Sign in to follow this  
நவீனன்

ஓ.பி.எஸ்., அணிக்கு ஓடிவிடுவேன்!: சசிகலா தரப்பு எம்.எல்.ஏ., மிரட்டல்

Recommended Posts

ஓ.பி.எஸ்., அணிக்கு ஓடிவிடுவேன்!:
சசிகலா தரப்பு எம்.எல்.ஏ., மிரட்டல்
 
 
 

கோவை:தமிழக அரசு மீது அதிருப்தியில் உள்ள கோவை, சூலுார் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கனகராஜ், 'அணி மாறி விடுவேன்' என, முதல்வருக்கு எதிராக அதிரடி பேட்டி அளித்துள்ளார்.

 

Tamil_News_large_173373220170320003748_318_219.jpg

கோவை, செட்டிபாளையம் அடுத்துள்ள பெரியகுயிலி கிராமத்தில், ஆனந்தகுமார் என்பவருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. ஜல்லி கிரஷர்கள் அதிகளவில் இயங்கும் இப்பகுதியில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 40 - 50 வயதுடைய கூலி தொழிலாளி கள் இருவர் தங்கி, கூலி வேலை செய்து வந்தனர்.

கடந்த, இரு நாட்களுக்கு முன், பாறைகளை உடைக்க வெடி வைப்பதற்காக, இயந்திரம் மூலம் துளையிட்டனர். அப்போது, பாறை உருண்டு, இரண்டு தொழிலாளிகளும் உயிரிழந்தனர்.சம்பவ இடத்தை பார்வையிட்ட சூலுார் தொகுதி, எம்.எல்.ஏ., கனகராஜ் அளித்த பேட்டி:

பாறை உருண்டு இருவர் உயிரிழந்த கல் குவாரியில், 400 அடி ஆழம் வரை தோண்டி கல் உடைக்கின்றனர். விதி மீறல்களை கனிம வளத்துறை அதிகாரிகளோ, வருவாய் துறை யினரோ கண்டுகொள்வதில்லை; ஆய்வும்

நடத்துவதில்லை. விபத்து நடந்ததும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டனர்.

பெரியகுயிலியில் இயங்கும் விதி மீறல் கல் குவாரி களால், அரசுக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த முறைகேடு களுக்கு காரணமான அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து, கல் குவாரி முறைகேடுகளை தடுக்க வேண்டும்.

இது தொடர்பாக, நான் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பிறகும் நான் எதற்கு, எம்.எல்.ஏ.,வாக இருக்க வேண்டும்? எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.அல்லது முதல்வர் பழனிசாமி அணியில் இருந்து வேறு அணிக்கு போய் விடுவேன். யாருடைய மிரட்ட லுக்கும் பயப்பட மாட்டேன். இவ்வாறு கனகராஜ் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ.,வின் பேட்டி குறித்த தகவல் வெளியா னதும், அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேச்சு நடத்தி, சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தன் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிடில், முடிவில் மாற்றமில்லை என, எம்.எல்.ஏ., கனகராஜ் உறுதிபட கூறிவிட்டதாக தெரிகிறது.
 

'காபி வித் எம்.எல்.ஏ.,க்கள்' புறக்கணித்தது சசி அணி


சென்னையில் நடந்த, 'காபி வித் எம்.எல்.ஏ.,க்கள்' கலந்துரை யாடல் நிகழ்ச்சியில், சசிகலா அணி, எம்.எல்.ஏ.,க்கள் ஒருவர் கூட பங்கேற்காததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.அறப்போர் மக்கள் இயக்கம் சார்பில், 'காபி வித் எம்.எல்.ஏ.,க்கள்' என்ற தலைப்பில், கலந்துரை யாடல் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது.

இதில், இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம்

 

வெங்கடேசன் உட்பட, தன்னார்வ தொண்டு நிறுவனபிரதிநிதிகள் பங்கேற்றனர். இந் நிகழ்ச்சியில், பங்கேற்க வரும்படி, கூவத்துா ரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சசிகலா அணியை சேர்ந்த, 122 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

பொதுமக்களுடன், அவர்கள் நேரடியாக கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது. ஆனால், ஒரு எம்.எல்.ஏ., கூட பங்கேற்கா ததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
 

'எங்ககிட்ட வாங்க!'


அணி மாறுவதாக, சூலுார், எம்.எல்.ஏ., கனகராஜ் கூறியதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத் தில் ஏற்கனவே பன்னீர்செல்வம் அணிக்குத் தாவிய, எம்.எல்.ஏ.,க்களில் ஒருவர், மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தங்களது அணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுபோன்ற போன் அழைப்புகள் தொடர்ச்சி யாக பலரிடம் இருந்தும் தமக்கு வரவே, மொபைல் போனை,'சுவிட்ச் ஆப்' செய்து விட்டார் கனகராஜ். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1733732

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this