Jump to content

ரஜினியின் இலங்கை பயணம் ரத்தானதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்


Recommended Posts

ரஜினியின் இலங்கை பயணம் ரத்தானதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

  •  

இடம்பெயர்ந்த மக்களுக்கென வவுனியா சின்னடம்பனில் லைக்கா நிறுவனத்தினால் புதிதாக அமைக்கபட்டுள்ள வீடுகளைப் பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தரவிருந்த நடிகர் ரஜினிகாந்தின் வருகை ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ரஜினிக்கான போராட்டம்

இதற்கான அழைப்பை ஈழத்துக் கலைஞர்கள் என்ற அமைப்பு விடுத்திருந்தது.

யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த விடுதலைச் சிறுத்தைக் கட்சிகள் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குரல் எழுப்பப்பட்டது.

 

'லட்சக்கணக்கான தமிழ் மக்கள் உங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றோம். வா தலைவா வா!' என்ற வாசகத்துடன் திருமாவளவன், வேல்முருகன் ஆகியோரைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் முன்னதாக யாழ் நகர வீதிகள் எங்கும் ஒட்டப்பட்டிருந்தது.

ரஜினிக்கான போராட்டம்

இதேவேளை, நடிகர் ரஜினிகாந்தின் விஜயம் குறித்து கருத்து வெளியிட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாணத்தில் பொதுமக்களின் காணிகளை ராணுவம் பிடித்து வைத்திருப்பது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் பல இடங்களிலும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்ற ஒரு சூழலில் புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளைக் கையளிப்பதற்காக வருகின்ற நடிகர் ரஜினிகாந்த், இந்திய அரசுடன் தனக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி,இந்திய அரசின் ஊடாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து, இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, வழி செய்வார் எனில், அது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.

 

இடம்பெயர்ந்துள்ள வீடுகளற்ற மக்களுக்கு வெறுமனே 150 வீடுகளைத் திறந்து வைப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் வருகை தருவதாக இருந்தது, அவருக்கு உள்ள அரசியல் செல்வாக்கின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகள் தீர்வதற்கு வழி கிடைக்குமானால் அதுவே சிறப்பானதாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும், நடிகர் ரஜினிகாந்த் போன்ற கலைஞர்கள் வருவதன் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புக்கள் கிட்டும். அதேநேரம் இலங்கைக்கு வருகை தருகின்ற நடிகர் ரஜினிகாந்த் போன்றவர்களை இலங்கைக்கு வரக் கூடாது என்று கூறுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

 

http://www.bbc.com/tamil/sri-lanka-39404738

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் ரஜினி காந்த் வந்துதான் வீட்டுச் சாவிகளைக் கொடுக்க வேண்டுமென வீட்டைக் கட்டிக் கொடுத்தவர்கள் நினைப்பது அவர்களின் உரிமை.  

ஏனென்றால் வீடுகள் அவர்களின் உடைமை.

ஆனால். அவர் வந்தால் இலங்கை இனப்பிரச்சனையைத் தீர்த்துவிட்டுத்தான் போகவேண்டுமென எதிர்பார்ப்பது மடமையிலும் மடமை. 

வீட்டைப் பெறக் காத்திருப்பவர்கள் அதைக் கையளிக்க வருபவரை வரவேற்றுக் கெளரவிக்க வேண்டியது கட்டாயக் கடமை. 

ஆனால்  இடையிலிருந்து கொண்டு  சிலர் ரஜினியின் வருகையைத் தடுத்ததும்>  சிலர் வா தலைவா! வா! என்று அவர் தலையில் கொதி கூழை அல்லது பாலை ஊத்த நினைப்பதும் கொடுமையிலும் கொடுமை.

Link to comment
Share on other sites

நல்லூர் கந்தனை மைத்திரி வழிபட்ட விடயத்தை சுட்டிக்காட்டி நல்லிணக்கம் திரும்புவதாக மனித உரிமை ஆணையர் அறிக்கை வாசித்தாராமே.. அது உண்மையானால் ரஜினி போவதையும் தமது தேவைக்காக பயன்படுத்தவே செய்வார்கள்.

மேலும், ரஜினியின் 2.0 படத்தை தயாரிக்கும் நிறுவனம்தான் வீடுகளையும் கட்டிக் கொடுத்துள்ளது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். :unsure: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு எவ்வளவு போட்டு கும்மினாலும் பரவாயில்லை......
எல்லாம் முடிய இரண்டு கிலோ கூப்பன் மா கொடுத்துவிட்டால் போதும்.
மண்டை உடையும்வரை போட்டு தாக்கியவன் யார் என்பதே மறந்து போகும். 

கோத்தபாய மகிந்த கும்பலின் கொள்ளை பணத்தை முள்ளிவாய்க்காலில் சூறையாடிய 
தங்க நகைகளை வெள்ளை பணமாக ஆக்கிவிட 
உதவிக்கரம் நீட்டியதுதான் இந்த லைக்கா.

Link to comment
Share on other sites

ஆகாஸ் தியாகலிங்கம் என்பவரின் முகநூலில் இருந்து

 

அனைவருக்கும் வணக்கம்
நடிகர் ரஜனிகாந்தின் யாழ்ப்பாண விஜயம் நிறுத்தப்பட்டதை எதிர்த்தும் ஆதரித்தும் பல செயற்பாடுகள் நடந்து வரும் இச்சூழலில் இன்று மாலை நல்லூரில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக திருமாவளவன், வேல்முருகன் ஆகியோருக்கு எதிரான கண்டன ஆர
்ப்பாட்டம் இடம்பெற இருப்பதாகவும் அதற்கு ஈழத்து கலைஞர்கள் - வடமாகாணம் அழைப்பு விடுத்திருப்பதாகவும் பரவலாக ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளுக்கும், வலைத்தள செய்திகளுக்கும் திரைத்துரை கலைஞர்களாகிய எமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அத்தோடு ஒரு சில கலைஞர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல இருப்பதாகவும் அறிந்தோம். அது அவரவர் தனிப்பட்ட விருப்புவெறுப்பாக இருப்பினும் ஒட்டுமொத்த கலைஞர்களையும் பாதிக்கும் விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது நல்லதல்ல எனவும் கருதுகின்றோம். எது எவ்வாறாக இருப்பினும் ஈழத்து கலைஞர்கள் எனும் வார்த்தைக்குள் அடங்கும் கலைஞர்களை கலைத்துறை அடிப்படையில் நோக்குவோமானால் அது வடமாகாணத்தில் உள்ள அனைத்து துறை சார்ந்த கலைஞர்களையும் உள்ளடக்கியதாக கருதப்படும். இருந்தபோதும் பெருமளவு விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் திரைத்துறை கலைஞர்களாகிய எம்மை நோக்கி முன்வைக்கப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு இதனால் மிகவும் மனவருத்தத்திற்கு உள்ளாகின்றோம். அத்தோடு ஒரு சிலரின் விருப்பத்தோடு நடத்தப்படும் இவ்வாறான நிகழ்வுகள் ஆர்ப்பாட்டங்களுக்கு ஒட்டுமொத்த கலைஞர்களையும் குறிக்கும் வகையிலான வார்த்தைப் பிரயோகங்களை பயன் படுத்துவதையோ ஒட்டுமொத்த கலைஞர்களையும் விமர்சிக்கும் விதத்தில் நடந்துகொள்வதையோ இனிவரும் காலத்தில் என்றாலும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
நன்றி
இத்தகவல் உண்மை என கருதும் கலைஞர்கள் இதனை பகிர்ந்தோ மீள் பதிவு செய்தோ எம் உணர்வினை வெளிப்படுத்துங்கள்

Link to comment
Share on other sites

எல்ளோரும் இன்னாட்டு மன்னர்கள் என்று சொன்னவனை உதைக்க வேண்டும்.... ஒருவருடைய விளக்கத்தைக்கூட தெளிவாகக் கேட்க முடியவில்லை.  :shocked:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.