Jump to content

இலங்கையில் சர்தேசத்தின் தலையீடுகள் சாத்தியமா?


Recommended Posts

இலங்கையில் சர்தேசத்தின் தலையீடுகள் சாத்தியமா?

 

கடந்த காலத்தில் இலங்கை விவ­காரம் தொடர்­பாக ஜெனீ­வாவில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் கூட்டத் தொடர்­களில் ஆரா­யப்­பட்ட வேளை­களில் அர­சியல் உணர்­வுகள் கிள­றி­வி­டப்­ப­டு­வதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. ஆனால் தற்­போது நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் கூட்டத் தொட­ரின்­போது அத்­த­கை­ய­தொரு சூழ்­நிலை இல்லை. மாற்றம் ஏற்­பட்டு விட்­டது. முன்­னைய அர­சாங்­கத்தைப் போலன்றி தற்­போ­தைய அர­சாங்கம் சர்­வ­தேச சமூ­கத்­துடன் நல்­லு­றவைக் கொண்­டி­ருக்­கி­றது.

பெரும்­பா­லான மக்கள் நம்­பு­கி­றார்கள். அதனால் ஜெனீ­வாவில் இருந்து உண்­மை­யான அச்­சு­றுத்தல் ஒன்று வரு­வ­தாக இவர்கள் நோக்­க­வில்லை. இத்­த­கை­ய­தொரு சூழ்­நி­லையில் அர­சாங்கம் பல சட்­டங்­களை இயற்றும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­படக் கூடி­ய­தாக இருந்­தது. இவை பற்றி மக்கள் பெரி­தாக கவ­னத்தை செலுத்­த­வில்லை.

காணாமல் போனோர் விவ­கார அலு­வ­லக சட்­டத்தை திருத்­து­வ­தற்­கான நகல் வரைவை அர­சாங்கம் தயா­ரித்­தி­ருக்­கி­றது. இது தொடர்பில் வர்த்­த­மானி அறி­வித்­தலும் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கி­றது. சட்டமூலம் விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது. காணாமல் போகச் செய்­யப்­ப­டு­வ­தி­லி­ருந்து சகல ஆட்­க­ளையும் பாது­காப்­ப­தற்­கான சர்­வ­தேச சாச­னத்தை ஏற்றுக் கொண்டு நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான சட்டமூலம் ஒன்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த சாச­னத்தில் இலங்கை 2015 டிசம்பர் 10 ஆம் திகதி கைச்­சாத்­திட்­டது.

கடந்த காலத்தில் இலங்கை தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்கள் பெரும் அர­சியல் சர்ச்­சை­களைத் தோற்­று­வித்­தன. 2009 மே மாத நடுப்­ப­கு­தியில் போர் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்ட சில வாரங்­க­ளி­லேயே மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்­பாக தீர்­மானம் கொண்டு வரும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பித்­து­விட்­டன.

பெரும் எண்­ணிக்­கை­யி­லான குடி மக்கள் உயி­ரி­ழப்­புக்கள் மற்றும் பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்­க­ளுடன் முன்­னைய அர­சாங்கம் போரை நடத்­திய முறைக்கு எதி­ரா­ன­வை­யா­கவே தீர்­மா­னங்கள் அமைந்­தி­ருந்­தன. அத் தீர்­மா­னங்­களை கடு­மை­யாக எதிர்த்த அர­சாங்கம் அதற்கு சாத­க­மான முறையில் மக்­களின் உணர்­வு­களை கிள­றி­வி­டு­வ­தற்­கான இன்­னொரு வாய்ப்­பா­கவும் அவற்றைப் பயன்­ப­டுத்திக் கொண்­டது. 2015 க்கு முன்னர் ஜெனீ­வாவில் மனித உரி­மைகள் பேர­வையின் ஒவ்­வொரு கூட்டத் தொட­ருமே இலங்கை ஒரு பெரிய தேசிய நெருக்­க­டியை எதிர்­நோக்­கு­கின்­றது என்ற உணர்வை (தேசிய அர­சியல் பிர­சா­ரங்­களைப் பயன்­ப­டுத்தி) மக்கள் மத்­தியில் தூண்டி விடு­வ­தற்­கான சந்­தர்ப்­பங்­க­ளா­கவே அமைந்­ததைக் காணக் கூடி­ய­தாக இருந்தது. விடு­தலைப் புலி­க­ளி­ட­மி­ருந்து நாட்டின் ஐக்­கி­யத்­துக்கு தோற்­று­விக்­கப்­பட்ட இரா­ணுவ ரீதி­யான அச்­சு­றுத்­தலை முடி­வுக்­கு கொண்டு வந்­த­மைக்­காக அநி­யா­ய­மான முறையில் அர­சாங்­கத்தைத் தண்­டிப்­ப­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­படுவ­தாக அதன் தலை­வர்கள் கூறி­ய­போது உள்­நாட்டில் அர­சாங்­கத்தின் மீது பெரு­ம­ளவு அனு­தாபம் தோன்­றி­யது.

2012 தொடக்கம் 2014 வரை அடுத்­த­டுத்து நிறை­வேற்­றப்­பட்ட ஜெனீவாத் தீர்­மா­னங்­களை மக்கள் மத்­தியில் தனது தேசி­ய­வாத அர­சியல் நம்­பகத் தன்­மையை வலு ப் படுத்­து­வ­தற்கு அர­சாங்­கத்­தினால் பயன்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருந்­தது. அதன் விளை­வாக சர்­வ­தேச சமூ­கத்தின் மத்­தியில் அர­சாங்கம் அனு­தா­பத்தை இழந்­தது. குறிப்­பாக மேற்கு நாடு­களை அர­சாங்கம் பகைத்துக் கொண்­டது. ஜெனீ­வாவில் தீர்­மா­னங்­களைத் தோற்­க­டிக்க முயற்­சித்த வேளை எல்லாம் அர­சாங்கம் திரும்பத் திரும்ப தோல்­வி­க­ளையே சந்­திக்க வேண்­டி­யி­ருந்­தது.

அதன் விளை­வாக போர் முடி­வுக்கு பின்­னரான கால கட்­டத்தில் மனித உரி­மை­களை மதிக்­கின்ற நாடு என்ற பெயரை சம்­பா­தித்துக் கொள்ள முடி­யாமல் இலங்­கைக்கு அப­கீர்த்தி ஏற்­பட்­டது. சில மேற்­கு­லக நாடுகள் இலங்­கைக்கு விஜயம் செய்­வது ஆபத்­தா­னது என்று தங்­க­ளது பிர­ஜை­க­ளுக்கு அறி­வு­றுத்­தல்­க­ளையும் கூட விடுத்­தி­ருந்­தன. இது நாட்டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யான வெளி­நாட்டு முத­லீ­டு­களைக் கவர்வது பெரும் கஷ்­ட­மாக இருந்­தது.

முன்­னைய அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக வெளி­நா­டுகளுக்கு மத்­தியில் இலங்­கைக்கு அனு­கூ­ல­மில்­லாத சூழ்­நி­லை­யொன்று தோன்­றி­யி­ருந்­தது. அந்த சூழ்­நி­லையை தற்­போ­தைய அர­சாங்கம் கையாள வேண்­டி­யி­ருந்­தது. 2014 ஆம் ஆண்டின் இறு­தியில் இலங்கை அதன் மீது அர­சியல் மற்றும் பொரு­ளா­தார தடைகள் விதிக்­கப்­படக் கூடி­ய­தொரு திசையில் சென்று கொண்­டி­ருந்­தது போலத் தோன்­றி­யது.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­ட­மி­ருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கையை இலங்கை ஏற்­க­னவே இழந்­தி­ருந்­தது. வேறு நாடு­களும் ஒரு தலை­பட்­ச­மான தடை­களை விதிக்கக் கூடு­மென்ற விச­னமும் தோன்­றி­யது. 2015 ஐ.நா. மனித உரி­மைகள் பேரவைத் தீர்­மா­னத்தை எதிர்ப்­பேச்­சின்றி இணங்கிக் கொள்­வதை அல்­லது எதிர்ப்­பதை விடுத்து அதற்கு இணை அனு­ச­ரணை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் எடுத்த முடிவு புதிய தீர்­மா­னத்தின் ஒரு பங்­கா­ளி­யாக வரு­வ­தற்கு உத­வி­யது.

சர்­வ­தேச சமூ­கத்­தினால் இலங்­கை­யிடம் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கை­களில் தளர்வு ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இது வழி­வ­குத்­தது. அதே­வேளை இலங்கை அர­சாங்­கத்­துக்கும் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் இடை­யி­லான ஒத்­து­ழைப்பின் கார­ண­மாக தங்­க­ளது பிரச்­சி­னைகள் விரைவில் தீர்க்­கப்­பட்டு விடு­மென்ற எதிர்­பார்ப்பும் நம்­பிக்­கையும் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் தோன்­றின. இப்­போது 2017 ஆம் ஆண்டில் ஜெனீ­வாவில் கொண்டு வரப்­ப­ட­வி­ருக்கும் தீர்­மா­னத்­துக்கு இணை அனு­ச­ரணை வழங்­கு­வ­தற்கு இலங்கை திட்­ட­மி­டு­கி­றது. ஆனால் இத்­த­டவை எதிர்­பார்ப்­புகள் மிகவும் குறை­வா­கவே உள்­ளன.

2015 அக்­டோ­பரில் ஜெனீ­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தை­ய­டுத்து வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­று­வ­தற்கு இரு வரு­ட­கால அவ­காசம் தர வேண்­டு­மென்று இலங்கை வேண்­டுகோள் விடுத்­தி­ருக்­கி­றது. இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையில் மனித உரி­மை­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் உயர்ஸ்­தா­னிகர் இள­வ­ரசர் செயிட் பின் ராட் அல் ஹுசைன் பல உறு­தி­மொ­ழிகள் நிறை­வேற்றப் பட­வில்லை என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

நிலை­மா­று­கால நீதிச் செயன்­மு­றை­களின் பிர­தா­ன­மான கூறுகள் இந்த நிறை­வேற்­றப்­ப­டாத உறு­தி­மொ­ழி­களில் அடங்கும். உண்­மையைக் கண்­ட­றிதல், பொறுப்புக் கூறுதல், இழப்­பீடு மற்றும் நிறு­வன ரீதி­யான சீர்­தி­ருத்தம் ஆகி­ய­னவே அவை­யாகும். உண்மை கண்­ட­றியும் ஆணைக்­குழு, காணாமல் போனோர் விவ­கார அலு­வ­லகம், இழப்­பீ­டு­க­ளுக்­கான அலு­வ­லகம் மற்றும் விசேட நீதி­மன்­றங்கள் என்ற (2015 அக்­டோ­பரில்) உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட நான்கு பொறி­மு­றை­க­ளையும் அர­சாங்கம் இன்­னமும் செயற்­ப­டுத்­த­வில்லை. காணாமல் போனோர் விவ­கார அலு­வ­லகம் தொடர்­பான சட்டம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்டு விட்­ட­போ­திலும் அது இன்­னமும் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. குறிப்­பி­டத்­தக்க இந்த குறை­பா­டு­க­ளுக்கு மத்­தி­யிலும் அர­சாங்­கத்­தினால் கோரப்­பட்­டி­ருக்கும் கால அவ­காசம் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வை­யினால் வழங்­கப்­ப­டு­மென்றே தெரி­கி­றது.

மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னங்­க­ளுடன் தொடர்­பு­பட்ட விவ­கா­ரங்­களில் சர்­வ­தேச சமூ­கத்­துடன் முரண்­ப­டு­வதை நிறுத்­து­வ­தற்கு இலங்­கையின் புதிய அர­சாங்கம் காட்­டிய விருப்பம் உயர் மட்­டங்­களில் ஏற்­பட்ட மாற்­றத்தைப் பிர­தி­ப­லிக்­கி­றது. திசை மார்க்­கத்தில் ஒரு மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. அர­சாங்கத் தலை­வர்கள் இன ரீதி­யான, மத ரீதி­யான சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு எதி­ரான பிர­சா­ரங்­களைச் செய்து வன்­மு­றை­க­ளுக்கு வழி­வ­குக்கும் போக்கு இப்­போது இல்­லாமல் போயி­ருப்­பது மிகவும் பாராட்­டத்­தக்க மாற்­றங்­களில் ஒன்­றாகும்.

உள்ளூர் மட்­டத்தில் வெறுப்பு பிர­சா­ரங்கள் தொட­ரவே செய்­கின்­றன. அவற்றை உட­ன­டி­யாக முற்று முழு­தாக அடக்கி விடு­வது கஷ்­ட­மா­னதே. ஆனால் அத்­த­கைய பிர­சா­ரங்­க­ளுக்கு அர­சி­யல சமு­தா­யத்தின் உயர் மட்­டங்­களின் ஆத­ரவு இப்­போது இல்லை. அதனால் வெறுப்பு பிர­சா­ரங்கள் ஒரு மக்கள் இயக்­க­மாக மாறு­வ­தற்­கான உத்­தேசம் இன்றி காணப்­ப­டு­கின்­றன. அவை உள்ளூர் மயப்­ப­டுத்­தப்­பட்டு விட்­டன.

மறு­பு­றத்தில் இந்த வெறுப்பு பிர­சா­ரங்­களைச் செய்­ப­வர்­களை ஒடுக்­கு­வ­தற்கு அர­சாங்கத் தலை­வர்கள் தலை­மைத்­து­வத்தைக் கொடுக்­காமல் இருப்­பது வெறுப்பு பிர­சா­ரங்­க­ளினால் பாதிக்­கப்­ப­டு­கின்ற சமூ­கங்கள் மத்­தியில் அதி­ருப்­தி­யையும் ஏமாற்­றத்­தையும் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது. அதே­போன்றே போரினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தங்­க­ளது அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்கும் மனக் குறை­க­ளுக்கும் தீர்வு காண்­ப­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதில் அர­சாங்கம் காட்­டு­கின்ற தாம­தத்­தினால் பெரும் வேதனைக் குள்­ளா­கி­யி­ருக்­கி­றார்கள். காணாமல் போன தங்கள் குடும்­பத்­த­வர்­க­ளுக்கும் உற­வி­னர்­க­ளுக்கும் என்ன நேர்ந்தது என்று தெரி­யாமல் அவர்கள் ஏங்கிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். தங்­க­ளது காணிகள் தொடர்ந்தும் இரா­ணு­வத்­தி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டி­ருப்­பதால் அவர்கள் சொந்த இடங்­க­ளுக்கு திரும்ப முடி­யாமல் வழமை வாழ்வை முன்­னெ­டுக்க முடி­யாமல் தவிக்­கி­றார்கள்.

கால­வ­ரை­யறை

இலங்கை இன ரீதி­யாக பிள­வு­பட்­ட­தொரு சமு­தா­ய­மாக தொடர்ந்தும் இருப்­பதே பிரச்­சி­னையின் அடிப்­ப­டை­யாகும். இது ஒரு புதிய தோற்­றப்­பா­டல்ல. இந்தப் பிளவு 1948 ஆம் ஆண்டில் பிரித்தானிய­ரி­ட­மி­ருந்து இலங்கை சுதந்­திரம் பெறு­வ­தற்கு முன்னர் இருந்தே காணப்­ப­டு­கி­றது. 1936 ஆம் ஆண்டில் தனிச் சிங்­கள அமைச்­ச­ரவை (தமி­ழரோ அல்­லது முஸ்­லிம்­களோ அதில் இருக்­க­வில்லை)

1939 ஆம் ஆண்டில் ஐம்­ப­துக்கு ஐம்­பது கோரிக்கை (பாரா­ளு­மன்­றத்தில் சிங்­க­ள­வர்­க­ளுக்கும் சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கும் எண்­ணிக்­கையில் சமத்­து­வ­மான பிர­தி­நி­தித்­துவம்) ஆகி­ய­வற்றில் அந்த இனப்­பி­ளவு வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

இன்­றைய அர­சாங்­கத்தின் தலை­வர்கள் தாரா­ள­வாதப் போக்­கு­டை­வர்­க­ளா­கவும் இன­வாத உணர்வு அற்­ற­வர்­க­ளா­கவும் கரு­தப்­ப­டக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்ற அதே­வேளை, பல இனங்­க­ளையும் பல மதங்­க­ளையும் கொண்ட சமு­தா­ய­மொன்று எத்­த­கைய அர­சியல் வடி­வத்தை எடுக்க வேண்டும் என்­பது தொடர்பில் அவர்­களின் நோக்கு தெளி­வா­ன­தாக இல்லை. தங்­க­ளது நோக்கை அவர்கள் இன்­னமும் வெளிப்­ப­டுத்­த­வில்லை.

தேக்க நிலை­ய­டைந்­தி­ருக்கும் அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்த செயன்­மு­றை­களில் இதை தெளி­வாகக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்தம் தொடர்பில் அர­சாங்கத் தலை­மைத்­துவம் அதன் நிலைப்­பாட்டை இன்­னமும் முன்­வைக்­க­வில்லை. இது விட­யத்தில் தெளி­வான நோக்கு ஒன்று இல்­லாத நிலையில் பல்­லின, பல்­மத அர­சியல் சமு­தா­ய­மொன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான இலட்­சி­யத்­துக்­கா­கவும் இலங்கை சமு­தா­யத்தில் காணப்­ப­டு­கின்ற இன ரீதி­யா­னதும் மத ரீதி­யா­ன­து­மான துரு­வ­மய நிலை­களை இல்­லாமல் செய்­வ­தற்­கா­கவும் இவர்கள் குரல் கொடுக்கப் போவ­தில்லை.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மானம் தொடர்பில் வடக்கு, கிழக்­கிற்கும் நாட்டின் ஏனைய பகு­திகளுக்கும் இடையே ஒரு பிரிவு இருக்­கி­றது. தற்­போது நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்ற ஜெனீவா கூட்டத் தொடர் நாட்டின் ஏனைய பகு­தி­களில் மக்கள் மத்­தியில் பெரும் ஆர்­வத்­தையோ உணர்­வு­க­ளையோ ஏற்­ப­டுத்­த­வில்லை என்ற போதிலும் வடக்கு, கிழக்கில் உள்ள முன்­னைய போர் வல­யங்­க­ளிலும் புலம்­பெயர் தமிழ் சமூ­கத்தின் மத்­தி­யிலும் இன்­னமும் அது தொடர்பில் அக்­கறை ஆழ­மாக வெளிப்­ப­டு­கி­றது.

அங்கு வாழ்­கின்ற மக்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் சுமார் மூன்று தசாப்த கால­மாக நீடித்த போரில் நேர­டி­யாகப் பாதிக்­கப்­பட்­ட­வர்கள். தங்­க­ளுக்கும் தங்­க­ளது உற்றார், உற­வி­னர்­க­ளுக்கும் நீதி கிடைக்க வேண்டி அவர்கள் ஜெனீ­வாவில் நடை­பெறும் செயன்­மு­றை­களை உற்று நோக்­கி­ய­வர்­க­ளா­யி­ருக்­கி­றார்கள். சர்­வ­தேச தலை­யீடு தங்­க­ளது பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைத்து தங்­க­ளுக்கு நீதியைச் பெற்றுத் தரு­மென்று அவர்கள் நம்­பு­கி­றார்கள். இலங்­கை­யையும் விட படு­மோ­ச­மான மனித உரிமை மீறல்­க­ளையும் போர்க் குற்­றங்­க­ளையும் செய்த பல நாடு­களின் விவ­கா­ரங்­களில் சர்­வ­தேச சமூ­கத்­தினால் பெரி­தாக எதையும் செய்ய முடி­ய­வில்லை. அல்­லது எதை­யுமே செய்ய முடி­ய­வில்லை என்ற உண்­மையே இலங்­கையில் போரில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் சர்­வ­தேச தலை­யீட்டில் கொண்­டி­ருக்­கின்ற நம்­பிக்­கையும் எதிர்­பார்ப்­புமே உள்ள பிரச்சினையாகும்.

இலங்கை கோருகின்ற கால அவகாசத்தை வழங்கக் கூடாது என்றும் அதற்குப் பதிலாக சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்கின்ற விடயத்தில் இலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாக உறுதிமொழிகளை காற்றில் பறக்க விட்டதைப் போன்றே மீண்டும் நிகழும் என்றே இந்த அமைப்புகளும் கட்சிகளும் கவலைப்படுகின்றன. ஆனால் இலங்கை இருவருட கால அவகாசத்தைப் பெறப் போவது சாத்தியமே.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ள முக்கியமான அமைப்புகளில் ஒன்றான வண.பிதா எஸ்.கே. இம்மானுவேல் தலை மையிலான உலகத் தமிழர் பேரவை இருவ ருடகால அவகாசம் இலங்கைக்கு வழங்கப் படுவதை இணங்கிக் கொள்கின்ற அதே வேளை 2015 அக்டோபர் ஜெனீவா தீர்மா னத்தின் நிபந்தனைகளை இலங்கை எந்த வித தவிர்ப்புமின்றி முழுமையாக கால அட்டவணை அடிப்படையில் நடைமுறைப் படுத்துவதை மனித உரிமைகள் பேரவை வசதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. மனித உரிமைகள் பேர வையின் புதிய தீர்மானத்தில் இந்தக் கோரிக்கை உள்ளடக்கப்படுகின்றதோ இல் லையோ நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையாகவும் உறுதிமொழிகளைக் காப்பாற்றுவதில் பற்றுறுதியை வெளிக் காட்டும் ஒரு செயற்பாடாகவும் அரசாங்கம் உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஒரு தெளிவான திட்டத்தையும் கால அட்டவணையையும் தனது சொந் தத்திலேயே வகுத்துக் கொள்ள முடியும்.

 

கலா­நிதி ஜெகான் பெரேரா

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-03-18#page-5

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
    • Published By: RAJEEBAN    18 APR, 2024 | 03:14 PM   2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சவாலாக அமையக்கூடிய விதத்தில் காணப்பட்ட அவரது படங்கள் காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை உலகிற்கு தெரிவித்தன. அவர் பெரும் ஆபத்தின் மத்தியிலேயே தனது பணியை முன்னெடுத்தார். ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் 98 பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1992ம் ஆண்டுமுதல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு பதிவுசெய்ய தொடங்கியது முதல்  பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக இந்த ஆண்டே காணப்பட்டுள்ளது. காசாவிலிருந்து ஜனவரியில் வெளியேறியது முதல் அவரது பணி இந்த நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதாகவும் மாறியுள்ளது. காசாவில்  நடைபெறுவது உங்களின் ஊடங்களிற்கான ஒரு உள்ளடக்கடம் இல்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் உங்கள் விருப்பங்களை கருத்துக்களை பெறுவதற்காக தெரிவிக்கவில்லை. நாங்கள் நீங்கள் செயற்படுவதற்காக காத்திருக்கின்றோம், இந்த யுத்தத்தை நாங்கள் நிறுத்தவேண்டும் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/181378
    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.