Jump to content

உதிர்ந்தது இலை


Recommended Posts

உதிர்ந்தது இலை

 

''அ.தி.மு.க.வில் கூட்டணி வைத்துக்கொள்ள யார்  வந்­தாலும் தனது  கட்­சியின் இரட்டை இலை சின்­னத்தில் மட்­டுமே போட்டியிட வேண்டும் என்பது ஜெயலலிதாவினால் வகுக்கப்­பட்ட விதி.  அந்தளவு ஜெயலலிதாவுக்கு இரட்டை இலையில் பற்றும்  விருப்­பமும் இருந்தது. இரட்டை இலையில் ஒன்று எம்.ஜி.ஆர். மற்றொன்று ஜெயலலிதா இன்று இரண்டுமே உதிர்ந்துவிட்டன...''  

 

 

''நான் இறந்த பின்­னாலும் அ.தி.மு.க. என்ற இப்­பே­ரி­யக்கம் இன்னும் 1000 வரு­டங்கள் தாண்­டி­யி­ருக்கும். வெற்றி சின்­ன­மாம் மக்கள் திலகம் கண்ட இரட்டை இலை சின்­னத்­துக்கு வாக்­க­ளித்து வெற்­றி­பெறச் செய்­யுங்கள்'' என்று கடந்த வருடம் சென்னை தீவுத் திடலில் நடை­பெற்ற தனது கடைசி தேர்தல் பிர­சா­ரத்தில் ஜெய­ல­லிதா பேசி­யி­ருந்தார். அந்த தேர்­தலில் அ.தி.மு.க. வர­லாறு காணாத வெற்­றியை பெற்­றது. ஆனால் ஜெய­ல­லிதா இறந்து 3 மாதங்கள் முடியும் முன்­னரே கட்­சியும் சின்­னமும் அதன் கொடியும் முடக்­கப்­பட்­டு­விட்­டன.

அ.தி.மு.க. வில் கூட்­டணி வைத்துக்கொள்ள யார் வந்­தாலும் தனது கட்­சியின் இரட்டை இலை சின்­னத்தில் மட்­டுமே போட்­டி­யிட வேண்டும் என்­பது ஜெய­ல­லி­தா­வினால் வகுக்­கப்­பட்ட விதி. அந்த அளவு ஜெய­ல­லி­தா­வுக்கு இரட்டை இலையில் பற்றும் விருப்­பமும் இருந்­தது. ஜெய­ல­லி­தாவின் கடைசி கால­கட்­டங்­களில் அ.தி.மு.க.வில் கூட்­டணி வைத்த அனைத்து கட்­சி­க­ளுமே இரட்டை இலை­யி­லேயே போட்­டி­யிட்­டன. இதனால் அக்­கட்­சிகள் தேர்தல் காலங்­களில் தமது சுயத்தை இழக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. ஆனால் , வர­லாறு காணாத வெற்­றி­களை அ.தி.மு.க. இரட்டை இலையில் குவித்­தது. ஆனால், எம்.ஜி.ஆரால் தோற்­று­விக்­கப்­பட்டு, தமி­ழ­கத்தின் அசைக்க முடி­யாத பேரி­யக்­க­மாக இன்­ற­ளவும் திகழ்ந்து வரும் அ.தி.மு.க. இரண்­டா­வது முறை­யாக தனது வெற்றிச் சின்­னத்தை தற்போது இழந்து நிற்­கி­றது.

எம்.ஜி.ஆர் என்ற மூன்­றெ­ழுத்து மந்­தி­ரத்தின் முக­வரி இரட்டை இலை. 'வி போ விக்டரி' என்று வெளி­நா­டு­களில் வாழும் தலை­வர்கள் இரு­வி­ரல்­களை காண்­பித்து தங்­களின் மகிழ்ச்­சியை தெரி­விப்­பார்கள். தமிழ்­நாட்­டினை பொறுத்­த­வரை இரட்டை விரல்கள் இரட்டை இலை­யைத்தான் குறிக்கும். எம்.ஜி.ஆருக்கு சாகும் வரை வெற்றி வெற்றி என வெற்­றியின் சின்­ன­மாக இருந்த இரட்டை இலை ஜெய­ல­லி­தாவின் வெற்­றி­ச் சின்­ன­மா­கவும் விருப்பச் சின்­ன­மா­கவும் மாறி­யது. இரட்டை இலையின் வெற்­றியால் தமி­ழ­கத்தின் மிக­பெரும் இயக்­க­மான தி.மு.க.வே தனது எதிர்க்­கட்சி அந்­தஸ்தை சில காலம் இழக்க நேரிட்­டது.

இவ் இரட்டை இலையின் உரு­வாக்­கத்தைப் பார்த்தால் தி.மு.க.விலி­ருந்து 1972- ஆம் ஆண்டு எம்.­ஜி.ஆர். வெளி­யேற்­றப்­பட்ட பின்னர், கட்சி தொடங்­கிய ஒரு­வ­ருட காலத்­திற்­குள்­ளா­கவே திண்­டுக்கல் தொகு­தியில் பாரா­ளு­மன்ற இடைத்­தேர்தல் வந்­தது. திரா­விட முன்­னேற்ற கழ­கத்­தி­லி­ருந்து பிரிந்­து­வந்த எம்.ஜி.ஆருக்கு தன்­னு­டைய வலி­மை­யையும், மக்கள் செல்­வாக்­கி­னையும் காட்­டி­யாக வேண்­டிய காலகட்டம் அது. அ.தி.­மு.க. என்ற குழந்தை முதலில் சந்­திக்கப்போகும் தேர்தல் என்­பதால் ஊட­கங்­களும், மக்­களும், அர­சியல் தலை­வர்­களும் மிகுந்த எதிர்­பார்ப்­போடு இருந்­தார்கள். இதன்­போது எம்.ஜி.ஆர். மாயாண்டித் தேவர் (மாயத்­தேவர்) என்ற வழக்­க­றி­ஞரை வேட்­பா­ள­ராக தேர்வு செய்தார்.

அ.தி.­மு.க.வின் முதல் வேட்­பா­ளரான மாயத்­தேவர் தேர்­த­லுக்கு சின்­னங்­களை தேர்ந்­தெ­டுக்க வேண்டி வந்­தது. டிஜிட்டல் பதாகைகளோ, தொலைக்­காட்­சி­களோ, சுவரொட்டிகளோ புழக்கம் இல்­லாத அக் காலத்தில் மக்­க­ளிடம் எளி­தாக அறி­மு­க­மாக வேண்டும் என்ற அடிப்­ப­டை­யிலும் சுவரில் எழு­தும்­போது மிக எளி­மை­யா­கவும் இருக்க வேண்டும் என்ற நோக்­கத்­திலும் உரு­வாக்­கப்­பட்ட சின்­னமே இரட்டை இலை சின்­ன­மாகும். முதன் முத­லாக 1973 -ஆம் ஆண்டு நடை­பெற்ற திண்­டுக்கல் இடைத்­தேர்­த­லில்தான் இரட்டை இலை சின்னம் தமி­ழக மக்­க­ளுக்கு அறி­மு­க­மா­னது.

அப்­போது அ.தி­.மு­.க.வின் வேட்­பா­ள­ராக அறி­யப்­பட்ட திண்­டுக்கல் மாயத்­தே­வர்தான் இந்த இரட்டை இலை சின்­னத்தை உரு­வாக்­கி­ய­தற்கு கார­ண­கர்த்தா என்று கூறப்­ப­டு­கி­ற­து­. த­னது கட்­சியின் வேட்­பா­ளரால் உரு­வாக்­கப்­பட்ட இந்த சின்­னத்தை எம்­.ஜி.ஆர். எந்­த­வித கருத்து வேறு­பா­டு­க­ளுக்கும் இட­மின்றி ஏற்றுக் கொண்டார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதே­வேளை எம்.ஜி.ஆரா­லேயே தனியாக இது உரு­வாக்­க­ப்­பட்­டது என்றும் கூறப்­ப­டு­கின்­றது

பிறகு அதுவே அ.தி.­மு.க.வின் வெற்றிச் சின்­ன­மாக... தி.மு­.க.-வின் வெற்­றியை தடுக்கும் சின்­ன­மாக மிகப் பெரும் பலத்­தோடு விளங்­கி­யது.

இரட்டை இலையை சின்­ன­மாக ஏற்றுக்கொள்­கின்ற எவரும் எளி­தாக வெற்­றி­பெற முடியும் என்­கின்ற அள­விற்கு மிகப் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­திய சின்னம் இது.

1987-ஆம் ஆண்டு எம்­.ஜி­.ஆரின் மறை­வுக்குப் பிறகு, அ.தி.­மு.க., ஜானகி, ஜெய­ல­லிதா என்ற அணி­க­ளாகப் பிரிந்து பெரும் பிளவை சந்­தித்­தது.

பின்னர் 1989-ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­தலில் முதன்முத­லாக இரட்டை இலை சின்னம் முடக்­கப்­பட்­டது. இரட்டை இலை முடங்கி, அ.தி­.மு.க. பிள­வுற்ற அந்த சூழலை சரி­யாகப் பயன்­ப­டுத்திக் கொண்டு தி.மு.க. ஆட்­சியைக் கைப்­பற்­றி­யது.

பின்னர் ஜெய­ல­லி­தாவின் தலை­மையை ஏற்று ஒன்­று­பட்ட அ.தி.­மு.க.­வுக்கு மீண்டும் இரட்டை இலை சின்னம் கிடைத்­தது. எம்.ஜி.ஆரால் உரு­வாக்­க­ப் பட்ட அ.தி.மு.க. ஜெய­ல­லி­தா­வினால் காக்கப்பட்டு மிகப்பெரும் இயக்­க­மாக வளர்க்­க­ப்பட்­டது. அதன் சின்­ன­­மான இரட்டை இலை தொடர்ந்து வெற்றி சின்ன­மாக மாறி­யது. அவர் இரட்டை இலை­யி­லேயே வெற்­றி­பெற்று 6 வரு­டங்கள் முதல்­வ­ரா­னார். அவர் இறுதிக் ­கா­லத்தில் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­த­போது கூட நடை­பெற்ற 3 தொகு­தி­க­ளுக்­கான தேர்­தலில் 3 தொகு­தி­க­ளிலும் அ.தி.­மு.­க.வே வெற்­றி­பெற்­றது. இரட்டை இலை அ.தி.­மு.க. என்­பது ஜெய­ல­லி­தாவின் மறை­வுக்கு பின்னரும் பல்­லாண்டு காலம் வாழும் என்­பது ஜெய­ல­லி­தாவின் கடைசி கால உரை­களில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அவர் இறந்த சில மாதங்­க­ளி­லேயே அ.தி.­மு.க. என்ற கட்­சியே முடங்­கி­ப்போ­யுள்­ளது.

எம்.ஜி.ஆரினால் உரு­வாக்­க­ப­்பட்டாலும் அ.தி.­மு.க. வின் இரட்டை இலை சின்னம் முடக்­கப்­பட்­ட­போது அதனை போராடி மீட்­ட­பெ­ருமை ஜெய­ல­லி­தா­வையே சேரும். ஆனால் அவர் மறைந்த பின்னர் இப்­போது 28 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர், அ.தி.­மு.க. சசி­க­லா-­ – ஓ­.பி.எஸ். என்ற இரு­வேறு அணி­க­ளாக பிள­வு­பட்­ட­மையால் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்­கத்­துக்கு ஆளா­கி­யுள்­ளது.

ஜெய­ல­லி­தாவின் மரணம் எதிர்­பா­ராத ஒன்­றாக இருப்­பினும் தமி­ழக அர­சி­யலைப் பொறுத்தவரையில் அது மிகப் பெரிய வெற்­றி­டத்­தை உரு­வாக்­கிச்­ சென்­றுள்­ளது. ஜெய­ல­லி­தாவின் தலை­மைத்­துவம் மிகவும் ஆளுமை மிக்­கது. எந்த ஒரு பக்கபலமும் இன்றி பல்­வேறு அவ­மா­னங்­களை சந்­தித்த போதிலும் ஒரு பெண்­ணாக கரு­ணா­நிதி என்ற பெரும் அர­சியல் சாணக்­கி­யரை எதிர்த்து நின்று வெற்­றி­பெற்ற வர­லாற்று சிறப்பு மிக்­கவர். அவ­ரது வெற்­றிடம் என்றும் நிரப்­ப ­மு­டி­யாதது. ஆனால் அவ­ருக்கு பின்­ன­ரான ஒரு அர­சியல் வாரிசை அவர் இனம் காட்ட தவ­றி­விட்டார். அவர் உயி­ருடன் இருக்கும் போது நிமிர்ந்து கூட நிற்­காத அமைச்­சர்கள் தற்­போது கட்சி இரண்­டாக பிளவுபட்­ட­ பின்னர் அவ­ரையே வசை­பா­டு­கின்­றனர். அவர் கண் அசை­வுக்கு பயந்து பணி­வுடன் நின்­ற­வர்கள் ஜெய­ல­லிதா என்ன செய்தார் என்று கேள்வி கேட்­கின்­றனர். அவரால் அடை­யாளம் காணப்­பட்ட ஒருவர் பன்னீர்செல்வம் என்­பது உண்­மையே. ஆனால் இறுதி கால­கட்டத்தில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் தனது முதல்வர் பதவி பறிபோகும் வரை அவரே சில காலம் மௌன­மா­கத்தான் இருந்தார்.

சசி­க­லா­வையும் அவ­ரது குடும்­பத்­தா­ரையும் ஜெய­ல­லிதா துரோ­கிகள் என கூறி கட்­சி­யி­லி­ருந்து விலக்­கி­யி­ருந்த நிலையில் தனது பணி­வி­டைக்­காக சசி­க­லாவை தன்­னுடன் இருக்க சம்­ம­தித்தார். ஆனால் சசிகலாவின் உற­வி­னர்கள் யாரையும் ஜெயலலிதா உயி­ருடன் இருக்கும் வரை கட்­சியில் இணைக்­க­வில்லை. ஆனால் ஜெய­ல­லிதா மறைந்த பின்னர் சசி­கலா குடும்­பத்­தினர் அனை­வரும் கட்­சிக்குள் இணைக்­கப்­பட்­டு­விட்­டனர். கடை­சி­வரை ஜெய­ல­லி­தா­வினால் துரோ­கி­யென கூறப்­பட்ட தின­க­ரனே அக்­கட்­சியின் துணைப் ­பொ­துச் ­செ­ய­லா­ள­ரா­கவும் மாறி­விட்டார். தற்­போது சசி­கலா சிறையில் தள்­ளப்­பட்­டுள்ள நிலையில் முதல்வர் கன­வோடு ஆர்.கே. நகரில் தின­கரன் கள­மி­றங்­கி­விட்டார்.

இதே­வேளை ஜெய­ல­லிதா இருந்த போது எங்­கி­ருந்தார் என்று தெரி­யாத அவ­ரது அண்ணன் மகள் தீபா நான் தான் அ.தி.­மு.க., நான் தான் ஜெய­ல­லி­தாவின் அர­சியல் வாரிசு என கூறி அவரும் அ.தி­.மு.­க.வில் ஒரு பிளவை ஏற்­ப­டுத்தி முதல்­வ­ராவேன் என்ற சப­தத்­தோடு ஆர்.கே. நகரில் போட்­டி­யி­டு­கிறார்.

ஜெய­ல­லி­தாவின் மர­ணத்தின் மர்மம் அனை­வ­ருக்குமே அதிர்ச்­சி­ய­ளிப்­ப­துதான். அவர் மருத்­து­ம­னையில் இருந்­த­போது சந்­திக்க யாருமே அனு­ம­திக்­கப்­ப­டாத நிலையில் அவ­ரது இரத்த உற­வான தீபாவை கூட அனு­ம­திக்­க­வில்லை என்­பது பொது மக்­க­ளுக்கு அவர் மீது ஒரு அனு­தா­பத்தை ஏற்­ப­டுத்­தி­யது என்­பது உண்­மையே. அதன்­போது சசி­க­லாவின் தலை­மையை விரும்­பா­­தவர்கள் ஜெய­­லலிதா போன்ற தோற்­ற­மு­டைய தீபாவை ஏற்­றுக்­கொள்ள முனைந்­தனர். இதனை சாத­க­மாக்கி தீபாவும் அ.தி.­மு.க.வில் ஒரு பிள­வு ஏற்படக் கார­ண­மா­கி­விட்டார். இதே­போல எம்.ஜி.ஆரின் உற­வினர் ஒரு­வரும் அ.தி.­மு­.க.வில் ஒரு பிரிவை தான்தான் அ.தி.­மு.க. என்று கூறு­கிறார். இப்­போது 4 துண்­டு­க­ளாக அ.தி.­மு.க. சிதறிக் கிடக்­கின்­றது. ஜெய­ல­லிதா அடுத்த கட்சிக்கார­ரையும் கூட்டணிக்காக வரும்போது தனது கட்­சி சின்னத்தில் போட்­டி­யிட வேண்டும் என நிபந்­தனை விதித்த போது வாசன் போன்றோர் கடை­சி­வரை கூட்­ட­ணிக்­காக காத்து அவ­மா­னப்­பட்­டனர் என்­பது வர­லாறு. ஆனால் இன்று ஜெய­ல­லி­தாவின் சொந்த தொகு­தி­யாக ஆர்.கே. நகரில் அ.தி.­மு.க. என்ற கட்­சியே இல்லை.

1973- ஆம் ஆண்டு நடை­பெற்ற திண்­டுக்கல் இடைத்­தேர்­தலில் அறி­மு­க­மாகி தனது வெற்றிப் பய­ணத்தை ஆரம்­பித்த இரட்டை இலை இருமுறை எம்.ஜி.ஆரையும் 6 முறை ஜெய­ல­லி­தா­வையும் தமிழக முதல்வராக்கியது. தற்போது 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனது சுயத்தை இழந்துள்ளது. இந்த இலை முடக்கத்துக்கு தமிழகத்தில் தனது காலை ஊன்ற வேண்டும் என்ற பா.ஜ.க.வின் சதியே காரணம் என்ற குற்றச்சாட்டு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளினாலும் சமூக வலைத்தளங்களிலும் முன்வைக்கப்படுகின்றது. இதற்கு ஏற்றால்போல் ஏற்கனவே பா.ஜ.க.வின் தமிழக தலைவி தமிழிசை இரட்டை இலை முடக்கப்படும் என்று ஆருடம் கூறியிருந்தார். இப்போது முடக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார்.

 எது எவ்வாறாயினும் ஜெயலலிதாவின் இறுதிக் காலகட்டங்களில் அவர் மருத்துவமனையில் இருந்த போது நடைபெற்ற விடயங்கள் என்பன இன்னும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகளாகவே உள்ள நிலையில் அவரது இரட்டை இலை சின்னத்தை யார் மீட்பார்கள், எப்படி மீட்பார்கள் என்பது கேள்விக்குறியே ... இரட்டை இலையில் ஒன்று எம்.ஜி.ஆர். மற்றொன்று ஜெயலலிதா. இரண்டுமே உதிர்ந்துவிட்டன... இனி இலை துளிருமா..-?

குமார் சுகுணா

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-03-25#page-5

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.