Jump to content

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் கடிதத்தில் பிரிட்டன் பிரதமர் கையொப்பமிட்டார்


Recommended Posts

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் கடிதத்தில் பிரிட்டன் பிரதமர் கையொப்பமிட்டார்

 

28 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் கடிதத்தில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே கையொப்பமிட்டார்.

 
 
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் கடிதத்தில் பிரிட்டன் பிரதமர் கையொப்பமிட்டார்
 
லண்டன்:

ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின. 1993–ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில் பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன. இதில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை பிற உறுப்பு நாடுகளுக்கு திறந்து வைத்துள்ளன. இந்த அமைப்பின் கடைசி உறுப்பு நாடாக 1-7-2013 அன்று குரோசியா சேர்க்கப்பட்டது.

ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வசிப்பவர்கள் அந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம்; வேலைவாய்ப்புகளை பெறலாம்; கல்வி கற்கலாம்; தொழில் தொடங்கலாம். இதன் காரணமாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் அதிக அளவில் குடியேற தொடங்கினார்கள்.

இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, குறிப்பாக வேலைவாய்ப்பு பறிபோவதாக பிரிட்டன் மக்கள் கருத தொடங்கினார்கள். பிரிட்டன் அரசாங்கம் வழங்கும் சமூக நலத்திட்டங்களின் பலன்களை பிறநாட்டினர் பெற்று விடுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
 
201703291225541347_Eu-3._L_styvpf.gif


ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிப்பதால் பிரிட்டனுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், எனவே அதில் இருந்து விலக வேண்டும் என்றும் அந்த நாட்டில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கை நாளுக்குநாள் வலுவடைந்து வந்தது.

ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிப்பதா? வேண்டாமா? என்பதை அறிய மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பிரிட்டன் முழுவதும் எழுந்தது. பிரதமர் டேவிட் கேமரூனின் கன்சர்வேட்டிவ் கட்சி தரப்பிலும் பொதுவாக்கெடுப்பு நடத்த நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக டெலிவிஷன்களின் விவாதங்களும் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, பொதுவாக்கெடுப்பு நடத்த பிரிட்டன் அரசு முடிவு செய்தது.

ஆனால், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதை அதன் நட்பு நாடுகள் விரும்பவில்லை. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகக்கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பிரிட்டனை கேட்டுக்கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிப்பதா? அல்லது விலகுவதா? என்பது பற்றி தீர்மானிக்க பிரிட்டனில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. பிரிட்டன் நாட்டின் குடியுரிமை பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பொதுவாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
 
201703291225541347_Eu-2._L_styvpf.gif

ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என 48.1 சதவீதம் மக்களும், விலக வேண்டும் என 51.9 சதவீதம் மக்களும் வாக்களித்தனர். மக்களின் இந்த முடிவு தனது எண்ணத்துக்கு பாதகமாக அமைந்ததால் வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியானதும் அந்நாள் பிரதமர் டேவிட் கேமரூன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த தெரசா மே நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்றார். மக்களின் தீர்ப்பு தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளில் காரசாரமான விவாதமும் நடைபெற்றது. பின்னர், மக்கள் தீர்ப்பை ஏற்று கொள்வது என பாராளுமன்றம் சமீபத்தில் தீர்மானித்தது.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் கடிதத்தில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே நேற்று கையொப்பமிட்ட புகைப்படங்களை அந்நாட்டு ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.

புருசெல்ஸ் நாட்டில் இருக்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவரான டொனால்ட் டஸ்க் என்பவரிடம் முறைப்படி இந்த கடிதம் இன்று ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/29122553/1076756/British-PM-May-signs-Brexit-letter-to-EU.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் கடிதத்தில் பிரிட்டன் பிரதமர் கையொப்பமிட்டார்

 

Link to comment
Share on other sites

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகும் கடிதம் ஒன்றிய தலைவரிடம் கையளிப்பு

  •  

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்காக சட்ட நடவடிக்கைகளைத் துவங்குவதற்காக பிரதமர் தெரீசா மே கையெழுத்திட்ட நிலையில், அதுதொடர்பான 6 பக்க கடிதத்தை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்டு டஸ்க்கிடம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரிட்டன் தூதர் சர் டிம் பாரோ சற்று நேரத்துக்கு முன்னதாக கையளித்திருக்கிறார்.

கடிதம் கையளிப்புபடத்தின் காப்புரிமைAP

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான நடவடிக்கைகளை முறைப்படி தொடங்குவதற்கான கோப்பில் பிரதமர் தெரீசா மே கையெழுத்திட்டார்

லிப்சன் உடன்படிக்கையின் அரசியல் சட்டப்பிரிவு 50-இன் கீழ், இது ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்ட் டஸ்க்கிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டது.

"நம் நாடு ஒன்றிணைந்து இருக்க வேண்டிய தருணம் இது" என்று நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் பிரதமர், பிற எம்.பிக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு ஜூன் மாத கருத்து வாக்கெடுப்பில் பிரிட்டன் மக்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 
ஐரோப்பிய ஒன்றியம் -- பிரிட்டன் முறிவு; அடுத்தது என்ன?

முன்னதாக, ஒரு மணி நேரம் நடைபெற்ற பிரிட்டன் அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர் தெரீசா மெ, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான கவுண்ட்-டவுன் தொடங்குவது தொடர்பான தகவல்களை எம்.பிக்களுக்கு உறுதி செய்வது குறித்த அறிக்கையை வெளியிடுவது பற்றி ஆலோசித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான கடிதத்தில் தெரீசா மே கையெழுத்து

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட அனைத்து தரப்பினருடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் போது, பிரெக்ஸிட்டிற்கு பிறகு அதன் அந்தஸ்து குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தவிருப்பதாகவும், அதில் "பிரிட்டன் முழுவதிலும் இருக்கும் ஒவ்வொருவரும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவார்கள்" என்றும் தெரீசா மே உறுதியளித்தார்.

"இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் வகையிலான சரியான ஒப்பந்தத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் என்னுடைய கடுமையான உறுதிப்பாடு" என்றார் பிரிட்டன் பிரதமர்.

"இது நாம் எதிர்கொள்ளும் வாய்ப்புகளுக்கான முக்கியமான பயணம், நமது பகிரபட்ட மதிப்புகள், விளைவுகள், நலன்கள் ஆகியவற்றை கட்டாயமாக ஒன்றிணைக்கவேண்டும்".

 
ஐரோப்பிய ஒன்றியம்/பிரிட்டன்: ஏனிந்த விலகல்?

"ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான முடிவு எடுத்துள்ள இந்த நேரத்தில், நாம் ஒன்றாக இருக்க வேண்டியதற்கான தருணம்".

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடைமுறையை தொடங்கும் சட்டத்திற்கு ஒப்புதல்

அரசின் இந்த முடிவை மதிப்பதாக கூறும் தொழிலாளர் கட்சித் தலைவரான ஜெர்மி கோபின், "இதற்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு அடிக்கும் அரசுதான் பொறுப்பு" என்றார்.

அரசியல் சட்டப்பிரிவு 50 ஐ முன்னெடுப்பது, "பிரிட்டனுக்கு ஒரு முக்கியத் தருணம் என்றும், "ஒரு ஒப்பந்தத்தை பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆனால் பி.பி.சி வானொலி 4-இன் இன்றைய நிகழ்ச்சியில் பேசிய அவர், அமைச்சர்கள் இந்த நடைமுறைகளின்போது சமரசம் செய்து கொள்வார்கள் என்றும், "ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் என இருதரப்பினருமே அவர்களது சொந்த நலன்களை பாதுகாக்கவே இந்த பேச்சுவார்த்தைகளின்போது முயற்சிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

`பக்க விளைவுகளை சந்திக்க வேண்டும்'

"தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இல்லை, நமக்கு சொந்தமான உணவுப்பொருளைப் போன்று இதை நமது விருப்பப்படி எடுத்துக்கொள்ளமுடியாது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது என்ற முடிவும், எதிர்காலத்தில் ஒன்றியத்துடனான உறவுகளை குறித்தும் நடத்தும் பேச்சுவார்த்தைகளில், ஒருசில பக்கவிளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும், அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்".

பிரிட்டன் பிரதமரின் கடிதம்

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக நீடிக்கப்போகும் பிரிட்டனுக்கு, ஒன்றியத்தின் பிற உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மக்கள் எப்போதும் போல வந்து போகலாம் என்று அவர் கூறினார்.

ஆனால் இருதரப்புக்கு வாக்களிக்கும் உரிமை பெற்றவரும், பிரிட்டனின் முன்னாள் அரசு அதிகாரியுமான லார்ட் குஸ் ஓ'டோனெல் கூறுகிறார், "ஐரோப்பிய ஒன்றியத்தின் விமானத்தில் பயணிக்கும் நாம், விமானத்தில் இருந்து வெளியில் குதிக்க விரும்புகிறோம். எனவே, விமானத்தை வடிவமைத்தவர்கள் கொடுக்கும் பாராசூட்டை தான் பயன்படுத்தவேண்டும். நம்மைப் போன்று வேறு யாரும் வெளியில் குதித்துவிடக்கூடாது என்ற கவனத்துடன் தான் அந்த பாராசூட்டை வடிவமைப்பார்கள்".

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கை: நீதிமன்றத் தீர்ப்பால் தாமதமாகுமா?

செவ்வாய்க்கிழமையன்று இரவு, டஸ்க், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் ஜாங் க்ளோட் உன்கர் (Jean-Claude Juncker), ஜெர்மன் சான்சலர் ஆங்கெலா மெர்கல் ஆகியோருடன் பிரதமர் தொலைபேசியில் பேசினார்.

அரசியல் சாசன சட்டப்பிரிவு 50 இன் மூலம், இரு தரப்பினரும் ஓர் ஒப்பந்தத்திற்கு வருவதற்கு இரண்டு ஆண்டு கால அவகாசம் கிடைக்கும். எனவே, காலக்கெடு நீடிக்காத பட்சத்தில், பிரிட்டன், 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் நாளன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிவிடும்.

பிரிட்டன் நாடாளுமன்றம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மே மாத மத்தியில் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றியத்தில் இருந்து விலகுவது மற்றும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இரண்டுமே ஒரே நேரத்தில் நடைபெறவேண்டும் என பிரிட்டன் விரும்பும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியமோ, இவை இரண்டுமே தனித்தனியாக கையாளப்படவேண்டும் என்கிறது.

பிரிட்டனில் வாழும் ஐரோப்பிய நாட்டு மக்களின் நிலை என்ன?

பிரிட்டனின் வாழும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற உறுப்பு நாடுகளின் மக்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் ஒப்பந்தம் விரைவாக மேற்கொள்ளப்படவேண்டும் என்று பிரிட்டன் விரும்புகிறது.

எல்லை தாண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், ஐரோப்பிய கைது வாரண்ட், பிரிட்டனில் தலமையகங்களை கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய முகமைகள் அவற்றை வேறு இடத்திற்கு மாற்றுவது, ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசு அதிகாரிகளுக்காக பிரிட்டன் கொடுத்து வரும் ஓய்வூதிய பங்களிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றின் மதிப்பு சுமார் 50 பில்லியன் பவுண்டுகளாக இருக்கலாம் என சில அறிக்கைகள் கூறுகின்றன.

http://www.bbc.com/tamil/global-39431307

Link to comment
Share on other sites

ஐரோப்பிய யூனியனிடம் ‘பிரெக்சிட்’ அறிவிக்கையை வழங்கியது பிரிட்டன்: 2019-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி வெளியேறுகிறது

 

 
படம்.| ராய்ட்டர்ஸ்.
படம்.| ராய்ட்டர்ஸ்.
 
 

ஐரோப்பிய யூனியனிலிருந்து முறைப்படி பிரிட்டன் வெளியேறுவது (பிரெக்சிட்) தொடர்பான அறிவிக்கையில் அந்நாட்டு பிரதமர் தெரசா மே கையெழுத்திட்டார். இந்தக் கடிதத்தை பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க்கிடம் பிரிட்டன் தூதர் சர் டிம் பரோ வழங்கினார்.

ஐரோப்பிய யூனியனில் 28 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்த உறுப்பு நாடுகள் கூட்டாக இணைந்து செயல்படுவதற்காக லிஸ்பன் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இந்த உடன்படிக்கையின் 50-வது பிரிவின் கீழ், மற்ற உறுப்பு நாடுகளுக்கு பிரிட்டன் இந்த அறிவிக்கையை வழங்கி உள்ளது.

இதன்படி, அடுத்த 2 ஆண்டுகளுக்கு பேச்சுவார்த்தை நடைபெறும். அப்போது, வரும் காலத்தில் யூனியனுடன் உறுப்பினர் அல்லாத நாடு என்ற வகையில் பிரிட்டன் எத்தகைய உறவை கடைபிடிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படும். இதன்படி வரும் 2019-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி பிரிட்டன் முறைப்படி வெளியேறும்.

ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிப்பதால் பிரிட்டனில் உள்நாட்டு மக்களுக்கு வர்த்தகம் மற்றும் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, யூனியனிலிருந்து வெளியேற முடிவு செய்த பிரிட்டன் பொதுமக்களிடம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாக்கெடுப்பு நடத்தியது. இதில் பெரும்பாலான மக்கள் வெளியேற விருப்பம் தெரிவித்தனர். இதன்படி, யூனியனிலிருந்து வெளியேற பிரிட்டன் முடிவு செய்தது. இதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.

http://tamil.thehindu.com/world/ஐரோப்பிய-யூனியனிடம்-பிரெக்சிட்-அறிவிக்கையை-வழங்கியது-பிரிட்டன்-2019ம்-ஆண்டு-மார்ச்-29ம்-தேதி-வெளியேறுகிறது/article9606491.ece?homepage=true

Link to comment
Share on other sites

 

ஐரோப்பிய ஒன்றியம் -- பிரிட்டன் விலகல்: அடுத்தது என்ன?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான தனது கடித்தத்தை பிரிட்டன் இன்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையாக கொடுத்ததன் மூலம் இரண்டுக்கும் இடையிலான் 44 ஆண்டு கால உறவு முடிவுக்கு வருகிறது.

பிரிட்டன் விலகல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படவேண்டும்.

இந்த இரண்டு ஆண்டுகளில் என்னவெல்லாம் நடக்கும்? எதுகுறித்தெல்லாம் இருதரப்பும் பேசும்? 44 ஆண்டுகால உறவை இரண்டு ஆண்டுகால அவகாசத்திற்குள் முடிக்க முடியுமா?

பிபிசியின் விரிவான அலசல்.

Link to comment
Share on other sites

 

ஐரோப்பிய ஒன்றியம்/பிரிட்டன்: ஏனிந்த விலகல்?

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறிய பிரிட்டன், புதிய அத்தியாயம் ஒன்றை இன்று துவங்கியுள்ள நிலையில், இரண்டுக்கும் இடையிலான கடந்தகால வரலாறு என்னவாக இருந்தது? இந்த பிரிவின் துவக்கப்புள்ளி எது என்பது குறித்த பிபிசியின் சிறப்புப்பார்வை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.