Jump to content

கனடாவில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் நாடு கடத்தப்படவுள்ளார்


Recommended Posts

கனடாவில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் நாடு கடத்தப்படவுள்ளார்

deport_CI.jpg
மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர்  கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளார். கனேடிய குடிவரவு மற்றும் புகலிடக் கோரிக்கையாளர் சபை இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்பவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும், குறித்த நபர் உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார் எனவும் இந்த மேன்முறையீடு விசாரணைக்கு உட்படுத்த நான்கு ஆண்டுகள் வரையில் காலம் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரையில் தொடர்ந்தும் குறித்த நபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

2012ம் ஆண்டில் அனுஜா பாஸ்கரன் என்ற பெண்ணின் சடலம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மொன்டரல் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருந்தது. இந்த பெண் குறித்த நபரின் மனைவி எனவும், பெண்ணை குறித்த நபர் கொலை செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/23858

Link to comment
Share on other sites

கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையரை நாடு கடத்த உத்தரவு!

 

கனடாவில் தமது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளவரை நாடு கடத்துமாக கனேடியகுடிவரவு மற்றும் அகதிகள் சபை கட்டளையிட்டுள்ளது.

ரேடியோ கனடா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

எனினும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சிவலோகநாதன் தனபாலசிங்கம், இந்ததீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும்.

இந்தநிலையில் அவரை நாடு கடத்தும் கட்டளையை நடைமுறைப்படுத்த காலம் செல்லும் என்றுகனேடிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

2012ம் ஆண்டு தமது மனைவியான அனுஜா பாஸ்கரனின் சடலம் குடியிருப்பு ஒன்றில்கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து சிவலோகநாதன் தனபாலசிங்கம் கைது செய்யப்பட்டார் என்பது எங்கு குறிப்பிடத்தக்கதாகும்


sivalog-600x221.jpg

http://www.canadamirror.com/canada/85029.html

Link to comment
Share on other sites

  • 1 month later...

கனடா, நாடு கடத்தும் உத்தரவினை பிறப்பித்தால் எதிர்க்கப் போவதில்லை – சிவலோகநாதன்

sivaloganathan.jpg
கனடா நாடு கடத்தும் உத்தரவினை பிறப்பித்தால் அதனை எதிர்க்கப் போவதில்லை என இலங்கையரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார். மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சிவலோகநாதனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்காக கனடாவில் தண்டனை அனுபவிப்பதனை விடவும், இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதனை சிவலோநாதன் விரும்புவதாக கனேடிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

31 வயதான சிவலோகநாதன் கடனாவில் புகலிடம் கோரியிருந்த நிலையில் அவருக்கெதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மனைவியை கொலை செய்ததாக சிவலோகநாதன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/26576

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொன்றியல் பக்கம் தான் பிரச்சனை கூட.

மொழிப்பிரச்சணையால் மனஅமுத்தம் கூட போலுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.