Jump to content

எம் பிரச்சனைகளை கேட்க நேரமில்லையா வடக்கு முதல்வருக்கு - கேப்பாப்பிலவு மக்கள் கேள்வி


Recommended Posts

எம் பிரச்சனைகளை கேட்க நேரமில்லையா வடக்கு முதல்வருக்கு - கேப்பாப்பிலவு மக்கள் கேள்வி
 
 
 
எம் பிரச்சனைகளை கேட்க நேரமில்லையா வடக்கு முதல்வருக்கு - கேப்பாப்பிலவு மக்கள் கேள்வி
ஒப்­பந்­தங்­க­ளில் கையெ­ழுத்­துப் போடு­வ­தற்கு முத­ல­மைச்­ச­ருக்கு நேரம் இருக்­கின்­றது. எங்­க­ளின் குறை­க­ளைக் கேட்­ட­தற்­குத்­தான் அவ­ருக்கு நேர­மில்­லையா?.இவ்­வாறு கேப்­பா­பி­ல­வில் தொடர் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள மக்­கள் கேள்வி எழுப்­பி­னர். 
 
கேப்­பா­பி­ல­வில் நில விடு­விப்­புக்­காக தொடர் போராட்­டத்தை மக்­கள் முன்­னெ­ டுத்­துள்­ள­னர். நேற்று 19 ஆவது நாளா­க­வும் போராட்­டம் தொடர்ந்­தது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், கேப்­பா­பி­ல­வில் போராட்­டம் நடை­பெ­றும் இடத்­துக்கு நேற்­று நேரில் சென்­றார். அங்கு வைத்து போராட்­டம் தொடர்­பில் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு கருத்­துத் தெரி­வித்த முத­ல­மைச்­சர் சிறிது நேரத்­தில் வெளி­யே­றி­னார். 
 
“19 நாள்­க­ளா­கப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­தால் பல­ருக்கு காய்ச்­சல் ஏற்­பட்­டுள்­ளது. முத­ல­மைச்­சர் எங்­க­ளைப் பார்க்க வரு­கின்­றார் என்­ப­தற்­காக நாங்­கள் வீடு­க­ளில் இருந்­த­வர்­க­ளை­யும் அழைத்­துக் கொண்டு வந்­தோம். ஆனால் முத­ல­மைச்­சர் வந்த வேகத்­தி­லேயே சென்று விட்­டார். ஒப்­பந்­தங்­க­ளில் கையெ­ழுத்­துப் போடு­வ­தற்கு நேரம் இருக்­கின்­றது. எங்­கள் குறை­க­ளைக் கேட்­ப­தற்­குத்­தான் நேர­மில்­லையா?. எல்­லோ­ரும் எங்­களை ஏமாற்­று­கின்­றார்­கள்.
 
 அர­சாக இருந்­தா­லும் சரி, அமைச்­சர்­க­ளாக இருந்­தா­லும் சரி எங்­கள் பிர­தி­நி­தி­க­ளாக இருந்­தா­லும் சரி எல்­லோ­ரும் கண்­து­டைப்­புக்­கா­கவே வரு­கின்­ற­னர். நாங்­கள் போரா­டித்­தான் காணி­களை மீட்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. எங்­க­ளு­டைய தலை எழுத்து இந்த வெயி­லில் கிடந்து நாங்­கள் சாக வேண்­டி­ யுள்­ளது. முத­ல­மைச்­ச­ருக்கு அரு­கில் இருப்­ப­வர்­களே நேரம் போய்­விட்­டது வாங்கோ என்று அழைத்­துச் செல்­கின்­ற­னர்.”- என்று குறை­பட்­டுக் கொண்­ட­னர் போராட்­டத்­தில் ஈடு­ப­டும் மக்­கள்.
 
“யாழ்ப்­பா­ணத்­தில் முத­ல­மைச்­ச­ருக்கு அவ­சர சந்­திப்பு உள்­ளது. உங்­கள் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் அவ­ருக்கு எல்­லாம் தெரி­யும். நாங்­க­ளும் எடுத்­துக் கூறி­யுள்­ளோம்.” -என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் க.சிவ­நே­சன்அந்த மக்­க­ளி­டம் தெரி­வித்­தார்.  

http://www.onlineuthayan.com/news/25014

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.