Sign in to follow this  
shanthy

பெறுபேறு /பெரும்பேறு./என் வெற்றியின் தொடக்கம் அனுபவப்பகிர்வு

Recommended Posts

பெறுபேறு /பெரும்பேறு.

17621687_10208850097750351_7530907926775

ஈன்றபொழுதிலும்....பின்னர் அவர்களே இன்பமென்று இருந்த பொழுதுகளிலும்... என்னை தாங்கும் வேரென நிறைந்த பொழுதிலும்..பெரிதாய் இருக்கிறது இன்று.
அமுதாய் இனிக்கிறது.

என் பிள்ளைகளின் எதிர்காலம் எனக்கு ஒரு கனவு..அக்கறை..கடமை என்பதும் என்னை பழியுரைத்தோர்..எனது வீழ்ச்சி விரும்புவோர் முன்னே ஒரு சவால். வைராக்கியம்.

என்னை இந்த உலகிற்கு கொண்டுவந்த அம்மாவும்..என் பிள்ளைகள் உலகிற்கு வர காரணமானவனும் கூட ' எங்க உன்ர பிள்ளைகள் படிக்கிற கெட்டிதனத்தை பார்ப்பம்...என்றதுவும். தனியே நீ என்ன சாதிப்பாய். ...அடங்கி போ..என்று மிரட்டியவர்களிற்கும் முன்னே செயல் மூலமான பதிலாக ...எனது இத்தனை நாள் தவத்திற்கு வரம் கிடைத்தது.

இன்றைய எனது நாட்குறிப்பில் இப்படிதான் எழுதுகிறேன்.

கண்ணீரே வாழ்வாகி வற்றிப்போன
எனது கண்களிலும் சுரக்கிறது
ஆனந்த கண்ணீர் ...
*********************
03.03.2017 மகள் வவுனீத்தாவின் பரீட்சை முடிவுகள் வெளியாகும் நாள். நேரம் நெருங்க நெருங்க நெஞ்சுக்குள் ஒருவித பதட்டம்.

பன்னிரண்டாம் வகுப்பு வரையும் ஒவ்வொரு வகுப்பேற்ற பெறுபேறுகள் வெளியாகும் நாளில் பாடசாலை வாகனத்தரிப்பிடத்தில் நின்றே பிள்ளைகளை வரவேற்பேன்.

வகுப்பில் வாங்கிவரும் தேர்வறிக்கையினை கையில் ஏந்தி வந்து முகம் நிறைந்த மகிழ்வோடு தந்த பொழுதுகளிலெல்லாம் என்னை மறந்திருக்கிறேன்.

இந்தமுறை வவுனீத்தாவின் தேர்வறிக்கையோ அப்படியானதொன்றில்லை. அவளதும் எனதும் பார்த்திபனதும் அவளை நேசிக்கும் ஒவ்வொருவரின் கனவும் எதிர்பார்ப்புமாக இருந்தது.

இறுதியாண்டு தேர்வறிக்கை. இருந்த போதிலும் நேரில் சென்று பிள்ளையை வரவேற்க முடியவில்லை.

வேலை என்ற ஓர் நிர்ப்பந்தச் சுழலில் சிக்கிக்கொண்டிருந்ததால் அதிலிருந்து வெளியேற முடியாமல் அந்தரித்துக் கொண்டிருந்தது.

அடிக்கடி அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த பரீட்சை முடிவே எனது மகளின் பல்கலைக்கழகக் கனவையும் என் வாழ்நாள் கனவையும் நனவாக்கும் முடிவு.

காலை 10.56மணிக்கு எனது தொலைபேசிக்கு அவளின் செய்தி வந்தது.

அம்மாவுக்கு நன்றி. அம்மா நான் உங்களை நேசிக்கிறேன்.அவள் எழுதிய குறுஞ்செய்தியை பார்த்த போது பெருமிதமானேன்.

வேலை முடிந்ததும் முதல் ஆளாக வெளியேறினேன். மகளை தொலைபேசியில் அழைத்தேன். 'அம்மா நான் பாஸ். அவள் அழுதாள்.

சத்தமிட்டு கத்தி என் குழந்தையின் பரீட்சை பெறுபேற்றினை சொல்ல வேண்டும் போலிருந்தது.

என் தோழனை அழைத்து மகளின் பெறுபேறு விபரத்தைச் சொன்னேன். என்போல அவளது பரீட்சை முடிவை அவனும் எதிர்பார்த்துக் காத்திருந்தான். (தோழன் பற்றிய குறிப்புகள் பின்னர்) உலகில் எனக்காக உயிரையும் தரக்கூடியவன்.

பிள்ளைகளின் கல்வியும் இறுதியாண்டுத் தேர்வும் அவர்கள் வாழ்வில் எத்தனை முக்கியமானது. ஆனால் கல்வியொன்றையே வாழ்நாள் கனவாக கொண்டியங்கும் எனது பிள்ளைகளுக்கு அவற்றை மன அமைதியுடன் தொடர முடியாதிருந்தது கடந்தகாலம்.

பார்த்திபனின் இறுதியாண்டு தேர்வுக்காலம் நினைவில் வந்து நெருடுகிறது. அம்மா நான் படிக்க வேணும் அம்மா நான் படிக்க வேணும் என என் குழந்தை கெஞ்சியதும், அதற்காக அவன் போராடியதும் இன்னும் வலிக்கும் நினைவுகளாகவும் இருக்கின்றன.

இந்தக்கால கட்டத்தில் தான் எனது வாழ்வில் எதிர்கொண்ட சோதனைகளுக்கு தெளிவாக பதில் எழுத வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தேன்.

'அப்பு நீங்கள் உங்களோடை படிக்கிற பிள்ளையள் ஆரிட்டையும் கேளுங்கோ. சோதினை முடியும் மட்டும் ஆற்றையேன் வீட்டில இருந்து படியுங்கோ. நான் காசு தாறன்'

முதல் முதலில் அம்மாவையும் தங்கையையும் விட்டுப் பிரிய அவனால் முடியவில்லை. அழுதான்.

நீங்கள் எப்பவோ உவரை விட்டிருக்கலாம். எல்லாம் உங்கடை பிழை. இது பார்த்திபன்.

நானும் அண்ணாவும் எப்பவோ சொன்னம் நீங்கள் தான் கேட்காமல் பாவம் பாத்தனீங்கள். உவர் திருந்தமாட்டார் உவர் நடிப்பு எல்லாம்பொய். என்றாள் வவுனீத்தா.

நான் காத்த பொறுமையும் அதன் விளைவுகளும் தங்கள் நிம்மதியைக் கெடுப்பதாக பிள்ளைகள் இருவரும் குறைசொன்னார்கள்.

இது எப்போதோ எடுத்திருக்க வேண்டிய முடிவுதான்.

அவர்களுக்கு விபரம் தெரியாத வயதில் இந்த முடிவை எப்போதோ நான் எடுத்திருந்தால் அவர்கள் எனது முடிவை தவறென்று யோசித்திருக்கவும் கூடும்.

அம்மா இது அண்ணாவின்ரை வாழ்க்கை அவன்ர München Universität
கனவு.

கொஞ்சநாளைக்கு அவன் வெளியில இருந்தால் தான் அவன் படிக்கலாம்.
மகனைப் பிரிதல் என்பது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. ஆனாலும் எனது பிள்ளையின் எதிர்காலத்திற்காய் அதைச்செய்ய வேண்டியே இருந்தது.

பிள்ளையின் படிப்பை குழப்புவேன் அதுவே என்னை தோற்கடிக்க இருக்கும் இறுதி வழியென்பதை புரிந்து என்னை பழிவாங்க காத்திருந்தவன் வெல்லக்கூடாது. அதற்காக பிள்ளையின் பிரிவைத் தாங்க வேண்டும்.

'பாதகம் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்துவிடு முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா'

பாரதியார் பாடல்கள் பக்கத்துணையாய் இருந்தன.

000 000 000

24.12.2016 நத்தாருக்கு முதல் நாள். வளமைபோல நிறைவெறியில் கதவுகளை அடித்து கண்ணாடிகளை உடைத்து அட்டகாசம் பண்ணிக்கொண்டிருந்தான்.

மேலே மகன் இறுதியாண்டு தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தான். அவனது படிப்பு குழம்பக்கூடாது என்பதற்காக அமைதியாய் இருக்கும்படி மன்றாடிய போது....,

'உன்ர பிள்ளை பெயில் விட்டா திரும்பி படிக்சொல்லடி....'

அவனுக்கு துணையாக ஒருத்தி என் வீட்டில் வந்து இருந்து என்னை அதிகாரம் செய்தாள்.
காதல் உலகில் எவ்வளவோ நல்லதையெல்லாம் சாதிக்குமாம்.

ஆனால் எனதும் எனது குழந்தைகளின் வாழ்வையும் தெருவில் போட்டே தன் பழைய காதலை அவள் வெல்ல எதையும் செய்யத் துணிந்தாள். அவளுக்கும் ஒரு ஆண்குழந்தை இருந்தது.

இயன்றவரை பிள்ளைகள் இருவரையும் அமைதிப்படுத்தி அவர்களை இடம் மாற்ற வேண்டும். அதற்கான வழிகளைத் தேடினேன். என் பிள்ளை பரீட்டையை நல்லபடியாக எழுத வேண்டும்.

பார்த்திபன் தனது நண்பர்களிடம் விடயத்தை தெரிவித்தான். அவனைத் தாங்க அவனது நண்பர்கள் முன்வந்தனர்.

தாயும் தந்தையும் மருத்துவர்களான அவனது தோழியின் பெற்றோர்கள் அவனைத் தங்கள் 3பிள்ளைகளோடு 4வது பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறோம் என தங்களோடு அவனை விடுமாறு சொன்னார்கள்.

பரீட்சைக்கு ஒருமாதம் இருந்தது. இந்த நிலையில் பாடசாலைக்கு விடயம் தெரிந்தால் பரீட்சை எழுத அனுமதி கிடைக்காது. அதனால் வீட்டு விடயங்களை பாடசாலை நிருவாகத்திற்கு தெரியாமல் பாதுகாத்ததில் என்பிள்ளையை பொறுப்பெடுத்த குடும்பத்திற்கு பெரும் பங்குண்டு.

என் வாழ்வில் மறக்க முடியாத நன்றிக்குரிய குடும்பங்களில் அந்த யேர்மனியக் குடும்பத்தை என்றும் என்னால் மறக்க முடியாது.

மன அழுத்தம் நித்திரை இழப்பென பிள்ளைகளின் அமைதி குலைந்து அவன் பரீட்சையை எப்படி எழுதப்போகிறான் ? நொடிக்கு நொடி அந்தரித்துக் கொண்டிருந்தேன்.

என்னையும் தங்கையையும் பார்த்தால் அவன் அங்கே நித்திரை கொள்வதில்லையாம் தானாக இயங்கவோ உண்ணவோ முடியாது அவன் குழம்பிவிடுவதாக அவனை பொறுப்பெடுத்த அம்மா என்னை வெளியில் ஒரு நண்பர் வீட்டில் அழைத்து சொன்னார்.

அவன் பரீட்டை முடியும் வரை அவனை நானும் மகளும் சந்திக்கவோ தொலைபேசி தொடர்புகளோ வைக்காமல் இருந்தால் நல்லமென ஆலோசனை சொன்னார்.

மனசை கல்லாக்குதல் என்பதை பிள்ளையுடனான தொடர்பாடலை தவிர்க்க வேணுமென்ற போதே உணர்ந்தேன்.

காவல்துறையின் உதவியை நாடி சட்டத்தரணியின் ஆலோசனைப்படி அடாவடித்தனங்களை எதிர்கொண்டேன்.

வீட்டில் தன் விருப்பத்திற்கு சாப்பிடும் பிள்ளை இன்னோரிடத்தில் எப்படி எதிர்கொள்வானோ என்பது முதல் எப்படி இருப்பானோ என்ற துயரம். என் வழியெல்லாம் கண்ணீரோடு கரையத் தொடங்கியது. எதைச் சமைத்தாலும் பிள்ளை சாப்பிடாத உணவு ஒவ்வொன்றும் எனக்கு விசமாயிருந்தது.

அம்மா நீங்களும் கொஞ்ச நாளைக்கு அண்ணாமாதிரி வேற இடத்தில இருப்பியளோ ? இந்தப் பிரச்சனை முடியுமட்டும் நீங்கள் அமைதியாக படிக்க வேணும்.
மகளிடம் கேட்டேன்.

நான் உங்களை விட்டிட்டு போகமாட்டேன். நீங்கள் தனிய.
அவள் என்னைவிட்டு போகமாட்டேனென்று முடிவாக சொல்லிவிட்டாள். மகள் என்னை விட்டு போகாமல் என்னோடே இருந்தாள்.

மரணத்தை நெருங்கும் நாட்களாகவே அன்றைய நாட்கள் எனக்கும் எனது குழந்தைகளுக்கும்.

பரீட்சை வந்தது. பர்த்திபன் பரீட்சை எப்படி எழுதினான் ?
கேட்ட போது வந்த பதில் பயமென்றால் என்னவென்று உணர வைத்தது.

அவன் ஆசைப்படி infomatik
கற்றலுக்கு போதுமான புள்ளிகளில் இருந்து சில புள்ளிகள் போதாமல் இருந்தது.

என் பிள்ளையை தங்கள் பிள்ளையாக பாதுகாத்த தாயும் தந்தையும் பாடசாலை நிருவாகத்தினரிடம் நேரில் சென்று நிலமைகளைச் சொல்லி போதாத புள்ளிகளை சமப்படுத்த மறுபரீட்சையை எழுத அனுமதிக்குமாறு கோரினார்கள்.

infomatikபாடத்தில் ஏற்கனவே அவன் செய்திருந்த பிரத்தியேக பரீட்சையில் முழுமையான புள்ளகளைப் பெற்றிருந்தான். பாடசாலையின் அனைத்து ஐகெழஅயவமை தொடர்பான பணிகளைச் செய்திருந்தமையாலும் குறைந்த புள்ளிகளை இட்டுநிரப்ப உதவியது.

பார்த்திபன் என்றால் பாடசாலையில் சின்னப்பிள்ளைகள் முதல் ஆசிரியர்கள் வரை அறிவார்கள். அவன் சிறந்த பெறுபேறுகள் பெறுவான் என்பது அவர்களது நம்பிக்கை.

அவனது தன்னார்வ பணிகள் முதல் infomatik
இல் ஏற்கனவே நடந்த பரீட்சைகளில் அவன் மொத்தப்புள்ளிகளையும் பெற்று நம்பிக்கையை கொடுத்திருந்தான். அவன் அங்கேயொரு சின்னக்கதாநாயகன்.

ஆனால் எல்லோரின் எதிர்பார்ப்பாக இருந்த அதிசிறந்த பெறுபேறுகளை அவன் அடைய முடியவில்லை.

இன்றுவரை அவனை கவலையடையச் செய்யும் அந்த நாளை அவன் தனது தற்போதை பல்கலைக்கழக படிப்பிலிருந்து சரி பறவாயில்லையென சற்று சமாதானமடைகிறான். இப்போது பல்கலைக்கழகத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுகிறான்.

என் பிள்ளையின் பரீட்சைக்கால அமைதியிழப்பு என்னோடு அருகிருந்து சாப்பிட்டு நிம்மதியாக பரீட்சை எழுத முடியாத தொல்லையை தந்தவன் தந்தவளை என் சாவிலும் மன்னிக்கும் மனநிலையை எனக்குள் வளர்த்துக் கொள்ளும் எண்ணம் ஒருபோதும் வராது.

மனஅழுத்தம் மருத்துவம் என பிள்ளைகளையும் என்னையும் பழிவாங்கியவன் தங்கள் வெற்றிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் மேடையேறி சான்றிதழ் வாங்கிய மேடைக்கு அவனை பிள்ளைகள் அழைக்கவேயில்லை.
இன்று நாங்கள் வென்ற இந்த வெற்றி எங்கள் அம்மாவின் வெற்றி எனச்சொல்லி என்னை மகிழ்வால் அழவைத்த என் பிள்ளைகளே என் வாழ்நாள் சாதனை.

'அண்ணா எடுக்காத புள்ளிகளை நான் எடுப்பனம்மா'
என் கண்ணீரை தன் வார்த்தைகளால் நம்பிக்கை தந்த மகள் அதிசிறந்த பெறுபேறுகள் பெற்று என்னை வானத்தில் மிதக்க வைத்திருக்கிறாள்.

தங்கையின் பெறுபேறுகளைப் பார்த்து தங்கையின் வெற்றியை தனதாய் மகிழும் என் மகன். எல்லோரின் எதிர்பார்ப்புகளும் ஏன் ஏன் ? என்ற கேள்விகளும் அவனுக்கு கிடைக்கவிருந்த புலமைப்பரிசில் கிடைக்காமல் போனதில் அடைந்த துயரையும் தங்கையின் பெறுபேறுகளைப் பார்த்து மகிழ்கிறான்.

24.03.2017 பல்கலைக்கழகத்திலிருந்து ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்து தங்கையோடு நின்று அவளை வாழ்த்தி அடுத்த அவளது பல்கலைக்கழக கற்றலுக்கான ஆலோசனைகள் கொடுத்து அடுத்த கட்டத்திற்கு தங்கையை தயார்படுத்தினான் என் பார்த்திபன்.

பார்த்திபன் என்ற பெயர் கடவுளின் பெயரல்ல. திலீபன் என்றொரு தியாகதீபம் தமிழர்களின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தனையீந்தார்.

அவரது நாமத்தையே அவனுக்குச் சூட்டினேன்.
சிறுவயதிலிருந்து அவனது பெயர் தொடர்பாக அவனோடு நான் உரையாடுவதுண்டு.

'திலீபன்மாமா எனக்கு பிடித்த அரசியல் போராளி. அவரது இயற்பெயர் பார்த்திபன் அவரது நினைவாகவே உனக்கு பார்த்திபன் என பெயரிட்டேன்'

அவனது பெயர் பற்றி குழந்தைக்காலத்தில் சொன்னதை பார்த்திபன் என்ற பெயருக்கான காரணத்தை தனது நண்பர்கள் தொடக்கம் ஆசிரியர்கள் கேட்போருக்கெல்லாம் சொல்லுவான்.

என் மகளுக்கும் கூட ஒரு காரணப்பெயராகத் தான் வவுனீத்தா என பெயரிட்டேன்.

நான் நேசித்த என்னை அதிகமாய் நேசித்து 1997இல் வன்னி ஏ9 வீதியில் தன்னுயிரை விதைத்து வீழ்ந்த நேசிப்பிற்குரியவனின் நினைவாகவும் வீரம் நிறைந்த வன்னிமண்ணின் ஞாபகமாகவும் அமைகிறது.
அந்த மண்ணில் வாழ்ந்த அனைத்து வீரர்களின் ஞாபகமும் என் மகள் வவுனீத்தாவின் பெயரில் என்னோடு வாழ்கிறார்கள்.

என் குழந்தைகளுக்கு மாமாக்களாய் சித்திகளாய் உறவுகளாய் இருந்த பலர் இன்று உயிரோடு இல்லை. பலர் மாவீரர்கள். பலர் காணாமற் போனோர்களாய்....

இன்னும் பலர் இன்றும் எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் நன்மையே செய்தபடி எங்கள் மீதான நேசிப்போடு துணையாய் இருக்கிறார்கள்.

பிள்ளைகளுக்கென எதையும் சேர்த்துவைக்கவில்லையென்றாலும் தேடற்கரிய பல நல்ல உறவுகளைச் சேர்த்து வைத்திருக்கிறேன்.

வன்னிக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லக் கிடைத்த மூன்று தடவைகளில் அவர்கள் சந்தித்த மனிதர்களும் அவர்களுடனான உறவுகளும் மிகப்பெறுமதியானது.

யேர்மனியில் பெற்ற மதிப்பேட்டு அறிக்கையினை காட்டி மகிழ்ந்ததும் இன்னும் படியுங்கோ நாட்டுக்கு நிறைய செய்ய வேண்டுமென்று அவர்கள் வாழ்த்தியதும் மறக்க முடியாதது.

உலகால் அதிசயித்து பார்க்கப்பட்டவரும் உள்ளிருப்பவர்கள் கூட நெருங்கிப்பழகும் வாய்ப்பு கொடுக்காதவரும் எனது பிள்ளைகளைத் தனது மருமக்களாய் தோழ்காவித்திரிந்ததுவும் விளையாடியதும் பெருங்கொடையே.

என் பிள்ளைகள் நாட்டுக்கு பயனுள்ளவர்களாய் வரவேண்டும் என பலர் கடிதங்களாய் வாழ்த்துக்களாய் பலவருடங்கள் முன் எழுதி மாவீரர்கள் ஆனவர்களின் கடிதங்கள் வாழ்த்துக்களை பத்திரப்படுத்தி கொடுத்திருக்கிறேன்.

அடுத்த ஐந்து ஆண்டுகளின் பின்னர் என் பிள்ளைகள் பல்கலைக்கழகம் முடித்து பட்டமளிப்பு விழாவில் அம்மாவின் வாழ்வின் முழுமையையும் தருவார்கள் என்ற நம்பிக்கை இன்னும் வலுக்கிறது.

20வருட உழைப்பு சேமிப்பு , என் குழந்தைகளினதும் எனதும் நிம்மதி அமைதி யாவையும் கொண்டு தொலைந்தவனின் ஒருசத உதவியும் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் வாழுவோம் என என் கடின உழைப்பின் மூலம் கொடுக்கும் உதவியில் படிக்கும் பிள்ளைகள். தேவைகள் நிறைய இருக்கிறது. ஆனால் என்னால் இயலும் அடுத்த ஐந்து வருடம் இன்னும் அதிகம் நான் உழைக்க வேண்டும்.

எனக்கு ஆதரவு தரவேண்டிய அம்மாவே எவனுக்காகவோ என்னை எதிர்த்தார். என்னை மகளாகப் புரிந்து கொள்ளாமல் ஆண் பெண்ணென்ற விதத்தில் தனது நியாயங்களை என்னுள் நிர்ப்பந்தித்தார்.

ஆணென்றால் இப்படித்தான் இருப்பார்கள். நாங்கள் தான் சமாளிக்க வேணும்.
பிள்ளைகளை இழந்தாலும் பிள்ளைகளின் எதிர்காலம் பாழானாலும் பறவாயில்லை பெயருக்கு ஒரு ஆண் குடும்பத்தலைவனாய் இருக்க வேண்டும். அது போன்றொரு போலி வாழ்வே சமூக தகுதியென்று கருதினா.

'பிள்ளைகளை ஆண்துணையில்லாமல் வளத்துக் காட்டு பாப்பம் என சாபமிட்டு சபித்த என் அம்மாவின் சாபம் , என் நடத்தை பற்றி ஊரெங்கும் பழிசொல்லித்திரியும் டென்மார்க்கில் வாழும் அம்மாவின் கூடப்பிறந்த சகோதரியும் அவர்களது குடும்பமும் இன்னும் என் வீழ்ச்சியில் கைதட்ட காத்திருந்த அனைவருக்கும்.....,

இதோ நான் சாதித்துக் காட்டியிருக்கிறேன். உங்கள் யாரின் ஆதரவும் இல்லாமல் தனியொருத்தியாக என் பிள்ளைகளை உயர்த்தியிருக்கிறேன்.

உங்களைக் கூடாதெண்டு சொன்ன அம்மம்மாவும் எல்லாரும் எங்களைத் தேடிவாறமாதிரி நாங்கள் படிப்பமம்மா. என் மகள் சொல்லும் வார்த்தைகள் கடவுளின் வார்த்தைகள்.

என்னை பழிசொன்னவர்களே , என் அம்மா உட்பட அனைவரும் எனது மரணத்தில் கூட உங்கள் மூச்சுக்கூட எட்டக்கூடாது. சாந்தி நேசக்கரம் பார்த்திபன் , வவுனீத்தாவின் அம்மாகவும் , வாழ்வில் எனக்கு கிடைத்த நட்புக்கு அர்த்தம் தந்தவனின் தோழியாகவுமே நான் சாக வேண்டும்.

பிற்குறிப்பு :-
என் தோழமை பற்றி.

அன்பையும் ஆதரவையும் பலத்தையும் தந்து என்னைத் தாங்கிச் சுமக்கும் உறவு என் தோழன். ஆண்வழியான நான் உணராத அப்பா , அண்ணா , தம்பி அனைத்து உறவுகளின் அன்பையும் ஒன்றாய் தந்தவன். எனக்குப் பறக்கும் வலுவைத் தந்த இறகுகள் அவனது.

உடையாத உறுதியைத் தந்த உறவு அவன்.
என் அமைதியும் நிதானமுமே என் பிள்ளைகளை நிம்மதியாக வாழ்விக்கும். அடிக்கடி என் அருகில் இருந்து என்னை ஆற்றுப்படுத்திய என் தோழன். சாகும் வரையும் அவனுக்கு பட்டகடனை என்னால் திரும்பி கொடுக்க முடியாத கடன்.

நட்பென்றால் உலகில் நான் காட்டும் முதலும் கடைசியுமான உறவு அவன்.

எத்தனையோ பழி , வலி யாவும் தாங்கி நான் வீழாமல் என்னைத் தாங்கிய விழுது. என் கண்ணீரை வாங்கிக் கொண்டு புன்னகையைப் பரிசளித்தவன். எல்லாமுமாய் என்னைத் தாங்கிய என் தோழன் இல்லையென்றால் சிலவேளை இன்ற நான் சிறையில் கூட இருந்திருப்பேன்.

17636861_10208849580137411_1407039503256

17758496_10208849580897430_3151768176650

  • Like 20

Share this post


Link to post
Share on other sites

May 18 Banner

பிள்ளைகளுக்கு என் வாழ்த்துக்கள்.
என்னடா  ஆளை காணேல்லையே எண்டு பார்த்தன்.....

சொந்தக்கதையோடை வந்து நிக்கிறியள்! இப்ப உப்பிடியான கதையள் தான் புலம்பெயர் தேசங்களிலை நடக்குது. அது சரி நீங்கள் மதம் கிதம் ஒண்டும் மாறேல்லையே?

 

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்து வெற்றி நடை போட வாழ்த்துக்கள்....

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் சாந்தி.

போராடி பெறுகின்ற எந்த ஒரு வாழ்வும் தோல்வி போகாது.

Share this post


Link to post
Share on other sites

நேற்று  ஒரு பிறந்தநாள் விழாவுக்கு போயிருந்தபோது 

இதை முகநூலில் வாசித்தேன்

என் கண் கலங்குவதைக்கண்ட அருகிலிருந்த நண்பர் கேட்டார் என்ன வென்று

ஒரு பொது நலத்தில் ஈடுபாடுடைய  சகோதரியின்  சோகக்கதையை  வாசிக்கின்றேன் என்றேன்

அவரிடமும் கொடுத்தேன்

அரைவாசியுடன் முடியல என தந்துவிட்டார்..

இதுவும் கடந்து போகும் சகோதரி..

வாழ்க  வளமுடன்.

Share this post


Link to post
Share on other sites

மகனுக்கும் மகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துவிடுங்க...

வாழ்ந்து காட்டுதல் தான் மிகச்சிறந்த பழிவாங்கல்...

Edited by அபராஜிதன்

Share this post


Link to post
Share on other sites

மனம் கனத்துவிட்டது தோழி

அண்மைக்காலத்தில்தான் உங்கள் வாழ்வியல் பற்றி அறிந்தேன். அணைத்து ஆறுதல் சொல்வதற்கோ, அறிந்த விடயத்தை பேசி தேறுதல் சொல்வதற்கோ முடியவில்லை. இந்தச் சமூகவெளியில் பெண் என்பவளை எப்போதும் பெற்றவர்கள்கூட சமநிலையில் வைத்துப்பார்ப்பதில்லை அது எமது சமூகத்தின் துர்பாக்கியமே. இருப்பினும் தன்னம்பிக்கை வாழ்விக்கிறது. வாழவைக்கும். நிலைமையை உணர்ந்து பிள்ளைகளும் தம்மை பேணி நிமிர்வெய்தி இருக்கிறார்கள். வாழ்த்துக்கள் தோழி. பிள்ளைகளின் எதிர்காலம் மென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

குழந்தைகளின் இன்றைய வெற்றிகளும் இன்னும் பிரகாசமாய் இருக்கும் எதிர்கால சாதனைகளிலும் உங்களின் கடந்த துன்பங்கள் கரைந்து போகட்டும் சகோதரி.....! எல்லோருக்கும் வாழ்த்துக்கள்....!

Share this post


Link to post
Share on other sites

இரண்டு பிள்ளைகளும்  மேலும் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்தி செல்கிறேன்.💐

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பிள்ளைகளுக்கு :97_raised_hand:

Share this post


Link to post
Share on other sites

பிள்ளைகளுக்கு என் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

 உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

கண் கலங்க வைத்த பதிவு. சாந்தி.
உங்கள் ஆசையை... பிள்ளைகள் நிறைவேற்றி விட்டதை  எண்ணி,  மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

பிள்ளைகளை சிறியவர்களாய் முன்பு பேஸ்புக்கில் பார்த்தேன். உங்களுக்கு மேலாக இப்போது வளர்ந்து விட்டார்கள். பிள்ளைகளின் ஆக்கங்களையும்   முன்பு இங்கே பகிர்ந்து இருந்தீர்கள். வாழ்த்துக்கள் சாந்தி!

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் சாந்தி. இன்னும் நிறைய சாதிப்பீர்கள். தடைக்கற்கள் தான் படிக்கற்களாக மாறும். பிள்ளைகளுக்கு பாராட்டுக்கள்

Share this post


Link to post
Share on other sites
On 3.4.2017 at 0:08 AM, குமாரசாமி said:

பிள்ளைகளுக்கு என் வாழ்த்துக்கள்.
என்னடா  ஆளை காணேல்லையே எண்டு பார்த்தன்.....

சொந்தக்கதையோடை வந்து நிக்கிறியள்! இப்ப உப்பிடியான கதையள் தான் புலம்பெயர் தேசங்களிலை நடக்குது. அது சரி நீங்கள் மதம் கிதம் ஒண்டும் மாறேல்லையே?

 

கருத்துக்கு நன்றி கு.ச.

கு.ச உங்கள் மதம்மாறினால் வாழ்வு மாறுமோ ?

On 3.4.2017 at 5:04 AM, Maruthankerny said:

வாழ்த்துக்கள் !!

நன்றி மருதங்கேணி.

On 3.4.2017 at 11:22 AM, putthan said:

தொடர்ந்து வெற்றி நடை போட வாழ்த்துக்கள்....

நன்றி புத்தா.

On 3.4.2017 at 0:59 PM, ஈழப்பிரியன் said:

வாழ்த்துக்கள் சாந்தி.

போராடி பெறுகின்ற எந்த ஒரு வாழ்வும் தோல்வி போகாது.

உங்கள் அன்புக்கு நன்றி ஈழப்பிரியன்.

On 3.4.2017 at 1:28 PM, விசுகு said:

நேற்று  ஒரு பிறந்தநாள் விழாவுக்கு போயிருந்தபோது 

இதை முகநூலில் வாசித்தேன்

என் கண் கலங்குவதைக்கண்ட அருகிலிருந்த நண்பர் கேட்டார் என்ன வென்று

ஒரு பொது நலத்தில் ஈடுபாடுடைய  சகோதரியின்  சோகக்கதையை  வாசிக்கின்றேன் என்றேன்

அவரிடமும் கொடுத்தேன்

அரைவாசியுடன் முடியல என தந்துவிட்டார்..

இதுவும் கடந்து போகும் சகோதரி..

வாழ்க  வளமுடன்.

பொதுவெளிக்கு வரும் பெண்களுக்கு நிகழும் அநீதி என்னையும் தப்பவிடவில்லை. தொல்லைகள் கடந்தாயிற்று சகோதரரே. வெற்றியை நோக்கிய பயணமே இப்போது. உங்கள் அன்புக்கு நன்றி.

On 3.4.2017 at 3:38 PM, அபராஜிதன் said:

மகனுக்கும் மகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துவிடுங்க...

வாழ்ந்து காட்டுதல் தான் மிகச்சிறந்த பழிவாங்கல்...

அன்புக்கு நன்றி அபராஜிதன்.

Edited by shanthy

Share this post


Link to post
Share on other sites
On 3.4.2017 at 4:58 PM, வல்வை சகாறா said:

மனம் கனத்துவிட்டது தோழி

அண்மைக்காலத்தில்தான் உங்கள் வாழ்வியல் பற்றி அறிந்தேன். அணைத்து ஆறுதல் சொல்வதற்கோ, அறிந்த விடயத்தை பேசி தேறுதல் சொல்வதற்கோ முடியவில்லை. இந்தச் சமூகவெளியில் பெண் என்பவளை எப்போதும் பெற்றவர்கள்கூட சமநிலையில் வைத்துப்பார்ப்பதில்லை அது எமது சமூகத்தின் துர்பாக்கியமே. இருப்பினும் தன்னம்பிக்கை வாழ்விக்கிறது. வாழவைக்கும். நிலைமையை உணர்ந்து பிள்ளைகளும் தம்மை பேணி நிமிர்வெய்தி இருக்கிறார்கள். வாழ்த்துக்கள் தோழி. பிள்ளைகளின் எதிர்காலம் மென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.

ஆத்மார்த்தமான கருத்து சகாரா. இன்னும் பெண் நிலமை இப்படித்தான் என்பதற்கு நானொரு உதாரணம்.  மாற்றங்கள் எத்தனையோ பெயரளவில் மட்டுமே. அன்புக்கு நன்றி.

On 3.4.2017 at 5:15 PM, suvy said:

குழந்தைகளின் இன்றைய வெற்றிகளும் இன்னும் பிரகாசமாய் இருக்கும் எதிர்கால சாதனைகளிலும் உங்களின் கடந்த துன்பங்கள் கரைந்து போகட்டும் சகோதரி.....! எல்லோருக்கும் வாழ்த்துக்கள்....!

போராடினால் மட்டுமே வாழ்வு சுவியண்ணா. நன்றி.

On 3.4.2017 at 5:35 PM, யாயினி said:

இரண்டு பிள்ளைகளும்  மேலும் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்தி செல்கிறேன்.💐

நன்றி தங்கையே.

On 3.4.2017 at 7:06 PM, முனிவர் ஜீ said:

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பிள்ளைகளுக்கு :97_raised_hand:

நன்றியடா தம்பி.

On 3.4.2017 at 7:34 PM, தமிழினி said:

வாழ்த்துக்கள் உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் சாந்தி அக்கா!

அன்புக்கு நன்றி தமிழினி.

On 3.4.2017 at 8:49 PM, சுவைப்பிரியன் said:

வாழ்த்துக்கள்

நன்றி சுவைப்பிரியின்.

On 4.4.2017 at 1:02 AM, vaasi said:

பிள்ளைகளுக்கு என் வாழ்த்துக்கள்.

நன்றி vaasi.

On 4.4.2017 at 3:41 AM, நிலாமதி said:

 உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்

நன்றி நிலாமதி.

On 4.4.2017 at 5:24 AM, தமிழ் சிறி said:

கண் கலங்க வைத்த பதிவு. சாந்தி.
உங்கள் ஆசையை... பிள்ளைகள் நிறைவேற்றி விட்டதை  எண்ணி,  மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள்.

நன்றி தமிழ்சிறி. Gymnasium இறுதியாண்டு  பரீட்சைக்காக ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளும் எப்படி இருப்பார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள்.

On 7.4.2017 at 6:01 PM, கலைஞன் said:

பிள்ளைகளை சிறியவர்களாய் முன்பு பேஸ்புக்கில் பார்த்தேன். உங்களுக்கு மேலாக இப்போது வளர்ந்து விட்டார்கள். பிள்ளைகளின் ஆக்கங்களையும்   முன்பு இங்கே பகிர்ந்து இருந்தீர்கள். வாழ்த்துக்கள் சாந்தி!

அன்புக்கு நன்றி கலைஞன்.

On 9.4.2017 at 1:21 AM, Kavallur Kanmani said:

வாழ்த்துக்கள் சாந்தி. இன்னும் நிறைய சாதிப்பீர்கள். தடைக்கற்கள் தான் படிக்கற்களாக மாறும். பிள்ளைகளுக்கு பாராட்டுக்கள்

அன்புக்கு நன்றி காவலூர் கண்மணி.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  

May 18 Banner