• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

என்ன அண்ண ஆஸ்பத்திரி பக்கம் கந்தசாமியரோ கால்கிலோ கத்தரிக்காயும் கருவாடும் வாங்கிட்டு போக வந்தேன் இந்த குசும்பு தானே வேணாங்கிறது பின்ன ஆஸ்பத்திருக்கு வருவது என்னத்துக்காக இல்லை நீங்கள் ஆஸ்பத்திரி பக்கமே வாரது கிடையாது அதான் கேட்டேன் என்றார் விமலன் ஒன்றும் இல்லை லேசான தலைச்சுற்றாக இருந்தது அதுதான் வந்தன்  என்றார் கந்தசாமியர் .

ஓ அப்படியா உங்களுக்கு பிரசர் வந்திருக்கிறது சுகர், கொலஸ்ரோல் எல்லாம் செக் பண்ணுன நீங்களோ ?? இல்லை அந்த  வருத்தங்கள் எல்லாம் இல்லையடா எனக்கு நீங்கள் சொல்லுவியள் ஆனால் உடம்ப செக் பண்ணுனால் தானே தெரியும்  டகித்தர் வந்த பிறகு நான் கூட்டிக்கொண்டு கதைச்சு விடுறன் நீங்கள் இந்த வாங்கில இருங்கோ என்றுசொல்லி போனார் விமலன்.  விமலன் சொன்ன கதையை கேட்டு கந்தசாமியருக்கு உடம்பில் ஆட்டம் கொடுத்து விட்டது என்ன இவன் சாதாரண தலைச்சுற்றுக்கு வந்தால் ஆயிரம் கோதாரிகளை சொல்லிப்போட்டு போறான் என்று மனதுக்குள் ஏசி திட்டிக்கொண்டே இருந்தார் கந்தர் 

அவன் சொல்லுறதும் சரிதானே இப்ப உள்ள சாப்பாடுகளை தின்னுறதால  உடம்பில வருத்தங்கள் தான் மிச்சம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்  பக்கத்தில்  ஒருவர் வந்து உட்காருகிறார் கந்தரோ இருங்கள் என்று சொல்லி பக்கத்தில் அமர பேச்சுக்கொடுக்கிறார் உங்களுக்கு என்ன எனக்கு சீனி கூடிட்டுது உடம்பில போன‌ மாதம் தான் விரலை களற்றி விட்டார்கள் என்று காலை காட்டினார் பெரு விரல் கழற்றி எடுக்கப்பட்டு இருந்தது . கந்தருக்கு இருக்கிற தலையிடி உடம்பு முழுக்க இடிக்க தொடங்கியது இன்னும் கூடி காயம் ஆறாவிட்டால் முழங்காலுடன் கழட்டி விடுவார்கள் என்று சொல்ல கந்தருக்கு தூக்கி வாரிப்போட்டது என்னங்க இவ்வளவு சாதாரணமா சொல்ல்றீங்க பின்ன என்னங்க நாம் குடும்பத்துக்கும் பிள்ளைகளுக்கும் நாயா பேயா உழைக்கிறம் இந்த உடம்பில என்ன கோதாரி இருக்கிறது என்று எப்பாவாச்சும் பார்க்கிறமா இல்லையே பார்த்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது என்றார் அவர் . இப்ப பாருங்கள் மாதா மாதம் கிளின் என்று சொல்லி ஒரு கொப்பியை தந்து இருக்காங்கள் அதனால மாதா மாதம் வந்து போகிற வேலையா கிடக்கு ம்ம்ம்ம்

  நீங்கள் சொல்வதும் சரிதான் என்று சொன்ன கந்தர் டகித்தன் வந்த பிறகு எல்லாத்தையும் செக் பண்ண வேணும் என்ற நினைப்போடு இருந்தார் கந்தர் 

வைத்தியர் வரவே ஐயா ஒரே தலைச்சுற்றா இருக்கிறது என்னவெண்டு ஒருக்கா பாருங்கள் ஐயா என்றார் சரி ஐயா முதலில் இருங்கள் என்று அவரை சோதித்த போது இது இந்த வெயில்லுக்கு வாரதுதான் என்றார் வைத்தியர் வெயிலுக்குள்ள போறத்தை குறைங்க அப்போது விமலன் அங்கு வரவே ஐயா இவர் நம்மட சொந்த காரர்தான் இவரு ஆஸ்பத்திரி பக்கம் வந்ததே இல்லை ஒருக்கா ஆளை முழுசா செக் பண்ண சொல்லுங்களன் ஓ அப்படியா விமலனின் சிபாரிசு ஐயாவுக்கு கிடைக்க ,ரத்தம் ,சிறுநீர் எல்லாம் சோதிச்ச ,பிறகுதான் சொல்ல முடியும் ,இப்ப பிறசர் கட்டிப்பார்ப்போம் என்று வைத்தியர் கையை தூங்கி காட்டுங்கோ என்ற சொல்ல இவரும் கையை தூக்கி காட்டினார் பின்னர் பிறசர் கட்டிப்பார்த்தார்கள் ,கைப்பிறசர் இல்லை நோர்மல் தான் என்றார் வைத்தியர்  ஓ அப்படியா ஐயா இப்பதான் எனக்கு நிம்மதி எதுக்கும் பிலட்டை செக் பண்ணிப்பார்ப்போம் என்ன சரி என்று சிறிஞ்சில் ரத்தம் எடுத்து கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் அதிலும் அவருக்கும்  ஒன்று இல்லை என்று வைத்தியர் சொன்ன பிறகே அவருக்கு உன்மையான மூச்சு வந்தது 

வருத்தம் இல்லாவிட்டாலும் உனக்கு அது வந்திருக்கு இது வந்திருக்கு என்று சொன்ன விமலை முறைத்து பார்த்தாலும் நமது உடம்பை  இந்த காலத்தில் அடிக்கடி  செக் பண்ண வேண்டும் என்று நினைத்து கொண்டுவந்த வீடு வந்த  கந்தர் தன் மனைவி சுந்தரியை பார்த்து  இனிமேல் சாப்பாட்டுல உப்பு , சீனி , உறைப்பு , எண்ணெய் இதெல்லாம் குறைச்சு போடு சரியா  என்றார் சரி என்று அவரும் சொல்ல வருத்தம் வராமல் செத்து போகவேணும் காலை கழட்டி கையை கழட்டியெல்லாம் வாழ இயலாதுடி நாளைக்கு நம்க்கு பீ அள்ள மூத்திரம் அள்ள ஒருத்தரும் இல்லை  நீயும் வா ஒருக்கா உன்னையும் செக் பண்ண வேணும் என்று சொல்லி கூட்டிக்கொண்டு போகிறார் ஆஸ்பத்திரிக்கு.

எல்லாரும் சுய ஆக்கம் எழுதும் போது நம்ம பங்கிற்கு சும்மா கிறுக்கியது இந்த மெசின் வாழ்க்கையில் தன் உடம்பை கவனிக்காமல் இருப்பவர்களுக்கு நடந்த சில நிகழ்வுகளை சின்ன கதையாக    

  • Like 21

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, முனிவர் ஜீ said:

-------அவன் சொல்லுறதும் சரிதானே இப்ப உள்ள சாப்பாடுகளை தின்னுறதால  உடம்பில வருத்தங்கள் தான் மிச்சம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்  பக்கத்தில்  ஒருவர் வந்து உட்காருகிறார் கந்தரோ இருங்கள் என்று சொல்லி பக்கத்தில் அமர பேச்சுக்கொடுக்கிறார் உங்களுக்கு என்ன எனக்கு சீனி கூடிட்டுது உடம்பில போன‌ மாதம் தான் விரலை களற்றி விட்டார்கள் என்று காலை காட்டினார் பெரு விரல் கழற்றி எடுக்கப்பட்டு இருந்தது . கந்தருக்கு இருக்கிற தலையிடி உடம்பு முழுக்க இடிக்க தொடங்கியது இன்னும் கூடி காயம் ஆறாவிட்டால் முழங்காலுடன் கழட்டி விடுவார்கள் என்று சொல்ல கந்தருக்கு தூக்கி வாரிப்போட்டது என்னங்க இவ்வளவு சாதாரணமா சொல்ல்றீங்க பின்ன என்னங்க நாம் குடும்பத்துக்கும் பிள்ளைகளுக்கும் நாயா பேயா உழைக்கிறம் இந்த உடம்பில என்ன கோதாரி இருக்கிறது என்று எப்பாவாச்சும் பார்க்கிறமா இல்லையே பார்த்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது என்றார் அவர் . இப்ப பாருங்கள் மாதா மாதம் கிளின் என்று சொல்லி ஒரு கொப்பியை தந்து இருக்காங்கள் அதனால மாதா மாதம் வந்து போகிற வேலையா கிடக்கு ம்ம்ம்ம்

-------

ஆறு மாதத்துக்கு ஒருமுறை.... வைத்தியரிடம் சென்று உடலை பரிசோதிக்காத பலர்....
நோய் முற்றி... பல பிரச் சினைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
சிலர் இள வயதில்... இந்த உலகை  விட்டே சென்று விட்டதால், 
அவர்களின் குடும்பம், பிள்ளைகள் சொல்ல முடியாத துன்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
குடும்பத்துக்காக உழைப்பவர்கள்.... தங்கள்  உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தியிருந்தால், 
இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

Share this post

Link to post
Share on other sites

இன்றைய காலத்தில் கண்டிப்பாக பரிசோதனை செய்யவேண்டும் என்பதை கருத்தாக சித்தரித்துள்ளீர்கள். நல்ல செய்தி ... மீண்டும் எழுதுங்கள் முனிவர்....!  tw_blush:

Share this post

Link to post
Share on other sites

முனிவர் தற்போது வெளிநாடுகளில கனபேருக்கு உந்த நோய்தான். எழுதத் தெரியாதவர் மாதிரி நடிக்காமல் ஒழுங்கா எழுத்துப் பிழைகளைக் கவனித்துத் திருத்தி பதிவு போடுங்கோ இனிமேல் போடேக்குள்ள.

Share this post

Link to post
Share on other sites

நிகழ்காலத்தின் கதை. tw_thumbsup:

5 hours ago, முனிவர் ஜீ said:

இப்ப பிறசர் கட்டிப்பார்ப்போம் என்று வைத்தியர் கையை தூங்கி காட்டுங்கோ என்ற சொல்ல இவரும் கையை தூக்கி காட்டினார் பின்னர் பிறசர் கட்டிப்பார்த்தார்கள் ,கைப்பிறசர் இல்லை நோர்மல் தான் என்றார் வைத்தியர்  ஓ அப்படியா ஐயா இப்பதான் எனக்கு நிம்மதி எதுக்கும் பிலட்டை செக் பண்ணிப்பார்ப்போம் என்ன சரி என்று சிறிஞ்சில் ரத்தம் எடுத்து கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் அதிலும் அவருக்கும்  ஒன்று இல்லை என்று வைத்தியர் சொன்ன பிறகே அவருக்கு உன்மையான மூச்சு வந்தது 

அண்டைக்கு 2கிலோ ஆட்டுறைச்சி.....ஒரு போத்தில் விசுக்கி....வீடு அமர்க்களம்.:grin:

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

முனிவர்..உங்கள் பதிவு....பலரை ஆஸ்பத்திரியை நோக்கி...நகர்த்துமென்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை!

எல்லோரும் தங்கள் வாழ்வு சாசுவதமானது..நிரந்தரமானது...என்ற சிந்தனையில் தான் வாழ்வை நகர்த்துகின்றார்கள்!

என்னையும் கொஞ்சம் பயப்பிடித்திப் போட்டீங்கள்!

அது சரி....கடைசியா நீங்கள் எப்ப செக்கப் செய்தீர்கள்?:rolleyes:

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, தமிழ் சிறி said:

ஆறு மாதத்துக்கு ஒருமுறை.... வைத்தியரிடம் சென்று உடலை பரிசோதிக்காத பலர்....
நோய் முற்றி... பல பிரச் சினைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
சிலர் இள வயதில்... இந்த உலகை  விட்டே சென்று விட்டதால், 
அவர்களின் குடும்பம், பிள்ளைகள் சொல்ல முடியாத துன்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
குடும்பத்துக்காக உழைப்பவர்கள்.... தங்கள்  உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தியிருந்தால், 
இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

ம் உன்மைதான் நன்றி  உங்கள் கருத்துக்கு தமிழ் சிறி அண்ணை 

16 hours ago, suvy said:

இன்றைய காலத்தில் கண்டிப்பாக பரிசோதனை செய்யவேண்டும் என்பதை கருத்தாக சித்தரித்துள்ளீர்கள். நல்ல செய்தி ... மீண்டும் எழுதுங்கள் முனிவர்....!  tw_blush:

நன்றி சுவி அண்ணை சும்மா ஒரு கிறுக்கல் தான் ஆனால் அது உன்மையுக் கூட

16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முனிவர் தற்போது வெளிநாடுகளில கனபேருக்கு உந்த நோய்தான். எழுதத் தெரியாதவர் மாதிரி நடிக்காமல் ஒழுங்கா எழுத்துப் பிழைகளைக் கவனித்துத் திருத்தி பதிவு போடுங்கோ இனிமேல் போடேக்குள்ள.

பத்து நிமிட சிந்தனையில் உதித்தது அக்கா அதுதான் சில பிழைகள் வந்து இருக்கலாம் நீங்கள் சுட்டிக்காட்டுமிடத்தே எனது பிழைகளை திருத்தி  கொள்ள முடியும்  நன்றி அக்கா

12 hours ago, குமாரசாமி said:

நிகழ்காலத்தின் கதை. tw_thumbsup:

அண்டைக்கு 2கிலோ ஆட்டுறைச்சி.....ஒரு போத்தில் விசுக்கி....வீடு அமர்க்களம்.:grin:

நல்லது கு. சாமியார்  அடிக்கடி உடல் ந்லம் பேண செக் பண்ணுங்கோ

10 hours ago, புங்கையூரன் said:

முனிவர்..உங்கள் பதிவு....பலரை ஆஸ்பத்திரியை நோக்கி...நகர்த்துமென்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை!

எல்லோரும் தங்கள் வாழ்வு சாசுவதமானது..நிரந்தரமானது...என்ற சிந்தனையில் தான் வாழ்வை நகர்த்துகின்றார்கள்!

என்னையும் கொஞ்சம் பயப்பிடித்திப் போட்டீங்கள்!

அது சரி....கடைசியா நீங்கள் எப்ப செக்கப் செய்தீர்கள்?:rolleyes:

நன்றி புக்கையூரான்  என்ன நீங்களும்  பயந்தீட்டிங்களா ??

நான் செக் பண்ணியதில்லை காரணம் மாலை 5 மணியிலிருந்து உதைபந்தாட்டம் அதனால் எந்த வைத்தியருட்ட போனாலும்  உனக்கு ஒன்றுமே இல்லையென்று திருப்பி விடுகிறார் .

அண்மையில் எனது பெரியப்பாவுக்கு நடந்த சம்பவம் இது அவரின் பெருவிரலை எடுத்து விட்டார்கள்  அவரை நினைத்த சிந்தனையில் உதித்த சிறு கதை இது  

Share this post

Link to post
Share on other sites

முனி இப்படியான சின்னச் சின்னச் சம்பவங்கள்தானே கதைகள் ஆகின்றன. ஒரு முன்னெச்சரிக்கைக் கதை நன்றாக இருக்கிறது. அடுத்தசம்பவம் அதான்பா கதை எப்ப எழுதுறது? நாங்கள் எதுக்கு இருக்கோம் இப்ப நீங்கள் எழுதுவதையெல்லாம் வாசித்து ட்ரங்குக்குள் போட்டு வைப்போம் சமயம் வரும்போது எடுத்து கலாய்க்க வேண்டாமா?:cool:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

முனிவர்
ஊரில் இருக்கும் போது காலில் முள்ளு குத்தாத ஆட்களே குறைவு.

அதே மாதிரி வெளிநாடுகளிலும் சுகர் பிரசர் கொலஸ்ரரோல் என்று இல்லாதவர்களே குறைவு.சிலருக்கு இவை மூன்றும் இருக்கும்.

எனவே தான் இது ஒரு கிறுக்கல் இல்லாமல் அறிவித்தலாக உணர்கிறேன்.பச்சை நாளை.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

ம்ம்ம்

முனிவரும்  கதை  சொல்ல வெளிக்கிட்டாச்சு

எனக்கு எந்த வருத்தமும்;இல்லை

பெரிசாக வயது வந்து வாழ்வதில்ஈடுபாடில்லை

ஆனால் வீட்டில்  சாப்பிடும்கோப்பையில் என்ன என்ன இருக்கு

அது அளவுக்கு மீறகிறதா என 10 கண்கள்பார்த்தபடியே உள்ளன

அது அவர்கள் என் ஆயுள் மீது காட்டும்  பரிசம் என்பதால்

நாங்களும் கொஞ்சம் வளைஞ்சு கொடுத்து போறம்:)

தொடருங்கள்ராசா

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, வல்வை சகாறா said:

முனி இப்படியான சின்னச் சின்னச் சம்பவங்கள்தானே கதைகள் ஆகின்றன. ஒரு முன்னெச்சரிக்கைக் கதை நன்றாக இருக்கிறது. அடுத்தசம்பவம் அதான்பா கதை எப்ப எழுதுறது? நாங்கள் எதுக்கு இருக்கோம் இப்ப நீங்கள் எழுதுவதையெல்லாம் வாசித்து ட்ரங்குக்குள் போட்டு வைப்போம் சமயம் வரும்போது எடுத்து கலாய்க்க வேண்டாமா?:cool:

பார்ரா ட்ரங்கு பெட்டிக்குள்ள போட்டு வைத்து கலாய்க்க போறியளோ   நல்லது  மிக்க நன்றி  அக்காtw_blush:

17 hours ago, ஈழப்பிரியன் said:

முனிவர்
ஊரில் இருக்கும் போது காலில் முள்ளு குத்தாத ஆட்களே குறைவு.

அதே மாதிரி வெளிநாடுகளிலும் சுகர் பிரசர் கொலஸ்ரரோல் என்று இல்லாதவர்களே குறைவு.சிலருக்கு இவை மூன்றும் இருக்கும்.

எனவே தான் இது ஒரு கிறுக்கல் இல்லாமல் அறிவித்தலாக உணர்கிறேன்.பச்சை நாளை.

நன்றி ஈழப்பிரியன் அண்ணை வரவுக்கும் கருத்துக்கும் பச்சைக்கும் 

17 hours ago, விசுகு said:

ம்ம்ம்

முனிவரும்  கதை  சொல்ல வெளிக்கிட்டாச்சு

எனக்கு எந்த வருத்தமும்;இல்லை

பெரிசாக வயது வந்து வாழ்வதில்ஈடுபாடில்லை

ஆனால் வீட்டில்  சாப்பிடும்கோப்பையில் என்ன என்ன இருக்கு

அது அளவுக்கு மீறகிறதா என 10 கண்கள்பார்த்தபடியே உள்ளன

அது அவர்கள் என் ஆயுள் மீது காட்டும்  பரிசம் என்பதால்

நாங்களும் கொஞ்சம் வளைஞ்சு கொடுத்து போறம்:)

தொடருங்கள்ராசா

நன்றி அண்ணை உங்கள் கருத்துக்கு  சில சில சம்பவங்கள் மனதுக்கு பட்டால் அதை கதையாக எழுதுவது  உங்கள் மீது அவர்கள் வைத்துள்ள பாசம் அது  அதற்கு நீங்கள் வளைந்து கொடுத்தால் தான் நிமிர்ந்து வாழலாம் நோய் நொடி இல்லாமல் 

Share this post

Link to post
Share on other sites
On 27/03/2017 at 4:15 AM, முனிவர் ஜீ said:

எல்லாரும் சுய ஆக்கம் எழுதும் போது நம்ம பங்கிற்கு சும்மா கிறுக்கியது இந்த மெசின் வாழ்க்கையில் தன் உடம்பை கவனிக்காமல் இருப்பவர்களுக்கு நடந்த சில நிகழ்வுகளை சின்ன கதையாக    

எனக்கு போட்டியா கிறுக்க வெளிக்கிட்டியள் போல .....வாழ்த்துக்கள் தொடர்ந்து கிறுக்குங்கோ

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, சுவைப்பிரியன் said:

முனி சும்மா மற்றவனை பயப்படத்தக் குடாது.:unsure::)

ஹாஹாஹா சும்மா ஆட்களை அலேட்டாக வச்சி இருக்கத்தான் இந்த கதை அண்னைtw_blush:

1 hour ago, putthan said:

எனக்கு போட்டியா கிறுக்க வெளிக்கிட்டியள் போல .....வாழ்த்துக்கள் தொடர்ந்து கிறுக்குங்கோ

நன்றி சிங்கள சாமி (புத்தரே)tw_blush:

Share this post

Link to post
Share on other sites

பல தீன் பண்டங்களை கண்கள் பார்த்து நாக்கு சுவைக்க நினைக்க மனது சொல்லும்மாம்  சுவைத்து விட்டு இரு குழுசைகள் மேலதிகமாக போட்டுக்கொண்டால் சரி என சுவி அண்ணைகாக  ஆனாலும் கண்ணின் மோகத்தையும் நாக்கின் தாகத்தையும் எதை கொண்டும் கட்டி வைக்க இயலாது என்று கூறுகிறேன் tw_blush:

Share this post

Link to post
Share on other sites
Sign in to follow this