colomban

இன்னொரு பலஸ்தீனம் ஆகி வருகின்ற யாழ். சோனகத்தெரு..

Recommended Posts

colomban    170

“யாரோட இடத்துக்கு யாருடா பெயர் மாற்றுவது …?” எனது முகப்புத்தக கணக்கின் மெசன்ஜசர் ஊடாக வந்திருந்த கேள்வி அது . அதோடு நிற்கவில்லை .ஆங்கிலத்தில் மோசமான வார்த்தைகளால் திட்டித்தீர்த்திருந்தார் நாகரிகமாக ஆடை அணிந்திருந்த கௌரவமான வேலை பார்க்கும் அந்த தமிழ் சகோதரர் ஒருவர்.

Google map இல் யாழ்ப்பாண சோனக தெருவில் தவறான ,பிழையான பெயர்கள் இடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி எழுதிய கட்டுரையின் தாக்கம் அது . “சோனியெல்லாம் யாழ்ப்பாண காணிகளை குறைந்த விலைகளில் விற்குதுகள் .வாங்கி வளைத்துப்போட்டால் முழு ஏரியாவையும் நம்மட கொண்ரோலுக்கு கொண்டு வரமுடியும்” ஐக்கிய இராச்சியத்தில் நான் வாழுகின்ற நகர் ஒன்றில் உள்ள கடை ஒன்றில் 10 வருடங்களுக்கு முன்னர் பிற இனத்தவர்  ஒருவர் எனக்கு தமிழ் தெரியாது என்று எண்ணி இன்னொருவரிடம்   கூறியது இப்போதும்  ஞாபகத்துக்கு வருகிறது  .

இனவாதம் ஏடுகளில் மட்டும்தான் எரிக்கப்பட்டு உள்ளனவா ? உள்ளங்களில் எல்லாம் பள்ளங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறன இந்த இனவாதமும் இன துவேஷங்களும் .. மீள் குடியேற்றத்தில் அனாதைக்  குழந்தைகளாய் ஆக்கப்பட்டுள்ள யாழ் முஸ்லிம்கள் இன்னொரு பலஸ்தீன சரிதத்துக்கு காரணமாக இருந்து விடக்கூடாது. அல்லாஹ்வின் பெயர்கள் கூறி அழைக்கப்பட்ட 16 பள்ளிவாசல்கள்  மற்றும் முஸ்லிம் பெயர்கள் கொண்ட நான்கு பாடசாலைகள் முஸ்லிம் அல்லாதவர்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதை எந்த முஸ்லிமாவது விரும்புவார்களா.. ?

யாழ்ப்பாண சோனக தெரு படிப்படியாக முஸ்லீம் அடையாளத்தை இழந்து கொண்டு வருவதாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் வாழும் அப்துல் கரீம்  ஹஸ்ஸான் கவலை பட தெரிவித்திருந்தார் . ஓரு காலத்தில் முற்று முழுதாக முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருந்த நகரத்தோடு அண்டி இருந்த செம்மா தெரு இப்போது முஸ்லிம்கள் கையில் இருந்து முற்று முழுதாக பறிபோய் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிகின்றன .

புதிய சோனக தெரு கிராமத்தில் மாத்திரமே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக    வாழ்வதாகவும் ஏனைய பகுதிகளில் அநேக வீதிகளில் உள்ள முஸ்லிம்களின் காணிகள் மற்றும் வீடுகள் பிற இனத்தவர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண சோனகத்தெரு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் நூற்றுக்கு நூறு வீதமும் முஸ்லீம்களை கொண்டிருந்த யாழ்ப்பாண சோனக தெரு இன்று பண தேவை கொண்ட பல முஸ்லீம்களால்  பிற இனத்தவர்களுக்கு  விற்கப்பட்டு பறிபோய்க்கொண்டிருப்பதை கண்ணுக்கு முன்னால் காணக்கூடியதாக இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன .

பலஸ்தீன பூமி நம்மிடம் இருந்து பறி போனதும் இவ்வாறுதான் என்பதை இங்கே ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது . இன்னொரு விடயத்தை  கேள்விப்பட்ட போது ஆடித்தான் போய்விட்டேன் .அந்த  விடயம் எனது குடும்பத்தாரும் எனக்கு தெரிந்தவர்களும் நேரடியாக சந்தித்த ஒன்றே. பண ஆசை கொண்ட காணி புரோக்கர்கள் , வீடு வாசல்கள் ,கடைகளை யாழ்ப்பாணத்தில்கொ ண்ட, வெளி இடங்களில் வாழ்ந்து வருகிற யாழ் முஸ்லீம் குடும்பங்களிடம் யாழ்ப்பாண நிலவரம் குறித்து தவறான, நேர் மறையான விடயங்களை கூறி சொத்துக்களை பிற இனத்தவர்களுக்கு  விற்க தூண்டுகிற நிலை காணப்படுவதாக தெரிய வருகிறது

சகோதர சகோதரிகளே..! பரம்பரைகளின் எண்ணிக்கை தெரியாமல்   முஸ்லிம்கள் வாழ்ந்த ஒரு மண்ணை , இலங்கையில் முஸ்லிம்கள் முதல் முதல்  குடியேறியதாக கூறப்படுகிற ஓரு பூமியை அற்ப காசுக்காக தாரை வார்ப்பது எந்த வகையில் நியாயம் ?. இவ்வாறான முஸ்லிம்களின் சொத்துக்கள் பறிபோவதை தவிர்க்க தனவந்தர்கள் , முஸ்லீம் அமைப்புக்கள் முன் வர வேண்டும் . தவறும் பட்சத்தில் யாழ்ப்பாண சோனகதெரு இன்னொரு பலஸ்தீனமாக பறி போவது தவிர்க்க முடியாததாக இருக்கும்.

-முஹம்மது ராஜி

AkuranaToday | Read more at http://www.akuranatoday.com/news/?p=116697 .

 

Share this post


Link to post
Share on other sites
karu    147

உந்த ஆள் சொல்லுறதிலயும் உண்மையிருக்குப் பாருங்கோ!  இப்பிடித்தான் திராய்க் கேணி> மீனோடைக்கட்டு> சம்மாந்துறை> நிந்தவூர்> மூது}ர் என்று பல இடங்களிலயிருந்து தமிழ்ச் சனத்தையும் வேற்று இனத்தாடகள் கலைச்சிப்போட்டினம்.

Share this post


Link to post
Share on other sites
Nathamuni    1,150

யாரப்பா இந்த அக்குறணை டுடே பினாத்தல்களை இங்க போடுவது....

சில நபர்களுக்கு... பேனாவும் பேப்பரும் கிடைத்தால் அல்லது மைக்கும் மேடையும் கிடைத்தால், என்ன எழுதுவது, பேசுவது என்று புரியாமலே வெட்டிப் புடுங்குவார்கள்.

சும்மா கிழக்கில் இருந்து வடக்கு குறித்து அலம்பரை பண்ணுகிறார்.

யாழ்ப்பாணத்தில், ஓட்டுமடம், பொம்மைவெளி பகுதி தான் முஸ்லிம்கள் வாழும் பகுதி. தீவுப் பகுதியில் சாட்டி தவிர்ந்த வெறும் எங்குமே அவர்கள் இல்லை. இதில சோனக தெரு எங்கே இருக்கிறது?

கொள்ளுப்பிட்டி முதல் பாணந்துறை வரை சிங்களவன் வித்து விட்டு போறான். 

காத்தான்குடி, சம்மாந்துறை பகுதி எல்லாம் தமிழன் வித்து விட்டு போறான்.

இவருக்கு முஸ்லீங்கள் விற்பது பெரிய பிரச்னையாம்.

பணம் தேவைபட்டவன் விக்கிறான். பணம் உள்ளவன் வாங்குகிறான்.
உலகம் முழுவதும் உள்ள நியதி. இதனுள் என்ன மதமும் இனமும் ?

இது போல் இன மத ரீதியாக சிந்தனை செய்ததால் தான், பொது பல இவர்களுக்கு எதிரான அரசியல் செய்கிறது.

Edited by Nathamuni
  • Like 1

Share this post


Link to post
Share on other sites
alvayan    95

இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக கடந்த 15 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த நியமனம் நேற்று வெள்ளிக்கிழமை(17) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக கடந்த 15 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தார்.

மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜே.லெம்பேட் என்பவரே இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்ட ஏ.ஜே.லெம்பேட் இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலை அலுவலகத்தில் கடந்த புதன் கிழமை 15 ஆம் திகதி காலை 8 மணியளவில் ஒப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

 

இந்த நிலையில் குறித்த நியமனத்தை இரத்துச் செய்ய தொடர்ச்சியாக அரசியல் ரீதியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தது.

 

மேலும் 15 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நியமனத்தை குழப்பியடிக்கும் வகையில் அமைச்சர் ஒருவர் செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

எனவே ஏற்கனவே இருந்த முகாமையாளரை மீண்டும் நியமிப்பதற்கு குறித்த அமைச்சர் துரித முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ள முகாமையாளரின் பதவி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சேவையின் வடமாகாண மனிதவள முகாமைத்துவப் பகுதியூடாக நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் சாலைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

தரம் v பதவிக்கு உயர்த்தப்பட்டு மன்னார் சாலையில் சாலை முகாமையாளர் பதவிக்கு நியமித்து 07-03-2017 அன்று வழங்கப்பட்ட கடிதம் உடனடியாக நடைமுறைப்படுத்துவம் வகையில் இரத்துச் செய்கின்றேன்.

அதன் பிரகாரம் நீங்கள் இதற்கு முன்னர் இருந்த பதவியிலும், தரத்திலும் ஈடுபட வேண்டும் என்பதை அறியத்தருகின்றோம்.

மேற்படி பதவிக்கு சொந்தமான கடமை நடவடிக்கைகளை முறைப்படி மன்னார் சாலையில் முன்பிருந்த சாலை முகாமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.(ஸெய்தி ஒன்றிலிருந்து சுட்டது0

இந்த இனப் பற்றாளனை இதுக்கும் பதில் சொல்லச் சொல்லுன்கோ......

Share this post


Link to post
Share on other sites
nunavilan    1,952

இப்படியான சில செய்திகளை மட்டுமே பொறுக்கி எடுத்து இங்கு இணைத்து சிலர் சுய இன்பம் காண்கிறார்கள்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
colomban    170
4 hours ago, nunavilan said:

இப்படியான சில செய்திகளை மட்டுமே பொறுக்கி எடுத்து இங்கு இணைத்து சிலர் சுய இன்பம் காண்கிறார்கள்.

எதுவும் உள்நோக்கம் இல்லை நுணா. 

இப்படியும் அபாண்டமாக சில பத்திரிகைகளில் எழுதுகின்றார்கள் என காண்பிப்பதற்காகதான் இவை இணைக்கப்படுகின்றது.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
colomban    170

வரலாறு ,பண்பாடு அழிந்து போவதை தடுக்க வீடியோ மூலமாக யாழ் முஸ்லிம்கள் முயற்சி .

யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு மற்றும் பண்பாடு  திட்டமிட்ட ரீதியில் அழிக்கப்பட்டு வருவதை  தடுக்கும் ஒரு முயற்சியாக யாழ்ப்பாண சோனகதெருவில் உள்ள அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வீடியோ தொகுப்பு ஒன்றை வெளியிடும் பணியில் யாழ்ப்பணம் 76 என்கிற குழு இறங்கியுள்ளது . ஏற்கனவே google map இல் யாழ்ப்பாண சோனக தெருவில்  வீதிகளின் பெயர்கள் தவறாக மாற்றப்பட்டுள்ளதை முன்னெடுத்த அந்த குழு, youtube இல் jaffna 76 என்ற தனியான சணல் ஒன்றை ஆரம்பித்துள்ளது .

இதன் படி யாழ்ப்பாண சோனக தெருவில உள்ள  அனைத்து  வீதிகள் , பள்ளிவாசல்கள் , முஸ்லீம் பாடசாலைகள் மற்றும் அங்கு நடைபெறும் முக்கியமான முஸ்லீம் வைபவங்கள் , வரலாற்று ஆவணங்கள் ,வரலாற்று பதிவுகள் ஆகியன பதிவேற்ற திட்டமிடப்பட்டுள்ளன . அரசியல் ரீதியாக கைவிடப்பட்டுள்ள யாழ்ப்பாண முஸ்லிம்களின் உடமைகளின் நிலை பற்றிய சர்வதேச விழிப்புணர்வு ஒன்றையையும் இதன் மூலம் ஏற்படுத்த முடியும் என அந்த குழு நம்புகிறது . இதன் முதல்கட்டமாக யாழ்ப்பாண சோனக தெருவில உள்ள  பள்ளிவாசல்கள் , வீதிகள் ,மற்றும் பாடசாலைகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன .  யாழ்ப்பணத்தில் இருந்து சமாதான நீதவான் அப்துல் கரீம் ஹஸ்ஸான் வீடியோ மூலமாக இவற்றை தொகுத்து வழங்கி வருகிறார் . பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோக்களை jaffna 76 என்று தேடுவதன் (search ) பண்ணி காண முடியும். ( https://www.youtube.com/channel/UCLPyJpzYy8SXk5yOpewhtOg ) 

 


AkuranaToday | Read more at http://www.akuranatoday.com/news/?p=119111 .

Share this post


Link to post
Share on other sites