Sign in to follow this  
Followers 0
நவீனன்

கொழும்பு அரசுக்கு நேர அட்டவணையும் கடும் கண்காணிப்பும் கட்டாயம்வேண்டும் - இப்படி வலியுறுத்துகிறார் ஸ் ரீபன் ரப்

1 post in this topic

கொழும்பு அரசுக்கு நேர அட்டவணையும் கடும் கண்காணிப்பும் கட்டாயம்வேண்டும் - இப்படி வலியுறுத்துகிறார் ஸ் ரீபன் ரப்
 
 
கொழும்பு அரசுக்கு நேர அட்டவணையும் கடும் கண்காணிப்பும் கட்டாயம்வேண்டும் - இப்படி வலியுறுத்துகிறார் ஸ் ரீபன் ரப்
போர்க் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்பில் பொறுப்­புக் கூ­றல் செயன்முறையை செயற்­ப­டுத்த இலங்கை அர­சுக்கு கால அவ­கா­சம் வழங்­கப்­ப­டும் போது, அதற்­கான கால அட்­ட­வ­ணை­யை­யும் வலு­வான கண்­கா­ணிப்­பை­யும் ஐ.நா. உறு­திப்­ப­டுத்த வேண்­டும். இவ்­வாறு வலி­யு­றுத்­தி­யுள்­ளார் போர்க்­குற்­றங்­கள் தொடர்­பான அமெ­ரிக்­கா­வின் முன்­னாள் தூது­வர் ஸ் ரீபன் ரப்.
 
“ஐ.நா தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த இலங்­கைக்கு கால அவ­கா­சம் வழங்­கு­வ­தன் ஊடாக, நீதி கிடைக்­கும் என்ற நம்­பிக்­கையைப் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உறுப்பு நாடு­கள் வழங்க வேண்­டும்” என்­றும் அவர் தெரி­வித்­தார்.
 
lபொறுப்­புக்­கூ­றல் செயல்­மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­குத் தேவை­யான கால அட்­ட­வ­ணையை இலங்கை அரசு தர வேண்­டும் சிறப்பு சட்­ட­வா­ளர் அலு­வ­ல­கம் ஆரம் பிக்­கப்­பட்டு, சான்­று­கள் மற்­றும் வழக்­குப் பதி­வு­களை தயார் செய்­த­தன் பின்­னர் சிறப்பு நீதி­மன்­றத்தை அமைக்க வேண்­டும். இதன்­மூ­லம் பாதிக்­கப்­பட்­ட­வர் க­ளுக்கு நம்­பிக்கை ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­து­டன், சான்­று­க­ளும் பாது­காக்­கப்­ப­டும்.அத்­து­டன், இந்த அலு­வ­ல­கம் சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து சுதந்­தி­ர­மாக இயங்க வேண்­டும். ஐ.நா. தீர்­மா­னத்­தில் வாக்­கு­று­தி­ய­ளித்­த­துக்கு அமை­வாக பன்­னாட்­டுச் சட்­ட­வா­ளர்­கள், அலு­வ­லர்­கள் இந்த அலு­வ­ல­கத்­தில் இணைக்­கப்­ப­ட­வேண்­டும்.
 
* சாட்­சி­கள் மற்­றும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளைப் பாது­காக்­கும் சட்­டம் பன்­னாட்­டுத் தரத்­தில்  திருத்­தப்­பட வேண்­டும். மேலும் வெளி­நாட்­டி­லி­ருந்து சாட்­சி­ய­ம­ளிக்க முடி­யும் என்ற நடை­மு­றை­யும் இணைக்­கப்­ப­ட­வேண்­டும்.ஆகிய மூன்று விட­யங்­களை ஸ்ாீபன் ரப் கோடிட்­டுக் காட்­டி­யுள்­ளார்.
 
மேலும் ஜோசப் சித்­தி­ர­வதை முகாம்  தொடர்­பில் பன்­னாட்டு உண்மை மற்­றும் நீதித் திட்­டம் அமைப்பு வெளி­யிட்ட அறிக்கை தொடர்­பி­லும் அவர் கருத்து வெளி­யிட்­டுள்­ளார். வவு­னியா படைத்­த­லை­மை­ய­கம் அமைந்­துள்ள ஜோசப் முகா­மில் சித்­தி­ர­வ­தை­கள் மற்­றும் பாலி­யல் துன்­பு­றுத்­தல்­கள் இடம்­பெற்­ற­மைக்­கான ஆதா­ரங்­கள் உள்­ளன என்று பன்­னாட்டு உண்மை மற்­றும் நீதித் திட்­டம் அமைப்பு அறிக்கை வெளி­யிட்­டது. 
 
இலங்­கை­யில் குற்­ற­வா­ளி­கள் தப்­பிக்­கும் கலா­சா­ரம் உள்­ளமை அந்த அறிக்­கை­யின் ஊடா­கத் தெளி­வா­கின்­றது என்­றும் ஸ்ாீபன் ரப் குறிப்­பிட்­டார். இதே­வேளை, இலங்­கைக்கு இவ்­வா­றான நிபந்­த­னை­களை விதிக்­கு­மாறு அங்­கத்­துவ நாடு­க­ளி­டம் ஸ்ாீபன் ரப் வலி­யு­றுத்தி உள்­ள­போ­தும், ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் முன்­வைக்­கப்­ப­டும் தீர்­மான வரை­வில் எந்­த­வொரு நிபந்­த­னை­யும் இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. 
 
ஐ.நா. தீர்­மா­னத்தை நிறை­வேற்ற மேலும் 2 வரு­டங்­கள் கால அவ­கா­சம் வழங்­கு­வதை மட்­டுமே கோரி புதிய தீர்­மான வரைவு நாளை மறு­தி­னம் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

http://www.onlineuthayan.com/news/25012

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0