யாழிணையம்

யாழ் இணையம் 19ஆவது அகவை

1 post in this topic

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,

மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 18 ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2017) 19 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது.  1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம் பல மேடு பள்ளங்களைக் கடந்து தனித்துவமான தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களைத் தாங்கும் காலக்கண்ணாடியாக யாழ் இணையம் உள்ளது.

எமக்கு என்றென்றும் பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கும், யாழ் இணையம் தனக்கெனதோர் தனித்துவத்துடன் மிளிர்ந்து கொண்டிருக்கவேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகச் சுயமான ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்துள்ளனர்.  எல்லோருக்கும் பாராட்டுக்களுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் கூறியது போன்றே எமது மண்ணோடும், எமது மக்களோடும்  நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம்.


"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

14 people like this

Share this post


Link to post
Share on other sites