Jump to content

பணி ஓய்வும் ஓய்வற்ற பணியும்


Recommended Posts

அத்தான் எழும்புங்கோ காலை நித்திராதேவியின் அணைப்பின் சுகம் கலைந்த கடுப்பையும் மீறி அழைத்த குரல் காதில் தேனாக நுளைந்தது. அழைத்தபடி அருகே வந்து தட்டி எழுப்பிய கையை பட்டென்று பற்றி அணைத்தான். விடுங்கோ அவள் சிணுங்கிச் சிவந்தாள். சிவந்த கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டுத் தட்டியவன் அவள் அழகை ரசிக்கத் தொடங்கினான். சிவந்த கன்னம் அவன் கைபட்டதால் மேலும் சிவந்து நெற்றியை அலங்கரித்த குங்கும நிறத்தோடு கலந்தது. சாமியைக் கும்பிட்ட அடையாளம் அவள் நெற்றியில் மெல்லிய வெண்ணிறக் கோடாக மிளிர்ந்தது. கூந்தலில் சூடியிருந்த மல்லிகை மலரின் மணம் அவன் நாசியில் ஏறி நித்திரைச் சோம்பல் எல்லாம் விரட்டி அடித்தது.

 

ஆறரை மணிக்கு எழுந்து காலைக் கடன்கள் எல்லாம் முடித்து வேலைக்குப் புறப்பட அவனுக்கு நேரம் போதுமானது. அலாரம் 'டிங்' 'டிங்' 'டிங்' என்று இனிமையாகத்தான் ஒலிக்கும். ஆனாலும் அவன் அன்பு மனைவியின் இனிய "அத்தான்" என்ற குரல் ஒலி கேட்காது எழுந்ததே இல்லை. பல் துலக்குவதிலிருந்து பாதணி போடும்வரை அவனுக்கு தேவையான அனைத்தையும் நேர்த்தியாக வழங்கிக் காலை உணவையும் அருந்த வைத்து, ஏழரை மணிக்கு அவனை வேலைக்குப் புறப்படத் தயாராக்கி விடுவாள். அதுமட்டுமின்றிப் பாடசாலைக்குப் போகும் மூத்தவனையும் பளிச்சென்ற உடைகளுடன் அப்பாவுக்கு முத்தம் கொடுப்பித்து அவனுடன் மகிழுந்தில் ஏற்றிவிடும்போது டாண் என்று அருகேயுள்ள கோவில் மணி ஒலிக்கும். பாலர்வகுப்புக்குச் செல்லும் இளையவனை அவளே கூட்டிச் செல்வாள். அம்மாவின் இடுப்பில் உட்கார்ந்து தன் பிஞ்சுக் கைகள் இரண்டையும் ஆட்டும் கடைக்குட்டியை அவன் அணைத்துக் கொஞ்சும்போது அம்மாவுக்கும் ஒன்று அழுந்தக் கிடைக்கும். மனைவியை எந்த இடத்திலும் வைத்து அணைத்துக் கொஞ்சக்கூடிய கலாச்சாரம் உள்ள யேர்மனியில், அவனது கொஞ்சல் அவளுக்குக் கூச்சம் தருவதில்லை. ஆனால் சொந்த நாட்டவர் எவருடைய தலை தெரிந்தாலும்...! அவளுக்கு கொஞ்சலைக் கொடுக்கவோ எடுக்கவோ கெஞ்சினாலும் அவனால் முடியாது.!!

பணி தொடரும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணி தொடரட்டும் பாஞ்ச்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பாஞ்ச்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

அவனது கொஞ்சல் அவளுக்குக் கூச்சம் தருவதில்லை. ஆனால் சொந்த நாட்டவர் எவருடைய தலை தெரிந்தாலும்...! அவளுக்கு கொஞ்சலைக் கொடுக்கவோ எடுக்கவோ கெஞ்சினாலும் அவனால் முடியாது.!!

இது ரொம்ப பேருக்கு பிரச்சனை.இதற்கு மட்டும் வெள்ளைகளுக்கு நடுவில போய் குடிமனை வாங்க வேண்டும் என்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

மனைவியை எந்த இடத்திலும் வைத்து அணைத்துக் கொஞ்சக்கூடிய கலாச்சாரம் உள்ள யேர்மனியில், அவனது கொஞ்சல் அவளுக்குக் கூச்சம் தருவதில்லை. ஆனால் சொந்த நாட்டவர் எவருடைய தலை தெரிந்தாலும்...! அவளுக்கு கொஞ்சலைக் கொடுக்கவோ எடுக்கவோ கெஞ்சினாலும் அவனால் முடியாது.!!

ஏனென்டால்....வெள்ளை..இயற்கையாகப் பார்த்துவிட்டுப் போய் விடும்!

எங்கட சனம்....தீய்ச்ச மீனைப்.. பூனை பாக்கிற ஒஉர் பார்வை...அல்லது வேலிக்குள்ளால செண்பகம் எட்டிப்பார்க்கிற மாதிரி ஒரு பார்வை பார்க்கும்!

 

அது கிடக்கட்டும்! நீங்கள் தொடருங்கள்...பாஞ்ச்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

 

 -----ஆறரை மணிக்கு எழுந்து காலைக் கடன்கள் எல்லாம் முடித்து வேலைக்குப் புறப்பட அவனுக்கு நேரம் போதுமானது. அலாரம் 'டிங்' 'டிங்' 'டிங்' என்று இனிமையாகத்தான் ஒலிக்கும். ஆனாலும் அவன் அன்பு மனைவியின் இனிய "அத்தான்" என்ற குரல் ஒலி கேட்காது எழுந்ததே இல்லை. பல் துலக்குவதிலிருந்து பாதணி போடும்வரை அவனுக்கு தேவையான அனைத்தையும் நேர்த்தியாக வழங்கிக் காலை உணவையும் அருந்த வைத்து, ஏழரை மணிக்கு அவனை வேலைக்குப் புறப்படத் தயாராக்கி விடுவாள். அதுமட்டுமின்றிப் பாடசாலைக்குப் போகும் மூத்தவனையும் பளிச்சென்ற உடைகளுடன் அப்பாவுக்கு முத்தம் கொடுப்பித்து அவனுடன் மகிழுந்தில் ஏற்றிவிடும்போது டாண் என்று அருகேயுள்ள கோவில் மணி ஒலிக்கும். பாலர்வகுப்புக்குச் செல்லும் இளையவனை அவளே கூட்டிச் செல்வாள். அம்மாவின் இடுப்பில் உட்கார்ந்து தன் பிஞ்சுக் கைகள் இரண்டையும் ஆட்டும் கடைக்குட்டியை அவன் அணைத்துக் கொஞ்சும்போது அம்மாவுக்கும் ஒன்று அழுந்தக் கிடைக்கும். மனைவியை எந்த இடத்திலும் வைத்து அணைத்துக் கொஞ்சக்கூடிய கலாச்சாரம் உள்ள யேர்மனியில், அவனது கொஞ்சல் அவளுக்குக் கூச்சம் தருவதில்லை. ஆனால் சொந்த நாட்டவர் எவருடைய தலை தெரிந்தாலும்...! அவளுக்கு கொஞ்சலைக் கொடுக்கவோ எடுக்கவோ கெஞ்சினாலும் அவனால் முடியாது.!!

பணி தொடரும்.

அருமையான குடும்பக் கதையை... விவரித்த விதம்,  மிக அழகு பாஞ்ச்  அண்ணை.
தொடருங்கள்.... வாசிக்க ஆவலாக உள்ளோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு வீடு வாசற்படி...

அருமையான குடும்பக் கதை
தொடருங்கள்  பாஞ்ச்  அண்ணை

Link to comment
Share on other sites

என் கதையையும் கருத்தில் கொண்டு அதற்குக் கருத்துக்களும் எழுதிப் பச்சைகளும் வழங்கிய யாழ் உறவுகளுக்கு நன்றியையும், வணக்கத்தையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இது கற்பனைக் கதையல்ல, பலரும் முகம்கொடுத்த, கொடுக்கும் உண்மைச் சம்பவத்தையே கதையாக எழுத எண்ணி ஆரம்பித்து விட்டேன். ஆதரவு கிடைத்தால் ஆனந்தம்.

பணி தொடர்கிறது,

 

கணவன் கணநேரமும் பிரியாமல் தன்னருகே இருக்கவேண்டும் என்ற ஆசை அவள் நெஞ்சை நிறைத்திருக்கும், அவன் வேலைக்குச் செல்லாவிட்டால் வருமானம் இல்லை. பிச்சைச் சம்பளத்திலும், பிள்ளைகளுக்கு வரும் உதவிப் பணத்திலும் அவர்கள் வசதியாக வாழவும் இயலாது, ஊரில் உள்ள சொந்தங்களுக்கும், வாழ வழியற்றவர்களுக்கும் உதவிடவும் முடியாது, என்ற உண்மையையும் உணர்ந்தே இருந்தாள் ஊரில் அவள் குடும்பத்திற்கு அல்லது அவன் குடும்பத்திற்கு இங்கிருந்து செய்யக்கூடிய உதவி பணம் அனுப்புவது ஒன்றுதான். அனுப்பிய பணத்தைத் திரும்ப அவன் எதிர்பார்ப்பதில்லை. நீயும் எதிர்பார்க்காதே என்று அவன் கூறும்போது அவனுடைய பரந்த உள்ளம்கண்டு உருகிவிடுவாள்..

 

மாலையில் வீடுதிரும்பும் கணவன் வந்ததும் அவள் தயாரித்து வைத்திருக்கும் சுவையான பலகாரத்தை உண்டு தேனீரும் அருந்தியவுடன் பிள்ளைகளைக் கொஞ்சி அவளுக்கும் ஒரு முத்தம் வழங்கிவிட்டு நண்பர்களுடன் சீட்டு விளையாடப் போய்விடுவான். வீடுதிரும்ப சிலவேளைகளில் நேரம் பத்துப் பதினோரு மணியும் ஆகிவிடும். பிள்ளைகள் தூங்கிவிடுவார்கள். அவள் உணவும் அருந்தாது அவனுக்காக் கொட்டக் கொட்ட விழித்துக் காத்திருப்பாள். சில வேளைகளில் கண்சிவந்து நெடிமணத்துடன் வந்துசேருவான். பாவம் அவருக்கு வேலையிடத்தில் என்னென்ன தொல்லைகளோ…! அழுத்தங்களோ…! அவருக்கென்று ஒரு ஆறுதல் இன்றி அனுதினமும் எங்களுக்காக உழைக்க முடியுமா...?“ அவள் என்றுமே இந்த விடயத்தில் அவனுடன் தவறிக்கூட முரன்பட்டதில்லை. ஆதரவாக அவன் உடைமாற்ற உதவிசெய்து உணவைப் பரிமாறி தானும் உண்ணுவாள். எனக்காகக் காத்திருக்க வேண்டாமே, நீ வேளைக்கே உணவை உண்ணலாம்தானே என்ற அவன் பரிவுக்கு ஒரு புன்னகைமட்டுமே பதிலாகக் கிடைக்கும்.

 

சீட்டாட்டம் சிலவேளைகளில் அவன் வீட்டு நிவறையிலும் நடைபெறும். சாராயம் சாப்பாடு அனேகமாக அவன் செலவுதான். பெரியவன் ஒருமுறை சாராயப் போத்திலைக் கண்டு எனக்கும் அது வேண்டுமென்று அடம்பிடித்தபோது அது அப்பாவுடைய வருத்தத்திற்கு மருந்து என்று கூறிச் சமாளித்து விட்டாள்.

 

சிறுவயதிலேயே தந்தையை இழந்து உறவுகளின் உதவியுடன் வாழ்ந்தாலும் அவனுக்கு ஆசைகள் அதிகம். படிப்பில் விளையாட்டில் இசையில் என்று எந்தத் துறையிலாவது உயர்ந்து நிற்பவர்களைக் கண்டால், தனக்கும் அவர்களுக்கு ஈடான நிலைக்கு வரக்கூடிய தகுதி இருப்பதாக எண்ணிக்கொள்வான். எல்லாத் துறைகளிலும் காலடிபதித்தும், எந்தத் துறையிலும் முன்னேறியதில்லை. முன்னேறவேண்டும் என்ற ஆவலில் ஏதேதோ செய்து மற்றவர்களின் பரிகாசத்திற்கு உள்ளாகியதால், அவனுக்குள் தன்னைப்பற்றி ஒரு தாழ்ந்த மனப்பான்மையும் உருவாகிவிட்டது. கல்கி, சாண்டில்யன், ஜெயகாந்தன், தமிழ்வாணன், என்று இவர்களின் நாவல்களைப் படித்துத் தானும் அதுபோல் எழுதவேண்டும் என்று ஆவல் கொண்டு ஒரு சிறுகதை எழுதி அதனைப் பத்திரிகை ஒன்றிற்கு அனுப்ப முனைந்தபோது, அதனைப் படித்த அவன் சகோதர சகோதரிகள் கூட நையாண்டிபண்ணிக் கேவலப்படுத்தி அவன் ஆர்வத்திற்குச் சாவுமணி அடித்ததுதான் உண்மை.

 

எப்படியோ ஒரு பெரும் நிறுவனத்தில் வேலை கிடைத்து கல்யாணமும் ஆகி அவனையும் மதிக்க ஒருத்தி வந்ததில் அவன் தாழ்ந்த மனப்பான்மை நீக்கித் தானே முடிவெடுக்கும் நம்பிக்கையைக் கொடுக்க, மனைவியையும் பிள்ளையையும் அழைத்துக்கொண்டு வெளிநாடு வரக்கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிடாது யேர்மனிக்கு வந்துவிட்டான். கடைக்குட்டிகள் மகனும் மகளும் யேர்மனியின் மண்ணுக்கு உரியவர்களாயினர்.

 

பணி தொடரும்.

 

Link to comment
Share on other sites

1 minute ago, புங்கையூரன் said:

எம் கடன் பணி செய்து கிடப்பதே...!

தொடருங்கள்...பாஞ்ச்!

பணி ஒய்வு வந்தபின் இந்தக் கதை உங்களைப் புரட்டி எடுக்காது விட்டால் நீங்கள் உத்தம புருசன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

பெரியவன் ஒருமுறை சாராயப் போத்திலைக் கண்டு எனக்கும் அது வேண்டுமென்று அடம்பிடித்தபோது அது அப்பாவுடைய வருத்தத்திற்கு மருந்து என்று கூறிச் சமாளித்து விட்டாள்

எல்லாற்றை வீட்டிலும் இதுதான் போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் திமிரித் திரிந்த காளைகள் வெளிநாட்டில் பொறுப்பு உணர்ந்து வேலையோடும் குடும்பத்தோடும் போராடுவது..... சொல்லி வேல இல்லை....! 

தொடருங்கள் பாஞ்ச்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, MEERA said:

எல்லாற்றை வீட்டிலும் இதுதான் போல

மீரா...நானும் ஒரு சம்பவத்தை..இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்!

லண்டனில் ஒருவர் நன்றாக பியர் குடிப்பவர்! அவரது ப்ரிட்ஜில் எப்பவும் ஒரு ஆறு போத்தில்களாவது எப்பவும் நிரந்தரமாக இருக்கும்!

இருந்தால் போல...கலியாணம் முற்றாகி...மனுசியும் லண்டன் வந்து விட்டார்!

ஆரம்ப காலத்து..வெளிநாட்டு நோவேல்ரி முடிஞ்சு போகத்..தொடர்ந்து கேள்விகள் கேட்கத் தொடங்கினார்!

என்னத்துக்கு இவ்வளவு போத்தல் அடுக்கி வைச்சிருக்கு...ஒண்டு மட்டும் வச்சிருந்தால் போதாதோ...அர்ச்சனை தொடர்ந்தது!

என்னிடம் வந்து புறு புறுத்தான்!

நான் அவனிடம் சொன்னேன்....மச்சான் நீ ஒரு அதிஸ்டக்காரனடா!

அடுத்த நாள்....எல்லா பியர் போத்தல்களும்...குப்பைக்குப் போக....ஒரேயொரு வைட் ஹோர்ஸ் மட்டுமே கம்ப்பீரமாக வீற்றிருந்தது!

மனுசி...கணவன் இருவர் முகத்திலும்...புன்னகை.கோலோச்சியது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பாஞ்ச் எப்ப அடுத்த தொடர் வரும் என பார்த்துகொண்டிருக்கிறோம்...

Link to comment
Share on other sites

On ‎29‎.‎03‎.‎2017 at 10:25 AM, புங்கையூரன் said:

எம் கடன் பணி செய்து கிடப்பதே...!

தொடருங்கள்...பாஞ்ச்!

 

15 hours ago, putthan said:

தொடருங்கள் பாஞ்ச் எப்ப அடுத்த தொடர் வரும் என பார்த்துகொண்டிருக்கிறோம்...

 

7 hours ago, வல்வை சகாறா said:

தொடருங்கள் பாஞ்ச்

மன்னிக்க வேண்டுகிறேன். நான் உங்களைப்போல் பத்து விரல்களையும் கொண்டு தட்டச்சைத் தட்டும் திறன் உள்ளவன் அல்ல. ஒன்று இரண்டு விரல்கள்தான்... பொறுமைகாக்க வேண்டுகிறேன் நன்றி. 

 

பணி தொடர்கிறது,

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களுடைய அன்புக் கட்டளைகளை, கட்டுப்பாடுகளை அவனால் மீற முடியவில்லை. அனுதினமும் நடந்த சீட்டாட்டம், விடுமுறை நாட்களில் மட்டுமே என்று சுருங்கியது. மது அருந்துவதும் அருகியது. மது அருகியதால் நண்பர்கள் வரவும் அருகவே.! ஆனந்தப்பட்டது ஒருவர்தான்... அது அவன் துணைவிதான்.!! அந்த நண்பர்கள் கூட்டம் தங்களுக்காகச் செலவு செய்ய முன்வந்த வேறொருவனை நாடிச் சென்றுவிட்டது. உண்மையான நண்பனை மதுவிலும் அறியலாம். புதுமொழி ஒன்றை ஆதாரத்துடன் அவன் அறிந்துகொண்டான். நல்லொழுக்க அறிவுரை கூறும் சில நண்பர்கள் மட்டுமே அவனுக்கு எஞ்சினர். ஆயினும் பெழுதுபோவது சற்றுக் கடினமாக இருந்தது.

 

பிள்ளைகளுடைய கணணியை நோண்டத் தொடங்கினான். நுட்பங்கள் புரியவில்லை. அதனைப் பிள்ளைகள் சொல்லித்தர அவன் பயிலத் தயங்கவில்லை. அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பனை வணங்குபவன் ஆயிற்றே.! கணணியில் ஆர்வம் அதிகமாகவே, அவன் பிறந்தநாளுக்கு புதிய கணனி ஒன்றைப் பிள்ளைகள் வாங்கிப் பரிசளித்தனர். கணனியில் புகுந்து விளையாடிய வேளையில் ஒருதடவை யாழிணையம் கண்ணில் பட்டது. நீங்களும் யாழிணையத்தில் உறுப்பினராக இணையலாம்என்ற அறிவித்தல் அவனையும் உறுப்பினராக்கி உள்ளே நுளைய வழிவிட்டது. கதை எழுதும் சிறுவயது ஆசை மீண்டும் முளைவிடவே, சிறு அனுபவக் கதை ஒன்றை எழுதிக் கதையுடன் கருத்துக்களும் எழுதியபோது, யாழ்களத்தில் இருக்கும் பெரும் படைப்பாளிகளும் அதனைப் பாராட்டி ஊக்கப்படுத்தினர், அவன் புதியதோர் உலகில் புகுந்தான்.

 

நாட்கள் உருண்டோடி, வயதுமாகி, அவனுக்குப் பணி ஓய்வுபெறும் காலம் வந்தது. இத்தனைகாலம் உனக்காக, நாட்டுக்காக, இந்த உலகத்துக்காக, எதற்காக என்றாலும் நீ உழைத்தது போதும்…! இனி நீ இறக்கும் வரைக்கும் உன்னிடம் இருந்து உறுஞ்சப்பட்டதில் ஒரு சிறு பகுதி, மாதாந்தம் உனக்கு ஊதியமாக வழங்கப்படும். ஓய்வாக வீட்டில் இருந்து உன் எண்ணப்படி ஆனந்தத்தை அனுபவித்து வாழக்கடவாய்…!! மனிதச் சட்டம் அவனுக்கு வேலை என்ற பொறுப்பிலிருந்து ஓய்வு என்ற பெயரில் விடுதலை அளித்தது. யேர்மனி போன்ற நாடுகளில்தான் இத்தகய விடுதலை.... அவன் சொந்த ஊரிலோ அல்லது வேறு சில நாடுகளிலோ ஒருவர் வேலைபார்த்த நிறுவனத்தைப் பொறுத்தே விடுதலையை அனுபவிக்க முடியும். அனேகமாக பணி ஓய்வு என்ற விடுதலை கிடைத்த பின்புதான் பொருளாதாரம் தரும் தண்டனைகளை அனுபவிக்கவேண்டிய நிலமையும் வந்துசேரும். இதுபற்றி நமக்கேன் கவலை, அவன் தன் ஓய்வை நாள்முழுவதும் வீட்டில் இருந்து அனுபவிக்கத் தொடங்கினான். மனைவி பிள்ளைகளோடு, கணனியும் துணையாகச் சேர்ந்தது. 

 

ஆரம்பத்தில் அவன் பெழுதுபோக்கில் தலையிடாத அவன் துணைவி, அவன் ஓய்வின்றிக் கணனிமுன் உட்கார்ந்து இருப்பதைக் கண்டு கவலையுற்றாள். அதிகமாகக் கணனிமுன் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் நோய்கள் பற்றிப் பிள்ளைகள் எடுத்துக்கூற, அவள் கவலை அதிகமானது. சிறு கண்டிப்பு எழத்தொடங்கியது. அவள் கண்டிப்பு அவனுக்குப் புதுமையாக இருந்தது. மணமாகி இன்றுவரை இல்லாதது....! இப்போது எப்படி....? பிள்ளைகள் தலையெடுத்து விட்டார்கள். அவன் உழைத்ததை விடவும் அதிக வருமானம்…! பெண்ணுரிமை, சமஉரிமை என்று பேப்பரில் படித்ததை, ரேடியோவில் கேட்டதை, ரிவியில் பார்த்ததை வைத்து.... நான் ஏன் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்று வாழவேண்டும் என்று எண்ணிவிட்டாளோ…??

 

எண்ணங்கள் விபரீதமாக எழவே, அவள் நடவடிக்கைகளை முதன்முதலாக உற்றுப் பார்க்கத் தொடங்கினான். தொடங்கியபோதுதான் இதுவரை காணாத ஒரு மாபெரும் உண்மையைக் கண்டு அதிர்ந்து ஒடுங்கினான். குடும்பம் பற்றியும் அதன் பாரம் பற்றியும், அதற்காக ஆற்றவேண்டிய உழைப்புப் பற்றியும், இதுவரை உணராததை உணரத் தொடங்கினான். எட்டு மணித்தியால வேலை அதிகம் என்று அவனும் போராட்டத்தில் கலந்து போராடி ஏழரை மணித்தியாலமாகக் குறைத்து வேலைசெய்தவனுக்கு பணி ஒய்வு....!. ஆனால் நாள் முழுதும் ஓய்வின்றி வேலை செய்து மாய்கிறாளே..! அவன் அன்பு மனைவி,…! அவளுக்கு எந்தச் சட்டம் வேலையிலிருந்து விடுதலை வழங்கப்போகிறது…!! உண்மை உள்ளத்தில் உறைக்க அதன் காரம் அவனை உலுப்பியது. உற்று நோக்கியதில் பேருண்மை ஒன்று வெளிப்பட, அவன் இதயத்தில் இரத்தம் வடிந்தது.

 

பணி தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

rocking2.gif    இந்த 'சரிதை', எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறது..

ஆனாலும் பதிவை வாசித்ததும் செவியில் உணர்ந்தது..கீழே..!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பாஞ்ச்.

பச்சை முடிந்துவிட்டது

Link to comment
Share on other sites

On ‎31‎.‎03‎.‎2017 at 11:49 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தொடருங்கள் பாஞ்ச்.

பச்சை முடிந்துவிட்டது

உங்களுக்கு ஒரு பச்சை கடன்தர விரும்பினேன். மன்னிக்கவும் முடிந்துவிட்டது. :(

Link to comment
Share on other sites

அதிகாலை நாலுமணிக்கு எழுந்து இரவு பத்து மணிக்கு படுக்கப்போகும்வரை பம்பரம்போல் அவள் சுழன்று ஓய்வின்றி வேலைசெய்வதை தன் கண்களால் கண்டான். வீடு துப்பரவுசெய்வது, பாத்திரம் துலக்கி சமையல் செய்து, உடுப்புகள் தோய்த்துத் தோய்த்துலர்ந்த உடுப்புகளை இத்திரி போட்டு மடித்து ஒழுங்காக அடுக்கி வைப்பது, படுக்கை தட்டி விரித்து, இடையே தேனீர் வேண்டுமா? பால்விட்டு வேண்டுமா? இடியாப்பம் இருக்கு! புட்டிருக்கு! நாளை உங்களுக்குப் பிடித்த அப்பத்துக்குப் போட்டிருக்கேன்! என்று அவனையும் உபசரித்து..... மருமகள் மிளகாய்த்தூள் கேட்டாள். சின்னவனுக்கு ஊர்க்கோப்பித் தூள் வேண்டுமாம். பேரன் பேத்தி வருவார்கள், அவர்களுக்கு இனிப்பு, பலகாரம் என்று மூச்சுவிட நேரமின்றி அவள் வேலைகளில் மூழ்கியிருப்பதை கல்யாணமாகி இத்தனை வருடத்தில் இப்போதுதான் உற்று நோக்கினான். காலை, மதிய, இரவு உணவு... அவைகளுக்கான ஆயத்தங்கள், இடையிடையே வரும் நண்பர்கள், அவர்கள் குடும்பத்தினரை வரவேற்று உபசரிப்பதற்கான ஏற்பாடுகள்... அப்பப்பா ஒரு பெண் ஓய்வொழிச்சல் இன்றி இத்தனை வேலைகளை…..! அவள் கணவனைக்கூட உணரவிடாது..! எப்படிச் செய்கிறாள்...!! இத்தனைநாள் அவன் இதனைக் காணாது தடுத்தது எது.? அவன் ஆண் என்ற அகம்பாவத்தை அவனுக்கு ஊட்டிப் பெண் என்றால் பூட்டி வளர்த்த சமுதாயமா..? இல்லை! இது மாறவேண்டும்! மாற்றபட வேண்டும்! என்ற வேகம் அவனுள் எழுந்தது.!!  

 

உண்மை அவனை உலுப்பியதில் ஆச்சரியம் இல்லை. இரவு பத்து மணிக்கு உறங்கச் சென்று விடிய நாலு மணிக்கு எழுந்து பணிகள் செய்யும் ஒரு பெண்ணுக்குச் சம்பளம் என்று கொடுப்பதானால் ஒரு நாளுக்கு 18 மணித்தியாலப்படி கணக்குப்பார்த்துக் கொடுக்கவேண்டும் என அவன் மனம் சமுதாய சட்டங்களை மாற்ற எண்ணியது. கூடுமானவரை அவள் வேலைகளில் தலையிட்டு உதவ முயன்றான். அதனை அவள் விரும்பவில்லை. பழகிய பண்பாடு ஏற்க விடவில்லை. பண்பாடு தவறென்று பட்டால் அதனை மாற்றுவதில் தவறில்லை. வலிந்து உதவ முன்வந்தான். கணனியில் குந்துவது குறையத் தொடங்கியது, யாழ்களத்தின், காணவில்லை பகுதியில் அவனை உறவுகள் தேடியதைக் கணனிக்கு வந்த நேரங்களில் கண்டான். அவனைப்போல் பலர் தேடப்படுவதும், காணாமலே போவதும் இப்போதெல்லாம் பெரிதாகத் தெரிவதில்லை.

 

 

பணி ஓய்வு இப்போ மனைவியின் துணியையும் துவைக்கிறது. :100_pray: :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனத்தை அப்படியே எழுதிக் கொண்டு வருகின்றிர்கள்....! தொடருங்கள்....!  tw_blush:

Link to comment
Share on other sites

On 28.3.2017 at 1:18 AM, Paanch said:

அவளுக்கு கொஞ்சலைக் கொடுக்கவோ எடுக்கவோ கெஞ்சினாலும் அவனால் முடியாது.!!

தொடர்ந்து கொஞ்சுங்கோ பாக்க ஆவலாயிருக்கிறோம்.:grin:

On 29.3.2017 at 2:05 PM, MEERA said:

எல்லாற்றை வீட்டிலும் இதுதான் போல

சொந்த அனுபவம் போல இருக்கு :grin: - நானும் பல வீட்டில பாத்திருக்கிறேன்.

On 30.3.2017 at 3:55 AM, புங்கையூரன் said:

அடுத்த நாள்....எல்லா பியர் போத்தல்களும்...குப்பைக்குப் போக....ஒரேயொரு வைட் ஹோர்ஸ் மட்டுமே கம்ப்பீரமாக வீற்றிருந்தது!

மனுசி...கணவன் இருவர் முகத்திலும்...புன்னகை.கோலோச்சியது! 

அடபாவி :grin:

Bilderesultat for white horse whiskey

On 31.3.2017 at 2:38 AM, Paanch said:

பிள்ளைகளுடைய கணணியை நோண்டத் தொடங்கினான். நுட்பங்கள் புரியவில்லை. அதனைப் பிள்ளைகள் சொல்லித்தர அவன் பயிலத் தயங்கவில்லை. அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பனை வணங்குபவன் ஆயிற்றே.! கணணியில் ஆர்வம் அதிகமாகவே, அவன் பிறந்தநாளுக்கு புதிய கணனி ஒன்றைப் பிள்ளைகள் வாங்கிப் பரிசளித்தனர். கணனியில் புகுந்து விளையாடிய வேளையில் ஒருதடவை யாழிணையம் கண்ணில் பட்டது. நீங்களும் யாழிணையத்தில் உறுப்பினராக இணையலாம்என்ற அறிவித்தல் அவனையும் உறுப்பினராக்கி உள்ளே நுளைய வழிவிட்டது.

சொந்தக்கதை + சோகக்கதை போலிருக்கே :grin:

On 31.3.2017 at 2:38 AM, Paanch said:

எட்டு மணித்தியால வேலை அதிகம் என்று அவனும் போராட்டத்தில் கலந்து போராடி ஏழரை மணித்தியாலமாகக் குறைத்து வேலைசெய்தவனுக்கு பணி ஒய்வு....!. ஆனால் நாள் முழுதும் ஓய்வின்றி வேலை செய்து மாய்கிறாளே..! அவன் அன்பு மனைவி,…! அவளுக்கு எந்தச் சட்டம் வேலையிலிருந்து விடுதலை வழங்கப்போகிறது…!! உண்மை உள்ளத்தில் உறைக்க அதன் காரம் அவனை உலுப்பியது. உற்று நோக்கியதில் பேருண்மை ஒன்று வெளிப்பட, அவன் இதயத்தில் இரத்தம் வடிந்தது.

 

அழகான விடயம் + வரிகள் - தொடருங்கள் பாஞ்ச்

1 hour ago, Paanch said:

யாழ்களத்தின், காணவில்லை பகுதியில் அவனை உறவுகள் தேடியதைக் கணனிக்கு வந்த நேரங்களில் கண்டான். அவனைப்போல் பலர் தேடப்படுவதும், காணாமலே போவதும் இப்போதெல்லாம் பெரிதாகத் தெரிவதில்லை.

 

 

பணி ஓய்வு இப்போ மனைவியின் துணியையும் துவைக்கிறது. :100_pray: :)

சந்தோசமான முடிவு.

வாழ்க்கையின் அர்த்தம் எல்லாருக்கும் புரிந்து விடுவதில்லை.

புரிந்தவர்கள் சந்தோசமான மாற்றங்களுடன் சந்தோசமான வாழ்வை தொடர்கிறார்கள்.

 

புத்துக்குள்ள இருந்து இன்னொரு பாம்பும் படமெடுத்திருக்குது - அதுவும் அழகான படம்.

வாழ்த்துக்கள் + துணி காயப்போடும் நேரத்தில் இங்கும் எழுதினால் நல்லா இருக்குமே :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

...

 

..அப்பப்பா ஒரு பெண் ஓய்வொழிச்சல் இன்றி இத்தனை வேலைகளை…..! அவள் கணவனைக்கூட உணரவிடாது..! எப்படிச் செய்கிறாள்...!! இத்தனைநாள் அவன் இதனைக் காணாது தடுத்தது எது.? அவன் ஆண் என்ற அகம்பாவத்தை அவனுக்கு ஊட்டிப் பெண் என்றால் பூட்டி வளர்த்த சமுதாயமா..? இல்லை! இது மாறவேண்டும்! மாற்றபட வேண்டும்! என்ற வேகம் அவனுள் எழுந்தது.!!  

 

உண்மை அவனை உலுப்பியதில் ஆச்சரியம் இல்லை. இரவு பத்து மணிக்கு உறங்கச் சென்று விடிய நாலு மணிக்கு எழுந்து பணிகள் செய்யும் ஒரு பெண்ணுக்குச் சம்பளம் என்று கொடுப்பதானால் ஒரு நாளுக்கு 18 மணித்தியாலப்படி கணக்குப்பார்த்துக் கொடுக்கவேண்டும் என அவன் மனம் சமுதாய சட்டங்களை மாற்ற எண்ணியது. கூடுமானவரை அவள் வேலைகளில் தலையிட்டு உதவ முயன்றான்.

...

 

பணி ஓய்வு இப்போ மனைவியின் துணியையும் துவைக்கிறது. :100_pray: :)

 

புத்தருக்கு ஞானம் பிறந்தது போதி மரத்தால்..!  vil-reflechir.gif
'அவருக்கு' ஞானம் பிறந்தது சந்திரோதயத்தால்..!! vil-lettre.gif
லாலி.. லாலி.. சுப லாலி..!!!

 

ஞானம் கண்ட 'அன்னாருக்கு' பொருத்தமான  கீழ்க்கண்ட பாடல் சமர்ப்பிக்கப்படுகிறது..! vil-sourcils.gif

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் சுமையை மிக அழகாக வர்ணித்துள்ளீர்கள்
பாஞ்ச் அண்ணா.
எல்லோரது வீட்டிலும் இதுதான் நிலைமையா?
எனது மனைவி நான் வீட்டு வேலை செய்வதில்லை என்றதால்
அடிக்கடி கூறும் வார்த்தை  " என்னைப் பற்றிக் கொஞ்சமாவது யோசியுங்கள்" என்பதே .
இந்தப் புத்தனுக்கு எந்த மரத்தின் கீழ்   எப்போது ஞானம்  கிடைக்குமோ தைரியவில்லை. :100_pray:

Link to comment
Share on other sites

18 hours ago, suvy said:

நிதர்சனத்தை அப்படியே எழுதிக் கொண்டு வருகின்றிர்கள்....! தொடருங்கள்....!  tw_blush:

:100_pray: :)  இந்தக் குறியீடுகளுக்கு, வணக்கம் விடை பெறுகிறேன்  என்று அர்த்தங்கள் கொண்டதாகவும் எண்ணிப் பதிந்தேன். :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.