• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

மெஸ்சி போலவே ஆடி மெஸ்சியை வீழ்த்திய டிபாலா..! #BarcelonaVsJuventus

Recommended Posts

மெஸ்சி போலவே ஆடி மெஸ்சியை வீழ்த்திய டிபாலா..!  #BarcelonaVsJuventus

 
 

டிபாலா - அடுத்த மெஸ்சி! இதுதான் ஐரோப்பிய கால்பந்து உலகின் தற்போதைய பேச்சு. மெஸ்சியின் கண் முன்னே, மெஸ்சியைப் போலவே பக்கவாக இரண்டு லெஃப்ட் ஃபுட் கோல் அடித்ததில் இருந்தே இந்த ஒப்பீடு சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இருவரும் அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர்கள். தங்கள் நாட்டுக்காக விளையாடிய முதல் போட்டியில் சிவப்பு அட்டை பெற்றவர்கள் என பல ஒற்றுமைகள். 

மெஸ்சி - டிபாலா

இத்தாலியின் டியூரின் நகரில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதற்கட்ட காலிறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில் ஸ்பெயினை சேர்ந்த கிளப் பார்சிலோனா, இத்தாலியைச் சேர்ந்த கிளப் யுவென்டஸ் மோதின. இந்த இரு அணிகளும் மோதிய 2015 சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் பார்சிலோனா மகுடம் சூடியது. எனவே தங்கள் மண்ணில் பழிவாங்கக் காத்திருந்தது யுவென்டஸ்.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, யுவென்டஸ் வீரர் ஜாவி ‘‘நாங்க ஒரு காளையை ரெடி பண்ணி வச்சிருக்கோம். உஷாரா இருங்க. அந்தக் காளை பெயர் டிபாலா’’ என, பார்சிலோனாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஜாவி, முன்னாள் பார்சிலோனா பிளேயர் என்பது கால்பந்து உலகம் நன்கு அறியும். அவர் சொன்னதுபோலவே நேற்றைய மேட்ச்சில் சீறிப் பாய்ந்தது அந்தக் காளை.

ஹிகுவெய்ன் ஸ்ட்ரைக்கராக முன்னிறுத்தப்பட்டாலும், டிபாலாதான் ஆட்ட நாயகன். மேட்ச் தொடங்கிய ஏழாவது நிமிடத்திலேயே அதை நிரூபித்தார். பார்சிலோனா டிஃபண்டர்களால் மார்க் செய்யப்படாத இடத்தில் நின்று, மின்னலாக கோல் அடித்து பர்கா ரசிகர்களை மிரள வைத்தார். நல்ல பிளேயருக்கு கோல் அடிக்க இரண்டு டச் போதும் அல்லவா? டிபாலா அதில் கச்சிதம். டிரிபிளிங் செய்து பெனால்டி பாக்ஸுக்குள் நுழைந்து ஜுவான் கியூடரடோ கொடுத்த பாஸை, வலது காலில் வாங்கி, லேசாக திரும்பி இடது காலில் ஓங்கி ஒரு உதை விட்டார் டிபாலா. பார்சிலோனா சென்டர் பேக் ஜெரார்டு ஃபீக்கே, பின்பக்கம் கைகளைக் கட்டி பந்தைத் தடுக்க முயல, அதற்குள் பந்து கோல் கம்பத்தின் வலது பக்கத்தில் விழுந்திருந்தது. 1-0 என யுவென்டஸ் முன்னிலை. ஆர்ப்பரித்தது ஸ்டேடியம். பர்கா ரசிகர்கள் தலைமேல் கை வைத்தனர். 

மெஸ்சி - டிபாலா

ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே இனியஸ்டா, டிபாலாவை foul செய்தார். நல்லவேளையாக அந்த செட் பீஸ் கோலாகவில்லை. இல்லையெனில், ஆரம்பத்திலேயே பார்சிலோனா ஆட்டம் கண்டிருக்கும். பார்சிலோனா கேப்டன் இனியஸ்டாவுக்கு நேற்று போதாத காலம். மிட் ஃபீல்டில் இருந்து டிரிபிளிங் செய்து நான்கைந்து டிஃபண்டர்களுக்கு தண்ணி காட்டி நேர் கோட்டில் மெஸ்சி கொடுத்த பாஸை இனியஸ்டா அழகாக கோல் அடித்திருக்கலாம். ஆனால், யுவன்டஸ் கோல் கீப்பர் புஃபான் தான் ஒரு அனுபவஸ்தன் என்பதை உணர்த்தும் விதமாக, இனியஸ்டா இலக்கை நோக்கி ஷாட் அடிக்கும் முன் சுதாரித்து, கோலைத் தடுத்து அப்ளாஸ் அள்ளினார். 

ஆட்டத்தின் 22-வது நிமிடம். பெனால்டி பாக்ஸின் வலதுபுறம் சற்று வெளியே இருந்து யுவென்டஸ் வீரர் ஒருவர் டிபாலாவுக்கு பாஸ் கொடுத்தார். இந்தமுறையும் டிபாலா மார்க் செய்யப்படாத இடத்தில் இருந்தார். அதனால் பந்து வந்த வேகத்திலேயே அதன்போக்கில் ஒரு கிக் விட்டார் டிபாலா. வசதியாக ஜெரார்டு பீக்கே தன் கோல் கீப்பரை மறைத்து நின்றதால் சிரமமின்றி பந்து வலைக்குள் புகுந்தது. கோல் விழுந்ததும் ஒட்டுமொத்த ஸ்டேடியமும் ஹோவென உற்சாகமானது. 2-0 என யுவென்டஸ் முதற்பாதியில் முன்னிலை. இரண்டு கோல்களும் டிபாலா புண்ணியத்தில் கிடைத்தவை. இரண்டுமே மெஸ்சியைப் போலவே இடது காலின் மூலம் அடிக்கப்பட்டவை. கெத்தாக டிரெஸ்ஸிங் ரூம் சென்றனர் யுவென்டஸ் அணியினர்.

பார்சிலோனா வீரர்கள் முகத்தில் ஈயாடவில்லை. இருந்தாலும் இன்னும் 45 நிமிடங்கள் இருக்கிறது. மனதைத் தேற்றிக் கொண்டனர். Away goal அதாவது எதிரணியின் மண்ணில் அடிக்கும் கோல் கடைசி நேரத்தில் கைகொடுக்கும். அதற்கு குறிவைப்போம் என உஷாராகினர். பிற்பாதி தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெனால்டி பாக்ஸுக்கு அருகே ரீபவுண்டாகி வந்த பந்தை கோல் நோக்கி அடித்தார் மெஸ்சி. ஜஸ்ட் மிஸ். சிறிது நேரத்தில் கார்னர் கிக்கை தலையால் முட்டி கோல் அடித்திருந்தார் யுவென்டஸ் அணியின் சிலினி. சாம்பியன்ஸ் லீக் தொடரில் 2009-க்குப் பின் அவர் அடிக்கும் முதல் கோல் இது. 3-0 என யுவென்டஸ் என ஏகாந்தமாக முன்னிலை வகித்தது.

மெஸ்சி - இனியஸ்டா

ஒரு கோலாவது அடித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருந்த பார்சிலோனாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. மெஸ்சி அடித்த அந்த ஷாட், ஆஃப் சைடில் இருந்து அடிக்கப்பட்டதாக சொல்ல, பார்சிலோனா மீண்டும் ஏமாந்தது. மெஸ்சி, நெய்மர், சுவாரஸ் என நட்சத்திர பட்டாளம் இருந்தும் கடைசி வரை பார்சிலோனாவால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டம் முழுவதும் மெஸ்சி புகுந்து விளையாடினார் எனிலும், 22 நிமிடத்தில் 2 கோல் அடித்து அணியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய டிபாலா, யுவென்டஸ் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இத்தாலி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து விட்டார்.

சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்தமுறை பார்சிலோனா ஆரம்பத்தில் இருந்தே தடுமாறிக் கொண்டிருக்கிறது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பி.எஸ்.ஜி அணியிடம் முதல் சுற்றில் தோல்வியடைந்தது. பின் சொந்த மைதானமான கேம்ப் நு-வில் நடந்த செகண்ட் லெக் போட்டியில் கோல் மழை பொழிந்து காலிறுதிக்கு முன்னேறியது. அதேபோல, பார்சிலோனாவில் நடக்க உள்ள இரண்டாவது கட்ட காலிறுதியில் ஏதாவது மேஜிக் நிகழ்த்தினால் மட்டுமே, அவர்களால் அரையிறுதிக்கு முன்னேற முடியும். அது ரொம்ப கஷ்டம். ஏனெனில், பார்சிலோனா ஒரு Away Goal கூட அடிக்கவில்லை. அதேபோல, ஒவ்வொரு முறையும் சொந்த மைதானத்தில் நான்கு கோல்களுக்கும் மேல் அடித்து வெற்றிபெற முடியும் என்பதும் குதிரைக் கொம்பே.

கிட்டத்தட்ட சாம்பியன்ஸ் லீக்கில் இருந்து வெளியேறிவிட்டது பார்சிலோனா. வெளியேற்றி விட்டார் டிபாலா. அதுவும் அடுத்த மெஸ்சி எனும் புகழுடன்!

http://www.vikatan.com/news/sports/86235-paulo-dybala-enacts-messi.html

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

சாம்பியன்ஸ் லீக்: காலிறுதி முதல் லெக்கில் பார்சிலோனாவை நைய புடைத்தது யுவான்டஸ்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதி முதல் லெக்கில் பார்சிலோனாவை 3-0 என நையப் புடைத்துள்ளது யுவான்டஸ்.

 
 
சாம்பியன்ஸ் லீக்: காலிறுதி முதல் லெக்கில் பார்சிலோனாவை நைய புடைத்தது யுவான்டஸ்
 
ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் தொடரில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், யுவான்டஸ், டார்ட்மண்ட், மொனாகோ, லெய்செஸ்டர் பெயர்ன் முனிச் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

காலிறுதியில் ஒவ்வொரு அணியும் எதிரணியை தங்களது சொந்த மைதானத்தில் ஒரு முறையும், எதிரணி மைதானத்தில் ஒரு முறையும் சந்திக்க வேண்டும். அதன்படி முதல் காலிறுதி போட்டியில் பார்சிலோனா - யுவான்டஸ் அணிகள் நேற்று நள்ளிரவு யுவான்டஸிற்கு சொந்தமான மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

இதில் முன்னணி அணியான பார்சிலோனாவிற்கு யுவான்டஸ் கடும் சவாலாக விளங்கியது. சொந்த மண்ணில் கூடுதல் பலத்துடன் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தியது யுவான்டஸ். குறிப்பாக அந்த அணியின் இளம் வீரரான பவுலோ டைபாலா முதல் பாதி நேரத்தில் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். 7-வது நிமிடத்தில் ஒரு கோலும், 22-வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தார். பின்னர் 55-வது நிமிடத்தில் சியேலினி மேலும் ஒரு கோல் அடிக்க யுவான்டஸ் 3-0 என அபாரமாக வெற்றி பெற்றது. பார்சிலோனா எவ்வளவோ முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தது.

201704121810420033_dybala-s._L_styvpf.gi

இந்த வெற்றியின் மூலம் யுவான்டஸ் 3-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது லெக் பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் 20-ந்தேதி நடக்கிறது. இதில் பார்சிலோன 4-0 என வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும்.

201704121810420033_juvantes-s._L_styvpf.

16 அணிகள் கொண்ட சுற்றில் பாரிஸ் செயன்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) முதல் லெக்கில் 4-0 என பார்சிலோனாவை வீழ்த்தியது. அதன்பின் பார்சிலோனா 6-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. அதேபோல் எதாவது விசித்திரமான நிகழ்வு நடந்தால் பார்சிலோனா அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/12181034/1079643/Champions-League-quarter-final-Paulo-Dybala-hits-double.vpf

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this