Jump to content

யார் இந்த காலித் மசூத்? இயக்கியவர்கள் யார்?


Recommended Posts

யார் இந்த காலித் மசூத்? இயக்கியவர்கள் யார்?

 

லண்டன் தாக்குதலில் டுபட்ட நபர் 52 வயதுள்ள காலித் மசூத் என்று அடையாளம் கண்டுள்ள போலீசார், அவரது பெயரில் பல குழப்பங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மசூத் Image captionமசூத்தின் பள்ளிப்பருவ புகைப்படம் கிடைத்த நிலையில், அவரது புகைப்படத்தை போலீஸ் வெளியிட்டுள்ளது.

காலித் மசூத், மூன்று குழந்தைகளின் தந்தை என்று நம்பப்படுகிறது.

குழந்தைப் பருவத்தில் ஆட்ரியன் ரஸல் அஜோ என்ற பெயரில் இருந்ததாகக் கூறும் பெருநகர போலீசார், பல்வேறு மாற்றுப் பெயர்கள் அல்லது அழைக்கப்படும் பெயர்களைக் கொண்டிருப்பதால் பெரும் குழப்பமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1964-ஆம் ஆண்டு, கென்ட் மாகாணத்தில் டார்ட்ஃபோர்டு மாவட்டத்தில் உள்ள பிறப்பு பதிவு மையத்தில், ஆட்ரியன் ரஸல்ஸ் எம்ஸ் என்று பதிவாகியுள்ளது.

எம்ஸ் என்பது அவரது தாயின் ஆரம்பப் பெயர். அவர் பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறு, அஜோ என்ற நபரைத் திருமணம் செய்துகொண்டார்.

இஸ்லாம் மதத்துக்கு மாறி, மசூத் என்று வைத்துக் கொள்ளும் முன்பு, தனது பிற்பகுதி பெயரை அடிக்கடி மாற்றி வந்தார்.

மதம் மாறியது ஏன்?

தாயும், அவரது கணவரும் கென்ட் மாகாணத்தில் டுன்பிரிட்ஜ் வெல்ஸ் பகுதியில் நீண்ட காலம் வாழ்ந்தனர். அங்குதான், அப்போது ஆட்ரியன் என்ற பெயரில் இருந்த மசூத், ஆண்களுக்கான பள்ளியில் படித்து வந்தார். அதன்பிறகு, வேல்ஸ் பகுதிக்கு மாறினார்.

அவர்களது வீட்டில், தீவிரவாதத் தடுப்புப் படையினர் சோதனை நடத்திய போதிலும், அவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் கண்டறியப்படவில்லை.

மசூத்தை முன்னரே தங்களுக்குத் தெரியும் என்றும், உடலில் காயத்தை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற குற்றச் செயல்களுக்காக அவர் அறியப்பட்டவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

அவர், 18 வயதில் இருக்கும்போது, 1983-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கிரிமினல் குற்றம் ஒன்றுக்காக முதல் முறையாக தண்டனை பெற்றார்.

கடந்த 2000-ஆவது ஆண்டில், கிழக்கு எஸெக்ஸ் பகுதியில் மதுவகம் ஒன்றில் ஒரு நபரைக் கத்தியால் தாக்கியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.

பியர்ஸ் மோட் என்பவர் மீது ஆத்திரமடைந்து அவரது முகத்தில் கத்தியால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

கடந்த 2003-ஆம் ஆண்ட சிறையிலிருந்து விடுதலையாகி ஈஸ்ட்போர்னுக்கு குடிபெயர்ந்த பிறகு, மீண்டும் நீதிமன்றப் படியேறினார்.

காயமடைந்தவர்களை சந்தித்தார் இளவரசர் சார்லஸ்படத்தின் காப்புரிமைTRAVIS FRAIN Image captionமருத்துவமனையில் சிகிச்சை பெறும் காயமடைந்தவர்களை சந்தித்தார் இளவரசர் சார்லஸ்

இருபத்தி இரண்டு வயது இளைஞர் ஒருவரைக் கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அவர், கத்தி வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் தண்டிக்கப்பட்டார்.

மொத்தத்தில். மூன்று சிறைகளில் அவர் தண்டனை அனுபவித்தார். 40 வயதாக இருக்கும்போது, கடைசியாக சிறை தண்டனை அனுபவித்தார்.

அதன் பிறகு, மற்ற குற்றவாளிகளைப் போல, அவரும் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டாரா? அல்லது, பல முன்னாள் குற்றவாளிகளைப் போல, மதம் அவருடைய ஆத்திரத்துக்குத் தீனி போட்டுவிட்டதா?

சூழ்நிலைகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, தனது கடைசி சிறை தண்டனைக்குப் பிறகுதான் அவர் இஸ்லாம் மதத்துக்கு மாற முடிவு செய்ததாகக் தெரிகிறது. ஏனெனில், கடைசி விசாரணையில் அவர் முஸ்லிம் பெயரைத் தரவில்லை.

எது தெளிவாகப் புரியவில்லை என்றால், வெஸ்ட்மின்ஸ்டரில் தாக்குதல் நடத்தும் அளவுக்கு அவர் ஏன் மாறினார், எப்படி மாறினார் என்பதுதான்.

கடந்த 2016-ஆம் ஆண்டு, கிழக்கு லண்டனில், மசூத் என்ற பெயரில் வாழ்ந்து வந்தார். அப்போது அவருடன் இருந்த துணைவி உள்ளிட்ட 10 பேர் கைது செயப்பட்டனர். அவரது கடைசி முகவரி பர்மிங்காம்.

இன்னும் கிழக்கு லண்டனில் வாழும் அவரது துணைவியான 39 வயதுப் பெண், வெள்ளிக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வாரத் துவக்கத்தில், பர்மிங்காமில் உள்ள ஒரு வாடகைக்கார் நிறுவனத்தில், ஆசிரியர் என்ற அடையாளத்தைச் சொல்லி, காரை வாடகைக்கு எடுத்தார். ஆனால் அவர் எப்போதும், தகுதி படைத்த ஆசிரியராப் பணியாற்றியதில்லை என்பதை பிபிசி உறுதி செய்துள்ளது.

காரை வாடகைக்கு அமர்த்திய ஒரு மணி நேரத்துக்குள், அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, தனக்கு இனி கார் தேவையில்லை என்று தெரிவித்தார். அடுத்து என்ன நடந்தது என்பது தெளிவாக இல்லை.

`நல்ல விருந்தினர் மசூத்'

ஆனால், தாக்குதலுக்கு முன்னதாக, பிரைட்டன் பகுதியில் உள்ள ஒருஹோட்டலில் அவர் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடந்த இடத்தில் மலரஞ்சலிபடத்தின் காப்புரிமைEPA Image captionதாக்குதல் நடந்த இடத்தில் மலரஞ்சலி

காலித் மசூத் என்ற பெயரில் தங்கிய அவர், கடன் அட்டை மூலம் கட்டணம் செலுத்தியிருப்பதாக ஹோட்டல் மேலாளர் பிபிசியிடம் தெரிவித்தார். நட்போடும் இன்முகத்தோடும் இருந்த அவர், தான் பர்மிங்காமிலிருந்து வந்திருப்பதாகவும், நண்பர்களைச் சந்திப்பதாகவும் தெரிவித்ததாக மேலாளர் தெரிவித்தார். அவரைப் பற்றி கணினிப் பதிவில் `நல்ல விருந்தினர்' என்று வரவேற்புப் பணியாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த ஹோட்டலில் அவர் பயன்படுத்திய டவல், பாத்திரங்கள் உள்ளிட்ட மற்ற பொருட்களைக் கைப்பற்றிய போலீசார், அவர் அதே நபர்தான் என்பதை உறுதி செய்வதற்கான மரபணு சோதனைகளுக்காக அதைப் பயன்படுத்த இருக்கின்றனர்.

புதன்கிழமையன்று ஹோட்டலைக் காலி செய்துவிட்டு வெளியேறிய அவர், அன்று பிற்பகலில் தனது தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்.

தற்போது நடக்கும் விசாரணை எந்தக் கோணத்தில் நடக்கிறது என்பது தெரியவில்லை.

தாக்குதல் நடந்த இடம்படத்தின் காப்புரிமைPA Image captionபோலீஸ் அதிகாரி பால்மரை கத்தியால் குத்திய மசூத்துக்கும் அதே இடத்தில் சிகிச்சை தரப்பட்டது

ஆனால், சில சாத்தியக் கூறுகளை இங்கே குறிப்பிடலாம்.

  • அவர், பிரதான குற்றவாளியின் கூட்டாளியாகவோ அல்லது நண்பராகவே இருக்கலாம். அந்த பிரதான நபரை போலீசார் ஏதோ ஒரு வகையில் கண்காணிக்கிறார்கள். ஆனால், இப்போதைக்கு இந்த நபருக்கு தீவிரவாத தொடர்பு இல்லை என்ற கோணம்தான் இருக்கிறது.
  • தீவிரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கும் குழுவின் நெருங்கிய வட்டத்தில் அவர் இருக்கலாம். அதனால், விசாரணை நடவடிக்கை, மற்றவர்களை மையப்படுத்தி நடக்கிறது.
  • காவல் துறை நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக, அவர் முன்பு கைது செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்படாமல் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம்.

காலித் மசூத் தொடர்பாக பொதுமக்கள் தங்களிடம் உள்ள தகவல்களை அளிக்குமாறு போலீஸ் கோரிக்கை விடுத்துள்ளது. அவர் தனியாக செயல்பட்டாரா அல்லது யாருடைய உத்தரவின்பேரிலாவது இயங்கினாரா என்பதைக் கண்டறிவதே போலீசாரின் நோக்கமாக உள்ளது.

http://www.bbc.com/tamil/global-39383406

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலித் ஒரு கறுவலாக இருப்பது குறித்து முஸ்லிம்கள் நிம்மதி பெரு மூச்சு விடுகின்றனர்.

ஆனாலும் இவரை சிறையில் மூளைச் சலவை செய்து விட்டார்களோ என்ற ரீதியிலும் விசாரிக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

காலித் ஒரு கறுவலாக இருப்பது குறித்து முஸ்லிம்கள் நிம்மதி பெரு மூச்சு விடுகின்றனர்.

ஆனாலும் இவரை சிறையில் மூளைச் சலவை செய்து விட்டார்களோ என்ற ரீதியிலும் விசாரிக்கின்றனர்.

எங்களிட்டையும் ஒண்டு இருக்குது..!

தென்னையில தேள் கொட்டினால்...பனையில 'நெறி' கட்டிற மாதிரி..!

ONE Nation leader Pauline Hanson has attempted to capitalise on the London terror attack by starting a social media campaign pushing her Muslim ban agenda in its wake.

Ms Hanson weighed in on the horrific attack that has left five people dead and about 40 injured, with a video shared online.

Noting the wave of support for Londoners that has sprung up on social media, including the hashtags #PrayForLondon and #WeAreNotAfraid, the controversial Senator said she had another hash tag she was keen to get trending: #Pray4MuslimBan.

“I have my own hashtag, and you won’t need to be praying for this place or that place. It’s pray for a Muslim ban,” she said, holding up a scrap of paper with the hashtag scrawled in blue biro.

“That is how you solve the problem. Put a ban on it and then let’s deal with the issues here.”

Pauline Hanson introduced her own post-London attack hash tag: #Pray4MuslimBan. Picture: Twitter/Pauline Hanson

Pauline Hanson introduced her own post-London attack hash tag: #Pray4MuslimBan. Picture: Twitter/Pauline HansonSource:Twitter

Ms Hanson cited an outdated death toll and referred to aged comments from London Mayor Sadiq Khan, which Donald Trump’s eldest son had already been pilloried for taking out of context.

“It’s amazing that the Muslim mayor over there has come out and said terrorist attacks are part and parcel of a big city,” she said, quoting an interview with Mr Sadiq in which he communicated how seriously he took the threat of a likely attack in London.

“Well they’re not, they don’t have to be. They never have been in the past and that’s something I never want to hear or see in the past from any mayor in any city.”

The comments were made more than six months ago.

 

The identity of the London attacker and his motives are yet to be detailed by police, who continue to investigate the incident.

Ms Hanson seemed to suggest the way to protect Australians from terrorism was through a “Muslim ban”, and urged her fellow parliamentarians to consider her policy.

“I wish the members of this parliament would actually get behind me, look at the issues of this realistically,” she said.

“Debate the issue and make sure that we do not have this, you know, this religion which is really an ideology that is going to eventually cause so much havoc on our streets, not only for ourselves but for future generations.”

One Nation’s policy on Islam says the party will call for an inquiry or Royal Commission to “determine if Islam is a religion or political ideology” and “stop further Muslim immigration and the intake of Muslim refugees until we can assure the safety of Australians”.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.