Jump to content

உண்மையிலேயே டெங்கு ஆபத்தான நோயல்ல ; லலிதாகோபன் தரும் விளக்கம்


Recommended Posts

8651_1489883415_nu.jpg

டெங்கு  நோய் பற்றி  அரசாங்க  வைத்தியசாலையில்  தாதியாக  கடமையாற்றி  வரும்  லலிதாகோபன்  தரும்  விளக்கம்   என்பது  காலத்தின்  கட்டாயம்.பொது மக்கள்  அறிந்து கொள்வது  மிக அவசியம்.

டெங்கு காய்ச்சலினால் கிழக்கு மாகாணம்  பரவலாக பாதிக்கபட்டு உயிரிழப்புக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.நாம் தொடர்ச்சியாக  இதில்  அலட்சியம்  காட்டுவோமானால் நாம் இன்னுமொரு  உயிரிழப்பு நடைபெற துணைபோகின்றோம்!

காத்தான்குடியில்  டெங்கு 

புதிய காத்தான்குடி நூறாணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக காத்தான்குடி நூறாணியா வித்தியாலய மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

நூறாணியா வித்தியாலயத்தில் தரம் 4 இல் கல்வி பயிலும் பாத்திமா கதீஜா எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிண்ணியாவில்  டெங்கு 

இதை விட கிண்ணியாவில் சகோதர இன மக்கள் பன்னிரெண்டு  பேர் மேல்உயிரிழப்பு ஏற்பட்டு கிழக்கு மாகாணமே டெங்கு பீதியில் உறைந்து போயுள்ளது.

 

இதுவரை டெங்கினால் உயிரிழப்பை மருத்துவர்கள் மீதும், வைத்தியசாலைகள் உத்தியோகத்தர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி எமது பெற்றோர், உறவினர் தமது கவலையீனங்களையும் தமது பொறுப்புணர்வுகளை தட்டிக்கழித்து குடும்பத்தில் மற்றவர்களின் உயிரிழப்பு நடவடிக்கைகளுக்கு முற்பாதுகாப்பு, விழிப்புணர்வு இல்லாமல் வாழ்வதற்கு யாரும் நம்மீது குற்றம் சாட்டமாட்டார்கள் எனும் துணிவில் வைத்தியர்கள் மீது பரவலாக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏற்புடைய நடவடிக்கையில்லை.

எமது தம்பி காய்ச்சல் என்றவுடன் காலையில் ஒரு தனியார் மருத்துவரிடம் பரிசோதித்து அவர் கொடுத்த மருந்துகளை ஒரு தடவை குடித்து விட்டு மாலை நேரம் இன்னுமொரு தனியார் மருத்துவமுனையில் மருந்துகளை ஒரு தடவை குடித்து நள்ளிரவில் அரச வைத்தியசாலையை நோக்கி ஆபத்தான கட்டத்தில் ஓடிபோய் ஏதும் உயிரழப்பு ஏற்பட்டால் வைத்தியசாலைகளை நோக்கி குற்றம் சாட்டுவது பொருத்தமில்லை.

நாம் வைத்தியசாலைகளை குற்றம் சாட்ட முன் நமது நோயாளி பெற்றோர் தரப்பு தமது கவனயீனத்தை மறைப்பதால் இலகுவாக வைத்தியசாலை நிர்வாகமே பொறுப்பெடுப்பது போன்று நிலமையை உருவாக்கி நாம் நமது குடும்ப உறுப்பினர் உயிரிழப்பை மேலும் தோற்றுவிக்கின்றோம்.

டெங்கு  நோய்  பிரிவில் கடமையாற்றும் லலிதாகோபன்  தாதி  தரும்  விளக்கம்

டெங்கு நோயை  மிக இலகுவாக எல்லோருக்கும் புரியக்கூடிய முறையில் விளக்கத்தினை தந்துள்ளார்.

முதலில் நாங்கள் ஒன்றினை தெரிந்து கொள்ள வேண்டும்.டெங்கு நோய்க்கு இதுவரை தீர்க்கமான நுண்னுயிர்கொல்லி/antibiotic மருந்து இல்லை. வைத்திய அவதானிப்பின் கீழ் திரவங்களை பிரதியீடு செய்தல் என்ற சிகிச்சை முறை மூலமே டெங்கு வைத்தியம் மேற்கொள்ளப்படுகிறது. (fluid resuscitation therapy under medical observation)

தற்போது நாட்டில்  இந்த முறை  சிகிச்சைதான்  நடைபெற்று   வருகின்றது இதை  நான் நேரடியாக  அவதானித்தேன். தற்போது கிண்ணியாவில்  இந்த முறை  சிகிச்சைதான் நடைபெற்று வருகின்றது .வேறு  எந்தவொரு மருந்து மாத்திரைகள் நோயாளிகளுக்கு வழங்கப்படவில்லை என்பதை அவதானித்தேன்..

உண்மையிலேயே டெங்கு நுளம்புகளில் காணப்படும் abovirus ஆனது எமது குருதிக்கலன்களான நாடி மற்றும் நாளம் என்பவற்றின் ஊடுபுகவிடும் தன்மையினை அதிகரிக்கும் மற்றும் குருதி உறைதலுக்கு தேவையான குருதிசிறுதட்டுக்களின் அளவினை குறைக்கும்.

இதை இவ்வாறு யோசித்துக்கொள்ளுங்கள்.ஈரானில் இருந்து நேரடியாகவே குழாய்கள் மூலம் சீனாவின் தொழிற்சாலைகளுக்கு மசகு எண்ணெய் விநியோகம் செய்யும் ஒரு SYSTEM உள்ளது.இதில் திடீரென ISIS தீவீரவாதிகள் (abovirus) புகுந்து குழாய்களில் ஓட்டை போட்டால் அல்லது எண்ணையினை திருடினால் தொழில்சாலைகளின் இதயமான இயந்திரங்கள் நின்று உற்பத்தி பாதிக்கும். அதே போன்றே உங்கள் இதயமும்.

இதேபோன்று நமது குருதிகலங்களில் இந்த வைரஸ்கள் ஓட்டை போடுவதால் உள்ளே செல்லும் குருதி வெளியே பாயத்தொடங்கும். இதனால் குருதி கலன்களுள் குருதியின் அளவு குறைதலின் காரணமாக நமது உடலின் ஏனைய பகுதிகளுக்கு குருதி செல்வது தடைப்பட்டு அந்த உறுப்புக்கள் செயல் இழக்க தொடங்கும் .இதனையே டெங்குவின் தீவிரநிலை அல்லது dengue shock syndrome என்போம்.

டெங்குவினால் இறந்த நோயாளிகளின் சரிதையை நோக்கினால் அவர்களின் அலட்சியமே காரணமாய் இருக்கிறது அல்லது வைத்தியசாலையினை உடனடியாக நாடாமை .(late admission).எமது திருமலை வைத்தியசாலைக்கு உரிய நேரத்தில் நேரடி அனுமதி பெற்று (direct admission not transferred) யாருமே இறக்கவில்லை.

உங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக full blood count என்ற பரிசோதனையை செய்யுங்கள். இதில் குருதி சிறுதட்டுக்களின் அளவினை அவதானியுங்கள்.குருதிச்சிறுதட்டு. இது PLT என குறிக்கப்பட்டிருக்கும்.இது 150000இனை விட குறைவாயின் அவதானம் தேவை அல்லது வைத்திய விடுதிகளுக்குADMISSION ஆகுங்கள்.

சிலவேளைகளில் முதலாம் நாள் PLATELETS சாதரணமாக இருக்கும். இரண்டாம் நாளில் இருந்து குறைய தொடங்கும்.எனவே நீங்கள் வீட்டில் இருந்தால் ஒவ்வொரு நாளும் FULL BLOOD COUNT செய்யுங்கள்.வார்டில் தினமும் இரு தடவைகள் செய்வார்கள்.

டெங்கு  3 ஆம் நாள்  ஆபத்தான  கட்டம்

டெங்குவின் மூன்றாம் நாளிலேயே ஆபத்து தொடங்குகிறது. அதாவது காய்ச்சல் விட்டு விடும்.உடம்பு குளிரத்தொடங்கும்.உடனேயே பைக் இனை எடுத்து ஊர் சுற்ற தொடங்க வேண்டாம்.ஏனெனில் இப்போதுதான் நீங்கள் SHOCK STAGE இற்கு செல்ல தொடங்குகிறீர்கள்.உடம்பு திடீரென குளிர்தல் உங்கள் உடம்பில் இரத்த ஓட்டம் குறைவதனாலேயே. அதாவது ஒரு சீர்த்திடநிலை என்ற விஞ்ஞான அலகில் உடம்பின் வெப்பத்தினை பேணுதலில் குருதியின் பங்கினை அறிந்துள்ளீர்கள்.எங்காவது உடம்பின் ஒரு பகுதியில் குளிர தொடங்கினால் அதன் அர்த்தம் அங்கு குருதியின் அளவு குறைதல் ஆகும்.

இந்த SHOCK நிலையில் உங்கள் குருதியமுக்கம் குறையும், நாடித்துடிப்பு அதிகமாகும், தலை சுற்றும் , வயிற்றுவலி வரும் ,வாந்தி வரும் , சில வேளைகளில் இருமத் தொடங்குவீர்கள் . நீங்கள் விடுதிகளில் இருந்தால் டாக்டர் அல்லது NURSEஅவதானித்து DEXTRAN எனும் திரவத்தை வேகமாக அனுப்புவதன் மூலம் நீங்கள் குணப்படுத்தபடுவீர்கள். இந்த DEXTRAN ஆனது மூலக்கூற்று திணிவு/MOLECULARWEIGHT அதிகமுடையது. இது விரைவாக குருதியிழப்பை சீர்செய்வதுடன் மேலும் குருதி இழக்காமல் இருக்க உதவி செய்யும்.

நோயாளியின் உயிரைப் பறிக்கும்  கட்டம்

இந்த SHOCK நிலையின் ஆபத்து யாதெனில் இதனை கண்டு பிடித்து நான்கு மணி நேரத்தில் குணப்படுத்தாது விடின் உங்கள் உறுப்புக்கள் செயல் இழக்க தொடங்கும்.அதாவது ORGAN FAILIURE.முக்கியமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிறுநீர் கழித்தலில் கடினம் , ஈரல் பாதிக்கப்பட்டு வயிற்றுநோவும் வயிறு வீங்குதலும் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சு விட சிரமம் என்பன நிகழும்.இந்த நிலைக்கு சென்றால் உங்களை கடவுளும் காப்பாற்ற முடியாது.SHOCK நிலையின் இந்த நான்கு மணித்தியாலங்களை மருத்துவத்தில் GOLDEN HOURSஎன்போம்.உங்கள் முதல் காதலி மாதிரி தவற விட்டால் அவ்வளவுதான்.காதல் கூட இன்னொரு முறை வரும் உயிர் அவ்வாறு அல்ல.வீட்டில் தலை சுற்றுகிறது என படுத்து விட்டு விடுதிக்கு தாமதமாய் வருவோரின் கவனத்துக்கு.

அதிகமாய் நீராகாரம் அருந்தினால் டெங்குவை குணமாக்கலாம் என்பதும் ஒரு மூட நம்பிக்கையே.உங்கள் உடல் நிறைக்கு ஏற்ப மணித்தியாலத்துக்கு இவ்வளவுதான் குடிக்கலாம் என்ற அளவுகோல் இருக்கிறது.அதை தாண்டி உங்கள் உடலுக்குள் திரவங்கள் சென்றால் FLUID OVERLOAD ஆகி மரணமும் நிகழலாம்.முக்கியமாக குழந்தைகளில் இந்த நிலைமை ஏற்படுவதுண்டு.

உண்மையிலேயே டெங்கு ஆபத்தான நோயல்ல நீங்கள் ஓய்வாய் இருந்து நியமிக்கப்பட்ட அளவுகளிலான திரவங்கள் உள்ளேடுக்கப்பட்டால். இதனை விட உங்கள் PLATELETS குறைந்து செல்கிறதே என்று வருந்தவும் வேண்டாம்.ஏனெனில்PLT வெறும் 3000 இற்கு கீழிறங்கி மீண்டவர்களும் உண்டு.

கிண்ணியாவில்  தெம்பிலி  குரும்பை  12௦ ரூபா 

டெங்குவை சாக்காக வைத்து சும்மா இருந்த தெம்பிலியை 150 ரூபா வரை உயர்த்தியுள்ள வியாபாரிகளே இது உங்களின் கவனத்துக்கு ... உங்களுக்கான கட்டிலும் தயார் நிலையில் இருக்கிறது.

நீங்கள் இறைவனிடம் செய்யும் பிரார்த்தனையில் திடீரென பெய்யும் இந்த மழையினை நிறுத்த சொல்லி கேளுங்கள் .ஏனெனில் ஒவ்வொரு திடீர் மழையின் பின்பும் எமன் வருகிறான் எருமையில் அல்ல நுளம்பில் ஏனெனில் இந்த திடீர் மழை டெங்கு நுளம்புகளின் உற்பத்திக்கு முக்கிய காரணம் .

டெங்குவை கட்டுப்படுத்த .உங்கள் உள்ளங்கள் போதும்.

ஆய்வாளர் : எம்;.எம்; நிலாம்டீன் 

http://battinaatham.com/description.php?art=8651

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.