாத நேர்மையாளராகவே சிம்புவைக் கருத வேண்டியுள்ளது..’

மூர்த்தி:

‘படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை குறியீடுகளால் கோட்பாடுகள் பலவற்றையும் முன்வைக்கிறது ‘அஅஅ’. குறிப்பாக, அஸ்வின் தாத்தா தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் அவர் போட்டுள்ள டி-ஷர்ட்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். ‘டபுள் ட்ரபிள்’ என்று பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணியும்போது தற்கொலை எண்ணம் உள்ள காதலர் ஒருவரை மீட்கிறார். அங்கே காதல் குறித்த உளவியல் சிந்தனைகளை உதிர்க்கிறார். ‘சூப்பர்மேன்’ எனப் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிந்த இடத்தில் ஓர் ஆண் மகன் என்பவர் யார் என்பது நிறுவப்படுகிறது. இப்படிப் படம் முழுக்கக் குறியீடுகள் மூலம் பார்வையாளர்களுக்குத் தெளிவு பிறக்க வழிவகுக்கப்பட்டுள்ளது...’

ப்ரியா:

‘...யாரோ கேஸ்பர் நோவாவாம். 2015-ல் ‘லவ்’ என்ற படத்தை எடுத்துத் தெறிக்கவிட்டாராம். அவர் போன்றவர்கள் கவனிக்க வேண்டிய உன்னதப் படைப்பாளி ஆதிக் ரவிச்சந்திரன். தலை நரைத்த காலத்தில் எது காதல்? எது காமம் என நம் சமூகத்தின் மீது கேள்விகளால் பொட்டில் அறைவதோடு நின்றுவிடவில்லை; அந்தக் கேள்விக்கான விளக்கமாகவே அந்த ‘ஓர் இரவு போதும்’ என்ற பாடல் மூலம் உணர்வுகளின் உன்னதம் போற்றப்படுகிறது...’

மேனகா:

‘...ஒரு திரைக்கதையில் லாஜிக்கை எப்படித் துருத்தாமல் பார்வையாளர்களிடம் கடத்துவது என்பதை இப்படம் மூலம் கற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. அஸ்வின் தாத்தாவுக்குத் துருத்தாமல் மேக்கப் போட்ட ரெஃபரன்ஸுக்காக ஹாலிவுட்காரர்களை கோலிவுட் நிச்சயம் வரவழைக்கும். ‘இந்த கேரக்டர் 55 வயது தாத்தா தானா?' என்று பார்வையாளர்கள் மனதில் சந்தேகம் எழும்போதெல்லாம், வேறொரு கேரக்டரை வைத்து ‘அஸ்வின் தாத்தா’என அழைக்க வைத்த உத்தியே படைப்பாற்றலுக்குச் சான்று. இதை ஒவ்வொரு காட்சியிலும் செய்துகாட்டியிருப்பது உலகத் தரத்தை இடக்கையால் ஒதுக்கிவைப்பதற்குச் சமமானது...’

ஜிப்ஸி:

‘ரஜினியும் கமலும் சேர்ந்த கலவைதான் சிம்பு என்பதை உலகுக்குச் சொல்வதற்குக் கையாண்ட விதம் அருமை. தேவாவே தன் உடல்நலனைச் சொல்வதுபோல் கமலும் ரஜினியும் கலந்தவர்தான் சிம்பு என்று சிம்புவே சொல்வது தன்னடக்கத்தின் உச்சம். அதை நிரூபிக்கும் விதமாக, ஒவ்வொரு மிரட்டல் காட்சிகளிலும் தலையை ஸ்டைலாகக் கோதி ‘சிறப்பு’ உரைக்கிறார். இது ரஜினி என்பது மெய்ப்பிக்கப்படுகிறது. உலகக் காவியங்கள் இதுவரை கண்டிராத ட்விஸ்ட் ஒன்றை தமன்னா கேரக்டர் அவிழ்த்துவிடும் காட்சி. அஸ்வின் தாத்தா மீதான காதல் உண்மையா பொய்யா எனத் தெரிய வரும் அந்தத் திருப்பத்தில், சிம்புவைப் போலவே பார்வையாளர்களும் எப்படி உணர்வுகளை வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் திக்குமுக்காடுகிறோம். இந்த இடத்தில் அபூர்வ சகோதரர்கள் அப்புவை நம் கண்முன்னே காட்டி, தான் கமல்ஹாசனுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை அற்புதமாக நிரூபிக்கிறார் சிம்பு...’

ரகு:

‘...ஒரு படைப்பு என்பது சமகாலத்தில் இளம் சமூகத்தையும் மூத்த சமூகத்தையும் சீரழிக்கும் அவலங்களைச் சுட்டிக்காட்டும். இதை மிகக் கச்சிதமாகச் செய்திருக்கிறது இப்படம். ஆம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ஸ்மார்ட் போன், இணைய ஊடக சிலிர்ப்புச் சமாச்சாரங்களின் தீவிரத்தன்மையைப் படம் நெடுகிலும் இழையோடவிட்டது படக்குழுவின் பக்குவத்தின் உச்சம்...’

கீர்த்தி:

‘...இந்திய சினிமாவுக்கு மிக முக்கிய பலம் சேர்க்கும் அம்சம் என்றால் அது வசனம்தான். சீரிய வசனங்களை உள்ளடக்கிய இப்படம் நம் சென்சார் துறையைப் பகடி செய்திருப்பதை மிகச் சிலர்தான் கவனித்திருக்கக் கூடும். சென்சார் கத்தரி நறுக்குவதற்கு முன்பே தனக்குத் தானே பீப் ஒலி இட்டுக்கொண்டு பல காட்சிகளில் வசனங்களை மறைத்ததை மறுமுறை படம் பார்க்கும்போது கவனிக்க வாய்ப்புண்டு...’

பார்த்தா:

‘..... ....... ....... ......’

பார்த்தாவின் பார்வைக் கட்டுரை முழுவதுமே இங்கே சென்சார் செய்யப்படுகிறது. அதேவேளையில் அவரது ஃபேஸ்புக் பதிவு இங்கே:

‘அது ஒரு காம்ப்ளக்ஸ். ரம்ஜான் தினத்தில் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்காக ஸ்க்ரீன் 5-க்குள் நுழைந்தேன். அதிர்ச்சி. தியேட்டருக்குள் நான் ஒருவன் மட்டுமே. திரையில் ஒலித்த தேசிய கீதத்துக்கு நான் எழுந்து நின்று தேசபக்தியை வெளிப்படுத்தியதைக்கூட யாரும் பார்க்கவில்லை. படம் தொடங்கி 10 நிமிடம் கழித்து ஒரு காதல் ஜோடி என நம்பப்படும் இருவர் வந்தனர். பின்வரிசையில் தங்களுக்காக சீட்டில் அமர்ந்தார்கள். இடைவேளை. அவர்கள் வெளியே சென்றபோது ஒரு கோரிக்கை வைத்தேன்: ‘திரும்ப வந்துடுங்க. தனியா மீதிப் படத்தைப் பார்க்க பயமா இருக்கு’. அந்தப் பேரன்புக்காரர்கள் மீண்டும் வந்துவிட்டது பெருமகிழ்ச்சி. ஓர் உயிருக்கு உறுதுணையாக இருக்க சில உயிர்கள் இந்த உலகில் உள்ளன என்பதை உணர்ந்த தருணம் அது. வாழ்க மனிதம்.’

கடைசியாக ஒரே ஒரு குறிப்பு. சினிமாலஜி மாணவர்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக தங்கள் கட்டுரையின் கடைசிப் பகுதியில் குறிப்பிட்ட வரிகள் இவை:

‘அஅஅ’... சினிமா மாணவர்களுக்கே உரித்தான குறிஞ்சிப் பூ. ஒரு திரைப் படைப்பாளி ஒரு சினிமாவை எப்படி எடுக்கக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்வதற்குத் தேவையான அரிய பாடங்களைச் சொல்லித் தரும் படம் இது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமாலஜி-10-எச்சரிக்கை-இது-படமல்ல/article9742591.ece

Link to comment
Share on other sites

சினிமாலஜி 11 - தல, தளபதிகள் தேவை... ஏன்?

 
 
thala_thalapathy_3183496f.jpg
 
 
 

"உங்களில் யாரெல்லாம் அஜித், விஜய் ரசிகர்கள்?"

சலீம் சாரின் விவேகமான கேள்வியில் வகுப்பறையே மெர்சல் ஆனது. ரெண்டு பேரைத் தவிர எல்லாருமே கை தூக்க, "ஓ மை காட்... நீங்களும் இவங்களோட ரசிகர்களா?" என்று அப்பாவியாகக் கேட்டார்.

"அது வேற டிபாட்மென்ட்; இது வேற டிபாட்மென்ட் சார். தல, தளபதியில யாரோ ஒருத்தருக்கு ஃபேனா இல்லாம சர்வைவ் பண்றதே கஷ்டம் சார்" என்றான் பார்த்தா.

"கரெக்ட்தான். எங்க அப்பா காலத்துல எம்.ஜி.ஆர். - சிவாஜி, என் ஜெனரேஷன்ல ரஜினி - கமல், இப்ப அஜித் - விஜய்" என்று லாஜிக்கலாக சமாளிக்க முயன்றவரை மடக்கினாள் ப்ரியா.

"எம்.ஜி.ஆர். மாஸ், சிவாஜி க்ளாஸ், ரஜினி சூப்பர் ஸ்டார், கமல் சூப்பர் ஆக்டர்... ஆனா தல, தளபதி ரெண்டு பேருமே பக்கா மாஸ்தானே சார்!!!"

"ஒரு மேட்டர் சொன்னா அனுபவிக்கணும்; ஆராயக் கூடாது" என்று ப்ரியாவை அடக்க முயன்றான் பார்த்தா.

அடக்கினாள் அடங்கும் ஆளில்லையே அவள். "சொல்லுங்க, எங்க தல பத்தி நாங்க என்ன பேசணும்?"

அப்போது குறுக்கிட்ட கீர்த்தி, "இளைய தளபதி முதல் தளபதிவரை மெர்சலான வாழ்க்கை வரலாறு வேணுமா சார்?" என்று குரல் எழுப்பினாள்.

கொந்தளிக்கத் தொடங்கிய கவிதா, "தமிழ் சினிமா உருப்புடாம போறதுக்கே இந்த ஹீரோ ஒர்ஷிப்தான் காரணம். அது இருக்குற வரைக்கும் நம்ம சினிமாவை அந்த ஆண்டவனாலயும் காப்பாத்த முடியாது. எத்தனையோ நல்ல படங்கள் இருட்டடிக்கப்பட்டு இதுபோன்ற மாஸ் ஹீரோக்களால விழுங்கப்பட்டிருக்கு. சரி, வேற வழியில்லாம இந்தப் படங்களுக்குப் போனாலும் ஒரே குப்பை" என்றாள் கவிதா.

ஆட்டத்துக்குள் நுழைந்த ப்ரேம், "சினிமான்றதே நமக்கு ஒரு திருவிழா. கொண்டாட்டங்கள் இருக்கத்தான் செய்யும். இருக்கணும். தல படத்தை முதல் நாள் வைகறைப் பொழுதில் ‘காசி’யில் தரிசித்த அனுபவம் இருக்கா உனக்கு?" என்றான்.

"ஏதாவது புரியிற மாதிரி பேசுறியா?!"

"தல படம் ரீலீஸ் ஆன முதல் நாள் முதல் காட்சிக்கு முந்தைய ஸ்பெஷல் ஷோ பத்தி பேசுறேன். சென்னை - காசி தியேட்டர்ல அதிகாலை சிறப்புக் காட்சி பார்த்து அனுபவிச்சாதான் தெரியும். அதெல்லாம் விவரிக்க முடியாத பேரனுபவம்" என்று சிலிர்த்தான் ப்ரேம்.

"ஆமாமா... முதல் ஷோவுக்கு முன்னாடியே உங்கத் தல படத்தைப் பார்த்திடணும். அதுவும் அரைத் தூக்கத்துல பார்த்து கொண்டாடிடணும். தெளிவான மனநிலையில பார்த்தோம்னா உங்களுக்கே தலைவலி கியாரன்டினா, எங்க நிலைமையை யோசிச்சுப் பாரு" என்று இழுத்த மேனகா நிச்சயம் விஜய் ரசிகர்தான் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

"வாம்மா, செம்ம மெர்சல் ஆக்குறியே. ஒத்துக்குறேன்... உங்க தளபதி படத்துக்கு டஃப் கொடுக்க உங்க தளபதியாலதான் முடியும். இன்னமும் சுறாவுக்கு டஃப் கொடுக்க முயற்சி பண்ணிட்டு இருக்காரே, அதையும் ஹண்ட்ரட் க்ரோர் கிளப்புக்கு முட்டுக் கொடுக்கத் துடிக்கிறீங்களே, நீங்கள்லாம் தெய்வ லெவல்!" என்று சிரித்தான் ப்ரேம்.

"நிறுத்துங்க!!!"

சலீம் சார் ஆவேசமானதும் அடங்கியது வகுப்பறை.

"இதென்னா சோஷியல் மீடியாவா? இல்லை, கேன்டீனா? எவ்ளோ சீரியஸான விஷயம் பத்தி பேசிட்டிருக்கோம், மாத்தி மாத்தி திட்டிக்கிறீங்க. ப்ரேம் முதல்ல சொன்னது உண்மைதான். சினிமா இங்கே ஒருபக்கம் திருவிழா கொண்டாட்டமாதான் இருக்கு. ஸ்பான்ஸர்ன்ற பேர்ல பிச்சை எடுத்து ஃப்ளைட்ல போய் ஃபிலிம் ஃபெஸ்டிவல் பார்த்த காலக்கட்டத்துல, சென்னை - ஆல்பர்ட் தியேட்டர்ல முதல் நாள் முதல் ஷோவில் ‘பாட்ஷா' பார்த்து பரவசமடைஞ்சவன்ல நானும் ஒருத்தன். இந்த மாதிரியான கொண்டாட்டங்களும் தேவைதான்னு தோணுது. மக்களை மகிழ்விப்பதுதான் கலையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. அதில் இதுவும் அடங்கும்னு நம்புறேன்."

"சார், நீங்க சொல்றது ஓகேதான். தலயும் தளபதியும் ஒரு காரணம் மட்டும்தான். கொண்டாட்டம்தான் இங்கே முக்கியம்னு சொல்ல வர்றீங்க. ஏன் அவங்கப் பின்னாடி இப்படி அலையணும். அரசியல், கலை, இலக்கியத்தோட வறட்சிதான் வேற வழியில்லாம மசாலா சினிமாக்காரங்க பக்கம் மக்களை ஒதுங்க வைக்குதா? கேரளத்தை எடுத்துக்கோங்க. இவ்ளோ மோசமா இல்லை. அங்கே உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம்கூட அரசியல் ஈடுபாடு இருக்கு. கல்லூரி மாணவர்கள் பலரிடமும் இலக்கிய ஆர்வம் இருக்கு. சமூக அக்கறை மிகுந்த அமைப்புகளில் அங்கமா இருந்து செயல்படுறாங்க. இங்க இளம் சமுதாயத்துக்கு ஆதாருக்கு எங்க அப்ளை பண்ணனும்னு கூடத் தெரியாது" என்று சம்பந்தத்துக்கும் சம்பந்தத்துக்குமே சம்பந்தம் உண்டு என்கிற ரீதியில் பேசினான் ரகு.

அதை ஆமோதித்து தோள் கொடுத்த ஜிப்ஸி, "கேரளால மம்முக்காவும் லாலேட்டணும் மாஸ் படங்களும் பண்றாங்க. அதைவிட அதிகமா க்ளாஸ் படங்கள் நடிக்கிறாங்க. உங்க உச்ச நாயகர்களை முதல்ல நடிக்கச் சொல்லுங்கப்பா. ஒரு தல - ஒரு தளபதியோட நின்னுட்டா பிரச்சினை இல்லை. மாஸ் காட்றதா நினைச்சிகிட்டு பச்சை மண்ணுங்க எல்லாம் படம் முழுக்க பஞ்ச் பேசுறதை எங்கப் போய் சொல்றது?" என்று நொந்துகொண்டான்.

"போக்கிரி, மங்காத்தா மாதிரி அப்பப்ப கொஞ்சம் நீட்டான பொழுதுபோக்கு படங்கள் பண்ணிகிட்டு, இடையிடையில் ஓரளவு நேர்த்தியான படங்கள்ல நடிச்சா நாங்க ஏன் பொங்க வைக்கிறோம்?" என்றாள் கவிதா.

"ஏன் ‘கத்தி' மாதிரி சமூக அக்கறையுள்ள படங்களில் தளபதி தனித்துவத்தோட நடிச்சது உங்கக் கண்ணுக்குத் தெரியலயா? 'என்னை அறிந்தால்' முதலான படங்களில் தல தன்னிகரில்லாம நடித்தது எல்லாம் நடந்த விஷயங்கள்தானே?!"

"நீ நடிச்சதைச் சொல்றியா? நடந்ததை சொல்றியான்னு தெரியல மூர்த்தி. ஆனா, என்ன நடந்தா நம்ம சினிமாவுக்கு நல்லாருக்கும்ன்றதுதான் என் கவலை" என்றாள் கவிதா.

"ஏம்மா, நாங்க என்ன வெச்சிகிட்டா வஞ்சனை பண்றோம்? எங்களுக்கும் ஷாரூக், ஆமிர், மம்முட்டி, மோகன்லால் மாதிரி நிஜ சினிமாவுல நடிக்கத்தான் விருப்பம். அதான் வரலையே. விட்ருங்கப்பா!" - ஆம், இது பார்த்தாவேதான்.

"அதுக்காக அபத்தங்களை ஆராதிக்கணுமா?"

கவிதாவின் இந்தக் கேள்விக்கு சற்றே நிதானமாக பார்த்தா சொன்ன பதில்:

"தல படத்தை அவரோட ரசிகர்கள் பார்க்குறதைவிட தளபதி ரசிகர்கள் பார்க்குறதுதான் அதிகம். அதே மாதிரிதான் தளபதிக்கும்ன்னு ஆய்வு சொல்லுது. ஒவ்வொருத்தரும் எதிர்தரப்பு படங்களை சீன் பை சீன், டயலாக் பை டயலாக் அப்படியே உள்வாங்கி மாத்தி மாத்தி கலாய்ச்சிக்கவும், மீம்ஸ் கிரியேட் பண்ணி ட்ரால் பண்ணவும் மேற்கொள்ளப்படும் பெருமுயற்சி இது. இன்னிக்கு ஜிஎஸ்டியால பிறந்துகொண்டிருக்கும் புதிய இந்தியாவில் செத்துக்கொண்டிருப்பவர்களையும், அப்ரைசலில் ஆப்பு செருகப்பட்டவர்களும் தன் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அதிகமா போற இடமே தல, தளபதிகள் கிட்டதான். அவங்களை கலாய்ச்சி உற்பத்தி செய்யப்படும் மீம்களைக் கண்டுதான் உளவியல் ரீதியில் தங்கள் இயல்பு மனநிலையை மீட்டு எடுக்குறாங்க. இதுக்காகவாவது தல, தளபதிகள் நமக்குத் தேவை. இது நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும்?" என்ற பார்த்தாவின் அறச்சீற்றப் பேச்சுக்கு எதிர்ப்புக் குரல் ஏதுமில்லை.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமாலஜி-11-தல-தளபதிகள்-தேவை-ஏன்/article9751897.ece

Link to comment
Share on other sites

சினிமாலஜி 12 - பசங்க நடிச்சா, சிறுவர் சினிமாவா?

 

காக்கா முட்டை
காக்கா முட்டை
 
 

சினிமாலஜி வகுப்பில் ஏதோ ஒரு புள்ளியில் சிறுவர் சினிமா குறித்த பேச்சு தொடங்கியது. பார்த்தா சமீபத்தில் பார்த்த ‘கட்டு’ (Gattu) எனும் படம் பற்றி ஆர்வத்துடன் பேசினான்.

“ரொம்ப சிம்பிளான கதை. குழந்தைத் தொழிலாளி சிறுவன் ‘கட்டு’தான் புரொட்டகனிஸ்ட். தன் ஏரியாவில் யாராலும் அறுக்க முடியாத காளி எனும் காத்தாடியை காலி பண்ணனும்றதுதான் அவனோட லட்சியம். அதுக்கான வியூகம் வகுத்து ஒரு பள்ளியில் மாணவன் போல் நடித்து உள்ளே நுழைகிறான். நாம எதிர்பார்க்குற கிளைமாக்ஸ்தான். ஆனா, அதுல இருந்த மிக எளிமையான டுவிஸ்ட் வேற லெவல். சிறுவர்கள் கொஞ்சம்கூடப் போரடிக்காம ரசிக்கக்கூடிய படம். இதுலயும் சமூக அக்கறை சார்ந்த அம்சங்கள் உள்ளே இருக்கு. ஆனா, அதெல்லாம் சினிமா மொழியில் கலந்திருக்கே தவிர நேரடியாகப் பாடம் நடத்துற மாதிரி நாடகத்தனம் இல்லை”.

“நல்லது. இப்ப என்ன சொல்ல வர்ற?” - பார்த்தாவைப் பக்குவமாகக் கிளறினாள் ப்ரியா.

“தமிழ்ல சிறுவர் இலக்கியத்துல மட்டும் இல்லை; சிறுவர் சினிமாவிலும் பயங்கர வறட்சி. உண்மையிலேயே சிறுவர் சினிமாவுக்கு இருக்குற பெரிய மார்க்கெட் பத்தின புரிதலே இங்க இல்லைன்னு தோணுது” என்று மையப்புள்ளியை நோக்கி நகர்ந்தான் பார்த்தா.

தனக்குச் சாதகமான இடம் கிடைத்துவிட்டதாக நினைத்துப் புகுந்த ப்ரேம், “இதுக்கும் எங்க மணி சாரின் தேவை எப்பவும் இருக்கு. ‘அஞ்சலி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’-னு அப்பப்ப சிறுவர்களுக்கான சினிமாவை உயிர்ப்பித்தவர்” என்றான் பெருமிதமாக.

கொந்தளிப்பு கவிதா வெகுண்டெழுந்தாள்.

“ ‘அஞ்சலி’யைக் குழந்தைகள் படத்துக்குள்ள அடக்கிட முடியாது. இங்கே நிறைய பேருக்கு எது சிறுவர் சினிமான்னே தெரியலைன்னு தோணுது. குழந்தைகளை வெச்சு எடுத்துட்டா, அது சிறுவர் சினிமா ஆயிடுமா? ‘அஞ்சலி’யும் ‘கன்னத்தில் முத்தமிட்டா’லும் சிறுவர் கதாபாத்திரங்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட பெரியவர்களுக்கான படங்கள். இதோட கம்பேர் பண்ணும்போது, ராம நாராயணன் ஓரளவுக்குக் குழந்தைகள் ரசிக்கிற மாதிரியான படங்களைக் கொடுத்துருக்காருன்னு சொல்வேன்”.

“ஆனா, ‘அஞ்சலி’க்கு மூணு நேஷனல் அவார்டு கிடைச்சிருக்கே” என்று முட்டுக்கொடுத்தான் ப்ரேம்.

“சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த ஆடியோகிராஃபி, சிறந்த தமிழ்ப் படம் ஆகிய பிரிவுகளில்தான் ‘அஞ்சலி’க்கு விருது கிடைச்சிருக்கு. சிறந்த சிறுவர் சினிமாவுக்கு இல்லை” என்று அடக்கினாள் கவிதா.

“சரி, ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்துக்கு அந்தப் பிரிவுல தேசிய விருது கிடைச்சிருக்கே” என்று ஆர்வமாகத் தகவல் சொன்னான் மூர்த்தி.

“ஆமா, ஆனா அந்தப் படத்தோட ஒரிஜினல் வெர்ஷன் மலையாளம். அதுக்குதான் நேஷனல் அவார்டு. சிறுவர் சினிமா பிரிவுல 1953-ல் இருந்தே தேசிய விருது தர்றாங்க. அதுல விருது வாங்கின ஒரே தமிழ்ப் படம் ‘காக்கா முட்டை’. இந்த விருதுதான் அளவுகோல்னு சொல்லலை. ஆனா, இந்த ஒரு பிரிவில் விருது வாங்குறதுக்கு எவ்ளோ நாள் ஆயிருக்கு. சினிமா என்பது நம்ம ஊருக்கு மிக முக்கியமான ஒண்ணு. அதுலயும் சிறுவர்கள் கண்டுகொள்ளப்படுகிறது இல்லைன்றது எவ்ளோ பெரிய ஏமாற்றம்”.

இது தனக்குப் பிடித்தமான களம் என்பதால் சற்றே விரிவாகப் பேசினாள் மேனகா.

“சமீப ஆண்டுகளில் வந்ததுல ‘சைவம்’ ஓரளவு ஓகே. ‘காக்கா முட்டை’ நல்லா ஓடின பிறகும்கூட சிறுவர்கள் சினிமா வராதது வருத்தத்துக்கு உரியது. இந்த வறட்சிதான் அடல்ட் காமெடி பேய்ப் படங்களுக்குக் குழந்தைகளை அழைச்சிட்டுப் போக வேண்டிய அவலச் சூழலுக்குக் காரணம். அதுகூடப் பரவாயில்லை. ரத்தம் தெறிக்கிற ‘பாகுபலி’ போன்றவற்றைக் குழந்தைகளுக்கானதா மாத்துறது எவ்வளவு பெரிய அநியாயம்?

இன்னொரு பக்கம், குழந்தைகளை வைச்சு உணர்வுபூர்வமான படங்களைத் தர்றாங்களே தவிர, குழந்தைகளுக்கான படைப்புகளைப் பற்றி யோசிக்கிறதே இல்லை. ‘தங்க மீன்கள்’ எல்லாம் இந்த வகையறாதான். சரி, தமிழ் சினிமா துறையினரால உருப்படியான 10 படங்களைத் திரட்டி ‘சில்ரன் ஃபிலிம் ஃபெஸ்டிவல்’ ஒண்ணு நடத்தக்கூடிய திறன் இருக்கா?”

14chrcj_Gattu_imag_3185652a.jpg
கட்டு

“நீங்கள்லாம் பாண்டிராஜ் என்கிற சமகால இயக்குநர் இங்கே இருக்குறதை மறந்துட்டுப் பேசுறீங்க?” - என்று கதறினான் ஜிப்ஸி.

“ஓ... பாண்டிராஜ்தான் சமகால தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த சிறுவர் சினிமா படைப்பாளின்னு சொல்ல வர்றியா?” என்று கேட்டான் பார்த்தா.

“அப்படி இல்லை. அவர்தான் குழந்தைகளை வெச்சி, குழந்தைகளை மையமா வெச்சி இப்போதைக்குத் தமிழ்ல படங்கள் கொடுத்துட்டு இருக்கார். அவரோடதும் சிறுவர் சினிமா தானே?”

“வாப்பா... சிறுவர் சினிமாவோட மார்க்கெட் வேல்யூ தெரிஞ்ச டைரக்டர்னு வேணுன்னா அவரைச் சொல்லலாம். பசங்க-ன்னு படத்துக்குப் பேரு வெச்சா, அது குழந்தைகள் சினிமா ஆகிடாது. குழந்தைகளோட உலகத்தை மையமாக வெச்சிட்டு, பெரியவர்களுக்கு எடுக்கப்படுற படங்கள் அவை. அதுவும், சினிமாவுக்குள்ள வசனம் மூலமா அட்வைஸ் பண்றது இன்னும் ஓவரு” என்று உக்கிரமாகப் பேசினாள் மேனகா.

“இவங்களே இங்க சிறுவர் சினிமா இல்லைன்னு பொலம்புவாங்களாம்; கொஞ்சமா ட்ரை பண்றவங்களையும் கழுவியூத்துவாங்களாம். என்னங்கடா உங்க லாஜிக்?"

“உன்னோட ஆதங்கம் புரியுது ஜிப்ஸி. சிறுவர் சினிமாவே இல்லைன்னாலும் பரவாயில்லை. ஆனா, போலியான சில்ரன்ஸ் ஃபிலிம்ஸுக்கு ஊக்கம் கொடுக்குறதை ஏத்துக்க முடியாது. ஆனா, நல்ல கதையும் திரைக்கதையும் கிடைச்சா, ஈரானிய சினிமா ரேஞ்சுக்கு அற்புதமான சிறுவர் சினிமா கொடுக்கக் கூடிய திறமை, இயக்குநர் பாண்டிராஜுக்கு இருக்குன்னு நம்புறேன். காத்திருப்போம்” - சற்றே அமைதியானாள் மேனகா.

“பசங்க பார்ட் ஒண்ணு நிஜமாவே ரொம்ப நல்ல படம். அதுல குழந்தைகள் போர்ஷன் எல்லாமே டாப் க்ளாஸ். ஆனா, பசங்க பார்ட் டூ இருக்கே... அதுவும் சூர்யா வர்ற காட்சிகள் எல்லாமே செத்துச் செத்துப் படம் பார்க்க வேண்டியதாப் போச்சு. ஒண்ணு குழந்தைகளுக்கான படமா இருக்கணும்; இல்லைனா, குழந்தைகளும் பெரியவங்களும் பார்க்கக்கூடிய சிறுவர் சினிமாவா இருக்கணும். இதுல எதுலயுமே சேர்த்துக்க முடியாத அளவுக்குக் குழப்பமான படங்களை எப்படிக் குழந்தைகள் சினிமா லிஸ்ட்ல சேர்க்க முடியும்?” என்றான் பார்த்தா.

“சரி, நீயே ஒரு உதாரணம் சொல்லேன்...” - இது ஜிப்ஸி.

“காக்கா முட்டை... மையக் கதாபாத்திரங்களே சிறுவர்கள்தான். அவங்க பார்வையிலதான் கதை நகருது. இந்தப் படத்தைப் பார்க்குற குழந்தைகள் ரொம்ப ஈஸியா தன்னைப் படத்துக்குள்ள நுழைச்சிகிட்டு சினிமாவை உள்வாங்க முடியும். அதேநேரத்துல, வெறும் பார்வையாளரா இருக்குற பெரியவங்களால இந்தப் படம் பேசின சமூக - அரசியல் பார்வையைப் புரிஞ்சிக்க முடியும்” என்று விவரித்தான் பார்த்தா.

“அதெல்லாம் முடியாது. எனக்கு ரொம்ப பிடிச்ச இயக்குநர் பாண்டிராஜை ‘குழந்தைகளுக்கான படைப்பாளி’ன்னு நீ சொல்லியே ஆகணும். அதுவரை உன்னைவிட மாட்டேன்” என்று அடம்பிடிக்கவே ஆரம்பித்துவிட்டான் ஜிப்ஸி.

பார்த்தா சற்று யோசித்தான்.

“தமிழ் சினிமாவின் குழந்தைகள் படைப்புக்கான குழந்தைத்தனம் மிகுந்த படைப்பாளி இயக்குநர் பாண்டிராஜ்தான். அவரும் இன்னும் வளரணும். அவர் போலவே மேலும் சிலரும் சிறுவர் சினிமா நோக்கி நகர்ந்தால் மகிழ்ச்சிதான்.”

ஜிப்ஸிக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/சினிமாலஜி-12-பசங்க-நடிச்சா-சிறுவர்-சினிமாவா/article9765103.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

சினிமாலஜி 13: திவ்யாக்களின் தேவை அதிகம்!

21chrcjKakkoos%202

வகுப்பில் இன்று ஆவணப்படத் திரையிடல். ‘லெஃப்ட்சைடு மீடியா சென்ட்டர்’ யூடியூப் சேனலில் இருந்து ‘கக்கூஸ்’ ஓடத் தொடங்கியது.

மூக்கில் கர்ச்சீஃப் வைத்தல், தலையைக் கவிழ்த்தல், கொள்ளுதல், வாந்தி அடக்குதல், இமைக்காது இருத்தல், மொபைலை நோண்டுதல்... இவை எல்லாம் அவ்வப்போது தென்பட்டன. அத்துடன், சிலருக்கு விழிகளில் கண்ணீர்த்துளிகள் அடிக்கடி பொத்துக்கொண்டும் வந்தன.

படம் முடிந்தபின் ஒருவித பேரமைதி. சலீம் சார் மவுனத்தை உடைத்தார்.

“இரண்டு மணி நேரத் திரைப்படத்தையே உட்கார்ந்து பார்க்க முடியாத அளவுக்கான நம்ம சினிமா சூழலில் இருக்குறவங்க நீங்க. உங்களையே ஒண்ணே முக்கால் மணி நேரம் இந்த ஆவணப்படம் கட்டுப்போட்டிருக்கு. இதுக்குத் தொழில்நுட்ப அம்சங்களோ அழகியலோ கேமரா கோணங்களோ எதுவுமே காரணம் இல்லை. நம்மை ‘கக்கூஸ்’ கலங்கடிச்சதுக்குப் பின்னாடி மூணு சிம்பிளான, அதேநேரம் ரொம்ப கடினமான விஷயங்கள் பின்னணியில இருக்கு. அவை: நெருக்கம், நேர்மை, நோக்கம். திவ்யாவும், அவரது குழுவினரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.”

21chrcjkakkoos%20working%20still

ஆவணப்படப் பதிவில் ஒரு நேரடி சாட்சியம்

“தமிழில் ஆவணப் படங்களுக்கான தளமே சரியா இல்லாத நிலையில், இப்படி ஒரு படம் எடுக்கப்பட்டதும், அது சமூக ஊடகங்கள் மூலமாகப் பரவலாக்கிப் பேசப்பட்டதும் ஆரோக்கியமான விஷயம். தமிழகம் முழுக்கப் பல இடங்களில் திரையிடப்பட்ட பிறகும் யூடியூபில் ஒன்றரை லட்சம் வியூஸ் வந்திருக்குன்னா சும்மா இல்லை” என்று வாய் பிளந்தான் பார்த்தான்.

கொந்தளிப்புக் கவிதா தன் மோடுக்கு மாறினாள். “மனிதக் கழிவுகளைக் கைகளால் அள்ளும் சமூகத்துக்குப் பின்னால் இருக்கும் சாதி அரசியல் பிற்போக்குகள், சமூக அவலங்கள், சுரண்டல்கள், தீண்டாமைக் கொடுமைகள் முதலான ஒட்டுமொத்த உண்மைகளையும் பாதிக்கப்பட்டோரின் வாக்குமூலங்கள் வாயிலாகவும், உண்மைக் காட்சிகள் மூலமாகவும் பகிரங்கமாகப் பதிவுசெய்யப்பட்ட விதத்தில் இது மிக முக்கியமான ஆக்கம்.

நாம் தினம் தினம் கடக்கும் மனிதர்களும் குழந்தைகளும் நவீன அடிமைகளாக நாம் வாழும் சமூகத்திலேயே புழுங்கிச் சாகிறார்கள் என்பது தெரியாமலேயே நம்மில் பலரும் இயல்பு வாழ்க்கையை ரசித்து வாழ்கிறோம் எனும்போது குற்ற உணர்வு பொங்குகிறது.”

“கவிதா இப்படித்தான். உணர்வுபூர்வமா ஆயிட்டான்னா தமிழ் வாக்கியமும் பொங்கிடும்” என்று கொந்தளிப்புக் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டான் ப்ரேம்.

“இந்த மாதிரி சமகாலப் பிரச்சினைகளை மூஞ்சியில குத்துற மாதிரியான ஆவணப்படங்களின் தேவை அதிகமா இருக்கு. குறிப்பாக, நம்மளோட பாரம்பரியத்தை வேரறுக்குற நடவடிக்கைகள் நிறையவே நடந்துட்டு இருக்கு. இந்த நிலை அப்படியே நீடிச்சுன்னா, எதிர்காலத் தமிழர்களுக்கு நம் பாரம்பரியம் குறித்த எந்த விஷயத்தையும் பார்க்க முடியாமல் போயிடும். முடிந்த வரைக்கும் முக்கியமான எல்லாத்தையும் ஆவணப்படமாக உருவாக்கணும்” என்று ஆவேசமாக அரசியல் கலந்தான் ஜிப்ஸி.

21chrcjdivya%20bharathi

திவ்யா

 “நீ சொல்றது ஓகே தான். இப்போதைக்கு ‘கக்கூஸ்’ பத்திப் பேசுவோம். ஆவணப்படம் எடுக்கத் தொழில்நுட்ப அறிவோ அனுபவமோ ஒரு மேட்டரே இல்லை. முழுக்க முழுக்க சரியான தகவல்களைத் திரட்டி, உள்ளதை உள்ளபடி நேர்த்தியா காட்டினா போதும்னு இளம் படைப்பாளிகளுக்கு எவ்ளோ ஈஸியா இந்தப் படம் பாடம் எடுத்திருக்கு. இதைவிட நமக்கு வேற என்ன வேணும்? ஒரு மொபைல் கேமராகூடப் போதும், உருப்படியான ஆவணத்தைப் பதிவுபண்ண ஒரு மொபைல் கேமராகூடப் போதும்னு தோணுது” என்றாள் ப்ரியா.

“ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்குச் சாதி அடிப்படையில் இழைக்கப்படும் கொடுமையை கக்கூஸ் நாறடிச்சிருக்கு. சாதிதான் இங்கே வேர்க் காரணம்னு சொல்லப்படுறதையும் ஏத்துக்கணும். ஆனா, நிரந்தரத் தீர்வோடு சேர்த்து, பாதிக்கப்பட்டோரின் தற்காலிகப் பிரச்சினைகளையும் அதிகம் பேச வேண்டியிருக்கு. ஏன்னா, அது நமக்குதான் தற்காலிகம்; அவங்களுக்கு வாழ்நாள் சோதனை” என்று லாஜிக் பேச முயன்றான் பார்த்தா.

“இந்த விஷயத்துல பார்த்தாவோட பார்வையில் நான் உடன்படுறேன். கக்கூஸ் திரையிடல் ஒன்றுக்கு நானும் போயிருந்தேன். படம் முடிஞ்சி டிஸ்கஷன் நடந்துச்சு. படத்தில் காட்டப்பட்ட மக்கள் அன்றாடம் சந்திக்கும் பாதிப்புகளுக்குப் பார்வையாளர்கள் தனித்தனித் தீர்வுகளை முன்வெச்சாங்க. தூய்மைப் பணியில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தணும், அவங்களோட பொருளாதார நிலையை உயர்த்தணும், கல்வி அறிவுக்கு வழிவகுக்கணும், எல்லாத்துக்கும் மேல அவங்க நேரடியா பாதிக்காத அளவுக்கு நாம எப்படி நாம வெளியேற்றுற - கொட்டுற கழிவுகளை நாமே நிர்வகிக்கணும்னு பலரும் பல கருத்துகளை முன்வைச்சாங்க.

இவற்றில் பெரும்பாலானவை மக்களின் முழுமையான பங்களிப்பு இருந்தாலே பக்க விளைவு பாதிப்புகள் அனைத்தையும் அகற்ற முடியும்ன்ற அளவுலதான் இருந்துச்சு. ஆனா, திரையிடல் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர், இந்தப் பிரச்சினையில சாதியோட ரோலை மட்டும் பேசுவோம்னு பகிரங்கமா அறிவிச்சு, விவாதத்தைத் தங்கள் வசதிக்கு ஏற்ப திசைதிருப்பி விட்டது எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு”என்று அனுபவக் கவலையைப் பகிர்ந்தான் ரகு.

“அதெப்படி? தீராத பிரச்சினை என்னென்னு தெரிஞ்சுட்டு, அது தீராத மாதிரி பார்த்துகிட்டு, அதுக்காகப் போராடியே கவன ஈர்ப்பில் காலத்தை ஓட்டணும்ங்கிற சிலரோட பொழப்புல மண்ணைப் போடக் கூடாதாச்சே. மக்களின் மனமாற்றத்தில் இருந்துதான் எல்லாம் தொடங்க வேண்டும் என்பது அந்தப் படத்தில் இடம்பெற்ற தூய்மைப் பணியாளர்களின் குரல்களில் இருந்தே தெரிந்துகொள்ள முடியுது. அதேபோல சாதி ஒழிப்புதான் நிரந்தரத் தீர்வு என்பதையும் மக்கள் உணர வேண்டும். ஆவணப்படக் களத்தில் இதற்கான முக்கியப் புள்ளியாக ‘கக்கூஸ்’ இருக்கும்னு நம்புறேன்” என்றான் மூர்த்தி.

“ஒரு பிரச்சினை சார்ந்த ஆவணப்படத்தில் சம்பந்தப்பட்ட எல்லா தரப்பின் கோணங்களும் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். கக்கூஸில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பும், பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தரப்பும் முழுமையாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், அரசு தரப்பையும் கேட்டுப் பதிவு பண்ணியிருக்கணும்னு தோணுது” என்றான் ப்ரேம்.

“பார்றா... அரசு தரப்பில் கேட்டா சொல்லிடுவாங்களா? போப்பு... நீ போயி வேலையைப் பாரு" என்று நக்கலாகக் கடிந்தான் ரகு.

“ஆனா, ஆவணப் படம் இவ்ளோ நீளமா இருக்குறது ரொம்ப டயர்டு ஆக்குது.”

“ஒரு சமூகத்தோட வாழ்க்கையை ஒன்றரை மணி நேரம்கூட உன்னால பார்க்க முடியல. அப்படிப்பட்ட சூழலிலேயே அவங்க தன் வாழ்நாள் முழுக்க சாகுறாங்கன்றதை யோசிச்சுப் பாரு. மேட்டர் புரியும்” என்று சற்றே உக்கிரம் காட்டினான் பார்த்தா.

“நீங்க சொல்றது சரிதான். திவ்யாக்களின் தேவை இங்கே அதிகமாவே இருக்கு” என்று முடித்தாள் கவிதா.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19307807.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சினிமாலஜி 14: இது சினிமா தர்மமா?

 

 
28chrcjVikram%20Vedha

‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவன், விஜய்சேதுபதி

கவிதா, ப்ரியா, பார்த்தா, ப்ரேம் நால்வரும் ‘விக்ரம் வேதா’ மேட்னி ஷோ பார்க்க திரையரங்குக்குள் நுழைந்தனர். புகைப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு வரிகளை மாதவனும் மதுவுக்கு எதிரான வரிகளை விஜய் சேதுபதி வாசித்ததுமே ‘அட’ என்ற உணர்வை ஏற்படுத்தியது.

விக்ரமாதித்தன் - வேதாளம் கதாபாத்திரங்களை அனிமேஷனலில் காட்டும்போதே, ‘ஓஹ் வாவ்... நம்ம ஆளுங்க எப்பவோ நான் - லீனியர்ல கதை சொல்ற உத்தியைக் கையாண்டுருக்காங்க’ என்று மைண்ட் வாய்ஸில் வியந்துகொண்டான் பார்த்தா. அதே உத்தியில் படம் நகர்ந்தது. போலீஸ் விக்ரம்தான் விக்ரமாதித்தன். தாதா வேதாதான் வேதாளம்.

இடைவேளை.

டிக்கெட்டுக்கும் பைக் பார்க்குக்குமே பாக்கெட் மணி சரியாய்ப் போனதால் நால்வரும் தேநீர்கூட அருந்தாமல் வராந்தாவில் ஒருவர் முகம் ஒருவர் பார்க்க நின்றுகொண்டிருந்தனர்.

“செம்மடா... ஒருத்தருக்கு மேல ஹீரோ இருந்தாலே நம்ம இயக்குநர்கள் திணறிடுவாங்க. இதுல டபுள் ஹீரோ சப்ஜெக்ட் பக்காவா ஒர்க் அவுட் ஆன மாதிரி இருக்கு” என்று பார்த்தா தொடங்கினான்.

“ஆமா, விஜய் சேதுபதி என்ட்ரி செம்ம மாஸ்டா. ஆனா திரும்பத் திரும்ப முன்னாடி பார்த்த படங்கள்ல பார்த்த மாதிரியே இருக்குறாரு; ஒரே மாடுலேஷன்ல பேசுறாருன்னு எனக்கு மட்டும்தான் தோணுதா?” - சந்தேகம் கிளறினான் ப்ரேம்.

கோபத்தை வெளியே காட்டாமல் அடக்கிவாசித்த ப்ரியா, “ரொம்ப இயல்பா கதாபாத்திரத்தோட பொருத்திக்கிறதுனால, ஏதோ கஷ்டப்படாம ஜாலியா வந்துட்டுப் போற மாதிரி உனக்குத் தோணுதுன்னு நினைக்கிறேன். ஃபர்ஸ்ட் ஆஃப்தானே முடிஞ்சிருக்கு. செகண்ட் ஆஃப்ல விஜய் சேதுபதி கண்களையும் நெத்தியையும் மட்டுமாவது கவனி. தெரியும்” என்றாள் அழுத்தமாக.

“சரிம்மா. விட்ரு. கவனிக்கிறேன். விக்ரமாதித்தன் - வேதாளம் கதை சொல்லும் உத்தியை ரொம்ப ஸ்மார்ட்டா திரைக்கதையில கொண்டு வந்திருக்காங்க. தமிழில் வேற லெவல் சினிமா காட்டுற முயற்சியைப் பாராட்டியே ஆகணும். எல்லா விதமான ஆடியன்ஸும் ஓரளவு புரிஞ்சுகிட்டு என்சாய் பண்றதைப் பார்க்கும்போது ஏதோ நம்பிக்கை கிடைக்குது. இந்த மாதிரியான திரைக்கதை முயற்சிகளில் முன்னணி ஹீரோக்கள் வர்றதுதான் சாதகமான விஷயமே” என்று பாதையை மாற்றினான் ப்ரேம்.

சற்றே தயங்கித் தன் கருத்தை முன்வைக்க வந்த ப்ரியா, “இந்த மாதிரி கிராஜுவலா நம்ம ஆடியன்ஸை நான்-லீனியர் மாதிரியான திரைக்கதைகளுக்குத் தயார்படுத்தியிருந்தா ‘ஆரண்ய காண்டம்’ எல்லாம் செமத்தியா ஓடியிருக்குமோ?” என்று கேள்வி எழுப்பினாள்.

“அதோட லெவலை ரீசன்ட்டா வேற எந்தத் தமிழ்ப் படமும் எட்டலை” என்று நொந்துகொண்டான் ப்ரேம்.

“நீங்க பாதி படம் பார்த்துட்டே சினிமா அம்சங்களை மட்டும் வெச்சி பேசுறீங்க. அதுல எனக்குப் பிரச்சினை இல்லை. கதை பழசு மாதிரி தெரிஞ்சாலும், கதை சொல்ற உத்தி என்னையும் வியக்க வைக்குது. ஆனா, கதாபாத்திரங்களை அமைத்த விதமும், அதைக் காட்டும் விதமும் இன்னும் அப்படியே இருக்குற மாதிரி ஃபீல் பண்றேன்” என்று கொந்தளிப்பு மோடுக்கு மாறத் தயாரானாள் கவிதா.

‘ஆரம்பிச்சிட்டாடா...’ என்று முனகினான் பார்த்தா. ஆனாலும் அவள் தொடர்ந்தாள்.

“தர்மம், அதர்மம், நியாயம், அநியாயம், நல்லது, கெட்டது பத்தியெல்லாம் இந்தப் படத்துல பேசுறாங்க. எப்படி மாஸ் மசாலா ஹீரோக்களை ரவுடியா காட்டி மக்களை ரசிக்க வெச்சு, நெகட்டிவ் தன்மை மீது ஈர்ப்பை ஏற்படுத்துறாங்களோ, அதே மாதிரி தானே இங்கேயும் நடக்குது. வேதா பயங்கர கொலைகார கேங்ஸ்டர் தலைவராம். அந்த கேரக்டரை என்ட்ரி பண்ணும்போது, தியேட்டரை அதிரவைக்கிறதுக்குன்னே பர்ப்பஸா காட்சி அமைச்சது என்னவாம்? ரவுடிகளை ஆராதிக்குறதை இந்தப் படக்குழுவும் செஞ்சிருக்கு.”

“அம்மா தாயே... படம் பார்க்குற மூடு மாறிடப்போவது. வாங்க... உள்ளே போவோம். மத்ததைப் படம் முடிச்சுட்டு வெளிய வந்து பேசிக்கலாம்” என்று மூவரையும் சீட்டுக்கு அழைத்துச் சென்றான் பார்த்தா.

முடிந்தது படம்.

தங்களுக்குப் பிடித்த தேநீர் கடையில் பிளாக் டீ அருந்தியபடி நால்வரும் மீண்டும் பேசத் தொடங்கினார்கள்.

“நட்சத்திரத் தேர்வு தொடங்கி சவுண்ட் எஃபெக்ட்ஸ் வரைக்கும் எல்லா ஏரியாலயும் ரொம்ப நேர்த்தியா பண்ணியிருக்காங்க. எனக்கு முழு நிறைவு தந்திருக்கு” என்று புகழாரம் சூட்டத் தொடங்கினாள் ப்ரியா.

மூவரின் கண்களும் கவிதாவையே கவனித்தன. அவளோ தேநீரைச் சுவைப்பதிலேயே ஆழ்ந்திருந்தாள். பார்த்தா பேசத் தொடங்கினான்.

“நிச்சயமா. குறிப்பா, துணைக் கதாபாத்திரங்களைக் கச்சிதமா செதுக்கியிருக்காங்க. ‘காற்று வெளியிடை’யில் வீணடிக்கப்பட்ட ஷ்ரத்தா இதுல சூப்பரு. கதிர், ப்ரேம், விவேக் பிரசன்னா, ஹரீஷ் எல்லாருமே பக்கா. ஆமா... எல்லாப் படத்துலயும் வயசான போலீஸா பக்குவமாவும் நிதானமாவும் பேசிட்டே நரித்தனம் பண்ணுவாரே... அவருக்கும் இதுலே அதே மாதிரியான ரோல். ஒரு மாதிரி எரிச்சல் வருது.”

“என்னைப் பொறுத்தவரைக்கும் கதாபாத்திர உருவாக்கத்திலும் சரி, நடிப்பிலும் சரி... மாதவன்தான் கச்சிதம்” என்றான் ப்ரேம்.

“உன்கிட்ட ஆர்க்யூ பண்ண விரும்பலை.. உனக்குப் படம் ஓகேதானே?” - கவிதாவைக் கிளறினாள் ப்ரியா.

“ம்... ஒட்டுமொத்தமா பிடிச்சிருக்கு. சினிமாலஜி ஸ்டூடண்ட்டா ரொம்பவே பிடிச்சிருக்கு.”

“அப்ப கருத்தியல் ரீதியா?”

“முழுசா பிடிக்கலை.”

28CHRCJARANYAKANDAM

‘ஆரண்யகாண்டம்’ படத்தில் ஜாக்கி ஷெராஃப்

பார்த்தா உள்புகுந்தான். “போலீஸ் தரப்புல இருக்குற கெட்டதையும், கேங்ஸ்டர் தரப்பில் உள்ள கெட்டதையும் பேலன்ஸ் பண்ணிதானே காட்டிருக்காங்க. ரெண்டு தரப்பையும் அப்படியே கொண்டாடலையே! போலி என்கவுண்டருக்குக் காரணமே சட்டரீதியிலான பின்னடைவுகள்தான்னு நல்லாவே சொல்லியிருக்காங்க. அதேபோல, போலீஸுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையில் பாதுகாப்பும் சரியான பொருளாதாரத் தேவையும் பூர்த்தியாகலைன்றதையும் காட்டியிருக்காங்க. உனக்கு வேற என்னதான் பிரச்சினை?”

“எல்லாப் பார்வையாளர்களும் அப்படி யோசிக்க முடியுமா? போலீஸ் - கேங்ஸ்டர் இரண்டு தரப்பிலும் இருக்குற ஹீரோயிஸத்தைத்தான் தெளிவாகப் பதியவைக்கிறாங்க. முக்கியமான பிரச்சினைகளை ரொமாண்ட்டிசைஸ் பண்ணி கவனத்தைத் திசைத் திருப்புறதுதான் மறுபடி மறுபடி நடக்குது. ஆரம்பம் முதல் இறுதிவரை நல்லவனைவிட கெட்டவனையே நியாயப்படுத்துறதையும், அவனுக்கு ஆதரவாகவே மக்களின் மனநிலையையும் மாத்துறதையும் எமோஷன்ஸ் கலந்த ஹீரோயிஸம் மூலமா செய்றதை என்னால ஏத்துக்க முடியலை.”

“நான் ஒரு கதை சொல்ட்டா... அது ஒரு மாநிலமாம். அதுல இருக்குற அரசியல் கட்சிகள், தலைவர்கள் எல்லாருமே மோசமானவங்கதானாம். தேர்தல்ல நிக்கிற எல்லாருமே அப்படித்தானாம். நீ ஓட்டுப் போட்டே ஆகணுமாம். யாருக்கு ஓட்டுப் போடுவ?” என்றான் பார்த்தான்.

கொஞ்சம் யோசித்த கவிதா, “மோசமானவர்களில் ஓரளவு உருப்படியானவரை.”

“குட்... தமிழ் சினிமான்னு ஒண்ணு இருக்காம். அதுல தொண்ணூறு சதவீதம் படங்கள் அரைச்ச மாவையே அரைச்சு ரொம்ப மொக்கையாவே வருதாம். பத்து சதவீதத்துக்கும் குறைவாதான் உருப்படியான சினிமா வருதாம். அந்த உருப்படியான சினிமாவையும் கருத்தியல் சட்டகம் விட்டகம்னு சொல்லிக் கழுவியூத்துவியா? ஓரளவு உருப்படியா இருக்குற அந்தப் படங்களைக் கொண்டாடுவியா?”

ஆம், உங்களது பதில்தான் கவிதாவுடையதும்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19370491.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சினிமாலஜி 15: உண்மை முகம் காட்டும் ‘விஸ்வரூபம்'

 

 
04CHRCJWISVAROOBAM

‘விஸ்வரூபம் ’ படத்தில்   -  PTI

சி

னிமா வரலாறு தொடர்பான தியரி பாடம் முடிந்து வகுப்பில் வெறுமை சூழ்ந்திருந்தது. “சரி, புதுசா எதாவது நல்ல ட்ரெய்லர் வந்திருக்கா? நாம விவாதிக்கிற மாதிரி ஏதாவது தேறுமா?” என்று ஆரம்பித்தார் சலீம் சார்.

“ராமின் ‘தரமணி’ மூணாவது டீஸர் ரிலீஸ் ஆயிருக்கு சார். ஆண்ட்ரியா அற்புதம் சார்..!” - ப்ரேம் வாய்பிளந்தான்.

“படம் பார்த்துட்டு அதை வெச்சுக்கலாம். கோனார் நோட்ஸ் போடாமலேயே படம் புரியும்னு மட்டும் இப்போதைக்கு நம்புற மாதிரி இருக்கு சார்” என்றான் பார்த்தா.

“கதிர் நடிச்ச படத்தோட டீஸர் வந்திருக்கு. செம்மயா இருக்கு சார். வேற லெவல் படமா இருக்கும்னு நம்புறேன்” என்றாள் ப்ரியா.

“கதிர்னா ‘மதயானைக்கூட்டம்’, ‘கிருமி’ ஹீரோதானே? ‘விக்ரம் வேதா’லகூட விஜய் சேதுபதி தம்பி... அந்தப் பையனோட ரூட்டே வித்தியாசமாதான் இருக்கு” என்று வியப்பை வெளிப்படுத்தினார் சலீம் சார்.

“ஆமா சார். டீஸரே வித்தியாசமா இருக்கு. திருநங்கை ரோல்னு நினைக்கிறேன். படம் நல்லா இருக்க வாய்ப்பு இருக்கு” என்றான் பார்த்தா.

“தமிழ் சினிமா யாரை உருப்படியா காட்டியிருக்கு? வழக்கம்போல அதீதமா காட்டாம இருந்தாலே பெட்டர். ‘திருநர்’களைக் கொச்சைப்படுத்தி மிகையா காட்டுறதுதான் அதிகமா நடக்குது” - இது கொந்தளிப்பு கவிதாவேதான்.

முன்வந்து பேசிய மேனகா, “ஆரம்பத்துல அப்படி இருந்திருக்கலாம். சொசைட்டில எல்லாரும் அவங்கள எப்படிப் பார்க்குறோமோ, அதையே பிரதிபலிக்கிற மாதிரி காமெடியும் காம நெடியும் கலந்து மலிவான முறையில திருநங்கைகளைக் காட்டி, மக்களுக்கும் மட்டமான ரசனையைக் கடத்தினாங்க. ஆனா, இப்போ மக்களோட பார்வையும் ரொம்பவே மாறியிருக்கு. திரையிலும் மாற்றம் தெரியுது” என்றாள்.

“எங்க மணி ஸார் அன்றைக்கே ‘பம்பாய்’ படத்துல அவங்களை ரொம்ப நல்ல விதமா காட்டியிருப்பார். கொஞ்ச சீன் வெச்சாலும் நெஞ்சைப் பிழியிற மாதிரி வெச்சுருப்பாரு” என்று பெருமிதம் காட்டிய ப்ரேமை முறைத்தான் மூர்த்தி.

“ ‘அப்பு’ன்னு ஒரு படம். அதோட ஒரிஜினல் இந்திதான். அதுல வில்லன் பிரகாஷ்ராஜ் திருநங்கை கதாபாத்திரத்துல வந்திருப்பாரு. எனக்குத் தெரிஞ்சு தமிழ்ல திருநங்கை கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது அந்தப் படம்தான்னு நினைக்கிறேன். ஆனா, அது ஓவர் நெகட்டிவ் தன்மையோட இருக்கும். திருநர்கள் (திருநங்கைகள், திருநம்பிகள்) மீதான பார்வையை இன்னும் மோசமாக்கிச்சுன்னும் சொல்லலாம்” என்று மூர்த்தி ஆதங்கப்பட்டான்.

“ரொம்ப கரெக்ட். அதை பிரகாஷ்ராஜே புரிஞ்சிக்கிட்டாருன்னு நினைக்கிறேன். பின்னால ஏதோ ஒரு பேட்டியில ‘அந்த கேரக்டர்ல நடிக்க நான் ஒத்துட்டு இருக்கக் கூடாது’-ன்னு சொன்ன மாதிரி படிச்ச ஞாபகம். ஆனா, தமிழ்ல சொல்லிக்கிற மாதிரி திருநர் கதாபாத்திரத்தை முழுமையாக யாரும் கொண்டு வரலைன்னு தோணுது” என்றான் ரகு.

“சந்தோஷ் சிவன் இயக்கத்துல 2005-ல் வெளியான படம் ‘நவரசா’. திருநர் வாழ்க்கையைப் பற்றிய முக்கியமான படைப்பு. கூவாகம் திருவிழா பின்னணியை நேர்த்தியா பதிவு பண்ணியிருப்பாங்க. மக்கள் எத்தனை பேரு அது மாதிரியான படத்தைப் பார்த்திருப்பாங்க. அந்த மாதிரி படம் பார்க்குற வாய்ப்புதான் ஈஸியா கிடைக்குதா? அந்தப் படம் நிறைய ஃபிலிம் ஃபெஸ்டிவல் போச்சு. நிறைய அவார்டு வாங்கிச்சு. அதோட சரி. நிறைய தியேட்டர்ல ரிலீஸ் ஆகுற வர்த்தக நோக்கு அதிகமா இருக்குற படங்கள்தானே மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துது. அதனால, கமர்ஷியலா வர்ற படங்களில் திருநர்களை எப்படிக் காட்டியிருக்காங்க என்பதைத்தான் நாம கவனமா பார்க்க வேண்டியிருக்கு. அப்படிப் பார்த்தா, ப்ரொட்டாகனிஸ்டாகூட வேண்டாம்; சப்போர்ட்டிங் கேரக்டர்ஸ்ல கூட சரியான அணுகுமுறை இல்லைன்னு தானே சொல்ல முடியுது.”

சற்றே விரிவாகப் பேசிய பார்த்தாவை அனைவரும் ஒரு மாதிரி பார்த்தனர். ஆனாலும் அவன் தொடர்ந்தான்.

“சமீப காலமா எடுத்துகிட்டா ‘ஆதிபகவன்’, ‘இருமுகன்’மாதிரியான படங்களில் எல்லாம் நெகட்டிவ் கேரக்டர்ஸ்ல தானே காட்டியிருக்காங்க. நடிகர்கள் ஸ்கோர் பண்றதுக்கு வேணுன்னா ஸ்கோப் இருக்கலாம். ஆனா, திருநர்கள் மீதான பார்வை மாறுவதற்கு அங்கே ஒண்ணுமே இல்லையே. எனக்குத் தெரிஞ்சு ‘அவன் இவன்’ படத்துல திருநங்கை கதாபாத்திரத்தில் விஷாலை ப்ரொட்டாகனிஸ்டா காட்டினதை வேணுன்னா பெட்டர்னு சொல்வேன்” என்றான் பார்த்தா.

“வில்லன் ரோல்கூடப் பரவாஇல்லை. வில்லத்தனத்துக்குள்ளயே ரொம்ப மட்டமா அணுகப்பட்ட ஷங்கரின் ‘ஐ’ படம் கொடுமையின் உச்சம்னு சொல்வேன். ஓஜாஸ் ராஜானியை அந்த மோசமான கதாபாத்திரத்துல நடிக்க வெச்சுதுக்குள்ளயே அரசியல் இருக்குறதா நினைக்கிறேன். அந்தப் படத்துக்கு எதிர்ப்புக் குரல் எழுந்தது, தமிழ் சினிமா படைப்பாளிகளுக்கு எச்சரிக்கை மணியா இருந்திருக்கும்னு நம்புறேன்” என்று நிதானமாகச் சொன்னாள் கவிதா.

“நேரடியா ஒரு விஷயத்தைக் காட்டுறதுனால இப்படி யோசிக்க முடியுது. கமல் ஹாசன் மாதிரியான ஜீனியஸ் எல்லாம் மறைமுகமா செய்றது உங்களுக்கு எங்க தெரியப் போவுது?” என பிட்டு ஒன்றை வைத்தான் ரகு.

“என்ன சொல்ல வர்ற?” - இது கவிதா.

“விஸ்வரூபம் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் கமல்ஹாசன் கதாபாத்திரத்திடம் பெண்தன்மை அதிகமா இருக்கும். அதுவே, அவங்க மனைவிக்கு வெறுப்பை ஏற்படுத்துற மாதிரி காட்டியிருப்பாங்க. ஒரு மாஸ் சீன்ல தன்னோட பெண்தன்மையைத் தூக்கிக் கடாசிட்டு பட்டையக் கிளப்புவாரு. அது செம்ம மாஸ் ஸீன். எல்லாருக்குமே ஆச்சரியமா இருக்கும். பூஜா கேரக்டரும் பூரித்துப் போயிடும். தான் ஒரு முரட்டு ஆம்பளைன்னு ‘விஸ்வரூபம்’ காட்றதுக்குத் திருநர்களின் அசைவுகளை யூஸ் பண்றது மூலமா கமல் என்ன சொல்ல வர்றாராம்? முன்பெல்லாம் மாஸ் ஹீரோக்கள் படத்துக்குள்ள கோழை, பயந்தாங்கொள்ளி மாதிரி நடிச்சுட்டு, பின்னாடி வீரத்தைக் காட்டி வியக்கவைப்பாங்க. கமல் இப்படிப் பண்ணதுக்கு அந்த க்ளிஷேவே பெட்டர்” என்று ரகு சொன்னதைக் கண்கள் விரிய அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தனர்.

“ஆனா, இப்போ சின்ன சின்ன ரோல்ல திருநர்களை ரொம்ப நீட்டாவே காட்றாங்க. பார்த்தா சொல்ற மாதிரியான மெயின் ஸ்ட்ரீம் படங்கள்லயும் இது நடக்குது. ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘அப்பா’, ‘தர்மதுரை’ன்னு சில உதாரணங்களைச் சொல்லலாம். குறிப்பாக, திருநங்கைகள் திருநங்கைகளாகவே பயன்படுத்தப்படுறதையும் ஆரோக்கியமான விஷயமா பார்க்குறேன்” என்றாள் ப்ரியா.

“ஒத்துக்குறேன். ஆனா, ரொம்ப நல்ல எண்ணத்தோட காட்டுறேன்னு குறைச்சி மதிப்பிடுறதும் சரியில்லைன்னு தோணுது. ‘தர்மதுரை’ படத்துல நாம தினமும் பார்க்குற மாதிரியான திருநங்கை கதாபாத்திரத்தைக் காட்டுவாங்க. அவங்களுக்கு டாக்டர் விஜய் சேதுபதி வேலை போட்டுத் தருவார். அதுவரைக்கும் ஓகே. ஆனா, அந்தத் திருநங்கையை விஜய் சேதுபதி காலில் விழவைச்சு ‘நீங்கதான் தெய்வம்’ன்ற ரேஞ்சுல டயலாக் பேசவைக்கிறதும் இயல்பு மீறல்தான். தன்னோட ஹீரோவிடம் தெய்வீகத்தன்மையை உயர்த்திப் பிடிக்கவே அந்தத் திருநங்கை கேரக்டர் பயன்படுத்தப்பட்ட மாதிரி இருந்துச்சு.

எனக்குத் தெரிஞ்சு, மக்களுக்குத் திருநர்களைப் பற்றிய நல்ல எண்ணத்தை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘காஞ்சனா’. என்னதான் கமர்ஷியலான கலகலப்புப் பேய்ப்படமா இருந்தாலும் திருநங்கை கதாபாத்திரத்தை உருவாக்கிய விதமும் அதைக் காட்டிய விதமும் பாராட்டப்பட வேண்டியது. அதுவும் சரத்குமார் மாதிரியான நடிகர் அந்தக் கதாபாத்திரத்தில் நடிச்சது இன்னும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துச்சு. இந்த மாதிரியான போக்குதான் தேவைன்னு நம்புறேன்” என்று முடித்தாள் கவிதா.

“சொசைட்டில சிலர் வேறு வழியில்லாம தப்பான பாதையைத் தேர்ந்தெடுக்குறதால, ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமா தப்பா காட்டுறதை ஏத்துக்க முடியாது. அந்தச் சமூகத்தைப் பற்றிய இயல்பானவற்றை பாசிட்டிவா காட்டாதவங்களுக்கு, முழுக்க முழுக்க நெகட்டிவா காட்டுறதையும் சுத்தமா ஏத்துக்க முடியாது. முதன்மைக் கதாபாத்திரங்களா கூட வேண்டாம்; சின்ன சின்ன கதாபாத்திரங்கள்ல இயல்பா காட்டினாலே போதும்; இல்லாட்டி எதுவுமே அவங்கள பத்திப் பேச வேண்டாம். சம்திங் இஸ் பெட்டர் தேன் நத்திங்தான். அந்த சம்திங் ரொம்ப மோசமா இருக்கும்போதுதான் இப்படிச் சொல்லத் தோணுது: நத்திங் இஸ் பெட்டர் தேன் நான்சென்ஸ்!” - இதுவும் பார்த்தா தான்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19413503.ece

Link to comment
Share on other sites

சினிமாலஜி 16: சினிமாவின் சாபக்கேடு!

 

 
11CHRCJtharamani%202

இயக்குநர் ராம்

சி

னிமாலஜி சிறப்பு வகுப்பில் இயக்குநர் ராம். மாணவர்களிடம் அத்தனை ஆர்வம்.

“ ‘கற்றது தமிழ்’, ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’... உங்க படங்களில் அதீதமும் இயல்பும் சரிவிகிதத்தில் கலந்திருக்கிறதே?” என்று கவிதா இழுத்தாள்.

“ரெண்டு படத்தை வெச்சு இப்படி ஒரு தீர்மானத்துக்கு வரக் கூடாது. இதோ மூணாவது படம் ‘தரமணி’. நானும் மார்க்கெட்டை கன்சிடர் பண்ணனும். சர்வைவலுக்கு இது முக்கியம். நாலாவதா ‘பேரன்பு’ எடுக்குறேன். அஞ்சாவதா, ஆறாவதா படம் பண்ணும்போதுதான் எனக்குப் பிடிச்சதை முழுசாத் தமுடியும்னு தோணுது.”

“உங்க படங்களில் பெசிமிஸ்டிக் அதிகமா இருக்கே?” என்று கேட்டான் பார்த்தா.

“நீங்க கதையைத் தட்டையா பார்க்குறீங்களோன்னு தோணுது. டார்க்னஸ் அதிகமா இருக்குன்னு கேட்க வர்றீங்களா?”

“யெஸ்... அதைத்தான் தப்பாக் கேட்டுட்டேன்.”

“என் கதையில் வில்லன் இல்லை. ஹீரோவை உருவாக்கி கதை பண்றதுல உடன்பாடு இல்லை. என் திரைக்கதை ‘தீஸிஸ்’ அடிப்படையிலானது. இந்த ஊர்ல இந்தக் காலகட்டத்துல இது நடக்குது; இந்த தீஸிஸ்ல இருந்து ஒரு கான்ஃபிளிக்ட் உருவாகுது. எனவே, சூழல்தான் என் படத்துக்கு வில்லனா உருவெடுக்குது. நான் பார்த்த, படிச்ச உலகமயமாக்கல் ஏற்படுத்தின தாக்கத்தை வெச்சுதான் ‘கற்றது தமி’ழை உருவாக்கினேன். அது டார்க்னஸ்தான். ஆனா, ‘தங்க மீன்க’ளுக்கு அப்படி இல்லை. அது ஒரு ஃபீல் குட் மூவி. ‘தரமணி’ சட்டயரிக்கான படம். ‘பேரன்பு’ ஃபீல் குட் மாதிரி தோணலாம்; அப்படி இல்லாம வேறொரு அனுபவமும் கிடைக்கலாம்.

ஒரு படத்தைப் பார்க்கும்போது முன்தீர்மானம் கூடாது. ஒவ்வொரு படம் எடுக்கும்போதும் நான் எப்படி இருக்கேனோ, அது என் படைப்பிலும் எதிரொலிக்கும். ஒரு படைப்பை மதிப்பீடு செய்யலாம். ஆனால், ஒரே ஒரு படைப்பை வெச்சு படைப்பாளியை ஜட்ஜ் பண்றதை ஏத்துக்க முடியாது.”

“சரி, திரைக்கதையில் உங்களோட அணுகுமுறைதான் என்ன?” என்ற ப்ரியாவின் கேள்விக்குச் சுருக்கமாக ராம் சொன்ன பதில்:

“ஃபர்ஸ்ட் ஆக்ட், செகண்ட் ஆக்ட், தேர்டு ஆக்ட் முறையில் எனக்கு விருப்பம் இல்லை. நான் ஃபிலாஸபி - தீஸிஸ்ல இருந்து எழுதுறேன். இது மதில் மேல் பூனை நிலைதான். இதை முழுசா எட்டுறதுக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கேன். ஒரு ஹீரோ, வில்லன், சிக்கல்கள், முடிவு... இந்த மாதிரியான போக்குல ஈடுபாடு இல்லை.”

“இந்திய சினிமாவுக்கு சென்சார் முறை தேவையா?” என்று விஷயத்துக்கு வந்தான் ப்ரேம்.

“கண்டிப்பாகத் தேவை. பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் இருக்கக்கூடியதும், சிறுபான்மையினர் மிகுதியாக இருக்கக் கூடியதும், சாதிப் பிரச்சினைகள் நிறைந்து இருக்கக் கூடியதுமான நாட்டில் சினிமாவைக் கவனமாக அணுகணும். நிறைய வேற்றுமைகள் நிறைந்த நாட்டில், மக்கள் கூடிப் பார்க்கும் சினிமாவைக் கவனமாகக் கையாளவில்லை என்றால் சிக்கல்கள் உண்டாகும். அந்த அடிப்படையில் சென்சார் தேவைதான்.

யு, யு/ஏ, ஏ சான்றிதழ் தரக்கூடிய அமைப்பா இருக்குற சென்சார் அமைப்பு செயல்படும் விதம் இனி பெரிய ஆபத்தை விளைவிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏன்னா, எல்லாமே டெல்லியோட பார்வைக்குப் போகணும் என்ற சூழல் அதிகம். இதனால், தமிழ் சினிமா மாதிரி மாநில மொழித் திரைப்படங்களுக்குப் பெரிய பிரச்சினைகள் ஏற்படும். ஒற்றை ஆட்சி - ஒற்றை அதிகாரத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சி நடக்குது. மூணு, நாலு வருஷம் கழிச்சி ஜனநாயகக் குரல் இல்லாமல் போகும். எதிர்காலத்தில் தமிழ் பிரச்சினைகள், தமிழக அரசியல் பிரச்சினைகள், தமிழகச் சிக்கல்கள் பேச முடியாமல், அசல் தமிழ் சினிமாவைத் தர முடியாத நிலையும் ஏற்படலாம்.”

“இன்னும் கொஞ்சம் ஷார்ப்பா சொல்லலாமே” என்று பார்த்தா கேட்க, “மத்தியில் ஆளும் கட்சியின் பிரதிநிதியாகவும், பொதுப்புத்திக்குப் பங்கம் வராமலும், இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டும்தான் சென்சார் அமைப்பு எப்பவும் இயங்குது. இப்படி இல்லாமல், ஜனநாயகத்துடன் சுதந்திரமாகச் செயல்படும் அமைப்பாக இருக்க வேண்டும். முழுக்க முழுக்க குழப்பங்களும் விதிகளில் தெளிவின்மையும்தான் இப்ப இருக்கு” என்றார் ராம்.

“நவாஸுதீன் சித்திகி நடிப்பில் ‘பாபுமோஷய் பந்தோக்பாஸ்’ என்ற படத்துக்கு வன்முறை, பாலுறவு நெருக்கக் காட்சிகளை முன்வைத்து ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டதோடு, 48 இடங்களில் கட் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. ‘ஏ’ கொடுத்த பிறகு ஏன் கட் என்று கேட்டால், அந்தப் படத்தை தியேட்டரில் குழந்தைகளும் பார்க்க வாய்ப்பிருக்கேன்னு சொல்லியிருக்காங்க. ‘ஏ’ சான்றிதழ் படத்துக்கு தியேட்டரில் குழந்தைகள் அனுமதிக்கப்படுறதைக் காரணமா சென்சார் அமைப்பினரே சொல்றது அபத்தம். உங்களோட அனுபவம் இதுல எப்படி?” என்று ப்ரியா கிளறினாள்.

11chrcjTHARAMANI

‘தரமணி’ படத்தில் ஆன்ட்ரியா, வசந்த் ரவி

“என் படத்துக்கு ‘ஏ’ சர்டிஃபிகேட் கொடுத்தாங்க. அதோட ‘எஃப் வேர்டு’ கெட்ட வார்த்தைகளை கட் பண்ணச் சொன்னாங்க. ஒரு பெண், ஒரு ஆணை எதிர்த்துப் பேசுவது தப்பில்லை. பெண்களை ஆண்கள் கிண்டலடிப்பதற்கு ‘யு/ஏ’ தர்றாங்க. ஆனால், ஒரு பெண், ஆண்களை எதிர்த்துச் சண்டையிடும்போது கூறும் கெட்ட வார்த்தைகளை ‘ஏ’-வாகக்கூட அனுமதிக்கலை. லிவிங்-டுகெதர் என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானதுன்னு ‘ஏ’-ன்னு சொன்னாங்க. அப்படின்னா ‘ஓ காதல் கண்மணி’க்கு மட்டும் எப்படி யு/ஏ கொடுத்தீங்கன்னு கேட்டா, அது வேற குழு கொடுத்துச்சுன்னு சொல்றாங்க. சென்சார் அமைப்பு விதிமுறைகள், ஒவ்வொரு குழுவுக்கு ஏத்த மாதிரி மாறுது. இதெல்லாம் வேடிக்கையா இருக்கு” என்று சிரித்தார் ராம்.

“நீங்க சொல்றதைப் பார்த்தா, படம் எடுக்கும்போதே சென்சாரை மைண்டல வெச்சுட்டுதான் ஷூட் பண்ணனும் போல இருக்கே” என்றாள் கவிதா.

“நிச்சயமாக. அதனாலதான் நிறைய காட்சிகளை நான் எடுக்கவே இல்லை. நாம பேச விரும்புற அரசியல எல்லாம் மறைமுகமாகத்தான் வைக்கணும். சென்சார் பற்றிய புரிதலும் புரிதலின்மையும் படைப்பில் தாக்கத்தை உருவாக்கும். பொலிட்டிகலி கரெக்ட் இஸ் நாட் அன் ஆர்ட். சமூகத்துக்கு எதிராக ஒரு ஆர்ட் இருக்கலாம். சென்சார் அமைப்பும் மக்களும் அக்செப்ட் பண்ற அளவுக்குப் படங்கள் வரணும்.

தமிழ்ல கடந்த ஆறு ஆண்டுகளாக வந்த பல ‘யு’ படங்கள் ‘ஏ’ சான்றிதழுக்கு உரியவை.”

“யெஸ். உதாரணத்துக்கு ‘பாகுபலி’ யவே சொல்லலாம். வன்முறைகளும் ரத்தமும் நிறைந்த அந்தப் படம் குழந்தைகளுக்கானது அல்ல” என்று கொந்தளித்தாள் கவிதா.

“ஆமா, நான் என் குழந்தைகளை அந்தப் படத்துக்குக் கூட்டிட்டுப் போகலை. ஆனா, அந்தப் படத்தைத் தான் இந்தியக் கலாச்சாரத்தின் அடையாளம்னு நாடு சொல்லுது. அதுல கிளாமர், பழிதீர்த்தல், துரோகம், எரோட்டிஸம் எல்லாமே இருக்கு. அதைக் குழந்தைகள் பாக்கலாமான்னு கேட்டா, ‘வீடியோ கேம்ஸ்ல வயலன்ஸ் இருக்கே... அதைப் பார்க்குறாங்க. அந்த மாதிரிதான் பாகுபலியைப் பார்க்குறாங்க. அதனால பிரச்சினை இல்லை’ன்றாங்க. அதாவது, ஒருத்தர் 10 பேரை அடிச்சா, அது பிரச்சினை இல்லை. ஒருத்தரை இன்னொருத்தர் அடிச்சா குழந்தைகள் பார்க்கக் கூடாதாம். இது எவ்ளோ பெரிய அபத்தம்.

சென்சாரைவிடக் கொடுமையானது மாரல் போலீஸிங். அதுக்கும் பயப்பட வேண்டிய சூழல்ல இருக்கோம். நம்ம ஊர்ல மக்களோட பார்வையும் மாறணும்; சென்சார் அமைப்பின் அணுகுமுறையும் மாறணும். அப்பதான் உருப்படியான நிலை வரும். ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்துக்கு ‘ஏ’ சர்டிஃபிகேட் கொடுத்தாங்க. கணவன் - மனைவி சேர்ந்து பார்த்தாங்க. இப்ப அந்த நிலைமை இருக்கான்னா இல்லை. நாம பின்னோக்கிப் போறோமோன்னு தோணுது. ஆன்லைன்ல சென்சாரே இல்லை. என் படத்துக்கு ஒரு கட் கொடுக்குறாங்க. அந்த கட்டை யூடியூப்ல எடுத்துப் போடுறேன். சாட்டிலைட்டுக்கு சென்சாரே இல்லை. டிரிபிள் ஏ ப்ரோக்ராம்கூட பண்றாங்க. வேற எந்த மீடியத்தையும் கன்ட்ரோல் பண்ண முடியல. சினிமா மட்டும் மாட்டிட்டுருக்கு” என்று முடித்தார் இயக்குநர் ராம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19465850.ece

Link to comment
Share on other sites

சினிமாலஜி 17: பாட்டுப் புத்தகப் பாணி விமர்சனங்கள்!

 
shutterstock5401048211

மாலையில் செமத்தியான மழை. சினிமாலஜி மாணவ நண்பர்கள் ஹோட்டலுக்குள் ஒதுங்கினர். சில போண்டாக்களும் மெதுவடைகளும் ஆர்டர் செய்யப்பட்டன. பார்த்தா மொபைலில் ஃபேஸ்புக் மேய்ந்துகொண்டிருந்தான்.

"கொஞ்ச நேரம் எங்களோட பேசேண்டா... எந்த நேரமும் ஃபேஸ்புக்கு" என்று ப்ரியா நொந்துகொண்டாள்.

"'தரமணி', 'விஐபி டூ', 'பொதுவாக எம்மனசு தங்கம்' மூணு படத்துல 'தரமணி' பத்திதான் நிறைய வியூஸ் இருக்கு. அதான் பார்த்துட்டு இருக்கேன்" என்ற பார்த்தாவிடம், "வியூஸா? ரிவ்யூஸா?" என்று கேட்டான் ப்ரேம்.

"படம் பார்க்குற எல்லாருமே க்ரிட்டிக்ஸுன்ற ரேஞ்சுல பதிவு போடுறது எல்லாம் ஓவரு. சினிமா பற்றிய எந்த மேதமையும் இல்லாம இப்படி ஏன் போடுறாங்கன்னு புரியலை" என்று வெகுண்டான் ஜிப்ஸி.

போண்டா ஒன்றைப் பக்குவமாகப் பிய்த்து தேங்காய் சட்னியில் தோய்த்து வாயிலிட்ட பார்த்தா சொன்னது:

"சினிமா பார்க்குற எந்த ரசிகருக்கும் படம் எப்படி இருக்குன்னு சொல்ல உரிமை இருக்கு. 'செம்மயா இருக்கு', 'மொக்கைப் படம்', 'நல்லா இருக்கு', 'நல்லா இல்லை'-ன்னு சொல்றது கருத்து. அதேபோல, தனக்கு எழுதத் தெரியும்ன்றதாலேயே சினிமா குறித்து எழுதுறவங்களும், ரீச் அதிகம் போகும்னு படம் குறித்து விரிவா எழுதுறவங்களும் செய்றதை விமர்சனம்னு நாம பார்க்குறதே தப்பு. அதெல்லாம் வெறும் கருத்துகள், பார்வைகள்ன்ற ரேஞ்சுல மட்டும் பாக்கணும்.

இதெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்துதான்னு கேட்டா, ஆமாம்னு தான் சொல்வேன். சமூக வலைத்தளங்களில் புதுப் படங்கள் குறித்த கருத்துகளும் பார்வைகளும்தான் மக்களோட குரலா இருக்கு. ஸ்டார் வேல்யூவோட வெளிவந்த எத்தனையோ மொக்கைப் படங்களைக் கவுத்துருக்கு. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத நல்ல படங்களைக் கைதூக்கிவிட்டுருக்கு. இப்ப வெளிவந்த மூணு முக்கியப் படங்களில் 'தரமணி' பத்தி அதிகம் பேசப்படுறதுக்கும் இதெல்லாம்தான் காரணம்."

பார்த்தாவின் பார்வையில் திருப்தி கொள்ளாத கவிதா, "சோஷியல் மீடியாவுலயும் நான் நிறைய விமர்சகர்களை ஃபாலோ பண்றேன். அவங்களை எல்லாம் நீ வெறும் கருத்தாளர்கள்னு சொல்றதை ஏத்துக்க மாட்டேன்" என்று கொந்தளித்தாள்.

"ஆமா, சிலர் ரொம்ப நல்லாவே விமர்சனம் பண்றாங்க. ஆனா, அதில் மிகச் சிலரின் நோக்கம், கவன ஈர்ப்பு மட்டும்தான் முக்கியமா இருக்கு. எல்லாத் தரப்பும் கொண்டாடுற உருப்படியான படங்களில் பிரச்சினைகளை நோண்டியே விவாதப் பொருளா மாத்துறாங்க. இன்னும் சிலரோ விசு வகையறா படமா இருந்தாலும் ஈரான் படம்னா இளிக்கிறாங்க; உள்ளூர்ல செம்மயா படத்தை எடுத்தால் கிராமர் மிஸ்டேக்னு லிஸ்டு போட்டு ஆபரேஷன் பண்ணி, ஃபாலோயர்ஸ் எனப்படும் பேஷண்ட் எண்ணிக்கையை கூட்டிக்கிறாங்க.

ஆனாலும், மெயின் ஸ்ட்ரீம் மீடியாவைவிட பெட்டரா ரிவ்யூ பண்ணக் கூடியவங்க சோஷியல் மீடியாவுல இருக்குறாங்கன்றதுதான் ஆறுதலான விஷயம். சில சினிமா சார்ந்த ஃபேஸ்புக் குழுக்கள் ரொம்ப தீவிரமாவே சினிமாவை அணுகுறாங்க" என்றான் பார்த்தா.

"ஃபேஸ்புக், ட்விட்டர்ல வர்ற சினிமா பார்வைக்கு இப்போதைக்குப் பெரிய லெவல்ல மதிப்பு இருக்கு. ஆனா, எனக்குத் தெரிஞ்சு சிலர் பெய்டு ரிவ்யூ - பெய்டு புரொமோஷன்லாம் பண்றதைப் பார்க்கும்போது எரிச்சலா இருக்கு. சினிமா சார்ந்த தகவல்களைப் போட்டுப் போட்டே ட்விட்டர்ல ஆயிரக்கணக்கான ஃபாலோயர்ஸைச் சேர்த்துக்க வேண்டியது. அதை மூலதனமா வெச்சே புதுப் படங்களை ப்ரொமோட் பண்றாங்க. போலியான விமர்சனம் போட்டும் காசு பாக்குறாங்க. இது எங்க போய் முடியுமோ?" என்று அலுத்துக்கொண்டான் ரகு.

"என்னதான் ஆனாலும் என்னதான் பண்ணினாலும் சோஷியல் மீடியாவில் நேர்மையும் உண்மையும்தான் ஜெயிக்கும். எல்லாத்துலயும் இருக்குற மாதிரி இங்கேயேயும் இருட்டான பக்கங்கள் இருக்கு. அவ்ளோதான்" என்று தத்துவ லாஜிக் உதிர்த்தான் மூர்த்தி.

"யூடியூப்ல லட்சக்கணக்குல வியூஸ் வர்ற சினிமா விமர்சனங்களைப் பார்க்க முடியுதே. அந்த வியூஸுக்கு எல்லாம் காரணம் ரிவ்யூவோட தரம்தானா?" என்று அப்பாவியாக கேட்டாள் மேனகா.

"ஹா ஹா... அது ஆன்லைன் மீடியா நம்பர் கேம். அல்கரித அவலம். யூடியூப் சேனல்ல யாரு முதல்ல துண்டு போட்டுட்டு சேனல் நடத்துறாங்களோ அவங்களை டீஃபால்டாவே யூடியூபும் கூகுளும் தேடல்களில் முதன்மைப்படுத்தும். வியூஸ் ஆட்டோமேட்டிக்கா அதிகம் கிடைக்கும். ஒருத்தர் முன்னாடியே இடம் போட்டு வெச்சுட்டாருன்றதாலேயே அவர் எக்ஸ்பர்ட்டா ஆக முடியாதுல்ல. சோ, வியூஸை பேஸ் பண்ணி யூடியூப் விமர்சனத்தோட தரத்தை நிர்ணயிக்குறது முட்டாள்தனம்" என்றாள் ப்ரியா.

"சரி, என்னதான் இப்ப அவசியம்?" என்று அழுத்தமாகக் கேட்டாள் கீர்த்தி.

"போன வாரம் நமக்கு இயக்குநர் ராம் க்ளாஸ் எடுக்க வந்தார்ல, அப்ப அவர்கிட்ட தனியா கொஞ்சம் பேசினேன். அப்ப அவர் சொன்ன மேட்டர் இதுக்குப் பதிலா இருக்கும்னு நினைக்கிறேன். ‘மெயின் ஸ்ட்ரீம்’ மீடியா விமர்சனம், மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப மாறும். பெரிய ஹிட்டான படத்தை இன்னிக்கு வரைக்கும் எந்த மெயின் ஸ்ட்ரீம் மீடியாவும் நல்ல படம் இல்லை-ன்னு எழுதலை. ஆனால், சீரியஸ் லிட்டரேச்சர்ல எழுதுறதுதான் கொடுமையா இருக்கு. விமர்சனத்தை விட ஃபிலிம் அப்ரிசியேஷன்தான் சினிமாவுக்கு முக்கியம்.

எது சரி, எது தப்புன்னு விவாதத்தையும் உரையாடலையும் கொண்டிருக்கிற ஃபிலிம் அப்ரிசியேஷன் என்ற ஒன்றே இல்லாதது தமிழ் சினிமாவின் நிஜமான சாபக்கேடு. ஃபிலிம் மேக்கிங் மாதிரியே ஃபிலிம் அப்ரிசியேஷனும் ஒரு ஆர்ட். அது உருவாகணும். வளரணும்'னு சொன்னார். எனக்கும் அதேதான் தோணுது. திரைப்படத் திறனாய்வுக் கூட்டங்கள் நிறைய நடக்கணும். நிறைய விவாதிக்கணும். இதுதான் ரசனை மேம்படவும், நல்ல படைப்புகளை அடையாளம் காணவும் உதவும்" என்றான் ரகு.

"நீ சொல்றது ஓகே. முன்னெல்லாம் பாட்டு புக்கு நிறைய வரும். அதோட முதல் பக்கத்துல கதையை முழுசா எழுதிட்டு, கடைசி லைன்ல 'இது நடந்துச்சா இல்லையான்றதுதான் கதை'-ன்னு முடிச்சிருப்பாங்க. அப்படித்தான் இன்னைக்கும் நிறைய விமர்சனங்கள் வருது" என்றாள் மேனகா.

"அந்தப் பாட்டுப் புக் கதைச் சுருக்கத்தோட, ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது; இசை ரசிக்கும்படி இருந்தது; இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்-ன்ற மாதிரி சில வாக்கியங்கள் சேர்த்தால் அதுதான் இன்றைய பெரும்பாலான மெயின் ஸ்ட்ரீம் மீடியாவின் விமர்சன டெம்ப்ளேட்" என்றாள் ப்ரியா.

"ஆமா, தமிழில் மிகச் சில மெயின் ஸ்ட்ரீம் பத்திரிகைகள்தான் உருப்படியா சினிமா விமர்சனம் பண்ண ட்ரை பண்றாங்க. சினிமா தகவல்களையும், பேட்டிகளையும் எடுக்குற சினிமா ரிப்போர்ட்டர்களை விமர்சனம் எழுதச் சொன்னா இப்படித்தான் இருக்கும். ஃபிலிம் க்ரிட்டிக்குக்கும் ஃபிலிம் ரிப்போர்ட்டருக்கும் உள்ள வித்தியாசத்தை உணரணும். ஃபிலிம் க்ரிட்டிக்ஸ் மூலமா விமர்சனம் வரணும். அதுவரைக்கும் நமக்கு பாட்டு புக் விமர்சனம்தான் அதிகம் வரும்" என்று கூறிய பார்த்தா இன்னொரு பிளாக் டீ ஆர்டர் செய்தான்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19509702.ece

Link to comment
Share on other sites

சினிமாலஜி 18: ஆரண்ய காண்டமும் தர்ம யுத்தமும்!

 

25chrcjAaranya-Kaandam%201

‘சுப்பு’வாக யாஸ்மின் பொன்னப்பா

25chrcjAaranya%20Kaandam

‘பசுபதி’யாக சம்பத் ராஜ்

25chrcjAaranya%20Kaandam%203

‘சிங்கபெருமாளாக’ ஜாக்கி ஷெராப், ‘சப்பை’யாக ரவிகிருஷ்ணா

25chrcjAaranya-Kaandam%201

‘சுப்பு’வாக யாஸ்மின் பொன்னப்பா

25chrcjAaranya%20Kaandam

‘பசுபதி’யாக சம்பத் ராஜ்

தர்மம் எனும் சொல் அதிகம் புழங்கும் சமூக அரசியல் சூழலில், சினிமாலஜி வகுப்பில் ‘ஆரண்ய காண்டம்’ சிறப்புத் திரையிடல் நடந்தது தற்செயலான ஒன்றுதான். ஒவ்வொருவரும் ஏழெட்டு முறை பார்த்துவிட்டாலும், இப்போதும் ஏதோ புதிய படத்தை ரசிப்பதுபோல் சிலிர்த்து அனுபவித்தனர். படம் முடிந்தபோது, வகுப்பு என்பதைக் கூட மறந்தபடி பார்த்தா விசிலடித்தான்.

“கொஞ்சமும் இயல்பை மீறாத ஒரு தமிழ்ப் படம் இனியும் வருமான்னு டவுட்டா இருக்கு” என்று வியந்தான் பார்த்தா.

“தியேட்டர்ல ரிலீஸ் ஆனப்ப கோட்டை விட்டுட்டு, சினிமா ஆர்வலர்கள் எப்பவுமே கொண்டாடிட்டு இருக்க படம். ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் நாம சினிமாவைக் கத்துக்குறதுக்குப் புதுப்புது விஷயங்கள் இதுல கொட்டிக்கிடக்கு. அப்படி ஒரு கச்சிதமான சினிமா” என்று தன் பங்குக்குச் சிலாகித்தாள் கவிதா.

“திரைமொழி ஒரு பக்கம் இருக்கட்டும். கதாபாத்திரங்களைச் செதுக்குறதுதான் மேட்டரே. எல்லாக் காலகட்டத்திலும் முக்கியப் படைப்பாளிகள் பலரும் கதாபாத்திரங்களை உருவாக்குறதுல மட்டும் தடுமாறுறதா நினைக்கிறேன். ஒரு படத்துல எல்லாக் கதாபாத்திரங்களிடமும் ஒரே மாதிரியான தன்மைகள் இருக்குறதைப் பார்க்க முடியும். உதாரணமா, கே.பாலசந்தர் படத்துல வர்ற எல்லா கேரக்டருமே புத்திசாலிகள் போலவே பேசுவாங்க. பாலா படத்துல வர்ற பல கேரக்டர்ஸும் ஒரு மார்க்கமாகவே திரிவாங்க. மணிரத்னம் கேரக்டர்ஸ் எல்லாமே பிட்டு பிட்டா பேசுற மாதிரி இருக்கும். ‘ஆரண்ய காண்ட’த்துல ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தன்மையா ரொம்ப இயல்பா இருக்கும். பேசுற விதத்துலகூட வேறுபாடுகளைப் பார்க்கலாம். எதுலயும் சிமிலாரிட்டீஸ் பார்க்க முடியாது” என்றாள் ப்ரியா.

அவளது பார்வையை ஆமோதிப்பதுபோல் தலையாட்டிய ரகு, “பல்வேறு கலைகளின் கூட்டுச் சேர்க்கைதான் சினிமா என்ற கலை. அந்தந்த நாடுகள், அந்தந்த மாநிலங்கள், அந்தந்தப் பகுதிகளின் பின்புலத்தின் அடிப்படையில்தான் காட்சி அமைப்புகளில் மாறுதல் இருக்கணும். நம் நாட்டையும் மாநிலத்தையும் பொறுத்தவரைக்கும் சில நிமிடங்கள் கூட நம்மால பேசாம இருக்க முடியாது; மத்தவங்ககூடப் பேசும்போதும் நமக்குள்ளேயே அதிகம் பேசுவோம். இப்படிப் பேசுறதுன்றது நம்ம மண்ணுக்கே உரிய அம்சங்களில் முக்கியமானது. அப்படி இருக்கும்போது, நாம எடுக்குற சினிமாவுல விஷுவலா மட்டும் இல்லாம; வசனங்களுக்கும் சரிவிகிதத்துல முக்கியத்துவம் தரணும். அதை மிகச் சிறப்பா செஞ்சிருக்கு ஆரண்ய காண்டம். இந்தப் படத்துல காட்சிகளுக்கு இணையாக வசனங்கள் மூலமாக கதை சொல்லப்பட்டிருக்கும். இதையும் தனித்துவமா எடுத்தக்கலாம்” என்றான்.

“அப்படின்னா, நம்ம சினிமாவுக்கு பாட்டும் வேணும்தானே... அதை மட்டுமே ஏன் ஏத்துக்க மாட்றீங்க? அதுவும் நம்மளோட ஸ்பெஷாலிட்டிதானே?” என்று கொக்கி போட்டான் ப்ரேம்.

அதற்கு அசராத ரகு, “ஆமா, நீ சொல்றதை நானும் ஏத்துக்குறேன். ஆனால், பாடல்களை யூஸ் பண்ற விதத்துல இயல்புத்தன்மை இருக்குற மாதிரி இருந்தா பெட்டரா இருக்கும். இப்பல்லாம் மான்டேஜ் சாங்ஸ் நிறைய வர்றதும் நம்ம படைப்பாளிகளோட மெச்சூரிட்டியைக் காட்டுது. ‘ஆரண்ய காண்ட’த்துல பாடல்கள் இல்லைன்னு யாரு சொன்னா? பல காட்சிகளின் பின்னணியில் ஓட்டப்படும்இளையராஜாவின் பழைய பாடல்கள் எல்லாமே இந்தப் படத்துக்கானதும்தான்” என்று சமாளித்தது எல்லாருக்குமே பிடித்திருந்தது.

“இன்னொரு மேட்டர் கவனிச்சீங்களா... இந்தப் படத்துல லாஜிக்கல் பிழையே கண்டுபிடிக்க முடியல. இதுக்கு, தியாகராஜன் குமாரராஜா கையாண்ட திரைக்கதை உத்திதான் கைகொடுத்துருக்குன்னு நினைக்கிறேன். இப்படிப் பண்ற ஒரு சினிமா காலத்தைத் தாண்டி, தேசங்கள் கடந்து எந்த பார்வையாளனுக்கும் நெருக்கம் தரும்னு தோணுது” என்றாள் மேனகா.

“நீ சொல்றது ஓகேதான். இந்தப் படத்துல மிஸ்டேக் இல்லைன்னு யார் சொன்னது? இதுலயும் ஒரு லாஜிக் மிஸ்டேக் இருக்கே!” என்று சிரிப்பு நக்கீரர் போல் குதூகலித்தான் பார்த்தா.

“ ‘ஆரண்ய காண்ட’த்துலயேவா?”

“ஆமாம். ஆனா, இதை ஏழாவது தடவை பார்க்குறப்பதான் கண்டுபிடிச்சேன். கதைப்படி பாவா லாட்ஜ் இருக்குறது புதுச்சேரி. சென்னையில இருந்து கார்ல கிளம்பும் சிங்கபெருமாள் ஆட்கள் பாவா லாட்ஜுக்குப் போறாங்க. அதேநேரத்துல, பாவா லாட்ஜுல தங்கியிருக்கும் காளையனும் கொடுக்காப்புளியும் நடந்துதான் சேவல் சண்டை விடும் இடத்துக்குப் போறாங்க. சென்னையில் இருக்குற சிங்கபெருமாளும் அதே சேவல் சண்டைக்கு வர்றார். இது சின்ன மிஸ்டேக்தான். சென்னை, புதுச்சேரியைப் பத்தி நல்லா தெரிஞ்சவங்கதான் இதைக் கண்டுக்க முடியும். ஆனா, யாரும் ஈஸியா கண்டுபிடிக்க முடியாத அளவுக்குப் பார்வையாளர்களோட கவனத்தை ஒருமுகப்படுத்துற மாதிரி திரைக்கதையை அமைச்சுப் படமாக்கியதுதான் கெத்து” என்றான் பார்த்தா.

“ஒத்துக்குறேன். நீ அப்பாடக்கர்தான்” என்று பார்த்தாவை நக்கல் செய்தான் ப்ரேம்.

மீண்டும் கதாபாத்திர வார்ப்புக்குத் திரும்பிய கவிதா, “எல்லா கேரக்டருமே நெகட்டிவ் தன்மைகளோட இருக்குறதால, அது குறைவாக இருக்குற பசுபதி, காளையன், கொடுக்காப்புளி மேலதான் நாம பார்வையாளரா ஈடுபாடு காட்டுறோம். அவங்களுக்குதான் சப்போர்ட் பண்றோம். கொஞ்சம் ஆழமா பார்த்தால், எல்லா கதாபாத்திரத்துக்குள்ளும் நமக்குள் இருக்கிற பாதகமான அம்சங்களைக் கண்டுகொள்ள முடியும். ஆமா, இந்தப் படத்தை தியாகராஜன் குமாரராஜா ஏதாவது டீட்டெய்லா விளக்கம் கொடுத்துருக்காறா?” என்றாள் கவிதா.

“நான் அவர் கலந்துகிட்ட சில கூட்டங்களுக்குப் போயிருக்கேன். அவரோட சில பேட்டிகளும் பார்த்திருக்கேன். எதுலயுமே தன்னோட படத்தைப் பத்தியும், காட்சிகள் பத்தியும் டீட்டெய்லா விளக்குனதே இல்லை” என்றான் ஜிப்ஸி.

“இதான் விஷயம். உருப்படியா ஒரு படம் எடுத்தா, அதைப் பத்தி பெருசா படைப்பாளி வாய்த் திறந்து விளக்கம் கொடுக்கக் கூடாது. ஒரு படத்தைப் பார்க்குற வெவ்வேறு விதமான பார்வையாளர்களும் தங்களோட அனுபவத்துக்கும் சிந்தனைக்கும் ஏத்த மாதிரி அந்தப் படைப்பை உள்வாங்கிப்பாங்க. பார்வையாளர்களைச் சிந்தித்து ரசிக்க விடாதபடி, ஒரு படைப்பாளியே தன்னோட படைப்புக்குப் பொருள் விளக்கம் தர்றதுன்றது நம்ம பார்வையைத் தட்டையாக்கிடும்னு நம்புறேன். தியாகராஜா குமாரராஜா இஸ் கிரேட்!” என்றாள் கவிதா.

“அதே மாதிரி பெண்களை புரொட்டாகனிஸ்டா வெச்சு எடுக்குற படம்னாலே பெண்ணியம், அது இதுன்னு என்னனவோ கற்பனை பண்ணி கிறுக்குறாங்க. இந்தப் படத்துல சுப்பு கேரக்டர் இருக்கே. அது வேற லெவல். ஆண்களால் சூழப்பட்ட இந்தச் சமூகத்துல ஒரு பொண்ணு எப்படி நாசூக்காகச் செயல்பட்டு, சரியான இடத்துல கெத்து காட்டி எல்லா ஆண்களையும் சப்பை ஆக்கணும்னு மிரட்டிட்டுப் போயிடுவா. இப்படி இருந்தாதான் நம்ம சமூகத்துல சர்வைவ் பண்ண முடியும்ன்றது ரொம்ப அழுத்தமாவே சொல்லப்பட்டிருக்கு” என்று மெச்சினாள் மேனகா.

“எனக்கு என்னமோ இந்தப் படத்துக்கு ‘தர்ம யுத்தம்’னு பேரு வச்சு ரீ-ரீலிஸ் பண்ணினா நல்லா ஓடும்னு தெரியுது. இந்த மாதிரியான படங்களைக் கொண்டாடுறது இப்ப அதிகமாகியிருக்கு. ரொம்ப அட்வான்ஸா பண்ணிட்டா கூட, இந்தப் படத்தை இப்ப மீண்டும் ஃப்ரெஷ்ஷா ரிலீஸ் பண்ணலாம்” என்று யோசனை தெரிவித்தான் பார்த்தா,

“அதென்ன தர்ம யுத்தம்?” எனக் கேட்டான் ப்ரேம்.

“ ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் கதாபாத்திரங்களுக்குள் நடக்குறதும் ஒரு தர்ம யுத்தம் தானே. எது தேவையோ அதானே தர்மம். நம்ம நாட்லயும் அதானே நடக்குது. எது தேவையோ அதை அடையறதுக்குத்தானே தர்ம யுத்தம் பண்றாங்க!”

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19553382.ece

Link to comment
Share on other sites

சினிமாலஜி 19: மயக்கமா... கலக்கமா...?

 

 
01CHRCJKV

காற்று வெளியிடை

 

சினிமாலஜி படிப்பு முடியும் தறுவாயில் இருக்கிறது. எனினும், வகுப்பிலும் வெளியிலும் விவாதத்தை வளர்ப்பதில் குறைவில்லை. வழக்கமான பாடநேரம் இன்று முடிந்த நிலையிலும், புதிதாகப் பேசுபொருள் ஒன்றை முன்வைத்தான் பார்த்தா.

“சினிமா படைப்பாளிகள் பலரிடம் உள்ள பிரச்சினையே ஏதோ ஒரு சூழலில் தொய்வு ஏற்படுவதுதான். அது அப்போதைய மிக முக்கியமான இயக்குநர் மகேந்திரன் தொடங்கி இப்போதைய ஸ்டைலிஷ் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் வரைக்கும் தொடருது. சினிமாக்குள்ள நுழையப் போற நாம இந்தப் பிரச்சினையை டீல் பண்ணியே ஆகணும்.”

ஆர்வமான கவிதா, “எனக்கும் இதுல பெரிய கவலை இருக்கு. ‘உதிரிப்பூக்கள்’ மாதிரியான அற்புதமான படைப்புகள் கொடுத்தவர்களால் தன் வாழ்நாள் முழுவதும் திரைத்துறையில் இயங்க முடியாத நிலை ஏன்னு யோசிச்சு இருக்கேன். சினிமான்றதே பல்வேறு கலைகளை உள்ளடக்கியதுதான். குறிப்பாக, எந்த ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியும் சினிமாவுல முக்கியப் பங்கு வகிக்கும். அதுல, தங்களை அப்டேட் பண்ணிக்காததாலதான் பிரச்சினையோன்னு தோணுது. பாரதிராஜா, பாக்யராஜ் முதலான பலர்கிட்டையும் அப்டேட் இல்லாதததுதான் குறைன்னு நினைக்கிறேன்” என்றாள்.

“அந்த வகையில இன்னிக்கும் நிக்குற மணி சார் கிரேட்” என்று கிடைத்த இடைவெளியில் கால் டாக்ஸி ஓட்ட முயன்றான் ப்ரேம்.

இதற்காகவே காத்திருந்ததுபோல் சட்டென கிளம்பிய ஜிப்ஸி, “பார்றா... வெறும் டெக்னிக்கல் அப்டேட் மட்டும் போதாதுன்றதுல உங்க மணி சாரே சரியான உதாரணம். காதல் அணுகுமுறைகள் தொடர்பா மட்டும்தான் அவர் அப்டேட் பண்ணியிருக்கார். வேற உருப்படியான சப்ஜெக்டுக்குள்ள போக மாட்டேங்குறார். எந்த மாதிரி சப்ஜெக்ட்ல படம் எடுக்கணும்ன்றது ஒரு தனிப்பட்ட படைப்பாளியோட உரிமைதான். அந்த விருப்பத்தைக் குறை சொல்லலை.

ஆனா, ரொட்டீன் ஆடியன்ஸ் கிடைக்குற பெரிய படைப்பாளின்னு சொல்லிட்டு இருக்குறவங்க காதல் சப்ஜெக்ட்ல மட்டும் அதிகமா கவனம் செலுத்துறதை ஏத்துக்க முடியலை. ஆபாவாணன் மாதிரியானவங்க எவ்ளோதான் ஃபிலிம் மேக்கிங்ல ஸ்ட்ராங்கா இருந்தாலும் கன்டென்ட்ல கோட்டை விடுறதைப் பார்க்குறோமே” என்று பொருமினான்.

“ஆமா, எனக்கென்னவோ ஒரு ஸ்டேஜுக்கு மேல பெரிய ஆளானவங்க பெருசா ஹோம்ஒர்க் கூட பண்றது இல்லையோன்னு தோணுது. கதைக்களமும் கதாபாத்திரங்களும் முடிவு பண்ணிட்டா, அது நிஜத்துல எப்படி இருக்கு, அதுபோன்ற மனிதர்கள் எப்படி இருக்குறாங்கன்றதே நேரடி ரிசர்ச்ல கூட யாரும் ஈடுபடுறது இல்லை. அதான், ரியலிஸ்டிக் தன்மையோட சினிமா எடுக்குறேன்னு சொல்ற இயக்குநர்களோட படைப்புகள் கூட அந்நியத்தன்மையோட இருக்கு” என்றாள் ப்ரியா.

“ஆனா, இப்ப இருக்குற முக்கியமான இளம் படைப்பாளிகள் இந்த விஷயத்துல ரொம்ப கவனமா இருக்காங்கன்னு தோணுது” என்றாள் மேனகா.

“மிகச் சிலர்தான் அப்படி இருக்காங்க. புதுசா வர்றவங்க தங்களோட வாழ்க்கை முழுவதும் அசைபோட்ட, மனத்திரையில் பார்த்துக்கொண்ட, அதுகூடவே டிராவல் பண்ணின படங்களைத் தர்றாங்க. தங்களோட ஒட்டுமொத்த அனுபவத்தையும் திறமையையும் ஒரே படத்துலயோ ரெண்டு மூணு படத்துலயோ காட்டுறாங்க. அதுக்கப்புறம் கற்பனைத்திறன் காலியான மாதிரி மொக்கைப் படங்கள் கொடுத்துட்டு ஃபீல்டுல இருந்தே காலி ஆகுறாங்க” என்றாள் ப்ரியா.

01CHRCJSHOOTINGSPOT

‘உதிரிப்பூக்கள்’ படப்பிடிப்பில் நாயகி அஸ்வினி, பேபி மஞ்சு, மாஸ்டர் ஹாஜா ஷெரிஃப் ஆகியோருடன் இயக்குநர் மகேந்திரன்   -  THE HINDU ARCHIVES

“நிச்சயமா ‘காதல் கோட்டை’, ‘கோகுலத்தில் சீதை’ மாதிரியான சூப்பரான படங்களைக் கொடுத்த அகத்தியன் தன்னோட அட்ரஸை இழக்க இதான் காரணம்போல. ஷங்கர், ஹரி மாதிரியான இயக்குநர்கள் தங்களுக்குன்னு ஒரு கிராஃப்ட் வெச்சிக்கிறாங்க. அதை மீறி அவங்களால பண்ண முடியலை.

ஷங்கர் தன்கிட்ட இருக்குற வெறுமையைச் சரிசெய்ய ‘நண்பன்’மாதிரி ரீமேக் பக்கமும் ஒதுங்கிப் பாத்தாரு. ‘ஐ’ படத்துல டோட்டலா காலி. இப்போது ‘2.0’ மேக்கிங் வீடியோவும் பெருசா இம்ப்ரஸ் பண்ணலை. ஆனாலும், அவராவது எழுத்தாளர்களோட பங்களிப்பை அப்பப்ப வாங்கிகிட்டு பேலன்ஸ் பண்ண ட்ரை பண்றாரு. இன்னொரு பக்கம் யோசிச்சா, காமெடி தூக்கலா இருக்குற மசாலா படம்தான் சேஃப்னு தோணுது” என்றான் ரகு.

“ஹே... மக்கள் எப்பவும் ரசிக்கிற மாதிரி காமெடி மசாலா படம் எடுக்குறது ஒண்ணும் அவ்ளோ ஈஸி இல்லை கண்ணா. குடியும் குடி நிமித்தமுமா கதாநாயகனையும் அவனோட நண்பனையும் கும்மாளம் அடிக்கவெச்ச இயக்குநர் ராஜேஷால ரெண்டு படத்துக்கு மேல தாக்குப் பிடிக்க முடியலை. ஆனால், சுந்தர்.சி இன்னமும் சூப்பரான பொழுதுபோக்கு சினிமா கொடுக்குறார். அதுக்கும் வெரைட்டியும் அப்டேட்டும் முக்கியம்” என்றான் பார்த்தா.

“சிலர் தனக்குன்னு சில ஸ்டைல்களில் மாட்டிகிட்டு, கதை வறட்சியில சிக்கித் திணறுறாங்களோன்னு தோணுது. என்ன பண்ணினாலும் ஃப்ளேவர் மாறவே மாறாது. இதுக்குச் சரியான முன்னுதாரணம் கெளதம் வாசுதேவ் மேனன். சேரன், அமீர் மாதிரியானவங்க புயல் மாதிரி வெளியே வந்து மழையே இல்லாத வறட்சி நிலைக்கு மாறி, வெறும் கருத்தாளர்களா தங்கள் இருப்பைப் பத்திரமா பாத்துக்குற நிலைமையும் இருக்கு. இவங்கள்லாம் நமக்கு நல்ல பாடம். சினிமாவுல பெரிய ஆள் ஆகுறதுக்கு முன்னாடி தன் கதைகளைச் செதுக்க பல தரப்பினருடனும் கலந்து ஆலோசிச்சு டெவலப் பண்றாங்க. ஆனா, ஒரு லெவல் போயிட்டா தங்களோட உதவி இயக்குநர்கள்கிட்டகூட கதையைச் சொல்றது இல்லை” என்றாள் ப்ரியா.

“நான் கேள்விப்பட்டதுல இந்த மேட்டர்ல முருகதாஸ் அணுகுமுறை கரெக்ட்னு நினைக்கிறேன். நான் கேள்விப்பட்டவரை அசிஸ்டெண்ட்ஸ் வெச்சு இம்ப்ரோவைஸ் பண்றதுல அவர் சூப்பர்” என்றாள் கீர்த்தி.

“ஃபிலிம் மேக்கிங்ல எவ்ளோதான் திறமையாளர்களா ஆனாலும், கதை சொல்லும் உத்தியிலும், கதையைத் தெரிவு செய்றதுலயும் கவனம் செலுத்தாதுதான் பெரிய பின்னடைவுன்னு நினைக்கிறேன். எவ்ளோதான் ‘விவேகமா’ ‘தெறி’க்கவிட்டாலும் தேக்கநிலைல சிக்கித்தான் ஆகணும்” என்றான் மூர்த்தி.

“கதையைப் போலவே திரைக்கதையையும் கவனத்துல எடுத்துக்கணும். இன்னும் இங்க எல்லாமே தான்தான் பண்ணனும்ன்ற தேவையில்லாத போதை போகலை. கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன் எல்லாமே ஒருத்தர் பேருதான் இருக்கணும்னா அது எல்லாருக்கும் சரியா வராது. இந்தப் போதையில இருந்து மீண்டா, ஒரு நல்ல ஃபிலிம் மேக்கர் என்ற வகையில் டைரக்‌ஷன் மட்டும் பாத்துகிட்டு, கதையையும் திரைக்கதையையும் வெவ்வேறு திறமையாளர்கள்கிட்ட இருந்து வாங்கிக்கிற பக்குவம் வேணும். இது இல்லைன்னா ஒரு பீரியடுக்கு அப்புறம் அம்பேல்தான் தோணுது. மலையாள சினிமாவுல திரைக்கதை எழுத்தாளர்களுக்கு செம்ம மரியாதை இருக்கு. நல்ல சன்மானமும் கிடைக்குதுன்னு சொல்றாங்க. ஆனா, இங்க ஒரு படம் ரிலீஸ் ஆவுற ஸ்டேஜ்லகூட திரைக்கதையாளருக்கு ஒரு ரூபாய்கூட கிடைக்காத நிலைமைதான் இருக்கு. எப்போ திரைக்கதைக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்குமோ அப்போதான் நம்ம சினிமா இன்னும் வேற லெவலுக்குப் போகும்” என்று விரிவாகவே பொங்கினான் பார்த்தா.

“இப்பதான் மிஷ்கின்கிட்ட இருந்து மெசேஜ் வந்திருக்கு. நம்ம க்ளாஸுக்கு வரேன்னு சொல்லியிருக்கார். இதான் நம்மளோட கடைசி க்ளாஸா இருந்தாலும், சினிமால ஜெயிக்கிறதுக்கும் தொய்வு இல்லாம இயங்கவும் அவரோட வகுப்பு உதவும்னு நம்புறேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்த ப்ரியாவின் கால்களையே நோக்கிக்கொண்டிருந்தான் பார்த்தா.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19594562.ece

Link to comment
Share on other sites

சினிமாலஜி 20: வாசிப்பே ரகசியம்!

08chrcjmysskin

மிஷ்கின்

வகுப்பு ஏதோ இறுக்கமாகவே இருந்தது. முதல் கேள்விக்காக காத்திருந்த இயக்குநர் மிஷ்கினிடம் பார்த்தா கேட்டான்: “சினிமாவுக்கென மொழி, இலக்கணம் இருக்கிறதா?”

சினிமா என்பது ஒரு கலை. கலைக்கு மொழியும் பயிற்சியும் உண்டு. லாங்க்வேஜ் என்பது எக்ஸ்பிரஷன்; எப்படி எக்ஸ்பிரஸ் செய்வது என்ற பயிற்சியை அளிப்பது கிராமர். சைக்கிள் ஓட்டுறதுக்கு அண்ணனோ மாமாவோ நமக்குக் கத்துக்கொடுப்பாங்க. முதலில் குரங்குப் பெடல் போட்டு ஓட்டுவோம். அப்புறம் போதுமான பயிற்சி கிடைச்சதும் தன்னம்பிக்கையோட தனியா ஓட்டுவோம். இதுதான் சைக்கிள் கத்துக்குற ப்ராசஸ். இப்படி இல்லாமல், ஒரு சைக்கிளை தொடர்ச்சியா இருபது நாள் பாத்துட்டே இருந்துட்டா அந்த சைக்கிளை ஓட்டிட முடியுமா? கடலில் பயிற்சி இல்லாமல் நீச்சல் அடிக்க முடியுமா? அது மாதிரிதான் கலைக்கும் பயிற்சிகள் உண்டு. ஒளிப்பதிவு, இசை, நடிப்பு, எடிட்டிங் என பல்வேறு கலைகளும் சினிமாவில் இருக்கின்றன. அந்த ஒவ்வொரு கலைக்குமான இலக்கணத்தை அறியவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக திரைக்கதை எழுதத் தெரியவேண்டும்.

“நீங்க எப்படி கத்துகிட்டீங்க?” என்று கேட்டான் ப்ரேம்.

“நான் ரொம்ப சிஸ்டமாட்டிக்கா சினிமா லாங்க்வேஜ் கத்துக்கிட்டு இருக்கேன். ஹிட்ச்காக், குரோசவா, மெல்வில், கிம் கி டுக், டகாஷி கிட்டானோ போன்றவர்களை ஆழமா படிச்சேன், ரொம்ப ஆழமா படிச்சிகிட்டே இருக்கேன். இன்னும் ஆழமா படிக்கப் போறேன். அப்பதான் நான் ஒரு ஃபிலிம் மேக்கரா சஸ்டைன் பண்ண முடியும்.”

“சினிமாவோட ஸ்பெஷலே நெகிழ்வுத்தன்மைதான். தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏத்த மாதிரி சினிமா தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும். அப்படி இருக்க, வழக்கமாக பின்பற்றப்படும் திரைமொழியும் இலக்கணமும் அவசியம்தானா?” என்று கேட்டாள் ப்ரியா.

கொஞ்சம் நிதானித்த மிஷ்கின், “ஆங்கில வார்த்தைகள் தெரிந்தால்தான் ஆங்கில மொழியைப் பேச முடியும். ஆங்கிலத்தில் பேசிக்கா பேசுறதுக்கு சுமார் 3,000 வார்த்தைகள் தெரிஞ்சிருக்கணும்; ஒரு பேராசிரியருக்கு12,000 வார்த்தைகள் தெரிஞ்சிருக்கலாம்; ஒரு பெரிய ஸ்காலருக்கு 20,000 வார்த்தைகள் தெரிஞ்சிருக்கணும்; ஒரு சுமைதூக்கும் தொழிலாளிக்கு எட்டு வார்த்தை தெரிஞ்சா போதும்; ஒரு ரிக்ஷாகாரருக்கு மூணு வார்த்தை தெரிஞ்சா போதும். நீங்க எதுவா ஆசைப்படுறீங்களோ, அதுக்கு ஏத்த மாதிரி தெரிஞ்சிக்கலாம். இதை அப்படியே சினிமா படைப்பாளிகளுக்கும் பொருத்திப் பாத்துக்கலாம்” என்றார்.

“நீங்க வைக்கிற கால்கள் ஷாட்டை பார்த்துட்டே இது மிஷ்கின்னு சொல்லிடுறோம். உங்களோட பாணின்னு சொல்றதா இல்ல, இதுவும் ஒரு பின்னடைவான விஷயமா?” என்று கிளறினாள் கவிதா.

“இதுல பாசிட்டிவ், நெகட்டிவ் ஒண்ணுமே கிடையாது. ஒரு பிலிம் மேக்கர் பத்து படம் பண்றார்ண்ணு வெச்சுக்குவோம். அவருக்கென சில அம்சங்கள் மேல தனி ஈடுபாடு இருக்கும்; அவர் சினிமாவைப் பார்க்குற விதம்; அவருக்குன்னு ஒரு ஸ்டைல் ஃபார்ம் ஆயிடும். சினிமாவை உன்னிப்பா பார்க்குற சிலர் சிமிலாரிட்டீஸ் கண்டுபிடிக்கிறதுல ஆர்வம் காட்ட ஆரம்பிப்பாங்க. நான் கால்ல ஷாட் வைக்கிறதை மிஷ்கின் ஷாட்னு அவங்களே சொல்லிப்பாங்க. இதே மாதிரி வேற யாராவது ஷாட் வெச்சா, “இது மிஷ்கின் ஷாட்தானே நீ ஏன் வெச்சே”ன்னு கேப்பாங்க.

08chrcjmysskin%20kissed%20%20akiras%20to

அகிரா குரோசவா கல்லறையை முத்தமிடும் மிஷ்கின்

 

ஒரு தமிழ்ப் படத்துல சராசரியா 450-ல் இருந்து 500 ஷாட். இதுல 400 ஷாட் க்ளோஸ்-அப். அப்ப யாருமே வந்து “என்ன சார் வெறும் க்ளோஸ்-அப் ஷாட்டா எடுக்குறீங்க”ன்னு யாரையுமே கேட்குறது இல்லை. தமிழில் 75% ஹீரோயிஸம் சார்ந்த படங்கள்தான் எடுக்குறாங்க. அதுல முழுக்க முழுக்க க்ளோஸ்-அப் ஷாட் என்பதே வெறும் பிரச்சார உத்திதான். ஆனால், அகிரா குரோசவா போன்றோரின் படங்களை எடுத்துக்கொண்டால் க்ளோஸ்-அப் ஷாட்டில் கேரக்டர்கள் பேசாது; முணங்கும்; வலியைச் சொல்லும். இந்தியாவுல மட்டும்தான் க்ளோஸ்-அப்ல கேரக்டர்கள் பேசும். இதெல்லாம் ஏன் திருப்பத் திரும்ப வந்துகிட்டே இருக்குன்னு தெரிய மாட்டேங்குது. ஒரு மூணு ஷாட் காலில் வெக்கிறதை கோடிட்டு காட்றாங்க.

பிரெஞ்ச் இயக்குநர் ராபர்ட் பிரெஸ்ஸன் அதிகளவில் கைகளைத் திரையில் காட்டியவர். உலகத்துலயே கைகளை மிக அழகாகவும், நேர்மையாகவும் காட்டியவர் அவர்தான். அதுக்கு சரியான திரைக்கதைக் காரணமும் இருக்கும். “அவரு கைலயே ஷாட் வைப்பாருப்பா”ன்னு ஈஸியா சொல்லிட முடியுமா? என்னுடைய படங்கள் பயணத்தை ஒட்டியவை என்பதால் காலுக்கு க்ளோஸ்-அப் வைப்பேன். அதைப் பார்த்துட்டு மிஷ்கின் ஷாட்னு சொல்றது கொடுமையா இருக்கு” என்று சற்றே கொந்தளிப்புடன் காணப்பட்டார்.

“எந்த ஒரு கலை வடிவத்துக்குமே இன்ஸ்பிரேஷன் தேவை. சினிமாவில் இதை எப்படி அணுகணும், நீங்க எப்படி?” என்று இதமாகக் கேட்டாள் ப்ரியா.

“குரோசவா, டகாஷியை பார்த்துதான் நான் சினிமா கத்துக்கிறேன். என்னைப் பார்த்துதான் என் உதவியாளர்கள் கத்துக்கிறாங்க. இது இன்ஸ்பிரேஷன் இல்லை; லேர்னிங் புராசஸ். என்னோட குருவா நான் நினைக்குறது குரோசவா. ஆனா, அவரை மாதிரி ஷாட் வைக்க ஆசைப்பட்டதுகூட இல்லை. இன்னொரு படங்கள் பார்த்து கத்துக்கணும். படம் எடுக்க ஆரம்பிக்கணும். ஆனா, நம்மளோட தனித்துவத்தை விட்டுடக் கூடாது. அப்பாவும் அம்மாவும் சாகுற வரைக்கும் நமக்குள்ள இருப்பாங்க. கடைசி வரைக்கும் எனக்குள்ள குரோசவா தந்தையா இருப்பார்” என்று சொன்னார்.

“உங்கள் படங்கள் பெரும்பாலும் கொரியன் படத் தழுவல்கள் மாதிரியே இருக்கே?”

ப்ரேம் எழுப்பிய இந்த சந்தேகம் மிஷ்கினை கோபமூட்டிவிடுமோ என்று மற்றவர்கள் அஞ்சினர்.

கொஞ்சமும் யோசிக்காத மிஷ்கின், “நான் இன்னொரு விஷயம் சொல்றேன். என்னோட மூணு படத்தை கொரியாவுல காப்பி அடிச்சிட்டாங்க. அது தெரியுமா உனக்கு?” என்றதும் ப்ரேம் மிரண்டான்.

“என்ன ஆச்சரியமா இருக்கா. நான் சொன்னதும் ஒரு பொய்தான். நான் மொத்தமே நாலு கொரியன் படம்தான் பார்த்திருப்பேன். உங்களுக்கு கொரியன் படம் புரியுதுன்னா, அதை இங்கே எதுலயாவது பொருத்திப் பார்க்க நினைக்கிறீங்க. அதுக்கு நான்தான் கிடைச்சிருக்கேன். கொரியா சமீப காலத்தில்தான் சினிமா பழக ஆரம்பிச்சிருக்கு. ஆனா, இந்தியாவில் 75 வருட சினிமா இருக்கு.” என்று சன்னமான குரலில் சொன்னார் மிஷ்கின்.

“உங்களோட அசிஸ்டெண்ட் ஆக, உங்களை எப்படி இம்ப்ரஸ் பண்றது?” என்று பிட்டுப் போட்டான் ஜிப்ஸி.

“எங்கிட்ட எத்தனையோ பேரு வந்து போயிருக்காங்க. என்னை இம்ப்ரஸ் பண்ணினது புவனேஷ் ஒருத்தன். ரொம்ப சின்சியரா படம் பார்ப்பான். நாளொன்றுக்கு நூறு பக்கங்கள் படிச்சிட்டு இருப்பான். இப்போ ஒரு சினிமாவுக்கு கதை பண்ணிட்டு இருக்கான். வேறு யாரையும் குறிப்பிட்டு சொல்றதுக்கு இல்லை. சினிமா ஒரு கடுமையான போதையா ஆயிட்டு இருக்கு. இதோட வெற்றியும் புகழும் ரொம்பவே போதை ஆக்கிடுது. இதை நான் கண்கூடா பார்க்குறேன்.”

“மனிதர்களை நேரடியா படிக்கிறதும், பயணங்கள் செய்றதுமே சினிமா படைப்பாளிக்குப் போதும்னு நினைக்கிறேன். நீங்க புக்ஸ்தான் எல்லாம்னு சொல்றீங்க...” என்று பார்த்தா முடிப்பதற்குள் பேசத் தொடங்கினார் மிஷ்கின்.

“சினிமா படைப்பாளிக்கு புத்தக வாசிப்பு மட்டுமே துணைபுரியும். சினிமா பார்த்து சினிமா கத்துக்கலாமே... நாங்க ஏன் வாசிக்கணும்ன்ற கேள்வியே பரிதாபமாக இருக்கு. கதைகள் எப்படி உருவாக்கப்படுகிறது? கதைகள் எழுதியது யார் யார்? மேன்மையான கதைகள் என்னென்ன? உலகின் மிகச் சிறந்த கதைகள் எவை? இப்படி பல கேள்விகளை உள்ளடக்கிய பயணமாகவே நம்மை போன்ற சினிமா கலைஞர்களுக்கான வாசிப்பு இருக்க வேண்டும். இந்த வாசிப்பில் தீவிரம் இருந்தால்தான் சினிமாவில் நல்ல கதை சொல்லியாக இருக்க முடியும். நூறு படங்கள் பார்ப்பதால் சினிமாவில் கதை சொல்லிவிட முடியாது.

குரோசவா, பிரெஸ்ஸன், ஹிட்ச்காக்... இவங்கள்லாம் சாகுற வரைக்கும் புத்தகங்கள் படிச்சாங்க; தங்களோட வாழ்நாள் முழுக்க மேன்மையான சினிமா படைப்புகளைத் தொய்வில்லாமல் தந்தாங்க.”

சினிமாலஜி படிப்பு முடித்த கையோடு வீட்டில் சின்ன நூலகம் ஒன்றை அமைப்பது என்று முடிவெடுத்தான் பார்த்தா.

(நிறைவடைந்தது)

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19637703.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.