நவீனன்

யுத்தத்தில் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு

Recommended Posts

யுத்தத்தில் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு

 

 

 யுத்தத்தில் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு
 

நாட்டில் நிலவிய மூன்று தசாப்தகால யுத்தத்தில் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளதாக தி ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின், புதுடில்லியில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யுத்தம் காரணமாக 50 வீதமான தமிழர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவரை மேற்கோள்காட்டி தி ஐலண்ட் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமையின் கீழ், சர்வதேச மனித உரிமை சட்டங்கள், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை ஆயுதமேந்திப் போராடிய குழு மற்றும் இலங்கை அரசாங்கம் என இருதரப்பினரும் மீறியுள்ளதாக 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

2015 ஆம் ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அமுலாக்கம் தொடர்பில் தற்போது ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் மீளாய்வு செய்யப்படுகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளதாக தி ஐலண்ட் கூறியுள்ளது.

நிலைமாற்று நீதி நடைமுறைகள், காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், தடுத்து வைக்கப்பட்டிருப்போர் மற்றும் இந்த முரண்பாட்டிற்கு நியாயமானதும், ஏற்றுக் கொள்ளத் தக்கதுமான ஓர் அரசியல் தீர்வைக் கொண்டுவரக்கூடிய அரசியலமைப்பு ஏற்பாடுகளை வகுத்தல் போன்ற விடயங்களை இந்தத் தீர்மானம் ஆராய்வதாக புதுடில்லியில் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார் என்றும் தி ஐலண்ட் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://newsfirst.lk/tamil/2017/03/யுத்தத்தில்-150000-இற்கும்-மே/

 

 

Share this post


Link to post
Share on other sites
13 minutes ago, நவீனன் said:

ஏற்றுக் கொள்ளத் தக்கதுமான ஓர் அரசியல் தீர்வைக் கொண்டுவரக்கூடிய அரசியலமைப்பு ஏற்பாடுகளை வகுத்தல் போன்ற விடயங்களை இந்தத் தீர்மானம் ஆராய்வதாக புதுடில்லியில் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்

3050 ...

Share this post


Link to post
Share on other sites
Maruthankerny    1,180
19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

3050 ...

too early !

டில்லியில் போய்  இதை முணு முணுக்கிற தலைவர் 
நாட்டுக்கு வந்ததும் ...........
ஒரு கொளுகொடடையை எடுத்த்து வாய்க்குள் ஒட்டி விடுவார்.
யாரும் வேறு நாட்டில் இருந்து சந்திக்க வந்தாலும் 
வாய்க்குள் இருந்து ஒன்று வராது ! 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
Paanch    1,088

யாரைத்தான் நம்புவதோ தமிழன் நெஞ்சம்....!! :shocked: 

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனையா....? :unsure: 

தி ஐலண்ட் பத்திரிகையையா....?? :rolleyes:

Share this post


Link to post
Share on other sites