Jump to content

பட்ஜெட்டைப் புறக்கணித்த மூன்று அமைச்சர்கள்... அதிர்ச்சியில் சசிகலா அணி எம்எல்ஏ-க்கள்! #VikatanExclusive


Recommended Posts

பட்ஜெட்டைப் புறக்கணித்த மூன்று அமைச்சர்கள்...  அதிர்ச்சியில் சசிகலா அணி எம்எல்ஏ-க்கள்!  #VikatanExclusive

நிதி அமைச்சர் ஜெயக்குமார்


நிதிஅமைச்சர் ஜெயக்குமாரின் பட்ஜெட்டை சசிகலா அணியிலிருக்கும் மூன்று அமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர். இது, அந்தத் தரப்பு எம்எல்ஏ-க்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையின் முதல் பட்ஜெட், இன்று சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது. நிதிஅமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு பட்ஜெட் 2017 ஐ தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, சசிகலாவை ஜெயக்குமார் புகழ்ந்து பேசியதற்கு எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து, சுமார் 3 மணி நேரம்  பட்ஜெட்டை தாக்கல்செய்தார் அமைச்சர் ஜெயக்குமார். 

தமிழக சட்டப்பேரவைக்குள் சீனியாரிட்டி அடிப்படையில் அமைச்சர்கள் அமர்ந்திருப்பார்கள். பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று அமைச்சர்கள் அவைக்கு வரவில்லை. இது, சசிகலா தரப்பு எம்எல்ஏ-க்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த எம்எல்ஏ-க்கள், பட்ஜெட்டின்போது இதுதொடர்பாக விவாதித்தனர். 

இதுகுறித்து சசிகலா தரப்பினரிடம் கேட்டபோது, "அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் டெல்லியில் உள்ளனர். இவர்கள், தம்பிதுரை எம்பி தலைமையில் தேர்தல் கமிஷனரைச் சந்திப்பதற்காகச் சென்றுள்ளனர். சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம், ஆர்.கே.நகர் தொகுதியில் 'இரட்டை இலை' சின்னத்தை ஒதுக்குவது தொடர்பாகத் தேர்தல் கமிஷனரிடம் வலியுறுத்த உள்ளனர். இதனால்தான், அவர்கள் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை" என்றனர். 

இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், "பட்ஜெட் கூட்டத்தொடர் என்பது அனைத்துத் துறைகள் சம்பந்தப்பட்டது. இதனால், அனைத்துத் துறை அமைச்சர்களும் கண்டிப்பாக பட்ஜெட் தாக்கலின்போது பங்கேற்பர். அமைச்சர்களில் மூன்று பேர் புறக்கணித்திருப்பது பட்ஜெட்டையே புறக்கணிப்பதற்குச் சமம். உள்கட்சி விவகாரம் காரணமாக சம்பந்தப்பட்ட மூன்று அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக சசிகலா தரப்பு தெரிவிக்கிறது. இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட் கூட்டத்தைப் புறக்கணிப்பதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றனர். 

மா.சுப்பிரமணியன்

இதுகுறித்து தி.மு.க-வைச் சேர்ந்த மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ கூறுகையில், "சொத்துக்குவிப்பு வழக்கில் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று, அரசு ஆவணமான பட்ஜெட் காப்பியை அமைச்சர் ஜெயக்குமார் வைத்தது குற்றமாகும். இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட் கூட்டத்துக்கே மூன்று அமைச்சர்கள் வரவில்லை. இந்த முக்கியமான தருணத்தில் மக்களைப் பற்றி கவலைப்படாமல், இரட்டை இலை சின்னத்தைக் காப்பாற்றுவதே அவர்களுக்கு முக்கிய வேலையாக இருக்கிறது. அமைச்சர்களும், எம்எல்ஏ-க்களும் மீதமுள்ள ஆட்சிக்காலத்தில் அவர்களின் நலன்குறித்தே கவலைப்படுகின்றனர். அமைச்சர் ஜெயக்குமார், பட்ஜெட் உரையை வாசித்துக்கொண்டு இருக்கும் சமயத்தில், எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்கள் கூட அதை கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்தனர். ஆனால், ஆளுங்கட்சி எம்எல்ஏ-க்கள் வடை, டீ என சாப்பிடச் செல்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது அவர்களுக்கு இந்த பட்ஜெட், ஆட்சி மீது எந்தவித அக்கறையும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், பட்ஜெட்டில் உருப்படியான எந்த அறிவிப்பும் இல்லை. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயிலின் விரிவாக்கத் திட்டத்தை இந்த பட்ஜெட்டிலும் சொல்கின்றனர்"என்றார். 

 இதற்கிடையில், அ.தி.மு.க. எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் நான்கு பேர் பங்கேற்கவில்லையாம். அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களும் விரக்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இரட்டை இலை சின்னத்துக்கு மட்டும் தேர்தல் ஆணையம் செக் வைத்து விட்டால், நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துவிட்டது போல சசிகலா அணியிலிருந்து எம்எல்ஏ-க்கள் சிதறிவிட வாய்ப்புள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/83805-three-ministers-who-boycott-tamil-nadu-budget-leaves-sasikalas-mlas-in-shock.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான் என‌து ம‌ச்சான் ..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.