Jump to content

அடுத்தவர்களுக்கு உதவுவுது சிறப்பு... ஆனாலும்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பழங்காலத்தில் சாஸ்திரம், அறிவியல், பொருளாதாரம் , தத்துவம் என சகல வித்தைகளிலும் ஞானம் பெற்றவர் சாணக்கியர். அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர். சந்திர குப்தனின் மகனாவார்.

சாணக்கியரின் அனுபவத்தாலும் நுண்ணிய கூர்திறனாலும் பலவிதங்களில் இவரது அறிவுரை எல்லா மேதைகளாலும் பின்பற்றப்பட்டது. இவருக்கு விஷ்னு குப்தா என்று இன்னொரு பெயரும் இருந்தது. அவர் குறிப்பிடும் இந்த 4 வகை மனிதர்களுக்கு உதவி செய்வதால் நமக்குதான் பிரச்சனைகள் ஏற்படும். அவர் கூறுவது யாரென்று பார்க்கலாமா.

விசித்திர உலகம் :

உலகமே பல விசித்திரங்களை உள்ளடக்கியது. நல்ல நோக்கத்தோடு செய்யப்படும் விஷயங்கள் நேர்மறை வலிமை பெற்று உங்களை திடமாக்கும். தீயவைகளிடம் நாம் நெருங்கும்போது அவற்றின் எதிர்ம்றை நம்மை தாக்கும் என்பது விஞ்ஞானம், ஆன்மீகம் என இரண்டுமே கலந்த உண்மை

புன்னகை :

நம்மை சுற்றியிருப்பவர்கள் யார் என நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு சிறு புன்னகையோ, துக்கமோ சுற்றியிருப்பவர்களை ஈர்த்துவிடும். ஆகவே சுற்றி எந்த மாதிரி மனிதர்களை நீங்கள் வைத்திருக்க வெண்டும் என்று முதலில் தீர்மானியுங்கள். சாணக்கியரின் கூற்றுப்படி நீங்கள் கீழ்கண்ட மனிதர்களுக்கு உதவியே செய்யக் கூடாது. பாவம் புண்ணியம் பார்த்து செய்தால் அவை உங்கள் வாழ்க்கையில் பரிதாபத்தையே தரும் என்று சொல்கிறார். அவர்கள் யார் என பார்க்கலாமா?

#1- பிரச்சனைகொண்ட மனிதன் : சிலர் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டேயிருப்பார்கள். தீர ஆராய்ந்தால் அவர்களின் குணமே காரணமாகும். மோசமான குணம் கொண்டவர்கள் இப்படி பிரச்சனைகளை சிக்கிக் கொண்டேயிருப்பார்கள். அவர்களுக்கு உதவ முன்வந்தால் நீங்களும் பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்புண்டு.

#2- உண்மையில்லாத மனிதன் : சிலரிடம் உண்மையே இருக்காது. எப்போதும் போலித்தனமான வேஷம் கட்டிக் கொண்டு நல்லவர்களாக பேசுவார்கள். பொய் எப்போதும் பேசுவார்கள். அவர்களுக்கு உதவினால் உங்களை பிரச்சனையில் மாட்டிவிடுவார்கள் என்பது 100 சதவீதம் உண்மை.

#3- கவலை தோய்ந்தவர்கள் : எப்போதும் ஏதாவது பறிகொடுத்தவர் போல் தனிமையகவும், கவலையாகவுமே சிலர் இருப்பார்கள். எப்போதும் எதிர்மறையாகவே பேசுவார்கள். இவர்களை சமாதனப்படுத்தினாலோ அல்லது உதவினாலோ அவர்களின் எதிர்மறை உங்களையும் தாக்கும் அபாயம் உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஆண்கள் மீதோ அல்லது பெண்கள் மீதோ விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்கு முழுக்க அவர்களின் சுய நலமே காரணமாகும்.

#4- முட்டாள்கள் : முட்டாள்களுக்கு உதவ நீங்கள் வரிந்து கொண்டு நீங்கள் போனால் நீங்களும் முட்டாளாகிப் போவார்கள். அவர்களுக்கு புரிந்து கொள்ளவும் இயலாது. அவர்கள் உங்களுக்கு பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடுவார்கள். ஆகவே முட்டாள்களுக்கு உதவுவது ஆபத்தே.

Read more at: http://tamil.boldsky.com/insync/life/2017/chanankys-niti-never-help-ro-do-good-these-4-people/slider-pf85417-014655.html

Link to comment
Share on other sites

உந்த நான்குவகையிலும் ஏதோ ஒன்றில் அடங்காத ஒருவர் ஏன் உதவிகேக்கபோகின்றார்?

சந்திர குப்தனின் மகனுக்கு களண்டுபோட்டுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Knowthyself said:

உந்த நான்குவகையிலும் ஏதோ ஒன்றில் அடங்காத ஒருவர் ஏன் உதவிகேக்கபோகின்றார்?

சந்திர குப்தனின் மகனுக்கு களண்டுபோட்டுது

 
 

யுனி செமன்ஸ்ரர் லீவு. ரெயின் ஸ்ரைக், உள்நோக்கத்துடன் பெடியளைக் வெட்டிவிட்டு.... யுனில இருந்து வீடு திரும்ப நம்ம கார் ரெடி... 

ஹி...ஹு...நாலு.... பிகருங்களுக்கு லிப்ட் கொடுத்து நம்ம காரில ஸ்ரைலா ஊருக்கு கிளம்ப... ரயர் பிளாட் ஆகுது.

அந்த நேரம் பார்த்து ஜிம்மில இருந்து வெளிய வாறீங்க...

அட... விடுங்க... இதுக்குப் போயெல்லாம்... ஜக்கா... நான் தூக்கிறன்... நீங்கள் ஆறுதலா மாத்துங்க... என்று சொல்லி உதவிக்கு வருவீங்க பாருங்க.... அது!!! :grin:

இதில பாருங்க...

நீங்க flat tire உடன் நிக்கிறீர்கள்.

நான் ஜிம்மில் இருந்து வெளியே வருகிறேன்.

நிலைமை பார்த்து விட்டு அப்படியே ஓரமா நிக்கும் பிகரின் ஒன்றின் காதில் சொல்கிறேன். 'அய்யய்யோ, இந்தாள் காரிலேயே... போன கிழமை தண்ணிய போட்டு ஓடி போலீசில் மாட்டி கோர்ட்டில் கேஸ்.

இவரை நம்பியா... 

இதுல நான் சாணக்கியர்... பிகருக்களுக்கு... ரூல் நம்பர் 4.

(உதவுவதும்.... உதவி பெறுவதும் ஒண்ணுதான்... ஹி ஹீ.) :grin::grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.