Sign in to follow this  
நவீனன்

அரசியல் தலைமைகளில் நம்பிக்கையிழக்கும் மக்கள்

Recommended Posts

அரசியல் தலைமைகளில் நம்பிக்கையிழக்கும் மக்கள்

 

பாதிக்­கப்­பட்ட மக்கள் வீதி­க­ளிலும், இரா­ணுவ முகாம்­களின் எதி­ரிலும் போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றார்கள். இந்தப் போராட்­டங்கள் அர­சியல் ரீதி­யாக, அர­சியல் தலை­மை­க­ளினால் வழி­ந­டத்­தப்­ப­ட­வில்லை. ஆனால் போராட்­டங்கள் வடக்­கிலும் கிழக்­கிலும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. 

யுத்தம் முடி­வுக்கு வந்து எட்டு வரு­டங்­க­ளா­கின்­றன. ஆனால் இரா­ணு­வத்­தினரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள பொது­மக்­க­ளு­டைய காணிகள் இன்னும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. அர­சியல் கைதி­களின் விடு­த­லையில் காலக்­கெ­டு விதித்து மீறி­யதைத் தவிர அந்தப் பிரச்­சி­னைக்கு முற்­று­மு­ழு­தாகத் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய அக்­க­றையை அர­சாங்­கத்­திடம் காண முடி­ய­வில்லை. காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தொடர்பில் எத்­த­னையோ முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்டும், அவற்றில், அர­சாங்­கத்­தினால் பதில் கூறத்­தக்க வகை­யி­லான முறைப்­பா­டு­க­ளுக்குக் கூட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு அர­சாங்கம் ஆர்வம் காட்­டா­தி­ருக்­கின்­றது.

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் விட­யத்தில் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் பிரே­ர­ணைக்கு அமை­வாக ஒரு விசா­ரணை பொறி­மு­றையை உரு­வாக்கும் வகையில் காணாமல் போனோ­ருக்­கான செய­லகம் அமைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்ள போதிலும், அதன் செயற்­பாட்டை முடுக்கி விடு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் மந்த நிலையே காணப்­ப­டு­கின்­றது.

நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு கூறி வரு­கின்­றது. இதற்கு முன்னர் உரு­வாக்­கப்­பட்ட அனைத்து அர­சி­ய­ல­மைப்­பு­களும்,  நாட்டு மக்­களின் பங்­க­ளிப்போ அல்­லது அர­சியல் கட்­சி­களின் பங்­க­ளிப்போ பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

முதற் தட­வை­யாக நல்­லாட்சி அர­சாங்­கமே புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் நட­வ­டிக்­கையில் நாட்டு மக்­களின் கருத்­துக்­க­ளையும், மக்­களைப் பிர­தி­நி­தித்­துவப் படுத்­து­கின்ற அர­சியல் கட்­சிகள் மற்றும் பொது அமைப்­புக்கள், சிவில் அமைப்­புக்கள் என்ற பல­த­ரப்­பட்­ட­வர்­க­ளி­னதும் கருத்­துக்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து அவற்றைத் திரட்­டி­யி­ருக்­கின்­றது.

ஆயினும் அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட மக்கள் கருத்­த­றியும் குழு­வினால் திரட்­டப்­பட்­டுள்ள மக்­க­ளு­டைய கருத்­துக்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் போது உள்­வாங்­கப்­ப­டுமா என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே இருக்­கின்­றது. விசே­ட­மாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் ஒன்­றாக இணைக்­கப்­பட்டு, அந்தப் பிராந்­தி­யத்தில் தமிழ் பேசும் மக்கள் சுதந்­தி­ர­மாக நிர்­வாகச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு சமஷ்டி முறையில் அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும் என்று மக்கள் தமது கருத்­துக்­களில் விருப்பம் தெரி­வித்­தி­ருக்­கின்­றார்கள். 

ஆனால், புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக பல்­வேறு விட­யங்­களை ஆராய்ந்­துள்ள உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள், அர­சியல் நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்­றத்தில் இன்னும் விவா­திக்­கப்­ப­ட­வில்லை ஜன­வரி மாதம் முதல்­வா­ரத்தில் இந்த அறிக்­கைகள் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்த போதிலும், இரண்டு மாதங்­க­ளுக்கு மேலாகக் காலம் கடந்­து­விட்ட போதிலும், அது­வி­ட­யத்தில் அர­சாங்­கமோ அல்­லது, புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவோ எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­யையும் முன்­னெ­டுக்­க­வில்லை. காலம் கடந்து கொண்­டி­ருக்­கின்­றதே தவிர காரி­யங்கள் நடை­பெ­று­வ­தாகத் தெரி­ய­வில்லை.

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பதில் அர­சாங்கம் முனைப்பு காட்­ட­வில்லை என்ற கார­ணத்தை முன்­வைத்து, பாதிக்­கப்­பட்ட மக்கள் தாங்­க­ளா­கவே போராட்­டங்­களில் குதித்­தி­ருக்­கின்­றார்கள். 

நம்­பிக்­கைகள் நலிந்து போயின  நல்­லாட்சி அர­சாங்கம் என்று வர்­ணிக்­கப்­ப­டு­கின்ற புதிய அர­சாங்கம் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்டி, யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்கள் எதிர்­கொண்­டுள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தேர்­தலில் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், ஆட்சிப் பொறுப்பை ஏற்­ற­வுடன் முத­லா­வது முக்­கிய நட­வ­டிக்­கை­யாக, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை சம்­பந்­த­மாகக் கொண்டு வரப்­பட்ட பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்கி அந்தப் பிரே­ர­ணையை முழு­மை­யாக நிறை­வேற்­று­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்­தனர்.

ஐ.நா. மனித உரிமைகள் பேர­வையின் பிரே­ர­ணையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­களை நிறை­வேற்­று­வ­தாக சர்­வ­தே­சத்­திற்கு அர­சாங்கம் வழங்­கிய உறு­தி­மொழி, இந்த அர­சாங்கம் முன்­னைய அர­சாங்­கத்தைப் போலல்­லாமல் தமது பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் என்ற பாதிக்­கப்­பட்ட மக்­களின் எதிர்­பார்ப்­புக்கு ஊக்­க­ம­ளித்­தி­ருந்­தது. அவர்­க­ளு­டைய நம்­பிக்­கைக்குச் சற்று வலு­வேற்­றி­யி­ருந்­தது என்­று­கூடச் சொல்­லலாம்.  

ஆனால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­றத்­தக்க வகையில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் அமை­ய­வில்லை. அர­சாங்­கத்­தரப்பில் சிறி­த­ள­வி­லான முன்­னேற்­றங்­களே காணப்­பட்­டன. ஆனால், நல்­லாட்சி அர­சாங்­க­த்­திற்கு தென்­ப­கு­தியில் உள்ள கடும்­போக்கு அர­சி­யல்­வா­தி­க­ளினால் ஏகப்­பட்ட அழுத்­தங்கள் இருக்கின்றன. அதனால் அர­சாங்­கத்தை சங்­க­டப்­ப­டுத்தக் கூடாது. அர­சாங்­கத்­திற்குச் சந்­தர்ப்பம் அளிக்கும் வகையில் பாதிக்­கப்­பட்ட மக்கள் பொறுமை காக்க வேண்டும். பொறுமை காத்து அர­சாங்­கத்­திற்கு ஒத்­து­ழைக்க வேண்டும். அரசு நிச்­ச­ய­மாக பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் என்ற வகையில் பாதிக்­கப்­பட்ட மக்­களை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் ஆசு­வா­சப்­ப­டுத்திக் கொண்­டி­ருந்தார். 

இந்த வகை­யி­லேயே 2016 ஆம் ஆண்டு நிச்­ச­ய­மாக அர­சியல் தீர்வு காணப்­படும் என்று அவர் தமிழ் மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஊட்டி வந்தார். ஆனால், காலந்தான் கடந்­த­தே­யொ­ழிய அர­சியல் தீர்வு கிட்­ட­வு­மில்லை. அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய நம்­பிக்­கை­யான அறி­கு­றிகள் கூட தென்­ப­ட­வு­மில்லை.

இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான் பாதிக்­கப்­பட்ட மக்கள் அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை இழந்­தி­ருக்­கின்­றார்கள். அது மட்­டு­மல்ல. பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­து­போன்று போக்குக் காட்டி காலத்தை இழுத்­த­டித்துக் கொண்டி­ருந்த அர­சாங்­கத்­திற்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவைத் தொடர்ந்து வழங்­கிய போதிலும், தமது பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய தீர்க்­க­மான செயற்­பா­டு­களைத் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு முன்­னெ­டுக்­க­வில்­லையே என்று கூட்­ட­மைப்புத் தலை­மையின் மீது அதி­ருப்­தியும் கொள்ளத் தொடங்­கி­னார்கள்.

இந்த அதி­ருப்­தி­யும்­கூட பாதிக்­கப்­பட்ட மக்­களை, தங்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்குத் தாங்­களே போராட்­டத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்று தீர்­மா­னிப்­ப­தற்கும், அந்த வகையில் போராட்­டங்­களில் குதிப்­ப­தற்கும் வழி­யேற்­ப­டுத்­தி­யி­ருந்தது. மக்கள் தாங்­க­ளா­கவே வீதி­களில் இறங்கிப் போரா­டிய போதிலும், அந்த அழுத்­தத்தை அர­சாங்­கத்தின் மீது பிர­யோ­கிப்­ப­தற்கு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை துணி­ய­வில்லை. மாறாக போராட்­டங்­க­ளையும் கவ­ன­யீர்ப்புச் செயற்­பா­டு­க­ளையும் தணிப்­ப­தற்­கான முயற்­சி­க­ளி­லேயே அந்தத் தலைமை கவனம் செலுத்­தி­யி­ருந்­தது. 

முரண்­பா­டுகள்

நல்­லாட்­சிக்­கான அர­சாங்­கத்தைத் தெரிவு செய்­வ­தற்­காக 2015 ஆம் ஆண்டு நடத்­தப்­பட்ட பொதுத்­தேர்­த­லின்­போது, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தனது தேர்தல் அறிக்­கையில் - 'முன்னர் இருந்­த­வாறு ஒன்­று­பட்ட வடக்­கு, -­கி­ழக்கு அல­கைக்­கொண்ட சமஷ்டி கட்­ட­மைப்­பிற்­குள்ளே அதி­கா­ரப்­ப­கிர்வு ஏற்­பா­டுகள் தொடர்ந்து நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும்' என குறிப்­பிட்­டுள்­ளது. 

ஆனால் புதிய அர­சாங்கம் பத­வி­யேற்­றதன் பின்னர் கடந்த இரண்டு ஆண்டு காலப்­ப­கு­தியில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­ட­மாட்­டாது. சமஷ்டி ஆட்சி முறை­மைக்கு இடமே இல்லை. அதனை எண்­ணிப்­பார்க்­கவே முடி­யாது என்று திரும்பத் திரும்ப போதிப்­பதைப் போன்று அர­சாங்கத் தரப்பில் வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. ஆரம்­பத்தில் அமை­தி­யாக இருந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வர்கள், பின்னர் அவற்­றுக்கு எதி­ராகக் குரல் கொடுத்­தார்கள். பின்னர் அது படிப்­ப­டி­யாக மறைந்து போனது மட்­டு­மல்­லாமல், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சுமந்­திரன், வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­ப­டு­வதை முஸ்­லிம்கள் விரும்­ப­வில்லை. அதனால் அது சாத்­தி­ய­மில்லை என வெளிப்­ப­டை­யா­கவே கூறி­யி­ருக்­கின்றார்.

அதே­நேரம் தமிழ் மக்­க­ளது உட­னடிப் பிரச்­சி­னைகள் விட­யத்தில் 'நாம் நீதி­யா­னதும் நிலை­யா­ன­து­மான அர­சியல் தீர்­வொன்றைக் காண தொடர்ந்து முயற்­சிக்கும் அதேவேளை எமது மக்­க­ளது உட­னடித் தேவை­களைச் தீர்ப்­ப­திலும் முனைப்­புடன் ஈடு­ப­டுவோம் என அந்தத் தேர்தல் அறிக்­கையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு மக்­க­ளுக்கு உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது.

ஆனால், உட­னடி பிரச்­சி­னை­க­ளா­கிய இரா­ணு­வத்தினரின் வச­முள்ள பொது­மக்­க­ளு­டைய காணி­களை மீட்­ப­திலும், வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் அர­சாங்­கத்தைப் பொறுப்­பேற்கச் செய்­வ­திலும், தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­திலும், இளைஞர் யுவ­தி­க­ளுக்­கான வேலை வாய்ப்­புக்­களைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­திலும், யுத்­தத்­தினால் வித­வை­க­ளாக்­கப்­பட்ட பெண்­க­ளி­னதும், குடும்பத் தலை­மையை ஏற்­ப­தற்கு நிர்ப்பந்­திக்­கப்­பட்­டுள்ள பெண்­க­ளி­னதும் வாழ்­வா­தா­ரத்­திற்­கான சிறப்­பான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­பது உள்­ளிட்ட விட­யங்­களில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு முனைப்­புடன் செயற்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை.

பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பதில் கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக பிரச்­சி­னை­களை இழுத்­த­டித்து காலம் கடத்­து­கின்ற ஒரு போக்­கி­லேயே அர­சாங்கம் நகர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேர­வையின் தீர்­மா­னத்தை முழு­மை­யாக நிறை­வேற்­றுவோம் என்று உறு­தி­ய­ளித்த அரசு, சர்­வ­தே­சத்­திற்கு அளித்த வாக்­கு­று­திக்கு அமை­வாக காரி­யங்­களை முன்­னெ­டுக்­க­வில்லை. மாறாக, அந்த நிபந்­த­னையில் கூறப்­பட்­ட­வாறு நீதி விசா­ர­ணைக்­கான பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளையோ வழக்குத் தொடு­நர்­க­ளையோ, விசா­ர­ணை­யா­ளர்­க­ளையோ உள்­வாங்கப் போவ­தில்லை என்று அடித்துக் கூறி­விட்­டது. உள்­ளக விசா­ர­ணையே நடத்­தப்­படும் என்று அர­சாங்கம் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது. 

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானத்தை 2017 ஆம் ஆண்­டிற்குள் நிறை­வேற்ற வேண்டும் என்­பதே அந்தப் பிரே­ர­ணையின் உடன்­பா­டாகும். ஆனால் அந்தப் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டு, ஒன்­றரை வரு­டங்­க­ளுக்கு மேலா­கி­விட்ட போதிலும், அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் இத­ய­சுத்­தி­யுடன் முன்­னெ­டுக்­க­வில்லை. காலத்தைப் போக்­கு­வ­தி­லேயே கவனம் செலுத்­தி­யி­ருந்­தது என்றே கூற வேண்டும். 

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்­டு­மானால், அதற்­கான பொறி­மு­றைகள் காலக்­கி­ர­மத்தில் உரு­வாக்­கப்­பட்டு, அதற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும். அவ்­வாறு செய்­யாமல், காலத்தை கடத்­து­வது என்­பது நீதி வழங்­காமல் மறுப்­ப­தற்கு ஒப்­பா­ன­தாகும். அந்த வகை­யி­லேயே அர­சாங்கம் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது.

கால அவ­காசம் வழங்­கு­வது........

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் கொண்டு வரப்­பட்ட தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தற்கு, முன்­னேற்­ற­க­ர­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்று திருப்­தி­யோடு கூறத்­தக்க நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. இந்த நிலையில் மேலும் இரண்டு வருடம் கால அவ­காசம் வழங்­கப்­பட வேண்டும் என்று அர­சாங்கம் கோரி­யி­ருந்­தது. 

அர­சாங்கம் கோரு­கின்ற கால நீடிப்பை வழங்க வேண்டும் என்று ஒரு தரப்பும் கால அவ­காசம் வழங்­கப்­ப­டாமல் அடுத்­தகட்ட நட­வ­டிக்­கையில் ஐ.நா. இறங்க வேண்டும் என்று மற்­று­மொரு தரப்பும் கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்­ளன. சர்­வ­தேச அள­வி­லான இந்த முரண்­பட்ட நிலைப்­பாடு உள்­நாட்­டிலும் காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களை அர­சியல் தளத்தில் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்­குள்­ளேயும் காணப்­ப­டு­கின்­றது. 

அர­சாங்கம் கோரு­கின்ற கால அவ­கா­சத்தை வழங்­கலாம் என்று கூட்­ட­மைப்பின் தலைவர், இந்த வருடம் இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு பிரே­ர­ணையைக் கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருந்த வேளை அமெ­ரிக்­கா­வுக்கு வழங்­கி­யி­ருந்தார் என்று அமெ­ரிக்கத் தரப்பில் இருந்து தகவல் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. அதே­நேரம் கூட்­ட­மைப்பைச் சேர்ந்த 9 பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள் கால அவ­காசம் வழங்கக் கூடாது எனக்­கோரி, ஐ.நா. மனித உரி­மைகள் ஆணையா­ய­ள­ருக்குக் கடிதம் எழு­தி­யி­ருந்­தனர். கூட்­ட­மைப்பின் தலைவர் கால அவ­காசம் வழங்­கு­வதற்கு இணக்கம் தெரி­வித்­தி­ருக்க மறு­பக்­கத்தில் எண்­ணிக்­கையில் பெரும்­பான்­மை­யான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கால அவ­காசம் வழங்கக் கூடாது என்று மனித உரி­மைகள் ஆணை­யா­ள­ரிடம் கேட்­டி­ருந்­தார்கள். 

இந்த விடயம் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழுக்கூட்­டத்தில் கார­சா­ர­மான விவா­தத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் சார்பில் அமெ­ரிக்கா போன்­ற­தொரு நாட்­டுக்கு இலங்கை அர­சாங்­கத்தின் பொறுப்பு கூறு­கின்ற விட­யத்தில் (பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் விட­யத்தில்) இணக்கம் தெரி­விக்­கும்­போது அது தொடர்பில் கூட்­ட­மைப்­புக்குள் கூடி விவா­தித்­தி­ருக்க வேண்டும். கலந்­து­ரை­யாடி முடி­வெ­டுத்­தி­ருக்க வேண்டும் என்­பது அந்த விவா­தத்தின் போது சுட்­டிக்­காட்­டப்­பட்­டது, 

கூட்­ட­மைப்பின் பாராளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருந்து கொண்டு, தலை­மையைக் கேட்­காமல் கால அவ­காசம் வழங்கக் கூடாது என்று எப்­படி கடிதம் அனுப்ப முடியும் என்றும், கூட்­ட­மைப்பின் தலைவர் யாரைக் கேட்டு, அமெ­ரிக்­கா­விடம் இணக்கம் தெரி­வித்தார் என்று இந்த விவா­தத்­தின்­போது, பரஸ்­பரம் கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருந்­தது. கூட்­ட­மைப்­புக்­குள்­ளேயே வாதப்பிர­தி­வா­தங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த இந்தக் கூட்­டத்­திற்குப் பின்பே, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­தி­க­ளா­கிய பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள் பங்­கு­பற்­றிய கூட்­ட­மைப்பின் அவ­சர­மான உயர் மட்டக் கூட்டம் வவு­னி­யாவில் நடை­பெற்­றது. 

அந்தக் கூட்­டத்தில் இலங்கை அர­சாங்­கத்­திற்குக் கால அவ­காசம் வழங்­கு­வது தொடர்பில் விரி­வாகக் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. அந்தக் கலந்­து­ரை­யா­ட­லின்­போதும் கார­சாரமான கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. கூட்­டத்தின் முடிவில் ஒரு தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தாக ஊட­கங்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டது. 

அந்தத் தீர்­மா­னத்தில் இலங்கை அர­சாங்­கத்­திற்குக் கால அவ­காசம் கொடுக்­க­லாமா இல்­லையா என்­பது பற்­றிய வாச­கங்கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. 

மாறாக, 1) ஐ.நா. மனித உரிமைகள் பேர­வையால் 2015 ஆம் ஆண்டு இலங்கை அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தில் இலங்கை நிறை­வேற்ற வேண்டும் என்று கூறப்­பட்ட அத்­தனை விட­யங்­களும் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­பட வேண்டும். 

2) இவை கடு­மை­யான நிபந்­த­னை­களின் கீழ் நிறை­வேற்­றப்­ப­டு­வதை, ஐ.நா. மனித உரி­மைகள் உயர் ஸ்தானி­கரின் அலு­வ­லகம் ஒன்று இலங்­கையில் நிறு­வப்­பட்டு, மேற்­பார்வை செய்­யப்­பட வேண்டும். 

3) இலங்கை அர­சாங்கம் மேற்­சொன்ன விட­யங்­களை தகுந்த பொறி­மு­றை­களின் மூலம் நிறை­வேற்றத் தவ­றினால், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அந்தத் தீர்­மா­னத்தின் கீழ் கிடைக்க வேண்­டிய அனைத்து பெறு­பே­று­களும் கிடைக்கும் வண்­ண­மாக, சர்­வ­தேச பொறி­மு­றை­களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுதி செய்ய வேண்டும் என்ற மூன்று விட­யங்­களை அந்தத் தீர்­மானம் உள்­ள­டக்­கி­யி­ருந்­த­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இந்த மூன்று விட­யங்­க­ளுமே, இலங்கை அர­சாங்கம் ஐ.நா. பிரே­ர­ணையை நிறை­வேற்­ற­ுவ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளாமல் காலத்தைக் கடத்தும் நோக்­கத்­துடன் இழுத்­த­டித்துச் செயற்­ப­டு­கின்ற பொறுப்­பற்ற தன்­மை­யுடன் தொடர்­பு­பட்­டி­ருக்­கின்­றன. 

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் வகையில் அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணு­கின்ற முறையில் எடுக்­கப்­ப­டு­கின்ற நட­வ­டிக்­கைகள் என்­பது ஐநாவின் பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­க­ளாகும். இந்த நட­வ­டிக்­கை­களை உரிய முறையில் எடுக்­காமல் அர­சாங்கம் காலம் கடத்­து­கின்ற கார­ணத்­தி­னா­லேயே, பாதிக்­கப்­பட்ட மக்கள் காணி­களைத் திருப்பித் தரு­மாறு கோரியும், வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்குப் பொறுப்பு கூறு­மாறு கோரியும், தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய வேண்டும் எனக் கோரியும் பல்­வேறு போராட்­டங்­களை நடத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். போராட்டம் நடத்­து­ப­வர்கள் அர­சாங்­கத்­திற்குக் கால அவ­காசம் கொடுக்க வேண்டாம். வேறு வழி­களில் அர­சாங்­கத்­திற்கு அழுத்­தத்தைக் கொடுத்து அதனை;ச் செயற்­படச் செய்­யுங்கள் என்று கோரு­கின்­றார்கள். 

ஆனால் அவர்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­தி­க­ளா­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாராளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மாகாண சபை உறுப்­பி­னர்­களும் இணைந்து ஐ.நா. பிரே­ர­ணையில் கூறப்­பட்­டுள்ள அத்­தனை விட­யங்­க­ளையும் அர­சாங்கம் நிறை­வேற்ற வேண்டும் என்று வலி­யு­றுத்தி தீர்­மானம் மேற்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். 2015 ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை நிறை­வேற்ற வேண்டும் என்று 2017 ஆம் ஆண்டு பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­திகள் கூடி தீர்­மானம் நிறை­வேற்­றி­யி­ருக்­கின்­றார்கள். 

இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஒப்­புக்­கொண்ட விட­யத்தைச் செய்ய வேண்டும் எனக் கூறு­வ­தையும், அதனை நிறை­வேற்­று­கின்ற பொறுப்பை ஐ.நா. ஏற்று நடத்த வேண்டும் இல்­லையேல் ஐ.நா. அதனைப் பொறுப்­பேற்க வேண்டும் என்று நிலை­களில் ஏற்­பட்­டிக்­கின்ற தீவி­ரத்தைப் பார்த்து, சாதா­ர­ண­மாகக் குழந்­தைகள் கூட கூறு­வார்கள். இதற்கு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பிர­திநி­திகள் ஒன்று கூடி பல மணித்­தி­யா­லங்கள் விவாதம் நடத்­தி­யி­ருக்க வேண்­டுமா என்ற கேள்வி எழு­கின்­றது. 

தாம­திக்­கப்­ப­டு­கின்ற நீதி மறுக்­கப்­பட்­ட­தற்கு சம­னாகும் என்­பது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வர்­க­ளுக்குத் தெரி­யா­தி­ருக்க முடி­யாது. அதனால், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பதில் இனி­மேலும் காலம் தாழ்த்­து­வது என்­பது ஏற்­றுக்­கொள்ளக் கூடிய விட­ய­மல்ல என்­பதை அவர்­க­ளு­டைய உள் மனங்கள் நிச்­ச­ய­மாக இடித்­துக்­ கூறும் என்­பதில் சந்­தே­க­மி­ருக்­காது. 

மொத்­தத்தில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் வவு­னியா கூட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மானம் என்­பது நிலை­மை­களை சீர்­தூக்கிச் சிந்­திப்­ப­வர்­க­ளுக்கு, உள்­ளொன்றை வைத்துப் புற­மொன்றைக் கூறி­ய­தையே வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது என்­பது தெரிய வரும். 

கால அவ­காசம் பற்றி வவு­னியா கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை. கால அவ­காசம் கேட்­பது அர­சாங்­கத்தைப் பொறுத்­தது. அதனை வழங்­கு­வது அமெ­ரிக்கா உள்­ளிட்ட சர்­வ­தேச நாடு­களைப் பொறுத்­தது. எனவே, கால அவ­காசம் என்ற விட­யத்­திற்கும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கும் சம்­பந்­தமே இல்­லாத விடயம் என்று வவு­னியா கூட்­டத்தின் பின்னர் தலை­வர்கள் முழங்­கு­கின்­றார்கள். அறிக்­கை­களும் வரு­கின்­றன. 

எனவே பாதிக்­கப்­பட்ட மக்கள் தலை­வர்கள் மீது நம்­பிக்கை இழந்து தாங்­க­ளா­கவே போராடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கண்டு அமை­தி­யான முறையில் மறு­வாழ்வு வாழ வேண்டும் என்­பதே அவர்­க­ளு­டைய நோக்­கமும் தேவையும் ஆகும்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு திசையிலும், அவர்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் வேறு ஒரு திசையிலும் பயணம் செய்யத் தொடங்கியிருப்பதையே இப்போதைய இந்த நிலைமைகள் பிரதிபலிக்கின்றன.  

 

செல்­வ­ரட்னம் சிறி­தரன்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-03-18#page-1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this