Jump to content

கடல் தொடாத நதி


Recommended Posts

கடல் தொடாத நதி - 1

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்புதிய தொடர்

 

மிழ் சினிமா நூற்றாண்டு கண்டுவிட்டது. பல மகத்தான சாதனையாளர்கள் திரையில் முத்திரைப் பதித்துச் சென்றிருக்கிறார்கள்.

பிப்ரவரி 12. 1962.

சினிமாவில் தடம் பதிக்க சென்னையில் நான் கால் பதித்த நாள். நான் சொல்லப்போவது என் சரித்திரம் அல்ல. என் 55 ஆண்டுகால சினிமா வாழ்வின் சரித்திரம். இந்த 55 ஆண்டுகளில் நான் வேறு, சினிமா வேறாக இருந்ததில்லை. இளையராஜாவும் பாரதிராஜாவும் என் இளமைக்காலத்திலிருந்து தொட்டுப் படரும் நட்புக் கொடிகள்.

ராஜாவில் இருந்து தொடங்குகிறேன்.

என் மனதில் ‘அன்னக்கிளி’ என்ற கதையின் ஆரம்ப விதை விழுந்த நேரத்திலேயே அதற்கு என் பால்ய நண்பன் இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். நான் சென்னை வந்த சில ஆண்டுகளிலேயே அவனும் சென்னை வந்தான்.

மிகக் குறுகிய காலம், இசையமைப்பாளர் வி.குமாரின் இசைக்குழுவில் இளையராஜா கிடார் வாசித்தது பலருக்குத் தெரியாது.

p30.jpg

அன்று குமார் இசையில் பி.சுசீலா பாடினார். அந்தப் பாட்டுக்கு ராஜா நோட்ஸ் எழுதிக் கொடுத்திருந்தான். பாடலைப் பாடிப் பார்த்த சுசீலா, அந்த நோட்ஸ் பொருந்தி வராமல் இருப்பதாகச் சொன்னார். இளையராஜாவுக்கு வந்ததே கோபம். அவனுடைய இசையில் குற்றம் சொன்னால், அவனால் தாங்கிக்கவே முடியாது. பதிலுக்கு அவன், ‘‘நீங்க என்னத்த நினைச்சுக்கிட்டு பாடினீங்களோ?’’ என வெடுக்கெனச் சொல்லிவிட்டான். அவனைப் பற்றித்தான் தெரியுமே? மனதில் பட்டதை எந்த அலங்காரமும் இல்லாமல் அப்படியே சொல்பவன் ஆயிற்றே?

‘என்னத்த நினைச்சுக்கிட்டு பாடினீங்களோ?’ என ராஜா சொன்னதைச் சுசீலாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஓவென அழ ஆரம்பித்துவிட்டார். அடுத்த நிமிஷம் அந்த ரெக்கார்டிங் ஏரியாவே பரபரப்பாகிவிட்டது. இவனை வெளியே அனுப்பிவிட்டார்கள். சான்ஸ் போச்சு.

இளையராஜாவின் இசையைக் குறை சொல்லிவிட்டால் இப்படித்தான். இதை எதற்காகச் சொன்னேன் என்பதற்குக் காரணம் இருக்கிறது.

‘அன்னக்கிளி’ கதைக்கு நான் முதலில் வைத்திருந்த தலைப்பு, ‘மருத்துவச்சி’. பஞ்சு அருணாசலத்திடம் கதையைச் சொன்னேன். ஆண்டாளின் பக்தியைக் காதல் தியாகம் போல சொல்லியிருந்த கதை அது. எனவே, ‘சூடிக்கொடுத்தாள்’ எனப் பெயர் வைக்கலாம் என்று அவர் யோசனை சொன்னார்.

இந்த நேரத்தில்தான் இளையராஜா, இந்தக் கதையைக் கேட்டுவிட்டு, ஹார்மோனியத்தில் தன் புதிய தேவ கானத்தை இசைத்தான். அவனாகவே, ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே...’ என ஒரு வரியைப் போட்டு, மெட்டுப் போட்டு பாடினான். அதைக் கேட்டதும், ‘அட, இது நல்லா இருக்கே...’ எனப் படத்தின் பெயரையே ‘அன்னக்கிளி’ என மாற்றினார் பஞ்சு.

அந்த நாளில் பி.சுசீலா பாட்டு இடம்பெறாத படமே வராது என்கிற அளவுக்கு அவர் பிரபலம். எனவே, ‘‘இந்தப் பாடலை சுசீலாவைப் பாட வைக்கலாம்’’ என்று பஞ்சு சொன்னார். ராஜாவின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. சிறிது யோசனைக்குப் பிறகு,  ‘‘எஸ்.ஜானகியைப் பாட வைக்கலாம்’’ எனச் சொன்னான். ‘பி.சுசீலாதானே பிரபலம்’ எனச் சொன்னபோதும் அவன் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. ‘ஜானகிதான் பாட வேண்டும்’ எனப் பிடிவாதமாக இருந்தான். ‘சிங்காரவேலனே தேவா...’ போன்ற பாடல்களால் ஜானகிக்கு நல்ல பெயர் இருந்தாலும், சுசீலா அளவுக்கு அவர் பிரபலம் இல்லை. ராஜா ஏன் அவ்வளவு பிடிவாதமாக இருந்தான் என்பதற்கு இப்போது உங்களுக்குப் பதில் கிடைத்திருக்கும்.

குமார் இசையில் அன்று பாதியில் விரட்டப்பட்டதற்கு சுசீலா காரணமாக இருந்த வடு அவன் மனதில் அப்படியே இருந்திருக்க வேண்டும். தன்னை விரட்டிய சுசீலாவுக்கு மாற்றாக இன்னொருத்தரை அந்த இடத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பது அவனுடைய எண்ணம்.

சினிமாவில் இது ஒரு சோற்றுப் பதம்தான். இப்படி நிறையச் சொல்லலாம்.

கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசன் பாடல் எழுதிக் கொண்டிருந்த காலம்.

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஏதோ மன வருத்தம். அப்போதேல்லாம் எம்.எஸ்.வி இசையில் வாலிதான் பாடல் எழுதுவார்.

இந்த நேரத்தில் பஞ்சு சார் வீட்டுக் கல்யாணம். அந்தக் கல்யாணத்துக்கு சங்கர் - கணேஷ் இசைக் கச்சேரி எனப் போட்டு பத்திரிகை எல்லாம் கொடுத்து விட்டார்கள். ஆனால், அவர்கள் கச்சேரி செய்ய வரவில்லை. ‘கண்ணதாசன் மீது இருந்த வருத்தத்தில், அவருடைய உதவியாளரான பஞ்சு வீட்டுத் திருமண விழாவில் கச்சேரி செய்ய வேண்டாம் என சங்கர் கணேஷை எம்.எஸ்.வி-தான் தடுத்து விட்டார்’ என்று பேசிக் கொண்டார்கள். அப்படித் தொடர்புபடுத்துவது சுலபமாகவும் இருந்தது.

இந்த வருத்தம் போதாதா? கல்யாணப் பத்திரிகையில் இசைக்கச்சேரி என விளம்பரம் செய்து, கடைசி நேரத்தில் இப்படிச் செய்துவிட்டாரே என்ற வருத்தம் பஞ்சுவுக்கு இருந்தது. இந்த நேரத்தில், இளையராஜா வந்தததும் அவரைப் பிரபலப்படுத்த பஞ்சுவுக்கு மனரீதியான ஒரு காரணம் இருந்தது. ராஜாவைப் போகிற இடமெல்லாம் சிபாரிசு செய்யவும், தன் அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்தவும் அது கூடுதல் காரணமாகவும் மாறியது. ‘ஒரு வருத்தம்...  ஒரு  வடு  எப்படி  சினிமாவைப் புரட்டிப்போடுகிறது’ என்பதற்காகச் சொல்கிறேன்.

மும்பையில் ‘தளபதி’ படத்துக்கான ரெக்கார்டிங். மணிரத்னம் படம். இசையில் மணி சார் ஏதோ கரெக்‌ஷன் சொல்ல, ராஜா அதை ஏற்க மறுத்துவிட்டான். மணி ஒன்றும் சொல்லவில்லை. அப்படியே ஃப்ளைட் பிடித்து சென்னை வந்துவிட்டார். அந்த நேரத்தில்தான் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி மணியிடம் சொல்கிறார்கள். தன் அடுத்த படமான ‘ரோஜா’வுக்கு ரஹ்மான் இசை என அறிவித்துவிட்டார் மணி சார். சினிமாவில் ஓர் ஆளுமையைத் தாண்டி இன்னொருவர் வருவதற்கும், அவர் பிரபலமாவதற்கும் இப்படியான மனக்காயங்கள் காரணமாக இருக்கின்றன.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


p30a.jpg

தங்க நெல்!

``மதுரையின் வைகைக் கரையில் நான் பிறந்து வளர்ந்த ஊர் இருக்கிறது. திருவெங்கடபுரம் என்பது அதன் பெயர். அப்பாவின் பூர்வீகம் தூத்துக்குடி. அம்மா, சிவகங்கை. அப்பாவின் குடும்பம் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தது. ஒவ்வொரு போராட்டத்துக்கும் யார் ஜெயிலுக்குப் போவது என சீட்டுக்குலுக்கிப் போடுவார்கள். அப்படி ஒரு தீவிர பெரியாரிஸ்ட் குடும்பம். அம்மா ஹார்மோனியம் வைத்து மிகச் சிறப்பாகப் பக்திப் பாடல்களைப் பாடுவார். ஆண்டாள் பாசுரம் எல்லாம் அம்மா பாடி மனதில் பதிந்தவைதான். சிவகங்கையில் அம்மாவின் வீட்டில்தான் நான் பிறந்தேன். பிறந்த சில மாதங்களில் தங்கத்தில் நெல் செய்து, என் விரல் பிடித்து ‘அகரம்’ எழுதப் பழக்கினார்கள். அந்தத் தங்க நெல் எல்லாம் இப்போது போய் விட்டது. இன்னமும் அந்தத் தமிழ் என்னோடு இருக்கிறது

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 2

 

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

 

p20a.jpg

ளையராஜா, பாரதிராஜா ஆகியோரோடு எனக்கு ஏற்பட்ட நட்பு, என்னுடைய 14 வயது பருவத்திலேயே தொடங்கிவிட்டது. இப்போது அந்த நட்புக்கு வயது 60. எங்கள் மூவரையும் இணைத்து வைத்தது, ‘இணைகோடுகள்’ என்ற என் சிறுகதை. மாலை முரசு நடத்திய ஒரு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்று, தேர்வான கதை.  அந்தக் கதை எழுதியபோது எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். கதையைப் படித்து விட்டுச் சின்னசாமி, ராசய்யாகிட்ட பேசி யிருக்கிறான். ‘‘டேய், செல்வராஜ்னு ஒருத்தன் அருமையாக் கதை எழுதியிருக்கான். நீ படிச்சியா?’’ எனக் கேட்டிருக்கான். ராசய்யா பதிலுக்கு, ‘‘டேய், அவன் என் ஃப்ரெண்டுதான்’’னு சொல்லியிருக்கான்.

சின்னசாமிதான் பாரதிராஜா. ராசய்யாதான் இளையராஜா... இது உங்களுக்குத் தெரியும். அப்படித்தான் ஆரம்பித்தது எங்கள் நட்பு.

என் சித்தப்பா சங்கரய்யா, கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். கம்யூனிஸ்ட் பார்ட்டியில் இருந்ததால் பாவலர் வரதராசன் குழுவினரை நாங்கள் அறிந்துவைத்திருந்தோம். கட்சிக் கூட்டத்துக்குப் பாவலர் குழுவை அழைக்க வேண்டுமானால், நாமாக அழைத்துவிட முடியாது. அதற்கு நிறையக் கட்டுப்பாடுகள் உண்டு. கட்சி அலுவலகம் மூலம்தான் அழைக்க வேண்டும். ஒரு தேர்தல் நேரத்தில் முதல்முறையாகப் பாவலர் வரதராஜன் மதுரைக்கு வந்திருந்தார். உடன் வந்தான் இளையராஜா. அவனுக்கு மியூசிக் டைரக்டர் ஆக வேண்டும் என்கிற ஆசை. எனக்கும் சினிமா ஆசை இருந்ததால், அடுத்தடுத்த சந்திப்புகளில் எங்கள் நெருக்கம் அதிகமாக இருந்தது.

ஒரு சமயம் எங்கள் வீட்டுக்கு வந்த சங்கரய்யா, டேபிளில் இருந்த என்னுடைய கதைகளைப் படித்துப் பார்த்துவிட்டு, ‘சினிமாவுக்கு முயற்சி பண்ணலாமே?’ என ஆர்வத்தில் திரி கொளுத்திப் போட்டார்.

ஏற்கனவே எங்கள் குடும்பத்துக்குக் கொஞ்சம் சினிமா அனுபவங்கள் இருந்தன. டி.ஆர்.மகாலிங்கத்தை வைத்து ‘சிவகாமி’ என ஒரு படம் எடுத்தார், என் அப்பா. கம்பெனிக்கு, ‘செல்வராஜ் அண்டு கோ’ என என் பெயரைத்தான் வைத்தார். மதுரையில் சித்ரகலா ஸ்டூடியோவில் வைத்துத்தான் ஷூட்டிங். நடிகர்களை எல்லாம் மதுரையிலேயே தங்க வைத்து, சாப்பாடு தயாரித்து... எல்லாம் தடபுடலாக நடந்தன. படத்தை முடிக்க முடியவில்லை. அதன் பிறகு மகாலிங்கமும் பிஸியாகிவிட்டார்.

p20b.jpg

அதே போல என் மாமனாரும் தேவர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தோடு சேர்ந்து ஒரு படம் எடுக்கும் வேலையில் இறங்கினார். மிட்சல் கேமராவில் எடுத்த காட்சிகள். அதன்பிறகுதான் ஹாரி கேமரா புழக்கத்துக்கு வந்தது. அந்தப் படமும் பாதியில் நின்றுபோனது. அதனால் வீடெல்லாம் ரீல்களாகக் கிடக்கும். என் வயதுப் பையன்கள் பனங்குடுக்கையில் கவட்டை வைத்து வண்டி ஓட்டும்போது, நான் சினிமா ரீல் ஓடும் சக்கரங்களை வைத்து வண்டி ஓட்டி விளையாடுவேன்.

‘கைகொடுத்த தெய்வம்’ படத்தைத் தயாரித்த எம்.எஸ்.வேலப்பன், எங்களுக்கு உறவினர். ஜட்கா வண்டி ஒன்று வைத்திருப்பார். ஒற்றைக் குதிரை பூட்டிய அந்த வண்டியில் அவர் தினமும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குப் போய்விட்டு, மதுரையில் இருந்த ஒரிஜினல் அல்வா கடைக்கு வந்து குதிரைக்கு அல்வா வாங்கித் தருவார். இந்த நிகழ்ச்சி தினமும் தப்பாமல் நிகழும். அவர் தயாரிக்க இருந்த அடுத்த படத்துக்காகத்தான் முதன்முதலாகச் சென்னை வந்தேன். அவருடைய பொருளாதாரச் சிக்கல் காரணமாகப் படவேலைகள் தள்ளிப்போயின.

அதன் பின் மதுரைக்கே திரும்பி வந்துவிட்டேன். தோழர் பாலதண்டாயுதம் என் நிலைமை அறிந்து, ‘தைரியமாக இரு’ எனக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

அவருடைய சிபாரிசில் மல்லியம் ராஜகோபால் இயக்கிய ‘ஜீவனாம்சம்’ என்ற படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அப்போது எல்லாம் உதவி இயக்குநர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கும். சங்கரய்யாவின் உறவினன் என்பதும் பாலதண்டாயுதம் அவர்களின் சிபாரிசு என்பதும், எனக்கு ஓரளவுக்கு மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்தன. லட்சுமி நாயகியாக நடித்த முதல் படம் அது. நாகேஷ் அதில் முக்கியமான வேடத்தில் நடித்தார். பாதிப் படம் நடந்து முடிந்த நிலையில், நாகேஷின் டிரைவர் கொலை செய்யப்பட்டதாக ஒரு வழக்கு. நாகேஷும் அந்த விசாரணையில் சிக்கிக்கொள்ள, அவர் படப்பிடிப்புக்கு வர முடியாத சூழல். ஷூட்டிங் இருந்தாலே சரியாகச் சாப்பாடு கிடைப்பது கஷ்டம். ஷூட்டிங் நின்றுபோனால், பச்சைத் தண்ணீர் கிடைப்பதும் அபூர்வமாகிவிடும். அது அறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த நேரம் என்பது நினைவிருக்கிறது. என்ன செய்வது எனப் புரியாமல் நின்றேன்.

p20.jpg

அந்த நேரத்தில்தான், பாரதிராஜா சென்னையில் இருப்பதாக இளையராஜா கடிதம் எழுதினான். அவன் அறை முகவரியை வாங்கிக்கொண்டு நேரில் பார்த்தேன். சினிமாவுக்கு முயற்சி செய்துகொண்டே, சென்னையின் உட்ஸ் சாலையில் இருந்த ஒரு ஆட்டோமொபைல் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய அறைக்குச் சென்று பார்த்தேன். தன்னுடனேயே தங்கச் சொன்னான். நான் எழுதி வைத்திருந்த ‘ஊசியிலைக் காடுகள்’ என்ற கதையைக் காட்டினேன். படித்துப்பார்த்துவிட்டு, ‘‘இதை மாத்து... அதை மாத்து... கதைனா விஷுவலா இருக்கணும்’’ எனச் சொல்ல ஆரம்பிச்சான். எனக்கு வந்ததே கோபம். ‘‘போடா... நான் எவனை நம்பியும் மெட்ராஸுக்கு வரலை’’ என்று சொல்லிவிட்டு, ஃபைலைத் தூக்கி அடித்தேன்.

பாரதியும் சளைக்கவில்லை... ‘‘என் அறையில வந்து தங்கிக்கிட்டு, என்கிட்டயே எகிறிட்டு இருக்கியா... வெளிய போடா. என் டெர்லின் சட்டையக் கழட்டிவெச்சுட்டுப் போடா’’ எனக் கத்த ஆரம்பித்தான். எங்கள் முதல் சந்திப்பே சண்டையில் முடிந்தது.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


எங்களை இணைத்த கதை!

மாலை முரசு நடத்திய சிறுகதைப் போட்டிக்கு நான் எழுதிய ‘இணை கோடுகள்’  சிறுகதை, பாலியல் தொழிலாளி பற்றியது.

சமூக சீர்திருத்தவாதி ஒருவன், அவளைத் திருத்த நினைக்கிறான். அவள், ‘நீ எனக்கு நல்ல கணவனாக இருக்க முடியுமா’ எனக் கேட்கிறாள். சம்மதிக்கிறான். வாழ்க்கை நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைக்குச் செல்கிறான் அந்த சீர்திருத்தவாதி. அவளுக்கோ வாழ வழியில்லை. தன் வழக்கமான தொழிலில் ஈடுபடுகிறாள். சிறையில் இருக்கும் கணவன், விஷயம் கேள்விப்பட்டுத் துடிக்கிறான்.

தண்டனை முடிந்து, ஒருநாள் காலையில் அவன் வீட்டுக்குத் திரும்புகிறான். வீடு பூட்டிக்கிடக்கிறது. இரவு வெளியே சென்ற மனைவி, அப்போதுதான் வீடு திரும்புகிறாள். ‘‘எனக்கு நல்ல மனைவியாக இருப்பதாகச் சொன்னாயே?’’ எனக் கேட்கிறான். ‘‘நீங்களும்தான் நல்ல கணவனாக இருப்பதாகச் சொன்னீர்கள்’’ என பதிலாகக் கேட்கிறாள்.

இருவரும் அவரவர் பாதையில் பிரிகிறார்கள். இணையாத கோடுகளாக... இணை கோடுகளாகப் பயணிக்கிறார்கள். இதுதான் அந்தக் கதை.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 3

 
 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

 

p28c.jpgபாரதிராஜாவின் அறையில் இருந்து வெளியே வந்த நான், சென்னை நகரத்தின் பரந்த தெருவில், முகம் தெரியாத மனிதர்களுக்கு மத்தியில் நடக்க ஆரம்பித்தேன். சினிமாவில் ஜெயித்தாக வேண்டும் என்ற வெறி மேலும் கூடுதலானது. ஏனென்றால், என்னுடைய முந்தைய தலைமுறையினர் சினிமா எடுக்க முயற்சி செய்து தோல்விகளைச் சந்தித்திருந்தனர். இன்னொரு தோல்விக்கு நான் தயாராக இல்லை.

மதுரையில் எனக்கு இரண்டு முக்கியமான நண்பர்கள் உண்டு. ஒருவன், பாலசந்திரன். இன்னொருவன், மீனாட்சி சுந்தரம். இவர்கள் இருவரும் என் கதைகளைப் படித்துக் கருத்துகள் சொல்பவர்களாக இருந்தனர். மீனாட்சி சுந்தரத்தை ‘டே மீனா... டே மீனா’ என அழைத்து அவன் பெயர் ‘டெமினா’ என்றே நண்பர்கள் வட்டத்தில் மாறிப் போனது. அந்த டெமினா அப்போது சென்னை பெல்ஸ் ரோட்டில் தங்கி, வக்கீலுக்குப் படித்துக்கொண்டிருந்தான். அப்போது, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் கட்டப்படவில்லை. ஏன்... எழிலகம்கூட உருவாகவில்லை. அவனுடைய அறையில் கொஞ்ச நாட்களை ஓட்டினேன்.

p28b.jpg

அப்போது கண்ணதாசன் நடத்திய ‘தென்றல்’ இதழ், இலக்கிய உலகில் மிகவும் பிரபலம். சினிமா ஆசையில் இருந்த  எனக்கு, அதன் மீது ஒரு ஈர்ப்பு. கவிதைகளை எழுதி அந்த இதழுக்குக் கொடுத்துவிட்டு வருவேன். வலம்புரி சோமநாதன், பஞ்சு அருணாசலம் போன்றவர்கள் இதழ் பொறுப்பையும் கவனிப்பார்கள். அப்படிச் சென்றுவந்த நேரத்தில், சினிமா உதவி இயக்குநர் என்ற பாசத்தில், பஞ்சு அருணாசலம் என்னிடம் பழக்கமானார். இந்த சமயத்தில், நான் பாலமுருகனிடம் வசன உதவியாளராகச் சேர்ந்திருந்தேன். அந்த நாளில் அவர் பிரபல கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் பல படங்களுக்கு எழுதி வந்தார். ‘வசந்த மாளிகை’ படத்துக்கு அவர்தான் வசனம். அந்தப் படத்தின் பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன்; அவருடைய உதவியாளர் பஞ்சு அருணாசலம். ‘வசந்த மாளிகை’ எங்களை மேலும் நெருக்கமாக்கியது.

அந்தப் படத்தின் வேலைகளுக்காக மகாபலிபுரத்தில் ரூம் போட்டனர். கண்ணதாசன், பாலமுருகன், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் எனப் பலரும் வந்திருந்தனர். உதவியாளர்களாக இருந்த எனக்கும் பஞ்சுவுக்கும் ஒரே அறை. எழுத்துப் பணிகள் முடிந்து வீடு திரும்புவதற்கு எங்களுக்கு ஒரு கார் அனுப்பினர். கே.வி.மகாதேவனின் உதவியாளர் ராகவலு என்பவரும் எங்களுடன் வந்தார்.

எங்களை அவரவர் வீடுகளில் இறக்கிவிட வேண்டும். நான் தேனாம்பேட்டையில் இருந்தேன். தி.நகரில் மூஸா தெருவில் பஞ்சு இருந்தார். அவரை முதலில் ட்ராப் செய்துவிட்டு, நான் தேனாம்பேட்டை போக வேண்டும். காரில் பேசிக்கொண்டே வந்தோம்.

அந்த நாளில் எழுத்தாளர் தமிழ்வாணன் ஒரு படம் எடுத்தார். எங்கள் பேச்சு, அந்தப் படத்தைப் பற்றித் திரும்பியது. அந்தப் படத்துக்குப் புதிய இசையமைப்பாளர். அவர் கண்ணதாசனைப் பாடல் எழுத வைக்காமல் வேறு யாரையோ எழுதவைத்தார். அதைச் சுட்டிக்காட்டிய  பஞ்சு, கொஞ்சம் ஆவேசமாக அந்த இசையமைப்பாளரைத் திட்டிக்கொண்டு வந்தார். ‘‘தமிழ் தெரியாதவன்... தொழில் தெரியாதவன் எல்லாம் மியூசிக் போட வந்துட்டானுங்க’’ என கொட்டித் தீர்த்தார். அவர் இறங்க வேண்டிய இடம் வந்தது. அப்போது, எங்களுடன் வந்த அந்த நபர், ‘‘இவ்வளவு நேரம் நீங்கள் திட்டிக்கொண்டு வந்த தொழில் தெரியாத மியூசிக் டைரக்டர் நான்தான்’’ என்றார் பொறுமையாக. எங்களுக்கு ஒட்டுமொத்த போதையும் இறங்கிவிட்டது.

தி.நகரில் இப்போது பஸ் ஸ்டாண்ட் இருக்கும் இடம் அப்போது வெறிச்சோடிக் கிடக்கும். அங்கே, சிவா விஷ்ணு கோயிலுக்கு எதிரே ‘கிளப் ஹவுஸ்’ இருந்தது. அது சினிமா ஆர்வலர்களின் சொர்க்கம். நாகேஷ், ஸ்ரீகாந்த் போன்ற பலரும் அங்கே தங்கியிருந்துதான் வாய்ப்பு தேடினார்கள். நாள் வாடகை 10 ரூபாய். ‘சூடிக்கொடுத்தாள்’ கதை அங்கே திரைவடிவமாகிக் கொண்டிருந்த வேளையில், இளையராஜா பற்றி பஞ்சுவிடம் சொல்லியிருந்தேன். அழைத்து வரச் சொல்லியிருந்தார்.

p28.jpg

சொன்னபடி, தி.நகர் பஸ் ஸ்டாண்டுக்கு இளையராஜா, பாஸ்கர் ஆகிய இரண்டு பேரும் வந்துவிட்டார்கள். அவர் களை அந்த லாட்ஜுக்கு அழைத்துச் சென்றேன். ‘‘கொஞ்சம் இருங்கள்’’ என அவர்களை ரிசப்ஷனில் உட்கார வைத்துவிட்டு, பஞ்சுவிடம் போய் விஷயத்தைச் சொன்னேன்.

வரச்சொன்னார். அப்போது டிரிங்க் பண்ணிக் கொண்டிருந்த பஞ்சு, ‘‘ட்ரிங்க் பண்ணுவீங்களா?’’ என்று நாகரிகம் கருதி, ராஜாவிடம் அவர் கேட்டார். நான் பதறிப்போய், ‘‘அவனுக்கு அந்தப் பழக்கம் எல்லாம் இல்லை’’ என்று சொன்னேன். பஞ்சு நம்பிக்கையாகப் பேசி, வழியனுப்பிவைத்தார்.

ராஜாவையும் பாஸ்கரையும் பஸ் ஏற்றிவிட பஸ் நிலையத் துக்கு வந்தேன். ராஜா முகம் இறுக்கமாக இருந்தது. ‘‘அவர்தான் கூப்பிட்டாரே... நீ ஏன் வேணாம்னு சொல்லிட்டே?’’ என முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டான். வாய்ப்பு கேட்க வந்த முதல் நாளே இப்படி ஆரம்பிப்பது சரியாக இருக்காது என்று எடுத்துச் சொன்ன பிறகுதான் இறங்கிவந்தான்.

அடுத்த சந்திப்பு, கம்போஸிங் நோக்கி மெல்ல நகர்ந்தது. ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ என ட்யூன் போட்டபடியே பாட ஆரம்பித்தான் ராஜா. பஞ்சு முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். ‘‘அன்னக்கிளி... இதுதான் படத்தின் டைட்டில்’’ என்றார்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)

p28a.jpg

‘‘நெருப்பு தாங்க சார்!’’

இளையராஜாவும் நானும் சேர்ந்து வைகையில் பானைப் பொறிவைத்து மீன் பிடிப்போம். ஆற்றில் நீர் ஓட்டத்துக்கு எதிர்திசையில் மீன்கள் தாவிக் குதிக்கும். பானைப் பொறி என்பது, மீன்களைப் பிடிப்பதற்கான ஒரு சாதனம். மீன்களைப் பிடித்து அங்கேயே சுட்டுத் தின்போம்.

மீன் பிடிக்கப் போக வேண்டும் என்றால், நான்கு பெர்க்லி சிகரெட், வத்திப்பெட்டியின் ரேக்கு,  நான்கு தீக்குச்சி, கொஞ்சம் உப்பு, மிளகாய்த் தூள் இருந்தால்போதும். மீன் வேட்டையின்போது நெருப்பு அணையாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். ஒருத்தன் சிகரெட் முடித்ததும் அடுத்தவன் அதில் இருந்து சிகரெட் கொளுத்திக்கொள்ள வேண்டும். கங்கு அணையாமல் காப்பாற்ற வேண்டுமே? ஒருநாள் இரவு இரண்டு பேரின் சிகரெட்களும் அணைந்துவிட்டன. மீன் சுடுவதற்கு நெருப்பு இல்லை. அந்த நேரத்தில் இருட்டில் யாரோ ஒருவர் சிகரெட் பிடித்துக்கொண்டு வந்தார். ‘கொஞ்சம் நெருப்பு குடுங்க சார்’ என்று கேட்டேன். அவர் நெருப்பை நீட்டினார். நான் சிகரெட்டை கொளுத்திக் கொண்டேன். கங்கு தீப்பிடிக்கும்போது வெளிச்சம் அதிகமாகும். நெருப்பு தந்தவர் அப்போது என் முகத்தைப் பார்த்தார். ‘‘வீட்டுக்கு வா பேசிக்கிறேன்’’ என்றார்.

அவர், என் அப்பா!

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 4

 

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

 

‘அன்னக்கிளி’ ரிலீஸ் ஆன சமயத்தில் நடந்த களேபரங்கள் தனிக்கதை. அந்தப் படத்தின் செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு மாவட்டங்களின் உரிமையை வாங்குவதாகச் சொன்னவர், பெட்டி எடுக்க வரவே இல்லை. நானும் பஞ்சுவும் தவித்துப்போய் உட்கார்ந்திருந்தோம். படத்தை வாங்குவதற்காகப் புறப்பட்டு வந்த நேரத்தில், வழியில் அவருடைய கார் பஞ்சர் ஆகிவிட்டதாம். சென்டிமென்ட்டாக நினைத்து அவர் அப்படியே திரும்பிப் போய்விட்டார். நடிகர் சிவகுமார் அட்வான்ஸாக வாங்கிய சம்பளத்தோடு சரி. நாங்கள் படுகிற பாட்டைப் பார்த்துவிட்டு, மீதிப் பணம் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்.

ஆனாலும், படத்தை எப்படி ரிலீஸ் செய்வதென்று குழம்பிப் போய் இருந்தோம். அப்போது ஒருவர் படத்தை வாங்க வந்தார். படத்தைப் போட்டுக் காட்டுவதற்குக்கூட நேரம் இல்லை. ‘‘கதையை மட்டும் சொல்லுங்கள்’’ என்றார். முழுக்கதையையும் அவரிடம் சொன்னேன். அவருக்குக் கதை பிடித்திருந்தது. வாங்குவதாகப் பணத்தையும் கொடுத்தார்.

p34.jpg

படம் ரிலீஸ் ஆனது. ஒரு வாரம் தியேட்டரில் ஈ ஆடியது. பல தியேட்டர்களில் முதல் வாரத்திலேயே தியேட்டரை விட்டுத் தூக்கப் போவதாகச் சொல்லிவிட்டார்கள். ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடித்த ‘மேயர் மீனாட்சி’ என்ற படத்தை வெளியிடவும் முடிவுசெய்துவிட்டார்கள்.  நானும் பஞ்சுவும் சென்னை ‘ராஜகுமாரி’ தியேட்டர் வாசலில் போய் நிற்போம். திரும்பி வருவோம். ஒரு வாரம் முடிந்து, ஞாயிற்றுக்கிழமை அன்று தியேட்டருக்குப் போனேன். கவுன்ட்டரில் சொல்கிறார்கள்: ‘‘இன்னும் மூணு டிக்கெட் மட்டும் இருக்கிறது. அதை விற்றுவிட்டால் ஹவுஸ்ஃபுல் போர்டு போட்டுவிடலாம்.’’

மூன்று டிக்கெட்களை வாங்க கையில் காசு இல்லை. என் வீடு எல்டாம்ஸ் ரோடில்தான். அங்கிருந்து சைக்கிளில் வேகமாக வீட்டுக்குப் போய், மூன்று டிக்கெட்களுக்கான காசை எடுத்துவந்து கட்டினேன். தியேட்டர் வாசலில் முதன்முதலாக ஹவுஸ்ஃபுல் போர்டு. சந்தோஷம் தாளவில்லை. அதன் பிறகு அடுத்த 28 வாரங்களுக்கும் தியேட்டரில் அந்த போர்டு நிரந்தரமாக இருந்தது. படத்தை வாங்கிய அத்தனைப் பேரும் பணத்தை அள்ளினார்கள்.

அதே சூட்டோடு சிவகுமார், பஞ்சு, இளையராஜா, காம்பினேஷனில் அடுத்து இன்னொரு படத்தைத் தொடங்குவதாகத் திட்டம். ‘கவிக்குயில்’ பிறந்தது.

‘அன்னக்கிளி’ ஏழு எட்டு ஆண்டுகளாக மனதில் அசை போட்ட கதை. ‘கவிக்குயில்’ படத்துக்கு அந்த அவகாசம் எல்லாம் இல்லை. அவசரப் படைப்பு. சிவகுமார் - ஸ்ரீதேவி, ரஜினி - படாபட் ஜெயலட்சுமி காம்பினேஷன். மைசூர் தாண்டி, சிக்மகளூரை ஒட்டிய கிராமம் ஒன்றில் ஷூட்டிங்.

சிவகுமார் என்ற நண்பரோடு, ரஜினி என்ற நண்பனையும் அங்கு பெற்றேன். எனக்கும் ரஜினிக்கும் ஒரே  ஓட்டலில் அறை. ‘‘செல்வா, அடுத்து எனக்கு என்ன சீன்? அதை இப்படிப் பண்ணட்டுமா? இப்படிப் பேசினால் நன்றாக இருக்குமா?’’ என்றெல்லாம் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டே இருப்பார். நடிப்பில் அவருக்கு இருந்த ஈடுபாடு இன்னமும் அப்படியே இருக்கிறது... அதைவிடக் கூடியிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்வேன்.

ஷூட்டிங் முடிந்ததும் நானும் ரஜினியும் லுங்கியோடு காலார அந்த ஊர்த் தெருக்களில் நடந்து திரிவோம். அங்கே உள்ள பாரில் ‘அம்ருத்’ என்ற சாராயம் கிடைக்கும். ரஜினி எனக்கு அம்ருத் வாங்கித் தருவார். சினிமா கதைகளைப் பேசிக் கொண்டு திரும்புவோம். ரஜினி ஒரு ஜெம். அந்த ரஜினி மாறவே இல்லை.

அதன் பிறகு அவருக்கு நான் பணியாற்றிய படம், ‘கொடி பறக்குது’. பாரதிராஜா இயக்கம். அந்தப் படத்தில் நான் பணியாற்றினேன் என்பது ஒரு பிரயோகத்துக்காகத்தான்.

அந்தப் படத்துக்கு ரஜினிக்கான கதையை ஓர் இளைஞர் வந்து சொன்னார். ‘பிரதமரின் பாதுகாப்புப் படையில் பணியாற்றுகிறார் ஹீரோ. பிரதமரைத் தீர்த்துக்கட்ட வருகிறாள் ஒரு பெண். அவள் தான் ஹீரோவின் காதலி எனத் தெரியவருகிறது. ஹீரோவுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் துரத்துகிறார்கள். அந்தப் பழியில் இருந்து ஹீரோ எப்படி தப்பிக் கிறார்... எப்படி உண்மையை வெளிக்கொண்டு வருகிறார்’ என்பதுதான் கதை. இப்போது எனக்கு அந்தக் கதை அவ்வளவு தான் நினைவில் இருக்கிறது. அவர் மிகச் சிறப்பாகச் சொன்னார். அந்தக் கதை ரஜினிக்கு மிகவும் பொருந்தும் எனச் சொல்லிவிட்டு, நான் மும்பையில் ஒரு இந்திப் பட கதைவிவாதத்துக்குச் சென்று விட்டேன்.

இதற்கிடையில் பாரதிராஜா அந்தக் கதையை வேறு ஒருவரிடம் சொல்லி கருத்துக் கேட்டிருக்கிறான். அவருக்கு ஏனோ அந்தக் கதை பிடிக்கவில்லை. இதற்குள் ரஜினியின் கால்ஷீட் வந்து விடவே, வேறு வழியில்லாமல் கதையே இல்லாமல், சண்டைக் காட்சிகளாக எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு வாரமாக ரஜினியின் ஃபைட் சீன்களை எடுத்துவிட்டு, அதற்குள் இயக்குநர் மணிவண்ணன் தயார் செய்த ஒரு கதையை வைத்து காட்சிகளையும் எடுக்க ஆரம்
பித்தார்கள். எல்லாம் அவசரக் கோலம்.

மும்பையில் இருந்த எனக்கு போன் போட்டு, ‘‘உடனே சென்னைக்கு வா’ என்றான் பாரதி.

நான் வந்ததும், படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்களை எல்லாம் சொன்னார்கள். இதுவரை எடுத்த படத்தைப் போட்டுக் காட்டும்படி சொல்லி, அதைப் பார்த்து, அதற்கு ஏற்ப ஒரு கதையைச் சொல்லிவிட்டு மீண்டும் மும்பைக்குச் சென்று விட்டேன். படம் முடிந்தது. ஷோ பார்க்க பாரதி அழைத்தான். ரஜினி, பாரதி, கேமராமேன் கண்ணன் ஆகியோரோடு நானும் படத்தைப் பார்த்தேன். படம் முடிந்ததும் என்னிடம் கருத்துக்கேட்டனர். ‘‘ரஜினி சிறப்பாக நடித்திருக்கிறார்... பாரதி சூப்பராக டைரக்‌ஷன் செய்திருக்கிறார். கண்ணன் அருமையாகப் படம் பிடித்திருக்கிறார்... ஆனா, படத்தில கதைன்னு ஒண்ணும் இல்லையே?’’ என்றேன்.

எப்போதும் மனதில் பட்டதை ‘பளார்’ எனச் சொல்வது என் பழக்கம். பாரதி அதிர்ச்சியாகி நின்றான்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


டைபாய்டு வந்தது...
வாழ்க்கையைப் படித்தேன்!


நான் 9-ம் வகுப்பு படித்த போது டைபாய்டு வந்து, நான்கு மாதங்கள் படுத்தபடுக்கையாகிவிட்டேன். `பரீட்சை எழுத அனுமதிக்க முடியாது’ எனக் கூறிவிட்டார்கள். மதுரையில் எஸ்.டி.சி என ஒரு டுட்டோரியல் காலேஜ் உண்டு. அங்கு சேர்ந்து மெட்ரிக் தேர்வு எழுதினேன். ஆந்திர மாநிலம் குண்டூரில் தேர்வு. அந்தப் பாடத் திட்டத்தில் வெளிநாட்டு கிளாசிக் நாவல், நான்டீட்டெய்லாக இருந்தது. நிறவெறியின் அவலத்தைச் சொன்ன ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ அப்படிப் படித்ததுதான். ரொம்ப கஷ்டமான காலகட்டம். அங்கு போய் தேர்வு எழுதுவதற்குப் பணச் சிரமத்தோடுதான் போனேன். அப்படி இருந்தும், இரண்டு மதிப்பெண்களில் ஃபெயில் ஆகிவிட்டேன். பள்ளிப் படிப்புக்கு அத்தோடு முழுக்குப் போட்டுவிட்டு நூலகங்களில் படிக்க ஆரம்பித்தேன். இப்படித்தான் வாழ்க்கையைப் படித்தேன்.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 5

 

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

 

னதில் பட்டதை ‘படார்’ எனச் சொல்வது என் பழக்கம் என்றேன் அல்லவா? அதனால் பல வாய்ப்புகளை இழந்திருக்கிறேன்.

வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த நேரம். கோல்டன் ஸ்டூடியோ முதலாளி என்னைக் கதை கேட்டு அழைத் திருந்தார். லொங்கு லொங்கு என எல்டாம்ஸ் ரோட்டில் இருக்கும் என் வீட்டில் இருந்து  சாலிகிராமத்தில் இருந்த அந்த ஸ்டூடியோவுக்கு நடந்து சென்றேன். வடபழனி வாஹினி ஸ்டூடியோ அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே காரில் வந்த தெலுங்குத் திரையுலகின் மாபெரும் தயாரிப்பாளரான ராமா நாயுடு என்னைப் பார்த்துவிட்டு காரை நிறுத்தி, அவர் தயாரிக்க இருக்கும் ஒரு படத்தின் கதையைக் கேட்க வருமாறு அழைத்தார். மறுக்க முடியுமா? அவருடன் அவருடைய அலுவலகத்துக்குப் போனேன்.

 அவருடைய அலுவலகம்   தி.நகர் போக் ரோட்டில் இருந்தது. அலுவலகம் போனதும் ஒரு கதையைச் சொன்னார்.

p16a.jpg

‘திருமாங்கல்யம்’ படத்தில் முத்துராமன், ஜெயலலிதா

படங்கள் உதவி: ஞானம்

‘தம்பி ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அண்ணனுக்கு அது பிடிக்கவில்லை. அவளுக்கு மயக்கமருந்து கொடுத்து, அவளுடன் மணக்கோலத்தில் இருப்பதுபோல ஒரு போட்டோ எடுத்துவைத்துக்கொண்டு கல்யாணத்தை நிறுத்த சூழ்ச்சி செய்கிறான்’ எனக் கதையைச் சொல்லிக்கொண்டு போனார். தெலுங்கு மொழியின் பிரபல எழுத்தாளர் சுலோச்சனா ராணியின் கதை என்றும் சொன்னார்.

‘எனக்குக் கதை பிடிக்க வில்லை. இந்த மாதிரி கதையில் பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை’ என்று சொல்லி விட்டேன். அவர் மிகப் பெரிய புரொடியூசர்.  நான் அவ்வளவு கறாராகப் பேசியது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவரும், ‘‘சரி போ’’ என ஒரே வரியில் சொல்லிவிட்டார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. வேகமாக அங்கிருந்து கிளம்பிவிட்டேன். போக் ரோட்டில் இருந்து நடையாக நடந்து மீண்டும் சாலிகிராமம் வந்து கோல்டன் ஸ்டூடியோவுக்குப் போனேன். நான் மட்டும் அந்தக் கதைக்கு சம்மதித்திருந்தால், உடனே ஒரு அட்வான்ஸ் கிடைத்திருக்கும். காரிலேயே கோல்டன் ஸ்டூடியோவுக்கு அனுப்பியும் வைத்திருப்பார்கள். என்ன செய்வது... பிடிக்காத கதையில் எப்படிப் பணியாற்ற முடியும்? மனதுக்குப் பட்டால் அவ்வளவுதான். இத்தனைக்கும் அந்தப் படம் தெலுங்கில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் வேறு.

அதைத்தான் ‘திருமாங்கல்யம்’ என தமிழில் தயாரித்தார். அது ஜெயலலிதாவின் 100-வது படம். வின்சென்ட் இயக்கினார். சிவகுமார், முத்துராமன், ஸ்ரீகாந்த், லட்சுமி உள்ளிட்டோர் நடித்தனர். விஜயா கம்பைன்ஸ் பேனரில் பிரமாண்டமாகத் தயாரானது. தமிழில் அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அதன் பிறகு, என்னுடைய கதைத் தேர்வில் அவருக்கு ஒரு நம்பிக்கை இருப்பதாக அவரே சொன்னார்.

எவ்வளவு பெரிய தயாரிப்பாளர், எவ்வளவு புகழ்பெற்ற இயக்குநர் என்பதை எல்லாம் நான் பார்க்கவே மாட்டேன். கதை என் மனதுக்குப் பிடிக்க வேண்டும். நம்முடைய கலாசாரம், தாய்க் குலத்தின் பெருமை ஆகியவற்றுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லைதான். மணிரத்னம், பாரதிராஜா போன்றவர்களிடமும் அப்படி விலகியிருக்கிறேன்.
மணிரத்னம், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தின் கதையைச் சொன்னார்.

10 வயசு சிறுமியின் பிறந்தநாள் அன்று, ‘அவள் தங்களின் குழந்தை இல்லை’ என அந்தப் பெண்ணை வளர்த்தவர்கள் சொல்வதாகச் சொன்னார். எனக்கு அந்தக் கருத்தில் சற்றும் உடன்பாடு இல்லை. ஏன் அந்த உண்மையைச் சொல்ல வேண்டும் எனக் கேட்டேன். ‘நாகரிக உலகில் இதற்கெல்லாம் தேவை இருக்கிறது. வெளிநாடு களில் இப்படி அதிர்ச்சியான கதைகளை உருவாக்குகிறார்கள்’ என்றார்.  ‘‘இல்லை சார். இந்தக் கதையில் பணியாற்ற விருப்பம் இல்லை’’ எனச் சொல்லி விட்டேன். எவ்வளவு வறுமையிலும் நான் பணியாற்றும் கதைகளில் உறுதியாக இருந்திருக்கிறேன்.

p16b.jpg

ஜெயலலிதாவுக்குக் கதை சொன்ன  சம்பவம் நினைவுக்கு வருகிறது. நானும் பாரதியும் போனோம். அந்தப் படம் ஓ.கே. ஆகியிருந்தால் பாரதிராஜா இயக்கிய முதல் படமாக, ஜெயலலிதா நடித்த படம் வரலாற்றில் இடம் பிடித்திருக்கும்.

சூழ்நிலை காரணமாகச் சிறைக்குச் சென்றுவிடுகிறான் கணவன். மனைவி எப்படித் தன் வீட்டைக் காப்பாற்றுகிறாள் என்பதுதான் கதை. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்.

போயஸ் கார்டன் வீட்டில் நானும் பாரதியும் போய் ஜெயலலிதாவுக்கு அந்தக் கதையைச் சொன்னோம். `சொந்த வீடு’ என்று அந்தக் கதைக்குத் தலைப்பு. மேடத்துக்குக் கதை மிகவும் பிடித்து விட்டது. படம் தொடங்கலாம் எனவும் சொல்லிவிட்டார். அதன் பிறகு யாரோ அவருடைய மனதைத் திருப்பி விட்டார்கள். அவரும் படத்தில் நடிப்பதில் இருந்தே விலகிவிட்டார்.

அதுதான் பின்னர் பாரதிராஜா இயக்கத்தில், ரேவதி நடிப்பில் ‘புதுமைப் பெண்’ என வெளியானது.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


p16c.jpg

அண்ணன் கலைஞர்!

சனம் எழுதினால் கலைஞரைப் போல எழுத வேண்டும் என்பதில் ‘பராசக்தி’, ‘மனோகரா’ காலத்திலேயே தீர்மானமாக இருந்தேன். 1974-ல் கலைஞரை முதன்முதலாகச் சந்தித்தபோது அவருடைய வசனங்கள் என்னை எப்படி பாதித்தன என்பதைச் சொன்னேன். அவருடைய காலம், வசனப்புரட்சியின் காலம். எல்லா கல்யாண வீடுகளிலும் அவருடைய ‘பராசக்தி’, ‘மனோகரா’ வசன ரெக்கார்டைப் போடுவார்கள். கல்யாண வீடுகளில் போய் நின்று கேட்பேன். இதை எல்லாம் கலைஞரிடம் சொன்னேன். அப்போது, `அண்ணே’ என்றே அழைத்தேன். அப்போது ஒருவர், ‘முதல்வரை அப்படி எல்லாம் அழைக்கக் கூடாது. அய்யா என அழையுங்கள்’ என்றார். கலைஞர் அவரைத் தடுத்து, ‘‘அவர் அண்ணேன்னு கூப்பிடுவது நல்லா இருக்கு. அப்படியே கூப்பிடட்டும்’’ என்று சொன்னார்.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 6 - ஸ்ரீதேவியோடு ஜோடி சேராத சத்யராஜ்!

 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

 

த்திரிகை நண்பர்கள் பலர் எனக்கு நல்ல பழக்கம். பத்திரிகையாளராகவும் பி.ஆர்.ஓ-வாகவும் இருந்த சித்ரா லட்சுமணன், அந்த நண்பர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பவர். சென்னை வந்த புதிதில் பாரதிராஜாவிடம் சண்டை போட்டு பிரிந்திருந்ததாகச் சொன்னேனே... அந்தச் சண்டையை சரி செய்து, மீண்டும் எங்களை சேர்த்துவைத்தவர் அவர்தான். பாரதிராஜா தனியாகப் படம் இயக்கும் முயற்சியில் இருந்த நேரத்தில், ‘‘செல்வராஜும் கதை விவாதத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்’’ என பாரதியிடம் எடுத்துச் சொல்லி, என்னை அழைத்துச் சென்றவர் அவர்தான். ‘16 வயதினிலே’ தொடங்கி பாரதிராஜாவின் அத்தனை திரைக்கதை விவாதங்களிலும் நான் இடம்பெற்று வருவதற்கு, அன்று அவர் எடுத்த முயற்சியே காரணம்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பத்திரிகை நண்பர்களில், ‘பேசும் படம்’ ஆசிரியர் குழுவினரைத் தவிர்க்க முடியாது. வாய்ப்புகள் தேடி கோடம்பாக்கத்தைக் கடக்கும்போதெல்லாம், அந்த அலுவலகத்துக்கும் ஒரு விசிட் அடித்துவிடுவேன். அங்கே எம்.ஜி.வல்லபன், ‘ஒருவிரல்’ கிருஷ்ணா ராவ், சம்பத்குமார் போன்றவர்கள் இருப்பார்கள். ‘ஒருவிரல்’ கிருஷ்ணா ராவ்  சினிமாக்களில் நடித்துக் கொண்டே, அந்தப் பத்திரிகையில் போட்டோகிராபராகவும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

p26.jpg

ஒரு சமயம் கிருஷ்ணா ராவைப் பார்த்த இயக்குநர் கே.பாலசந்தர், ‘‘செல்வராஜை நாளை காலை ஆறு மணிக்குக் கதை சொல்ல வரச் சொல்லுங்கள்’’ என தகவல் தந்திருக்கிறார். எவ்வளவு பெரிய வாய்ப்பு! இதைத் தன் நண்பன் தவிர்த்துவிடக் கூடாது என என்னைத் தேடி அலைந்தார் கிருஷ்ணா ராவ். என் வீடு குரோம்பேட்டையில் இருக்கிறது என்பது மட்டும்தான் அவருக்குத் தெரியும். நான் திருமணம் செய்து முதன்முதலாகக் குடியேறிய இடம் அது. அதன் பிறகுதான் எல்டாம்ஸ் ரோட்டுக்கு வந்தேன். குரோம்பேட்டைக்கு வந்த அவர், என்னைத் தேடி எங்கெங்கோ போயிருக்கிறார். நான், என்.சங்கரய்யாவின் உறவினர் என்பது நினைவுக்கு வந்து, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார். அங்கு என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார். அங்கிருந்தவர்கள், ‘சினிமா கதை எல்லாம் எழுதுவாரே அவரா?’ என்று கேட்டு, குத்துமதிப்பாக வழியைச் சொல்லி அனுப்ப... படாதபாடுபட்டு என் வீட்டைக் கண்டுபிடித்து வந்தார். எத்தனை பெரிய மனம்? யாராவது அட்ரஸ் தெரியாதபோதும், ராத்திரி நேரத்தில் இப்படி அலைந்து திரிந்து தகவல் சொல்வார்களா?

நான் அப்போது வீட்டில் இல்லை. ‘காலை 6 மணிக்கு பாலசந்தர் கதை சொல்ல வரச் சொன்னார்.’ இதுதான் அவர் சொல்லிவிட்டுச் சென்ற தகவல். இரவு 11 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன். பாலசந்தர் அழைத்திருக்கிறார் என்றதும் இரவெல்லாம் தூக்கமே இல்லை. ‘என்ன கதை சொல்லலாம்... எப்படி சொல்லலாம்’ என மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. இன்னொரு கஷ்டம்... ரயில் பயணம் செய்வதற்கான என்னுடைய சீஸன் டிக்கெட் அன்று இரவோடு முடிந்துவிட்டது. மறுநாள் காலையில் காசு கொடுத்துத்தான் பயணிக்க வேண்டும். கையில் 35 காசுதான் இருந்தது. முதல் வண்டியைப் பிடித்து, சைதாப்பேட்டை வந்து இறங்கினேன். டிக்கெட்டுக்கு 35 பைசா சரியாகிவிட்டது. மயிலாப்பூர் வாரன் ரோட்டை நோக்கி நடந்தேன். இன்னும் பொழுது விடியவில்லை. முன்னரே போய் காத்திருந்து, சரியாக 6 மணிக்கு அவர் வீட்டுக் கதவைத் தட்ட வேண்டும் என வேகமாக நடந்தேன். போட்டிருந்த ரப்பர் செருப்பு, ‘கழுத்தறுத்தது’. கழற்றி ஓரமாகப் போட்டுவிட்டு வெறும் காலுடன் நடை. அவர் வீட்டு கேட்டைத் திறந்தேன். உள்ளே இருந்து, ‘‘செல்வராஜ்?’’ என கே.பி-யின் குரல்.

பாலசந்தரின் கதைகளில் எப்போதும் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். நான், ‘அஜிதா’ என்ற கதையைச் சொன்னேன். ‘திருமணச் சந்தையிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் ஆண்களால் துரத்தப்படும் ஒரு பெண், ஆயுதம் ஏந்தி எப்படி அவர்களை எதிர்கொள்கிறாள்’ என்பதுதான் கதை. அவருக்குப் பிடித்திருந்தது.

‘‘தயாரிப்பாளர் அரங்கண்ணலுக்கு இந்தக் கதையைச் சொல்லிவிடுங்கள். மாலை ஆறு மணிக்கு வரச் சொல்லியிருக்கிறார்’’ என்றார். வாசல் வரை வந்து வழி அனுப்பினார். அப்போதுதான் செருப்பு போடவில்லை என்பதைக் கவனித்தார். ‘‘என்னாச்சு?’’ என்றார். சொன்னேன். என்னை யோசனையோடு பார்த்துவிட்டு, ‘‘கஷ்டத்தைப் பார்த்து பயந்துடாதீங்க’’ என்றார்.

நாள்முழுக்க சாப்பிடாமலேயே நாகேஸ்வர ராவ் பார்க்கில் படுத்திருந்தேன். ஆறு மணிக்கு அரங்கண்ணலைப் பார்த்தேன். ‘‘பாலசந்தர் பிரமாதமான கதைன்னு சொன்னார்’’ என்றபடி வரவேற்றார். அவருக்கும் கதை பிடித்துவிட்டது. ஒரு கவரில் உடனே அட்வான்ஸ் போட்டு கையில் கொடுத்தார். எதனாலோ அந்தப் படம் எடுக்கப்படவில்லை. ஆனால், கே.பி.-க்கு கதை சொல்லப் போன அனுபவம் மட்டும் என்றைக்கும் மறக்காது. கூடவே, கிருஷ்ணா ராவின் உதவியும்.

என்னுடைய 230 திரைக்கதைகள் சினிமாவாகியுள்ளன. சினிமாவாக மலராத கதைகள் ஏராளம். சத்யராஜ், ஸ்ரீதேவி ஜோடி சேர்ந்து நடிப்பதாக இருந்த ‘பங்காரு நாயக்கர்’ கதையும் அதில் ஒன்று. ‘கடலோரக் கவிதைகள்’ முடிந்த கையோடு அந்தக் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தோம். ‘ராஜ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ ராமனாதன் தயாரிப்பதாக இருந்தார். அருமையான மனிதர் அவர். அந்தப் படத்தின் கதை விவாதத்துக்காக கொடைக்கானலில் ரூம் போட்டிருந்தார். காலையில் மலைப்பாதையில் சுற்றி வருவேன். ஒருநாள் அப்படி நடந்துகொண்டிருந்தபோது மார்பில் லேசான வலி. சில நாட்களுக்கு முன்புதான் மலைப்பாதையில் ஜாக்கிங் போகும்போது நடிகர் முத்துராமன் இறந்துபோனார். அந்த நினைவு வேறு அச்சுறுத்த ஆரம்பித்தது. தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. எப்படியோ ஓட்டலுக்கு நடந்துவந்து, ராமனாதனுக்கு போன் போட்டேன். மனிதர் பதறிப்போய்விட்டார்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


p26a.jpg

சங்கப் பலகை!

துரை மேலக்கோயில் பின்புறம் அ.கி.பரந்தாமனார், இலக்குவனார், இளங்குமரன் போன்ற மாபெரும் தமிழ் அறிஞர்கள் இலவசமாகத் தமிழ் இலக்கியம் சொல்லித் தருவார்கள். எனக்குக் கம்ப ராமாயணம் பிடிக்கும். இன்னமும் பல பாடல்கள் நினைவு இருக்கின்றன. ‘நளவெண்பா’, ‘சீவக சிந்தாமணி’ எல்லாம் அங்குதான் பயின்றேன். என் பதின்ம வயதின் மாலை நேரங்கள் அங்குதான் கழிந்தன.

மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்தில் இலக்கியங்களைச் சங்கப்பலகையில் ஏற்றி, அது தண்ணீரில் மூழ்காமல் மிதந்து வந்தால்தான் புலவர்களை ஏற்பார்கள் என்று ஒரு கதை சொன்னார்கள். நான் எழுதியதையும் அப்படிச் சோதித்துப் பார்க்க நினைத்தேன். மந்தாரை இலையின் ஒரு மூலையில் நூலைக்கட்டி வைத்துவிட்டு அதன் மீது என் கதையின் பிரதியை வைத்தேன். நண்பர்கள் வந்த பின்பு, நீருக்குள் இறங்கி நூலைப் பிடித்து இழுத்தேன். ‘‘டேய், சங்கப் பலகை ஏத்துக்கிச்சுடா’’ என நண்பர்கள் உற்சாகமாகக் கத்த, எனக்கு சந்தோஷம்.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 7 - பங்காரு நாயக்கராக ரஜினி!

 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

 

p8c.jpgகொடைக்கானலுக்கு ‘பங்காரு நாயக்கர்’ கதை விவாதத்துக்கு வந்த நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே என்ற கவலை ராமனாதனுக்கு. உடனே முதல்கட்ட சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அருமையான காரை அனுப்பி, ரயில் நிலையம் அழைத்து வந்தார்கள். என்னை பூ போல சென்னை கொண்டு வந்து சேர்த்தார்கள். சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு. ராமனாதனை அழைத்து, ‘‘உடனே கதை கேட்க ஏற்பாடு செய்யுங்கள். சிகிச்சையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்... அதனால் கதையைக் கேட்டுவிடுங்கள்’’ என்றேன். இயக்குநர், உதவி இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லோரையும் அழைக்கச் சொல்லிவிட்டேன். இன்னொரு முறை கதை சொல்வதற்கு வாய்ப்பு இருக்குமா என்பது தெரியாது இல்லையா?

வந்தார்கள். யாருக்கும் மனதே சரியில்லை. ‘‘பரவாயில்லை சார்... சிகிச்சை முடிந்ததும் கதையைப் பார்த்துக் கொள்ளலாம்’’ என்றார்கள். நான் விடுவதாக இல்லை. பெரும் தொகையை அட்வான்ஸாகக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு மனவருத்தம் மட்டுமே மிஞ்சிவிடக்கூடாது என்ற எண்ணம் எனக்கு. கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். எல்லாரும் என் எதிரே அமர்ந்து கதை கேட்கிறார்கள். ஊசி விழுந்தாலும் கேட்கும் அமைதி. கதை கேட்பவர்களின் முகங்களில் அவ்வப்போது உணர்ச்சிக் கொந்தளிப்புகள். சில நேரம் கண்ணீர் திரண்டு விழுகிறது.

கதை சொல்லி முடித்ததும் பாரதிராஜா கட்டித் தழுவிக் கொண்டான். ராமனாதன் முகத்தில் பெரும் திருப்தி. விஜயநகரப் பேரரசு காலத்தில், ஆந்திராவில் இருந்து வந்து தமிழகத்தில் குடியேறிய மக்களின் கதை அது. ‘‘தமிழ் சினிமா, இனி பங்காரு நாயக்கருக்கு முன், பங்காரு நாயக்கருக்குப் பின் எனப் பிரிக்கப்படும்’’ என்று சிலாகித்தான் பாரதி.

p8.jpg

‘‘இந்தச் சந்தோஷமான நேரத்தில் கொஞ்சம் தண்ணி போடுவோமா?’’ என்கிறேன் நான். ‘‘ஆபரேஷனை வைத்துக் கொண்டா?’’ என பாரதி அதிர்கிறான். ‘‘ஆபரேஷனாவது மண்ணாங்கட்டியாவது... இதைவிட மகிழ்ச்சியான நாள் இல்லை. இதைக் கொண்டாடா விட்டால் எப்படி?’’ என்று ஒரே போடாகப் போட்டேன்.

சில நாட்கள் கழித்து தயாரிப்பாளர் ராமனாதன் என் வீட்டுக்கு வந்தார். ‘‘கொஞ்சம் என்னுடன் வர முடியுமா?” என்றார் தயங்கியபடி.

அவருடன் கிளம்பிச் சென்றேன். அவருடைய கார், லஸ் அருகே ஒரு ஆஞ்சநேயர் கோயிலில் போய் நின்றது. சாமி கும்பிட்டார். தட்சணைத் தட்டில் ஒரு சாவியை வைத்து தீபாராதனை செய்தார். அந்தச் சாவியை எடுத்து என்னிடம் கொடுத்தார்.

‘‘என்ன சார் இது?’’ ஆச்சர்யத்துடன் கேட்டேன். வாசலுக்கு அழைத்துவந்தார். அங்கே புத்தம் புதிய மாருதி கார் நின்றிருந்தது.

‘‘கதை எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு.’’

ராமனாதன் சொல்ல மாட்டார்; செயலில் காட்டுவார். எடுக்காத படத்துக்கு சம்பளமும் கொடுத்து, காரும் பரிசளித்தது அவருடைய பெருந்தன்மை.

பல்வேறு காரணங்களால் அந்தப் படம் தள்ளிப்போனது. சத்யராஜ் கால்ஷீட் இருக்கும் போது, ஸ்ரீதேவி கால்ஷீட் கிடைக்காது. இவர்கள் கால்ஷீட் இருக்கும்போது பாரதிராஜா வேறு ஒரு படத்தில் பிஸியாக இருப்பார். இப்படியே நாட்கள் ஓடின. படம் தள்ளிப்போனது; ஒரு கட்டத்தில் நின்றும் போனது.

பிறகொரு நாள், மேனா தியேட்டரில் ராமனாதன் நின்றுகொண்டிருந்தார். அவரிடம் கார் இல்லை. வேறு நண்பரின் காரில் செல்வதற்காகக் காத்திருந்தார். எனக்கு மனசு கேட்கவில்லை. அவர் கொடுத்த காரில் நான் பயணித்துக் கொண்டிருப்பது கஷ்டமாக இருந்தது. ‘‘இந்தக் காரை எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்றேன். ‘‘அதெல்லாம் பேசாதீங்க. அது உங்க கதைக்கு நான் செய்த கௌரவம். அது அப்படியே இருக்கட்டும்’’ எனச் சொல்லிவிட்டார். தந்தால் வாங்கிக்கொள்ள மாட்டார் எனத் தெரிந்தது. அந்தக் காரைப் பயன்படுத்த விருப்பமில்லை. உடனே நானும் அதை விற்றுவிட்டேன்.

அன்றைய ஆட்சியாளர் களால் ஆந்திரத்தில் இருந்து விரட்டப்பட்ட மக்கள், ஆறு, மலை, காடு கடந்து தெற்கு நோக்கி வருகிறார்கள். அந்த மக்கள் கூட்டத்தின் ஒரு குழுவில் இரண்டு அழகான பெண்கள் இருக்கிறார்கள். விரட்டி வந்த காவலர்களுக்கு, அந்தப் பெண்களைத் தூக்கிச் சென்றுவிட திட்டம். மக்கள் எப்படி எப்படியோ காப்பாற்றிக் கூட்டி வருகிறார்கள். ஒரு கட்டத்தில், காவலர்கள் அந்த மக்கள் கூட்டத்தைச் சுற்றி வளைத்துவிடுகிறார்கள். பெண்கள் இருவரையும் ஒரு வைக்கோல் போரில் மறைத்து வைக்கிறார்கள். காவலர்களுக்குச் சந்தேகம் வந்து வைக்கோல் போரைப் பிரித்துப் பார்த்துவிட்டால் என்ன ஆவது? தாங்கள் சீரழிக்கப்படுவதைவிட அந்த வைக்கோல் போரிலேயே தங்களைக் கொளுத்திவிடுமாறு அந்தப் பெண்கள் சொல்கிறார்கள். வேறு வழியே இல்லை.

அந்தக் கூட்டத்தில் இருக்கும் பாட்டி ஒருத்தி, அந்தக் காவலர்களிடம், ‘‘இந்த இருட்டில் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், இந்த வைக்கோல் போரைக் கொளுத்தித் தேடிப் பாருங்கள்’’ என்கிறாள். காவலர்கள் வைக்கோல் போரைக் கொளுத்தி அந்த வெளிச்சத்தில் தேடிப் பார்த்துவிட்டு, ‘இல்லை’ எனப் போய்விடுகிறார்கள். பெண்கள் இருவரின் சாம்பல் மட்டுமே எஞ்சுகிறது. அவர்கள் இறந்த இடத்தில் இருந்து, அந்த மக்கள் ஒரு பிடிமண்ணை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்கள். அவர்கள் வீடு கட்டும் மண்ணோடு அதையும் கலந்து கட்டுகிறார்கள். புதிதாக வீடு கட்டுபவர்கள், ஏற்கெனவே அப்படிக் கட்டப்பட்ட வீட்டின் அடி மண்ணை எடுத்துவந்து தங்கள் வீட்டு மண்ணோடு கலந்தபின்னரே வீடு கட்டுவது வழக்கம் ஆனது. மானம் காக்க உயிரைவிட்ட அந்தப் பெண்களைக் குலதெய்வமாக வழிபடும் ஒரு மக்கள் குழுவின் கதைதான் ‘பங்காரு நாயக்கர்’. இது பங்காரு நாயக்கர் கதையின் முன்கதைச் சுருக்கம் மட்டுமே!

இவ்வளவு நாட்கள் கழித்து, அந்தக் கதையைக் கேள்விப்பட்டு அந்த ஸ்கிரிப்ட்டை இப்போது லிங்குசாமி வாங்கிச் சென்றிருக்கிறார். அந்தக் கதை படமாக வந்தால் பிரமாண்டமான ஒரு காவியமாகத் தமிழ் சினிமாவில் என்றும் இருக்கும். அதில் முன்னரே பேசியபடி சத்யராஜ் நடிக்கலாம். ராஜ்கிரண் நடித்தால் நன்றாக இருக்கும். ரஜினி நடித்தால் ஓஹோ! லிங்குசாமியிடம் சொன்னேன். லிங்குசாமிதான் முடிவு சொல்ல வேண்டும். ‘‘கதைக்குச் சொந்தக்காரரான ராமனாதனை மறந்துவிடாதீர்கள்’’ என்பதையும் மறக்காமல் சொன்னேன். பார்க்கலாம்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


p8d.jpg

ராஜாவின் சாமர்த்தியம்!

ன் மாமா சௌந்தரராஜன், இந்தியன் வங்கியில் வேலை பார்த்தார். தினமும் சைக்கிளில் வேலைக்குப் போய்விட்டு வீட்டுக்கு வருவார். அப்போது சைக்கிள் எல்லாம் காணக்கிடைக்காத அரிய பொருளாக இருந்தது. அவர் சைக்கிளைப் பூட்டிவிட்டு வீட்டுக்குள் போனதும், இரவில் மாற்று சாவி போட்டுத் திறந்து எடுத்துக்கொண்டு, வைகை ஆற்றுக்கு வந்துவிடுவேன். அங்குதான் சைக்கிள் கற்கும் பயிற்சி. என் பின்னால் ஆறேழு நண்பர்கள் சைக்கிளைப் பிடித்துக் கொள்ள, இரவெல்லாம் ஓட்டிவிட்டு, சைக்கிளை பழையபடி நிறுத்திவிட்டுப் போய்விடுவோம். ‘ஓரம்போ... ஓரம்போ...’ பாட்டு, அதில் இருந்து பிறந்ததுதான். ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ என் முதல் படம். தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் பாடப்பட்ட பாட்டு. என்றோ விளையாட்டாகப் பாடி மகிழ்ந்ததை, நாடே பாடுகிற பாட்டாக மாற்றிக் காட்டியது ராஜாவின் சாமர்த்தியம்.

http://www.vikatan.com/juniorvikatan/

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 8 - பாதி சாப்பாட்டில் எழுந்த விஜயகாந்த்!

 
 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

 

துரையில்,  எங்கள் வீட்டின் அருகேதான் ராஜாஜி பொது மருத்துவமனை. அந்த மருத்துவமனையின் சுற்றுச் சுவரில் ஒரு பெரிய ஓட்டை இருக்கும். சொந்தக்காரர்கள் யாராவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அந்த ஓட்டை வழியாகத்தான் குரல் கொடுப்பார்கள். ‘‘கொஞ்சம் காப்பித் தண்ணி கொடுத்தனுப்புமா’’, கொஞ்சம் சுடுதண்ணி கொடுத்தனுப்புமா’’ என அம்மாவிடம் சொல்வார்கள். நான் அந்த ஓட்டை வழியாகவே உள்ளே தாவிக்குதித்து கொண்டுபோய் கொடுத்துவிட்டு வருவேன்.

அந்த அனுபவங்கள்தான் நான் இயக்கிய ‘அகல்விளக்கு’ படத்தில் பயன்பட்டன. அதில் வரும் மருத்துவமனைக் காட்சிகளில், ஷோபா ரகசியமாக நோயாளிகளுக்கு இட்லி விற்பார். மருத்துவமனையில் உணவு விற்பனை செய்வது குற்றம். ஷோபா ஒரு சின்னப் பையில் இட்லி பொட்டலங்களை வைத்துக்கொண்டு ‘‘ரெண்டு இட்லி அஞ்சு ரூபா... நாலு இட்லி பத்து ரூபா’’ என முணுமுணுத்தபடியே போய்க்கொண்டிருப்பார். தேவைப்படும் நோயாளிகள் இட்லி வாங்கிக்கொள்வார்கள். மதுரை மருத்துவமனை அனுபவத்தில் உருவாக்கிய காட்சிதான் அது.

p26a.jpg

விஜயகாந்தின் முதல் படம் ‘தூரத்து இடி முழக்கம்’ என்றாலும், நான் எடுத்த ‘அகல்விளக்கு’ என்ற படம்தான் அவர் நடித்து முதலில் வெளியானது. விஜயகாந்தின் இயற்பெயர் விஜய்ராஜ். அவருடைய அண்ணன் செல்வராஜ். அவர் என்னுடன் படித்தவர். சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த விஜியை ஏதாவது படத்தில் பயன்படுத்திக்கொள்ளுமாறு சொல்லியிருந்தார். ‘அகல்விளக்கு’ படத்தில் விஜிதான் ஹீரோ என முடிவுசெய்துவிட்டேன். படத்தின் தயாரிப்பாளருக்கோ, அப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த  ‘ரயில் பயணங்களில்’ படத்தில் நடித்த ரவீந்திரனை கதாநாயகனாகப் போட வேண்டும் என்று விருப்பம்.

மதுரையில் முதல்நாள் படப்பிடிப்பு. நல்ல நேரம் என்று மத்தியானம் 12.30 மணியைக் குறித்துக்கொடுத்திருந்தார்கள். காலையிலேயே வந்துவிடுவதாகச் சொன்ன ஷோபா, 12 மணி ஆகியும் வரவே இல்லை. தயாரிப்பாளர் உற்சாகமாகிவிட்டார். அப்படியே ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு, இன்னொரு நாள் ரவீந்திரனை வைத்துப் படப்பிடிப்பை ஆரம்பித்து விடுவதாகத் திட்டம் போட்டிருந்தார் அவர்.

நான், ‘‘ஷோபா வரட்டும். அதற்குள் எல்லோரும் மதிய சாப்பாட்டை முடித்துவிடுங்கள்’’ என அனுப்பிவைத்தேன். எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஷோபா வந்துவிட்டார். சென்னையில் இருந்து காரில் பயணம். ‘‘சாரி சார். திருச்சியில பெரிய ட்ராஃபிக் ஜாம்’’ என்றார்.

தயாரிப்பாளர், ‘‘நல்ல நேரம் முடிவதற்குள் ஷோபாவை வைத்து ஒரே ஒரு ஷாட் எடுத்து விடுங்கள்’’ என்றார். அப்போதும் அவருக்கு ஷோபா காட்சியை மட்டும் எடுத்துவிட்டு, விஜியை கழற்றிவிடுவதுதான் திட்டம். நான் விடுவதாக இல்லை. சாப்பிட்டுக்கொண்டிருந்த விஜியை உடனே அழைத்துவரச் சொன்னேன். அவரும் பாதி சாப்பாட்டில் எழுந்து, அப்படியே கையைக் கழுவிக்கொண்டு ஓடிவந்தார். அதில் விஜயகாந்த்துக்கு ஒரு நல்ல அரசியல் தலைவரின் வேடம். அந்தப் படம் ஓடவில்லை என்றாலும், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க ‘அகல்விளக்கு’ படம்தான் காரணம்.

அந்த நேரத்தில் விஜயகாந்தின் நண்பர், இப்ராகிம் ராவுத்தர் ஒரு பத்திரிகையில் இப்படிச் சொல்லியிருந்தார். ‘‘விஜயகாந்த் நடிக்க வந்த புதிதில் மிகவும் சிரமப்பட்டார். பாதி சாப்பாட்டில் எல்லாம் எழுப்பி நடிக்கக் கூப்பிடுவார்கள்.’’ எனக்கு அதிர்ச்சி. விஜிக்கு போன் போட்டு, ‘‘என்ன இப்படி சொல்லியிருக்கிறார்’’ என்றேன். ‘‘அண்ணே, அவனை உடனே உங்ககிட்ட பேசச் சொல்றேன்’’ என்றார். சில மணி நேரத்திலேயே இப்ராகிம் ராவுத்தர் லைனில் வந்தார். ‘‘அன்று என்ன நடந்தது என்று உனக்குத் தெரியுமா?’’ என விளக்கினேன். ‘‘இவ்வளவு நடந்திருக்கு... எனக்குத் தெரியாமப் போச்சுண்ணே... சாரிண்ணே... தெரியாம சொல்லிட்டேன்’’ என்றார்.

பிரபலங்களுக்கு ஆதரவாக யாராவது எதையாவது சொல்லப் போய், அது எங்கே போய் முடியும் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.

விஜயகாந்துடன் அடுத்து நான் பணியாற்றிய படம், ‘சின்னக் கவுண்டர்’. ஆனந்தி ஃபிலிம்ஸ் நடராஜன் எடுத்த படம். அந்தப் படத்தின் கதை விவாதத்துக்காக, அதன் படப்பிடிப்பு முடிகிற வரை உட்லண்ட்ஸில் எனக்கு ஒரு அறை போட்டு வைத்திருந்தார் நடராஜன். கதையின் மீது அதீத கவனம் செலுத்தும் அற்புதமான தயாரிப்பாளர்களில் ஒருவர் அவர்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதும் அதே போல ஒரு சிக்கல். யாரோ, விஜயகாந்தின் மனதைக் கலைத்துவிட்டார்கள். படத்தின் காட்சிகள் எல்லாம் ஹீரோயினைச் சுற்றியே போய்க்கொண்டிருப்பதாகவும், விஜயகாந்துக்கு முக்கியத்துவம் குறைவாக இருப்பதாகவும் சொல்லிவிட்டார்கள். பொள்ளாச்சி ஷூட்டிங்கில் இருந்து நடராஜன் போன் செய்தார். ‘‘அண்ணே, கொஞ்சம் வந்துட்டுப்போங்க. இங்க இப்படி ஒரு ப்ராப்ளம் ஓடிக்கிட்டு இருக்கு’’ என்றார்.

p26.jpg

நான் மைசூரில், ஒரு கன்னடப் பட ஷூட்டிங்கில் இருந்தேன். கன்னடத் தயாரிப்பாளரிடம் விஷயத்தைச் சொல்லி, கார் எடுத்துக்கொண்டு பெங்களூர் வந்து, காரை அங்கேயே நிறுத்திவைக்குமாறு சொல்லிவிட்டு, அங்கிருந்து கோயமுத்தூருக்கு ஃப்ளைட் பிடித்தேன். கோயமுத்தூர் ஏர்போர்ட்டில் நடராஜன் காத்திருந்தார். அவருடைய காரில் பொள்ளாச்சியில் ஷூட்டிங் ஸ்பாட்டில் போய் இறங்கினேன்.

விஜயகாந்துக்கு என் மீது எப்போதும் நல்ல மரியாதை. ‘‘என்னண்ணே திடீர்னு?’’ என்றார்.

லஞ்ச் டயம். மெல்ல பேச்சுக்கொடுத்து, ‘‘ ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ யார் நடித்த படம்?’’ என்றேன்.

‘‘எம்.ஜி.ஆர் படம்... என்னண்ணே தெரியாத மாதிரி கேக்கறீங்க?”

‘‘இல்ல... அது, பானுமதி படம்.’’

‘‘பானுமதி படம்னு எப்படிண்ணே சொல்ல முடியும்? எம்.ஜி.ஆர் படம்தாண்ணே!’’

‘‘இல்லப்பா... அந்தப் படத்தில் பானுமதி 23 சீன்ல வர்றாங்க. எம்.ஜி.ஆர் 18 சீன்லதான் வர்றாரு.’’

விஜிக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் எனப் புரிந்துவிட்டது. அதன்பிறகு ‘சின்னக் கவுண்டரி’ல் விஜிக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விளக்கினேன். விஜி ஹேப்பி.

மறுபடி கார் எடுத்துக்கொண்டு கோயமுத்தூர் வந்து, பெங்களூர் ஃப்ளைட் பிடித்து, அங்கு நிறுத்தியிருந்த காரை எடுத்துக்கொண்டு மைசூர் வந்து சேர்ந்தேன். கூட இருப்பவர்கள் என ஒரு கோஷ்டி சினிமாவில் உண்டு. எல்லா இடங்களிலும் உண்டு என்பது வேறு விஷயம். யாரையோ குஷிப்படுத்த எதையோ சொல்லப் போய், அது விபரீதமாக முடியும். அவர்கள் படுத்துகிறபாடு எப்படி எல்லாம் இருக்கும் என்பதற்காகச் சொன்னேன்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


டீச்சர் கதைகள்!

நான் படித்த காலத்தில் பள்ளியில் இந்தி வகுப்பு ஏற்படுத்தப்பட்டது. எங்களுக்கோ இந்தி வகுப்பு என்றால் எட்டிக் கசப்பு. அந்த வயதுக்கே உரிய குறும்புகளும் இருந்தன. இந்தி டீச்சர் பாடம் நடத்தும்போது, அவருடைய சேலை விலகி, இடுப்பு தெரிந்தது. போர்டில் ஏதோ எழுதிவிட்டு, ‘‘செல்வராஜ், தெரியுதா?’’ என்றார். ‘‘நல்லா தெரியுது’’ என்றேன். பையன்கள் எல்லோரும் சிரித்துவிட்டார்கள். டீச்சருக்குப் புரிந்துவிட்டது. ஆனாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல், ‘‘சரி, உட்கார்’’ என நாசூக்காக முந்தானையைச் சரி செய்தபடி மேற்கொண்டு பாடம் நடத்த ஆரம்பித்தார். அந்த டீச்சர் என்னை ஒன்றுமே சொல்லவில்லை. அடுத்த கணமே எனக்குக் குற்ற உணர்ச்சியாகிவிட்டது. என்னுடைய பெரும்பான்மையான கதைகளில் எப்போதும் ஒரு டீச்சர் கேரக்டர் வரும். அவர்களைப் பெருமைப்படுத்துவதாகவும் அது இருக்கும். ‘அன்னக்கிளி’, ‘புதிய வார்ப்புகள்’, ‘கடலோரக் கவிதைகள்’ எனப் பல படங்களை உதாரணம் சொல்லலாம்.

http://www.vikatan.com/juniorvikatan/

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 9 - கதைக்குக் கலாய் பூசுகிற வேலை!

 

p18b.jpgபாவலர் குடும்பத்தில் கங்கை அமரன் ஒரு தனி ரகம் என்று சொல்வேன். கலகலப்புதான் அமருடைய இயல்பு. எந்த சோகமான காலகட்டத்தையும் ஜஸ்ட் லைக் தட் ஊதித் தள்ளிவிடுவான். எதையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடிய பக்குவம் உள்ளவன்.

பாஸ்கர், இளையராஜா, அமரன் மூவரும் சென்னை வந்து ‘பாவலர் இசைக்குழு’ என்று ஆரம்பித்த காலம். அப்போது அவர்கள் இசை நிகழ்ச்சிகள் சில நடத்தி வந்தனர். அப்போதெல்லாம் போஸஸ் - தேவா இசைக்குழு சென்னையில் பிரபலம். இசையமைப்பாளர்கள் சந்திரபோஸும் தேவாவும் சினிமாவில் பிரபலம் அடைவதற்கு முன்பாக இணைந்து நடத்திய இசைக்குழு அது. அந்தக் காலத்தில் எல்லா பிரபலங்களும் போஸஸ் - தேவா இசைக்குழுவின் கச்சேரி வைத்து கல்யாணம் நடத்துவதை ஒரு பெருமையாக நினைப்பார்கள்.
 
புதிதாக வந்த பாவலர் குழுவுக்கு அவ்வளவாக வாய்ப்புகள் இல்லை. ஆர்கெஸ்ட்ராவும் பிரமாண்டமாக இருக்காது. தபேலா, ஆர்மோனியம், கிடார்... அவ்வளவுதான். ரிக்‌ஷா வைத்து எடுத்துச் செல்ல வேண்டுமானால் ரிக்‌ஷாக்காரர் 50 பைசா கேட்பார் என்பதால், சில நேரம் அவர்களே ஆளுக்கொரு இன்ஸ்ட்ரூமென்டைத் தூக்கிச் சென்று கச்சேரி செய்வார்கள். 

ஒரு நாள் அமர் என்னைத் தேடி வந்தான். ‘‘அரிசி வாங்க காசு வேண்டும்’’ என்றான்.

அப்போது நான் ஒன்றும் வசதியானவன் இல்லை. கதைகளுக்குக் கலாய் பூசுகிற வேலைதான் செய்துவந்தேன். கதை தயார் செய்கிறவர்கள், தங்கள் கதையை சினிமாவுக்கு ஏற்றமாதிரி ஒழுங்குபடுத்த என்னைக் கூப்பிடுவார்கள். கதையைக் கொஞ்சம் ரிப்பேர் செய்து தர வேண்டும். அதைத்தான் ‘கலாய் பூசுகிற வேலை’ என்போம். ஒரு கதைக்குக் கலாய் பூசிக் கொடுத்தால் 100 ரூபாயோ, 200 ரூபாயோ தேறும். ரெகுலராகக் கிடைக்கிற வேலை இல்லை. சில மாதம் கிடைக்கும்... சில மாதம் உதைக்கும்.

p18a.jpg

அந்த மாதிரி ஒரு உதைக்கிற நேரத்தில்தான் அமர் வந்து உதவி கேட்டான். நான் எழுதிவைத்த கதை ஃபைல்கள் ஒரு ஓரமாக இருந்தன. ‘‘இதையெல்லாம் வேண்டுமானால் எடைக்குப் போட்டு அரிசி வாங்கிக்கொள்’’ என்றேன். ‘‘கதை?’’ என்றான். ‘‘எல்லாம் மனசுல பத்திரமா இருக்கு’’ என்றேன்.

எல்லா ஃபைல்களையும் எடுத்து அடுக்கினான். ஒரு பையில் போட்டுக்கொண்டு கிளம்பும்போது ஒரு வார்த்தை சொன்னான். அதுதான் அமர்... ‘‘கதை ஒண்ணும் வெயிட்டா இல்லையே?’’

அந்த விளையாட்டுத்தனம்தான் அவனை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது என்று நம்புகிறேன். ஆனால், ராஜாவுக்கு இந்த மாதிரி விளையாட் டெல்லாம் பிடிக்காது. எப்போதும் சீரியஸ் ரகம். சின்ஸியர் ரகம் என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

பெரிய டைரக்டர் - சின்ன டைரக்டர்... பிரமாண்டம் - லோ பட்ஜெட் என்றெல்லாம் இசையின் தரத்தை மாற்றிக்கொள்ளாதவன். மகா கலைஞன். என்னுடைய ‘அகல்விளக்கு’ படத்தில் அவன் இசையமைத்த பாடலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ‘ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே... காவேரி ஊற்றாகவே... காற்றோடு காற்றாகவே...’ இந்தப் பாட்டை உச்சரிக்காத ராஜாவின் ரசிகர்கள் இருப்பார்களா?

சமீபத்தில் ஒரு நாள் காலை... ராஜாவுக்கு போன் போட்டு, நான் இப்போது இயக்கியிருக்கும் ‘பச்சைக்குடை’ படத்துக்காக ரீரெக்கார்டிங் செய்து தருமாறு கேட்டேன். ஸ்டூடியோவுக்கு வரச் சொன்னான். ‘‘படத்தை எடுத்து முடித்து விட்டேன்’’ என்று சொல்லி, ‘பச்சைக்குடை’யின் டி.வி.டி-யைக் கொடுத்தேன். சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டான். என்னதான் உயிர் நண்பனாக இருந்தாலும் உள்ளுக்குள் பயம். பெரிய பில் போட்டுவிட்டால் என்ன செய்வது? ‘‘படத்தின் மொத்த பட்ஜெட்டே 16 லட்ச ரூபாய்தான்’’ என்றேன். ‘‘சரி... சரி... பாத்துக்கலாம்’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் ரீரெக்கார்டிங் செய்யும் இந்தக் காலத்தில், வெறும் 16 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் நான் எடுத்த படத்துக்கு அவன் பின்னணி இசைத்தான்.

படத்தின் டி.வி.டி-யைக் கொடுத்துவிட்டு வந்த சில நாட்களில் ராஜாவின் உதவியாளர் சுப்பையா அழைத்தார். ‘‘பின்னணி இசை ரெடி... வந்து வாங்கிக்கொள்ளுங்கள்’’ என்றார். ராஜா இருந்த பிஸியில் ஒரே நாளில் எப்படி சாத்தியம்? போனேன். ‘‘ராஜா சார் அந்தப் படத்தை இரண்டு முறை பார்த்துவிட்டார்’’ என்றார் சுப்பையா.

ராஜா வந்தான். ‘‘ரெக்கார்டிங் ஸ்டூடியோ எல்லாம் வேண்டாம். எடிட்டிங்லயே போஸ்ட் பண்ணிடு. பணம் மிச்சமாகும்’’ என்றான். ஒரு பைசாகூட வாங்கிக் கொள்ளவில்லை. அவனுக்காகப் பணத்தை வைத்துக்கொண்டு ஒரு பெருங்கூட்டம் காத்திருக்கும்போது, என்னிடம் ஒரு பைசாவும் வாங்கிக்கொள்ளாமல் ஓர் இசை ராஜாங்கமே நடத்திவிட்டான்.

p18.jpg

‘வனங்களை, மரங்களைக் காக்க வேண்டும்’ என்பதுதான் படத்தின் தீம். அதை முழுமையாக உணர்ந்து இசையமைத்துக்கொடுத்தான். நைஜீரியாவில் ஒரு பழங்கதை உண்டு. அந்த மக்கள் அவர்களின் குலதெய்வத்துக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறார்கள். கடவுள் ஒரு கேள்வி கேட்கிறார்: ‘‘எனக்குக் கோயில் கட்ட நினைக்கிறீர்களே... உங்களுக்கெல்லாம் வீடு இருக்கிறதா?’’

‘‘இல்லை’’ என்கிறார்கள். ‘‘உங்கள் எல்லோருக்கும் வீடு கிடைக்கும்வரை நான் இந்த மரத்திலேயே தங்கிக்கொள்கிறேன்’’ என்கிறது தெய்வம். நைஜீரிய மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கவில்லை. அதனால், அவர்களின் தெய்வம் இன்னமும் மரங்களில்தான் வசிப்பதாக அந்த மக்கள் நம்புகிறார்கள். மரத்தை அழிப்பதை தெய்வ குற்றமாக நினைக்கிறார்கள்.

‘பச்சைக்குடை’ கதையின் அடிநாதம் அதுதான். பழங்குடி மக்கள் தெய்வமாய்ப் போற்றி வணங்கும் காடுகளையும் மரங்களையும், நகரத்து மனிதர்கள் தங்கள் சுய தேவைக்காக அழிக்கப் பார்ப்பதும், அதை ஒரு பழங்குடிப் பெண்ணும் அவர் சகோதரரும் தடுத்துக் காப்பதும்தான் கதை.

ராஜாவின் இசையைக் கேட்டால் அந்தத் தொல்குடியின் பாரம்பர்யத்தை உணர முடியும்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


சம்பளத்தை திருப்பித் தந்த கதாநாயகி!

‘பச்சைக்குடை’யின் பிரீமியர் ஷோவுக்கு ஏற்பாடு செய்து, படத்தில் பங்காற்றிய அத்தனை நடிகர்கள், கலைஞர்களை அழைத்திருந்தேன். படம் முடிந்ததும் படத்தின் நாயகி நித்யா தாஸ், ‘‘சார்! ஒரு நிமிஷம்... இதோ வந்துவிடுகிறேன்’’ என்று அவருடைய கணவருடன் வெளியே போனார். சிறிது நேரத்தில் திரும்பி வந்தார். அவருடைய கையில் ரூபாய் கட்டுகள். அது நான் அவருக்கு சம்பளமாகக் கொடுத்த தொகை. ‘‘இவ்வளவு சமூக அக்கறை உள்ள படத்துக்கு நான் சம்பளம் வாங்குவது தப்பு சார். இதை நீங்களே வெச்சுக்கங்க’’ என்றார். உலகத்தில் வாங்கிய சம்பளத்தை அப்படியே திருப்பித் தந்த நடிகை யாராவது இருப்பார்களா? எவ்வளவு சொல்லியும் அவர் பணத்தை வாங்கிக்கொள்ளவே இல்லை. காரில் ஏறிப் பறந்துவிட்டார். ‘பச்சைக்குடை’ தந்த பசுமை நினைவு அது.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 10 - 12 பி

 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

 

p26b.jpgவாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் முக்கியப் புள்ளியாக ஒரு பஸ்ஸைக் காட்டும் ‘12பி’ படம் உங்களுக்கு நினைவிருக்கும். என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டதும் ஒரு 12பி.

சென்னையின் எல்டாம்ஸ் ரோட்டில் நான் தங்கியிருந்த வீட்டின் எண் அது. மாடியில் மேன்ஷன் போன்ற அமைப்பில் நிறைய ரூம்கள் இருக்கும். சினிமா தொடர்புடைய பல மனிதர்கள் அங்கே இருந்தனர்.

இரவு நேரங்களில் எழுதுவேன்... படிப்பேன். பகலில் என்னைத் தேடி சினிமா நபர்கள் வருவார்கள். சினிமா டிஸ்கஷன்களுக்குப் போவேன். எந்த நேரமும் மனம் தளராத முயற்சியில் இருந்த என்னை ஒருவர் கவனித்தபடி இருந்தார். அவர், அந்த வீட்டின் உரிமையாளர். அவர் என்னைப் பற்றி விசாரித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். அவருடைய மகளை எனக்கு மணம் முடித்துத் தருவதற்கான முடிவு.

சினிமா சான்ஸ் தேடும் பல நபர்கள் தங்கும் வீட்டின் சொந்தக்காரியே எனக்குச் சொந்தமாகிற சந்தோஷத்தில் மிதந்தேன். கல்யாண ஏற்பாடுகள் வேகமாக நடந்தன. என் சார்பாக அப்போது கல்யாண வேலைகளை எடுத்துப் போட்டுக்கொண்டு செய்தவர், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த  பத்திரிகை நண்பர் ஒருவர். மண்டபம் புக் செய்வது, பத்திரிகை அடிப்பது, சமையல்காரர் ஏற்பாடுசெய்வது, மளிகைக் கடைக்கு ஆர்டர் கொடுப்பது என எல்லா வேலைகளையும் அவரே செய்தார்.

பத்திரிகை அச்சடித்து வந்ததும் யார் யாருக்கெல்லாம் பத்திரிகை அனுப்ப வேண்டும் எனக் கேட்டு அவரே எழுதினார். அப்படி ஒரு நண்பர்.

p26a.jpg

மயிலாப்பூரில் திருமணம். காலையில் இருந்து அவருடைய வருகைக்காகக் காத்திருந்தேன். அவர் வரவே இல்லை. ‘இதோ வந்துவிடுவார்... அதோ வந்துவிடுவார்’ என நேரம் ஓடிக்கொண்டிருந்தது. டென்ஷன் அதிகமாகிக்
கொண்டே போனது. அவருக்கு என்ன ஆனதோ என்ற தவிப்பு... பதற்றத்தை மனத்துக்குள் அடக்கியபடி, மணக்கோலத்தில் அப்படியே வாசலுக்கு வந்து நிற்கிறேன். அப்போது, அந்த நண்பர் சர்வசாதாரணமாக அவருடைய ஸ்கூட்டரில் எங்கோ போய்க்கொண்டிருக்கிறார். ஓடிப்போய் நிறுத்தினேன்.

‘‘எங்கே போனீர்கள்... நேற்றில் இருந்து தவித்துக்கொண்டிருக்கிறேன்’’ என்றேன்.

‘‘என்ன விஷயம்?’’ என்று கேட்டார் சாதாரணமாக.

‘‘என்ன விஷயமா... இன்று என் கல்யாணம். நினைவில்லையா?’’

‘‘நினைவிருக்கிறது.’’

‘‘பிறகு ஏன் வரவில்லை?’’

‘‘நீதான் எனக்குப் பத்திரிகையே வைக்கவில்லையே?’’

‘ஒரு சொல் வெல்லும்... ஒரு சொல் கொல்லும்’ என்பார்கள். அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டேன். ‘அவர்தானே எல்லா வேலைகளையும் ஆரம்பத்தில் இருந்து எடுத்துச் செய்கிறார்... அவர்தானே பத்திரிகையே அடித்துக்கொண்டு வந்தார்... அவர்தானே எல்லோருக்கும் அனுப்பினார்’ என்று நினைத்தது எவ்வளவு பெரிய தவறு!

ஜப்பான் மீது அணுகுண்டு போடுவதற்கு முன் அமெரிக்க ராணுவத்தினர் விமானத்தில் இருந்தபடி, விமானதள கன்ட்ரோல் ரூமில் இருந்த ஜப்பானிய அதிகாரியிடம் கேட்டனராம்.

‘‘பணிந்து போகிறீர்களா? அல்லது, அணுகுண்டை வீசட்டுமா?’’

விமானதளத்தில் இருந்த ஜப்பானிய அதிகாரியால், உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை. ‘‘அவகாசம் வேண்டும். குண்டு வேண்டாம்’’ என்றார் அவர்.

ஜப்பானிய மொழியை மொழிபெயர்த்துச் சொல்வதற்கு அமெரிக்க விமானத்தில் இருந்தவர், இப்படி மாற்றிச் சொல்லிவிட்டார்: ‘‘அவகாசம் வேண்டாம்... குண்டு வேண்டும்.’’

இந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதற்குள் நான் போகவில்லை. ‘ஒரு சொல் ஒரு நாட்டையே அழிப்பதற்குப் போதுமானதாக ஆகிவிடும்’ என்பதற்கு உதாரணமாகச் சொல்லப்படும் கதை இது.

கல்யாணத்துக்கான எல்லா வேலைகளும் அந்த நண்பர் மூலமாக நடந்ததால், உடனே மீதிப் பணத்தை செட்டில் செய்ய வேண்டிய நெருக்கடி. சமையல்காரர், மந்திரம் ஓதுபவர், மளிகைக் கடைக்காரர் எல்லோரையும் இன்னும் சில மணி நேரத்தில் செட்டில் செய்து அனுப்ப வேண்டும். நண்பர்கள் இளையராஜா, பாஸ்கர் எல்லாம் மண்டபத்திலே இருந்தார்கள். பணம் ஏதாவது இருக்கிறதா எனக் கேட்டால், பரிசளிக்க எடுத்துவந்த எவர்சில்வர் டம்ளரை எடுத்துக் காட்டினார்கள். கல்யாண மனநிலையே போய்விட்டது. செம டென்ஷன். ஒருவழியாகக் கொஞ்சம் பணம் செட்டில் செய்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். என் அம்மா, அப்பாவைக் குரோம்பேட்டை வீட்டில் கொண்டுபோய்விட வேண்டும். டாக்ஸியை அழைத்தால், 60 ரூபாய் கேட்கிறான். அப்போதெல்லாம் கிண்டி வரைக்கும்தான் சென்னை லிமிட். நகர எல்லையைத் தாண்டுவதால், 60 ரூபாய்க்குக் குறைய மாட்டேன் என அடம்பிடித்தான். வழக்கமாக 40 ரூபாய்க்கு வருவார்கள். கல்யாண அவசரத்தைப் புரிந்துகொண்டு ரேட்டை ஏற்றுகிறான் என்பது புரிந்தது. ‘சரி, வா’ எனக் கிளம்பினேன். கையில் 50 ரூபாய்தான் இருந்தது. குரோம்பேட்டை போனதும் அங்கிருந்த என் செட்டு ஆட்களிடம் 40 ரூபாயைக் கொடுத்து, ‘‘60 ரூபாய் கேட்கிறான். 40 ரூபாய்தான் வழக்கமா எல்லோரும் கொடுக்கறது’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டேன். அந்த ஆட்கள் என்ன பண்ணினார்களோ... டிரைவர் 40 ரூபாயோடு போயே போய்விட்டார்.

p26.jpg

நான் எலெக்ட்ரிக் ரயிலைப் பிடித்து மாம்பலத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ் பிடித்து எல்டாம்ஸ் ரோட்டுக்கு வந்து சேர்ந்தேன். வந்தால், மதுரையில் இருந்து வந்த உறவினர்கள் ஊருக்குக் கிளம்ப நின்றார்கள். அவர்களை வழியனுப்ப வேண்டுமே?

பெண் வீட்டினர், மாப்பிள்ளை சாப்பிடுவதற்காக வெள்ளித் தட்டையும் வெள்ளிக் கிண்ணத்தையும் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனார்கள். அப்போது என் பக்கத்தில் கவிஞர் முத்துலிங்கம் இருந்தான். ஒன்றாம் வகுப்பில் இருந்து உடன் படித்த நண்பன். அந்தத் தட்டையும் கிண்ணத்தையும் ஒரு பேப்பரில் சுருட்டிக்கொடுத்து, விற்றுவிட்டுவரச் சொன்னேன். ‘கல்யாணம் ஆன சில நிமிடங்களிலேயே இப்படிச் செய்யலாமா’ என்ற அதிர்ச்சி அவனுக்கு. 850 ரூபாய் விலையுள்ள அவற்றை 650 ரூபாய்க்குத்தான் விற்க முடிந்தது. ஊருக்குப் போக இருந்த உறவுகளுக்கு டிக்கெட்டுக்கும் சாப்பாட்டுக்கும் காசு கொடுத்து அனுப்பிவிட்டு, ஒரு ஃபுல் பாட்டில் வாங்கிக்கொண்டு அறைக்கு வந்து அப்படியே நாற்காலியில் சாய்ந்தேன். மனதெல்லாம் அலை அலையாக அன்று முழுதும் நடந்த அத்தனை சம்பவங்களும் ஓடின.

என் மனைவி சாவித்திரியின் உறவுப் பையன் ஒருவன் வந்தான். ‘‘இரண்டு க்ளாஸ் கொண்டுவா’’ என்றேன். ‘ஒரு ஆள்தானே இருக்கிறார்; எதற்கு இரண்டு டம்ளர் கேட்கிறார்’ என்ற குழப்பம் அவனுக்கு. இரண்டு டம்ளர்களிலும் சரக்கை நிரப்பினேன். ஒரு டம்ளரை எடுத்து, அந்தப் பையனிடம் கொடுத்து, அதை என் மனைவியின் தந்தையிடம் கொடுக்கச் சொன்னேன்.

பிராந்தி டம்ளரைக் கொடுத்தனுப்பியதற்கு என் மாமனார் ஒன்றும் சொல்லவில்லை. வாங்கிக் குடித்துவிட்டு கிளாஸைக் கொடுத்தனுப்பினார். இரண்டாவதாக இன்னொரு கிளாஸ் கொடுத்தனுப்பினேன். அதையும் குடித்துவிட்டு, ‘போதும்’ என்று சொல்லுமாறு பையனிடம் சொல்லி அனுப்பினார். திருமணம் ஆன முதல் நாளிலேயே என்னை அவருக்கும் அவருக்கு என்னையும் புரிந்து போய்விட்டது.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


செக் புக்!

னக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. என் பெற்றோரும், மாமனார், மாமியாரும்தான் எனக்குக் கடவுள். அவர்களின் படங்கள்தான் நான் வழிபடும் கடவுளின் படங்கள். ‘நாம் உருவானதற்குப் பெற்றோர்கள் காரணம். நாம் வளர்வதற்குப் புத்தகங்கள் காரணம்’ என்கிறார் ஓர் அறிஞர். பெற்றோருக்கு அடுத்தபடியாக நான் நேசிப்பது புத்தகங்களைத்தான். அதன் பிறகுதான் நண்பர்கள், உறவுகள் எல்லாமே!

என் அப்பாவுக்கு ஓர் ஆசை இருந்தது. அதை நிறைவேற்ற முடியாமல் போனதில் எனக்கு வருத்தம் உண்டு. ‘செக்கில் கையெழுத்துப் போட்டு பணம் எடுக்க வேண்டும்’ என்பதுதான் அந்த ஆசை. என்னிடம் நேரடியாகச் சொல்லியிருக்கலாம். யாரிடமோ சொல்லி, அவர் இறந்த பிறகுதான் என் காதுக்கு வந்து சேர்ந்தது. எத்தனை சுலபமான ஓர் ஆசை. அதை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. 10 பேங்குகளில் அக்கவுன்ட் ஆரம்பித்து, 10 செக் புத்தகங்கள் வாங்கித் தந்திருக்கலாமே எனப் பதைக்கிறது இப்போது.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 11 - சூப்பர் (ஸ்டார்) காபி

 

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

 

யாருக்காகவும் என்னுடைய சுபாவத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன். சுபாவம் என்பது  கைரேகை மாதிரி; அது மாறவும் மாறாது. மாற்றிக்கொள்வதாகச் சொல்வது நடிப்பு. அதற்காகத்தான் என் திருமண நாள் சம்பவத்தைச் சொன்னேன்.

தமிழில் 100 திரைக்கதைகள் செய்திருக்கிறேன் என்றால், அதற்கு சற்றும் குறைவில்லாமல் கன்னடத் திரைப்படங்களுக்கும் திரைக்கதைகள் செய்திருக்கிறேன். இந்தி, தெலுங்கு, மராத்தி, வங்காள மொழிகளிலும் என் திரைக்கதைகள் பல வந்துள்ளன. தென்னிந்தியப் படங்களில் மலையாளம் மட்டும் மிஸ்ஸிங்.

கன்னடத் திரையுலகுக்கு வருகிறேன். விஷ்ணுவர்தன், சித்தலிங்கையா, ராக்லைன் வெங்கடேஷ், ரவிச்சந்திரன் என எனக்கு அங்கு ஏராளமான நண்பர்கள் உண்டு. 30 ஆண்டுகளுக்கு முன் சித்தலிங்கையா என்னிடம் ஒரு கதை கேட்டார். பெங்களூரு கனிஷ்கா ஹோட்டலில் எனக்கு ரூம் போட்டு, கதை கேட்க வந்திருந்தார். கன்னடத்தில் அவர் மிகப் பெரிய டைரக்டர். ‘உதய கீதம்’ கதை அவருக்காக உருவாக்கப்பட்டதுதான். அவருடைய மகன், நடிகர் முரளி. அப்போது முரளி நடிக்க ஆரம்பிக்கவில்லை. அப்பாவிடம் உதவி இயக்குநராக இருந்தார். அந்தக் கதை சித்தலிங்கையாவுக்குப் பிடிக்கவில்லை. நாயகிக்கு முக்கியத்துவம் தருவதுபோல கதை இருப்பதாக நினைத்தார்.

p32.jpg

உடனே, நான் சென்னை திரும்பிவிட்டேன். அதே நேரத்தில் கோவைத்தம்பி ஒரு கதை கேட்டார். அதே கதையைச் சொன்னேன். அவருடன், டைரக்டர் கே.ரங்கராஜ், எம்.ஜி.வல்லபன் ஆகியோரும் கதையைக் கேட்டார்கள். எல்லோருக்கும் பிடித்திருந்தது. நடிகர் மோகனை வைத்து உடனே படப்பிடிப்பும் ஆரம்பம் ஆனது. அந்த நேரத்தில் முரளி வந்தார். ‘‘அங்கிள், எனக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருக்கிறது. நானே நடிக்கிறேன். அப்பாவை கன்வின்ஸ் பண்றேன்’’ என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. படம் ஷூட் போய்க்கொண்டிருப்பதைச் சொன்னேன். ‘‘மிஸ் பண்ணிட்டேன் சார்’’ என்று போய்விட்டார்.

படம் ரிலீஸ் ஆன அன்றே முரளி படத்தைப் பார்த்து விட்டு, மீண்டும் சொன்னார்: ‘‘அங்கிள், ஐ மிஸ்டு த பிக்சர்!’’ நல்ல படத்தை இழந்துவிட்ட கலைஞனின் ஏக்கம் அது.

கன்னடத்தில் வெங்கடேஷுக்கு ‘மம்மகா’ என்ற திரைக்கதையைக் கொடுத்தேன். அது பிரமாண்டமான வெற்றி பெற்ற படம். ‘மம்மகா’ என்றால், பேரன் என அர்த்தம். அம்மாவழிப் பாட்டி, அப்பாவழிப் பாட்டி... இரண்டு பேரும் பேரன் மீது போட்டி போட்டு அன்பு செலுத்துகிறார்கள். சாப்பாடு ஊட்டுவதில், உடை வாங்கித் தருவதில் என எல்லாவற்றிலும் இரண்டு பாட்டிகளுக்கும் போட்டி. ‘அன்புத் தொல்லை’ என்பார்களே... அப்படி.

இரண்டு பாட்டிகளும் பேரனுக்குப் பெண் பார்க்கிறார்கள். ‘தான் பார்த்த பெண்ணைத்தான் கட்டிக்கொள்ள வேண்டும்’ என இரண்டு பாட்டிகளும் உறுதியாக இருக்கிறார்கள். ‘இந்தத் தொல்லையே வேண்டாம்’ எனப் பேரன் வேறு ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். இரண்டு பாட்டிகளும் ஒரே நேரத்தில் எதிரியாகிவிடுகிறார்கள். பாட்டிகளின் சம்மதத்தோடு எப்படி காதலியை மணம் முடிக்கிறான் என்பதுதான் கதை. அந்தக் காதலி கேரக்டரில் மீனா நடித்திருந்தார். செம சென்டிமென்ட் என்பதால், கன்னடத்தில் சக்கைப் போடு போட்டது படம்.

அந்தப் பட வேலையின்போது ஒரு முறை ரவிச்சந்திரன், நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தார். ‘‘உங்க ஃப்ரெண்ட் உங்களைக் கூட்டிக்கிட்டு வரச் சொன்னார். வரமுடியுமா?’’ என்றார்.

‘‘போகலாமே’’ எனக் கிளம்பி விட்டேன்.

‘‘ஃப்ரெண்ட் யார்னு கேட்க மாட்டீங்களா?’’

‘‘ஃப்ரெண்ட்னு சொல்லிட்டீங்க. அது சஸ்பென்ஸாவே இருக்கட்டுமே!’’

கார், பெங்களூரில் பெரிய மனிதர்கள் வசிக்கும் ஒரு பணக்கார ஏரியாவுக்குள் நுழைந்தது. பாரம்பர்யமான ஒரு பெரிய வீட்டு கேட். காரைப் பார்த்ததும், செக்யூரிட்டி சல்யூட் வைத்துக் கதவைத் திறந்துவிடுகிறார். எனக்கோ, ‘பெங்களூரில் எனக்கு யார் இவ்வளவுப் பணக்கார ஃப்ரெண்ட்’ என்று குழப்பம். வீட்டு வாசலில் போய் நின்றதும், ‘‘வாங்க செல்வா’’ என்றது ஒரு பழக்கமான குரல். ரஜினி! என்னால் நம்பவே முடியவில்லை. ‘கொடி பறக்குது’ ஷோ பார்த்தோமே... அதோடு இப்போதுதான் பார்க்கிறேன்.

‘‘நீங்களா?’’ என்கிறேன்.

வீட்டில் வேறு யாரும் இருப்ப தாகத் தெரியவில்லை. நான், ரஜினி, ரவி மூன்று பேர்தான். நண்பகல் 11 மணிக்குப் பேச ஆரம்பித்த நாங்கள், மாலை வரை பேசிக்கொண்டே இருந்தோம். எனக்குப் பசி தாளவில்லை.

‘‘ரஜினி, பசி எடுக்கிறது.’’

‘மணி என்ன’ என அப்போது தான் கடிகாரத்தைப் பார்க்கிறார். ‘‘ஓ சாரி! கொஞ்சம் இருங்க’’ சமையல் கட்டு நோக்கி வேகமாகப் போகிறார். காபி மேக்கர் இருக் கிறது. மூன்று பேருக்கும் அவரே காபி போட்டுக் கொண்டு வந்தார்.
அந்தப் பசிக்கு அது தேவாமிர்தம்.

‘‘எப்பிடி... எப்பிடி இருக்கு காபி?’’ என ரஜினியின் உற்சாக மான கேள்வி.

‘‘இந்தியாவின் சூப்பர் ஸ்டார் போட்ட காபியைக் குறை சொல் வேனா..? சூப்பர்’’

‘‘ஹ்ஹ ஹா ஹா!’’ ரஜினியின் ட்ரேட் மார்க் சிரிப்பு.

ரஜினியிடம் எப்போதும் நான் கண்டு வியப்பது அவருடைய ஆர்வத்தைத்தான். ‘16 வயதினிலே’, ‘கவிக்குயில்’ நாளில் இருந்து அதில் எந்த வித்தியாசமும் இல்லை. எப்போதும் காது கொடுத்துக் கேட்பதற்குத் தயாராக இருப்பார். முடிவெடுப்பது அவராக இருந்தாலும், எல்லா கருத்துகளையும் ஆர்வம் குன்றாமல் கேட்பார். அது, அவரிடம் பயில வேண்டிய பாடம்!

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


தோ பிகா ஜமீன்!

ன்னுடைய ‘உதயகீதம்’ படத்தின் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. வங்காள மொழியில் ‘தோ பிகா ஜமீன்’ என்றொரு சினிமா வந்தது. கம்யூனிஸ்ட்கள் எடுத்த ‘பேரலல்’ சினிமா. ‘பிகா’ என்றால் நிலத்தை அளக்கிற ஓர் அளவு. ‘இரண்டு பிகா’ என்பது ஓர் ஏக்கருக்கும் குறைவான நிலம். ஒரு ஃபேக்டரி கட்டுவதற்காக ஊரையே வளைத்துப்போட நினைக்கிறார் ஒரு நிலச்சுவான்தார். நடுவிலே ஒரு குடியானவனின் அந்த நிலம் இருக்கிறது. ‘‘நீ வாங்கிய கடனுக்கு அந்த நிலம் சரியாகப் போய்விட்டது’’ என்கிறார். ‘‘நான் பணத்தைத் திருப்பித் தந்துவிடுகிறேன்’’ என்கிறான் விவசாயி. 235 ரூபாய்! மனைவியின் நகை, வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாவற்றையும் விற்றாலும் அந்தத் தொகை வரவில்லை. மூன்று மாதங்கள் அவகாசம் தருகிறது கோர்ட். கல்கத்தாவுக்குப் புறப்பட்டுப் போய், ரிக்‌ஷா இழுத்துப் பணம் சம்பாதிக்கிறான். கணவனிடம் இருந்து எந்தப் பதிலும் வராததால் அந்தக் குடியானவனின் மனைவி, அவனைத் தேடி கல்கத்தா வருகிறாள். அவளுக்கு விபத்து ஏற்படுகிறது. உயிருக்குப் போராடுகிறாள். சம்பாதித்த பணத்தை வைத்து மனைவியின் உயிரைக் காப்பாற்றுகிறான். நிலத்தை மீட்க முடியவில்லை. அவனுடைய நிலத்தில் ஃபேக்டரி வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கிருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுக்கிறான். செக்யூரிட்டி ஓடிவந்து தடுத்து, துரத்தி விடுகிறான். அவனும் அவனுடைய மனைவி, குழந்தைகளும் அங்கிருந்து வெறும் கையுடன் இலக்கில்லாத பயணமாகப் புறப்படுகிறார்கள். இதுதான் கதை.

p32a.jpg

கதாநாயகனாக நடித்தவர் பல்ராஜ் சஹானி என்ற புகழ்பெற்ற நடிகர். உழைக்கும் மக்கள்மீது நேசம் பொழிந்த கம்யூனிஸ்ட். அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது. அவரை காவல் துறை கைதுசெய்துவிட்டது. திரைக் கலைஞர்கள் மனு செய்து, அவரை ஜெயிலில் இருந்து வெளியில் மீட்டு, அந்தப் படத்தை எடுப்பார்கள். மாலை ஆனதும் அவர் சிறைக்குப் போய்விடுவார். தினமும் அப்படி மனுசெய்து அவரை வெளியே கொண்டுவந்து எடுக்கப்பட்ட படம் அது. ‘உதயகீதம்’ படத்தின் நாயகனும் சிறைக்குள் இருந்துவந்து அனாதை இல்ல நன்கொடைக்காகப் பாடுவதாகக் காட்சி அமைப்பதற்கு அந்தச் சம்பவம் உந்து சக்தி.
 

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 12 - சுதாகருக்கு விழுந்த அறை!

 

‘கிழக்கே போகும் ரயில்’ படப்பிடிப்பின் போதே சுதாகரைப் பார்த்துவிட்டு, ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்துக்கு ஒப்பந்தம் செய்தேன்.

எண்ணெய் செக்கு வைத்திருப்பவன் தன்னுடைய தலைக்கு எண்ணெய் வைக்க முடியாத நிலைமை... ஆயிரம் பேர் கொண்ட ஒரு கிராமத்தில் ஒருவர் அதிகமானாலும் ஒருவர் இறந்துபோவார் என்ற சென்டிமென்ட்... சைக்கிள் கற்றுக்கொள்வதற்கான ‘ஓரம்போ’ பாடல்... இப்படி ரகளையாக வந்திருந்தது படம்.

‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக, ‘கிழக்கே போகும் ரயில்’ ரிலீஸ் ஆனது. ஒரே நாளில் சுதாகர் உச்சத்துக்குப் போய்விட்டார். பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் அவர் வீட்டு வாசலில் க்யூ கட்டி நிற்கின்றன. பெரிய சம்பளம்.

p26a.jpg

நான் படப்பிடிப்புக்காக எல்லோருக்கும் டிக்கெட் போட்டுவிட்டு போடிநாயக்கனூரில் இருந்தேன். ஜனவரி 15-ம் தேதி ஷூட்டிங் ஆரம்பம். சுதாகர் வரவில்லை. போன் செய்து கேட்டால், ‘‘நிறைய படங்கள் புக் ஆகிடுச்சு சார். தேதி பிரிச்சுக் கொடுத்திருக்கேன்... அதான்! உங்களுக்கு ஒரு வாரம்தான் கால்ஷீட். அதுக்குள்ள முடிச்சுக்க முடியுமா?’’ என்கிறார்.

அவருக்கு 25 நாட்களுக்கு ஷூட்டிங் இருந்தது. இங்கோ சரிதா உள்ளிட்ட அத்தனை பேரும் முதலிலேயே வந்துவிட்டனர். சரிதா தங்கமான பெண். அப்போது பிரபலமான நடிகை. ஆனாலும் ஒரு புதுமுக நடிகருக்காகக் காத்திருந்தார்.

‘சரி, பரவாயில்லை’ எனச் சொல்லிவிட்டு, சரிதா, விஜயன் சம்பந்தப்பட்ட காட்சிகளையும், மற்றவர்களை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளையும் முடித்துக்கொண்டிருந்தேன். சுதாகர் வந்தார். வந்தவர், ஹோட்டல் அறையில் போய்ப் படுத்துவிட்டார். அவருக்கான காட்சி களுக்குத் தயார்படுத்திவிட்டுக் காத்திருந்தால், ஆளைக் காணோம். லஞ்ச் பிரேக்கில் ஹோட்டல் அறைக்குப் போனேன். அப்போதும் ‘தூங்கிக்கொண்டிருக்கிறார்’ என்றார்கள்.

எழுப்பி, ‘‘ஏழு நாள் கால்ஷீட் தர்றதா சொன்னீங்க. அதில ஒருநாள் நீங்க தூங்கறதுக்கே சரியாகிடுச்சே?’’ என்றேன். ‘‘குளிக்க சுடுதண்ணி கொடுக்கலை. அதான் வெய்ட் பண்றேன். நீங்க போங்க, இதோ பத்து நிமிஷத்தில ரெடியாகி வந்துவிடுகிறேன்’’ என்றார். அதெல்லாம் சும்மா காரணம் என்பது புரொடக்‌ஷன் மேனேஜரை விசாரித்தபோது தெரிந்தது.

மூன்று மணிக்கு ஸ்பாட்டுக்கு வந்தார். அவருக்கு முதல் காட்சி. சரிதாவின் மாமியாராக நடித்தவர் நாடக நடிகை ஜெயந்தி.  என்னுடைய எல்லா பிரச்னைகளும் தெரிந்தவர். மாவாட்டியபடியே மகன் சுதாகருடன் பேசிக்கொண்டிருப்பார். சுதாகருக்கு சரிதாவின் நடத்தையில் சந்தேகம். மகனுக்கு அறிவுரை சொல்வது போல, ‘‘எவ்வளவுதான் ஒசத்தியானதா இருந்தாலும் மீன், பால்ல வாழ முடியாது. தண்ணியிலதான் வாழணும். அப்படி மீனைக் கொண்டுபோய் பால்ல விட்டா பாலும் கெட்டுப்போகும்... மீனும் செத்துப்போகும்’’ என்பார் சுதாகரின் அம்மா. மகன் வீணாக சந்தேகப்பட்டு, பேசிக்கொண்டே போவார். கோபத்தில் மாவாட்டுகிற கையோடு சுதாகர் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிடுவார்.

காட்சி எடுக்கப்படுகிறது. அம்மா அறை விடுகிறார். அது, நிஜமான அறை. அடித்த அடியில் மாவுதான் தெறித்து விழுந்தது எனப் பார்த்தால், சுதாகரின் ஒரு பல்லும் அங்கே கிடந்தது. கிறுகிறுத்துப் போனது சுதாகருக்கு. அதுமுதல் ஒரு தகராறு இல்லை.

என்னுடைய கேமராமேன் வாசுதேவனைக் கூப்பிட்டேன். ‘‘இவன் இந்த ஏழு நாட்களுக்குப் பிறகு மீண்டும் கால்ஷீட் தருவான்ங்கிற நம்பிக்கை இல்லை. 25 நாளில் இவனை வெச்சு எடுக்க வேண்டிய காட்சிகளை, இந்த ஏழு நாள்ல எடுத்தாகணும். குவாலிட்டியைப் பத்திக் கவலைப்படாதே’’ எனச் சொல்லிவிட்டேன். பாடல் காட்சிகள், சரிதாவும் சுதாகரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் எனச் சுட்டுத் தள்ளினோம். அந்தப் படத்தைப் பார்த்தீர்கள் என்றால், டெக்னிக்கலாக சுமாராகத்தான் இருக்கும். படத்தில் நல்ல சீன்கள் நிறைய இருக்கும்.

p26.jpg

எங்களுக்கு ஒரே ஒரு கார் மட்டும்தான் இருந்தது. சுதாகர், சரிதாவை காரில் ஏற்றி ஹோட்டலுக்கு அனுப்பிவிட்டு, நாங்கள் எல்லோரும் கடைசி பஸ்ஸில் ஏறி அறைகளுக்குப் போவோம். தினமும் அப்படி பஸ்ஸில் ஏறிப் போவதால், காலையிலும் இரவிலும் பஸ் டிரைவரும் எங்களுக்காகக் காத்திருந்து ஏற்றிச் செல்லும் அளவுக்குப் பழக்கமாகிவிட்டனர். எங்கள் கஷ்டத்தைப் பார்த்த சரிதா, ‘‘நானும் பஸ்லயே வர்றேன் சார்’’ எனச் சொல்வார். நடிகையை மஃபசல் பஸ்ஸில் கூட்டிக்கொண்டு போக முடியுமா?

அப்படி பல்வேறு சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கும் இடையே ரெடியாகி வெளிவந்த படம்தான் ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’. ஆனால், பிரமாதமாக ஓடி வசூல் சாதனை படைத்தது.

ஒரு படம் டெக்னிக்கலாக சுமாராக இருந்தாலும், விறுவிறுப்பான கதையால், காட்சிகளால் பேசப்படும். நான் எழுதிய ‘ஆளுக்கொரு ஆசை’ படத்தில் ஜெயசித்ராவும் முத்துராமனும் நடித்தார்கள். கதையின் முடிச்சு இதுதான். தினம் தினம் பஸ்ஸிலும், வேலை செய்யும் இடத்திலும், ஆண்களின் சில்மிஷங்களால் அவதிப்படும் ஒரு பெண். வேலைக்கு எங்கும் அனுப்பாமல் உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் ஒரு கணவனுக்காகக் காத்திருக்கிறாள். இன்னொரு பக்கம் முத்துராமன். மிகவும் சிக்கனம். ஒவ்வொரு பைசாவையும் எண்ணி எண்ணி செலவு செய்பவர். கைநிறைய சம்பாதிக்கும் மனைவி வேண்டும் எனக் காத்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிறது. அப்புறம் என்ன நடக்கிறது என்பதுதான் கதை தருகிற சுவாரஸ்யம்.

அது நல்ல கதை... ஆனால், அவ்வளவு சரியாக அது எடுக்கப்படவில்லை. நான் டெக்னிக்கலாக சிறப்பாக இருப்பதைப் பற்றிச் சொல்லவில்லை. ஒரு கதையை அதன் ஜீவன் கெடாமல் எடுப்பதுதான் சாமர்த்தியமான வேலை. ஆனால், அதே கதையைக் கொஞ்சம் மாற்றி வேறு ஒருவருக்கு விற்றுவிட்டேன் என்பது வேறு விஷயம். பேன்ட் போட்ட கதைக்கு வேட்டி கட்டிவிட்டால் அது வேறு கதை... அவ்வளவுதான்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


பன்றிகளோடு ஒரு பயணம்!

வ்வொருவருக்கும் ஊரைவிட்டு ஓடுவதற்கு ஒரு கதை இருக்கும். சினிமாக் கதைகளில் மட்டுமல்ல; நிஜ வாழ்விலும்தான். எனக்கும் ஒரு கதை உண்டு. எங்கள் தெருவில் ஒரு தம்பதி இருந்தனர். கணவர், இன்னொரு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல் இன்னொரு கல்யாணம் செய்வது சட்டப்படி குற்றம். அதற்காக முதல் மனைவியை அடித்தும் உதைத்தும் சித்ரவதை செய்துகொண்டிருந்தார். எனக்கு ஆத்திரம் தாளவில்லை. எனக்கு அப்போது 16, 17 வயசுக்குள்தான் இருக்கும். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துவிட்டேன்.

போலீஸ்காரர் ஒருவர் வந்து விசாரித்தார். அந்த அம்மா என்ன நினைத்தாரோ, ‘‘என்னை யாரும் சித்ரவதை செய்யவில்லையே’’ என்று சொல்லிவிட்டார். போலீஸ்காரருக்கு வெறுப்பு. போகும்போது, ‘‘இந்தத் தெரு பையன் ஒருத்தன்தான் கம்ப்ளைன்ட் கொடுத்தான்’’ என்று கொளுத்திப் போட்டுவிட்டுப் போய்விட்டார். அந்த ஒரு க்ளூ போதாதா? என்னை அடிப்பதற்காகத் தேட ஆரம்பித்தார்கள். அந்த ஆள் வசதியானவர்.

எனக்கு ஏற்கெனவே சென்னைக்கு வந்து சினிமா எடுக்கிற ஆசை வேறு இருந்ததா? இரவோடு இரவாக லாரியில் ஏறினேன். மேலூர் வந்ததும் அந்த லாரியில் பன்றிகளை ஏற்றினர். ஒரு பக்கம் நான், இன்னொரு பக்கம் ஒரு பெரிய பன்றி தன் குட்டிகளுடன் என்னை முறைத்தபடி படுத்திருந்தது. திருச்சியில் அந்தப் பன்றிகளை இறக்கினர். அதன் பிறகுதான் எனக்குத் தூக்கமே வந்தது.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 13 - ஜெயலலிதா அனுப்பிய சாக்லெட் பாக்ஸ்!

 

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

 

சென்னைக்கு வந்த புதிதில் ஒருநாள் மாலை சாந்தோம் பீச்சில் படுத்திருந்தேன். ஜிலுஜிலு என்ற கடல் காற்று. அதன் தாலாட்டில் அப்படியே தூங்கிப்போனேன். நள்ளிரவில் ஒரு போலீஸ்காரர் வந்து எழுப்பினார். ‘என்னடா முழிக்கிறே?’ என ‘பராசக்தி’யில் சிவாஜியை ஒரு போலீஸ்காரர் நடுராத்திரி எழுப்பிக் கேட்பார். ‘தூங்கறவன எழுப்பினா முழிக்காம என்ன செய்வான்?’ என சிவாஜி திருப்பிக் கேட்பார். அதுதான் நினைவுக்கு வந்தது.

‘‘தற்கொலை செஞ்சுக்க வந்தியா?’’

‘‘இல்லை சார். நான் சினிமாவில் சாதிக்கணும்னு வந்திருக்கேன். இதப் பாருங்க... கதை எல்லாம் வெச்சிருக்கேன்’’ என எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை.

‘‘வா ஸ்டேஷனுக்கு’’ என சைக்கிளில் உட்கார வைத்து அழைத்துப் போனார். லாக்கப்பில் தள்ளிப் பூட்டிவிட்டார்.

p8.jpg

கடல் காற்றின் குளிரில் அவ்வளவு நேரமும் இருந்த எனக்கு அது கதகதப்பாக இருந்தது. லாக்கப்பிலேயே படுத்துத் தூங்கிவிட்டேன். காலையில் இன்ஸ்பெக்டர் வந்தார். ‘லாக்கப்ல யாரு’ எனக் கேட்டிருப்பார் போல. ‘ஏதோ தற்கொலை முயற்சி கேஸ்’ எனச் சொல்லியிருக்கிறார்கள்.

‘‘கூப்புடுய்யா அவனை’’ என்றார்.

எழுந்துவந்து அவர் முன்னால் நின்றேன். ‘எந்த ஊரு...  என்ன பேரு?’ என விசாரித்தார். சொன்னேன்.

‘‘அட, நம்ம சங்கரய்யா அண்ணன் பையனா?’’ என ஆச்சர்யமாகக் கேட்டார். என் சித்தப்பாவுடன் அமெரிக்கன் கல்லூரியில் ஒன்றாகப் படித்ததாகச் சொன்னார். ‘‘எதுக்கு தற்கொலை பண்ணிக்க வந்தே... வீட்ல சண்டையா?’’ என விசாரித்தார். அவரிடம் என் கதைகளை எல்லாம் காட்டினேன். சினிமா கனவில் சென்னை வந்ததைச் சொன்னேன். டீ, பன் எல்லாம் வாங்கித் தந்தார். ‘‘சரி... சரி... ஊருக்குப் போய்ச் சேரு’’ என அறிவுரை சொன்னார்.

‘சரி’ எனத் தலையாட்டிவிட்டு வெளியில் வந்தவன், ஒரு யோசனையோடு திரும்பவும் அவரிடம் போனேன். பஸ் செலவுக்குக் காசு கேட்டுத் திரும்பி வருகிறேன் என அவர் நினைத்திருப்பார் போல! ‘‘என்னடா?’’ என்றார்.

‘‘சார்... குளிர் அதிகமா இருக்கறதால, நைட்ல வெளிய படுக்க முடியலை. இங்க கொஞ்சம் கதகதப்பா இருக்கு. ராத்திரியில லாக்கப்ல வந்து படுத்துக்கவா?” என்றேன்.

‘‘என்னா கிண்டல்டா உனக்கு... போடா இங்கருந்து’’ என விரட்டிவிட்டார்.

இந்தச் சம்பவத்தை ஒருமுறை ஜெயா டி.வி நிகழ்ச்சியில் சொன்னேன். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான கொஞ்ச நேரத்தில் என் வீட்டுக்கு ஒரு கார் வந்தது. அதில் இருந்து இறங்கியவர் கையில், அழகாக பேக் செய்த ஒரு பெரிய சாக்லெட் பாக்ஸ். ‘‘மேடம் கொடுக்கச் சொன்னாங்க’’ என்றார்.

ஜெயா டி.வி-யில் நான் பேசிய அந்த நிகழ்ச்சியை ஜெயலலிதா சிரித்துச் சிரித்து ரசித்திருக்கிறார். நிகழ்ச்சி தயாரித்தவர்களிடம் என் முகவரி வாங்கி, நிகழ்ச்சி வெளியான சில நிமிடங்களிலேயே இனிப்பு கொடுத்தனுப்பி மகிழ்ந்திருக்கிறார். எவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவர்... என் பேச்சைக் கேட்டு மகிழ்ந்து எனக்குப் பரிசு அனுப்பியது பெருமையாக இருந்தது.

நான் உடனே போயஸ் கார்டன் வீட்டுக்குப் போன் செய்து அவருக்கு நன்றி சொல்ல முயற்சி செய்தேன். ‘‘கொஞ்சம் இருங்க... கொஞ்ச இருங்க...’’ என ரொம்ப நேரம் லைனில் காத்திருக்கச் சொன்னார்கள். கடைசியாக, ‘‘அம்மாவுக்கு லைன் கொடுக்க முடியாது’’ எனச் சொல்லிவிட்டார்கள். ‘‘அம்மாவுக்கு நன்றி சொன்னேன்னு சொல்லுங்க, போதும்’’ என நானும் போனை வைத்துவிட்டேன்.

பாரதிராஜாவும் நானும் போயஸ் கார்டன் வீட்டுக்குப் போய் அவரிடம் ‘சொந்த வீடு’ கதை சொன்னது அவருக்கு நன்றாகவே நினைவில் இருந்தது. ஒரு சினிமா விருது பெறும் விழாவில் விருது கேடயத்தைக் கொடுத்துவிட்டு, ‘‘எப்படி இருக்கீங்க?’’ என்றார் வாஞ்சையுடன்.

p8a.jpg

ன் வயதில் இருக்கும் சிலரைப் பார்க்கும்போதுதான் எனக்கு என் வயதே நினைவுக்கு வரும். நரைத்த தலை, வழுக்கை, தொப்பை, நிறைவேறாத ஆசைகள், நிறைவேற்ற முடியாத கோரிக்கைகள் எனச் சோர்ந்துபோய் இருக்கிறார்கள். எனக்கு எப்போதுமே கவலை அண்டியது இல்லை. அது ஒரு வரம். நிறைய சம்பாதிப்பேன். பிறகு படம் எடுத்து நஷ்டமாவேன். மீண்டும் சம்பாதிப்பேன். கார் வாங்குவேன், வீடு வாங்குவேன். அதெல்லாம் போய் பழைய நிலைக்கு வருவேன். ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாழ்க்கை என்னுடையது. சொத்து சேர்க்க வேண்டும் என்ற கனவெல்லாம் எனக்கு இருந்தது இல்லை.

80-களில் டாட்சன் கார் புது மாடல் வந்தபோது அதை வாங்கியவர்களில் நானும் ஒருவன். சில சமயம் அந்த காருக்கு பெட்ரோல் இல்லாமலும் நிற்பேன். ஒருநாள் வெளியில் செல்ல வேண்டிய அவசியம். காரில் பெட்ரோல் குறைவாக இருப்பதாக டிரைவர் சொன்னார். கையில் இருந்த மூன்று ரூபாயைக் கொடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டுக்கொண்டு வரச் சொன்னேன். பெட்ரோல் பங்கில், ‘சார் காருக்கு ஏன் ஒரு லிட்டர் பெட்ரோல் போடுறீங்க’ என வருத்தப்பட்டிருக்கிறார்கள். டிரைவர் வந்து சொன்னார். ஒரு நிமிடம் யோசித்தேன். நேராக கார் விற்கும் இடத்துக்கு ஓட்டச் சொன்னேன். ‘பெட்ரோல் போடுவதற்கு வசதி வந்ததும் கார் வாங்கிக்கொள்ளலாம்’ என்றேன். டிரைவர் ஆடிப்போய்விட்டார். அப்படித்தான் முடிவெடுப்பேன்.

‘முதல் மரியாதை’ தந்த வெற்றி என்னை உச்சத்துக்குக் கொண்டு போனது. சிவாஜியுடன் நான் நேரடியாகப் பணியாற்றிய படம். ஒரு காவியம் போல இரண்டு ஆண்டுகளுக்கு அந்தக் கதையைச் செதுக்கினேன். பெயரும் பணமும் புகழும் சம்பாதித்துக்கொடுத்த படம் அது. அந்தப் பணத்தில் பெசன்ட் நகரில் அருமையான வீடு வாங்கினேன். உடனே சொந்தப் படம் ஆசை ஒன்று கூடவே வருமே... வந்தது. அந்த வீட்டை விற்றுவிட்டேன். இந்த எதுவுமே என்னை பாதித்தது இல்லை. எந்த அசையா சொத்தும் என்னை அசைத்துப் பார்த்தது இல்லை. அதே நேரத்தில் பழைய ஜூனியர் விகடன் பவுண்டு வால்யூமை யாராவது தொட்டால் கோபமாகிவிடுவேன். புத்தகங்கள் எனக்குச் சொத்து. என்னதான் கம்யூனிஸ்ட் குடும்ப மூளையாக இருந்தாலும் புத்தகச் சொத்துக்களை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


அந்தப் புன்னகை என்ன விலை?

தேனி அருகே தேவாரத்தில் நான், பாஸ்கர், இளையராஜா, அமர் நான்கு பேரும் ஒரு ஹோட்டலில் சாப்பிடச் சென்றோம். தென் மாவட்டங்களில் அந்த நாளில் எல்லா ஹோட்டலிலும் காலையில் கடையைத் திறந்ததும் பல் துலக்கக் கரியும், முகம் கழுவிக்கொண்டதும் நெற்றியில் பூச திருநீறும் வைப்பார்கள். எங்களிடம் இருந்த மொத்தக் காசையும் திரட்டி ஆளுக்கு இரண்டு இட்லி சாப்பிட்டோம்.

அப்போது இரண்டு காலும் இல்லாத ஒருவர், தன் சக்கர வண்டியில் ஹோட்டலுக்கு வந்து நெற்றியில் திருநீறு பூசுவதைப் பார்த்தேன். எனக்குப் பரிதாபமாகிவிட்டது. இரண்டு காலும் இல்லாமல் அவர் என்ன வேலை செய்து பிழைக்க முடியும்? நண்பர்களுக்குத் தெரியாமல் நான் மறைத்துவைத்திருந்த பத்து பைசாவை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவர், ‘‘எனக்கு எதுக்குப்பா?’’ என்றார்.

‘‘பரவாயில்லை, வெச்சுக்கங்க’’ என வற்புறுத்திக் கொடுத்தேன். பாஸ்கருக்கு ‘பசியில் இருக்கிற நேரத்தில் இப்படி தானம்செய்ய வேண்டுமா’ என்ற கோபம். சிறிது நேரத்தில், கால் அற்ற அவரை ஹோட்டல் பையன் கல்லா பெட்டியில் தூக்கி உட்கார வைத்தான். அவர்தான் ஹோட்டல் முதலாளி என்று அப்போதுதான் தெரிந்தது. கல்லாவில் உட்கார்ந்து அவர் என்னைப் பார்த்துப் புரிந்தாரே ஒரு புன்னகை... சான்ஸே இல்லை!

http://www.vikatan.com/juniorvikatan/

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 14 - கலைஞருக்கு ஒரு கதை!

 

 

‘அன்னக்கிளி’ திரைப்படம் வெளிவந்த நேரம். எம்.ஜி.ஆர் அப்போதுதான் தி.மு.க-விலிருந்து வெளியேறி, தன் கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளில் இருந்தார். தி.மு.க, அதி.மு.க தொண்டர்களுக்கு இடையே ஆங்காங்கே பிரச்னை வெடிக்கும். சில நேரங்களில் கட்சித் தலைவர்களின் வீட்டைச் சுற்றியும் டென்ஷன் இருக்கும். அதனால் போலீஸ் பாதுகாப்பு பலமாக இருக்கும்.

அந்த மாதிரி நேரத்தில் ஒருநாள்... ‘கலைஞர் பார்க்க வேண்டும்’ என்று சொன்னதாக என்னை அழைத்தார்கள். வீட்டின் முன்னால் தொண்டர்கள் திரண்டிருக்க, போலீஸ் அதிகமாக இருந்தது. வீட்டின் பின்புறமாக என்னை வரச் சொன்னார்கள். உள்ளே போய்க் காத்திருந்தேன்.

கலைஞர் வந்தார். ‘‘வணக்கம் அண்ணே...’’ என எழுந்து நின்றேன். எதற்கு அழைத்தார் என்பது தெரியவில்லை. நானாகப் பேச்சைத் தொடங்கினேன்.

கலைஞரின் வசனம் கேட்டு சினிமா ஆசை ஏற்பட்டு சென்னை வந்த கதையைச் சொன்னேன். சிரித்துக்கொண்டே கேட்டார். பிறகு, ‘‘சினிமா எடுக்க ஒரு கதை வேண்டும்’’ என்றார்.

p26a.jpg

வசன யுகத்தில் இருந்து சினிமா மாறிக்கொண்டிருப்பதைச் சொன்னேன். ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில், முன்னாள் காதலனே நாயகியின் கணவனுடைய உயிரைக் காப்பாற்றப் போகும் டாக்டராக வருவார். ‘‘என்னை மறந்துவிட்டாயே?’’ என்பார் டாக்டர், தன் முன்னாள் காதலியிடம். அவள் பதிலாகச் சொல்வாள்: ‘‘என் கணவர் உங்க மேல ரொம்ப மரியாதை வெச்சிருக்கார் டாக்டர்.’’ அவ்வளவுதான் வசனம். ‘‘எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது... என் கணவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். நீங்கள் இன்னமும் என்னிடம் காதலை எதிர்பார்ப்பது தவறு. என்னை மறந்துவிடுங்கள். என் கணவரின் உயிரைக் காப்பாற்றுங்கள். அவர் உங்களை நம்பி வந்திருக்கிறார்’’ என்றெல்லாம் நீட்டி முழக்காமல் அந்த வசனம் அமைந்திருக்கும். அந்தக் காட்சியைச் சொன்னேன். கலைஞர் தலையசைத்து சிரித்தார். எவ்வளவு பெரிய அரசியல் தலைவர். சினிமா மீது அவருக்கு இருந்த ஆர்வம் அதிலே தெரிந்தது.

அவர் என்னிடம் ஒரு கதை கேட்டார். நான் அதற்கு, ‘உன்னைவிட மாட்டேன்’ என ஒரு டைட்டில் சொன்னேன். அவருக்குப் பிடித்துவிட்டது. அந்தத் தலைப்பில் கலைஞர் வசனத்தில் ஒரு படம் வரப்போவதாக சில தினசரிகளில் செய்தியும்கூட பின்னர் வெளிவந்தது. ‘‘நான் இன்று பாண்டியன் ரயிலில் மதுரை போகிறேன். நீங்களும் வாங்களேன், பேசிக்கொண்டு போவோம்’’ என்றார்.

‘‘மன்னிக்கணும் அண்ணே, திடீரென்று அழைத்ததால் ஓடி வந்தேன். அப்பா ஆஸ்பத்திரியில் இருக்கிறார். நான் உடன் இருக்க வேண்டும்’’ என்றேன்.

‘‘அப்ப இன்னொரு நாள் பார்க்கலாம்’’ என்றார்.

பிறகு வெவ்வேறு அரசியல் சூழல்கள். மிசா வந்து, எல்லாம் மாறிப்போனது. கலைஞர் வசனத்தில் என்னுடைய படம் வெளிவராமலே போய்விட்டது. தமிழ்த் திரையுலகைத் தன் வசனங்களால் புரட்டிப் போட்ட பெரிய மனிதர் அவர். சினிமா வசனத்தில் ஏற்பட்டுவிட்ட மாறுதலைத் தைரியமாக நான் சொல்ல அனுமதித்ததும், அதைக் கேட்டுக்கொண்டு அவர் வாய்ப்பு தந்ததும் சாதாரண விஷயமில்லை.

இந்திப் பட உலகில் என் திரைக்கதைகளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அனில் கபூர், ஸ்ரீதேவி, தர்மேந்திரா, ஜிதேந்திரா, அனுபம் கெர், கிமி கட்கர் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம், ‘சோனே பெ சுஹாகா’. படத்தின் ஆரம்பக் காட்சி. ஓர் ஏழைத் தம்பதி ரயிலில் பயணம் செய்கிறது. இரட்டைக் குழந்தைகள் வேறு. குழந்தை பாலுக்கு அழுகிறது. ரயிலில் உட்கார இடமில்லை. இந்த நேரத்தில்தான் தெரிகிறது, அந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்று இறந்துபோனது. ரயிலில் இன்னமும் அந்தக் குழந்தையை வைத்திருப்பது நல்லதல்ல. போய்ச் சேர வேண்டிய இடமும் அருகில் இல்லை. அந்தக் குழந்தையை ரயிலில் இருந்து வீசிவிடுவது என முடிவு எடுக்கிறார்கள். கண்ணீரும் தவிப்புமாக அந்தப் பெண்மணி குழந்தையை ரயிலில் இருந்து வீசி எறிகிறாள். கையில் இருக்கும் குழந்தையை வாரி நெஞ்சோடு அணைக்கிறாள். அதிர்ச்சி. அவள் வீசி எறிந்தது, உயிரோடு இருந்த குழந்தையை. ரயிலைவிட்டு இறங்கி, இறந்த குழந்தையைப் புதைக்கையில் போலீஸ் வந்துவிடும். ஆளுக்கொரு திசையில் ஓடுவார்கள். இந்தக் காட்சி படத்தில் இடம் பெறும்போது, ‘கதை, திரைக்கதை ஆர்.செல்வராஜ்’ எனத் திரையில் போடுவார்கள். ஒரு கதாசிரியருக்கு... அதுவும் தமிழ்க் கதாசிரியருக்கு இந்தி மொழிப் படத்தில் இப்படி ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு.

அப்துல் ஹாஃபிஸ் நாடியத்வாலா தயாரித்த படம். பாப்பையா இயக்கினார். பிரமாண்ட வெற்றி. எப்படி எனக்குக் கன்னட மொழியில் சிறந்த தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கிடைத்தார்களோ... அப்படியே இந்தியிலும் நல்ல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அமைந்தார்கள். அதனால்தான் ஒரு காலகட்டத்தில் பெங்களூரு, மும்பை, சென்னை என விமானத்திலேயே சுற்றிக்கொண்டிருந்தேன்.

கன்னடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு தயாரிப்பாளர், ராஜேந்திரசிங் பாபு. அவருடைய பல படங்களுக்குப் பணியாற்றி இருக்கிறேன். மைசூரில் நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு அருகில் அவருடைய வீடு. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் பெயர் அந்த வீட்டின் சுவரில் பொறிக்கப்பட்டு இருந்தது.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


p26.jpg

சிவப்புக் கம்பளம்!

முதன்முதலில் கன்னடத்தில் எனக்கு மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்த படம், ‘நன்ன தேவரு.’ ஒரு வங்கி ஊழியன், சினிமா கதாநாயகனாக வேண்டும் என்ற கனவில் அமெச்சூர் நாடகங்களில் நடிக்கிறான். இந்த நேரத்தில் ஒரு பிரபலமான டாக்டரின் மகள், கதாநாயகனுக்கு அறிமுகமாகிறாள். அந்த டாக்டருக்குப் பெரிய பெரிய சினிமா பிரமுகர்கள் எல்லாம் பரிச்சயம். அவரை வைத்து சினிமா சான்ஸ் பிடித்துவிட வேண்டும் என்பது ஹீரோவின் மனக்கணக்கு. அதற்காக அவனும் அவனுடைய அலுவலக ப்யூனும் ஏகப்பட்ட திட்டங்கள் போடுவார்கள். அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, டாக்டரின் மகளைக் கதாநாயகன் காதலித்துக் கரம் பிடிப்பான்.

அதன்பிறகு, ‘சினிமாவுக்குப் போனால் தன் கணவன் திசை மாறிப் போய்விடுவான்’ என்ற அச்சம் நாயகிக்கு. ‘எங்கே தன் கணவன் சினிமாவில் பிரபலமாகிவிடுவானோ’ என மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். தன் கணவனும் சினிமா நடிகையும் இருக்கும் போஸ்டரைப் பார்த்து, உயரமான கட்டடத்தில் ஏறி அதைக் கிழித்தெறியும் மனநிலைமைக்குப் போய்விடுவாள். காமெடியும் சென்டிமென்ட்டும் பின்னி விளையாடியது. சுஜாதா - அனந்த் நாக் ஜோடியாக நடித்த அந்தப் படம், எனக்குக் கன்னடத்தில் சிவப்புக் கம்பளம் விரித்தது என்றே சொல்ல வேண்டும்.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 15 - செருப்பு போடாமல் வந்த சிவாஜி!

 

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

 

மிழ் சினிமாவின் நடிப்புச் சிகரம் சிவாஜியோடு நான் பணியாற்றிய படங்கள் பல உண்டு. ஆனால், என் பெயர்போட்டுத் திரையில் வெளியான படம், ‘முதல் மரியாதை’. அதைப்பற்றிச் சொல்ல நிறைய தகவல்கள் உள்ளன. அந்தக் கதைக்காக இரண்டாண்டுகள் உழைத்தேன். திருத்தித்திருத்தி நிறைய காட்சிகள் அமைத்தேன். படப்பிடிப்புக்குச் சென்றிருந்த நேரத்தில்கூட ஒவ்வொரு இரவும், மறுநாள் எடுக்கப்போகும் காட்சியை விவாதிப்போம்.

மைசூருக்கு அருகே, சிவசமுத்திரம் என்ற மலைக்கிராமத்தில் படப்பிடிப்பு. காவிரிக்கரை ஓரம் அமைந்த மிக எழில் வாய்ந்த கிராமம். சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலம். சிவாஜி, ராதா, அவர்களின் உதவியாளர்களுக்கு மலைக்கு மேலே அரண்மனை போன்ற கெஸ்ட் ஹவுஸில் அறை ஒதுக்கியிருந்தோம். நான், பாரதிராஜா எல்லாம் வேறோர் இடத்தில்.

தினமும் இரவில், மறுநாள் எடுக்க இருக்கும் காட்சியை மெருகேற்றுவோம். ‘இந்த வசனத்தை இப்படி வைப்போம்... அப்படி வைப்போம்’ என்றெல்லாம் பேசுவோம். பாரதிராஜா காலையில் ஷூட்டிங் போக வேண்டும் என்பதால் தூங்கிவிடுவான். அதன்பிறகு இரவெல்லாம் காட்சிகள், வசனங்களைத் திருத்தி எழுதுவேன். காலையில் நான் தூங்கிக்கொண்டிருப்பேன். அவன் கிளம்பும்போது அந்த வசனப் பக்கங்களைப் படித்துப் பார்த்துப் பூரித்துப் போவான். பாராட்டாக, தூங்கிக்கொண்டிருக்கும் என் தலையைச் சிலுப்பிவிட்டுப் போவான். அது படம் அல்ல; தவம்.

ஒருநாள் ஷூட்டிங் முடிந்ததும் சிவாஜி, ‘‘மறுநாள் எங்கே படப்பிடிப்பு?” எனக் கேட்கிறார். அப்போதுதான் கவனித்தோம். சிவாஜி அன்று முழுவதும் செருப்பு போட்டபடியே நடித்திருப்பதை. தவறு நடந்துவிட்டது. கதைப்படி அவர் செருப்பு அணியக் கூடாது.

p12a.jpg

‘‘நாளைக்கும் இதே காட்சிகள்தான் எடுக்க வேண்டும்’’ என்றான் பாரதி. ‘‘ஏன்?’’ என்றார் சிவாஜி.

‘மாமன் தொட்டுக் கும்பிட்ட காலில் செருப்பு அணிய மாட்டேன்’ என வைராக்கியமாக இருக்கும் கேரக்டர் சிவாஜிக்கு. ‘‘ஷூட்டிங்கில் அதைக் கவனிக்கத் தவறிவிட்டோம்’’ எனச் சொன்னோம். சிவாஜி ஒரு கணம் எங்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்குப் போய்விட்டார்.

அந்தக் கலைஞனின் அக்கறையை அடுத்த நாள் காலையில் பார்த்தேன். அசந்து போனேன். அடுத்த நாளில் இருந்து அவர், செருப்பு அணியாமல்தான் எல்லா நாளும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். செருப்பு, அவர் தங்கியிருந்த அறையிலேயே கிடந்தது. கூடுவிட்டுக் கூடுபாயும் கலைஞன் அவர். அவரைப் பொறுத்தவரை, தவறியும் ஒரு தவறு நடந்துவிடக் கூடாது. எந்தக் கேரக்டரில் நடிக்கிறாரோ... அதுவாகவே தன்னை பாவித்துக்கொள்கிறவர். அவர் செருப்பே இல்லாமல் நடிப்பதால் அவருடைய காலில் முள்ளோ, கல்லோ தைத்துவிடக் கூடாது என்ற கவனம் எங்களுக்கிருந்தது. அவர் நடிக்கப் போகும் இடத்தைச் சுத்தமாகப் பெருக்கி வைக்கச் சொல்லியிருந்தோம். அதைப் பார்த்துவிட்டு, ‘‘ஏன் அந்த இடத்தைப் பெருக்கறீங்க’’ எனக் கேட்டார். ‘‘உங்க கால்ல முள் தைச்சுவிடக் கூடாதேன்னுதான்’’ என இழுத்தோம்.

‘‘அட யாருப்பா நீங்க... பெருக்கறத நிறுத்தச் சொல்லு மொதல்ல. காட்லயும் மேட்லயும் இப்படித்தான் சுத்தமா பெருக்கி வைப்பாங்களா? இயற்கையா இருந்தாத்தானே சரியா இருக்கும்?’’ எனச் சொல்லிவிட்டார்.

அவர் எப்படியும் நடிக்கக் கூடியவர். சாப்பாட்டு ராமனாக நடிக்கச் சொன்னாலும், கோடீஸ்வரனாக நடிக்கச் சொன்னாலும், எதுவுமே அவருக்கு இயல்பாக இருக்கும். எப்படிக் கேட்கிறோமோ, அப்படி நடிப்பார். பாரதிராஜா அவரை மிக இயல்பாக இருந்தால் போதும் என்றே சொல்லி நடிக்கச் சொன்னான். ‘‘என்னப்பா இது? ‘இப்படி வா’ங்கறே... ‘அப்படி நில்லு’ங்கிறே... ‘அங்க பாரு’ங்கிறே... நான் நடிக்கிறனா இல்லையான்னு சந்தேகமா இருக்கு’’ என சிவாஜி சிரிப்பார்.

அந்தப் படப்பிடிப்புக்கான மொத்தப் பணத்தையும் நாங்கள் எடுத்துச் சென்றிருந்தோம். பணக்கட்டுகள் அனைத்தும் என்னுடைய அறையில்தான் இருந்தன. அது எனக்கும் பாரதிராஜாவுக்கும்தான் தெரியும். என்னுடைய படுக்கைக்குக் கீழே கட்டுக்கட்டாகப் பணத்தை வைத்திருந்தேன். பாரதி வருவான். ‘‘செல்வா, ரெண்டு லட்சம் எடு’’ என்பான். ஏதோ செலவுக்குப் பிரித்துக்கொடுப்பான். ‘‘ஒரு லட்சம் எடு’’ என்பான். புரொடக்‌ஷன் மேனேஜரிடம் கொடுத்தனுப்புவான். பெரும்பாலும் நான் அறையிலேயே இருப்பதால், நான்தான் பணத்துக்குக் காவல். வேடிக்கையாக இருக்கும்.

இந்தக் கதை இளையராஜாவுக்குப் பிடிக்கவில்லை. ‘இந்தப் படம் ஓடாது. பாரதி ரிஸ்க் எடுக்கிறான்’ என ஆரம்பத்திலிருந்தே தயக்கத்தோடே இருந்தான் ராஜா. ‘வெற்றி பெற வாய்ப்பில்லாத படத்துக்குச் சம்பளம் வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டான். சம்பளம் வாங்கிக் கொள்ளவில்லை என்பதால் அந்தப் படத்தில் ராஜாவின் இசையை இந்த உலகில் யாராவது ஒரு குறை சொல்ல முடியுமா? அதுதான் ராஜா. பணத்துக்காக இசையை விற்பவன் அல்ல அவன். அந்தப் படத்தின் இசை, ஒரு காவியப் படத்துக்கு, ஓர் இசை மேதை தந்த பரிசு.

p12.jpg

படம் மகத்தான வெற்றியடைந்ததும் ‘‘ஏம்பா... எனக்குக் கொடுக்க இருந்த சம்பளத்தைக் கொடுங்கப்பா’’ என இளையராஜா எவ்வளவோ கேட்டுப்பார்த்தான். பாரதிராஜாவோ, ‘‘எப்ப வேணாம்னு சொல்லிட்டியோ, அதோட விட்டுடு... உனக்குச் சம்பளம் தரவே மாட்டேன்’’ என ஒற்றைக்காலில் நின்றுவிட்டான். நினைத்துப்பார்த்தால் எல்லாம் வேடிக்கையான நினைவுகளாக மனதில் நிற்கின்றன.

சிவாஜி, ராதா, வடிவுக்கரசி, சத்யராஜ், ரஞ்சனி, தீபன், வீராசாமி, அருணா என அந்தப் படத்தின் அத்தனை பாத்திரங்களும் காவியக் கதாபாத்திரங்கள். படத்தின் உச்சபட்சக் காட்சி. அன்று படப்படிப்பில் 92 பேர். காலையில் படப்பிடிப்புக்குக் கிளம்பும் நேரத்தில், பாரதிராஜாவின் திரையுலக குருவான புட்டண்ணா கனகல் மறைந்துவிட்டதாகச் செய்தி. பதறிப்போய்விட்டான் பாரதி. ‘‘நான் உடனே அவருடைய மறைவுக்குப் போயாக வேண்டும்’’ எனக் கதறுகிறான். ‘‘இவ்வளவு கலைஞர்களைக் காக்கவைப்பது சரியில்லை. நாம் இன்னொரு நாள் அவருடைய வீட்டுக்குப் போய்வருவோம்’’ எனச் சொல்லியும், பாரதிராஜா கிளம்பிப் போய்விட்டான்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


‘‘உன்னை விட மாட்டேன்!’’

நான் எழுத்தாளன் மட்டும்தான். எழுத்தை மட்டும் அல்ல, நாட்டையும் ஆள்கிறவர் கலைஞர். 1975 வாக்கில் நான் அவருக்கு எழுதித் தருவதாகச் சொன்ன ‘உன்னை விட மாட்டேன்’ கதையை அதன் பிறகு அவரும் கேட்கவில்லை, நானாகவும் போய்ச் சொல்லவில்லை. 1996-ல் எனக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கினார் கலைஞர். தங்கப்பதக்கத்தைக் கழுத்தில் அணிவித்தவாறு காதோரமாக ஒரு கேள்வியைக் கேட்டார்: ‘‘அந்த ‘உன்னை விட மாட்டேன்’ கதையை எனக்குச் சொல்லவே இல்லையே?’’

என்ன ஒரு நினைவாற்றல்! ‘‘அண்ணே, அது தயாரா இருக்குண்ணே... நீங்க எப்பக் கூப்பிட்டாலும் வந்து சொல்கிறேன்’’ என்றேன். ‘‘உன்னை விட மாட்டேன்’’ எனச் சிரித்தார். தலைப்பைச் சொன்னாரா... என்னைச் சொன்னாரா?

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 16 - ரஷ்யா மளிகைக் கடை!

 

 

‘முதல் மரியாதை’ படப்பிடிப்பிலிருந்து கிளம்பிப்போன பாரதிராஜா, பாதி வழியில் என்ன நினைத்தானோ... மீண்டும் ஸ்பாட்டுக்கு வந்தான். அவன் கண்ணீர் நிற்கவில்லை. படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த இடத்தில் இருந்து, சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் அவனுடைய குருவுக்கு இறுதிச் சடங்கு நடத்திக்கொண்டிருந்தார்கள். இங்கே படப்பிடிப்பு நடத்த அவன் மனம் கேட்கவில்லை. நான்தான் அவனைத் தேற்றினேன். ஒருவழியாக அந்த ஷெட்யூல் முடிந்ததும், நானும் அவனும் புட்டண்ணாவின் இல்லத்துக்குச் சென்று துக்கம் விசாரித்துவிட்டு வந்தோம்.

‘முதல் மரியாதை’ படம் ரிலீஸ் ஆனது. மகத்தான வெற்றி. சிவாஜி சாரின் நடிப்பு, பாரதிராஜாவின் இயக்கம், இளையராஜாவின் இசை... என என் கதைக்கு மகுடம் சூட்டப்பட்டது.

இந்த நேரத்தில் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் இருந்து பாரதிராஜாவுக்கு ஒரு போன். ‘‘ரஷ்யாவுக்கு ‘முதல் மரியாதை’ படம் வேண்டும். ஒரு பிரின்ட் எவ்வளவு?” என விசாரித்தார்கள். அன்றைய தேதியில் 25 ஆயிரம் ரூபாய்தான் பிரின்ட் செலவு. ‘எதற்கும் இருக்கட்டும்’ என பாரதிராஜா ‘ஒரு லட்ச ரூபாய்’ எனச் சொல்லியிருக்கிறான்.

p30b.jpg

ஆனால், அவர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு செக் அனுப்பியிருந்தார்கள். அவர்கள் கேட்டது, ரஷ்யாவுக்கு மட்டும் 100 பிரின்ட். பாரதி இதை எதிர்பார்க்கவே இல்லை. ஏதோ ஒரு பிரின்ட் என்பதால் அந்த ரேட் சொன்னான். 100 பிரின்ட் என மொத்தமாகக் கொடுத்தால், அன்றைய மதிப்பில் ஒரு பிரின்ட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய்கூட இருக்காது. லாபம் கோடிகளில் கொட்டியது. இதை எல்லாம் கேள்விப்பட்டு இளையராஜா ரொம்பத்தான் நொந்துபோனான். ‘இந்தப் படம் ஓடாது, எனக்குச் சம்பளமே வேண்டாம்’ என்றவன் ஆச்சே?

கே.பி ஃபிலிம்ஸ் பாலு... ‘சின்னதம்பி’ படம் எடுத்தவர் என்றால் சட்டெனத் தெரியும். பார்க்கும்போதெல்லாம் பணம் கொடுத்து கௌரவித்த தயாரிப்பாளர். கதாசிரியர்களின் தரம் தெரிந்தவர். என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் ஐம்பதாயிரம் ரூபாயாவது கொடுக்காமல் போகமாட்டார். ‘‘இப்ப எதுக்குப் பணம்?’’ என்றால், ‘‘கதை பண்ணும்போது கழிச்சுக்கலாம்’’ என்பார் பெருந்தன்மையாக.

அவருக்காக நான் எழுதிக்கொடுத்த கதை, ‘வாக்கப்பட்ட பூமி’. பாரதிராஜா இயக்கத்தில் சரத்குமார் நடிப்பதாக இருந்தது. ‘வாக்கப்பட்ட பூமி’, ஓர் உண்மைக்கதை.

அலங்காநல்லூர் எப்படி ஜல்லிக்கட்டுக்குப் பெயர் பெற்றதோ, அப்படி அலங்காநல்லூருக்கு அருகே இருக்கும் கோட்டைமேடு, ‘ராமானுஜம்’ என்பவரால் பெயர் பெற்றது. பெரிய விவசாயி அவர். அருமையான மனிதர். அவருடைய நிலத்தில் அந்த ஆண்டு அமோக விளைச்சல். பயிர்கள் எல்லாம் அறுவடைக்காகக் காத்திருந்தன. ஒரு வருட உழைப்பின் அறுவடைக்கான நேரம். சுற்றுப்பட்டு கிராமங்களில் இருந்த சில பொறாமைக்காரர்கள், பயிரை எரித்து நாசம் செய்ய களத்துக்கு வந்தனர். விஷயம் அறிந்து அவர்களுடன் போராடினார். பலரை வெட்டி வீழ்த்தினார். ஆங்கிலேய அரசு அவரை அந்தமான் சிறையில் அடைத்தது.

சுதந்திரப் போராட்டக் காலகட்டம் அது. அந்தச் சிறையில் நிறையக் கம்யூனிஸ்ட் தோழர்கள் இருந்தனர். சிறையில் அவருடைய சிந்தனை மாறியது. புடம்போட்ட கம்யூனிஸ்ட்டாக வெளியே வந்தார். வந்தவர், நேராக மதுரை மண்டைக்காரன் தெருவுக்குப் போனார். அங்கேதான் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் இருந்தது. ஊருக்குத் திரும்பி வந்தவர், ‘ரஷ்யா மளிகைக்கடை’ என்ற பெயரில் ஒரு கடை தொடங்கினார். அரிசி, பருப்பு வகைகள் எல்லாம் கடையில் இருக்கும். கடையில் கல்லா பெட்டியில் ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பொருட்களின் விலை அங்கே எழுதப்பட்டிருக்கும். எடைக்கு ஏற்ப பணத்தை மக்களே கல்லா பெட்டியில் போட்டுவிட்டுப் போக வேண்டியதுதான். அப்படி ஒரு கடை. அவர், தன்னால் வெட்டுப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்தார். அந்தக் குடும்பங்களுக்கு என்னென்ன தேவைகள் இருந்தனவோ, அத்தனையையும் கேட்டறிந்து தீர்த்துவைத்தார். அவர் என் சித்தப்பா சங்கரய்யாவின் நண்பரும் ஆனதால், அவருடைய மூத்த மகன் டிமோ சங்கருக்கு என் சகோதரியை மணமுடித்து வைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. (டிமோ என்பது ஒரு ரஷ்ய தளபதியின் பெயர். நாஜிப் படைகளை எதிர்த்து ஜெர்மனியில் நுழைந்த முதல் தளபதி அவர்தான். அந்தப் பெயரைத்தான் தன் மகனுக்கு ராமானுஜம் வைத்திருந்தார்.) அவருடைய இறுதி ஊர்வலத்தில் அவரைச் சுமந்து வந்தவர்கள், அந்தக் கிராமத்தின் ஏழை எளிய மக்கள்தான். இந்தப் பின்னணியில் ‘வாக்கப்பட்ட பூமி’ கதையைப் பின்னியிருந்தேன்.

p30a.jpgமுதலில் இந்தக் கதையை நானே தயாரிப்பதாகத்தான் இருந்தேன். விஜயகாந்திடம் கதையைச் சொன்னேன். அவரும் எப்போது கேட்டாலும் நடித்துக்கொடுக்கத் தயாராக இருந்தார். இந்த நேரத்தில் ராஜ் ஃபிலிம்ஸ் ராமநாதன் வந்தார். ‘‘உங்களிடம் பாரதிராஜா, விஜயகாந்த் தேதிகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர்கள் இருவரின் கால்ஷீட்டை வைத்து நான் ஒரு படம் எடுக்கலாம் என நினைக்கிறேன்’’ என்றார். ஏற்கெனவே அவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். கதாசிரியர்களுக்கு உதவுவதில் வள்ளல். உடனே, அந்த இருவரிடமும் பேசி, எனக்குக் கொடுத்த தேதிகளில் ராஜ் ஃபிலிம்ஸுக்கு படம் பண்ணும்படிக் கேட்டுக்கொண்டேன். அவர்களும் சம்மதித்துவிட்டார்கள். அப்படி வந்ததுதான் ‘தமிழ்ச்செல்வன்’.

‘வாக்கப்பட்ட பூமி’ தயாரிப்பு வேலை இப்படியே தள்ளிப் போய்க்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் என் தம்பி கண்ணன், ‘ராசய்யா’ படத்தை இயக்க ஆரம்பித்திருந்தான். அந்தப் படத்தின் கதை என்னுடையது. அதனால் அந்தப் படவேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். படத்தின் பாடல் பதிவுக்காக இளையராஜா மும்பைக்கு அழைத்தான். நான், கவிஞர் வாலி, ராஜா எல்லோரும் மும்பைக்குச் சென்றுவிட்டோம். ‘காதல் வானிலே... காதல் வானிலே’ பாடல் பிறந்தது மும்பையில்தான். ‘ராசய்யா’ பட வேலைகளில் மும்முரமாக இருந்த நேரத்தில் கே.பி. ஃபிலிம்ஸ் பாலு ‘வாக்கப்பட்ட பூமி’ கதையைக் கேட்டு வந்தார். அவருக்கு ஏற்கெனவே கடன்பட்டவன்... கடமைப்பட்டவன் நான். உடனே கதையை அவரிடம் கொடுத்தேன். நாயகனாக சரத்குமார் நடிப்பதாக இருந்தது. படத்துக்கான அறிவிப்புகள் வெளியாகின.அப்போது பலப் படங்களில் சரத் பிஸி. சரத்குமார் தேதி கொடுத்த நேரத்தில் பாரதிராஜா பிஸி. இப்படியே இழுபறியாகப் போய்... அந்தக் கதை அப்படியே தங்கிவிட்டது.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


ஒரே பார்வை!

ரு முறை மும்பைக்குப் பறந்தபோது, விமானத்தில் என் பக்கத்து இருக்கையில் பயணித்த கண் மருத்துவர், என்னிடம் பேசிக்கொண்டே வந்தார். என் கண்களைப் பார்த்துவிட்டு, ‘‘உங்கள் வலது கண்ணில் இவ்வளவுப் புரை விழுந்திருக்கிறதே... நீங்கள் ஃப்ளைட்டை விட்டு இறங்கியவுடன் என் கிளினிக்குக்கு வாருங்கள்’’ என்றார். எனக்கோ ஏகப்பட்ட டிஸ்கஷன் வேலைகள். ‘‘சென்னையில் போய்ப் பார்த்துக்கொள்கிறேன்’’ எனச் சொல்லிவிட்டேன்.

சென்னை வந்ததும் கண் மருத்துவமனைக்குப் போனேன். ஒரு தமிழறிஞரின் மகன் நடத்தும் மருத்துவமனை அது. அவரும் ஆபரேஷன் செய்தாக வேண்டும் என உறுதிப்படுத்தினார். அங்கு வேறு ஒரு மருத்துவர் எனக்கு ஆபரேஷன் செய்தார். ஒரு கொடுமை நடந்தது. வலது கண்ணுக்குப் பதில் இடது கண்ணில் ஆபரேஷன் செய்துவிட்டார். அன்று முதல், ஒரு கண்ணில் பார்வை போய்விட்டது. ‘கேஸ் போடுங்கள், நஷ்ட ஈடு கேளுங்கள்’ என எவ்வளவோ சொன்னார்கள்.

என் சிறுவயதில், ‘தினமும் 80 பக்கங்கள் படிக்க வேண்டும்’ என என் தந்தை எனக்கு அறிவுரை சொன்னார். அதை இன்றும் பின்பற்றுகிறேன். அதற்கு இந்த ஒரு கண்ணே போதும் என விட்டுவிட்டேன்.

http://www.vikatan.com/juniorvikatan/2017-jun-04/serial/131587-cinema-history-of-annakili-rselvaraj.html

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 17 - புழல் சிறையில் ரேகா!

 

 

ஒரு நாள் கே.பி. ஃபிலிம்ஸ் பாலுவும் சத்யராஜும் வீட்டுக்கு வந்தார்கள். சத்யராஜை வைத்து ஒரு படம் செய்யத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார் பாலு. அவருக்குக் கடமைப்பட்டவனாச்சே? அவருக்காக ஒரு கதையை உருவாக்கினேன்.

மிகப் பெரிய தென்னந்தோப்பு உரிமையாளர். அவரிடம் வேலை செய்யும் கூலி விவசாயிகள். கூலி விவசாயிகள் கடன் கேட்டால், ஏதாவது அடமானப் பொருளைத் தந்தால்தான் கடன் தருவது என்பது அந்த உரிமையாளரின் பழக்கம். நிலமோ, நகையோ அடமானம் வைக்காமல் பணம் தரமாட்டார். தன் கணவருக்கு வைத்தியம் பார்க்கக் கடன் கேட்டு வருகிறார் சுஜாதா. அடமானம் வைக்க என்ன இருக்கிறது என்கிறார் எஜமான். அந்த ஏழைப் பெண்ணிடம் எதுவுமே இல்லை. ஆனால், தன் கணவனின் உயிரை எப்படியாவதுக் காப்பாற்றியாக வேண்டும். ‘குழந்தையை அடமானம் வைக்கிறேன்’ என்கிறாள். ஆனால், குழந்தையும் அவளிடம் இல்லை. ‘என் வயிற்றில் வளரும் குழந்தையை அடமானமா வெச்சுக்கிட்டு பணம் கொடுங்க’ என்கிறாள். ‘என்னம்மா இப்படி கேட்கிறே?’ என அந்த முதலாளியும் இரக்கப்பட்டுப் பணம் கொடுக்கிறார்.

p18.jpg

ஆனால், கணவனைக் காப்பாற்ற முடியவில்லை. ஊரில் பிழைக்கவும் வழியில்லை. பெற்ற பிள்ளையை ஓர் அதிகாலையில் எஜமானரின் வீட்டு வாசலில் போட்டுவிட்டு எங்கோ போய்விடுகிறாள். அந்தக் குழந்தைதான் சத்யராஜ். இப்படி ஆரம்பிக்கும் அந்தக் கதை.சுந்தர்.சி இயக்கத்தில், ‘அழகர்சாமி’ என்ற பெயரில் படம் வெளியானது. நாங்கள் எதிர்பார்த்ததுபோல அந்தப் படம் உருவாகவில்லை. உருக்கமான காட்சிகள் எதிர்பார்த்தபடி இடம்பெறவில்லை.

டி.ராமா நாயுடு, பிரமாண்டப் படங்கள் எடுப்பதில் ஸ்பெஷலிஸ்ட். அவருக்கு நான் ஒரு படம் இயக்கிக் கொடுத்தேன். வெறும் ஏழு லட்ச ரூபாய் பட்ஜெட். படம், ‘சிவப்பு நிறத்தில் சின்னப்பூ’.

ரேகா கதாநாயகி. கண்டசாலாவின் மகன் ரத்னகுமார் ஹீரோ. வில்லனாக நடித்தவர், நடிகர் விக்ரமின் தந்தை வினோத். கணவனைக் கொன்றதாகப் பழி சுமத்தி ரேகாவைச் சிறையில் அடைத்துவிடுகிறார்கள். ரேகாவுக்கு இரண்டு குழந்தைகள். மூத்த பையனுக்குப் பத்து வயது. அவன் தங்கைக்கு ஆறு வயது. அம்மா அடைபட்டிருக்கும் சிறையின் சுவர் அருகே அந்தப் பிஞ்சுக்குழந்தைகள் வந்து, ‘அம்மா... அம்மா...’ என அழும். சிறையில் இருக்கும் அம்மா, அங்கிருந்து குழந்தைகளின் பெயர் சொல்லி அழுவார். அந்த இடத்தில் ஒரு பாடல் ஒலிக்கும். ஜெய்சேகர் இசையில் முத்துலிங்கம் எழுதிய பாடல் அது.

‘‘கண்ணின் மணிகள் ரெண்டும் வாட...
கங்கை நதியும் கண்ணில் ஓட...’’

அம்மாவைப் பார்க்க, அந்த இரண்டு பிஞ்சுகளும் வாரத்துக்கு ஒரு முறை சிறைச்சாலைக்கு வருவார்கள். ஒருநாள் அந்தச் சிறுவன் மட்டும் வருகிறான். ‘‘தங்கை எங்கே?’’ என்கிறார் தாய். பையில் இருந்து தங்கையின் அஸ்தியை எடுத்துக் கொடுக்கிறான். தங்கை எப்படி இறந்தாள் என்ற ஃப்ளாஷ்பேக் ஓடும். சிலரது வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. ‘பட்ட காலிலே படும்’ என்பதுபோல.

அப்போது புழல் சிறைக் கட்டுமானப் பணி முடியும் நிலையில் இருந்தது. அந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பும் அங்குதான் நடந்தது. காலை ஐந்து மணிக்கெல்லாம் அங்கே போய்விடுவோம். மாலை திரும்புவோம். 25 நாள்கள் ஷூட்டிங். ரேகா மிக அருமையாக நடித்திருந்தார். எல்லோருமே அதைக் கலைப் படம் என்பதை உணர்ந்து, குறைந்த சம்பளத்தில் நிறைவாக நடித்துக்கொடுத்தனர்.

கடைசியில் அந்தச் சிறுவன், தன் தந்தையைக் கொன்றவரைப் பழி தீர்த்துவிட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குப் போய்விடுகிறான். அப்போது ‘நிரபராதி’ என ரேகா ரிலீஸாகி வருகிறார். தன் மகன் இருக்கும் சீர்திருத்தப்பள்ளியின் சுவர் அருகே வந்து, மகன் பெயரைச் சொல்லி அழுகிறார். மகன் இப்போது உள்ளே இருந்து ‘அம்மா... அம்மா...’ எனக் கதறுகிறான். மீண்டும் அந்தப் பாடல் ஒலிக்கும்.

படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் கண்ணீர்விட்டனர். தெலுங்கு திரையுலகின் பிரமாண்ட இயக்குநர்கள் தாசரி நாராயண ராவும் ராகவேந்திர ராவும் முதலில் படத்தைப் பார்த்தனர். தாசரி சொன்னார்: ‘‘படம் பிரமாதமா வந்திருக்கு. ஆனா, ராகவேந்திர ராவ் இப்ப ஒரு படம் எடுத்திருக்காரு. குடங்களை வெச்சு ஒரு பாட்டு சீன். அதுக்கே ஏழு லட்ச ரூபா சரியா போச்சு. நீங்க இப்படி ஏழு லட்ச ரூபாய்ல படம் பண்ணினா எங்க கதி என்னாகிறது?’’

நந்தனத்தில் ஆண்டாள் தியேட்டரில் ப்ரிவியூ. படம் பார்த்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ரசித்தனர். பாரதிராஜா படம் முடிந்து வெளியே வந்து, பதற்றத்தில் சிகரெட்டில் ஃபில்டர் வைத்த பகுதியில் பற்ற வைத்துப் புகைத்தது நினைவுக்கு வருகிறது. மக்கள் படம் பார்த்துவிட்டு, ‘அந்தச் சிறுவனை எப்படியாவது வெளியே கொண்டு வாருங்கள்’ என வழக்கு நடத்துவதற்குப் பணம் அனுப்பியது எல்லாம் நினைவுக்கு வருகிறது.

படத்தைப் பார்த்து என்னை என்.எஃப்.டி.சி தேர்வுக்குழுத் தலைவராக  நியமித்தார்கள். சேதுமாதவன் போன்றவர்கள் வாழ்த்தினார்கள். அந்தப் படம் என்னை வேறு ஒரு ரேஞ்சுக்குக் கொண்டு சென்றது என்பதற்காகத்தான் இவ்வளவையும் சொல்கிறேன்.

படம் முடிந்த நேரத்தில் வெறும் ஏழு லட்ச ரூபாயில் ஒரு படத்தை முடித்ததை ராமா நாயுடு, பெருமையாகச் சொன்னார். அவருடைய மேனேஜரைக் கூப்பிட்டு, ‘‘ஏழு லட்சம் கொடுத்தோம். மேலே ஏதாவது செலவாகியிருந்தால் அதை செட்டில் செய்துவிடுங்கள்’’ என்றார்.

‘‘நீங்கள் எனக்கு 800 ரூபாய் தர வேண்டும். அது உங்களிடமே இருக்கட்டும். நீங்கள்தான் எனக்குப் பாக்கி தரவேண்டும் என்று பிறகொரு நாள் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன்’’ என்றேன். அவர் சிரித்துவிட்டுப் போய்விட்டார். இதோ... இந்த அத்தியாயத்தில் சொல்லிவிட்டேன், அந்தப் பெருமைக்குரிய மனிதரைப் பெருமைப்படுத்தும்விதமாக.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


சுடச்சுட ஐஸ்க்ரீம்!

நான் பெங்களூரு சென்றால், என்னை அழைத்துச் செல்ல கார் எடுத்து வருபவர்களில் பிரபா ராஜ் முக்கியமானவர். என்னுடைய தீவிர ரசிகை. பெங்களூரில் இருந்து மைசூருக்கு ஒன்றரை மணி நேரத்தில் கூட்டிப் போய்ச் சேர்த்துவிடுவார். அவ்வளவு ஸ்பீடு. இப்போது அவருக்கு 90 வயது. நான் சொல்வது 30 வருஷங்களுக்கு முன்பு. மிகப் பெரிய தயாரிப்பாளர். அவருடைய கணவரை நாங்கள் எல்லோரும் ‘டாடி’ என்றுதான் அழைப்போம். ஏர்போர்ட்டில் இருந்து பிரபா ராஜ் என்னை மைசூருக்கு அழைத்துச் செல்லும் வழியில், ஏர்லைன்ஸ் என்று ஒரு ஹோட்டல் உண்டு. அங்கே சுடச்சுட ஐஸ்க்ரீம் வாங்கித் தருவார். ‘சுடச்சுட’ என்றால் உண்மையிலேயே சூடு. கையில் பிடிக்க முடியாது. ஆனால், ஐஸ்க்ரீமின் அதே சுவை. என் கதைகளின் மீது அப்படி ஒரு பிரியம் பிரபாவுக்கு. பேசச் சொல்லிக் கேட்டுக்கொண்டே வருவார். மேன்மையான மனுஷி. எல்லோரையும் நாம் பணத்தை வைத்து எடை போடப் பழகிவிட்டோம். அது தப்பு. மனதை வைத்து எடைபோடும் நல்ல பண்பு வேண்டும் என்பதை உணர்த்திய நல்ல பண்பாளர் அவர்.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 18 - ஜல்லிக்கட்டு கனகா!

அது ஒரு வங்காள மொழிப் படம். ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கதை. அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பாதுரி, ஆரம்பக் காலத்தில் நடித்தது. சின்னஞ்சிறு பெண்ணாகச் சுட்டித்தனமாக நடித்திருப்பார். மரங்களில் ஏறி மாங்காய் திருடும் வால்தனமான கேரக்டர். அப்படி அவர் ஒரு மா மரத்தில் ஏறி மாங்காய் கடித்துக்கொண்டிருக்கும்போது, ஆற்றோரத்தில் ஒரு குடும்பம் படகில் இருந்து இறங்குகிறது. சுட்டிப்பெண்ணாயிற்றே? கடித்துக்கொண்டிருந்த மாங்காயை எடுத்து அவர்கள் மீது வீசுவாள். அந்த மாங்காய் ஒரு இளைஞன் மீது விழும். திரும்பிப் பார்த்து, சிரித்தபடிப் போய்விடுவான்.

சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணின் உறவினர்கள் அவளைத் தேடி வருவார்கள். வீட்டுக்கு அழைத்துப்போய் அவசர அவசரமாக அலங்கரித்து உட்கார வைக்கிறார்கள். எந்தக் குடும்பத்தை நோக்கி மாங்காயை வீசினாளோ, அந்தக் குடும்பம்தான் இவளைப் பெண் பார்க்க வருகிறது. யார் மீது மாங்காய் விழுந்ததோ, அவன்தான் மாப்பிள்ளை. விவரம் தெரியாத விளையாட்டுப் பெண் என்பது கணவனுக்குத் தெரிகிறது. திருமணம் ஆன பின்பும் அவளுடைய விளையாட்டுகளை ரசிக்கிறான். ஒரு தோழிபோல பாவிக்கிறான். ‘கைகொடுத்த தெய்வம்’ சாவித்திரி கேரக்டர் மாதிரி.

p18a.jpg

ஒருநாள் வேலை விஷயமாக கணவன் வெளியூர் போகப் போவதாகச் சொல்கிறான். ‘‘சரி... சரி... போயிட்டு வாங்க’’ என்கிறாள். ‘விளையாட நேரம் கிடைக்குமே’ என்ற எண்ணம் அவளுக்கு. கணவன் படகில் ஏறி சற்று தூரம் போனதும் அவளுக்கு ஒரு ஏக்கம் பிறக்கிறது. கணவனின் பிரிவை நிஜமாகவே அப்போதுதான் உணர்வாள். அவள் கண்களில் மெல்லிய நீர்த் திரை அரும்பும். இப்படி ஒரு கதை.

அந்தப் பெண்ணைப் போலத் தமிழில் ஒரு கேரக்டர் பண்ண வேண்டும் என நினைத்தேன். ‘கோயில் காளை’ கதையில் கனகாவின் கதாபாத்திரம் அப்படி அமைக்கப்பட்டதுதான். விஜயகாந்த் ஓர் ஊருக்குப் பெண் பார்க்க வருவார். ஊருக்குள் நுழையும்போது, ஒரு தென்னந்தோப்பைக் கடக்கிறார்கள்; இளநீர் குடிக்க நினைக்கிறார்கள். தென்னை மரத்தில் ஏறி ஒரு பெண் இளநீர் பறித்துப் போடுகிறாள். வழியில் இளநீர் பறித்துப் போட்ட அதே பெண்ணைத்தான், அவர் பெண் பார்க்கப் போகிறார் எனக் கதையை உருவாக்கியிருந்தேன். அந்தப் பெண்ணாக கனகா நடித்தார். முழுக்க முழுக்க அந்த ஜெயா பாதுரி பாதிப்பில் உருவாக்கியதுதான் இது.

அடுத்த கட்டமாக இன்னொரு காட்சியையும் சேர்த்தேன். விஜயகாந்தோடு திருமணம் ஆகி ஒரு டென்ட் கொட்டகையில் படம் பார்க்கப் போவார் கனகா. நியூஸ் ரீல் ஓடும். ‘பீகாரில் வெள்ளம்...’ போல சில நிகழ்வுகள் ஓடும். அடுத்து, ‘ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்கிய பெண்’ எனக் காட்டுவார்கள். வேறு யார்? சாட்சாத் கனகா. வால்தனமான ஒரு பெண் எப்படி மனைவியாக மாறுகிறாள் என்பதைச் சொல்லியிருந்தோம். கங்கை அமரன் இயக்கித் தயாரித்த படம். இளையராஜா இசை வார்த்தார். வங்காளப் படம், தாகூரின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது என்றேனே... அதுதான் அந்தப் படத்தின் ஜீவன்.

நூல்களைப் படிப்பதும் நூலாசிரியர்களைப் பார்ப்பதும் எனக்குப் பிடித்த விஷயங்கள்... அப்படி எனக்குப் பழக்கமான ஒரு தமிழ்ச் சான்றோர் யார் தெரியுமா? சாலை இளந்திரையன் அய்யா.

மதுரையில் பள்ளி மாணவனாக இருந்தபோதே இளங்குமரனார், அப்பாதுரை போன்றவர்களிடம் தமிழ் பயின்ற வாய்ப்பை முன்பே சொல்லியிருக்கிறேன். தமிழறிஞர்களைத் தேடிப் போய்ப் பழகிக்கொள்வது எனக்குப் பிடிக்கும். அப்படி சென்னையில் எனக்குப் பழக்கமானவர்கள் சான்றோர்களான சாலை இளந்திரையனும் அவருடைய மனைவி சாலினி இளந்திரையனும் ஆவர். சென்னைக்கு வரும்போது எனக்குத் தொலைபேசியில் சொல்வார்கள். ‘‘நாங்கள் சென்னை வருகிறோம். சந்திப்பதற்கு வாய்ப்பு அமைந்தால் மகிழ்வோம்’’ என்பதாக மிகவும் நாகரிகமாக அந்த அழைப்பு இருக்கும். சென்னைக்கு அவர்கள் வந்தால் பிராட்வேயில் இருக்கும் பாரி நிலையத்துக்கு இன்ன நேரம் வருவோம் எனச் சொல்வார்கள். நான் அந்த நேரத்தில் அங்கு போவேன்.

பக்கத்திலே ஒரு ஹோட்டலுக்கு அழைத்துப் போவார். இரண்டு பேர் மட்டும் பேசுவதற்கான டேபிளில் அமர்ந்துகொள்வோம். சாலினியாரும் வந்தால் மூன்று நாற்காலி மட்டும். ஒரு நாற்காலியை எடுத்துவிடச் சொல்வோம். வேறு யாராவது அங்கு அமர்ந்து, பேசுவதற்குத் தடையாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காக. என்னைச் சாப்பிட வைக்க வேண்டும் என்பதற்காகவே அவரும் ஏதாவது சாப்பிடுவார். அது நன்றாகவே தெரியும். தமிழிலக்கியப் பெருமையைப் பற்றி மிக அழகாக எடுத்துச் சொல்வார். ஒரு சமயம் அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன். ‘‘கோ என்றால் அரசன். இளம் கோ என்றால் சிற்றரசன். சேரன் செங்குட்டுவனின் இளவல் இளங்கோ என்பது புரிகிறது. அப்படியானால் இளங்கோவுக்கு என்ன பெயர்?’’ எனக் கேட்டேன். இந்தக் கேள்விக்காக அவர் மகிழ்ந்தார். ‘‘ஆய்வுக்குரிய கேள்வி’’ என்றும் சொன்னார்.

இப்படி நான் அடிக்கடி அவரைப் பற்றிச் சொல்வதைக் கேட்டு ஒரு முறை ஆர்.டி.பாஸ்கர், ‘‘நானும் உனக்கு ஒரு அறிஞரை அறிமுகப் படுத்துகிறேன்’’ என்றார்.

‘‘அவர் எங்கே இருக்கிறார்?’’ என்றேன்.

‘‘திருச்சி.’’

‘‘சரி. பஞ்சு வீட்டு விசேஷம் ஒண்ணு இருக்கு. காரைக்குடி போகணும். அப்பப் பார்க்கலாம்’’ எனத் திட்டமிட்டோம். அவரைச் சந்தித்தது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


p18.jpg

வீரப்பன் காட்டுக்குள்..!

யாரிப்பாளர் ராஜேந்திர சிங் பாபுவுக்காக ஒரு கதை உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தோம். கதை ஒரு கட்டத்துக்குப் பிறகு நகரவே இல்லை. தினமும் இப்படியே போய்க்கொண்டிருக்க, ராஜேந்திர சிங் ஒரு நாள் காலை ஹோட்டல் அறைக்கு வந்தார். மதிய உணவுக்காக பிஸிபேலா பாத், தயிர் சாதம் என பார்சல்களை வாங்கிக்கொண்டார். ‘‘எங்கே போகிறோம்’’ என்றேன். ‘‘ஏதாவது ஒரு ஷாக் கொடுத்தால்தான் கதை நகரும். அதுக்காகத்தான் ஓர் இடத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்’’ என்றார். அவர் அழைத்துச் சென்றது சத்தியமங்கலம் காடு. அப்போது கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை, வீரப்பன் கடத்திவைத்திருந்தார். காட்டில் ஒரு அமைதியான இடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ‘‘உங்களுக்குப் பயமாக இல்லையா?’’ என்றார் சிங். ‘‘வீரப்பன் என்னுடைய ஒரு கதையாவது பார்த்திருப்பார். அதைச் சொல்லி நான் தப்பித்துக்கொள்வேன்’’ என்றேன். வீரப்பன் எங்களை நகர்த்திக்கொண்டு போகவில்லை; ஆனால், கதை நகரத் தொடங்கிவிட்டது.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 19 - மணிரத்னம் வாங்கித் தந்த பேய் மீன்!

 

 

ஆர்.டி.பாஸ்கர் எந்த அறிஞரை அறிமுகப்படுத்தப்போகிறார் என்பது தெரியாமலேயே அவருடன் பயணமானேன். காரில் காரைக்குடி நோக்கிப் பயணம். ஆங்காங்கே நிறுத்தி, சாப்பிட்டு, ஓய்வெடுத்து மத்தியான வேளையில் திருச்சி போய்ச் சேர்ந்தோம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். ‘நாம் பார்க்கப் போவது கோயிலில் ஏதோ பெரியவராக இருக்குமோ’ என்று நினைத்தேன். கோயிலுக்குச் செல்லும்முன் ரகசியத்தை உடைத்தார் பாஸ்கர். ‘‘ராமானுஜர் உடலைப் பச்சைக் கற்பூரத்தால் பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். அவரைத்தான் பார்க்கப் போகிறோம்’’ என்று பாஸ்கர் சொன்னார்.

காரில் வெகுதூரம் பயணம் செய்து வந்ததால், ‘‘காலையில் வந்துவிடுங்கள்’’ என்று கோயில் பிரமுகர்கள் சொல்லிவிட்டார்கள். திருச்சியில் என் நண்பன் முத்துகிருஷ்ணனிடம் பேசி, ஆனந்தா லாட்ஜில் ரூம் போடச் சொன்னேன். அவர் ஒரு சமூக சேவகர், வழக்கறிஞர். சென்னையைப் பெருவெள்ளம் மூழ்கடித்தபோது நிவாரணப்பணிகளில் ஈடுபட்டவர். அவர்தான் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். மறுநாள் காலை குளித்துவிட்டு ஃப்ரெஷ்ஷாகக் கோயிலுக்குப் போனோம்.

p30.jpg

தீப ஒளியில் ராமானுஜர் அமர்ந்திருக்கும் அந்தக் காட்சியைப் பார்த்தேன். உடம்பெல்லாம் பரவச அலை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சீர்திருத்தவாதி. கலைஞர் சொல்வது போல, மதத்தில் புரட்சி செய்த மகான். இவரைத்தான் பார்க்கப் போகிறோம் என முன்பே தெரிந்திருந்தால் இவரைப் பற்றி நிறைய படித்துவிட்டு வந்திருக்கலாமே என யோசனை. பார்க்கப் பார்க்க என் கண்களில் நீராக வழிகிறது. என் மனதில் என்ன ஓடுகிறது என்பதை என்னாலேயே உணர முடியவில்லை. இந்திய மண்ணில் உதித்த மாபெரும் தத்துவஞானிக்கு அருகே நிற்கிறோம் என்கிற பெருமிதம். அமைதியாக வெளியே வந்தோம். நெஞ்சமெல்லாம் ராமானுஜர் நிறைந்து இருந்தார். அங்கு யாரையுமே அனுமதிக்க மாட்டார்கள். அனுமதித்தாலும் சில நிமிடங்களிலேயே போகச் சொல்லிவிடுவார்கள். இளையராஜா, ஸ்ரீரங்கம் கோபுரப் பணிக்கு நன்கொடை வழங்கியவன் என்பதால், பாஸ்கருக்கு அந்த அனுமதி எளிதில் கிடைத்தது.

அடுத்து காரைக்குடிப் பயணம். காலையிலேயே பஞ்சு வீட்டு விசேஷம். நாங்கள் மாலையில் போய் நின்றோம். ‘‘எப்ப வரச் சொன்னா எப்ப வர்றீங்க?’’ என்றார். ‘ராமானுஜரைப் பார்த்துவிட்டு வந்தோம்’ என்று விஷயத்தைச் சொன்னோம். பஞ்சு சாருக்கு ஏக்கமாகிவிட்டது. ‘‘என்னிடம் சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பேனே?’’ என்றார். இன்று நினைத்தாலும் ராமானுஜரை அத்தனை அருகில் பார்த்த நினைவு பரவசத்தை ஏற்படுத்திவிடும்.

மணிரத்னம் சாருடன் நான் முதன்முதலில் பணியாற்றியது, ‘தாஜ்மஹால்’ என்ற படத்துக்காக. பாரதிராஜா இயக்கம். பாரதிராஜாவின் மகன் மனோஜ் கதாநாயகனாக அறிமுகமான படம். படத்தின் கதை விவாதங்களில் மணிரத்னம் பங்கேற்றபோது, நான் அவருடன் இருந்தேன். எத்தனை பண்பான மனிதர் என்பதை அறிந்தேன்.

அந்தப் படத்தின் கதைக்கான கீற்று, ஒரு சாளுக்கிய மன்னனின் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டது. மைசூரையொட்டி ஒரு மலையில் அமைந்திருக்கிறது அந்தக் கோட்டை. தன் காதல் மனைவிக்காக அந்த மன்னன் அதைக் கட்டினான். கட்டி முடித்ததும் தன் மனைவியை அழைத்துச் சென்று காட்டினான். அகமகிழ்ந்து போனாள் மனைவி. பூரித்துப் போன அவள், ‘‘உனக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?’’ என்று கேட்கிறாள்.

‘‘என்ன சொன்னாலும் செய்வாயா?” என்கிறான்.

‘‘என்ன கேட்டாலும்’’ என்றாள் அவள்.

‘‘இதோ... இந்த மலையில் இருந்து குதிக்கச் சொன்னால் குதிப்பாயா?’’

கேட்ட அடுத்த வினாடி அங்கிருந்து அவள் குதித்துவிட்டாள். இது அந்த மலை மாளிகையைப் பற்றிச் சொல்லப்படும் கதை. இதைத்தான் ‘தாஜ்மஹால்’ கதையில் வேறு ஒரு மாதிரி சேர்த்தேன்.

அந்தப் படம் முடிந்து ஒருநாள் என்னை மணி சார் அழைத்தார். நான் அவருடைய அலுவலகத்துக்குப் போனேன். என்னை அவருடைய நாற்காலியில் அமரும்படி சொன்னார். ‘‘என்ன சார் இதெல்லாம்... நீங்க உட்காருங்க. நான் இந்தப் பக்கம் உட்காருகிறேன்’’ என்றேன். வற்புறுத்தி என்னை அவருடைய நாற்காலியில் உட்கார வைத்தார்.

‘‘எனக்கு ஒரு கதை தரவேண்டும். எவ்வளவு மணி வேண்டும்?’’

நான் சொல்லவில்லை. கார் வரை வந்து வழியனுப்பினார். ஒரு செக்கைக் கொடுத்தார். நான் எதிர்பார்க்காத தொகை.

அவருக்காக நான் கலந்துகொண்ட கதை விவாதம் சுவாரஸ்யமானது. ஈ.சி.ஆர் சாலையில் ஓர் அருமையான ஹோட்டலில் தங்கி, கதை விவாதம் நடந்தது. ஒரு நாள்கூட என் அறைக் கதவைத் தட்டி அழைத்ததே இல்லை. இன்டர்காமில் மட்டுமே அழைப்பார். ‘போன் இருக்கிறது, போனில் அழைக்கிறார்’ என்றே நினைத்தேன். அறைக் கதவைத் தட்டுவதுகூட அநாகரிகம் என நினைப்பவர் என்பதை அப்புறம்தான் உணர்ந்தேன். அவர் ஒரு நாளும் என் பிரைவஸியில் தலையிடவில்லை.

அவர் எப்போதும் பிஸிபேலா பாத், தயிர்சாதம் என எளிமையாகத்தான் சாப்பிடுவார். எனக்கு ‘நான்-வெஜிடேரியன்’ சாப்பாடு. எனக்கு மீன் பிடிக்கும் என்பதால் ஒரு நாள் அவர் ‘டெவில் ஃபிஷ்’ ஆர்டர் செய்திருப்பதாகச் சொன்னார். ரெஸ்டாரன்ட்டில் சாப்பிட உட்கார்ந்தபோது ஒரு சிறிய வண்டியில் வைத்து அந்த மீனை எடுத்துவந்தனர். ‘டெவில் ஃபிஷ்’ எப்படி இருக்கும் என எனக்கும் தெரியாது; அவருக்கும் தெரியாது. மெனுகார்டைப் பார்த்தால் ‘டெவில் ஃபிஷ்’ எனப் போட்டிருந்தது. பெரிய தொகை வேறு. பத்து பேர் சாப்பிடுகிற மாதிரியான ஒரு முழு மீன் வறுக்கப்பட்டிருந்தது. இதுதவிர சிக்கன் ஃப்ரைட் ரைஸ் போன்ற வேறு சில ஐட்டங்களும் இருந்தன.

‘‘இதை அப்படியே பார்சலாகக் கட்டுங்கள்’’ என்றேன் சர்வரிடம். பார்சலை எடுத்துக்கொண்டு, ‘‘வாங்க சார்! கொஞ்சம் வெளியே போய்விட்டு வருவோம்’’ என்றேன். ‘எதற்கு வெளியே அழைக்கிறார்’ என மணி சார் பார்த்தார். அடை மழை பெய்துகொண்டிருந்தது. குடையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


மீன் என்றால்...

மிழ் சினிமாவுக்கும் மலையாள சினிமாவுக்கும் உள்ள வித்தியாசத்தை நான் கண்கூடாக உணர்ந்த சம்பவம் இது. ஒரு மலையாளப்படத் தயாரிப்பாளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். சாப்பாட்டு நேரம் வந்தபோது, ‘‘உங்களுக்கு மதியம் என்ன வேண்டும்?’’ என்றார். ‘‘எனக்கு மீன்தான் பிடிக்கும்’’ என்றேன்.

சிறிது நேரத்தில் அவர் ஆர்டர் செய்த பார்சல் வந்தது. ஒரு டிபன் பாக்ஸில் ஒரே ஒரு மீன் வறுத்து எடுத்துவந்திருந்தார்கள். சாப்பாடு வரும் எனக் காத்திருந்தேன். அப்படி எதுவும் வருகிற மாதிரி இல்லை. திரும்ப அந்தத் தயாரிப்பாளருக்கு போன் போட்டுக் கேட்டேன். ‘‘நீங்கள் மீன்தானே கேட்டீர்கள்?’’ என்றார். தமிழ் சினிமாவில் காமெடி படம் என்றாலும் அதிலே ஆக்‌ஷன், சென்டிமென்ட் எல்லாமே கலந்திருக்கும். அங்கே காமெடி படம் என்றால் காமெடி மட்டும்தான். மற்ற மசாலாக்கள் குறைவாகவே இருக்கும். ஒரு விஷயத்தை மையப்படுத்தியதாகவே இருக்கும். நமக்கு மீன் என்றால், மீன் குழம்பு, மீன் வறுவல், சாதம் என்று எல்லாம் சேர்ந்த சமையல். அவர்களுக்கு மீன்!

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 20 - அளவான வாழ்க்கை... அளவான வார்த்தைகள்... இது மணி ஸ்டைல்!

டை மழையில் ஹோட்ட லுக்குப் பின்னால் இருந்த கடற்கரை நோக்கி நடந்தேன். நான் ஹோட்டலில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தபோதே, கடற்கரையில் சில சிறுமிகள் உட்கார்ந்து கடலைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன். மூன்று நாட்களாக மழை பெய்துகொண்டிருந்ததால் கடலுக்குச் சென்ற மீனவர்கள் சிலர் திரும்பவில்லை. அவர்களின் குழந்தைகளாக இருக்கலாம் என்ற வேதனை எனக்கு இருந்தது. அந்தக் குழந்தைகளுக்கு இந்த மீனைக் கொடுத்துவிடலாம் என நினைத்தேன்.

அந்தச் சிறுமிகளில் ஒருவர், ‘‘எங்கம்மாவுக்கு ஒண்ணு’’ என அந்த மீன் துண்டை வாங்கிக்கொண்டு ஓடியது மனதைப் பிசைந்தது. மணிரத்னம் நான் வரும் வரை அந்த ஹோட்டலை ஒட்டியே நின்றிருந்தார். கவனித்துக் கொண்டிருந்தார். அருகில் வந்ததும், ‘‘கிரேட்’’ என்றார், அவருடைய வசனம் போல.

12p1.jpg

தினமும் டிஸ்கஷன் முடித்து அவர் மாலையில் சீக்கிரமே கிளம்பிவிடுவார். அன்று டிஸ்கஷன் முடியவில்லை. குறித்த நேரத்தில் தான் வர இயலாது என்பதை வீட்டுக்குத் தெரிவிக்க வேண்டும். போனை எடுத்தார். ‘‘வர்ல’’ எனச் சொல்லி வைத்துவிட்டார். ‘‘என்ன சார், மூணே எழுத்துல ஒரு போன் பேசிட்டீங்களே’’ என்றேன். ‘‘நான் பரவாயில்லை. அந்தப் பக்கத்தில இருந்து ஓர் எழுத்துதான். ‘ம்’ மட்டும்தான் சொன்னாங்க.’’ என்றார். அளவான வார்த்தைகள், அளவான வாழ்க்கை அவருடையது.

அதன் பிறகு கொடைக்கானலில் ‘அலைபாயுதே’ கதை விவாதம் நடந்தது. நாங்கள் தங்கியிருந்தது ஒரு கிராமத்தில் இருந்த பங்களா டைப் வீடு. ஒருநாள் காலை லுங்கியோடு அந்த வீட்டை ஒட்டியுள்ள சாலைகளில் நடக்க ஆரம்பித்தேன். எளிய கிராமத்து மக்கள் வசிக்கும் ஒரு கிராமம். அங்கே சாலை ஓரத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் முன், ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர், ஒரு கண்ணாடி, முடிவெட்டுவதற்கான கத்தி, முடிவெட்டிக்கொள்ள வருபவர் உட்கார ஒரு மனை... இப்படி இருந்தது. அவர் முன்னால் போய் அமர்ந்தேன். ‘ரிசார்ட்டில் தங்கி இருக்கிற யாரோ நம்மிடம் முடிவெட்டிக்கொள்ள வந்திருக்கிறாரே’ என்ற தயக்கத்தோடு பார்த்தார். ‘‘முடி வெட்டுங்கய்யா’’ என்றேன்.

இந்த நேரத்தில், காலையில் இருந்து என்னைக் காணவில்லை என மணி சாரின் உதவியாளர்கள் தேட ஆரம்பித்துவிட்டார்கள். கார் எடுத்துக்கொண்டு அப்படியே அந்தச் சாலைக்கு வந்த அவர்கள், என்னைக் கண்டுபிடித்துக் காரில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்தனர். மணி சார் விஷயம் தெரிந்ததும், ‘‘உங்க தலையை எல்லா இடத்திலும் கொடுத்திடாதீங்க... காஸ்ட்லியான தலை சார் இது!’’ எனக் கிண்டல் அடித்தார். ஏழை மக்கள் மீது எனக்கு இருக்கும் பாசத்தைத் தொடர்ச்சியாக அவர் கவனித்து வந்தார். ‘அலைபாயுதே’ படத்தில் ஷாலினியின் தந்தையை ஒரு தொழிற்சங்கத் தலைவராகக் காட்டி யிருந்தோம். அந்தக் கேரக்டருக்கு மணி சார் வைத்த பெயர் என்ன தெரியுமா? ஆர்.செல்வராஜ். எல்லாம் சுவையான நினைவுகள்.

அதற்குப் பிறகு, ‘டும் டும் டும்’ படத்துக்குப் பணியாற்றினேன். அந்த நேரத்தில் என் பையன் தினேஷ், மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்கு விண்ணப்பித்திருந்தான். ‘மணிரத்னம் சார் சொன்னால் அங்கே சீட் கிடைக்கும்’ என்றார்கள். எனக்கு எப்படிக் கேட்பது எனத் தயக்கம். மிகவும் யோசித்து, ‘‘என்ன சார்... முடியுமா?’’ என்றேன்.

12p2.jpg

‘‘மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்லதான் சேர்க்கணுமா? மெட்ராஸ் டாக்கீஸ்ல சேர்த்தா போதாதா?’’ என சிம்பிளாகத் திருப்பிக் கேட்டார். அதைவிட பெரிய மகிழ்ச்சி இருக்க முடியுமா? தினேஷை, அவருடைய மெட்ராஸ் டாக்கீஸ் ஆபீஸுக்கு அனுப்பிவைத்தேன். மூன்று படங்களில் பணியாற்றினான்.

‘டும் டும் டும்’ திரைக்கதை வேலைகளை முடித்துவிட்டு, ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘பொட்டு அம்மன்’ கதை விவாதத்துக்காகக் கொல்லிமலையில் அழகான ஒரு சூழலில் தங்கியிருந்தேன். அப்போது மணி சாரிடம் இருந்து போன் வந்தது. ‘‘டும் டும் டும் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடக்கிறது. கதையில் கொஞ்சம் சரிசெய்ய வேண்டியிருக்கிறது. வர வாய்ப்பிருக்கிறதா?’’ என்றார்.

எனக்காக நல்ல இடத்தில் ரூம் போட்டு கதைக்காகக் காத்திருந்தார், செல்வமணி. அங்கே படப்பிடிப்பின் நடுவே கதையைச் சரிசெய்ய அழைக்கிறார் மணிரத்னம் சார். செல்வமணியிடம் சொன்னேன். செல்வமணி பெருந்தன்மையாக, ‘‘நம் சினிமா இன்னும் பேப்பரில்தான் இருக்கிறது. அவர்கள் ஷூட்டிங் கிளம்பிவிட்டார்கள். அதைத்தான் முதலில் கவனிக்க வேண்டும். தாராளமாகப் போய் வாருங்கள். இரண்டு நாள் இல்லை; நான்கு நாட்கள் ஆனாலும் பரவாயில்லை’’ எனச் சொல்லிவிட்டார். படம் எடுப்பதில் மட்டுமல்ல; பழகுவதிலும் பிரமாண்ட மனம் படைத்தவர் ஆர்.கே.செல்வமணி. சேலத்தில் இருந்து திருநெல்வேலிக்குப் பயணம். கதை ரிப்பேர் செய்கிற வேலை. என்னதான் ரூம் போட்டு, கதையை உருவாக்கினாலும், படப்பிடிப்பில் கதை அதுவாக திடீரென மாற்றங்களைக் கேட்கும்.12p3.jpg

ஒரு நாள் மணிரத்னம் போன் செய்தார். ‘‘உங்க பையன் டிகிரி முடிச்சுட்டான்’’ என்றார். ‘நல்ல படம் ஒண்ணு செஞ்சு முடிச்சுட்டு வந்து பார்’ என என் பையனை அனுப்பிவைத்தார். மாதா மாதம் சம்பளம் கொடுத்தது போக, தனியாக ஒரு லட்சம் கொடுத்து உதவி இயக்குநர்களை அனுப்பிவைப்பது மணிரத்னம் சார் பழக்கம்.

தன்னுடைய உதவியாளர்கள் பணியில் இருந்து போனதும், அடிக்கடி வந்து பார்த்துவிட்டுப் போவதை எல்லாம் மணி சார் விரும்ப மாட்டார். ஒரு படம் கமிட் ஆன பிறகு பார்த்தால் போதும். பூஜைக்கோ, பட விழாவுக்கோ வருவார். அதுதான் அவருடைய ஸ்டைல். அப்படித்தான் என் மகன் இயக்கிய ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லே’ படத்துக்கு அவர் வந்தார். மணியான மனிதர்!

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


பாட்டி சுட்ட வடை!

கதை கேட்பதும், கதையில் லாஜிக்காக விளக்கம் கேட்பதும் இப்போது என் வேலையாகவே ஆகிவிட்டது. சின்னப் பையனாக இருந்தபோது, நிலாவில் ஒரு பாட்டி வடை சுடும் கதையை என் பாட்டி சொன்னார். ‘‘நிலாவில் நிறைய பேர் இருப்பார்களா?’’ எனக் கேட்டேன். ‘‘இல்லை. அந்த ஆயா மட்டும்தான்’’ என்றார் பாட்டி.

‘‘யாருமே இல்லாத இடத்தில் யாருக்காக அந்த ஆயா வடை சுடுகிறார்?’’ என்றேன். கதைக்கு, ஒரு காட்சிக்கு ஒரு நியாயம் இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆதாரமான ஒரு கொள்கை. கதை உருவாக்கித் தருவதோடு என்னை நிறுத்திக்கொள்வேன். படப்பிடிப்புகளுக்குச் சென்றால் சில காரணங்களுக்காக ஏதாவது மாற்றங்கள் செய்வார்கள். சில வேளைகளில் கதை மேலும் மெருகேறும்... சில நேரங்களில் கதை சிதையும். அதைப் பார்க்க வருத்தமாக இருக்கும். ஆகவே, தேவைப்பட்டால் தவிர நான் படப்பிடிப்புகளுக்குச் செல்லவே மாட்டேன்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 21 - பாரதிராஜா எடிட்டர் ஆன கதை!

 

 

ன்னுடன் பணியாற்றிய பல கலைஞர்களின் அர்ப்பணிப்பை நினைத்து பல சமயம் நான் நெகிழ்ந்துபோவேன். அதில், நான் இயக்கிய ‘நீதானா அந்தக் குயில்’ படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் திறமையையும் ஈடுபாட்டையும் சொல்ல நினைக்கிறேன்.

ஒரு கிராமம். அந்த ஊருக்கு ஹீரோ ராஜா வருகிறார். வழியில் சில கோவணாண்டி பையன்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு அட்ரஸ் கேட்கிறார். பையன்கள், ‘‘நாங்களே கவாஸ்கர் அவுட் ஆகிட்டார்னு கவலையா இருக்கோம். நீங்க வேற...’’ என்கிறார்கள். அப்போதுதான் தெரிகிறது, அவர்கள் சின்ன டிரான்சிஸ்டரை காதோடு வைத்துக் கிரிக்கெட் கமென்ட்ரி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது.

இன்னும் சிறிது தூரம் வருகிறார் ஹீரோ. அங்கே ஒரு கிழவி வரட்டி தட்டிக் கொண்டிருக்கிறாள். ‘‘ஏய் கிழவி’’ என அழைக்கிறார். அந்தக் கிழவி அவரை அருகே வரச்சொல்கிறாள். வந்ததும், ‘‘இந்திரா காந்திக்கு என்னைவிட ரெண்டு வயசு அதிகம்... அவரைப் போய் ‘ஏய் கிழவி’ன்னு கூப்பிடுவியா... இங்கிலாந்து பிரதமர் மார்க்ரெட்  தாட்சருக்கு என்னைவிட பத்து வயது அதிகம்... அவரைப் போய் ‘கிழவி’ன்னு கூப்பிடுவியா?’’ என சரமாரியாகக் கேட்கிறார். இப்படி அந்த ஊரே ஒரு இன்டலெக்சுவல் கிராமமாக இருக்கிறது. அதற்கெல்லாம் காரணம், அந்த ஊரில் இருக்கும் டீச்சர் ரஞ்சனி. இப்படி ஆரம்பிக்கிறது கதை. ஸ்ரீராமுக்கு, கதை மிகவும் பிடித்துவிட்டது.

p30a.jpg

காரைக்கால் அருகேயுள்ள தரங்கம்பாடி கோட்டையில் படப்பிடிப்பு. சூரியன் வருவதற்கு முன் அதிகாலையில் ஓர் ஒளிக்கிரணம், பூமி மீது படர்ந்திருக்கும். அந்த ஒளியில்தான் பல நாட்கள் படம் பிடித்தார் பி.சி. அதற்காகத் தினமும் நள்ளிரவு 2 மணிக்கு ஷூட்டிங் கிளம்பிவிடுவோம். ‘என் ஜீவன் பாடுது... உன்னைத்தான் தேடுது...’ என்ற பாடலையும் கிளைமாக்ஸ் காட்சிகளையும் அந்தக் கோட்டையில் படமாக்கினோம். அந்தப் படத்துக்கு என் தம்பி வீரராகவன் புரொடக்‌ஷன் மேனேஜராக இருந்தார். அவருடைய உழைப்பு இல்லை என்றால் அந்தப் படம் இல்லை. தினமும் 2 மணிக்கு யூனிட்டை ரெடி செய்வது சாதாரணம் அல்ல.

‘கடலோரக் கவிதைகள்’ ராஜா, ரஞ்சனி நடித்த படம். லட்சுமி மிக அருமையான ரோல் செய்திருந்தார். கோட்டையைப் பல்வேறு கோணங்களில் படம்பிடித்த ஸ்ரீராமிடம், ‘‘கடலில் இருந்தபடி படம் பிடிக்கலாமா’’ எனக் கேட்டேன். ‘‘தாராளமா செய்யலாம்’’ என்றார்.

அதற்காகக் கோட்டையை மிக அற்புதமாக லைட்டிங் செய்தார். நானும், ஸ்ரீராமும், அவருடைய உதவியாளர்கள் சிலருமாகப் படகில் ஏறினோம். அன்று, கடல் ஆக்ரோஷமாக இருந்தது. படகு படு மோசமாகத் தள்ளாடியது. படகில் ஏறி அமர்வதே சிரமமாக இருந்தது. ஸ்ரீராம் படகை ஒரு கையிலும், கேமராவை ஒரு கையிலும் பிடித்தபடி சமாளித்துக் கொண்டிருந்தார். எனக்கு ‘இவ்வளவு சிரமப்பட்டு காட்சியை எடுக்க வேண்டாம்’ எனத் தோன்றியது. முக்கியமான காரணம், அடுத்த சில நாட்களிலேயே ஸ்ரீராமுக்குத் திருமணம் நடக்க இருந்தது.

‘‘வேண்டாம் ஸ்ரீராம், விட்டுவிடுங்கள்’’ என்றேன். ‘‘தப்பா நினைக்காதீர்கள் சார்... நீங்கள் இறங்கிக்கொள்ளுங்கள். என்ன ஆனாலும் சரி. நான் இந்தக் காட்சியை எடுக்காமல் திரும்ப மாட்டேன். கடலில் கொஞ்ச தூரம் போய் படம்பிடிக்கிறேன்’’ என்றார். துணைக்கு நான்கு மீனவர்களையும் அனுப்பிவைத்தேன். அவருக்கு ஏதாவது நடந்தால் தமிழ் சினிமாவின் ஒரு அத்தியாயமே காணாமல் போய்விடுமே என்று பதைக்கிறேன். இரவு பத்து மணிக்குக் கடலுக்குள் போனவர் அதிகாலை மூன்று மணிவரை பனியிலும் அலையிலும் இருந்து படம்பிடித்தார்.

p30b.jpg

கரையில் இருந்து என் உதவியாளர்கள் விசில் மூலமாகவும், மைக் மூலமாகவும், அவருக்கு சிக்னல் கொடுப்பார்கள். அதாவது ‘ரெடி... டேக்’ என்பதற்கான அடையாளம். அவர் நல்லபடியாகக் கரைக்கு வந்து சேர்ந்ததும்தான் எனக்கு உயிரே வந்தது. ஃபிலிமை டெவலப் செய்து பார்த்தபோது பூரித்துப்போனேன். அந்தக் கோட்டையே ஒரு பொம்மை மாதிரி நீரில் மூழ்கி எழும்புவது போல் இருந்தது.

அடுத்த நாள் ஊட்டிப் பயணம். ‘பூஜைக்கேற்ற பூவிது’ பாடலை எடுத்தோம். சரியான குளிர். வாகனங்கள் எல்லாமே ஃப்ரீஸ் ஆகிவிடும். காலையில் கார் ஸ்டார்ட் ஆகாது. டயரைக் கொளுத்தி சூடாக்கி காரை ஸ்டார்ட் செய்வோம். காலையில் குழாயைத் திறந்தால் தண்ணீர் வராது. உறைந்து போய் இருக்கும். அவருடைய திருமண நாளுக்குள் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குப் படத்தை எடுத்து முடித்தேன். அடுத்த இரண்டாவது நாளில் ஸ்ரீராமுக்குத் திருப்பதியில் கல்யாணம். கோவைக்குக் கூட்டிச் சென்று, ஃப்ளைட் பிடித்து அவருடைய வீட்டில் கூட்டிப் போய் இறக்கியபோதுதான் எனக்கு நிம்மதி. ராஜா, ரஞ்சனி, என்னுடைய உதவியாளர்கள் என எல்லோரும் நான்கு கார் எடுத்துக்கொண்டு ஸ்ரீராம் கல்யாணத்துக்குப் போய் வந்தோம்.

படகில் இருந்தபடி ஸ்ரீராம் எடுத்த காட்சியை பாரதிராஜாவுக்குப் போட்டுக் காட்டினேன். அசந்து போய்விட்டான். அந்தக் காட்சியை ரசித்தவன். அதை அழகாக எடிட் செய்ய ஆரம்பித்து, அப்படியே முழுப் படத்தையும் எனக்காக எடிட் செய்துகொடுத்தான். ‘நீதானா அந்தக் குயில்’ படத்தின் எடிட்டர் பாரதிராஜா என்றால் எத்தனை பேர் நம்புவார்கள்?

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


ஆசை முகம்!

‘கானல் நீர்’ என்று ஒரு படம். நாகேஸ்வர ராவ் - பானுமதி நடித்தது. ஒரு ஜமீன்தாரின் மகன், மேற்படிப்பு படிக்க அப்பா விடாததால், வீட்டில் கோபித்துக்கொண்டு சென்னை வருகிறார். பிழைப்புக்காக பகுதிநேர வாத்தியார் ஆகிறார். தினமும் பாடம் நடத்த ஒரு பணக்கார வீட்டுக்கு வருகிறார். இவரிடம் படிக்கும் பெண்ணுக்கு ஒரு அக்கா. அவர் பாடம் நடத்தும்போது, தினமும் காபி கொண்டுவந்து வைத்துவிட்டு, போய் தூண் ஓரம் நிற்கிறாள். அந்தப் பெண்ணின் முகம் அவருக்குத் தெரியவில்லை. அவருக்குப் பார்வை சற்றே குறைவு என அந்தப் பெண்ணுக்குத் தெரிகிறது.

p30.jpg

அடுத்த நாள் காபி வைத்துவிட்டுப் போகும்போது அவருக்கு ஒரு கண்ணாடியும் வைத்துவிட்டுப் போகிறாள். கண்ணாடியைப் போட்டுக்கொண்டு அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்கிறார். முழு நிலவு அவள் முகம். அவள் ஒரு இளம் விதவை. மெல்ல அவர்களுடைய மனதில் ஒரு ஈர்ப்பு வளர்கிறது. அந்த நாளில் விதவையை மணம் முடிப்பது சாதாரண விஷயமில்லை. பெண்ணின் உறவுகள் சூழ்ச்சி செய்ய, பெரும் எதிர்ப்பு கிளம்புகிறது. ‘காதல் ஈடேறாது’ என்ற நிலை. கடைசி நாள் வகுப்பு எடுக்கும் அந்த ஆசிரியர், அன்று கிளம்பும்போது  கண்ணாடியைக் கழற்றிவைத்துவிட்டுக் கிளம்புவார். ஆசை முகத்தைத் தவிர்க்க விரும்பும் ஓர் இயலாமை நம் நெஞ்சை அடைக்கும். எனக்குப் பிடித்த கவித்துமான காதல் கதை அது!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 22 - சிவகுமார் வசனமும்... சூர்யாவின் படமும்!

 

 

பி.சி.ஸ்ரீராம் போல பல திரைக்கலைஞர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றுவதை என் படங்களில் இருந்தே சொல்ல முடியும். சுஜாதா, ஸ்ரீதேவி, சரிதா, ராதா, ரேகா போன்ற பல நடிகைகள் என் திரைக்கதைகளில் பணியாற்றியிருக்கிறார்கள். சிவாஜி, சிவகுமார், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற நட்சத்திரக் கலைஞர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். அவ்வளவு பேரின் அர்ப்பணிப்பையும் நேரில் பார்த்திருக்கிறேன்.

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தில் சரிதா காட்டிய ஈடுபாட்டைச் சொல்ல வேண்டும். எங்களிடம் இருந்த ஒரே யூனிட் காரில் நடிகர்கள் சுதாகர், சரிதா ஆகியோரை ஏற்றி அனுப்பிவிட்டு மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பஸ்ஸில் பயணம் செய்த கதையை முன்னரே சொன்னேன். எங்கள் கஷ்டத்தைப் பார்த்து, ‘‘நான் வேண்டுமானால் பஸ்ஸில் உங்களுடன் வரட்டுமா?” என்று கேட்பார்... அப்படி ஒரு நடிகை!

படத்தில் ஒரு காட்சி. கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்பைச் சொல்வதற்காக அதை உருவாக்கியிருந்தேன். கதைப்படி சுதாகர், எண்ணெய் செக்கு வைத்திருப்பவர். எண்ணெய் செக்கு வைத்திருப்பவர், தன் தலையில் எண்ணெய் வைத்துக்கொள்ள வசதியில்லாத நிலையைக் காட்டியிருப்பேன். அவருடைய மனைவியாக சரிதா. தன் கணவனின் கால் விரல்களில் நகம் வளர்ந்திருப்பதைப் பார்த்து, அதை வெட்டிவிட நினைப்பார். தூங்கிக்கொண்டிருக்கும் கணவனின் காலை மடியில் வைத்து, நகங்களை மிருதுவாக்க அதை தண்ணீரில் நனைத்து, தன் பற்களால் கடித்து சீர்படுத்துவார். ஒரு அந்நியோன்யத்தை வெளிப்படுத்தும் இந்தக் காட்சியைப் பற்றி விளக்கி, ‘‘இப்படி நடிக்க சம்மதமா?’’ எனக் கேட்டேன். ‘‘கணவன் - மனைவியின் நெருக்கமான அன்பைக் காட்ட இதைவிடப் பொருத்தமான காட்சி இருக்க முடியுமா சார்... நான் நடிக்கிறேன்’’ என ஈடுபாட்டுடன் நடித்தார். ஒரு ஆணின் கால் நகங்களைப் பல்லால் கடித்து ஒழுங்குபடுத்துவது சாதாரணம் இல்லை. சரிதா மிகவும் இயல்பாக அந்தக் காட்சியில் நடித்தார்.

p38a.jpg

என் சினிமா வாழ்வில் எனக்குக் குரு என ஒருவரை வரிந்துகொள்ள முடியாது. பலருடைய சினிமாக்களைப் பார்த்து, நூல்களைப் படித்து உருவானவன் நான். ஆனாலும், ‘குரு’ என ஒருவரைச் சொல்ல வேண்டுமானால் பி.என்.மேனனைச் சொல்வேன். மலையாளத்தில் முதலில் தேசிய விருது பெற்ற அவருடைய ‘ஓளமும் தீரமும்’ படம், மலையாளத் திரையுலகின் கௌரவம். அகில இந்திய சாதனைகளை நிகழ்த்திய அவர் மிக எளிமையானவர். சென்னை டைரக்டர்ஸ் காலனி தெருவில் மிக எளிமையான வீட்டில் வாழ்ந்தவர். காலையில் அவரேதான் நடந்துவந்து பால் வாங்கிக்கொண்டு போவார். மலையாளப் பட உலகின் பிரபல இயக்குநர்கள் பரதன், கமல் ஆகியோர் அவருடைய உறவினர்கள்... அவருடைய படங்களில் உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள்.

‘க்ளவுட்’ என்று ஒரு குறும்படம். அந்தப் படத்தின் கேமராமேன், உலகின் பலப் பகுதிகளுக்கும் சென்று ஷூட் செய்தது, விதவிதமான மேகங்களை. போகிற இடங்களிலெல்லாம் அவருடைய கேமரா வானத்தையே வட்டமிடும். மேகங்களின் ஓட்டங்களைப் படம் பிடிப்பார். அப்படிப் படம் பிடித்த மேகங்களின் வடிவங்களையெல்லாம் வைத்து அவர் ஒரு கதையை உருவாக்கினார். இரண்டு வெவ்வேறு நாட்டு மக்கள் அணி திரண்டு போராடுவது போல மேகங்களின் போக்கை வைத்தே காட்சிகளை உருவாக்கினார். அந்தப் படத்தைப் பற்றிச் சொன்னவர் மேனன். மும்பையில் ஒருவன் இயற்கை உபாதையைத் தீர்த்துக்கொள்ள  படும்  அவஸ்தைகளைச் சித்தரிக்கும் ‘ஃப்ரீடம்’ என்ற குறும்படமும் அவர் எனக்குச் சொன்னதுதான். உலகின் சிறந்த பல படங்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர். சினிமாவைத் தவிர வேறு எதுவுமே பேசத் தெரியாது அவருக்கு. அதனால்தான் ‘குரு’ என அவரைச் சொன்னேன்.

நான், மலையாளப் படங்களுக்குப் பணியாற்றியதில்லை எனச் சொன்னேன். மலையாளத்தில் சாதனை படைத்த அவர், அந்த நேரத்தில் தமிழில் இயக்கிய படத்துக்குத் திரைக்கதை அமைத்துக்கொடுத்தேன். ‘தேவதை’ என அந்தப் படத்துக்குத் தலைப்பு. அதே தலைப்பில் பின்னர் நாசர் ஒரு படம் எடுத்தார். நாங்கள் உருவாக்கிய படம், காஞ்சிபுரம் நெசவுத் தொழிலாளிகளின் வாழ்க்கை சம்பவத்தால் பின்னப்பட்டது.

‘கலீர் கலீர் என்றே காலம் தன்னால் இங்கே முன்னேறுது... நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது...’ என்ற புகழ்பெற்ற பாடல் இடம்பெற்றது அந்தப் படத்தில்தான். ஷியாம் இசையமைத்திருந்தார். தறி நெய்தபடி அந்தத் தாளச் சத்தத்தோடு ஜெயந்தி பாடுவதாக அந்தக் காட்சி அமைக்கப்பட்டது. அருமையான பாடல்... அருமையான இசை. ஜெயந்தி - ஜெயகணேஷ் ஜோடி. ஜெயந்தியின் தம்பியாக நண்பர் சிவகுமார் நடித்தார். கதையில் ஊர் மக்கள் ஜெயந்தியின் மீது வீண்பழி சுமத்தி, ஒழுக்கத்தைக் குறை சொல்லி, ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பார்கள். அக்காவின் மீது இப்படி ஒரு பழி சுமத்தப்பட்டதை அறிந்து, சிவகுமார் கோபமாகக் கேட்பார்... ‘‘என் அக்கா சுத்தமில்லாதவள்னா இந்த ஊரில் வேறு யாரு உத்தமி?’’ - படத்தில் சிவகுமாருக்குப் பெயர் வாங்கித்தந்த ‘நச்’ வசனமாக இது இருந்தது.

நண்பர் சிவகுமார் என்றதும் இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. சிவகுமாரின் மகன் சூர்யா நடிக்க ஒரு கதையைக் கேட்டிருந்தார்,

ஆர்.வி.உதயகுமார். காலையில் நான், சிவகுமார் வீட்டுக்குப் போய்விட்டேன். ஆர்.வி.உதயகுமார், சூர்யா, சிவகுமார் அனைவருமே உட்கார்ந்து கதை கேட்டனர். அந்தப் படத்துக்கு நான் வைத்த தலைப்பு..? அதை அடுத்த இதழில் சொல்கிறேன்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


ஒரு காதல் கதை!

p38.jpg

‘லவ் ஸ்டோரி’ என ஒரு ஆங்கிலப்படம். கடந்த 1970-ம் ஆண்டு வெளியானது. ஒரு பணக்கார வீட்டுப் பையன், ஓர் ஏழைவிட்டுப் பெண்ணைக் காதலிக்கிறான். ‘அவளைத் திருமணம் செய்தால், இந்த வீட்டில் இருக்க முடியாது’ என்கிறார் அப்பா. வீட்டை விட்டு வெளியேறி, காதலியைத் திருமணம் செய்துகொள்கிறான். பணம் இல்லையென்றாலும், சந்தோஷமாக வாழ்கிறான். இந்த நேரத்தில் காதலியைப் புற்றுநோய் தாக்குகிறது. எங்கெங்கோ பணத்துக்காகப் போராடுகிறான். பணக்காரத் தந்தை தன் செல்வாக்கால் அதைத் தடுத்துவிடுகிறார். கடைசியில் தந்தையிடமே போய் நிற்கிறான். ‘‘அந்தப் பெண்ணைவிட்டுப் பிரிந்து வருவதாக இருந்தால் பணம் தருகிறேன்’’ என்கிறார் அப்பா. இறுகிய மனத்தோடு காதலன், ‘‘நான் அந்தப் பெண்ணைவிட்டுப் பிரிகிறேன்’’ என்பான். பணம் கிடைக்கும். ஆனால், அந்தப் பெண்ணைப் பிரிகிறேன் எனச் சொன்ன நேரத்திலேயே அவள் இறந்துபோவாள். ‘மிகச் சிறந்த ரொமான்டிக் படங்களில் ஒன்று’ என அமெரிக்க ரசிகர்கள் இன்றுவரை கொண்டாடும் காதல் கதை இது!

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 23 - குஷ்பு கேட்ட டைட்டில்!

 

 

சூர்யாவுக்காக நான்  சொன்ன கதை எல்லோருக்கும் பிடித்து விட்டது. தயாரிப்பாளருக்கும் மிகவும் பிடித்துப்போனது. ஆனால், தங்களிடம் வேறொரு நடிகரின் கால்ஷீட் ரெடியாக இருப்பதாகச் சொன்ன தயாரிப்பாளர், ‘‘அந்த நடிகருக்கு இந்தக் கதையைச் செய்ய முடியுமா?’’ என்றார் திடீரென்று. நான் சொன்னது யூத்ஃபுல்லான கதை. இளம் கதாபாத்திரங்களுக்குத் தான் பொருந்தும். அவருக்கு கால்ஷீட் கொடுத்திருந்த நடிகருக்கு அது பொருந்தாது எனச் சொன்னேன். அந்தக் கதை அப்படியே தங்கிவிட்டது.

அதன் பிறகு நான் பாரதிராஜாவுக்காக ‘கேப்டன் மகள்’ திரைக்கதையில் மூழ்கிவிட்டேன். ரஷ்ய எழுத்தாளர் புஷ்கின் எழுதிய ஒரு நாவலின் தலைப்பு அது. அந்தத் தலைப்பில் நாங்கள் வேறு கதையை உருவாக்கியிருந்தோம். முழுக்க முழுக்க ஒரு ஆங்கிலப்பட  பாணியில் ஊட்டியில் செட் போட்டோம். காற்றாலை, பண்ணை வீடு எனப் பிரமாதமாக அமைந்தது செட். அப்போது தமிழ்நாட்டில் குஷ்பு மிகவும் பிரபலமாக இருந்தார். அவருக்குக் கோயில் கட்டுகிற நிலைமை எல்லாம் இருந்த நேரம். அதனால், அவரை மையப்படுத்திக் கதையை உருவாக்கச் சொல்லியிருந்தார் பாரதி. தைரியசாலிப் பெண்ணாக சண்டைக் காட்சிகளில் வெளுத்துக் கட்டியிருந்தார் குஷ்பு. குதிரை மீது அநாயாசமாக விரைந்து சென்றார். அவருடன் ‘கடலோரக் கவிதைகள்’ ராஜா, நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

 p12a.jpg

அந்தப் படம் வெளிவந்தபின் ஒருநாள் குஷ்பு எனக்கு போன் செய்தார். எனக்கோ ஆச்சர்யம். ‘‘என்னம்மா, எப்படி இருக்கீங்க?’’ என விசாரித்தேன். சிறிது நேரம் சம்பிரதாயமாகப் பேசியபின், கொஞ்சம் தயங்கி, ‘‘சார், நீங்கள் சூர்யாவுக்காக ஒரு கதை எழுதினீர்களே..?’’ என நிறுத்தினார்.

‘‘சொல்லும்மா... அதற்கென்ன?’’

‘‘அந்தப் படத்தின் தலைப்பை எனக்குத் தர முடியுமா?’’

‘‘தலைப்பு மட்டுமா?’’

‘‘ஆமாம் சார்.’’

படத்தை யார் எடுக்கப் போகிறார்கள், யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என நானும் கேட்கவில்லை... அவரும் சொல்லவில்லை.

‘‘அதற்கென்னம்மா... யாரையாவது அனுப்பி வையுங்கள். தலைப்பை டிரான்ஸ்ஃபர் செய்து எழுதித் தருகிறேன்’’ என்றேன்.

மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு வந்தார். அவரிடம், அதற்கான பாரங்களில் கையெழுத்துப்போட்டு, தலைப்பைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்துக் கடிதமும் எழுதிக்கொடுத்தேன். அந்தத் தலைப்பு... ‘ராஜகுமாரன்.பிரபு நடித்த படம்.ஆர்.வி.உதயகுமார் இயக்கினார். அந்தப் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக மீனாவும் நதியாவும்தான் நடித்தனர். குஷ்பு நடிக்கவில்லை.

நான் குரோம்பேட்டையில் இருந்த சமயம். ஒருநாள் ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பரங்கிமலையில் ரயில் நிறுத்தப்பட்டது.நான் சற்று நேரம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு, ரயிலை விட்டு இறங்கி நடந்தேன். பட் ரோடு அருகே ஒரு தியேட்டர். ஒரு மலையாளப் படம் போட்டிருந்தார்கள். படத்தின் பெயர் ஞாபகம் இல்லை. சத்யன், ஷீலா, பிரேம் நசீர் நடித்திருந்ததாக நினைவு.

சத்யன், ஷீலா இருவரும் கணவன் - மனைவி. ஷீலா, திருமணத்துக்கு முன்பே பிரேம் நசீரைக் காதலித்தவர். சத்யன் தன் மனைவி மீது உயிரையே வைத்திருக்கிறார். இப்படி ஒரு முக்கோணக் காதல். சத்யன் வெளியூர் புறப்பட்டுச் செல்லும் ஒரு நாளில் நசீரும் ஷீலாவும் வீட்டைவிட்டு வெளியேறத் திட்டமிடுவார்கள். வெளியூருக்குப் புறப்பட்ட கணவன், எதனாலோ மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்துவிடுவான். இது தெரியாமல் பிரேம் நசீர், வெளியே காரில் வந்து நின்று ‘ஹார்ன்’ அடிப்பார். ஷீலா பதறுவார்.

மனைவியின் பதற்றம்... வெளியே காத்திருக்கும் கார்... ஒரு நொடியில் சத்யனுக்குச் சகலமும் புரிந்துவிடும். ‘‘எனக்கு ஒரு காபி போட்டுக் கொண்டுவா’’ என்பார் மனைவியிடம். ஷீலா காபியுடன் வருவார். சத்யன் நிதானமாகக் காபியை உதட்டில் வைத்து ஒரு முறை உறிஞ்சிவிட்டு, டேபிளின் மீது கப்பை வைத்துவிட்டு ஷீலாவைப் பார்ப்பார். கதைப்படி சத்யன், காபியில் சர்க்கரைச் சேர்த்து கொள்ள மாட்டார். பதற்றத்தில் ஷீலா சர்க்கரை போட்டுக் கொண்டு வந்துவிடுவார். ஷீலாவுக்குச் சட்டெனத் தவறு உறைக்கும். ‘‘இருங்கள், வேறு காபி கொண்டு வருகிறேன்’’ என்பார். அந்த இடத்தில் சத்யன் ஒரு வசனம் சொல்வார்: ‘‘இல்லா... இல்லா... நின்ட மனசில் ஞான் இல்லா.’’

அப்படியே ஆடிப்போய்விட்டேன். மனசெல்லாம் அந்தக் கதை ஓடிக்கொண்டே இருந்தது. பஞ்சு சாரிடம் சொன்னேன். அது போல ஒரு கதையைத் தமிழில் செய்யலாம் எனத் திட்டமிட்டோம். கதையைக் காப்பியடிப்பதோ, தழுவி எடுப்பதோ அல்ல. கணவன் - மனைவிக்குள் ஒரு முன்னாள் காதலன் வருவதுதான் கதையின் சரடு. ‘மயங்குகிறாள் ஒரு மாது’ அந்தப் பாதிப்பால் உருவானதுதான். முத்துராமன், சுஜாதா, விஜயகுமார் நடித்திருந்தனர். தமிழில் நிறைய மாற்றங்கள் செய்திருந்தோம். கதாநாயகி காதலனோடு வீட்டைவிட்டுப் போக நினைக்க மாட்டார். மாறாக, இவர்களின் காதல் விவகாரம் தெரிந்த ஒருவன், கதாநாயகியை ப்ளாக் மெயில் செய்வான். கணவனுக்குத் தன் காதல் விஷயம் தெரிந்துவிடக் கூடாதே என்ற பதற்றமும் பயமும் நாயகியை வாட்டி எடுக்கும். மலையாளக் கதைக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாத அளவுக்குக் கதை மாறியபின்னும் எனக்கு ஓர் உறுத்தல். படம் தயாரானதும் என் பெயரை டைட்டிலில் போட வேண்டாம் எனப் பஞ்சு சாரிடம் சொல்லிவிட்டேன். என் பெயர் இல்லாமல்தான் அந்தப் படம் வெளியானது.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


p12.jpg

எது குற்றம்?

‘போல்’ என்றொரு பாகிஸ்தானியப் படம். ‘போல்’ என்றால் ‘சொல்லு’ என அர்த்தம். அப்பாவைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பெண். தண்டனை நிறைவேற்றப்படும் முன்பாக, ‘‘சொல்லுங்க... உங்க அப்பாவை ஏன் கொன்னீங்கன்னு சொல்லுங்க’’ என்று ஒரு பத்திரிகையாளர் கேட்பதாகப் படம் தொடங்கும்.

அந்தப் பெண்ணின் அப்பா ஊரில் பெரிய தாதா; வீரர். ஆண் சிங்கம் என்பார்களே அப்படி. அவருக்கு ஏழு பெண்கள். இவள் மூத்தவள். ஒரு மகன் வேண்டும் என்று ஆசைப்பட்டு, எட்டாவதாக பெற்றுக்கொள்வார் தந்தை. வளர்ந்தபிறகு அவன் திருநங்கை என்பது தெரிந்ததும் அவர் துடித்துப்போவார். ‘என் வித்துக்குப் பிறந்தவன் இப்படியா இருக்க வேண்டும்?’ என்ற வெறியோடு நாட்களை நகர்த்துகிறார். சகோதரிகள், உண்மை தெரிந்தபிறகும் அவன் மீது பாசம் காட்டுகிறார்கள். ஒருநாள் தூங்கும்போது மகனைக் கொன்றுவிடும் அப்பா, ரகசியமாக அவன் உடலைப் புதைத்தும் விடுகிறார்.

இடையில் பணத்துக்காக ஆசைப்பட்டு ஒரு பாலியல் தொழிலாளியைத் திருமணம் செய்துகொள்ளும் அப்பா, அவள் மூலமாக ஒரு பெண் குழந்தையைப் பெறுகிறார். முதல் மனைவியின் குடும்பமே இடி விழுந்தது போல ஆகிறது. ‘பாலியல் தொழிலாளிக்குப் பிறந்த தன் குழந்தை, எதிர்காலத்தில் பாலியல் தொழிலாளியாக ஆகிவிடக்கூடாது’  என்று, அதைக் கொல்லப் பார்க்கிறார். இதைப் பார்த்து கோபம் கொண்டு தந்தையையே சாகடிக்கிறாள் மூத்த மகள். ‘‘கொலை செய்வது குற்றம் என்றால், கட்டுப்பாடு இல்லாமல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதும் குற்றம்தானே?’’ என்று அந்தப் பெண் கேட்பதோடு படம் முடியும்.

பாகிஸ்தானில் மிக அதிக வசூல் செய்த படம் இது!  

http://www.vikatan.com/juniorvikatan/

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 24 - மாடர்ன் தியேட்டர்ஸில் உருவான கறி உண்போர் கழகம்!

 

 

ஒரு படைப்பின் பாதிப் பில்லாமல், ஒரு நிஜத்தின் பாதிப்பில்லாமல் இன்னொரு படைப்பு உருவாவது இல்லை. ஒரு ரஷ்யக்கதை. நிகோலய் கோகல் எழுதிய ‘தாராஸ் புல்பா’. ஆங்கிலத்தில் யூல் பிரைன்னர் நடித்து பிரமாண்டமான திரைப்படமாக வெளிவந்தது.  போலந்துக்கும் உக்ரேனிய கஸாக்குகளுக்கும் நடக்கும் போரின் பின்னணியில் அமைந்த உருக்கமான கதை. கஸாக்குகளின் தலைவன், தாராஸ் புல்பா. போலந்துகாரர்களின் ஆதிக்கம் அவர்கள் பகுதியில் ஓங்குகிறது. தாராஸ் புல்பாவுக்கு இரண்டு மகன்கள். அவர்களில் மூத்தவன், போலந்து நாட்டு பிரபு ஒருவரின் மகளுடைய அழகில் மயங்குகிறான். இருவரும் உயிருக்கு உயிராகக் காதலிக்கிறார்கள். தந்தை தாராஸ் புல்பாவோ போலந்து நாட்டின்மீது போர் தொடுத்து அழிக்க நினைக்கிறான். கஸாக்குகள் படையெடுத்துச் சென்று ஒரு கோட்டையை முற்றுகையிடுகிறார்கள். தாராஸ் புல்பாவின் மூத்த மகனின் காதலி அந்தக் கோட்டைக்குள் இருக்கிறாள். அவள் பசியில் வாடுவதை அறிந்து, கோட்டைக்கு உள்ளே இருப்பவர்களுக்கு உதவுகிறான். அதனால் போலந்து படையின் கை ஓங்குகிறது. 

தந்தை இதையறிந்து கோபம் கொள்கிறான். கடைசியில் இது தந்தைக்கும் மகனுக்குமான போராக மாறுகிறது. சரிநிகரான யுத்தம். ‘‘நான்தான் உனக்கு உயிர் கொடுத்தேன். நானே அதை எடுத்துக்கொள்கிறேன்’’ எனக் கர்ஜிக்கும் தந்தை, மகனை வீழ்த்துகிறான். ‘தாராஸ் புல்பா’ 60-களில் வெளிவந்து சக்கைபோடு போட்ட படம்.

என் மனத்தில் இந்தப் படத்தின் கதையை எப்படி தமிழ்ப்படுத்தலாம் என வெகுநாள்களாக ஓடிக்கொண்டிருந்தது. நாடுகளுக்கிடையான போரை, இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான விரோதமாக மாற்றினேன். அப்படிப் பிறந்ததுதான், ‘புது நெல்லு புது நாத்து’. நம்முடைய கலாசாரம், பண்பாடு, கிராமம், மனிதர்கள், மொழி... என அந்தப் படத்துக்குப் புதுவண்ணம் கொடுத்தேன்.

p18a.jpg

கிராமத்தில் பெரிய மனிதராக இருக்கும் நெப்போலியன், ஊரில் பொன்வண்ணனைக் கொன்றதோடு அவருடைய சொத்துகளையும் அபகரித்தவர். பொன்வண்ணனின் மனைவி, இழந்த சொத்துகளை மீட்கும் வைராக்கியத்தோடு வாழ்ந்து வருகிறார். அவருக்கு இரண்டு மகன்கள். இளையமகன் நகரத்துக்குச் சென்று படிக்கிறார். நெப்போலியன் மகளும் அங்கே படிக்கிறார். விரோதம் பாராட்டும் குடும்பத்தின் வாரிசுகளுக்குள் காதல் வளர்கிறது. விரோதியின் மகள் வயிற்றில் குழந்தையும் வளர்கிறது. மகன் அம்மாவிடம் வந்து சொல்கிறான்: ‘‘வாளெடுத்து முடிக்க வேண்டிய பகையை நூலெடுத்து முடிக்கப் போகிறேன்.’’ ஆனால், தாய் மனது அதை விரும்பவில்லை. காதலைப் பயன்படுத்தி, காரியம் சாதிப்பதை அவள் ஏற்கவில்லை. என்னை எழுதத் தூண்டிய கதை எப்படி மாறியிருக்கிறது பாருங்கள். இதுதான் கதை செய்யும் வித்தை.

இந்தப் படத்தில் இளையராஜாவின் இசை மிகச் சிறப்பாக அமைந்தது. சுகன்யாவின் நடிப்பு கலாட்டாவாக இருக்கும். துறுதுறுவென பல்வேறு முகபாவங்களைக்காட்டிய அற்புதமான நடிகை அந்தப் படத்தில் கிடைத்தார். கலாக்ஷேத்ரா மாணவி அல்லவா?

மாடர்ன் தியேட்டர்ஸ்... பல உன்னதமான கலைஞர் களைத் தமிழ்த் திரையுலகுக்குத் தந்த நிறுவனம். அந்த நிறுவனத்துக்குப் பஞ்சுவும் நானும் சேர்ந்து பணியாற்றியது இனிமையான நினைவு. ‘கல்யாணமாம் கல்யாணம்’ என்ற படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் நாங்கள் இணைந்து எழுதினோம். நண்பர் ஜெய்சங்கர் நடித்த படம். அவருக்கு ஜோடியாக ஜெயசித்ரா.

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள். அசைவம் வேண்டுவோர் வெளியே ஹோட்டலுக்குச் சென்றுதான் சாப்பிட வேண்டும். தினமும் இரவு நேரத்தில் ஜெய்யும் நானும் வெளியே சாப்பிடக் கிளம்பிவிடுவோம். பிறகு நான், ஜெய், பஞ்சு இப்படி அசைவப் பிரியர்கள் ஒன்று சேர்ந்து ‘கறி உண்போர் கழகம்’ தொடங்கினோம். மாடர்ன் தியேட்டர்ஸ் வாட்ச்மேன், பக்கத்திலேயே ஒரு வீட்டில் இருந்தார். அவரைப் பிடித்து, ‘‘அசைவம் சமைத்துத் தர முடியுமா?’’ எனக் கேட்டேன். ‘‘சரி’’ என்றார். நாங்கள் ஆறு பேர். அவர்கள் வீட்டில் நான்கு பேர். பத்து பேருக்கான சமையலுக்குப் பணத்தைக் கொடுத்தேன்.

அவருடைய சம்சாரம் மிக அருமையாகச் சமைக்கக்கூடியவர். இந்தக் கறி உண்போர் கழகம் பெரிதாக வளர ஆரம்பித்தது. ஆளுக்குப் பத்து ரூபாய் போட்டு வாட்ச்மேனிடம் கொடுத்துவிடுவோம். அவர் கறி, மீன் வாங்கி அவற்றைச் சமைத்துக் கொண்டுவருவார். நிறுவனத்தின் சட்டதிட்டங் களுக்குக் கட்டுப்பட்டு, இந்த வேலை நடந்து கொண்டிருந்தது. ஜெய், ‘‘இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?’ எனச் சந்தோஷமாகக் கலந்துகொள்வார்.

ஒருநாள் ஜெய் என்னை அழைத்து, ‘‘நாளை இரவு நான் சென்னை கிளம்ப வேண்டும். எடுக்க வேண்டிய காட்சிகளைக் கொஞ்சம் சீக்கிரம் முடித்துவிட்டால் நன்றாக இருக்கும்’’ எனச் சொன்னார். ‘‘நாளைக்கு எடுக்கப் போகும் காட்சிக்கான வசனங்களை உடனே தயார் செய்துவைக்கிறேன்’’ என்றேன். காலையில் பஞ்சு கொஞ்சம் தாமதமாகத்தான் எழுந்திருப்பார். நான் ஐந்து மணிக்கு எழுந்துவிடுவேன். வசனத்தோடு தயாராக இருந்தேன்.

பத்து மணிக்கு மேல் ஒவ்வொருவராக செட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். மேக்கப் ரூமில் ஜெய்க்கு மேக்கப் நடந்துகொண்டிருந்தது. அப்போது படத்தின் இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி அங்கே வந்தார். நான் வசன பேப்பரை இயக்குநரிடம் கொடுத்தேன். ஓகே என வாங்கிக்கொண்டார். ஆனால், அன்று அவர் என்ன மூடில் இருந்தாரோ... படப்பிடிப்புக்கான எந்த வேலையும் நடக்கவில்லை.

ஜெய் அழைத்து, ‘‘நான் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்றேனே... எந்த வேலையும் நடக்கவில்லையே’’ என்றார். ‘‘சார்... என் வேலையை முடித்துக் கொடுத்து விட்டேன். டைரக்டர்தான் வேலையை ஆரம்பிக்க வேண்டும்’’ என்றேன்.
அதற்குள் பஞ்சு வந்தார். ‘‘ஏன் ஷூட்டிங் ஆரம்பமாகவில்லை’’ என்றார். டைரக்டர் கடுங்கோபமாக, ‘‘வசனம் எழுதித் தந்தால்தானே ஷூட்டிங் ஆரம்பிக்க முடியும்?’’ என்றார்.

நான் பதறிப்போய், ‘‘சார், காலையிலேயே உங்களிடம் வசன பேப்பரைக் கொடுத்துவிட்டேனே?’’ என்றேன். டைரக்டரோ, ‘‘நீங்கள் கொடுக்கவே இல்லை’’ என்றார் உறுதியாக.

இந்த நேரத்தில் ஜெய் வந்தார். உண்மையிலேயே அவர் சி.ஐ.டி சங்கர்தான் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)


p18.jpg

ரோமியோ - ஜூலியட்!

காதல் கதைகளில் ரோமியோ - ஜூலியட்டுக்கு தனியிடம் உண்டு. இதுவும் பகைக் குடும்பங்களின் காதல் கதைதான். உயிருக்கு உயிரான காதலர்கள், ரோமியோவும் ஜூலியட்டும். விருப்பத்துக்கு மாறான ஒரு திருமணத்திலிருந்து தப்பிக்க, விஷம் குடித்து இறந்ததுபோல் நாடகமாடுவாள் ஜூலியட். உண்மையில், அவள் குடித்தது, சில மணி நேரங்கள் மட்டுமே மயக்கத்தில் வைத்திருக்கும் ஒரு மருந்து. இந்தத் தகவலை வீரன் ஒருவனிடம் சொல்லி, ரோமியோவிடம் தெரிவிக்கக் கட்டளையிடுவாள். தகவல் சொல்லப் போன வீரன் இடையில் தாமதிக்க, உண்மை தெரியாமல் ஜூலியட்டை பார்க்க வருவான் ரோமியோ. அவள் மரணமடைந்து விட்டதாகக் கருதிக் கலங்குவான். அந்த இடத்திலேயே உயிர் துறப்பான். மயக்கத்திலிருந்து எழுந்த காதலி, ரோமியோ இறந்துகிடப்பதைப் பார்த்துவிட்டு உயிர் துறப்பாள். ஷேக்ஸ்பியரின் மொத்தக் காவிய சாதுர்யமும் செறிவாகச் சொன்ன திருப்புமுனைக் காட்சி அது.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

கடல் தொடாத நதி - 25 - காணாமல் போன கதை வசனம்!

 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்

 

ஜெய் சார் வந்தார். டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி சாரிடம், ‘‘டைரக்டர் சார், செல்வராஜ் வசனப் பேப்பரை உங்களிடம் கொடுத்ததை நான் பார்த்தேன்’’ என்றார். மீண்டும், ‘‘இல்லவே இல்லை’’ எனச் சாதித்தார் இயக்குநர். ‘‘நீங்கள் உங்கள் ஜிப்பா பாக்கெட்டில் பாருங்கள்’’ என்றார் ஜெய் சிரித்தபடி. தன் ஜிப்பா பாக்கெட்டில் பார்த்த டைரக்டருக்கு ஒரு கணம் அதிர்ச்சி. காலையில் நான் கொடுத்த பேப்பரை ஏதோ அவசரத்தில் வாங்கி ஜிப்பா பாக்கெட்டில் வைத்துவிட்டு மறந்திருக்கிறார் அவர். ஆனால், நான் கொடுத்ததையும், அவர் வாங்கி பாக்கெட்டில் வைத்ததையும் மேக்கப் போட்டுக்கொண்டிருந்த ஜெய், தன் எதிரில் இருந்த ஆளுயர முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்திருக்கிறார்.

அவர் மட்டும் அன்று அதைச் சொல்லவில்லை என்றால், எனக்குக் கேவலமாகப் போயிருக்கும். பொய் சொன்னதாகவும் ஆகியிருக்கும். ஆனாலும், எனக்கு அது வேதனையாக இருந்தது. ‘‘நான் உடனே சென்னை கிளம்புகிறேன்... இனி இந்தப் படத்தில் வேலை பார்க்க மாட்டேன்’’ என்று கொந்தளித்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னைப் பஞ்சுவும் ஜெய்யும் சமாதானப்படுத்த முயற்சி செய்தார்கள். நானோ, ‘‘முடியவே முடியாது’’ என ஒற்றைக்காலில் நின்றேன்.

சிறிது நேரத்தில் டைரக்டர் என்னருகே வந்து, ‘‘நான் உங்களைவிட வயதில் பெரியவன்... என் மறதியைப் பொறுத்துக்கொள்ள மாட்டீர்களா?’’ என்றார். என் வருத்தமெல்லாம் ஓடி மறைந்துவிட்டது. பழையபடி ஷூட்டிங் வேலைகள் ஆரம்பமாயின.

p30.jpg

ஜெய் என்ன நினைத்தாரோ, ‘‘டாக்கி போர்ஷனை இப்போது ஆரம்பித்தால் மாலைக்குள் முடிக்க முடியாது. ஆகவே நான் இன்னும் இரண்டு நாள்கள் தங்குகிறேன். பாடல் காட்சியை முடித்துவிடுவோம்’’ என்றார். அவர் விருப்பப்படி மதியத்துக்கு மேல் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

‘கல்யாணமாம் கல்யாணம்’ படத்தின் டான்ஸ் மாஸ்டரின் பெயர் ராமு. அவருக்கு ஒரு நடன உதவியாளர்... அவர் பெயர் சாந்தி. நடன இயக்குநருக்கு ஒரு சிரமும் வைக்காமல் சிரத்தையாக நடனக் காட்சிகளை அவர் நடித்துக் காட்டிக்கொண்டிருந்தார். அவருடைய நடன பாவனைகளும், சுறுசுறுப்பும், அழகும் கவனம் ஈர்ப்பதாக இருந்தன. ‘‘இவர் ஒரு நாள் பெரிய நடிகையாக வருவார்’’ என நான் சொன்னேன். சில ஆண்டுகளிலேயே, நான் சொன்னது நடந்தது. கேரளப் பட உலகின் முன்னணி நடிகையாக வந்தார் அவர். ‘அவளோட ராவுகள்’, அவர் நடித்த படம். இப்போது புரிந்திருக்கும். அவர்தான் நடிகை சீமா.

‘கல்யாணமாம் கல்யாணம்’ படத்துக்குப் பிறகு ஜெய்யை நான் சந்திக்க வாய்ப்புகள் அமையவில்லை. 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பத்திரிகை நண்பர் எனக்கு போன் செய்தார். ‘‘கோலாலம்பூரில் இருந்து பேசுகிறேன்’’ என்றார். நான் அப்போது ஒரு கதை விவாதத்தில் இருந்தேன். போன் சரியாகக் கேட்கவில்லை. ‘‘உங்கள் நண்பர் பேசுகிறார், பேசுங்கள்’’ என்றார்.

மறுமுனையில் இருந்து, ‘‘ஹலோ ஜெய் பேசறேன்’’ என்றது குரல். எனக்கு சட்டென யார் எனப் புரியவில்லை. போனும் கரகரவென சத்தமாக இருந்தது. நான், ‘‘யாரு... யாரு?’’ எனக் கேட்டேன். அத்துடன் லைன் கட் ஆகிவிட்டது. ஜெய்யாக இருக்கும் எனப் புரிந்தது. நான் தொடர்புகொண்டபோதும் லைன் கிடைக்கவில்லை. கதை விவாதத்தில் இருந்தேன் என்றேன், அல்லவா? அதனால், ‘அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்’ என விட்டுவிட்டேன். அடுத்த சில நாட்களில் ஜெய் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. என்னால் நம்பவே முடியாத மரணம் அது. எல்லா மரணங்களும் இப்படி ஒரு வடுவை ஏற்படுத்திவிடுகின்றன.

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கோபித்துக்கொண்டு கிளம்புவதாகச் சொன்னேனே... அதே போல ஒரு சம்பவம் ‘தாஜ்மகால்’ படப்பிடிப்பில் நடந்தது. கர்நாடகாவின் பதாமியில் படப்பிடிப்பு. ஒரு நாள் காலை... பாரதிராஜா, பாரதியின் மகன் மனோஜ் மற்றும் பல நடிகர்கள், ஒளிப்பதிவாளர் எல்லாம் ரெடி. ஏற்கெனவே பேசியிருந்தபடி அன்றைக்கான காட்சிகளின் ஸ்கிரிப்டை எடுத்துக்கொண்டுவந்தேன்; பாரதிராஜாவிடம் கொடுத்தேன். இரண்டாக மடித்து வைத்த பேப்பர். பாரதி அந்த வசனங்களைப் பிரித்துக்கூடப் பார்க்கவில்லை. வசனக் காகிதங்களை அப்படியே எடுத்து ஓர் ஓரமாகப் போட்டான். நிலைகுலைந்துபோனேன்.

p30a.jpg

ஓர் எழுத்தாளனை இதற்குமேல் யாரும் கேவலப்படுத்திவிட முடியாது. ‘‘நான் உடனே மெட்ராஸ் கிளம்பறேன்’’ என வேகமாக அறைக்கு வந்துவிட்டேன். என்னைச் சமாதானப்படுத்த பாரதியின் மைத்துனர் மனோஜ்குமார் ஓடி வந்தார். ‘‘முடியவே முடியாது. இனி ஒரு நிமிடம்கூட இங்கே இருக்க மாட்டேன்... லாரி பிடிச்சாவது மெட்ராஸ் போயிடுவேன்... அவ்வளவுதான்!’’ என்றேன். உடனே, ‘‘டிக்கெட் போடுகிறேன்’’ என்றார்கள். நான் கிளம்பத் தயாராகி இருந்தேன். டிக்கெட் கிடைக்காததால் இரவு தங்க வேண்டியிருந்தது.

காலையில் மொத்த யூனிட்டே ஓடி வந்தது... ‘‘யார் சொன்னாலும் கேட்கமாட்டேன்’’ என்றேன் நான் உறுதியாக. மனோஜ்குமார் நிதானமாக, ‘‘இல்லை சார்... மாமா ரூமுக்குள்ள போய் கதவைச் சாத்திக்கிட்டார். காலையில் இருந்து வெளியே வரவில்லை. எதுவுமே சாப்பிடவில்லை. நீங்கதான் அவரைச் சமாதானப்படுத்தி வெளியே கூட்டிக்கிட்டு வரணும்’’ என்றார்.

பதறிப்போனேன். ‘‘ஏன் முன்னாடியே சொல்லலை? இவ்வளவு நேரம் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தே?’’ எனக் கோபமாகக் கேட்டுவிட்டு, பாரதியை இன்டர்காமில் அழைத்தேன்.

வந்தான். ‘‘சாப்பிட்டியா?’’ என்றான். முதலில் என்னைச் சாப்பிடச் சொல்லி அவனே இட்லி ஊட்டிவிட்டான். பாரதி உணர்ச்சிவசப்படும் கலைஞன்; பாசத்தைக்கொட்டும் படைப்பாளி. அவன் என் வசனப் பேப்பரைப் பார்த்ததும் கோபப்பட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. அன்று வாய்பேச முடியாத ஒருவனுடன், இன்னொருவன் பேச வேண்டிய காட்சி. அதற்கு ஏன் கற்றையாக ஒரு குயர் பேப்பருக்கு வசனம் எழுதி வந்தேன் என்ற கோபம் அவனுக்கு.

ஆனால், அதில் நான் வசனமே எழுதியிருக்கவில்லை. தாளின் இடதுபுறம் காட்சி விவரணை, ரியாக்‌ஷன் போன்றவற்றைத்தான் எழுதியிருந்தேன். பேப்பரின் கனத்தைப் பார்த்து, ‘தேவையில்லாமல் எதற்கு இவ்வளவு வசனம்’ என நினைத்துவிட்டான். நான் கோபமாகச் சென்ற பிறகு, அந்தப் பேப்பர்களை எடுத்துப் புரட்டியிருக்கிறான். அவசரப்பட்டுவிட்டதை... காயப்படுத்திவிட்டதை உணர்ந்திருக்கிறான். உண்மையை உணர்ந்தபோது இருவரின் கண்களுமே கலங்கியிருந்தன.

சந்திப்பு: தமிழ்மகன்

(ரீல் அல்ல ரியல்)

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.