Jump to content

'முல்லைத்தீவில் அதிவேக சிங்கள குடியேற்றம்'


Recommended Posts


'முல்லைத்தீவில் அதிவேக சிங்கள குடியேற்றம்'
 

article_1490005348-2.jpg-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டமானது, மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்,  படையினருக்கான நில சுவீகரிப்புக்கள், கடல்வள சுறண்டல்கள், பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவ மயமாக்கல் போன்றவற்றினால் விழுங்கப்பட்டு வருகின்றது.

முழுமையாக விழுங்கப்படுவதற்கு முன்னர், மாவட்டத்தையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்” என, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (19) விஜயம் செய்த ஆகியோரிடம் மக்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ரோறான்ரோ மாநகர மேயர் ஜோன் ரொறி ஆகியோருடன் முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற மக்கள் அமைப்புக்களுடனான கலந்துரைாயடலின்போது,  இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அந்த மக்கள் தொடர்ந்து கூறுகையில், “முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருமளவான இராணுவ மயமாக்கல் நடைபெற்று கொண்டிருக்கின்றது. அதேபோல், மக்களுக்கு சொந்தமான பெருமளவு நிலங்களை படையினர் கையகப்படுத்தியிருக்கின்றனர்.

திட்டமிட்ட வகையில் தமிழ் மக்களுக்குரிய விவசாய நிலங்களை “மகாவலி எல் வலயம்” என அடையாளப்படுத்தி, சிங்கள மக்களுக்கு பறித்து கொடுத்திருக்கின்றார்கள். அதேபோல், கடல்வளத்தையும் சுரண்டுகின்றனர்.

மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் நிலையே காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டம், சகல வழியிலும் விழுங்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், பெருமளவு இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் உள்ளனர். அதன்காரணமாக  அதியுச்ச வறுமை மாவட்டமாக முல்லைத்தீவு மாறியிருக்கின்றது.

இராணுவ மயமாக்கல், சிங்கள குடியேற்றங்கள், சிங்கள மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் பௌத்த மயமாக்கலில் இருந்து எமது மாவட்டத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்” என அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- See more at: http://www.tamilmirror.lk/193415/-ம-ல-ல-த-த-வ-ல-அத-வ-க-ச-ங-கள-க-ட-ய-ற-றம-#sthash.DyyLOEtp.dpuf
Link to comment
Share on other sites

குடியேற்றத்தால் தனித்துவத்தை இழக்கப்போகும் தமிழர்கள்
குடியேற்றத்தால் தனித்துவத்தை இழக்கப்போகும் தமிழர்கள்
முல்லைத்­தீவு மாவட்­டத்­தி­லுள்ள நாயா­றுப் பகு­தி­யில் பெரி­ய­ள­வி­லான சிங்­க­ளக் குடி­யேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் முழு­வீச்­சில் இடம்­பெற்று வரு­வ­தாக முல்­லைத்­தீவு மாவட்­டத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்­கின்ற வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஒரு­வர் தெரி­வித்­துள்­ளார்.
 
நாட்­டின் எந்­தப் பாகத்­தி­லும் வசிப்­ப­தற்கு இலங்­கைக் குடி­ம­கன் ஒரு­வ­னுக்கு உரிமை உண்டு. இதை எவ­ரும் தடுத்து நிறுத்­தி­விட முடி­யாது. ஆனால்  ஓர் இனத்­த­வர் வாழு­கின்ற பகு­தி­யில் அவர்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­களை அடாத்­தா­கப் பிடித்­து­வைத்து வேறொரு இனத்­த­வ­ரைக் குடி­யேற்­று­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. காணி அதி­கா­ரங்­கள்  கொழும்பு அர­சி­டமே உள்­ளது என்­ப­தற்­காக எதை­யும் செய்­து­விட முடி­யாது. 
 
அண்டை நாடான இந்­தி­யா­வில் மாகாண அர­சு­க­ளுக்­குப் பொலிஸ், காணி அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. காணி அதி­கா­ரத்­தின் மூல­மாக சட்­ட­வி­ரோ­தக் குடி­யேற்­றங்­க ­ளைத் தடுப்­ப­தற்கு அங்­குள்ள மாகாண அர­சு­க­ளால் முடி­கின்­றது. ஆனால் இலங்­கை­யில் அது முடி­வ­தில்லை. இத­னால் சட்ட விரோ­த­மாக இடம்­பெ­று­கின்ற குடி­யேற்­றத் திட்­டங்களை  மாகாண அர­சு­க­ளால் தடுக்க முடி­வ­தில்லை.
 
முல்­லைத்­தீவு நாயாறுப் பகு­தி­யில் இடம்­பெ­று­கின்ற குடி­யேற்­றத்திட்ட நட­வ­டிக்­கை­களை ஆரம்­பத்­தி­லேயே தடுக்­காது விட்­டால் காலப்­போக்­கில் இது­வொரு பெரும் பிரச்­சி­னை­யாக மாறி­வி­டும்.
 
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் ஏற்­க­னவே வெலி­ஓயா என்ற சிங்­க­ளப் பெய­ரி­லான மிகப் பெரிய குடி­யேற்­றத்­திட்­ட­மொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. தமி­ழர்­க­ளின் பாரம்­ப­ரிய பிர­தே­சங்­க­ளான வடக்­கை­யும், கிழக்­கை­யும்  துண்­டித்து விடு ­கின்­ற­தொரு நட­வ­டிக்­கை­யா­கவே முல்­லைத்­தீ­வி­லி­ருந்து திரு­கோ­ண­ ம­லைக்­குச் செல்­லும் முக்­கிய பகு­தி­யைத் துண்­டாடி இந்­தக் குடி­ யேற்­றத்­திட்­டம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் வடக்­கி­லி­ருந்து கிழக்கு மாகா­ணத்­துக்­குப் பாது­காப்­பான பிர­யா­ணத்தை மேற்­கொள்ள முடி­யாத நிலை­யில் தமிழ் மக்­கள் இன்­னல்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர்.
 
தமி­ழர்­கள் பூர்­வீ­க­மாக வாழ்ந்த பல இடங்­கள் இன்று கைந­ழு­விப் போன நிலை­யில் காணப்­ப­டு­கின்­றன. தென்­ன­ம­ர­வாடி, பத­வியா, கொக்­கி­ளாய், மண­லாறு ஆகிய இவற்­றுள் சில­வா­கும். இன்று நாயா­ றும் பறி­போ­கும் நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு தமி­ழர்­க­ளின் பூர்­வீ­க­மான நிலங்­கள் கண்­ணெ­திரே பறி­போ­வதை வேடிக்கை பார்த்­துக் கொண்­டி­ருக்­கவே எம்­மால் முடி­கின்­றது. தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் கூட எது­வுமே செய்ய முடி ­யாத நிலை­யில் கைக­ளைக் கட்­டிக் கொண்டு நிற்­கின்­ற­னர்.
 
நாடு சுதந்­தி­ரம் அடைந்­த­வு­டன் நாட்­டின் முத­லா­வது தலைமை அமைச்சரான டி.எஸ்.சேன­நா­யக்க கிழக்கு மாகா­ணத்­தில் மிகப் பெரி­ய­தொரு சிங்­க­ளக் குடி­யேற்­றத் திட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­னார். கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள வள­மான பிர­தே­சங்­க­ளில்  காலூன்­று­வ­தும் தமி­ழர்­களை அங்கு சிறு­பான்­மையின­ராக மாற்­று­வ­துமே இந்­தக் குடி­யேற்­றத் திட்­டத்­தின் நோக்­க­மா­கும்.  இது எதிர்­பார்த்­த­ப­டியே நிறை­வேறி வரு­வ­தைக் காண­மு­டி­கின் றது.
 
வடக்­கைப் பொறுத்­த­வ­ரை­யில் முல்­லைத்­தீவு, வவு­னியா மாவட்­டங்­க­ளின் எல்­லைக் கிரா­மங்­கள் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளால் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அங்­கி­ருந்து பரம்­ப­ரை­யாக வாழ்ந்த தமிழ் மக்­கள் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளனர்.
முல்­லைத்­தீவு மாவட்­டம் காட்டு வளத்­தை­யும், கடல் வளத்­தை­யும் , செழிப்­பான மண் வளத்­தை­யும் தன்­ன­கத்தே கொண்­டுள்­ளது. அத்­து­டன் கற்­பா­றை­க­ளும்  நிறை­யவே காணப்­ப­டு­கின்­றது. 
 
அது­மட்­டு­மல்­லாது ஆற்று மண­லும் நிறை­யவே கிடைக்­கின்­றன. விடு­த­லைப்­பு­லி ­கள் இருந்த வரை­யில் இயற்கை வளங்­கள் யாவும் பேணிப் பாது­காக்­கப்­பட்­டன. ஆனால் போர் ஓய்ந்­த­தன் பின்­னர் நிலமை தலை­கீ­ழாக மாறி­விட்­டது. வெளி­யி­டங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளால் காட்டு வளங்­கள் வகை தொகை­யின்றி அழிக்­கப்­பட்டு எடுத்­துச் செல்­லப்­ப­டு­கின்­றன. கற்­பா­றை­கள் வெடி­வைத்­துத் தகர்க்­கப்­பட்டு கருங்­கல் சல்­லி­க­ளாக விற்­கப்­ப­டு­கின்­றன. 
 
இங்கு முகா­மிட்­டி­ருக்­கும் வெளி மாவட்­டங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் பெரு­ம­ள­வில் மணலை அகழ்ந்து வெளி­யி­டங்­க­ளுக்கு எடுத்­துச் செல்­கின்­ற­னர். ஆனால் உள்­ளூ­ரில் வீட்­டுத் திட்­டங்­க­ளுக்­குள் உள்­வாங்­கப்­பட்ட மக்­கள் தமது தேவைக்­கு­ரிய மண­லைப் பெறு­வ­தில் பெரும் சிர­மங்­களை  எதிர்­கொள்­கின்­ற­னர். 
 
வெளி­யூர் மீன­வர்­கள் இங்கு நிரந்­த­ர­மா­கவே தங்கி நின்று  மீன்­பிடித்­தொ­ழி­லில் ஈடு­பட்டு வரு­வ­தால் உள்­ளூர்  மீன­வர்­கள் பெரி­தும் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். இவ்­வாறு முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் வாழ்­கின்ற தமிழ் மக்­கள் எல்லா வகை­யி­லும் பாதிப்­புக்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர்.
 
இதே­வேளை திட்­ட­மி­டப்­பட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் இன ­வி­கி­தா­சா­ரத்­தில் பெரும் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­வி­டப்­போ­கின்­றது. நாடா­ளு­மன்­றம், மாகா­ண­சபை, பிர­தேச சபை ஆகி­ய­வற்­றுக்­குப் பிர­தி­ நி­தி­க­ளைத் தெரிவு செய்­யும் போது தமி­ழர் தரப்­பின் விகி­தா­சா­ரம் குறை­வ­டைய நேரிட்­டு­வி­டும். இதை­விட வேலை­வாய்ப்பு, பல்­க­லைக்­க­ழக அனு­மதி ஆகி­ய­வற்­றி­லும் பாதிப்பு ஏற்­பட்­டு­வி­டும்.
 
இலங்­கை­யில் மொத்­த­மாக ஒன்­பது மாகா­ணங்­கள் உள்­ளன. இதில்  வடக்கு  மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளி­லேயே தமி­ழர்­கள் செறிந்து வாழ்­கின்­ற­னர். ஏனைய ஏழு மாவட்டங்­க­ளி­லும் பெரும்­பான்­மை­யின மக்­கள் வாழ்ந்து வரு­கின்­ற­னர். இந்த நிலை­யில் வடக்­குக் கிழக்­கில் குடி­யேற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தன் நோக்­கம் எந்த வகை­யி­லும்   ஏற்­றுக் கொள்­ளத்­தக்­க­தல்ல.
 
இஸ்­ரே­லும் பாலஸ்­தீ­னத்­தில் இவ்­வாறு தான் நடந்து கொள்­கின்­றது. இத­னால் பாலஸ்­தீன மக்­க­ளின் எதிர்­கா­லம் இருள் சூழ்ந்து காணப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றா­ன­தொரு நிலை இங்­கும் ஏற்­ப­டப் போகின்­றது என்­ப­து­தான் யதார்த்­தம்.

http://www.onlineuthayan.com/article/276

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையில் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.