Sign in to follow this  
Followers 0
poet

எங்கள் கதை - ஜெயபாலன்

3 posts in this topic

Posted (edited)

கெரிலா போர் உதிகளைக் காடுகளைக் கைவிட்டு

வெளிகளிலே முடிசூடி எழுந்த கதை எங்கள் கதை

எங்களது காடெல்லாம் எதிரி ஆழ ஊடுருவ,

பெரு வெளியின் பொறிக்குள்ளே,

வீரமுடன் படை நடத்தி வீழ்ந்த கதை எங்கள் கதை.

Edited by poet
2 people like this

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்...பொயற்!

நீண்ட நாட்களின் பின் உங்கள் கவிதை!

ஓடோடி வந்து பார்த்தால்...இரத்தினச் சுருக்கமாக...எமது போராட்டம் விபரிக்கப் பட்டிருந்தது!

உண்மை....பொய்...என்பனவற்றுக்கப்பால்..எமது போராளிகளின் மதிப்பீட்டை...அவர்களது ஆற்றலை...இழிவு படுத்துவது போலவே...கவிதை அமைகின்றது!

நடந்தவை எதுவாயினும்...இறந்தவர்கள்..எங்களது சொந்தங்கள்...உறவுகள்....வாரிசுகள்!

எமது கண்களை...நாமே ...குத்திக்கொள்ள வேண்டாமே!

நான் குத்திய பச்சை..உங்கள் கவிதை வரிகளுக்காகவேயன்றி....அதனுள் புதைக்கப்பட்டிருக்கும்...கருப் பொருளுக்காக அல்ல!

Share this post


Link to post
Share on other sites

Posted (edited)

எழுந்த கதை, வீரமுடன் படை நடத்தி  என   போராழிகளை மகிமைப் படுத்தி போராட்ட உத்திகள் தொடர்பாக வருந்தும் மனநிலைதான் இக்கவிதை.

நான் வந்த வாய்ப்புகளை புறந்தள்ளி  உயிரைப் பணயம் வைத்து 1995 - 2005 காலக்கட்டத்தில் கழத்தில் விடுதலைக்குப்  பயனுள்ளவகையில் விவாதிக்காத எதையும் எழுதவில்லை. இந்த விவாதங்கள் பற்றி அறிந்தவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். என் அஞ்சலிக் கூட்டங்களிலாவது அவர்கள் இதுபற்றி வாய்திறப்பார்கள். பொறுத்திரு நண்பா? 

Edited by poet

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0