Jump to content

ஜெர்மன் மொழி, ஜெர்மனியில் படிப்பு .. ஏராளமான வேலைவாய்ப்பு! - இதோ சில டிப்ஸ்! #VikatanExclusive


Recommended Posts

ஜெர்மன் மொழி, ஜெர்மனியில் படிப்பு .. ஏராளமான வேலைவாய்ப்பு! - இதோ சில டிப்ஸ்! #VikatanExclusive

"ஜெர்மனியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் இன்ஜினியர்கள் தேவைப்படுகிறார்கள். ஜெர்மன் மொழி தெரிந்தால் எளிதில் ஜெர்மனியில் வேலை வாய்ப்பினை பெற முடியும்" என்கிறார் சென்னையில் அமைந்துள்ள ஜெர்மன் மொழிக்கான பயிற்சி மையத்தின் தலைவர் பிரபாகர் நாராயணன். 

ஜெர்மன் பல்கலைக்கழகம்

 

"தற்போது ஜெர்மனி மொழி கேந்திரியா வித்யாலயா பள்ளிகளிலும், சிபிஎஸ்இ பள்ளிகளிலும் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. சில மாநில பள்ளிகளிலும் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிலும் ஜெர்மன் மொழி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஜெர்மன் மொழியினை கற்றுக்கொள்ள ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2 என ஆறு நிலைகள் (6 Level)  இருக்கின்றன. 

பிளஸ் 1, பிளஸ் 2 ஜெர்மன் மொழி சொல்லிக்கொடுக்கப்படும் பள்ளியில் ஏ1 நிலைக்குப் படிப்பார்கள். இந்த ஏ1 நிலையைக் கோடைக்காலத்தில் ஐந்து வாரங்களில் சொல்லி கொடுத்து விடுகிறோம். ஆகையால், பள்ளியில் ஜெர்மன் படிப்பவர்கள் கோடைக்காலத்திலேயே எங்களிடம் படித்து முடித்து விட்டு இதர பாடங்களில் படிப்பதற்குக் கவனம் செலுத்தலாம்.  

14-வயதுள்ள குழந்தைகள் பி2 நிலை வரை படிக்கிறார்கள். இங்கு பி2 நிலையில் படிப்பவர்கள் ஜெர்மனியில் எளிதாக இளநிலை பட்டப்படிப்புக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். அங்கு இளநிலை பட்டப்படிப்புகள் ஜெர்மன் மொழியிலேயே சொல்லி கொடுப்பார்கள். பி2 நிலைக்கு மாணவர்களைக் கொண்டு வர நிறையச் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறோம். இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் இங்கிருந்து ஜெர்மனி சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். 

ஜெர்மனியில் ஐஐடிக்கு இணையாகவும், உலக அளவில் உயர்ந்த மதிப்பைப் பெற்ற பல தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க வாய்ப்பு உள்ளது. இதர நாடுகளுடன் ஒப்பிடும் போது இங்குப் படிப்புச் செலவு மிகவும் குறைவு. இங்கு இளநிலை பட்டப்படிப்புக்கு உதவித் தொகை எதுவும் வழங்குவதில்லை.  முதுநிலை பட்டப்படிப்புக்கு உதவித்தொகை வழங்குகிறார்கள். 

ஜெர்மனிஜெர்மனியில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கச் செல்பவர்கள் பி2 லெவல் முடித்துச் சென்றால் சிறப்பு. இந்த லெவல் முடித்ததும் வெளிநாட்டில் படிக்க செல்வதற்கு டொபல் தேர்வு எழுதுவது போல் TestDaF என்ற தேர்வை எழுத வேண்டும். ஜெர்மனியில் குறைந்த செலவில் சொல்லிக்கொடுப்பதற்கு காரணம், இங்குப் படிப்பவர்கள் குறிப்பிட்ட காலம் வரை அங்கேயே பணியாற்ற வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது. எங்கள் ஊரில் படித்து விட்டு வேறு நாட்டில் சென்று வேலை பார்த்தால் எங்கு என்ன பயன் என்று கேட்கிறார்கள். இரண்டு வருடங்கள் படித்தால் ஆறு ஆண்டுகள் தொழிற்சாலையில் பணியாற்ற வேண்டும். பல்கலைக்கழகத்தில் படிப்பு ஆங்கிலத்தில் சொல்லிக்கொடுத்தாலும் தொழிற்சாலையில் பணியாற்றும் போது ஜெர்மனியில் பேசியாக வேண்டும். ஆகையால், ஜெர்மனி மொழி படித்தால் வேலை வாய்ப்பினை பெறுவது எளிது. 

ஜெர்மன் மொழி ஆசிரியராக வேண்டும் என்றால் அவர்களுக்கு இலவசமாகச் சொல்லிக்கொடுக்கிறோம்.  ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்றால் சி2 முடித்திருக்க வேண்டும். நாங்கள் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆசிரியர்களாக இருப்பவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறோம். இதனைப் படிப்பதற்கு உதவித்தொகையினை வழங்குகிறோம். ஆர்வம் உள்ளவர்கள் எங்களது அலுவலகமான சென்னையில் உள்ள மேக்ஸ் முல்லர் பவன் தொடர்புகொள்ளலாம்" என்றார் பிரபாகர் நாராயணன். 

"ஜெர்மனிக்கு உயர்கல்வி படிக்க பெரிய அளவில் பணம் தேவையில்லை. பல பல்கலைக்கழகங்களும் எந்த விதமான கட்டணமும் இல்லாமல் சொல்லிக்கொடுக்கின்றன" என்கிறார் ஃப்ளை ஸ்டேடி ஓவர்சீஸ் நிறுவனத்தின் இயக்குநர் முகமது ரியாஸ். 

இவர் ஜெர்மனியில் உயர்கல்வி சேர வழிகள் என்னென்ன என்பதை விளக்கினார். "மாணவர்கள் குறிப்பிட்ட அளவு மதிப்பெண்ணைப் பெற்றிருந்தால் பல பல்கலைக்கழகங்களில் கல்வி கட்டணத்தை பெறுவதில்லை அல்லது மிகக்குறைந்த அளவே கட்டணத்தை பெறுகின்றன. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, கல்லூரியில் பெற்ற மதிப்பெண்களின் பெற்ற விவரத்தையும், மற்றும் IELTS (International English Language Testing System) ஆங்கில தேர்வுக்கான மதிப்பெண், ஜெர்மன் மொழி படித்து பெற்ற சான்றிதழ்களையும் அங்குள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதனுடன் உயர்கல்வி ஏன் ஜெர்மனியில் உள்ள அந்தப் பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுக்கிறோம் என்பதற்கான விரிவான கடிதத்தையும், ரெஜ்யூம் போன்றவற்றை அனுப்பி வைக்க வேண்டும். இதனை எல்லாம் மதிப்பீடு செய்து பல்கலைக்கழகத்தில் இருந்து சேர்வதற்கான வாய்ப்பினை வழங்குவார்கள். 

ஜெர்மனியில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகமும் இளநிலை பட்டப்படிப்பில் குறிப்பிட்ட சதவீத அளவு மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கவே அனுமதிப்பார்கள். சில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களில் ஒரு சில துறைகளிலும், ஒரு சில படிப்பில் மட்டும் சேர கடுமையான போட்டி இருக்கும். அந்தப் படிப்புகளுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண்ணைப் பெற்றிருக்க வேண்டும் என்று நிர்ணயித்து இருக்கிறார்கள். சிலவற்றில் IELTS தேர்வில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண்ணையும், ஜெர்மன் மொழியில் ஏ1 லெவலை முடித்திருந்தால் போதும் என்கிறார்கள். இந்தத் தகவலை தெரிந்துகொண்டு பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஜெர்மனிபெரும்பாலான வெளிநாட்டுக் கல்வி ஆலோசனை நிறுவனங்கள் மாணவர்களை அனுப்பி வைத்து கல்வி நிறுவனங்களில் இருந்து கமிஷன் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் ஜெர்மனியில் அது போல் எந்த வகையிலும் பணத்தைப் பெறுவதில்லை என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், ஜெர்மனியில் சென்று படிக்கும் போது நகரத்தில் தங்கி படித்தால் வீட்டின் வாடகை மற்றும் இதர செலவுகள் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு வருடத்தில் ஏழு லட்ச ரூபாய் வரை செலவாகும். அதனை வங்கியில் கடனாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஜெர்மனியில் 650 யூரோ மட்டும் தான் வங்கியில் இருந்து எடுக்க முடியும். ஜெர்மனியில் படித்தால் அங்கேயே வேலை வாய்ப்பினையும் பெற்று விட முடியும். இதனை எல்லாம் செய்தாலே ஜெர்மனியில் சென்று படிப்பது எளிதாகும்" என்கிறார் முகமது ரியாஸ். 

நம் நாட்டிலும் அறியப்படாத பல துறைகள் உள்ளன. இல்லை, வெளிநாட்டில் பணிபுரியும் ஆர்வம் இருந்தால் ஜெர்மனியையும் கருத்தில் கொள்ளலம். உலக அளவில் பொறியியல் துறையிலும், ஆட்டோ மொபைல் பிரிவிலும் புகழ்பெற்று விளங்குகிறது ஜெர்மனி. நீங்களும் ஜெர்மனி சென்று தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ளலாம். 

http://www.vikatan.com/news/miscellaneous/85200-tips-for-higher-studies-and-job-opportunites-in-germany.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று உலகில் இருக்கும் கண்டு பிடிப்புகளில் முக்கியமானவை   ஜெர்மன் உடையது துரதிஸ்டவசமாக பிரிட்டனும் அமெரிக்காவும் தங்களுடையது போன்று விலாசம் காட்டுவது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3.4.2017 at 10:03 AM, பெருமாள் said:

இன்று உலகில் இருக்கும் கண்டு பிடிப்புகளில் முக்கியமானவை   ஜெர்மன் உடையது துரதிஸ்டவசமாக பிரிட்டனும் அமெரிக்காவும் தங்களுடையது போன்று விலாசம் காட்டுவது.

ஜேர்மன்காரரை மட்டம் தட்டோணுமெண்டால் எல்லாரும் ஒரே ஒரு சொல்லு வைச்சிருக்கிறாங்கள்....அதுதான் நாசி எண்ட சொல்லு....மற்றும் படி அவங்கள் ஊர் உலகத்துக்கு செய்த நல்லவிசயங்களை வெளியிலை சொல்ல மாட்டாங்கள்..........
ஏன் அமெரிக்கனும்....யூதனும்!!!!!!! :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

ஜேர்மன்காரரை மட்டம் தட்டோணுமெண்டால் எல்லாரும் ஒரே ஒரு சொல்லு வைச்சிருக்கிறாங்கள்....அதுதான் நாசி எண்ட சொல்லு....மற்றும் படி அவங்கள் ஊர் உலகத்துக்கு செய்த நல்லவிசயங்களை வெளியிலை சொல்ல மாட்டாங்கள்..........
ஏன் அமெரிக்கனும்....யூதனும்!!!!!!! :cool:

குமாரசாமி அண்ணை வேலை ஒன்று  பாருங்கோவன் அங்கு வந்து குடியேற 

ம் நானும் கேள்விப்பட்டுகிறேன் ஜேர்மன் கண்டு பிடிப்பு தரமானவை என்று 

Link to comment
Share on other sites

  • 6 months later...

உலக மொழிகள் பயில்வோம்: ஆங்கிலம் அல்ல, தமிழ்தான் நண்பன்!

 

shutterstock452697604

காலை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு, சுவையும் மணமும் நிரம்பிய ஃபில்டர் காபியைக் குடித்தபடி நாளிதழை வாசித்துவிட்டு, பிடித்தமான ஜீன்ஸ் பேண்டை அணிந்துகொண்டு பைக் அல்லது காரை ஓட்டி அலுவலகத்துக்குச் சென்று கணினியில் எட்டு மணி நேரம் வேலைபார்த்துவிட்டு, கடும் தலைவலியோடு வீடு திரும்பி ஒரு ‘ஆஸ்பிரின்’ மாத்திரை போட்டுக்கொண்டு கண் அயர்ந்து எம்பி3 பிளேயரில் பாட்டுப்போட்டுக் கேட்டால்…. இந்த நாள் இனிதே நிறைவடைந்துவிடும்.

இந்த வர்ணனையில் முக்கியக் கதாபாத்திரங்களாக விளங்கிய பற்பசை, காபிக்கான ஃபில்டர், நாளிதழை அச்சடிக்கும் ‘பிரிண்டிங் பிரஸ்’ இயந்திரம், ஜீன்ஸ் பேண்ட், கார், பைக், ‘முதல் புரோகிராமிங்’ கணினி, ஆஸ்பிரின் மாத்திரை, எம்பி3 பிளேயர் இப்படி நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாமல் இயைந்து இருக்கும் பல விஷயங்களை இன்று நாம் பயன்படுத்தும் வடிவில் முதன்முதலில் தயாரித்து, வெகுஜனப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தவர்கள் யார் என்று எண்ணிப்பார்த்ததுண்டா? ஜெர்மானியர்கள்.

 

தமிழர்களுக்கு ஜெர்மன் எளிது!

இன்றும் ஜெர்மனி, கண்டுபிடிப்புகளின் தேசமாகவும் வாய்ப்புகளின் வாசலாகவும் மிளிர்கிறது. அதற்கு முக்கியக் காரணம் அந்நாட்டில் மருத்துவம், பொறியியல், சி.ஏ. மட்டுமே உயரிய பணிவாழ்க்கைக்கான தொழில்முறைத் துறைகளாகக் கருதப்படுவதில்லை. மொத்தம் 330 விதமான பணிகள் அங்குத் தொழில்முறைத் துறைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதிலும் கடந்த 15 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள் இந்தியாவிலேயே ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொண்டு ஜெர்மனிக்குச் சென்று மேற்படிப்பு படித்து உயரிய பணிவாழ்க்கை பெற்றுவருகிறார்கள்.

29CHPrabhakar

பிரபாகர்

குறிப்பாகத் தமிழர்கள் ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்வது எளிது என்கிறார் சென்னையில் ஜெர்மன் மொழியைப் பயிற்றுவிக்கும் நிறுவனங்களில் ஒன்றான கோதே இன்ஸ்டிடியூட்-ன் (Goethe Institut) மொழித் துறைத் தலைவரான பிரபாகர் நாராயணன்.

“ஆங்கிலப் புலமை இருந்தால் மட்டுமே அயல்நாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை பரவலாக உள்ளது. அது தவறு. அதிலும் ஜெர்மன் மொழியானது ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழ், மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளுக்கு நெருக்கமானது.

அதன் இலக்கண அமைப்பு தமிழுக்கு மிக அருகில் உள்ளது என்பேன். உதாரணத்துக்கு, ‘எனக்கு இது பிடித்திருக்கிறது’ என்று ஆங்கிலத்தில் சொல்வதானால் ‘I like this’ என்போம். அதாவது ஆங்கிலத்தில் subject முதலில் இடம்பெறுகிறது. ஆனால், ஜெர்மன் மொழியும் தமிழ்போன்ற இலக்கண அமைப்பைக் கொண்டிருப்பதால் பொதுவாகவே தமிழர்கள் ஜெர்மனைச் சுலபமாகக் கற்றுக்கொள்கிறார்கள்” என்கிறார் பிரபாகர்.

 

ஜெர்மனிக்குச் சென்ற மாநகராட்சி மாணவர்கள்

மொழியைக் கற்பிப்பது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வைப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தக் கண்காட்சி ஒன்று இந்த நிறுவனத்தின் வளாகத்திலேயே கடந்த வாரம் நடத்தப்பட்டது. அதிலும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளை ஜெர்மன் மொழிக்கான ஒரு மையத்தில் பார்ப்பதற்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. “இளைஞர்கள் மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களும் ஜெர்மன் மொழியைப் படிக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்ப பிரத்தியேகமான பாடத்திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.

சி.பி.எஸ்.சி. பள்ளிகளைப் பொறுத்தவரை ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு ஜெர்மன் மொழியைப் படிக்கும் வாய்ப்பு உள்ளது. அரசு பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2-வில் ஜெர்மன் மொழியைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். அவ்வாறு ஜெர்மன் மொழியைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாங்கள் இலவசமாகச் சிறப்பு பயிற்சிகள் ஆண்டுதோறும் வழங்கிவருகிறோம்.

மூன்று மாதங்களுக்கு முன்புகூட அவ்வாறு எங்களிடம் பயிற்சி பெற்ற மாநகராட்சி மாணவர்களில் 8 பேரை 3 வாரம் ஜெர்மனிக்கு அழைத்துச் சென்று இலவசமாக அங்கும் மேம்பட்ட ஜெர்மன் மொழி பயிற்சி அளித்து அழைத்துவந்தோம். ஆங்கிலத்தைக் காட்டிலும் அக்குழந்தைகள் ஜெர்மன் மொழியைச் சிறப்பாக கற்றுக்கொள்கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் ஜெர்மனியில் மட்டுமல்லாமல் இந்தியா உட்பட ஜெர்மன் மொழியை அடிப்படையாகக் கொண்ட உலகின் முன்னணி நிறுவனங்களில் அவர்கள் பணிபுரியலாம்” என்கிறார் பிரபாகர்.

 

முழுக்க இலவசக் கல்வி

ஜெர்மனி இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டவர்களும், மென்பொருள் துறையில் பணியாற்றும் விருப்பம்கொண்டவர்களும், வாகனத் தொழில் உலகில் சாதிக்கத் துடிப்பவர்கள் மட்டுமே 20 ஆண்டுகளுக்கு முன்னால், இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்குச் சென்று உயர் கல்வி பெற்றார்கள். ஆனால், இன்று இந்தியர்களை ஜெர்மனி பக்கம் சுண்டி இழுப்பது, ஜெர்மானியர்களுக்கு மட்டுமின்றி எல்லா நாட்டினருக்கும் முற்றிலும் இலவசக் கல்வி அளிக்கும் அவர்களுடைய கல்விக் கொள்கைதான்.

“ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்ள மொத்தம் உள்ள 6 நிலைகளில் B2 எனப்படும் 4-வது நிலையில் தேர்ச்சி பெற்றால் ஜெர்மனிக்குச் செல்ல நீங்கள் தகுதி பெறுவீர்கள். அதன் பிறகு ஜெர்மனிக்குச் சென்று எந்தப் பணியைச் செய்ய விருப்பம் உள்ளதோ அதற்கான கல்வியை இலவசமாகப் பெறலாம். மறுபுறம் கல்வித் துறையில் வேலை பார்ப்பதுதான் உங்களுடைய விருப்பமாக இருக்கும்பட்சத்தில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டம் உள்ளிட்டவற்றைப் படிக்கலாம்.

அதிலும் பி.எச்டி. படிக்க இலவசக் கல்வி அளிப்பது மட்டுமல்லாமல் உதவித்தொகையும் அங்கு உள்ள 350 பல்கலைக்கழகங்களிலும் வழங்கப்படுகிறது” என்கிறார் கடந்த 20 ஆண்டுகளாக கோதேவின் மூத்த ஆசிரியராகப் பணிபுரியும் சேரலாதன்.

கல்வி முற்றிலும் இலவசம் என்பது மட்டுமல்லாமல் அன்றாட செலவுகளும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவு, மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணச் சலுகை போன்ற அனுகூலங்கள் ஜெர்மனியில் உள்ளன.

“இந்தியாவைப் போல வேலையில் ஏற்றத்தாழ்வு பார்க்கும் பிரச்சினையோ ஊதியச் சிக்கலோ ஜெர்மனியில் கிடையாது. அங்குச் சிகை திருத்துபவர், எலெக்ட்ரீஷியன், பிளம்பர், ஆசிரியர், மருத்துவர் உள்ளிட்ட அனைவரும் அதற்குரிய படிப்பைப் படித்திருக்க வேண்டும். எல்லோருக்குமே அரசுதான் உரிய சம்பளத்தை நிர்ணயிக்கிறது. அதேபோல படித்துமுடித்த பிறகு வேலை தேட ஒன்றரை ஆண்டுகள்வரை விசா நீட்டிக்கப்படும்.

எட்டாண்டுகள் அங்குப் பணிபுரியும் பட்சத்தில் நிரந்தரக் குடியுரிமை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. கார், மோட்டார் பைக் உள்ளிட்ட வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் என இந்தியாவிலேயே பல முன்னணி ஜெர்மானிய நிறுவனங்கள் செயல்பட்டுவருவதால் இந்தியா திரும்பி வந்தும் நல்ல பணிவாய்ப்பு பெறலாம்” என்கிறார் சேரலாதன்.

தமிழ் வழிக் கல்வி படிக்கும் நம்முடைய கடைநிலை மாணவ, மாணவிகளும் உலகின் வலிமை மிக்க நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்குச் சென்று தரமான இலவசக் கல்வி பெறலாம் என்பது எதிர்காலத்தில் தமிழர்கள் ஜெர்மன் மொழியால் உலகை ஆளலாம் என்கிற நம்பிக்கையை உருவாக்குகிறதல்லவா!

http://tamil.thehindu.com/general/education/article19954796.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.