Sign in to follow this  
நவீனன்

எங்களுக்கு தான்

Recommended Posts

அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவி தொடர்பாக, தேர்தல் கமிஷன் நாளை மறுநாள், முக்கிய தீர்ப்பு வழங்க உள்ளது. 'தேர்தல் கமிஷனின் முடிவு, சசிகலாவின் பதவியை பறிக்கும்; எங்களுக்கு சாதகமாக இருக்கும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி
உற்சாகம் அடைந்துள்ளது. இந்த முடிவை எதிர்பார்த்துள்ள, சசிகலா அணியில் தற்போது உள்ள, எம்.எல்.ஏ.,க்களில் பலர், அணி மாற தயாராகி வருகின்றனர்.

 

Tamil_News_large_173372820170320000347_318_219.jpg

'அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது' என, அறிவிக்கக் கோரி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர், தேர்தல் கமிஷனில் புகார் அளித்தனர். இதற்கு விளக்கம் கோரி, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பியது. சசிகலா சார்பில், தேர்தல் கமிஷனிடம், பதில் மனு சமர்ப்பிக்கப்பட்டது. பன்னீர் அணியினரும், 61 பக்க பதில் மனுவை தாக்கல் செய்தனர்.

இதன் பின், மார்ச், 15ல், டில்லி சென்ற பன்னீர் அணியினர், தலைமை தேர்தல் கமிஷனர், நஜீம் ஜைதியை சந்தித்து, 'அ.தி.மு.க., பொதுச்செயல ராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது

என்றும், கட்சி சட்ட விதிகளின் படி, இரட்டை இலை சின்னம் எங்களுக்கே சொந்தமாக அறிவிக்க வேண்டும்' எனவும் வலியுறுத்தினர். அதற்கு வலு சேர்க்கும் வகையில், தொழில் நுட்ப ரீதியிலான, ஆவணங்களையும் ஒப்படைத்தனர். இது, சசிகலா அணியினரை ஆட்டம் காண வைத்துள்ளது.
 

நடந்தது என்ன?


சசிகலாவுக்கு எதிராக, பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியதும், அவரது வீட்டிற்கு தினமும்ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அடுத்து, மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. ஜெ., மரணத்திற்கு நீதி விசாரணை கோரி, 31 இடங்களில், உண்ணாவிரத போராட்டமும் நடந்தது. இவற்றில், ஏராளமான, அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

அவர்களின் கையெழுத்துடன் கூடிய முழு விபரங்களையும், வீடியோ ஆதாரங்களையும், பன்னீர் அணியின், தகவல் தொழில்நுட்ப பிரிவினர், 'பக்கா'வாக பதிவு செய்துள்ளனர். இவற்றை தொகுத்ததில், கட்சியில் உள்ள மொத்த உறுப்பினர்களான, 1.53 கோடி பேரில், 1.2 கோடி பேர், பன்னீர்செல்வம் அணிக்கு சாதகமாக இருக்கும் விபரம் தெரிய வந்தது.
இவை, ஆவணங்களாக தேர்தல் கமிஷனிடம் வழங்கப்பட்டுள்ளன. பன்னீர்செல்வம் அணி யினரின் தகவல் தொழில்நுட்ப ரீதியிலான முயற்சி, சசிகலா தரப்பிற்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

பகீரத முயற்சி: அ.தி.மு.க., பொதுச் செயலராக

 

தன்னைத் தானே, சசிகலா அறிவித்தது செல்லுமாஎன்ற விவகாரத்தில், தேர்தல் கமிஷன், நாளை மறுநாள் முக்கிய தீர்ப்பை வழங்க உள்ளது. இதனால், டில்லி பிரமுகர்கள் மூலம், பன்னீர் திட்டத்தை முறியடிக்க, சசிலா தரப்பு பகீரத முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில், வரும், 24ல், அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள்
ஒதுக்கப்பட உள்ளன. அதனால், சசிகலா நியமனம் செல்லாது என்றும், தினகரனை அவர் துணை பொதுச்செயலராக்கியது உட்பட, அவரின் எந்த நியமனமும் செல்லாது என்றும், தேர்தல் கமிஷன் தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கையில், பன்னீர் அணியினர் உற்சாகமாக உள்ளனர்.
 

எங்களுக்கு தான்


இந்த விவகாரத்தில், பன்னீர் அணிக்கு சாதகமாக முடிவு வந்தால், அந்த அணிக்கு தாவ, சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் பலர் தயாராக உள்ளனர். இதற்கிடையே, தேனி மாவட்டம், பெரிய குளத்தில், பன்னர்செல்வம் நேற்று அளித்த பேட்டியில், ''தேர்தல் கமிஷனிடம் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து கூறியுள்ளோம். 22ல், கட்சி விதிகளை எடுத்து கூறுவோம். அ.தி.மு.க., எங்கள் கட்சி. இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் பெறுவோம்,'' என, நம்பிக்கையோடு கூறினார்.

'தேர்தல் கமிஷன் தீர்ப்பு சாதகமாக வரலாம். அதனால் தான், பன்னீர் அவ்வளவு நம்பிக்கை யோடு பேசுகிறார்' என, அவரது அணியினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதற்கேற்ப, ஆர்.கே.நகர் தொகுதியிலும், தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1733728

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this