Jump to content

’தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது' திடுக் மருத்துவ அறிக்கை!


Recommended Posts

’தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது' திடுக் மருத்துவ அறிக்கை!

நடிகர் தனுஷின் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சைமூலம் அழிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dhanush

மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி, திரைப்பட நடிகர் தனுஷ், தங்களது மூத்த மகன் என்று உரிமைகோரி, மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். 

இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல்செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள், நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க ஆஜராகக் கூறி உத்தரவிட்டிருந்தது. 

Dhanush medical report

இந்த வழக்கு தொடர்பான மருத்துவ அறிக்கை, இன்று உயர்நீதிமன்ற  மதுரைக் கிளையில் சமர்ப்பிக்கப்பட்டது. மருத்துவ அறிக்கையில், தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சைமூலமாக அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மிகப்பெரிய திருப்பமாக மருத்துவ அறிக்கை கருதப்படுகிறது. மேலும், விரிவான விசாரணை வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/84147-doctor-report-reveals-truth-about-dhanush-in-parentage-case.html

Link to comment
Share on other sites

தனுஷ் மீது உரிமை கோரும் வழக்கு: மருத்துவர்கள் அறிக்கையில் புதிய தகவல்

தனுஷ் உடலில் இருந்து சில அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலம் அழிக்கப்பட்டதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
201703202034560489_dhanush-claim-case-Ne
 
மதுரை:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

வழக்கு விசாரணையின் போது கதிரேசன் -மீனாட்சி தரப்பில் சில சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்ட‌ன. இந்த சான்றிதழ்களில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளனவா? என கண்டறிய அவரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மார்ச் 2 ஆம் தேதி தனுஷ் நேரில் ஆஜரானார்.

3C497CEF-28A6-4D5F-B234-D3BCD63B9708_L_s

இந்நிலையில், தனுஷ் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. மதுரை அரசு மருத்துவமனை டீன் முன்னிலையில் 2 மருத்துவர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர். தனுஷ் உடலில் இருந்து சில அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலம் அழிக்கப்பட்டதாக, மருத்துவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து விரிவான விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்தி வைத்தது.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/03/20193617/1074956/dhanush-claim-case-New-Information-in-doctors-report.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா ஆணுடம்பையே வெட்டி எடுத்துட்டாங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் குடியை தன் குடியால் தானாக கெடுத்தால்..
தன் குடி தானே கெடும் ...  :cool:

Link to comment
Share on other sites

17424638_1373050956065079_12896851636196

tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி என் எ என்று இலகுவான சோதனை இருக்கும் போது ஏன் எல்லோரையும் அலைய வைக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

`நடிகர் தனுஷ் உடலில் அங்க அடையாளம் அழிக்கப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் இல்லை'

 
 

நடிகர் தனுஷின் உடலில் உள்ள அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை என்று தனுஷ் தரப்பு வழக்கறிஞர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ்

மேலும், எதிர் தரப்பினர் கூறுவது போல அங்க அடையாளங்கள் தனுஷ் உடலில் இல்லை என்றுதான் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பிபிசி தமிழிடம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்று சொந்தம் கொண்டாடுவதோடு, அவர் தங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டுமென மேலூரைச் சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதியர் தொடுத்திருந்தனர்.

`தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தகவல்'

அந்த வழக்கு தொடர்புடைய விசாரணை திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது.

இந்த விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தரப்பு வழக்கறிஞர் டைட்டஸ், மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சில விவரங்களை வெளியிட்டார்.

நடிகர் தனுஷ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதன்படி, கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் தரப்பிலான ஆதாரங்களில் கூறியுள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் இல்லை என்றும், அந்த அங்க அடையாளங்களை லேசர் சிகிச்சை மூலம் நீக்கியிருப்பது மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் டைட்டஸ் கூறினார்.

இதுகுறித்து, தனுஷ் தரப்பு வழக்கறிஞர் சுவாமிநாதனிடம் கேட்டபோது, அந்த மருத்வ அறிக்கை உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கொடுக்கப்பட்ட அறிக்கை என்று தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத்தின் முதல் கேள்வியில், தனுஷ் மீது எதிர்தரப்பினர் சொல்லும் அங்க அடையாளம் உள்ளனவா என்பதுதான் என்ற சுவாமிநாதன், "எதிர் தரப்பினர் சொல்லும் அங்க அடையாளங்கள் இல்லை என்றுதான் மருத்துவ அறிக்கையில் பதிவாகியுள்ளது. அறிக்கை தெளிவாக சொல்கிறது," என்றார்.

"மருத்துவ அறிக்கை தனுஷுக்குத்தான் சாதகமாக உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. எதிர்தரப்பினர் வேண்டுமென்றே துஷ்பிரசாரம் செய்கின்றனர்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

லேசர் சிகிச்சை மூலம் அடையாளம் அகற்றப்பட்டதாக டைட்டஸ் கூறியது உண்மையா என்ற கேள்விக்கு பதிலளித்த வழக்கறிஞர் சுவாமிநாதன், லேசர் சிகிச்சை மூலம் அடையாளங்களை அழிக்க முடியுமா என்று நீதிமன்றம் பொதுவான கேள்வி எழுப்பியிருக்கிறது. அந்தக் கேள்விக்குத்தான், லேசர் சிகிச்சை மூலம் அழிக்க முடியும் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, தனுஷ் உடலில் இருந்த அடையாளங்களை லேசர் சிகிச்சையில் அழித்திருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை," என்றார் சுவாமிநாதன்.

"உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் அறையில் இந்த விசாரணையை நடத்துகிறார்கள். இந்த நிலையில், மருத்துவ அறிக்கை கையில் கொடுக்கப்பட்டதும், அதை வைத்து அடுத்த விசாரணையில் பேச வேண்டும். மாறாக, வாட்ஸ்-ஆப்பில் அதை வெளியிடுவது தொழில் ரீதியாக தவறு," என்று சுவாமிநாதன் கண்டனம் தெரிவித்தார்.

அடுத்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது,, மருத்துவ அறிக்கை தொடர்பான முடிவை நீதிமன்றம் அறிவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தனுஷின் பெற்றோர் யார் என்பது தொடர்பாக டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் கோரும் நிலையில், அதுபற்றி நீதிமன்றத்தில் தங்கள் நிலைப்பாட்டை எடுத்து வைக்கப் போவதாகவும் தனுஷ் தரப்பு வழக்கறிஞர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

 

தனுஷை சொந்தம் கொண்டாடுகிற மதுரை மேலூரை சேர்ந்த ஆர்.கதிரேசன் மற்றும் கே. மீனாட்சி தம்பதியர், அவர் கல்வி பயின்றதாக கூறுகின்ற மேலூர் அரசு மாணவர் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் வழங்கியதாக கூறுகின்ற பள்ளி மாற்றுச் சான்றிதழை முக்கிய ஆதாரமாக நீதிமன்றத்திடம் வழங்கி இருக்கின்றனர்.

http://www.bbc.com/tamil/india-39350614

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21.3.2017 at 4:38 PM, ஈழப்பிரியன் said:

டி என் எ என்று இலகுவான சோதனை இருக்கும் போது ஏன் எல்லோரையும் அலைய வைக்கிறார்கள்?

அதுதான் இந்தியா :cool:

Link to comment
Share on other sites

“சின்ன வயசு கலைச்செல்வன் முகமும் தனுஷ் முகமும் ஒரே மாதிரி இருக்கு!”

 

‘நடிகர் தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக, நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது’ என வெளியான செய்தியால் தனுஷ் வழக்குச் சூடு பிடித்திருக்கிறது. 

 ‘நடிகர் தனுஷ் எங்கள் மகன்’ என்று மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்துவருகிறது. கடந்த முறை விசாரணைக்கு நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் ஆஜரானபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், ‘‘தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்று கதிரேசன் தரப்பு வழக்கறிஞர் டைட்டஸ் கூறினார். ‘‘அப்படியெல்லாம் இல்லை. கதிரேசன் தரப்பினர் சொன்ன அங்க அடையாளங்கள் தனுஷ் உடலில் இல்லை என்றுதான் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணம் பறிப்பதற்காகத் தவறான தகவலைப் பரப்புகிறார்கள்’’ என்று தனுஷின் வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் இதை மறுத்தார். இதனால் பரபரப்புப் பற்றியது.

p26b.jpg

‘சிறு வயதில் காணாமல்போன எங்களுடைய மகன் கலைச்செல்வன்தான் தனுஷ்’ என்று சொல்லும் கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சொல்வதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்பதை அறிய, அவர்கள் வசித்த ஊர்களில் விசாரணையைத் தொடங்கினோம்.

மேலூரிலிருந்து சிவகங்கைச் செல்லும் வழியில் இருக்கிறது மலம்பட்டி. அங்கு பெட்டிக்கடைக்காரர் ஒருவரிடம், தனுஷ் பற்றி கேட்டோம். “ஆமாங்க. தனுஷ் இந்த ஊரு பையன்தான். சின்ன வயசுல படிக்கப் பிடிக்காம மெட்ராஸ் போயிட்டாப்ல. அந்தக் குடும்பம் ரொம்ப பாவம்ங்க. ‘தனுஷ்தான் எங்கள் மகன் கலைச்செல்வன்னு சொல்லிட்டு மெட்ராஸுக்கு அலையா அலைஞ்சாங்க. நடந்தது நடந்து போச்சு. இப்பாவாச்சும் இவங்கதான் என்னோட அப்பா அம்மான்னு அவர் சொல்லலாம்ல. ரஜினி மகளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால அப்படிச் சொல்றதுக்கு சங்கடப்படுறாப்ல போல’’ என்றார்.

ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே உள்ள ஒரு வீட்டில்தான் கதிரேசன் குடும்பம் நீண்ட காலம் வசித்துள்ளது. அவர்கள் வசித்த வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரனிடம் பேசினோம். “கலைச்செல்வனை எனக்கு நல்லா தெரியும். ஸ்கூல் விட்டு வந்ததும் விளையாட்டு, டான்ஸுன்னு இருப்பான். நான் சின்ன வயசுல பார்த்த கலைச்செல்வன் முகமும், தனுஷோட முகமும் ஒரே மாதிரியா இருக்கு. உண்மை என்னனு கோர்ட்டுதான் சொல்லணும்’’ என்றார்.

2002-ம் ஆண்டு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் ஒன் வகுப்பில் கலைச்செல்வன் சேர்ந்துள்ளார். விடுதியில் தங்கிப் படித்துள்ளார். அப்போதுதான், அவர் காணாமல்போனார் என்று சொல்கிறார்கள். அங்கு வார்டனாகப் பணியாற்றிய சீதாபதியிடம் பேசினோம். “நான் 1989 முதல் 2008 வரை அங்கு பணியாற்றினேன். கலைச்செல்வனின் தந்தை கதிரேசன் என் கிராமத்தைச் சேர்ந்தவர். அந்தப் பழக்கத்தில்தான், கலைச்செல்வனை அங்கு படிக்க வைத்தார். முதலில் அவனுக்கு ஹாஸ்டலில் ரூம் கிடைக்காததால், என் ரூம்ல தங்க வெச்சிருந்தேன். அப்புறம் ரூம் கிடைச்சது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைன்னா வீட்டுக்குப் போயிருவான். அப்படி ஒருநாள் போனவன்தான், எங்கேயோ போயிட்டான். ரொம்ப நாள் தேடி அலைஞ்சோம். அப்புறம், நடிகர் தனுஷ்தான் கலைச்செல்வன்னு சொன்னாங்க, ஆனா எனக்கு அது உறுதியா தெரியலை’’ என்றார்.

p26a.jpg

மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு படித்தார் கலைச்செல்வன். அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் சிலரிடம் பேசினோம். “கலைச்செல்வன் இங்கு படித்ததற்கான ஆவணங்கள் எங்கள் பள்ளியில் உள்ளன. கலைச்செல்வனின் தந்தை இங்கு வந்து சில சான்றிதழ்களின் நகல்களைப் பெற்றுச் சென்றார். அவை தனுஷோடதா என்பது எங்களுக்குத் தெரியாது’’ என்றனர்.

 கலைச்செல்வன் 8-ம் வகுப்புவரை படித்த மேலூர் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் விசாரித்தோம். தற்போதுள்ள தலைமை ஆசிரியர், “சத்தியமாக எங்களுக்கு எதுவும் தெரியாது. இங்குதான் கலைச்செல்வன் படித்தார் எனச் சொல்கிறார்கள். நிறைய பேர் வந்து விசாரிக்கிறார்கள். பழைய ஆவணங்களைத் தேடிப்பார்த்தால்தான் தெரியும்’’ என்றார்.

 தனுஷ் தங்கள் மகன்தான் என்பதற்கு இயக்குநர் கஸ்தூரிராஜா நீதிமன்றத்தில் கொடுத்துள்ள ஆவணங்கள், பல சந்தேகங்களை எழுப்பியுள்ளன. கடந்த 20-ம் தேதி,  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையில் உள்ள விஷயங்களை, இரு தரப்புமே தங்களுக்குச் சாதகமானதாகச் சொல்லிக்கொண்டிருக் கிறார்கள். இதற்கிடையில் தனுஷ் தரப்பிடம் ஒரு கும்பல் டீலிங் பேசுவதாகத் தகவல் வெளியானது.

p26.jpg

பாதுகாப்புக் கருதி திருப்புவனம் அருகே வசித்து வரும் கதிரேசன் குடும்பத்தினரிடம் பேசினோம். “எங்கள் மகன் கலைச்செல்வன்தான் தனுஷ். இதற்கான அத்தனை ஆதாரங்களையும் கொடுத்துள்ளோம். நாயக்கர் சாதியான கஸ்தூரிராஜா, தனுஷ் சர்டிஃபிகேட்டில் எஸ்.சி என்று போட்டுள்ளார். இதன் மூலம் அவர் பொய்யான ஆதாரங்களைக் காட்டுகிறார் என்பது அம்பலமாகியுள்ளது. ரேஷன் கார்டில் வெங்கடேஷ்பிரபு என்கிற தனுஷுக்கு 2005-ல் 29 வயது என்று போட்டுள்ளனர். அப்படியென்றால், தனுஷுக்கு இப்போது 43 வயது ஆகிறது. இது எப்படி சரியா இருக்கும்? இவ்வளவு நாள் சும்மா இருந்துட்டு இப்போது கேஸ் போட என்ன காரணம் என்று எங்களை சிலர் கேட்கிறார்கள். நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே தேடி வருகிறோம். முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினோம். அதை, சிவகங்கை போலீஸ் ஸ்டேஷனில் விசாரித்தார்கள். கலைச்செல்வன் சினிமாவில் நடிக்கிறான்னு கேள்விப்பட்டு சென்னைக்குப் போனோம். கஸ்தூரிராஜா வீட்டில் எங்களை உள்ளே விடவில்லை. பல தடவை போனோம். எங்கள் பிள்ளையைப் பார்க்க முடியலை. கோர்ட்டுக்கு வந்தபோதுகூட, எங்களைப் பார்க்க விடாமல் தடுத்துவிட்டார்கள். தனுஷ் எங்கள் மகன்தான் என்பதற்கு இன்னும் நிறைய ஆதாரங்களைக் காட்ட முடியும். டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கட்டும். அதன் பிறகு கோர்ட் சொல்வதைக் கேட்டுக்கொள்கிறோம். ஒரு டி.வி நிகழ்ச்சிக்காக குஷ்பு எங்களைப் பேட்டி எடுத்தார். அப்போதுதான் தனுஷ் உடம்பில் உள்ள மச்சம், தழும்பு பற்றி சொன்னோம். அதன் பிறகுதான் அதையெல்லாம் தனுஷ் உடம்பில் இருந்து அழித்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்” என்றனர்.

 இந்த வழக்கு மார்ச் 27-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

- செ.சல்மான். சே.சின்னதுரை
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்


“இது, தனுஷின் சாதி பற்றிய வழக்கு அல்ல!”

தனுஷ் தரப்பு வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதனிடம் பேசினோம். “கதிரேசன் தரப்பில் தெரிவிக்கப்பட்ட அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்யவும், அங்க அடையாளங்களைத் தொழில்நுட்பத்தை வைத்து அழிக்கமுடியுமா என்பதையும் தெரிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி தனுஷ் உடலில் சோதனை நடத்திய மருத்துவர்கள் தங்களது மருத்துவ அறிக்கையில், கதிரேசன் தரப்பு குறிப்பிட்ட அங்க அடையாளங்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். உடனே, தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் லேசர் மூலம் அழிக்கப்பட்டுள்ளன என்று கதிரேசனின் வழக்கறிஞர் தரப்பில் தவறான தகவலைப் பரப்பியுள்ளனர்.

`நாயக்கர் சாதியைச் சேர்ந்த கஸ்தூரிராஜா, எதற்காக தன் மகன் எஸ்.சி என்று பள்ளி டி.சி-யில் குறிப்பிட வேண்டும்’ என்று கேட்கிறீர்கள். தனுஷ் படித்த பள்ளியில் அப்படி எழுதியிருக்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் கவனிக்கவில்லை. தனுஷ் யாருடைய மகன் என்பதுதான் வழக்கு. சாதி பற்றியோ, ஆவணங்கள் பற்றியோ இல்லை. 2002-ம் ஆண்டு ஜூலை மாதம் இவர்களின் மகன் காணாமல் போனதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதே ஆண்டு மே மாதத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த ‘துள்ளுவதோ இளமை’ படம் ரீலிஸ் ஆகிவிட்டது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக ஆறு மாதங்கள் ஷூட்டிங் எடுத்திருப்பார்களே. அப்படி பார்க்கும்போது இவர்கள் சொல்கிற கணக்கு இடிக்கிறது” என்றார்.


‘‘டி.என்.ஏ டெஸ்ட் நடத்த வேண்டும்!”

கதிரேசனின் வழக்கறிஞர் டைட்டஸிடம் பேசினோம். “தனுஷ் தன் மகன் என்று காட்டுவதற்காக கஸ்தூரிராஜா தரப்பில் சமர்ப்பித்த ஆவணங்கள் நம்பகத்தன்மை இல்லாமல் உள்ளன. தனுஷின் பள்ளிச் சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிக்கப்படவில்லை. அதனால், இந்தச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்பட வேண்டும். இதை வழங்கியவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். இன்னும் பல ஆதாரங்களை கோர்ட்டின் கவனத்துக்குக் கொண்டுவரப்போகிறோம்.

 கஸ்தூரிராஜா என்ற பெயரில் நீண்ட காலமாக அவர் சினிமா எடுத்து வந்துள்ளார். ஆனாலும், கிருஷ்ணமூர்த்தி என்ற தன் ஒரிஜினல் பெயரை கஸ்தூரிராஜா என்று அதிகாரபூர்வமாக கெஸட்டில் வெளியிட்டது 2015-ல்தான். அதற்கு சில வருடங்களுக்கு முன்பே, வெங்கடேஷ்பிரபு என்ற பெயரை தனுஷ் என்று கெஸட்டில் மாற்றியதாகக் காட்டும் ஆவணத்தில், தந்தை பெயராக கஸ்தூரிராஜா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம்? ரேஷன் கார்டு கணக்குப்படி, வெங்கடேஷ் பிரபுவின் வயது 43. கஸ்தூரிராஜாவின் வயது 73. இப்படி பல முரண்பாடுகள் உள்ளன. அவர்கள் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் நம்பகத்தன்மை பற்றி தனியாக வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். டி.என்.ஏ டெஸ்ட் நடத்த வேண்டும் என்றும் மனு செய்துள்ளோம். அதுவும் விரைவில் விசாரணைக்கு வரும்” என்றார்.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் போடப்பட்டுள்ள செய்திகள் எவையுமே நம்பகத் தன்மை அற்றதாகத்தானிருக்கு.

Link to comment
Share on other sites

நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கை வெளியான விவகாரத்தில் நீதிபதி அதிர்ச்சி

 
dhanush_3005377f.jpg
 
 
 

நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கை வெளியான விவகாரத் தில் இரு தரப்பின் செயல்பாடுகள் தனக்கு அதிர்ச்சி அளித்ததாக நீதிபதி தெரிவித்தார்.

மேலூர் அருகே மலம்பட் டியைச் சேர்ந்த கதிரேசனும், அவரது மனைவி மீனாட்சியும் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என உரிமை கோரி, மேலூர் நீதித் துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் ஆஜரானார். அப்போது கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளதா என்பது தொடர்பாக அரசு மருத்துவர்கள் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த மார்ச் 20-ம் தேதி நீதிபதியின் தனி அறையில் விசாரிக்கப்பட்டது.

இந்த விசாரணையை அடுத்து தனுஷின் மருத்துவ அறிக்கை வெளியானது. அதில் கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்த அங்க அடை யாளங்கள் தனுஷின் உடலில் இல்லை எனக் குறிப்பிடப்பட்டி ருந்தது. மேலும், அந்த அறிக்கை யில் நீதிபதியின் கேள்விகளுக்கு மருத்துவர்கள் அளித்த பதிலில், சிறிய அளவிலான மச்சம் ஒன்று லேசர் சிகிச்சையில் அகற்றப்பட்டி ருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கருத்தை வைத்து தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சையில் அகற்றப்பட் டிருப்பதாக கதிரேசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தனுஷ் தரப்பு மறுத்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. கதிரேசன் தரப்பு வழக்கறிஞர் டைட்டஸ் விசாரணையை ஒத்தி வைக்க கோரினார். தனுஷின் வழக்கறிஞர் தான் வாதாட தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, நீதிமன்ற உத்தரவுகள் வெளிப் படையானவை. ரகசியமானவை அல்ல. நீதிமன்ற உத்தரவின் நகல் கேட்டு பதிவுத்துறையிடம் மனு அளித்தால் தரப்போகிறார்கள். அதன்பிறகு, அந்த நகலை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

ஆனால், கடந்த வாரம் இந்த வழக்கு குறித்து கருத்துகள் வெளியே தெரிவிக்கப் பட்டுள்ளது. என் உத்தரவு இல் லாமலேயே நான் குறிப்பிட்டுச் சொன்னதாக இரு தரப்பினராலும் பேசப்பட்டது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி தனி அறையில் விசாரணை நடத் தப்பட்டது. இவ்வாறு விசாரிப்பது நீதிபதியின் தனிப்பட்ட அதிகாரம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர், கதிரேசன் தரப்பு வழக்கறிஞரின் வேண்டுகோளை ஏற்று விசாரணையை ஏப்.11-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/நடிகர்-தனுஷின்-மருத்துவ-அறிக்கை-வெளியான-விவகாரத்தில்-நீதிபதி-அதிர்ச்சி/article9604097.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நடிகர் தனுஷ் வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

தனது மகன் எனக் கூறும் கதிரேசன்-மீனாட்சி தம்பதியினரின் வழக்கை ரத்துசெய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனுஷ் மனு தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.

ட

நடிகர் தனுஷ், தங்கள் மகன்தான் எனக் கூறி, மதுரையைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து, இரு தரப்பின் பள்ளிச் சான்றிதழ், உடல் அங்க அடையாளங்கள் எனப் பல்வேறு சோதனைகளை உயர்நீதிமன்றம் மேற்கொண்டது. மேலும், நடிகர் தனுஷ் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

இந்நிலையில், வழக்கை ரத்துசெய்யக்கோரி, நடிகர் தனுஷ் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

http://www.vikatan.com/news/tamilnadu/86118-highcourt-branch-adjourns-judgement-on-actor-dhanushs-case.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மகன் என உரிமைக்கோரிய தம்பதி மனு தள்ளுபடி! நடிகர் தனுஷுக்கு ஆதரவாக தீர்ப்பு

 

மேலூர் தம்பதியினர் தொடந்த வழக்கில் நடிகர் தனுஷுக்கு சாதகமாக இன்று இறுதி தீர்ப்பு வெளியாகி உள்ளது.
மகன் என உரிமைக்கோரி தம்பதியின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

dhanush

மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர்,  சின்ன வயதில் காணாமல் போன தங்கள் மகன் கலைச்செல்வன்தான் நடிகர் தனுஷ் என்றும், வயதான காலத்தில் கஷ்டப்படும் தங்களை தனுஷ் பராமரிக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு மேலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியானது. மேலூர் தம்பதியினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/87105-final-judgement-in-dhanush-case-filed-by-melur-based-couple.html

Link to comment
Share on other sites

அவரின் மனசாட்சிக்குத் தெரியும்! தனுஷுக்கு உரிமை கோரிய மீனாட்சி கண்ணீர் பேட்டி

 
 

dhanus-_Mellur_thampathi_13097.jpg

'என் மகன்தான் தனுஷ் என்பது அவரின் மனசாட்சிக்குத் தெரியும்' என்று, மகன் என உரிமை கோரிய மீனாட்சி, நீதிமன்ற வளாகத்தில் கண்ணீருடன் கூறினார்.

மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், 'நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்புத் தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும்' என்றும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த நிலையில், கதிரேசன்- மீனாட்சி தம்பதியின் மனுவைத் தள்ளுபடிசெய்யக் கோரி, நடிகர் தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. அதில், அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை. எனவே, இந்த வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து, இரு தரப்பினரும் தனுஷின் பள்ளி அசல் சான்றிதழ்களைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தனுஷின் பள்ளி மாற்றுச் சான்றிதழை இரு தரப்பினரும் தாக்கல்செய்தனர். தனுஷ் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மாற்றுச் சான்றிதழில், அவருடைய உடலில் உள்ள அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை. இதனால், மேலூர் தம்பதி தாக்கல்செய்துள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள மச்சம் உள்ளிட்ட அங்க அடையாளங்கள், தனுஷ் உடலில் உள்ளதா எனக் கண்டறிந்து, அது தொடர்பாக அறிக்கை தாக்கல்செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

dhanus-_Mellur_thampathi_1aa_13132.jpg

இதையடுத்து, தனுஷ் அங்க அடையாளங்களை மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சரிபார்த்தனர். இதையடுத்து, பரிசோதனை அறிக்கையை டாக்டர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்தனர். இதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், கதிரேசன்-மீனாட்சி தம்பதியரின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்தத் தீர்ப்பைக் கேட்டு கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் கண்ணீர்விட்டு அழுதனர். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், 'மனது கஷ்டமாகத்தான் இருக்கிறது. தீர்ப்பு இப்படி ஆகுமென நினைக்கவேயில்லை. பணம் ஜெயித்துவிட்டது. என் மகன்தான் தனுஷ் என்பது அவரின் மனசாட்சிக்குத் தெரியும். தனுஷ்தான் எங்கள் மகன். அதற்கான அங்க அடையாளங்களைச் சமர்ப்பித்து இருந்தோம். இந்த உண்மை தனுஷுக்குத் தெரியும். தனுஷுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தக் கோரிக்கை வைத்தோம். தனுஷின் பிறப்புச் சான்றிதழ் போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. பணக்காரனுக்கு ஒரு தீர்ப்பு ஏழைக்கு ஒரு தீர்ப்பா. இறைவன் இருக்கிறார். நீதி ஒருநாள் வெல்லும். கண்டிப்பாக உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம்' என்று கூறினர்.

'இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது' என்று தனுஷ் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/87127-hc-quashed-case-against-dhanush-melur-couple-heartfelt-statement-about-judgement.html

Link to comment
Share on other sites

தனுஷ் வழக்கில் நம்பியாரை உதாரணம் காட்டிய நீதிபதி - தீர்ப்பு விபரம்

 
 

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று உரிமை கோரி மேலூர் கதிரேசன், மீனாட்சி தம்பதியர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம் என்று கதிரேசன் தரப்பு கூறியுள்ளனர்.

தனுஷ்

கதிரேசன், மீனாட்சி தம்பதியின்  மகனாக தனுஷ் இருக்க முடியாது என்று நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறியுள்ள தீர்ப்பில், வேறு என்ன மாதிரியான  காரணங்களை குறிப்பிட்டுள்ளார் என்று பார்ப்போம்.
 
 "கதிரேசன் தம்பதியரின் வாதங்களின்படி பார்க்கையில், தங்களுக்கு பிறந்த கலைச்செல்வன் என்ற மகன் பிறந்து 11 ஆம் வகுப்பு படிக்கும் வரை தங்களுடன் இருந்ததாகவும், அதன்பிறகு அவர் காணாமல்போனதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அவர் எழுதி வைத்துச் சென்றதாக கூறப்படும் கடிதத்தில், தனக்கு மனநிலை சரியில்லாத காரணத்தினால் தனது பெற்றோர் இருபது கோயில்களுக்கு அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார். ஆனால், கடிதத்தில் எங்குமே தான் திரைப்படத்தில் நடிக்கச் செல்வதாக குறிப்பிடவில்லை.
 
இதேபோல தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணமானபோதும் கதிரேசன் தம்பதியர் எவ்வித பிரச்னையும் செய்யவில்லை. 
  
 ஆரம்பத்தில் எங்களுக்கு பணம் கொடுத்து வந்தார். அவர் பிரபலமடைந்த பின்னர் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. எனவே எங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறியிருந்தால் கூட பரிசீலிக்கலாம். மேலும், சிறுவயதில் காணாமல் போன எனது மகன்தான் தனுஷ் என்று கூறியிருந்தால் கூட ஏற்கலாம். ஆனால், பதினோறாம் வகுப்பு படிக்கும் வரை தங்களுடன் இருந்த மகன் காணாமல் போனதாகவும், அவர்தான் பின்னாட்களில் தனுஷ் என்ற பெயருடன் திரைப்படங்களில் நடிப்பதாகவும் கூறுவதை ஏற்க முடியவில்லை. இதற்கு போதுமான ஆதாரங்களையும் அவர்கள் தரப்பில் சமர்பிக்கவில்லை.
     
 அதேபோல 15.2.2002- ல் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால், 17.6.2002-இல் கலைச்செல்வன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இருந்தே நடிகர் தனுஷ் 2002 மார்ச் 15 முதல் திரைப்படத்துறையில் பணியாற்றுவது தெளிவாகிறது.
    
 நடிகர் தனுஷ் திரைப்படங்களில் ரெளடியாகவும், பெற்றோரை மதிக்காதவராகவும் நடித்துள்ளார் என்றெல்லாம் கதிரேசன் தம்பதியினர் தங்களது வாதங்களை முன்வைத்துள்ளனர். பழைய திரைப்படங்களில் நடிகர் நம்பியார் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். ஆனால், நிஜ வாழ்க்கையில் மிகவும் நல்லவராக இருந்துள்ளார். நடிப்பு என்பது வேறு, நிஜ வாழ்க்கை என்பது வேறு.
    
கதிரேசன் தம்பதியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் 13.4.1987 பிறந்த தேதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனை ஆவணங்களில் பிறந்த தேதி 7.11.1985 என்று உள்ளது. இதுபோன்ற கூற்றுகள் கதிரேசன் தம்பதியரின் வாதங்களை மேலும் வலுவிழக்கச் செய்கிறது. இவர்கள் தரப்பில் வழக்குத் தொடர எவ்வித முகாந்திரமும் இல்லை.
     
4.10.2016 அன்று கதிரேசன் தம்பதியர் தரப்பில் நடிகர் தனுஷிற்கு வழக்குரைஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், கஸ்தூரி ராஜாவால் கதிரேசன் தம்பதியர் உயிருக்கு ஆபத்துள்ளது. இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நீங்களும் இயக்குநர் கஸ்தூரி ராஜாவும் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். மேலும், கதிரேசன் தம்பதியரின் பராமரிப்பிற்காக மாதம் ரூ.65 ஆயிரம் வீதம் கடந்த ஓராண்டிற்குச் சேர்த்து ரூ.7 லட்சத்து 85 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் தொணியில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிடுவது போல வழக்குரைஞர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது தவறு. நோட்டீஸில் கூறப்பட்டுள்ளவை குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். இதுபோன்ற பல காரணங்களால் கதிரேசன் தம்பதியர் மீது இந்த நீதிமன்றத்திற்கு சந்தேகம் எழுகிறது.
    
 மேலும், கலைச்செல்வன்தான் தனுஷ் என்பதை நிரூபிக்க மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்று கதிரேசன் தம்பதியர் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மரபணு பரிசோதனைக்கு உத்தரவிடுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த வழக்கிலும் மரபணு பரிசோதனைக்கு உத்தரவிட முடியாது. 2002-2003 இடைப்பட்ட காலங்களில் காணாமல்போன தங்களது மகன் கலைச்செல்வன்தான் தனுஷ் என்பதை நிரூபிக்க கதிரேசன் தம்பதியரிடம் போதிய ஆதாரங்கள் இல்லை. முகாந்திரம் இல்லாத ஒரு வழக்கில் மரபணு பரிசோதனைக்கு உத்தரவிட முடியாது.
 
  கதிரேசன் தம்பதியர் தரப்பில் மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களையும், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களையும் பரிசீலித்தபோது கதிரேசன் தம்பதியரின் கோரிக்கையில் முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை. இதனால் இந்த வழக்கை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு திருப்பி அனுப்ப முடியாது. கதிரேசன் தம்பதியரின் மகன் உண்மையில் காணாமல் போய் இருக்கலாம் ஆனால், அவர் தான் தனுஷ் என்று கூற முடியாது. எனவே கதிரேசன் தம்பதியரின் வழக்கை ரத்து செய்யக்கோரிய நடிகர் தனுஷின் மனு ஏற்கப்படுகிறது. தனுஷிற்கு எதிராக மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் கதிரேசன் தம்பதியர் தொடர்ந்துள்ள வழக்கு ரத்து செய்யப்படுகிறது. கதிரேசன் தம்பதியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட துணை மனுக்கள் முடிக்கப்படுகின்றன" என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.vikatan.com/news/coverstory/87236-judgment-report-of-actor-dhanush-and-kathiresan-case.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.