Jump to content

தமிழரது ஆதியிசையான பறை குறித்த காணொளி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யூரூப்- தளத்திலிருந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணச் சடங்கில்தான் அதிகமாய் பறை அடிப்பதைப் பார்த்திருக்கின்றேன்..... ஆனால் இது அபாரமாய் இருக்கின்றது. அழகாக ஆடி அசத்துகின்றனர்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்து கோவில்களிலும் பறைமேளக்கச்சேரி அந்தமாதிரி நடக்கும்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறை அடிக்கும் ஒலியும்... அதற்கு ஏற்ப அவர்களின் உடலசைவுகளும்... பார்க்க அழகாக உள்ளது.
பறை இசைக்கு... மீண்டும் புத்துயிர் கொடுத்து, அந்த அருமையான இசையை..... அழியவிடாமல் காப்பாற்ற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 30.3.2017 at 5:48 AM, தமிழ் சிறி said:

பறை அடிக்கும் ஒலியும்... அதற்கு ஏற்ப அவர்களின் உடலசைவுகளும்... பார்க்க அழகாக உள்ளது.
பறை இசைக்கு... மீண்டும் புத்துயிர் கொடுத்து, அந்த அருமையான இசையை..... அழியவிடாமல் காப்பாற்ற வேண்டும்.

புலத்திலே கலைவளர்ப்பதாகக் கூறும் எவரும் தமிழரது கலைகள் குறித்து அக்கறைகொள்வதாகத் தெரியவில்லை. எந்த நிகழ்வாயினும் ஒரு பரதநாட்டியத்தோடு  அல்லது அதனாலே யே நிரப்பிவிடுவார்கள். குமுகாய ஆர்வலர்கள் இனமீட்புச் செயலர்கள் இதுகுறத்தும் கவனம் செலுத்தவேண்டாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2017 at 9:18 AM, தமிழ் சிறி said:

பறை அடிக்கும் ஒலியும்... அதற்கு ஏற்ப அவர்களின் உடலசைவுகளும்... பார்க்க அழகாக உள்ளது.
பறை இசைக்கு... மீண்டும் புத்துயிர் கொடுத்து, அந்த அருமையான இசையை..... அழியவிடாமல் காப்பாற்ற வேண்டும்.

கிழக்கில் இல்லை  பறை அதை  மரணச்சடங்கில்  மட்டுமே பார்க்க முடியும்  அவர்கள் ஒரு தனி சமுதாயமாகவே பார்க்கப்படுகிறார்கள் , உடலை எரிப்பதாக இருந்தால் அந்த வீட்டில் பறை ஒலிக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, முனிவர் ஜீ said:

கிழக்கில் இல்லை  பறை அதை  மரணச்சடங்கில்  மட்டுமே பார்க்க முடியும்  அவர்கள் ஒரு தனி சமுதாயமாகவே பார்க்கப்படுகிறார்கள் , உடலை எரிப்பதாக இருந்தால் அந்த வீட்டில் பறை ஒலிக்கும் 

வடக்கிலும் அப்படித்தான் இருந்தது. ஆனால் சிறுதெய்வ வழிபாடென்று அழைக்கப்படும் ஆலயங்களில் பறையிசைக்கப்படுவதைக் கண்ணுற்றுள்ளேன். புளியம்பொக்கனை வற்றாப்பளை வன்னிவிளாங்குளம் போன்ற ஆலயங்களில் காவடி கரகத்தோடு பறையிசையும் இட்பெறுவதுண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nochchi said:

வடக்கிலும் அப்படித்தான் இருந்தது. ஆனால் சிறுதெய்வ வழிபாடென்று அழைக்கப்படும் ஆலயங்களில் பறையிசைக்கப்படுவதைக் கண்ணுற்றுள்ளேன். புளியம்பொக்கனை வற்றாப்பளை வன்னிவிளாங்குளம் போன்ற ஆலயங்களில் காவடி கரகத்தோடு பறையிசையும் இட்பெறுவதுண்டு. 

கிழக்கில் கோவில் விழாக்களுக்கு பறையிசை எடுக்கமாட்டார்கள்  அது ஏன் என எனக்கு தெரியாது இதுவரைக்கும்  கிழக்கில் பறையிசை நிகழ்ச்சி இதுவரை பார்த்ததில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முனிவர் ஜீ said:

கிழக்கில் கோவில் விழாக்களுக்கு பறையிசை எடுக்கமாட்டார்கள்  அது ஏன் என எனக்கு தெரியாது இதுவரைக்கும்  கிழக்கில் பறையிசை நிகழ்ச்சி இதுவரை பார்த்ததில்லை 

இறையியலின் வரவானது தமிழினத்தைப் பலகூறுகளாகப்பிரித்ததோடு  தமிழரது அடிப்படைகளையே தகர்த்து இல்லாமற் செய்துள்ளது. ஆனால் ஈழத்தமிழினத்தின் அழிவானது தமிழகத்தை ஒரு விழிப்புநிலைக்குக் கொண்டுவந்துள்ளது. (ஆனால் அது எப்படிக் கட்சியரசிலுக்கப்பால் எழுச்சிபெறும் என்பதை மதிப்படமுடியாது) இளையதலைமுறை தமது பாரம்பரியங்களையும் பண்பாட்டுவிழுமியங்களையும் மீளநிறுவி தமிழினத்தைத் தலைநிமிரச் செய்யும் கடப்பாட்டை நிறைவேற்றும் கடைமையைக் கையேற்றால் சாத்தியப்படலாம்.

விக்கிப்பீடியாவிலிருந்து இணைப்பைப் பகிர்ந்துள்ளேன் முனிவர்(சார்) ஜீ

https://ta.wikipedia.org/wiki/பறை_(இசைக்கருவி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30.4.2017 at 6:25 PM, முனிவர் ஜீ said:

கிழக்கில் கோவில் விழாக்களுக்கு பறையிசை எடுக்கமாட்டார்கள்  அது ஏன் என எனக்கு தெரியாது இதுவரைக்கும்  கிழக்கில் பறையிசை நிகழ்ச்சி இதுவரை பார்த்ததில்லை 

யாழ். அராலி அம்மன் கோவிலில்... இப்போதும், திருவிழா நேரம் பறை ஒலி இசைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2.5.2017 at 5:20 AM, தமிழ் சிறி said:

யாழ். அராலி அம்மன் கோவிலில்... இப்போதும், திருவிழா நேரம் பறை ஒலி இசைப்பார்கள்.

தகவலுக்கு நன்றி தமிழ்சிறியவர்களே!

இதுபோன்று  தமிழரது ஊர்களில் இன்றும் பறையிசையை பயன்படுத்தும் ஆலங்களின் விபரங்களை இணைத்தால்  அறிந்த உறவுகள் இணைப்பது ஒரு தகவலாக மற்றவரும் அறிந்துகொள்ளலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/29/2017 at 0:25 PM, suvy said:

மரணச் சடங்கில்தான் அதிகமாய் பறை அடிப்பதைப் பார்த்திருக்கின்றேன்..... ஆனால் இது அபாரமாய் இருக்கின்றது. அழகாக ஆடி அசத்துகின்றனர்....! tw_blush:

மரண வீட்டில் அடிக்கும் பறைக்கும்... நல்ல நிகழ்வுகளுக்கு அடிக்கும் பறைக்கும் இடையில் வேறுபாடுண்டு. ஊரில் உள்ளூர் சுவாமிகளுக்கு.. வைரவர்.. முருகன்.. வீரபத்திரர்.. அண்ணமார் எல்லாருக்கும்.. பறை தான் அதிகம் அடிப்பினம். பெரிய கோவில்களில் தான் தவில்.. நாதஸ்வரம். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30.4.2017 at 10:59 AM, nochchi said:

புலத்திலே கலைவளர்ப்பதாகக் கூறும் எவரும் தமிழரது கலைகள் குறித்து அக்கறைகொள்வதாகத் தெரியவில்லை. எந்த நிகழ்வாயினும் ஒரு பரதநாட்டியத்தோடு  அல்லது அதனாலே யே நிரப்பிவிடுவார்கள். குமுகாய ஆர்வலர்கள் இனமீட்புச் செயலர்கள் இதுகுறத்தும் கவனம் செலுத்தவேண்டாமா?

பறைமேள கலையை சாதி எனும் பெயரால் தாழ்த்திவிட்டார்கள். கோவில்களில் அவர்கள் வெளியே நின்றுதான் பறைமேளம் அடிக்கவேண்டும். தவில் நாதஸ்வரங்கள் எல்லா  இடமும் புகுந்து விளையாடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30.5.2017 at 0:18 AM, nedukkalapoovan said:

மரண வீட்டில் அடிக்கும் பறைக்கும்... நல்ல நிகழ்வுகளுக்கு அடிக்கும் பறைக்கும் இடையில் வேறுபாடுண்டு. ஊரில் உள்ளூர் சுவாமிகளுக்கு.. வைரவர்.. முருகன்.. வீரபத்திரர்.. அண்ணமார் எல்லாருக்கும்.. பறை தான் அதிகம் அடிப்பினம். பெரிய கோவில்களில் தான் தவில்.. நாதஸ்வரம். tw_blush:

ஒருவேளை பெரியகோவில்களின் தோற்றம் கூடத் தமிழரது ஆதியான விடயங்களை அழிக்கவித்திட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

On 30.5.2017 at 2:34 AM, குமாரசாமி said:

பறைமேள கலையை சாதி எனும் பெயரால் தாழ்த்திவிட்டார்கள். கோவில்களில் அவர்கள் வெளியே நின்றுதான் பறைமேளம் அடிக்கவேண்டும். தவில் நாதஸ்வரங்கள் எல்லா  இடமும் புகுந்து விளையாடுவார்கள்.

பறைந்தவர்கள் அரசுத்தகவல்களை மேளத்தில் அடித்துக் கூறியவர்களை (பறைந்தவர்களை- பறைதல் பேசுதல்)சாதியாக்கிவிட்டார்கள். எமதினத்தில் இவைகளும் ஒரு சாபக்கேடே.

On 29.3.2017 at 1:25 PM, suvy said:

மரணச் சடங்கில்தான் அதிகமாய் பறை அடிப்பதைப் பார்த்திருக்கின்றேன்..... ஆனால் இது அபாரமாய் இருக்கின்றது. அழகாக ஆடி அசத்துகின்றனர்....! tw_blush:

இந்த அழகியலை வேறுகலைகள் ஆக்கிரமித்து அடக்கி ஒதுக்கிவிட்டன. தாயகமீட்பென்பது நிலமீட்புக்கானதாக எண்ணப்பட்ட சூழலில் எம்பெருந்தலைவன் அனைத்தையும் மீட்கும் கட்டமைப்புகளை ஏற்படுத்தியிருந்தாரென்பதே தமிழரது கலை பண்பாடுகளையும் மீட்பதே முழுமையான விடுதலை என்பதில் கொண்ட உறுதிப்பாடேயாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29.3.2017 at 1:41 PM, குமாரசாமி said:

கிராமத்து கோவில்களிலும் பறைமேளக்கச்சேரி அந்தமாதிரி நடக்கும்.:grin:

நகரமயமாதல் அல்லது நகரத்துக்குள் மக்கள் திரள் நகர்தலென்பதோடு கிராமியக்கலைகளும் மறைதல் அல்லது நகரவாழ்வுக்கள் அமிழ்தலூடாக ஒரு மறைமுக அழிவுக்குள் சென்றுவிடுகிறது.

On 30.3.2017 at 5:48 AM, தமிழ் சிறி said:

பறை அடிக்கும் ஒலியும்... அதற்கு ஏற்ப அவர்களின் உடலசைவுகளும்... பார்க்க அழகாக உள்ளது.
பறை இசைக்கு... மீண்டும் புத்துயிர் கொடுத்து, அந்த அருமையான இசையை..... அழியவிடாமல் காப்பாற்ற வேண்டும்.

உண்மை தமிழ்சிறியவர்களே! ஆனால், இதனை யாரும் செய்ய முன்வருவதாகத்தெரியவில்லை. அதேவேளை வேறுநடனங்களுக்கு ஆர்வமாக அனுமதிக்கும் பெற்றோர் இவற்றை மேடைக்காககப்பழக்குவதற்கே ஒத்துழைப்பதில்லை. கிப்கொப் பாலே பரதநாட்டியம்  போன்றவற்றைப் பழக்குவதற்கு ஆர்வம்காட்டும் பெற்றோர் இவற்றை பெரிதாகவே எடுப்பதில்லை. ஒருவேளை யோகாவைப் போன்று இதனை வெள்ளைகள் யாராவது பழக்கினால் புத்துயிர் பெறக்கூடும். 

இணைப்பகளைப் பகிர்ந்துகொண்ட வல்வை சகாறா மற்றும் Knowthyself ஆகியோருக்கு  நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தேடலுக்கும் இணைப்புக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
    • "காதல் & காமம்" [காதல் ஈவு, இரக்கம் சார்ந்தது. காமம் இச்சை, இம்சை சார்ந்தது.]   காதல் கை கொடுக்கும். காமம் கை விடும். காதல் குறுகுறுப்பு. காமம் கிளுகிளுப்பு. காதல் ஏற்றம் தரும். காமம் ஏமாற்றம் தரும். காதல் வயல்வெளி. காமம் புதைகுழி. காதல் பாசவலை. காமம் நாச வேலை. காதலில் காமம் அடங்கும். காமத்தில் காதல் முடங்கும். காதலில் 'நீயும் நானும்' இருக்கும். காமத்தில் 'நீயா நானா' இருக்கும்   ஆனால் காதல் நிலைக்க காமமும் கூட்டுச் சேரவேண்டும்  ஊடலும் கூடலும் அதற்கு ஒரு உதாரணம் 
    • காக்கா விடம் இருந்து நரி பறித்த  அதே வடையை தான் என்று வேறு சத்தியம் பண்ணியவர் 😃
    • வெள்ளம் வந்த பின்...  @ராசவன்னியன் னின், சிலமன் ஒன்றையும் காணவில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.