Jump to content

யாழ்ப்பாணத்தில், மாடு களவெடுத்த இளைஞனுக்கு... பொது மக்கள், கொடுத்த தண்டனை சரியா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien  Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien 

Bild könnte enthalten: eine oder mehrere Personen, im Freien und Natur 

உங்கள்... கருத்து  என்ன?  
நேற்று...  நல்லூரில், மாடு களவெடுத்த இளைஞனை.. மனிதநேயமின்றி கட்டி வைத்து... 
அடித்து,  சித்திரவதை செய்த   புகைப்படத்தை  பார்த்த போது, 
இவ்வளவு... சித்திரவதை செய்ய வேண்டுமா? 
:shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமான காயங்கள்...தடியினால் அடிக்கப்பட்டதனாலேயே ஏற்பட்டுள்ளன போல உள்ளன!

காலுக்குக் கீழேயும்...கைகளிலும் மட்டுமே காயங்கள் உள்ளன!

என்னைக் கேட்டால்....எனது பதில் சரியென்றே இருக்கும்!

பெடியனைப் பார்க்கக் கஷ்டத்திலை திருடின ஆள் மாதிரி இல்லை!

களவை ஒரு தொழிலாகச் செய்பவர் போல உள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உங்கள்... கருத்து  என்ன?  
நேற்று...  நல்லூரில், மாடு களவெடுத்த இளைஞனை.. மனிதநேயமின்றி கட்டி வைத்து... 
அடித்து,  சித்திரவதை செய்த   புகைப்படத்தை  பார்த்த போது, 
இவ்வளவு... சித்திரவதை செய்ய வேண்டுமா? 
:shocked:

பொதுமக்கள் தண்டனை கொடுக்க அவர்கள் என்ன நீதிபதிகளா அல்லது  தேவ தூதர்களா?பிழை என்று தான் எனக்கு படுகுது....மைத்திரிமாமாவின் பொலிஸிடம் பிடிச்சு கொடுத்திருக்கலாம்...

Link to comment
Share on other sites

காவல்துறை வி.புலிகள் சந்தேக நபர்கள் என்றால் பாய்ந்து பாய்ந்து பிடிப்பார்கள்.இப்படியான திருடர்களை கண்டும் காணாமலும் விடுகிறார்கள் போலுள்ளது. மக்களும் திருடர்களின் தொல்லையால் வெறுத்துப் போனார்கள். காவல்துறையில் நம்பிக்கை இல்லாதாலும் ஆத்திரத்தாலும் இனி மேல் இப்படி நடக்காமல் இருக்க ஒரு படிப்பினைக்காக(ஏனைய திருடர்களுக்கு) உடனடி தீர்வாக மக்கள் இதனை செய்திருக்கலாம்.

கும்பலாக வன்புணர்வு செய்தவர்களுக்கே உரிய தீர்வை வழங்காத காவல்துறை இப்படியான கள்வர்களை பிடிப்பதாவது, தண்டிப்பதாவது என்ற மக்களின் எண்ணமே இத்தகைய தண்டனையை மக்கள் எடுக்க தூண்டியது எனலாம்.

மற்றும்படி மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுப்பதில் உடன்பாடில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் ஒரு செய்தி பார்க்க நேர்ந்தது. 
நெஞ்சை ஏதோ செய்தது.

களவின் அளவையோ
அதன் தாக்கத்தையோ 
அந்த அந்த மக்கள் தான் தீர்மானிக்கணும்
ஒருவருக்கு 10 ரூபா பெரிதாகவும்
ஒருவருக்கு பல கோடிகள் சிறிதாகவும் தெரியலாம்.

சட்டம் நீதி தனது கடமையிலிருந்து தவறும் நாட்டில் அல்லது பக்க சார்பாக செயற்படும் நாட்டில் 
அல்லது அரசை நீதியை நம்பி பலமுறை ஏமாந்து போகும் நிலையில் மக்கள் அதிகாரங்களை கையிலெடுப்பது நடைபெறுகிறது. இதை அரசின்மீது அதிகாரங்களின் மீதான தாக்குதலாகத்தான் பார்க்கமுடிகிறது. 
இது எனது ஊரிலேயே தொடங்கிவிட்டது. 
அது தான் நீதியின் பால் அரசின் பால் மக்கள் வைத்திருந்த இறுதி நம்பிக்கை.

அந்த இளைஞனின் படத்தை இங்கு பகிர்வதில் எனக்கு உடன்பாடில்லை
அவன் ஒரு குறியீடு மட்டுமே..

இதன் தொடர்ச்சி
எம்மை அழித்துவிட்டு
எமது மண்ணை அபகரித்துவிட்டு
எமது கலாச்சாரங்களை
இனத்தூய்மையை அழித்துவிட்டு
முகாம்களில் நிம்மதியாக தூங்குபவர்மீது பாயணும்
அப்படி நடந்தால் தான் இந்த உணர்வும் 
இந்த தாக்குதலும் சரியான பாதையில் பயணிக்கிறது என எடுத்துக்கொள்ளலாம்
அல்லது சும்மா இடங்கண்ட இடத்தில்........????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாள் வெட்டிலிருந்து சகலதும் தெரிந்தும் கட்டுப்படுத்த போலிசுக்கு இன்னமும் அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்டோர் சட்டத்தை தாங்களே கையிலெடுப்பது தவிர்க முடியாததாகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களவு என்பதை  நீங்கள் உங்களிடம் இருக்கும் ஒரு பொருளை ஒருவர் தெரிந்து திருடி செல்கிறார் என்றால் எப்படி கோபம் வரும் ஒருவரின் , ஒரு குடும்பத்தின் வருமானத்தில் கைவைத்து விட்டு அவரை மன்னித்து விடுவதென்பது முடியாது  குறிப்பா யாழ்ப்பாணத்தில் கூலி வேலைக்கு 1200 ரூபாய்க்கும் ஆள் இல்லை இவர் ஏன் கூலி வேலை செய்ய கூடாது பல நாளாக செய்து வருகிறார் போல் தெரிகிறது இதில் இவரது சகாக்களும் அடக்கம் போல் தெரிகிறது பல முகநூல் பதிவுகளை பார்க்கும் போது 

என்னை பொறுத்த வரைக்கும் நான் கஸ்ரப்பட்டு உழைத்த பொருள் ஒன்றை தெரிந்து களவாடி செல்கிறார் என்றால் அவருக்கு இதைவிட அதிக  தண்டனை கொடுப்பேன்.

இதற்கு சவுதியில்  திருட்டு என்றால் பொருளின் தன்மைக்கேற்ப விரல் ,மணிக்கட்டு அல்லது தலை வெட்டப்படும் ஆனால் யாரும் கேட்பதில்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இதன் தொடர்ச்சி
எம்மை அழித்துவிட்டு
எமது மண்ணை அபகரித்துவிட்டு
எமது கலாச்சாரங்களை
இனத்தூய்மையை அழித்துவிட்டு
முகாம்களில் நிம்மதியாக தூங்குபவர்மீது பாயணும்
அப்படி நடந்தால் தான் இந்த உணர்வும் 
இந்த தாக்குதலும் சரியான பாதையில் பயணிக்கிறது என எடுத்துக்கொள்ளலாம்
அல்லது சும்மா இடங்கண்ட இடத்தில்........????

காம்ப் அடிக்க வேணும் என்றீர்கள்.:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியும் எடுக்கலாம்

இல்லை

இடம் கண்ட இடத்தில  தான் நாங்க காம்ப்  அடிப்பம் என்றும் எடுத்துக்கலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவு ஆறுமணி என்றால் காணும் வீடு முழுக்க பார்கம்பு போட்டு அடைத்துவிட்டு உள்ளே வெக்கை பான் சுழல் காற்றுடன் அரை தூக்கம் போடணும் இந்த களவை தொழிலாக செய்யும் கள்வர்களுக்கு அவ்வளவு பயமாம் திருப்பி அடித்தால் போலிஸ் வந்து கட்டபஞ்சாயத்து செய்து அடிவேண்டின கள்வனுக்கு இழப்பீடு பெற்றுகொடுத்த சம்வங்களும் யாழில் உண்டாம் .

அங்கு குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதுக்கே போலிஸ் உள்ளது போல் இருக்கு 

இங்கு மாடு களவெடுத்தவனின் காலை கையை முறிச்சு விட்டு இருக்கணும் . 

Link to comment
Share on other sites

அவ் கள்ளரை பொது மக்கள் தண்டித்தமை. மிக மிக தவறான செயல் மட்டுமல்ல, தண்டிக்கப்பட வேண்டிய செயல்.

இயக்கங்களின் காலத்தில் போஸ்ட் கட்டையில் கட்டி திருடர்களை மண்டையில் போட்டதை ரசிச்ச, சமாதான காலத்தில் தாய்/ சகோதரி கண் முன்னால் வைச்சு ஒரு திருடரை அடிச்சே கொன்ற கலாச்சார காவலாளிகள் எனும் காவாலிகள் செய்ததை ஆதரித்த அதே கூட்டத்தின் வழி வந்தவர்களால் தான் இங்கு இவரையும் கட்டி வைச்சு சித்திரவதை செய்து இருக்கும்.

வாள் வெட்டில் ஈடுபடுகின்றவர்கள் எவர் என அறிந்தும் தடுக்க மட்டுமல்ல பொலிசுக்கு முறையிடக் கூட பயப்படும் யாழ் சமூகம், அப்படி வாள் வெட்டில் ஈடுபட்டவர் முகனூலில் தன் படத்தையும் வாளையும் போட்டு கவிதை வடிக்க அதுக்கு 400 லைக் இட்ட சமூகம், பின்னேரம் ஆனால் கசிப்பையும் போதைப் பொருளையும் போட்டுக் கொண்டு மதில்களில் அமர்ந்து போக வரும் பெண்களிடம் படு கேவலமாக பாலியல் தொல்லை கொடுக்கும் இளைஞர்களை கேள்வி கேட்க அஞ்சிக் கொண்டு,கொலையும் கொள்ளையும் செய்தே கட்சி வளர்த்த கொலையாளி டக்கிளசுக்கு வாக்களித்து வெல்ல வைச்ச வெட்கம் கெட்ட சமூகம் ஒரு மாடு  திருடரை பிடிச்சு தண்டனை வழங்குகின்றது

சித்திரவதைகளுக்கு எதிராக குரல் கொடுத்து தம் மீது இழைக்கப்பட்ட  வன்முறைகளுக்கு எதிராக சர்வதேசத்திடம் நீதீ கேட்டுக் கொண்டே சக தமிழ் இளைஞனை சித்திரவதை செய்து, அதை படம் பிடிச்சு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து குரூர சுகம் காண்கின்றது இந்த சமூகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பக்கத்து ஊரான் எங்கடை ஊர் பெட்டையளுக்கு லவ் லெட்டர் குடுத்தாலே.....அவனை புடிச்சு இரவிரவாய் முழத்துக்கு முழம் தட்டியனுப்பிற சமூகத்திலை வளர்ந்தவன். அந்த சமுதாயத்தில் இருக்கும் போது அது சரியாக பட்டது.ஆனால் இங்கிருந்து அதாவது சனநாயக உரிமைகள்/சட்டங்கள் நிறைந்த நாடுகளிலிருந்து அப்படியான தண்டனைகளை பார்க்கும் போது கேவலமாகத்தான் தெரிகின்றது. இருந்தாலும் அங்கு இருப்பவர்களுக்குத்தான் தெரியும் கள்ளர்களின் களவும் அவர்களின் ஆக்கிரோசமும்...

தண்டனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் சித்திரவதை மனிதத்திற்கு அப்பாற்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

அவ் கள்ளரை பொது மக்கள் தண்டித்தமை. மிக மிக தவறான செயல் மட்டுமல்ல, தண்டிக்கப்பட வேண்டிய செயல்.

எனது ஊரில் ஒரு லெக்சர் (விரிவுரையாளர், வீட்டில் மனிசி விடியற்காலை 4 மணிக்கு எழும்பி சமைக்க வெளிக்கிட ஆயத்தமாக வீட்டுக்காரர் சாமிக்கு பூ பறிக்க வெளிக்கிட யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள்ள வந்தவன் காசு அவரின்ட ஸ்கூட்டி எல்லாம் எடுத்துட்டு போய்ட்டான் நிழலி அவன் அன்று சிக்கியிருந்தால் அவன் நிலமை இதைவிட மோசமாக இருக்கும் எனென்றால் எங்க ஊருக்கு வேற பழமொழியும் இருக்கிறது மனிசியும் வேலையென்ற படியால் அதிகாலையில் சமைக்க வேண்டிய சூழ் நிலை இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை அந்த கள்ளனை .

மரண வீட்டுக்கு சென்ற இன்னொரு குடும்பத்தினர்  சென்றதை பார்த்து அவர்கள் வீட்டுக்குள் இறங்கி  அவர்கள் நகைகள் போட்டு போகவில்லை அவர்களின் மொத்த நகைகளையும் அள்ளி சென்றுவிட்டார்கள்  அது அவர்களின் பரம்பரை வழி வந்தது இன்னும்கண்டு பிடிக்க வில்லை பாருங்கோ கள்ளனையெல்லாம் ஆலாத்தி எடுக்க இயலாது பாருங்கோ

ஊரில்  கள்ளன் பிடி பட்டால் அவனை கட்டி உரிப்பது இங்கு வழமை தானே அது உங்களுக்கு தெரியும் தானே  அடிச்சு முடிஞ்ச பிறகு பொலிஸ் கொண்டு போரதும் வழமை 

Link to comment
Share on other sites

1 hour ago, முனிவர் ஜீ said:

முனிவர்,
திருட வந்தவரை கட்டி வைத்து ஆத்திரத்தில்  இரண்டு சாத்து சாத்தி விட்டு போலீசை கூப்பிடுவது எங்கும் நடப்பது. சுய பாதுகாப்பிற்காக இங்கு கூட இது நிகழ்வதுண்டு. ஆனால் கட்டி வைத்து கையை காலை முறிப்பது, சித்திரவதை செய்வது, சாகும் வரைக்கும் அடிச்சுக்க கொல்வது, அடி வாங்கியவரது படத்தை பகிர்ந்து குரூரமாக ரசிப்பது போன்றவை ஏற்றுக் கொள்ள முடியாது.

திருடராக இருப்பதால் அவர் மனிதரல்லாதவராக ஆகி விட்டாரா? அவருக்கான மனித உரிமைகள் என்று எதுவும் இல்லையா? எவரும் அவருக்கு தண்டனை கொடுக்கலாமா?

யாழ்ப்பாணத்தில் லஞ்சம் வாங்காத அரச / கிராம  அதிகாரிகள் குறைவு. அவர்களிடம் உதவிக்கு போகின்றவர்கள் தாமாகவே லஞ்சம் கொடுத்து விடுவார்கள். அப்படி கொடுக்காமல் விடின் அலைக்கழிப்பார்கள். அவர்கள் மட்டுமன்றி மாகாண சபை உறுப்பினர்கள், தமிழ் எம்பிக்கள் எல்லாரும் ஊழலில் திளைத்தவர்கள். வடக்கு மாகாண சபையே ஒரு பெரும் ஊழல் சபை என்று பெயர் வாங்கி வைத்துள்ளது (இதன் முதலமைசார் ஒரு முன்னாள் நீதியரசர்!).  எந்த வேலைக்காக அரசிடம் இருந்து சம்பளம் வாங்குகின்றனரோ  அதை செய்ய மேலதிகமாக லஞ்சம் வாங்குகின்றனர். இது ஒரு பெரும் திருட்டு. ஆனால் இப்படியான பெரும் திருடர்களை "ஆள் ஒரு சுழியன்' என்று பெயர் சூட்டி  மதிப்பர். ஆனால் வெறும் மாட்டு திருடனை அடித்து சித்திரவதை செய்வர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு  கள்வருக்கு மனித நேயம் இல்லாத ஊர் இரவானதும் கள்வர்களினதும் கயவர்களின் ஆட்சி நடக்கும் இடம் யாழில் சில பகுதிகளில் மத்தியான நேரத்தில் கூட போக சனம் பயபிடுகினம் சொறிலங்காவின் கூலிகளுக்கு இப்படியான சுழல் மிக தேவை அழிவது தமிழன் தானே என்னும் இனவாதம் நோக்கம்.இங்கு வந்து மாட்டை திண்டு வாகாக செற்றி யில் இருந்தபடி தட்டுபவர்களுக்கு தெரியாது யாழ் வீடுகளில் பசு உறவின் அங்கமாகவே இருப்பது. அப்படியான பசுக்களை களவாடா வந்தவன கும்பம் மரியாதை வைச்சு ஆலத்தி எடுத்து விட்டு சொறிலங்கா கூலி போலிசுகளிடம் குடுக்க கள்வனை ராஜமரியாதையுடன் அவனின் வீட்டில் கொண்டு போய் விட்டு விடும் அவனும் அவன் கூட்டமும் அன்று இரவே அடுத்த களவுக்கு கிளம்புவார்கள் இதுதான் இங்கும் பலருக்கு தேவைபடுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலுள்ள படம் மக்கள் சட்டத்தை கையில் எடுத்தபோது...

கீழ் உள்ள படம் ராணுவம் சட்டத்தை கையில் எடுத்தபோது...

எனக்கு இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.. இரண்டிலும் மனிதர்கள்தான் தெரிகிறார்கள்... 

17798979_153053828554667_1845906602102535295_n.jpg?oh=3416813bc1658e10f597ca80e67008bb&oe=5962B74717796573_153053831888000_6385754773559590806_n.jpg?oh=065a81a4cf7ce3535099cb41da529ff6&oe=595D2BC1

Link to comment
Share on other sites

33 minutes ago, பெருமாள் said:

அங்கு  கள்வருக்கு மனித நேயம் இல்லாத ஊர் இரவானதும் கள்வர்களினதும் கயவர்களின் ஆட்சி நடக்கும் இடம் யாழில் சில பகுதிகளில் மத்தியான நேரத்தில் கூட போக சனம் பயபிடுகினம் சொறிலங்காவின் கூலிகளுக்கு இப்படியான சுழல் மிக தேவை அழிவது தமிழன் தானே என்னும் இனவாதம் நோக்கம்.இங்கு வந்து மாட்டை திண்டு வாகாக செற்றி யில் இருந்தபடி தட்டுபவர்களுக்கு தெரியாது யாழ் வீடுகளில் பசு உறவின் அங்கமாகவே இருப்பது. அப்படியான பசுக்களை களவாடா வந்தவன கும்பம் மரியாதை வைச்சு ஆலத்தி எடுத்து விட்டு சொறிலங்கா கூலி போலிசுகளிடம் குடுக்க கள்வனை ராஜமரியாதையுடன் அவனின் வீட்டில் கொண்டு போய் விட்டு விடும் அவனும் அவன் கூட்டமும் அன்று இரவே அடுத்த களவுக்கு கிளம்புவார்கள் இதுதான் இங்கும் பலருக்கு தேவைபடுது .

அங்கு என்ன நடக்குது என்பதை  வெறும் கனவில் வரும் செய்திகளை மட்டும் வைச்சு எழுதுகின்றீர்கள். அங்கு கள்வர் பயம் இருக்கு, ஆனால் அது நீங்கள் ஊதிப் பெருப்பித்து பார்த்து இன்பம் கொள்ளும் அளவுக்கு அல்ல. இரவு 12 மணி வரைக்கும் விறாந்தையில் இருந்து இன்றும் கதைக்கும் சூழலும் அங்கு இருக்கு. கள்வர் பயத்தை விட அதிகமாக இருப்பது வாள் வெட்டு பயம். இவ்வாறு வாள் வெட்டுகின்றவர்களை கைது செய்து சிறையில் அடைச்சு பின் வெளிவிட்டாலும் அவர்கள் அங்கு தொடர்ந்து இயங்க கூடியதாக இருப்பதற்கு அங்குள்ள முதலாளிமார்களும் கெளரவத்துக்காக தாரளமாக பணம் அனுப்பும் புலம்பெயர் உறவுகளுமே முக்கிய காரணம். அடுத்தது சாதாரண சட்டங்களால் அவர்களை கைது பண்ணி அதிக காலம் வைத்திருக்கவும் முடியாது. நீதிபதி இளஞ்செழியன் இது தொடர்பாக விளக்கமாக உரையாற்றியும் இருக்கின்றார்.

பசு உறவின் அங்கமாகவே இருந்து விட்டு போகட்டும். ஆனால் அதனை களவெடுக்க வந்தவரை மிருகத்தனமாக அடித்து துன்புறுத்துவதற்கு அந்த பசுவை  காரணம் காட்டாதீர்கள். செய்த செயல் கொடூரச் செயல், அதற்கு வந்து ஆயிரம் நியாயம் கற்பிற்கின்றீர்கள். சித்திரவதைக்கு நியாயம் கற்பிக்க இனமானம், சிங்கள இனவாதம் என்றேல்லாம் எடுத்து விடுகின்றீர்கள்.

நாங்கள் மாட்டை தின்று விட்டு வந்து சித்திரவதைக்கு எதிராக கதைக்கின்றோம். ஒரு சக மானுடனை கட்டி வைத்து அடித்து துன்புறுத்தி அதை படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து குரூர இன்பம் காணும் ஒரு கூட்டத்திற்கு எதிராக கதைகின்றோம். சட்டத்தினை கையிலெடுத்து எந்த விசாரணையும் இன்றி உடனே தண்டனை கொடுக்கும் அநீதியை எதிர்த்து கதைக்கின்றோம். ஆனால் இந்த அநீதியை நீங்கள் எதைச் சாப்பிட்டு விட்டு வந்து நியாயபடுத்துகின்றீர்கள்? நீங்கள் வேணும் என்றால் ஒருவனை கட்டி வைத்து தடியால் கதற கதற அடிக்க கூடியவராக இருக்கலாம்; ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடும் எம்மால் முடியாது.

9 hours ago, பெருமாள் said:

இரவு ஆறுமணி என்றால் காணும் வீடு முழுக்க பார்கம்பு போட்டு அடைத்துவிட்டு உள்ளே வெக்கை பான் சுழல் காற்றுடன் அரை தூக்கம் போடணும் இந்த களவை தொழிலாக செய்யும் கள்வர்களுக்கு அவ்வளவு பயமாம் திருப்பி அடித்தால் போலிஸ் வந்து கட்டபஞ்சாயத்து செய்து அடிவேண்டின கள்வனுக்கு இழப்பீடு பெற்றுகொடுத்த சம்வங்களும் யாழில் உண்டாம் .

எழுந்தமானமாக இல்லாமல், நம்பகத்தன்மையான ஊடகத்தில் வந்த ஒரு செய்தியை தானும் காட்டுங்கள். இன்று யாழில் பல சிவில் பிரச்சனைகளுக்கு சனம் பொலிஸ் நிலையங்களுக்கு தாராளமாக சென்று முறையிட்டு வருகின்றனர். மற்றது அங்கொன்றும் 6 மணிக்கு சனம் கதவை பூட்டிக் கொண்டு உள்ளே போய் படுக்கவில்லை. இரவு 9 மணி வரைக்கும் கூட கடைகளை திறந்து வைத்து வியாபாரம் கூட நடக்கின்றது.

9 hours ago, பெருமாள் said:

இங்கு மாடு களவெடுத்தவனின் காலை கையை முறிச்சு விட்டு இருக்கணும் . 

முஸ்லிம் அடிப்படைவாத நாடுகளில் தான் களவெடுத்தால் கையை காலை வெட்டி தண்டனை கொடுப்பார்கள். ஆச்சரியமாக இருக்கு மேலை நாட்டுக்கு வந்த பின்னும் நீங்கள் அப்படியான அடிப்படைவாத கொள்கையுடன் இன்னும் இருப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளமாட்டுக்கு சாகிற அளவுக்கு தண்டனை என்றால் (அதையும் யாராவது ஒரு ரவுடிதான் செஞ்சிருக்கும்) கோடிக்கணக்கில் பணம் புரளும் கள்ளமட்டைக்கு இந்நேரம் வெளிநாட்டில் பாதி தமிழ்பெண்டுகள் வெள்ளை சீலையுடந்தான் இருக்கோணும்...

மில்லியன் கணக்கில் கொள்ளை அடிக்கும் லைக்கா மற்றும் பல தமிழ்வர்த்தகர்களை கோட்சூட்டுடன் கூப்பிட்டு ஆலாத்தி எடுக்கிறார்கள்...

ஏழைக்கு செல்லுபடியாகும் இந்த மக்கள் தண்டனை நியாயம் பணக்காரனுக்கு செல்லாதாக்கும்...

Link to comment
Share on other sites

களவெடுத்தது பிழையான விடயம். மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்தது அதைவிடப் பிழையானது.  கள்வனுக்கும் சில உரிமைகள் இருக்கின்றன,  உரிமைகளை மதிப்பதுதான்  காட்டு மிராண்டிகளுக்கும் நாகரீகமடைந்த சமூகத்திற்கும் இடையிலான வேறுபாடு. கையை தலையை வெட்டும் மத்திய கிழக்கு  காட்டுமிராண்டி குழுமத்தினுள்ளேயே வருகின்றனர்.

நாம் வாழும் மேலைத்தேய நாடுகளில் கொலை செய்தவர்களை அடிக்கவோ துன்புறுத்தவோ அரசாங்கத்திற்கு கூட உரிமையில்லயே. வழக்கு நடத்தி சிறையில் அடைக்க முடியும். அங்கும் அவர்களுக்கு கணணிவசதி, நூல்நிலையம், ஜிம், என்று சகலவசதிகளும் இருக்கின்றதே. 

இது நடந்தது 2005/6 காலப் பகுதியில். எனது வீட்டிற்கு  அண்மையில் இருக்கும் எனது நண்பனின் வீட்டினுள்ளே ஒரு திருடன் பட்டப்பகலில்  வந்துவிட்டான். அவனை அவனின் அப்பர் ஒருமாதிரி மடக்கிப் பிடித்துவிட்டார். ஊர் மக்கள் திரண்டுவந்து அந்த திருடனுக்கு மொட்டையடித்து நாயடி அடித்தார்கள். பின்னர் அவனை சித்திரவதை செய்கிறோம் என்று அவனுக்கு மின்சாரத்தை செலுத்தியதில் அவன் இறந்து விட்டான். சந்தியிலே போடப்பட்ட அவனது பிரேதத்தை மடியில் வைத்து தாய் மனிசி கதறிய கதறல் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. 

Link to comment
Share on other sites

19 hours ago, புங்கையூரன் said:

அநேகமான காயங்கள்...தடியினால் அடிக்கப்பட்டதனாலேயே ஏற்பட்டுள்ளன போல உள்ளன!

காலுக்குக் கீழேயும்...கைகளிலும் மட்டுமே காயங்கள் உள்ளன!

என்னைக் கேட்டால்....எனது பதில் சரியென்றே இருக்கும்!

பெடியனைப் பார்க்கக் கஷ்டத்திலை திருடின ஆள் மாதிரி இல்லை!

களவை ஒரு தொழிலாகச் செய்பவர் போல உள்ளது!

இப்படி ஒரு கருத்தை உங்களிடம் இருந்து கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை புங்கை tw_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இரண்டு நிலையினை  நான் எடுக்கலாம் , ஒன்று  புத்தன்  ஜேசு  காந்தி  வழி , மற்றது  என் இயல்பான  வழி 

இந்தோனிசியாவில்  மயூரனை  சுட்டது  சரி என்று  வாதாடியவர்கள் இங்கு மாடு களவெடுத்தவனை  அடித்தது  பிழை என்று வேஷம் போடுகிறார்கள்.

புல் தரை இல்லா இடத்தில்  மாடு வளர்த்தவனுக்கே  மாட்டின்  அருமை தெரியும்.

Link to comment
Share on other sites

20 minutes ago, நந்தன் said:

மயூரனின் மரணதண்டனையை அன்று மட்டுமல்ல இப்பவும் முழு மூச்சாக ஆதரித்தவன் என்கின்ற முறையில் இதற்கும் பதில் எழுதுகின்றேன்.

மயூரன் ஒரு சமூகத்தையே நாசமாக்கும் போதைப் பொருட்களை விற்பனை செய்த ஒரு பெரும் குற்றவாளி. மற்றவர்களின் வாழ்வை அடியோடு நாசமாக்கி அதன் மூலம் வருமானம் தேடி பணக்காரனாக ஆசைப்பட்ட ஒரு சமூக விரோதி. அவரையும் மாட்டை களவெடுக்க முயன்ற திருடரையும் உங்களைப் போல என்னால் ஒரே தராசில் வைச்சுப் பார்க்க முடியாது. விடுதலைப் புலிகளின் சட்ட திட்டங்கள் கூட இவ் இரு குற்றங்களுக்குமான தண்டனைகளுக்கு இடையில் பெரும் வேறுபாட்டை காட்டி நின்றதை மறந்து இருக்க மாட்டீர்கள் என நினைக்கின்றேன் (வன்னியில் புலிகளின் காவல் துறைக்கு வந்த வழக்குகளில் பெரும்பாலானவை மாடு/ஆடு திருட்டும் கள்ள காதலும் என்பதையும் மறந்து இருக்க மாட்டீர்கள்). 

என்னைப் பொறுத்தவரைக்கும்

மற்றது, இங்கு யாரும் திருடரை புண்ணியவானாக காட்டவோ, விடுவிக்கவோ, அல்லது தாம்பாளத்தில் வைச்சு தாங்கவோ சொல்லவில்லை. அவரை சட்டம் பார்த்துக் கொள்ளட்டும் என பொலிசுக்கு பிடிச்சுக் கொடுத்து இருக்க வேண்டும். இலங்கை நீதித்துறையில் எனக்கு நம்பிக்கை இல்லை, எனவே நீதியை நானே கையிலெடுப்பேன் என்று சொல்வது மேலும் மேலும் குற்றவாளிகளை பெருகத்தான் வழி சமைக்கும். இதைச் சொல்ல நான் யேசுவாகவோ புத்தன் காந்தியாகவோ இருக்கத் தேவை இல்லை, ஒரு மனிதனாக இருத்தலே போதும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இப்படி ஒரு கருத்தை உங்களிடம் இருந்து கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை புங்கை tw_cry:

வரலாற்றில் சில நிகழ்வுகள்..காரணமில்லாமல் நிகழ்வதில்லை!

இது போன்றதே...குர் ஆனின் பிறப்பும் அமைகின்றது! எந்த விதமான கொள்கைகள் எதுவுமில்லாமல்..அழுக்காகவும், களவுகளில் ஈடுபட்டும், பல பெண்களுடன் உறவுகளில் ஈடுபட்டும்...நாடோடிகளாக வாழ்ந்த அரபுக்களை ஒரு ஒழுங்கான வழியில் நெறிப்படுத்தும் நோக்குடனே குர் ஆன் எழுதப்பட்டது! மெக்காவில் இருந்து மதீனாவுக்குத் துரத்தப்பட்ட முகமது நபி..இனி வேறு வழியில்லை என்ற நிலையிலேயே...ஜிஹாதைப் பிரகடனப் படுத்த வேண்டியேற்பட்டது!

அதே போன்ற நிலை தான் யாழில் இன்று உள்ளது!

மனு நீதிச் சோழனைப் போல...தனது மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொள்ளுமளவுக்கு...நீதி இன்று யாழில் இல்லை!

ஒரு வேளை ..இந்தச் செயலைப் புரிந்தவரைப் போலீசில் கொடுத்திருந்தால்...நாளை அவர் இன்னும் சிலருடன் வாள்களோடும் வரக்கூடும்!

அல்லது...பொலிசாரால் விடுவிக்கப் பட்டு...நீ ..நீனி.   நீ..நீ ! யூ கான்ற் காட்ச் மீ...என்ற மாதிரியும் வரக்கூடும்!

பாதிக்கப் பட்ட மக்கள் இதைச் செய்திருக்கிறார்கள்! அவர்கள் சட்டத்தைக் கையிலெடுத்தது சரியென்று கூற வரவில்லை!

அவர்கள் ஒரு ஆற்றாமையால் தான் இதைச் செய்திருக்கின்றார்கள்! அவருக்குப் பாடம் புகட்டுவது தான் அவர்களது நோக்கமாக இருந்திருக்கின்றது!

நாளை இவ்வாறு ஒரு செயல் நடக்கக் கூடாது என்பதற்காகத் தான் இந்தச் செயல் செய்யப்பட்டிருக்கின்றது!

ஆனால்..அவர்கள்...அவரது கட்டை அவிழ்த்து விட்டுள்ளதையும் கவனிக்கவும்!

அவரைக் கொல்வதோ ...அல்லது சித்திர வதை செய்வதோ அவர்களது நோக்கமாக இருந்திருந்தால்...எனது கருத்து வேறு விதமாக இருந்திருக்கும்!

Link to comment
Share on other sites

21 minutes ago, புங்கையூரன் said:

அவர்கள் ஒரு ஆற்றாமையால் தான் இதைச் செய்திருக்கின்றார்கள்! அவருக்குப் பாடம் புகட்டுவது தான் அவர்களது நோக்கமாக இருந்திருக்கின்றது!

நாளை இவ்வாறு ஒரு செயல் நடக்கக் கூடாது என்பதற்காகத் தான் இந்தச் செயல் செய்யப்பட்டிருக்கின்றது!

ஆனால்..அவர்கள்...அவரது கட்டை அவிழ்த்து விட்டுள்ளதையும் கவனிக்கவும்!

நன்றி புங்கை..

ஆனால் மக்கள் ஆற்றாமையால் இதை செய்யவில்லை மாறாக எம் சனத்தின் இரத்தத்தில் ஊறி இருக்கும்  அதிகாரம் / இளைச்சவரை துன்புறுத்தல்  / வலியவன் செய்யும் அக்கிரமங்களை சகித்து கொண்டு வலிமையற்றவர் மீது வன்முறை  மேற்கொள்ளல்  போன்ற மனப்பாங்கில் தான் இதனைச் செய்து இருக்கின்றனர் என திடமாக நம்புகின்றேன். ஏனெனில் இத் திரியில் நான் ஏற்கனவே பலர் செய்யும் அக்கிரமங்களை குறிப்பிட்டு (வாள் வெட்டு பேர்வழிகளில் இருந்து டக்கிளஸ் வரை) இதற்கு எதிராக மக்களின் ஆத்திரம் திரும்பவில்லை, ஆனால் தனியாக வந்து மாட்டுப்பட்டு போன ஒரு மாட்டுத் திருடர் மீதுதான் அவ்வளவு ஆத்திரமும் திரும்பி இருக்கு.

இந்த வன்முறை கூட அத் திருடரை தன் செயலுக்கு வருந்தச் செய்யப் போவது இல்லை. மாறாக வன்மமும், தன் சுய மரியாதையை இழந்ததன் ஆத்திரமும் தான் கூடி இருக்கும். விளைவுகள் மேலும் வன்முறைக்கு தான் வழிவகுக்கும்.

Quote

இது போன்றதே...குர் ஆனின் பிறப்பும் அமைகின்றது! எந்த விதமான கொள்கைகள் எதுவுமில்லாமல்..அழுக்காகவும், களவுகளில் ஈடுபட்டும், பல பெண்களுடன் உறவுகளில் ஈடுபட்டும்...நாடோடிகளாக வாழ்ந்த அரபுக்களை ஒரு ஒழுங்கான வழியில் நெறிப்படுத்தும் நோக்குடனே குர் ஆன் எழுதப்பட்டது! மெக்காவில் இருந்து மதீனாவுக்குத் துரத்தப்பட்ட முகமது நபி..இனி வேறு வழியில்லை என்ற நிலையிலேயே...ஜிஹாதைப் பிரகடனப் படுத்த வேண்டியேற்பட்டது!

அதே போன்ற நிலை தான் யாழில் இன்று உள்ளது!

இந்த நிலையில் யாழ்ப்பாணம் இல்லை என நம்புகின்றேன். மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்ற பாதையில் செல்லத் தொடங்கியுள்ளனர் யாழ் மக்கள். சின்ன சின்ன அளவுகளில் மக்கள் போராட்டங்களும், கல்வியில் முன்னேற்றமும், பொருளாதார உயர்வும் என்னால் காண முடிகின்றது.

அவர்களிக்கு நபியை போன்ற ஒருவர் தேவைப்படவில்லை, அவர்களை முன்னேற்ற ஒரு நல்ல தலைவர் தேவைப்படுகின்றார்

இந்த திரியில் என் கருத்தை போதுமான அளவுக்கு வைத்து விட்டேன் என நம்புகின்றேன்.  திரியை ஆரம்பித்த தமிழ் சிறிக்கு நன்றி!

நன்றி!

Link to comment
Share on other sites

42 minutes ago, நந்தன் said:

இங்கு இரண்டு நிலையினை  நான் எடுக்கலாம் , ஒன்று  புத்தன்  ஜேசு  காந்தி  வழி , மற்றது  என் இயல்பான  வழி 

இந்தோனிசியாவில்  மயூரனை  சுட்டது  சரி என்று  வாதாடியவர்கள் இங்கு மாடு களவெடுத்தவனை  அடித்தது  பிழை என்று வேஷம் போடுகிறார்கள்.

புல் தரை இல்லா இடத்தில்  மாடு வளர்த்தவனுக்கே  மாட்டின்  அருமை தெரியும்.

மயூரன் முதல் முறை போதைப் பொருளை கடத்தியபோது பிடிபடவில்லை. முதலாவது முறை வெற்றிகரமாக கொண்டுவந்து சேர்த்தார்கள், இரண்டாவது முறை பிடபடப்போகிறோம் எனத் தெரிந்து கைவிட்டு விட்டு தப்பி வந்தார்கள். மூன்றாவது முறை விமானம் ஓடுபாதையில்  தயாராக இருந்த போது பிடித்தார்கள். இந்தோனேசிய, சிங்கப்பூர்,மலேசிய விமான நிலையங்களில்  எழுத்துக்களில் போட்டிருக்கும் "Death Penalty for Those Who Carry Drugs" எனப் போட்டிருப்பதை வாசிக்கவே உடம்பு ஒருமுறை நடுங்குமே. பிடிபடாவிட்டால் மயூரன் இப்பவும் தூள் கடத்துவார். போதைப்பொருள் கடத்துவது இந்தோனேசியாவில் மரணத்திற்குரிய குற்றம், அவுசில் ஆயுள் தண்டனை.இப்போது அவுசிகள் யாராவது தூள் கடத்துகிறார்கள் எனது தெரிந்தாலும் அவுசினுள் வருமட்டும் வேற்று நாடுகளுடன் தகவல்களை பகிர்ந்து  கொள்ளுவது இல்லை.

கள்வன் களவெடுத்தது சரி அல்ல, ஆனால் அதற்கு தண்டனை கொடுக்க  அனுமதியில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.