Jump to content

காலஅவகாசத்தைக் கடந்துசெல்வது எப்படி?


Recommended Posts

காலஅவகாசத்தைக் கடந்துசெல்வது எப்படி?

00202-67425cf6d916abafece4f93442e4d583a63463c7.jpg

 

ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்­பாக மீண்டும் ஒரு தீர்­மானம் முன்­வைக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.

அமெ­ரிக்கா தலை­மை­யி­லான நாடுகள், 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை முன்­வைத்த தீர்­மா­னங்­களின் நீட்­சி­யாக- 2015ஆம் ஆண்டு இலங்கை அரசின் இணை அனு­ச­ர­ணை­யுடன் ஒரு தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. அந்த தீர்­மா­னத்தின் தொடர்ச்­சி­யா­கவே இப்­போ­தைய தீர்­மானம் முன்­வைக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.

2015இல் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தின் பரிந்­து­ரை­களை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு வலி­யு­றுத்­தியே இந்த தீர்­மானம் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்தப் பரிந்­து­ரை­களை நிறை­வேற்­று­வ­தற்கு, இரண்டு ஆண்­டுகள் கால­அ­வ­காசம் அளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இலங்கை அர­சுக்கு இந்­த­ள­வுக்கு நீண்ட கால­அ­வ­கா­சத்தை அளிக்கும் வகையில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டமை, தமிழ் மக்­க­ளுக்கு ஏமாற்­றத்­தையே அளித்­தி­ருக்­கி­றது.

ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் அணு­கு­மு­றையில் இருந்து பார்த்தால், கால­அ­வ­காசம் அளிக்க வேண்­டி­யது தவிர்க்க முடி­யா­ததே. இலங்கை அரசின் இணக்­கப்­பாட்­டுடன் தான், ஐ.நா மனித உரி­மைகள் பேர­வை­யினால் எதையும் செய்ய முடியும்.

எனவே இலங்கை அர­சாங்கம் எதை­யா­வது செய்ய வேண்­டு­மானால், அதற்கு கால­அ­வ­காசம் கொடுப்­பதை விட வேறு வழி­யில்லை. ஆனாலும், இரண்டு ஆண்­டுகள் கால­அ­வ­காசம் என்­பது மிகை­யா­னது என்­பதும், இந்தக் கால அவ­கா­சத்­துக்குள் இலங்கை அரசு தனது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வதை உறு­திப்­ப­டுத்தும் கட்­ட­மைப்பு ஒன்றை உரு­வாக்க வேண்டும் என்­ப­துமே தமிழர் தரப்பின் பிர­தான எதிர்­பார்ப்பு.

ஜெனீவா தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதைக் கண்­கா­ணிக்கும் ஐ.நா பொறி­முறை ஒன்றை இலங்­கையில் உரு­வாக்க வேண்டும் என்ற கருத்தை, ஐ.நா மனித உரிமை ஆணை­யா­ளரும் தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஆனால், அத்­த­கைய பொறி­முறை எதை யும் உரு­வாக்கும் ஏற்­பா­டு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கா­ம­லேயே, புதிய தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.

இதனால், இந்தக் காலப்­ப­கு­தியில் இலங்கை அர­சாங்கம் தனது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் என்ற நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்திக் கொள்ள முடி­யாத நிலை தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது,

இந்த தீர்­மா­னத்தின் மூலம், இலங்­கைக்கு இரண்டு ஆண்­டுகள் கால­அ­வ­காசம் வழங்­கப்­பட்டு விட்­டது.

பாதிக்­கப்­பட்ட தரப்­பாக உள்ள தமி­ழர்கள், அர­சு­களின் சபை ஒன்றில், அதி­கா­ரத்­துடன் செயற்­பட முடி­யாது என்­பதால், இதனை வெறு­மனே கைகட்டிக் கொண்டு நின்று பார்க்கத் தான் முடிந்­தி­ருக்­கி­றது.

இந்­த­நி­லையில் நீதிக்­கான தேடலில் ஈடு­பட்­டுள்ள தமிழ் மக்கள் விரும்­பியோ விரும்­பா­மலோ, இந்த இரண்டு ஆண்டு கால­அ­வ­கா­சத்தைக் கடந்து செல்ல வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

ஜெனீவா பரிந்­து­ரை­களை நிறை­வேற்­று­வ­தற்­கான கால­அ­வ­கா­ச­மாக இது அளிக்­கப்­பட்­டுள்ள நிலையில், இந்தப் பரிந்­து­ரை­களை இலங்கை அர­சாங்கம் நிறை­வேற்­றுமா- இல்­லையா என்ற கேள்வி தமிழ் மக்­க­ளிடம் இருக்­கி­றது.

ஏனென்றால், இதற்கு முன்னர் மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் ஆகட்டும், மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்கம் ஆகட்டும், மனித உரி­மைகள், மற்றும் பொறுப்­புக்­கூறல் விவ­கா­ரங்­களில் கொடுத்­தி­ருந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை.

இதனால் தமிழ் மக்­க­ளுக்கு இந்தக் கால­அ­வ­காசம் குறித்து நம்­பிக்கை கொள்­ளக்­கூ­டிய சூழல் இல்லை. காலத்தை இழுத்­த­டிக்கும் வகை­யி­லேயே அர­சாங்கம் இந்தக் கால­அ­வ­கா­சத்தைப் பயன்­ப­டுத்திக் கொள்ளும் என்ற சந்­தே­கங்­களின் மத்­தியில் தான் தமிழ் மக்கள் இருக்­கி­றார்கள்.

இவ்­வாறு நம்­பிக்கை கொள்ள முடி­யாத- சந்­தே­கத்­துடன் பார்க்க வேண்­டிய நிலைமை ஏற்­ப­ட­டுள்­ள­மைக்கு அர­சாங்கம் தான் காரணம்.

உதா­ர­ணத்­துக்கு, நல்­லி­ணக்கப் பொறி­மு­றை­க­ளுக்­கான கலந்­தா­லோ­சனைச் செய­ல­ணியின் உறுப்­பி­னர்கள் இணைந்து அண்­மையில் வெளி­யிட்ட ஓர் அறிக்­கை யைக் குறிப்­பி­டலாம்.

இந்தச் செய­லணி நாடெங்கும் அமர்­வு­களை நடத்தி ஆலோ­ச­னை­களை நேரிலும் எழுத்­திலும் பெற்று, ஓர் அறிக்­கையை அர­சாங்­கத்­திடம் கைய­ளித்­தது. அதனை ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் வர­வேற்­ற­துடன், அதன் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறும் அர­சாங்­கத்­திடம் கோரி­யி­ருந்தார்.

ஆனால் இலங்கை அர­சாங்­கமோ அந்த அறிக்­கையை இது­வ­ரையில் கவ­னத்தில் எடுத்துக் கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. இது, கலந்­தா­லோ­சனை செய­ல­ணியின் உறுப்­பி­னர்­க­ளையும் ஏமாற்­ற­ம­டைய வைத்­துள்­ளது.

இதனால் தான், அண்­மையில் வெளி­யிட்ட கூட்டு அறிக்கை ஒன்றில், இதற்கு முந்­திய ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கை­களைப் போலவே, கலந்­தா­லோ­சனைச் செய­ல­ணியின் அறிக்­கையும் கிடப்பில் போடப்­ப­டலாம் என்ற அச்­சத்தை அவர்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள்.

அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட ஒரு செய­ல­ணியின் உறுப்­பி­னர்­க­ளுக்கே இப்­ப­டி­யொரு சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது என்றால் அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை வைக்க முடி­யாத நிலை அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது என்றால், பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரான தமிழ் மக்­க­ளுக்கு அத்­த­கைய சந்­தே­கமோ அவ­நம்­பிக்­கையோ வரு­வது ஒன்றும் ஆச்­ச­ரி­ய­மில்­லையே.

இலங்கை அர­சுக்குக் கால­அ­வ­காசம் கிடைத்து விட்­டது. அதனை எவ்­வாறு பயன்­ப­டுத்திக் கொள்ளப் போகி­றது என்ற கேள்­விக்­கான உறு­தி­யான பதிலை இப்­போது கூற முடி­யாது. அந்தப் பதில் கிடைப்­ப­தற்கு இன்னும் இரண்டு ஆண்­டுகள் ஆகும்.

ஆனால், இந்தக் கால­அ­வ­கா­சத்தை இலங்கை அர­சாங்கம் சரி­யாகப் பயன்­ப­டுத்திக் கொள்­ளுமா- இல்­லையா என்று பாதிக்­கப்­பட்ட தரப்­பா­கிய தமி­ழர்கள் காத்­தி­ருக்க முடி­யாது.

இலங்கை அர­சாங்கம் தமிழ் மக்­க­ளுக்­கான நீதியை வழங்­கு­வ­தற்­கான முயற்­சி­களை எடுத்­தாலும் சரி எடுக்­காது போனா லும் சரி, இந்தக் கால­அ­வ­கா­சத்தைக் கடந்து செல்­வ­தற்கும் அதற்கு அப்­பா­லுள்ள காலத்தை எதிர்­கொள்­வ­தற்கும் தயார்­ப­டுத்­தல்­களைச் செய்­வது முக்­கி­ய­மா­கி­றது.

இலங்கை அர­சுக்கு வழங்­கப்­பட்­டுள்ள கால­அ­வ­காசம் எவ்­வாறு பயன்­ப­டுத்திக் கொள்­ளப்­ப­டு­கி­றது- வாக்­கு­று­திகள் உண்­மை­யாக நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றவா அல்­ லது ஏமாற்றும் முயற்­சிகள் தான் தொடர்­கின்­றவா என்­பதை உன்­னிப்­பாக கண்­கா­ணிப்­பதும் அதனை வெளி­யு­ல­கத்­துக்குப் வெளிப்­ப­டுத்­து­வதும் அவ­சி­ய­மான செயற்­பா­டாக இருக்கும். 

இந்த விட­யத்தை வடக்கு, கிழக்கை உள்­ள­டக்­கி­ய­தாக மட்­டு­மன்றி, முழு இலங்­கைக்­கு­மான ஒரு பொறி­மு­றையை அமைத்து கண்­கா­ணிப்­ப­தற்­கான சூழ்­நிலை உரு­வாக்­கப்­பட்டால் அது பொறுப்­புக்­கூறல் நகர்­வு­க­ளுக்­கான முக்­கிய திருப்­ப­மாக அமை­யலாம்.

ஜெனிவா தீர்­மானம் என்­பது தனியே தமி­ழர்­க­ளுக்­கான நீதியைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கா­னது மட்­டு­மல்ல. பாதிக்­கப்­பட்ட தரப்­பாக தமி­ழர்கள் மாத்­திரம் இருக்­க­வில்லை. சிங்­க­ள­வர்­களும், முஸ்­லிம்­களும் இருக்­கின்­றனர்.

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் பிரச்­சினை, கொலைகள், ஆட்­க­டத்­தல்கள் என்று மனித உரிமை மீறல்கள் பற்­றிய பிரச்­சி­னை­களை அனை­வரும் சந்­தித்­தி­ருக்­கி­றார்கள். ஆகவே ஜெனிவா தீர்­மா­னத்தின் முழு­மை­யான நடை­மு­றைப்­ப­டுத்தல் என்­பது, அனை­வ­ருக்கும் அவ­சி­ய­மா­னது.

அனை­வ­ருக்­கு­மான மனித உரி­மை­க­ளையும், சமத்­துவம், நீதி­யையும் தான் ஜெனிவா தீர்­மானம் வலி­யு­றுத்­து­கி­றது.

அதை­விட, இலங்­கையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு எல்லா இனங்­க­ளுக்கும் இடை­யி­லான புரிந்­து­ணர்வும் அவ­சியம். ஆனால், துர­திஷ்­ட­வ­ச­மாக ஜெனிவா தீர்­மா­னத்தின் பொறுப்­புக்­கூறல் கடப்­பாட்டை நிறை­வேற்­று­வது தமி­ழர்­க­ளுக்கு மாத்­திரம் சாத­க­மா­னது என்றும், சிங்­க­ள­வர்­க­ளுக்கு விரோ­த­மா­னது என்றும் ஒரு மாயை உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த மாயையைக் கடந்து செல்ல வேண்­டிய தேவையும் இருக்­கி­றது. தமி­ழர்­க­ளுக்­கான நியா­யத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு தனியே தமிழர் தரப்பின் குரல்கள் மாத்­திரம் போதாது, நீதியை வழங்கும் மனோ­நிலை சிங்­கள மக்­க­ளுக்கும் ஏற்­பட வேண்டும். அத்­த­கைய நிலையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு வாய்ப்­பா­கவும், இதனைப் பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம்.

ஜெனிவா தீர்­மா­னத்தின் பரிந்­து­ரைகள் எந்­த­ள­வுக்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்­பதை இனத்­துவச் சாய­லுக்கு அப்பால், கண்­கா­ணிக்­கின்ற, அது­பற்­றிய பக்­க­சார்­பற்ற அறிக்­கை­களை சர்­வ­தேச சமூ­கத்­துக்கு சமர்ப்­பிக்­கின்ற ஒரு பொறி­மு­றையை உரு­வாக்­கு­வதில் தமிழர் தரப்பு வெற்றி கண்டால், அடுத்து வரும் காலத்தை சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம்.

இந்த இரண்டு ஆண்­டுகள் ஏமாற்­றமே அளித்தால் கூட, அடுத்த கட்­டத்­துக்கு இந்த விவ­கா­ரத்தைக் கொண்டு செல்­வ­தற்­கான ஒரு தளத்தை, சர்­வ­தேச அரங்கில் திறப்­ப­தற்­கான சூழலை அது ஏற்­ப­டுத்தக் கூடும்.

எடுத்த எடுப்­பி­லேயே இந்த விவ­கா­ரத்தை ஐ.நா பாது­காப்புச் சபைக்கு கொண்டு போய் விட முடி­யாது. ஏனென்றால் பாது­காப்புச் சபைக்கு இந்த விவ­கா­ரத்தை ஏதா­வது ஒரு நாடு தான் கொண்டு செல்ல முடியும். எந்­த­வொரு நாடும் அவ்­வாறு செய்­வ­தற்கு தயா­ராக இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் அளிக்கப்பட்ட காலஅவகாசத்தை ஏமாற்றுவதற்காகவே பயன்படுத்தியிருக்கிறது அரசாங்கம் என்பது, ஒரு பக்கசார்பற்ற – இனத்துவ அல்லது அரசியல் சார்பற்ற பொறிமுறையின் மூலம் நம்பகமான முறையில் உறுதி செய்யப்பட்டால், சர்வதேச சமூகத்தினால் அதனை அவ்வளவு இலகுவாக உதாசீனப்படுத்த முடியாது.

பாதிக்கப்பட்ட தமிழர் தரப்புக்கு நீதியே முதன்மையானது. அதனை அடைவதற்கு வெறுமனே அறிக்கைப் போர் மூலம் அடைந்து விட முடியாது.

இலங்கை அரசாங்கம், பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் விடயத்தில், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விடயத்தில் எந்தளவுக்கு உழைத்திருக்கிறது அல்லது ஏமாற்று வேலையை செய்திருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக ஆவணப்படுத்த வேண்டும்.

அது தான், நீதி தேடும் தமிழர்கள் தமது இறுதி இலக்கை எட்டுவதற்கு தெளிவான ஒரு வழியைக் காட்டும்.

இல்லை, இரண்டு ஆண்டு காலஅவகாசம் முடியும் வரையில், பொறுத்திருந்து விட்டு பொங்கலாம் என்றிருந்தால், மீண்டும் கையைப் பிசைந்து கொண்டு நிற்க வேண்டிய நிலை தான் ஏற்படும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-03-26#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிடைத்திருக்கும் இந்தக் கால அவகாசத்தினுள் எவ்வளவோ சாதகமான விடயங்களைத் தமிழர் அரசியல் நடத்திக் காட்டலாம்.  மனிதவுரிமைகளுக்கு மதிப்பளித்தேயாக வேண்டிய கடப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள இலங்கையரசு  தமிழர்களின் அறப் போராட்டங்களை இரும்புக் கரங்கொண்டு நசுக்க முற்பட  முடியாது.    சர்வதேசம் அல்லது ஐநா> தமிழர்களுக்குச் சொல்லாமற் சொல்லியிருக்கும் செய்தி இது.  தற்போது இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் தமிழீழப் பிரதேசங்களை மீட்டெடுக்கக்கூடிய புரட்சிகர(அறம் சார்ந்த) போராட்ட வடிவங்களைத் திட்டமிட்டு உருவாக்கி  அரசை உலுக்க ஏற்ற சந்தர்ப்பமிது.

திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிராகவும்> வேலை வாய்ப்புகளில் தமிழர் புறக்கணிக்கப்படுவதற்கு எதிராகவும்> அரசியற் கைதிகளின் விடுதலைக்காகவும்> காணாமற் போனோர் தொடர்பாகவும்> மேலும் பல கோரிக்கைகளi முன்வைத்தும் தீவிர தொடர் போராட்டங்களை இந்த இரண்டு வருட காலமும் நடத்த முடியும்.  சிலவற்றில் வெற்றிகாணவும் முடியும்.  அடுத்த இரண்டு வருடத்திற்குள் பொறுப்புக் கூறும் கடமையை ஏற்றுக் கொண்டுள்ள சிங்களப் பெரும்பான்மையரசு  தனது இராணுவக் கெடுபிடிகளைத் தமிழர் மீது திணிக்க முடியாத நெருக்கடிக்குள் கொண்டு வரப்படடுள்ளது.  மீறித் திணிக்க முற்படுமாயின் சர்வதேசத்திற்கு முகம் கொடுப்பது சங்கடமானதாய் விடும். 

ஆகவே  இடங்கொடுத்தால் மடம் பிடுங்குவோமென்ற நிலையில் தமிழர்கள் ஆக்ரோஷமான (அகிம்சை?) அறப்போராட்டங்களைத் தொடங்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.