Jump to content

மக்கள் பற்றாக்குறையில் மேலை நாடுகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் பற்றாக்குறையில் மேலை நாடுகள்

ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் பண்புகளையும், திறமைகளையும், செயல்பாடுகளையும் பொறுத்தே அமைகிறது.

ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்போதுதான் நாடுகள் வளம் பெறுகின்றன. எனவேதான் அடுத்த தலைமுறையினர் குறித்து எப்போதுமே முந்தைய தலைமுறையினர் கவலை கொள்கின்றனர்.

ஆனால் ஒரு நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கையே குறைந்து வந்தால் என்ன செய்வது? வருங்காலத்துக்குப் போதுமான குழந்தைகள் பிறக்கவில்லையெனில் ஒரு நாடு என்னவாகும்? எதிர்காலம் என்பதே இல்லாமல் போய்விடுமா?

இந்த மாதிரி நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத பிரச்சினைகளில் இன்று ஒரு நாடல்ல, பல நாடுகள் மூழ்கியுள்ளன. அந்த நாடுகளில் என்ன பிரச்சினை? உணவுப் பற்றாக்குறையா, பஞ்சமா அல்லது தீராத வியாதி தொல்லையா? இவை எதுவுமில்லை. அந்த நாடுகளெல்லாம் தொழில்வளர்ச்சி பெற்ற செல்வந்த நாடுகள். இவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகள்.

அவற்றுக்கெல்லாம் ஏன் இந்தப் பிரச்சினை? அவைதான் பொருளாதார வளர்ச்சி பெற்று, செல்வச் செழிப்பில் உள்ளவையாயிற்றே? அப்படிப்பட்ட நிலையில் என்ன பிரச்சினை இருக்க முடியும்? பிரச்சினை இதுதான். குடும்பங்களின் சிதைவு.

வளர்ந்த நாடுகளில் குடும்பங்கள் ஏன் சிதைந்து வருகின்றன? செல்வம் பெருகப் பெருக, மனித வளம் உயர உயர குடும்பங்கள் அதிக மகிழ்ச்சியுடன்தானே இருக்க வேண்டும்? எப்படி குடும்பங்கள் சிதைய முடியும்? அதற்கு என்னென்ன காரணங்கள்? முக்கிக் காரணம் கலாசாரச் சீரழிவு.

கலாசாரச் சீரழிவுகள் குடும்ப அமைப்பை பல வழிகளில் பாதிக்கின்றன. முதலாவது, மணமுறிவுகள். கடந்த ஆண்டுகளில் மணமுறிவுகளின் எண்ணிக்கை அங்கு பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் அந்த நாடுகளில் பெற்றோரில் ஒருவர் மட்டுமே என்ற நிலைமை நிறைய குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. பெற்றோர் என்றாலே அம்மாவும் அப்பாவும் சேர்ந்துதான்.

ஆனால் தனியான அம்மா, தனியான அப்பா என குறைந்தபட்ச குடும்ப உறவே சுருங்கிவிட்ட நிலை அங்கு அதிகரித்து வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் வயதிலேயே தாயாகித் தனித்து விடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகவும் வேதனைக்குரியது.

இரண்டாவது பாதிப்பு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாத தன்மை. எனவே அங்கு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாதவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2005-ம் ஆண்டு கணக்குப்படி ஏறத்தாழ 14 விழுக்காடு ஐரோப்பியக் குடும்பங்களில் குழந்தைகள் இல்லை. அமெரிக்காவில் இது 16 விழுக்காடாக உள்ளது.

எதிர்காலம் குறித்த பயம், நிரந்தர வாழ்க்கைத்துணையின்மை, வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற வேட்கை ஆகிய காரணங்களால் குழந்தை பெற்றுக் கொள்வதைத் தவிர்ப்பதாக மேலை நாட்டு மக்கள் கூறுகின்றனர். இத்தகைய எண்ணங்களால் 49 விழுக்காடு ஐரோப்பியக் குடும்பங்களில் இப்போது குழந்தைகள் இல்லை.

மக்கள்தொகைப் பற்றாக்குறையால் புதிய பிரச்சினைகளும் ஏற்படத் தொடங்கியுள்ளன. அந்நாட்டு அரசுகள் இது குறித்து கவலை அடைந்துள்ளன. இதனால் குடும்ப அமைப்பு முறையை பாதுகாப்பதற்காக அந்நாட்டு அரசுகள் அதிக அளவில் நிதியை ஒதுக்கி வருகின்றன.

குழந்தை போனஸ், குடும்ப அலவன்ஸ், பிரசவகால விடுப்பு, வரிச்சலுகைகள், அலுவலக வேலை நேர கட்டுப்பாடுகளில் தளர்வு, வீட்டு வசதி சலுகைகள் என பலவிதமான உதவிகள் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் ஒன்பது குழந்தைகள் பெற்றுக் கொண்ட பிரெஞ்சு நாட்டுப் பெண்ணை அந்நாட்டின் அதிபர் பாராட்டி பரிசு வழங்கியுள்ளார்.

எதிர்காலத்தில் குறைந்தபட்ச மக்கள்தொகையாவது அவசியம் இருக்க வேண்டும் என்பதால்தான் இத்தகைய முயற்சிகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிறப்பு விகிதம் ஸ்பெயின் நாட்டில் 1.32, இத்தாலியில் 1.33, ஜெர்மனியில் 1.37 என்ற அளவில் உள்ளது. இதனால் தற்போதைய மக்கள்தொகையைக் கூட அவர்களால் தக்க வைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள்தொகை குறித்து ஏன் இவ்வளவு கவலை? மக்கள்தொகை குறைவாக இருந்தால் நல்லதுதானே என்ற எண்ணம் நமக்கு எழலாம். இங்கு ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கூடுதலான மக்கள்தொகையைவிட, மக்கள்தொகை பற்றாக்குறை ஆபத்தானதாகும். ஏனெனில் போதுமான மக்கள்தொகை இல்லையெனில், ஒரு நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. அதனால்தான் ஒரு குழந்தை திட்டத்தை முன்னர் கடுமையாக அமல்படுத்திய சீன நாடுகூட, தனது கொள்கையின் இறுக்கத்தை இன்று புரிந்து கொண்டுள்ளது.

மேலை நாட்டு சமூகங்கள் அரசு சார்ந்தவை. அங்கு குடும்ப அமைப்பு சிதைந்துபோவதால், அரசுகள் தான் மக்களைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை. இதற்காக அந்த அரசுகள் நிறைய தொகைகளை சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலம் வேலையில்லாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும், இன்ன பிற வாழ்வாதாரம் இல்லாதவர்களுக்கும் வழங்கும் நிலை உள்ளது. இந்தத் தொகைகள் எல்லாம் உழைக்கும் மக்களின் வருவாயிலிருந்து எடுக்கப்படுகிறது.

ஆனால் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதனால் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான நிதியாதாரமும் வெகுவாகக் குறைகிறது.

எனவே இத்திட்டங்களைத் தொடர்ந்து அரசுகளால் நடத்த முடியுமா என்னும் சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால் இத்திட்டங்களை அரசுகள் கைவிடுமேயானால் அங்கு பெரும் பிரச்சினைகள் வெடிக்கும். ஏனெனில் சம்பாதிக்கும் நிலையில் இல்லாத மக்களின் வாழ்க்கைக்கு யாரும் பொறுப்பேற்காத சூழ்நிலை உருவாகும்.

இதனால் மேலை நாடுகள் பலவற்றுக்கு இப்போதே மிகுந்த சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பின்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளில் ஓய்வு பெறும் வயதை அதிகரித்து விட்டார்கள். ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்களைத் தொடர்ந்து வேலையில் வைத்திருப்பதும், ஓய்வு பெற்றவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதும் அதிகமாகி வருகிறது. வயதானவர்களைத் தொடர்ந்து வேலையில் வைத்துக் கொள்வதற்காக அவர்களின் உடல்நிலையை நல்லமுறையில் பராமரிக்க நிறுவனங்கள் அதிக செலவு செய்யத் தொடங்கியுள்ளன.

ஆனால் இவையெல்லாம் தாற்காலிக ஏற்பாடுகள்தான் என்று அவர்களுக்குத் தெரியும். எனினும் இதற்கெல்லாம் நிரந்தரத் தீர்வு, நிலையான குடும்ப அமைப்பும் அதன் மூலம் தேவையான எண்ணிக்கையில் உருவாகும் நல்ல குழந்தைகளும்தான். ஆனால் நிலையான குடும்பங்களை அமைக்கும் முயற்சி உயர்வான உறவுகளின் அடிப்படையில் மட்டுமே அமைய முடியும். அந்த உறவுகள் மேலை நாடுகளில் பெருமளவில் கலாசாரச் சீரழிவுகளால் சிதைக்கப்பட்டிருப்பதுதான் கவலைக்குரிய விஷயமாகும்.

இந்தவகையில் வளர்ந்த நாடுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். எந்தவித பொருளாதார வளர்ச்சியும் குடும்பக் கலாசாரத்தின் அடிப்படையை பாதிக்க நாம் அனுமதிக்கக் கூடாது.

(கட்டுரையாளர்: பேராசிரியர், பி.எஸ்.ஜி. மேலாண்மை நிறுவனம், கோவை).

நன்றி தினமணி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.