Jump to content

புத்தாண்டு எமது வாழ்வில் புதியதொரு ஆரம்பமாகட்டும் ஜனாதிபதி மைத்திரிபால வாழ்த்து

Recommended Posts

புத்­தாண்டு எமது வாழ்வில் புதி­ய­தொரு ஆரம்­ப­மா­கட்டும்

GG13-3064f6b1a1b5adb49cec5add59528aa91cf7dae3.jpg

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால வாழ்த்து
(நமது நிருபர்)

பிற்­போக்குச் சிந்­த­னை­க­ளி­லி­ருந்தும் பழைமை­வாதப்போக்­கி­லி­ருந்தும் விடு­பட்டு, புதிய மனி­த­னாக உரு­வாக வேண்டும் என்­பதே  சித்­திரைப் புத்­தாண்டு காலத்தில் மேற்­கொள்­ளப்­படும் அனைத்து சம்­பி­ர­தா­யங்­க­ளி­னதும் ஒட்­டு­மொத்த எதிர்­பார்ப்­பாகும். அவ்­வாறு புதிய சிந்­த­னை­க­ளுடன் புதுப்­பிக்­கப்­ப­டு­வ­த­னா­லேயே புத்­தாண்டு எமது வாழ்வின் புதி­ய­தொரு ஆரம்­ப­மாக கரு­தப்­ப­டு­கின்­றது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள சித்­திரைப் புத்­தாண்டு வாழ்த்துச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார். 

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

புவியில் உயி­ரி­னங்கள் தோன்­றிய காலம் முதல் மானிட சமு­தாயம் இயற்­கை­யோடு கொண்­டி­ருக்கும் பௌதிக மற்றும் ஆன்­மீக பந்­தத்­தினை அடுத்த தலை­மு­றைக்கு கற்றுக் கொடுக்கும் படிப்­பி­னை­க­ளா­கவே சூரியன் மீன ராசி­யி­லி­ருந்து மேட ராசிக்கு சஞ்­ச­ரிக்கும் சங்­கி­ராந்­தியின் அடிப்­ப­டையில் அமைந்த சித்­திரைப் புத்­தாண்டின் பாரம்­ப­ரி­யங்கள் அமைந்­துள்­ளன.

கமத்­தொ­ழிலின் சம்­பி­ர­தா­யங்கள் நவீன மய­மா­கி­யுள்ள இக்­காலப் பகு­தி­யிலும் செள­பாக்­கி­யத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட சித்­திரைப் பிறப்பைக் கொண்­டா­டு­வ­தா­னது எம் மனங்­களில் காணப்­படும் ஆன்­மீக கலா­சா­ரத்தின் தொன்­மையை எடுத்­துக்­காட்­டு­கின்­றது. மனி­தனின் செய்ந் நன்றி மற­வாத குணத்­திற்கும் நிதர்­ச­ன­மா­கவே புத்­தாண்டுப் பாரம்­ப­ரி­யங்கள் அமை­கின்­றன.

அத்­தோடு தனது வாழ்க்­கைக்கு வலு­வூட்­டிய சுற்­றா­ட­லுக்கு மனி­தர்­களால் செலுத்­தப்­படும் நன்­றிக்­க­டனைப் போலவே ஏனைய சமூ­கங்­க­ளுடன் ஏற்­பட்­டி­ருக்கும் நெருங்­கிய தொடர்­பு­களை இற்­றைப்­ப­டுத்­தலும் புத்­தாண்டு சம்­பி­ர­தா­யங்­க­ளினால் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. புத்­தாண்டு பஞ்­சாங்கம் மூலம் அதற்­கான கால அட்­ட­வணை வழங்­கப்­ப­டு­வதன் ஊடாக நேர முகா­மைத்­து­வத்­திற்கும் புத்­தாண்டுப் பாரம்­ப­ரி­யங்கள் முன்­னு­ரிமை வழங்­கு­வ­தாக அமை­கின்­றன. அத்­துடன் குறிப்­பிட்ட சுப­வே­ளையில் மேற்­கொள்­ளப்­படும் புத்­தாண்டு கைவி­ஷேடம் கொள்கைப் பிடிப்­புடன் வாழும் பண்பை எதி­ரொ­லிக்கச் செய்யும் ஆழ­மான கட்­ட­மைப்­பா­கவும் அமை­கின்­றது.

பிற்­போக்குச் சிந்­த­னை­க­ளி­லி­ருந்தும் பழ­மை­வாத போக்­கி­லி­ருந்தும் விடு­பட்டு புதிய மனி­த­னாக உரு­வாக வேண்டும் என்­பதே சித்­திரைப் புத்­தாண்டு காலத்தில் மேற்­கொள்­ளப்­படும் அனைத்து சம்­பி­ர­தா­யங்­க­ளி­னதும் ஒட்­டு­மொத்த எதிர்­பார்ப்­பாகும். அவ்­வாறு புதிய சிந்­த­னை­க­ளுடன் புதுப்­பிக்­கப்­ப­டு­வ­த­னா­லேயே புத்­தாண்டு எமது வாழ்வின் புதி­ய­தொரு ஆரம்­ப­மாக கரு­தப்­ப­டு­கின்­றது.

ஆகை­யினால் வென்றெடுத்த வெற்றியை மேலும் நிலைபெறச் செய்வதுடன் நல்லிணக்கம், சகவாழ்வு ஆகியவற்றை பேணும் நாடாக பலமாக எழுச்சி பெறுவோம் என மலர்ந்துள்ள இந்த புத்தாண்டில் உறுதி கொள்வோம். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் சகல இலங்கையர்களுக்கும் சௌபாக்கியம், சமாதானம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் உரித்தாகுக.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-13#page-1

Link to comment
Share on other sites

வடமாகாண முதலமைச்சரின் புதுவருட வாழ்த்துச் செய்தி

எமக்கு பல நன்மைகளை பெற்றுத்தந்த துர்முகி வருடத்தை அன்புடன் வழிஅனுப்பி புதிதாக பிறக்கவிருக்கும் ஏவிளம்பி வருடத்தை மகிழ்வுடன் வரவேற்கும் இச் சந்தர்ப்பத்தில் எமது மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தி ஒன்றை வழங்குவதில் மகிழ்வடைகின்றேன்.

வருடங்கள் பல வந்து போனாலும் தமிழ் மக்களின் நிலை என்றுமே கேள்விக்குறியாகவே எஞ்சி நிற்கின்றன. உறவுகளைத் தொலைத்தவர்களின் கண்ணீர்க் கதைகள், வீடுகள் நிலங்களை ,ழந்தவர்களின் சோகக் கதைகள், வேலையற்ற பட்டதாரிகளின் ஏக்கப் பெருமூச்சு என ,ன்னோரன்ன துன்பங்களுக்கு மத்தியில் பிறக்கவிருக்கும் இப்புத்தாண்டில் எமது துன்ப துயரங்கள் எம்மை விட்டு அகலவும் சிறையில் அடைக்கப்பட்ட எமது ,ளைஞர்கள் தமது உறவுகளுடன் ,ணைந்து கொள்ளவும் மீனவர்களின் தொழில் முயற்சிகள் மேம்படவும் ,ப்புத்தாண்டு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் இப் புத்தாண்டை வருக வருக என வரவேற்போமாக.

இப் புதிய ஆண்டில் எம்மிடையே காணப்படுகின்ற காழ்ப்புணர்வுகள், விரோதங்கள் அனைத்தும் அகல அரசியல் தலைமைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களுக்கான ஒரு புதிய யுகத்தை படைக்க பாடுபடவேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன். மக்களின் தேவைகளையும் அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் விஞ்சக்கூடிய வகையில் வடமாகாண சபையின் செயற்பாடுகள் அமைவதுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் என அரசியல் பிரமுகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு வடமாகாணத்தை முன்னேற்றுகின்ற ஒரே சிந்தனையுடன் செயற்படுவதற்கு ,ப்புத்தாண்டு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன் ,ப் புத்தாண்டு அனைவருக்கும் சுபீட்சத்தையும் சுக வாழ்வையும் வழங்க வேண்டும் என வாழ்த்தி எனது வாழ்த்துரையை நிறைவு செய்கின்றேன்.
நன்றி

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

http://globaltamilnews.net/archives/24024

Link to comment
Share on other sites

இராணுவ, பௌத்த அரசியலால் தமிழர் ஏமாற்றமடைந்துள்ளனர்

புத்தாண்டுச் செய்தியில் இந்து மாமன்றம் விசனம்
(நமது நிருபர்)

நாட்டில் ஜன­நா­யக ஆட்­சியை நிறுவும் போராட்­டத்தில், ஜன­வரி 2015 இல் இந்த நாட்டின் சர்­வா­தி­காரப் போக்­கற்ற ஓர் ஆட்­சியை நிறுவ இணைந்து கொண்ட தமிழ் மக்கள், இன்று இரா­ணுவ

- பௌத்த அர­சியல் இந்த நாட்டில் அதே ஆட்­சியால் ஊக்­கு­விக்­கப்­ப­டு­வ­துடன் மேலும் வளர்க்­கப்­ப­டு­கின்­றது என்­பதைக் கண்டு ஏமாற்­ற­ம­டைந்­துள்­ளனர். அதுவும், நல்­லாட்சிக் கு குரல் கொடுத்து எங்­க­ளது மக்­களின் பேரா­த­ரவைப் பெற்­ற­வர்கள் அந்தக் கொடு­மையில் ஈடு­பட்­டி­ருப்­பது இன்னும் ஏமாற்­றத்தை அளிக்­கின்­றது என்று அகில இலங்கை இந்து மா மன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள் ளதாவது;

இந்த துர­திஷ்­ட­வ­ச­மான போக்கு, தமிழ் மக்­க­ளுக்கு தங்கள் நாட்டில் இருக்க வேண்­டிய அர­சியல் ஜன­நா­யக உரி­மை­களில் பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும். இந்த நிலைமை மேலும் தொட­ராமல் நிறுத்­தப்­ப­டா­விட்டால் இன்னும் ஏமாற்­றமும் பார­தூ­ர­மான மோதல் நிலையும் ஏற்­படும். கடந்த அரசின் காலத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காணி ஆய­தப்­ப­டை­களின் வசம் இருந்­த­தாக அறிக்­கைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இரா­ணு­வத்தால் அங்­கீ­கா­ர­மின்றி சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணி­களை உரி­மை­யா­ளர்­க­ளுக்கு திருப்பிக் கொடுப்போம் என்ற உறு­தி­மொ­ழியை புதிய ஆட்­சி­யா­ளர்கள் நிறை­வேற்­ற­வில்லை. இது­வரை அத்­த­கைய காணி­களில் சிறு விகி­தமே விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. மக்­களின் போராட்டம் வேண்­டு­கோள்­களை உதா­சீனம் செய்து கோப்­பா­பி­லவு மக்­களின் 482 ஏக்கர் விஸ்­தீ­ரணம் கொண்ட தமிழ் மக்­களின் புர்­வீகக் காணி­களில் இன்னும் இரா­ணுவம் நிலை­கொண்­டி­ருப்­பது இன்னும் ஒரு வேதனை தரும் செய்தி.

ஆய­தப்­ப­டை­களால் மட்­டு­மல்­லாது தொல்­பொருள் ஆராய்ச்சித் திணைக்­க­ளம்­கூட அரசின் அங்­க­மாக எங்கள் மக்­களின் உரி­மை­களை நசுக்க முற்­ப­டு­வது தூர­திஷ்­ட­வ­ச­மாகும். கிழக்கின் கன்­னி­யாவில் இருக்கும் சுடுநீர்க் கிண­றுகள் ஆரம்­ப­கா­லத்­தி­லி­ருந்து எங்கள் இந்து ஆலயம் இருந்த ஒரு புரா­தன புனித தல­மாகும். ஆல­யத்­துக்கு வரும் அடி­யார்கள் இக்­கி­ண­று­களில் குளித்­து­விட்டு ஆல­யத்தைத் தரி­சிப்­பது பல ஆண்­டு­க­ளாக இருந்து வந்த எமது சமய மர­பாகும். ஆனால் இப்­போது அந்த வளாகம் பௌத்த வழி­பாட்­டுத்­த­ல­மாகக் கோல­மி­டப்­பட்­டுள்­ளது. மேலும் சுடுநீர்க் கிண­று­களைப் பார்க்க வரு­ப­வர்கள் பௌத்த ஆல­யத்­துக்கு கட்­டணம் செலுத்த கட்­டா­யப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றார்கள் என முறைப்­பா­டுகள் கிடைத்­தி­ருக்­கின்­றன.

கன்­னியா வாழ் மக்­களின் சுழலும் அர­சாங்கத் திட்­டங்­களால் மாற்­றப்­பட்டு வரு­கின்­றது. சுடுநீர் கிண­று­களை நோக்கி நடக்­கும்­போது சிங்­களக் கடை­களும் சிங்­கள குறி­யீட்டு பல­கை­களும் பௌத்த கொடி­யும்தான் வரு­வோரை வர­வேற்­கின்­றன. மேலும் இந்த இடத்தை ஒரு பௌத்த புமி­யாக எடுத்துக் காட்டும் தொல்­பொருள் ஆராய்ச்சி திணைக்­கள அறி­விப்­புக்­க­ளையும் காணலாம். சிவன் கோயி­லுக்கு பக்­தர்கள் சென்று வழி­ப­ட­மு­டி­யாத நிலை ஏற்­பட்டு அந்த ஆலயம் அழி­வுறும் நிலையில் உள்­ளது.

திரு­கோ­ண­மலை நகரைச் சேர்ந்த மடத்­தடி முத்­து­மா­ரி­யம்மன் ஆலய பரி­பா­ல­னத்­தி­லேயே ஆல­யமும் சுடுநீர்க் கிண­று­களும் இருந்­தன. பின்பு அவை உள்­ளூராட்சி அமைப்பின் கீழ் கொண்டு வரப்­பட்­டன. பௌத்த அமைப்­புக்­களை அரச அமைப்­புகள் ஆயு­தப்­படை மூலம் விஸ்­த­ரிக்­கின்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு இது ஓர் உதா­ரணம். மேலும் இந்த நாட்டின் பஞ்ச ஈஸ்­வர தலங்­களில் ஒன்­றான பழம்­பெரும் புரா­த­னக்­கால இந்து ஆல­ய­மான முனீஸ்­வ­ரத்தில் திருக்­கோ­புரம் கட்­டவும் தொல்­பொருள் ஆராய்ச்சித் திணைக்­களம் முட்­டுக்­கட்டை போட்­டு­வ­ரு­வது இன்னும் ஒரு வேத­னைத்­தரும் உதா­ர­ண­மாகும். இந்தப் போக்கு உடன் நிறுத்­தப்­பட வேண்டும்.

வடக்கு கிழக்கில் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள் இன்னும் திருப்பிக் கொடுப்­ப­தற்கு போதிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டாது தொடரும் அதே நிலையில் எத்­த­னையோ தமிழ் அர­சியற் கைதிகள் சிறையில் விசா­ர­ணை­யின்றி வாடு­கின்­றனர். தங்­களின் மகன்­க­ளையும் கண­வர்­மார்­க­ளையும் ஆயி­ரக்­க­ணக்­கான தாய்­மா­ரும மனை­வி­மாரும் தேடிக் கொண்­டி­ருக்­கின்­றனர். கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு, வவு­னியா மற்றும் திரு­கோ­ண­மலை ஆகிய மாவட்­டங்­களில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­களின் போராட்­டங்கள் இன்னும் தீர்­வின்றித் தொடர்­கின்­றன. இவை எல்­லா­வற்­றையும் கண்­டும்­கா­ணாத போக்கு தொடர்­வதும் மன­வே­த­னைக்­கு­றி­யது.

புத்­த­பி­ரானின் போத­னை­களைக் கூட மறந்து அவர் உரு­வாக்­கிய மதத்தின் பேரால் அர­சியல் நடத்­திக்­கொண்டு வெசாக் பண்­டி­கையை சர்­வ­தேச ரீதியில் நடத்தி தங்கள் தவ­று­களை மூடி­ம­றைக்கும் முயற்­சி­க­ளுக்கு சர்­வ­தேசம் அங்­கீ­காரம் வழங்­கக்­கூ­டாது.

இந்த சூழ்­நி­லை­யில்தான் புது­வ­ருடம் பிறக்­கின்­றது. இணக்­கப்­பாடும் மீள்­பு­ன­ருத்­தா­ர­ணமும் பற்றிக் கதைக்­கப்­பட்­டாலும் போதிய - திருப்­தி­க­ர­மான எந்த நட­வ­டிக்­கையும், அவ்­வ­ழியில் அர­சாங்­கத்­தாலும் அரச நிறு­வ­னங்­க­ளாலும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

தேசி­ய­ஒ­ரு­மைப்­பாடு பற்றி, இணக்­கப்­பாடு் பற்­றி­யெல்லாம் கதைப்­ப­தற்கு முன் எங்கள் மக்கள் தங்கள் சுதந்­தி­ரத்­தையே முதலில் நாடி­நிற்­கின்­றனர். இது அர­சாங்­கத்­திற்குப் புரி­யாத விடயம் அல்ல. ஆனால் அடுத்து அடுத்து இந்த நாட்டை ஆள­வந்­த­வர்கள் புரிந்­தாலும் புரி­ய­த­மா­தி­ரியே நடிப்­ப­துதான் வேதனை.

நாட்டின் சகல பகு­தி­க­ளிலும் வாழும் இந்து மக்களின் உணர்வுகள் இவை. எனவே அவர்களின் அபிலாசைகளை மெச்சி அவர்களுக்குரிய நிவாரணங்களை வழங்குமாறு ஒவ்வொருவரையும் வேண்டுகிறோம். அது நடக்காவிட்டால் புதுவருடத்தினை அவர்கள் கொண்டாடுவதை எதிர்பார்க்க முடியாது.

அதே சமயம் இந்த நாட்டிலும் வௌி நாட்டிலும் வாழ்கின்ற இந்து மக்களிடம் நாம் விடுக்கும் வேண்டுகோள், அவர்கள் எல்லோரையும் பிரார்த்தனையிலீடுபடுமாறும், அவர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கும் பிரச்சினைகள் தீர இறையருள் கிடைக்கும் எனவும் எல்லாம்வல்ல பரம்பொருளைப் பிரார்த்திப்போம்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-13#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த வரைக்குமிதுவரைக்கும் வந்த ஜனாதிபதிகள் ஒவ்வொரு பொங்கலுக்கும் புத்தாண்களுக்க்கும்  விடும் அறிக்கை காற்றில் அறுந்து போன் பட்டங்கள் போல் போகிறது இது வ்ரைக்கும் தமிழர்கள் ,தமிழ் பேசும்  மக்கள் வாழ்வில்  அது ஒளி வீசியதாக ஞாபகம் இல்லை :cool:

Link to comment
Share on other sites

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 

ஒளி வீசாது. காரணம் தமிழ். ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருத்து  நீர் வைத்து, குளிக்காதவன் எல்லாம் புத்தாண்டு வாழ்த்து சொல்லுறான்.
அவன் சொன்னது... சிங்களவனுக்கு, என்று நினைக்கின்றேன். 
அதுக்கு.... நம்ம சனம்  கூவுறது,  நல்ல வேடிக்கை.

Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும்: இரா. சம்பந்தன்

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும்: இரா. சம்பந்தன்
 
தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள், ஏமாற்றங்கள், ஏக்கங்கள் மற்றும் ஒதுக்கல்களில் இருந்து மீண்டு, அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்ற தமது கோரிக்கையை இந்த சந்தர்ப்பத்தில் முன்வைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மலர்ந்துள்ள ஏவிளம்பி புது வருடத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு எதிர்பார்ப்புக்களில் ஒன்றான புதிய அரசியலமைப்பானது புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்கும் வகையில், இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்துவதாகவும் அது உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிகோல வேண்டுமெனவும் பிரார்த்திப்பதாக இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

புத்தாண்டை தமிழ் – சிங்கள ஈரினத்தவர்களும் பொதுவாக மகிழ்வுடன் கொண்டாடுவது போன்று சகல விடயங்களையும் நல்லுறவுடன் கையாளும் சகஜநிலை நாட்டில் தோன்றி, இன நல்லிணக்கம் ஏற்பட இப்புத்தாண்டு வழிசமைக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், இனங்களுக்கிடையில் ஒற்றுமை, நல்லுறவு, புரிந்துணர்வு ஏற்பட்டு சாந்தி, சமாதானம் மேலோங்கி இந்நாடு அமைதிப் பூங்காவாக மிளிர்ந்திட, பிறக்கும் ஏவிளம்பி புத்தாண்டில் பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவரின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://newsfirst.lk/tamil/2017/04/தமிழ்-மக்களின்-எதிர்பார்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நவீனன் said:

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும்: இரா. சம்பந்தன்

அட இவரும் இருக்கிறாரே...எங்கை இவருக்கு பின்னாலை திரியுற விளாசல் மன்னனை காணேல்லை...tw_tounge_xd:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/04/2017 at 9:21 AM, நவீனன் said:

புத்­தாண்டு எமது வாழ்வில் புதி­ய­தொரு ஆரம்­ப­மா­கட்டும்

GG13-3064f6b1a1b5adb49cec5add59528aa91cf7dae3.jpg

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால வாழ்த்து
(நமது நிருபர்)

பிற்­போக்குச் சிந்­த­னை­க­ளி­லி­ருந்தும் பழைமை­வாதப்போக்­கி­லி­ருந்தும் விடு­பட்டு, புதிய மனி­த­னாக உரு­வாக வேண்டும் என்­பதே  சித்­திரைப் புத்­தாண்டு காலத்தில் மேற்­கொள்­ளப்­படும் அனைத்து சம்­பி­ர­தா­யங்­க­ளி­னதும் ஒட்­டு­மொத்த எதிர்­பார்ப்­பாகும். அவ்­வாறு புதிய சிந்­த­னை­க­ளுடன் புதுப்­பிக்­கப்­ப­டு­வ­த­னா­லேயே புத்­தாண்டு எமது வாழ்வின் புதி­ய­தொரு ஆரம்­ப­மாக கரு­தப்­ப­டு­கின்­றது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள சித்­திரைப் புத்­தாண்டு வாழ்த்துச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார். 

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

புவியில் உயி­ரி­னங்கள் தோன்­றிய காலம் முதல் மானிட சமு­தாயம் இயற்­கை­யோடு கொண்­டி­ருக்கும் பௌதிக மற்றும் ஆன்­மீக பந்­தத்­தினை அடுத்த தலை­மு­றைக்கு கற்றுக் கொடுக்கும் படிப்­பி­னை­க­ளா­கவே சூரியன் மீன ராசி­யி­லி­ருந்து மேட ராசிக்கு சஞ்­ச­ரிக்கும் சங்­கி­ராந்­தியின் அடிப்­ப­டையில் அமைந்த சித்­திரைப் புத்­தாண்டின் பாரம்­ப­ரி­யங்கள் அமைந்­துள்­ளன.

கமத்­தொ­ழிலின் சம்­பி­ர­தா­யங்கள் நவீன மய­மா­கி­யுள்ள இக்­காலப் பகு­தி­யிலும் செள­பாக்­கி­யத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட சித்­திரைப் பிறப்பைக் கொண்­டா­டு­வ­தா­னது எம் மனங்­களில் காணப்­படும் ஆன்­மீக கலா­சா­ரத்தின் தொன்­மையை எடுத்­துக்­காட்­டு­கின்­றது. மனி­தனின் செய்ந் நன்றி மற­வாத குணத்­திற்கும் நிதர்­ச­ன­மா­கவே புத்­தாண்டுப் பாரம்­ப­ரி­யங்கள் அமை­கின்­றன.

அத்­தோடு தனது வாழ்க்­கைக்கு வலு­வூட்­டிய சுற்­றா­ட­லுக்கு மனி­தர்­களால் செலுத்­தப்­படும் நன்­றிக்­க­டனைப் போலவே ஏனைய சமூ­கங்­க­ளுடன் ஏற்­பட்­டி­ருக்கும் நெருங்­கிய தொடர்­பு­களை இற்­றைப்­ப­டுத்­தலும் புத்­தாண்டு சம்­பி­ர­தா­யங்­க­ளினால் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. புத்­தாண்டு பஞ்­சாங்கம் மூலம் அதற்­கான கால அட்­ட­வணை வழங்­கப்­ப­டு­வதன் ஊடாக நேர முகா­மைத்­து­வத்­திற்கும் புத்­தாண்டுப் பாரம்­ப­ரி­யங்கள் முன்­னு­ரிமை வழங்­கு­வ­தாக அமை­கின்­றன. அத்­துடன் குறிப்­பிட்ட சுப­வே­ளையில் மேற்­கொள்­ளப்­படும் புத்­தாண்டு கைவி­ஷேடம் கொள்கைப் பிடிப்­புடன் வாழும் பண்பை எதி­ரொ­லிக்கச் செய்யும் ஆழ­மான கட்­ட­மைப்­பா­கவும் அமை­கின்­றது.

பிற்­போக்குச் சிந்­த­னை­க­ளி­லி­ருந்தும் பழ­மை­வாத போக்­கி­லி­ருந்தும் விடு­பட்டு புதிய மனி­த­னாக உரு­வாக வேண்டும் என்­பதே சித்­திரைப் புத்­தாண்டு காலத்தில் மேற்­கொள்­ளப்­படும் அனைத்து சம்­பி­ர­தா­யங்­க­ளி­னதும் ஒட்­டு­மொத்த எதிர்­பார்ப்­பாகும். அவ்­வாறு புதிய சிந்­த­னை­க­ளுடன் புதுப்­பிக்­கப்­ப­டு­வ­த­னா­லேயே புத்­தாண்டு எமது வாழ்வின் புதி­ய­தொரு ஆரம்­ப­மாக கரு­தப்­ப­டு­கின்­றது.

ஆகை­யினால் வென்றெடுத்த வெற்றியை மேலும் நிலைபெறச் செய்வதுடன் நல்லிணக்கம், சகவாழ்வு ஆகியவற்றை பேணும் நாடாக பலமாக எழுச்சி பெறுவோம் என மலர்ந்துள்ள இந்த புத்தாண்டில் உறுதி கொள்வோம். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் சகல இலங்கையர்களுக்கும் சௌபாக்கியம், சமாதானம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் உரித்தாகுக.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-13#page-1

இதிலுள்ள  ஒவ்வொரு  வரிகளையும் சிங்களமும் சிறீலங்கா அரசும்

அதன் அரசியல் வாதிகளும் அரச அதிகாரிகளும் உணரணும்

உணர்ந்தால் இலங்கை உலகுக்கு வழி  காட்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

sam.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ஆண்டிலும் ஒவ்வொரு விசேச தினத்துக்கு இப்படித்தான் கொஞ்ச நாடுகளில் அரசியல் தலைமைகள் எழுதி வாசிச்சுக்கிட்டு மக்களை ஏமாத்திக்கிட்டு வருகினம். அதில் சொறீலங்காவும் ஒன்று. tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.