Jump to content

இலங்கை எதிர் பங்களாதேஷ் T20 போட்டி செய்திகள்


Recommended Posts

இருபதுக்கு-20 குழாமிலிருந்து குசால் மெண்டிஸ் நீக்கம் : மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை!

 

 

இலங்கை மற்றும் பங்களாதேஷ்  அணிகளுக்கள் மோதும் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான இலங்கை குழாமிலிருந்து குசால் மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளார்.

afa.jpg

குசால் மெண்டிஸ் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவருகின்றார். எனினும் இவரது இருபதுக்கு-20 சராசரி 9.23 என்ற குறைவான மட்டத்தில் உள்ளது.

இதனால் இவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் குழாமில் இடம்பிடிப்பதுடன், இருபதுக்கு-20 போட்டிகள் குழாமில் சிறிது காலங்களுக்கு விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை திசர பெரேரா, குசல் பெரேரா, டில்ஷான் முனவீர, தனுஷ்க குணதிலக, சந்துன் வீரகொடி மற்றும் செஹான் ஜயசூரிய அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள குசல் பெரேரா உடற்தகுதி பரிசோதனையில் பின்னர் அணியில் இடம்பிடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. உபுல் தரங்க (அணித் தலைவர்)
  2. டில்ஷான் முனவீர
  3. தனுஷ்க குணதிலக
  4. குசல் பெரேரா
  5. லசித் மலிங்க
  6. இசுறு உதான
  7. நுவான் குலசேகர
  8. தசுன் சானக
  9. விகும் சஞ்சய
  10. மிலிந்த சிறிவர்தன
  11. அசேல குணரத்ன
  12. சீகுகே பிரசன்ன
  13. சாமர கபுகெதர
  14. திசர பெரேரா
  15. லக்ஷான் சந்தகன்
  16. செஹான் ஜயசூரிய

http://www.virakesari.lk/article/18632

Link to comment
Share on other sites

பங்களாதேஷுக்கெதிரான இரு போட்டிகளையும் வெற்றி கொள்வோம் : உப்புல் தரங்க நம்பிக்கை

 

 

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரு இருபதுக்கு - 20 போட்டிகளையும் வெற்றிகொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளதென இலங்கை அணித் தலைவர் உப்புல் தரங்க தெரிவித்தார்.

17759161_10207029261764701_1093705681_o.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கெதிராக நாளை இடம்பெறவுள்ள முதலாவது இருபதுக்கு - 20 போட்டியை முன்னிட்டு இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இலங்கை அணித் தலைவர் உப்புல் தரங்க  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரு இருபதுக்கு - 20 போட்டிகளையும் வெற்றிகொள்வோம் என்ற நம்பிக்கை எமக்கு தாராளமாகவுள்ளது.

லசித் மலிங்க மற்றும் சாமர கப்புகெதர ஆகியோர் இடம்பிடித்திருப்பது அணிக்கு மேலும் பலமாக அமைந்துள்ளது.

இதைவிட நாம் அண்மையில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இடம்பெற்ற இருபதுக்கு - 20 தொடரை சிறந்த முறையில் விளையாடி கைப்பற்றியிருந்தோம். அதே நம்பிக்கை எம்மிடம் உள்ளது.  அத்தொடரில் சிறப்பாக செயற்பட்ட அசேல குணவர்தன இம் முறையும் தனது திறமையை வெளிப்படுத்துவாரென நம்புகின்றேன்.

 

குஷல் ஜனித் பெரோரா உடற்தகுதி பரிசோதனையை இன்று மேற்கொண்டிருந்தார். அதில் அவர் சிறந்த நிலையில் உள்ளமையால் 12 பேர் கொண்ட அணியில் அவர் இடம்பிடித்துள்ளார்.  இருப்பினும் அவர் களத்தில் விளையாடுவாரா இல்லையா என்பது இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.

பங்களாதேஷ் தொடருக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் கடுமையாக செயற்பட்டமையால் எதிர்வரும் சம்பியன் கிண்ணத் தொடரை முன்னிட்டு குசல் மெண்டிஸுக்கு தற்போது ஓய்வளிக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் சமநிலையில் முடிவடைந்தநிலையில் நாளை முதலாவது இருபதுக்கு - 20 ஆர் .பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/18656

Link to comment
Share on other sites

கொழும்பில் 11 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் தோல்வி : பங்களாதேஷுக்கு சவால் விடுக்குமா இலங்கை!

 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

__lcxtuctxc1.jpg

ஆர்.பிரேமதாஸ மைதானத்தை பொறுத்தவரையில் இலங்கை அணி 11 இருபதுக்கு-20 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அதில் 10 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் சவாலை முறியடித்து போட்டியில் வெற்றிபெறுமா? அல்லது துரதிஷ்டம் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் சமனிலையில் முடிவடைந்ததை அடுத்து, இருபதுக்கு-20 போட்டிகளின் மீதான கவனம் ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கை அணியை பொறுத்தவரையில் இருபதுக்கு-20 போட்டிகளில் சிறப்பாக ஆடக்கூடிய மாலிங்க, திசர பெரேரா மற்றும்  குசல் பெரேரா ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளமை இலங்கை அணிக்கு வலுசேர்த்துள்ளது.

பங்களாதேஷ் அணிசார்பில் ஒருநாள் போட்டியில் விளையாடிய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று இலங்கை அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தடுமாறினாலும், இருபதுக்கு-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடிவருகின்றது.

இறுதியாக விளையாடிய 5 இருபதுக்கு-20 போட்டிகளில் இலங்கை அணி 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், பங்களாதேஷ் அணி இறுதி 5 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/18675

Link to comment
Share on other sites

Update : மழை ஓய்ந்தது : மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது போட்டி!

 

 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் மழைக்குறுக்கிட்டதால் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

போட்டியில் ஓவர்கள் மட்டுப்படுத்தப்படாது எனவும், 20 ஓவர்கள் வீசப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், போட்டி 7.45 மணியளவில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

..........................................................................

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டி ஆர். பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில்  வெற்றிபெற்றுள்ள பங்களாதேஷ்  அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கை அணி :

உபுல் தரங்க (அணித் தலைவர்), டில்ஷான் முனவீர, குசல் பெரேரா, லசித் மலிங்க, நுவான் குலசேகர, விகும் சஞ்சய, மிலிந்த சிறிவர்தன, அசேல குணரத்ன, சீகுகே பிரசன்ன, சாமர கபுகெதர, திசர பெரேரா

பங்களாதேஷ் அணி :

தமிம் இக்பால், சௌமிய சர்கார், சபீர் ரஹ்மான், முஸ்தபஹுர் ரஹ்மான், கசிப் அல் ஹசன், மஹமதுல்லா, மொஸ்டாக் ஹுசைன், மெஹிதி ஹசன், மஸ்ரபீ மொர்டஷா (அணித் தலைவர்) டஸ்கின் அஹமட், முஸ்தபிஹுர் ரஹமான்.

http://www.virakesari.lk/article/18705

Bangladesh 6/1 (0.5/20 ov)

Link to comment
Share on other sites

குசலின் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை

 

 

குசல் ஜனித் பெரேராவின் அதிரடியான 77 ஓட்டங்களின் உதவியுடன் 6 விக்கட்டுகளால் வங்கதேசத்தை வெற்றிபெற்ற இலங்கை அணி இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

fsasfas1.jpg

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு -20 போட்டி மழை காரணமாக தடைப்பட்டு 42 நிமிடங்கள் தாமதித்து ஆரம்பமாகியது.

261031.jpg

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரில் விளையாடி வருகின்றது.

261039.jpg

இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டித் தொடர் ஆகியன சமநிலையில் முடிவடைந்தன.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

261033.jpg

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

போட்டி ஆரம்பமாவதற்கு சில நிமிடங்கள் இருக்கையில் மழை குறுக்கிட்டது.  இந்நிலையில் மழையால் தடைப்பட்ட போட்டி 42 நிமிடங்கள் கழித்து தாமதமாக ஆரம்பித்தது.

போட்டி ஆரம்பித்த முதல் ஓவரிலேயே பங்களாதேஷ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரை இலங்கை அணியின் லசித் மாலிங்க வீசினார். அந்த ஓவரின் 2 ஆவது பந்தை எதிர்த்தாடிய பங்களாதேஷ் அணியின் தமிம் இக்பால் ஆட்டமெதனையும் பெறாது போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

261038.jpg

 அதே ஓவரின் 6 ஆவது பந்தில் சௌமிய சர்க்கர் கொடுத்த பிடியை லசித் மாலிங்க தவறவிட்டார். 

இந்நைிலையில் பங்களாதேஷ் அணி 5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 50 ஓட்டங்களைப்பெற்றது.

இதையடுத்து பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுக்கள் சீரான ஓட்ட இடைவெளியில் வீழ்த்தப்பட, இறுதியில் பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பாக மொஸ்டாக் ஹுசைன் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக லசித் மலிங்க 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் 156 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி குசல் ஜனித் பெரேராவின் அதிரடியான ஆட்டத்தின் உதவியுடன் 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

 

இலங்கை அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக மொட்டர்ஷா 2  விக்கெட்டை கைப்பற்றினார்.

6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முக்கியமானதும் இறுதியுமான 2 ஆவவது இருபதுக்கு -20 போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/18714

Link to comment
Share on other sites

தொடரை தீர்மானிக்கும் இறுதி இருபதுக்கு-20 போட்டி இன்று! : வெற்றி யாருக்கு?

 

 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் இரண்டாவது இருபதுக்கு-20 போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

dffasfafs.jpg

இன்றைய போட்டியை பொறுத்தவரையில் பங்களாதேஷ் அணிக்கு மிக முக்கிய போட்டியாக அமைந்துள்ளது.

பங்களாதேஷ் அணித்தலைவர் மொர்ட்டஷா  விளையாடும் இறுதி இருபதுக்கு-20 போட்டியாக அமைந்துள்ளது.

இதனால் இந்த போட்டியில் வெற்றிபெற்று மொர்ட்டஷாவுக்கு சிறப்பான பிரியாவடை வழங்க பங்களாதேஷ் அணி எதிர்பார்த்துள்ளது.

இலங்கை அணியை பொறுத்தவரையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை விட இருபதுக்கு-20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இறுதியாக விளையாடிய 5 இருபதுக்கு-20 போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரமே இலங்கை தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள குசல் பெரேரா பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

மறுமுனையில் லசித் மலிங்கவும் அவரது பங்குக்கு சிறப்பான பந்துவீச்சை பதிவுசெய்தார்.

இன்றைய போட்டியில் இலங்கை அணி சார்பில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. இதேவேளை பங்களாதேஷ் அணியில் டஷ்கின் அஹமட்டுக்கு பதிலாக மெஹிதி ஹசன் அவரது முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் விளையாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இலங்கை அணி :

உபுல் தரங்க (அணித் தலைவர்), டில்ஷான் முனவீர, குசல் பெரேரா, லசித் மலிங்க, நுவான் குலசேகர, விகும் சஞ்சய, மிலிந்த சிறிவர்தன, அசேல குணரத்ன, சீகுகே பிரசன்ன, சாமர கபுகெதர, திசர பெரேரா

 

பங்களாதேஷ் அணி :

தமிம் இக்பால், சௌமிய சர்கார், சபீர் ரஹ்மான், முஸ்தபஹுர் ரஹ்மான், கசிப் அல் ஹசன், மஹமதுல்லா, மொஸ்டாக் ஹுசைன், மெஹிதி ஹசன், மஸ்ரபீ மொர்டஷா (அணித் தலைவர்) டஸ்கின் அஹமட்/ மெஹிதி ஹசன், முஸ்தபிஹுர் ரஹமான்.

http://www.virakesari.lk/article/18781

Link to comment
Share on other sites

மலிங்க ஹெட்ரிக் : இலங்கை அணிக்கு 177 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

 

பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் லசித் மாலிங்க ஹெட்ரிக் சாதனை படைத்தார்.

261033.jpg

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2 ஆவது போட்டியிலேயே மலிங்க இந்த சாதனையை படைத்துள்ளார்.

இப் போட்டியின் 19 ஓவரை வீசி மாலிங்க முஷ்பிகுர் ரஹீம், மொட்டர்ஷா மற்றும் மெஹிதின் ஹசன் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் இச் சாதனையைப் படைத்தார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இறுதியுமானதும் முக்கியமானதுமான  இருபதுக்கு – 20 போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன் படி முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.

 

இந்நிலையில் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்ற வேண்டுமாயின் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 177 ஓட்டங்களைப் பெற வேண்டும். 

http://www.virakesari.lk/article/18816

Bangladesh 176/9 (20/20 ov)
Sri Lanka 70/5 (9.4/20 ov)
Sri Lanka require another 107 runs with 5 wickets and 10.2 overs remaining
Link to comment
Share on other sites

பங்களாதேஷ் 45 ஓட்டங்களால் அபார வெற்றி : தொடர் சமனிலையில்!

Published by Pradhap on 2017-04-06 22:39:11

 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் பங்களாதேஷ் அணி 45 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

000_NB9I0.jpg

177 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் சாமர கபுகெதர 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் முஸ்தபிசூர் ரஹ்மான் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

http://www.virakesari.lk/article/18821

Link to comment
Share on other sites

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது வங்காள தேசம்

பதிவு: ஏப்ரல் 06, 2017 23:40

 
 

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்காள தேச அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது.

 
 
 
 
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது வங்காள தேசம்
 
கொழும்பு:

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்காள தேச அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது.

இலங்கை - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காள தேச  அணி கேப்டன் மோர்தசா பேட்டிங் தேர்வு செய்தார்.  இம்ருல் கெய்ஸ், சவுமியா சர்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்கள். இதனால் வங்காள தேசம் அணி 4.5 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது.
201704062340443955_srilanka3._L_styvpf.g
பின்வரிசை வீரர்களான சபீர் ரஹ்மான், சாஹிப் அல்ஹசன் ஆகியோரும் அதிரடியாக விளையாடினார்கள். 14-வது ஓவரின் முதல் பந்தில் சபீர் ரஹ்மான் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வங்காள தேசத்தின் ரன் விகிதம் குறைய ஆரம்பித்தது. சபீர் ரஹ்மான் அவுட்டாகும்போது வங்காள தேசம் 13.1 ஓவரில் 124 ரன்கள் எடுத்திருந்தது.

சாஹிப் அல்ஹசன் 38 ரன்னிலும், மொசாடெக் ஹொசைன் 17 ரன்னிலும் வெளியேற, 19 ஓவரில் மலிங்கா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த வங்காள தேசம் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம்.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பெரேரா மற்றும் முனவீரா ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். கபுகேந்திரா மட்டும் நிதானமாக விளையாடி 50 ரன்களை எட்டினார். வங்கதேச வீரர்களின் சிறப்பான பந்து வீச்சால் பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
201704062340443955_srilanka2._L_styvpf.g
இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் தொடர் சமனானது. மேலும், இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்காள தேச அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரை இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/06234043/1078550/bangladesh-won-second-t20-match-against-srilanka.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.