• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Innumoruvan

சோபாசக்த்தியின் 'மாயோள்'

Recommended Posts

http://www.shobasakthi.com/shobasakthi/?p=1354

இந்தக் கதையினை வாசித்துமுடித்தபோது, எனது மனதில் எழுந்த முதலாவது கேழ்வி 'மாயோள்' என்ற தலைப்பினை ஏன் சோபாசக்த்தி கதையின் தலைப்பாக இடவில்லை என்பதாவே இருந்தது. அத்தனை அருமையான பெயர் அது. சோபாவின் வாசகர்களிற்கு நன்கு பரிட்சயமான ஒரு சொல்லில் ஒரு எழுத்தினை வேண்டுமென்றே மாற்றி, அது ஒரு விசித்திரமான பெயர், வெளியிடத்தில் இருந்து வந்திருந்தவளின் பெயரென்று ஒரு பெரும் நாவலையே அந்தச் சொல்லிற்குள்ளால் நடத்தி முடித்திருக்கிறார். இந்தக்கதையின் அடி ஆழம் அனைத்தும் அந்தச் சொல்லிற்குள் பொதிந்து கிடக்கிறது. இருந்தும் அதனைத் தலைப்பாக இடாது குழந்தை காயாவின் பெயரினை வைத்திருக்கிறார். யோசிக்கும் போது அதன் தேவை புரிகிறது. இப்பதிவின் கடைசிப் பந்தியில் அது பற்றிப் பேசுகிறேன்.

மனதைப் புரட்டிப்போடும் ஒரு படைப்பை நுகர்ந்தபின், அது பற்றி யாரிடமாவது பேசாது இருப்பது முடியாதகாரியம். இன்று காலை வேலைக்குப் போகும் போது புகையிரதத்தில் இக்கதையினைப் படித்தேன். வேலைக்கு லீவு போட்டுவிட்டுப் பதிவெழுதுவோமா என்று தோன்றியது. இன்றைய நாள் முழுவதும் கதையின் அதிர்வை ஒளித்துவைக்க முடியவில்லை. இப்போது வீடு மீழும் புகையிரத்தில் இருந்து இதனை எழுதுகிறேன். இங்கு இருவிடயம் பேசுவது எனக்கு அவசியமாகிறது. ஓன்று கதை. மற்றையது கதைசொல்லி. முதலில் கதைசொல்லி பற்றிப் பேசிவிடுகிறேன்.

அனைத்துப்படைப்பாளிகளும் தமது அனுபவத்தில் இருந்தே படைப்புக்களை உருவாக்குகின்றனர். ஆனால், இயன்றவரை தமது அனுபவத்தின் மூலத்தை மறைப்பதை அனைவரும் அவசியமாகக் கருதுகின்றனர். இதற்கு சட்டரீதியான பிரச்சினைகள், தாம் தம்மைப் பற்றிக் கட்டிவைத்திருக்கும் விம்பத்தினைக் காத்துக்கொள்ளல் முதலான ஒரு முனைக்காரணங்களும், அனுபவங்கள் சார்;ந்த படைப்பாளியின் வாசிப்பு சார்;ந்து உள்ளார்ந்து படைப்பாளிக்குள் எழும் அதிர்வுகளால் பார்த்த படம் மாறிப்போவது போன்ற பிறிதொரு முனைக்காரணங்களுமாகப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் சுய அனுபவத்தை மறைப்பதை அனைவரும் தலையாய கடனாகச் செய்துவருகின்றனர். இந்தக் கதையில் மாறாக, சோபாசக்தி இதனை ஒரு வாக்குமூலமாக முன்வைக்கிறார். விடுதலை வேண்டி உளவியல் மருத்துவரின் கதிரையில் அமர்ந்திருக்கும் மனிதனைப்போல் கொட்டிவிடுகிறார். தன்னைப் புரிந்துகொள்ளும் படியும் மன்னிக்கும் படியுமாக இலக்கின்றி இறைஞ்சுகிறார். ஆனால் இங்கு ஒரு பிரச்சினை எழுகிறது. கதை கதையாகவின்றி வாக்குமூலமாக வருகையில், வாசகர்கள் நீதிபதிகளாகிறார்கள்.

சோபாசக்தி இங்கு கோருவது கல்லெறிகளையும், தண்டனைகளையம், வசைகளையும் அதனூடான ஒரு ஆன்ம ஈடேற்றத்தையுமே. ஆனால் வாசகரால் அவரிற்கு அதனைக் கொடுக்க முடியாது. அதற்கு இரண்டு காரணங்கள். ஓன்று சோபா தன்னைச் சார்ந்து புனிதர் விம்பத்தை வளர்க்காதமையினால், அவர் சார்ந்து வாசகர் எதையும் சாத்தியம் என்ற மனநிலையில் இருக்கின்றனர். ஏந்தப் பாவத்தையும் அவர்களால் சோபாவில் பாவம் என்று பார்;க்க முடியாதபடி சோபாசக்த்தி என்பவர் பெறுமதிகளைக் கடந்தவராக, எந்தப் பாதாளத்திற்கும் தீமைகளோடு சேர்ந்து பயணிக்கக் கூடியவராக, காமப்பேரரசாக, தூசண வார்த்தைகளைச் சுவாசிப்பராக, விலைமாதரோடே புளங்குபவராக இன்னும் எத்தனையோவாக, மொத்தத்தில் புனிதங்களின் எதிர்ப்பதமாக வாசகரின் மனங்களில் வேரூன்றி இருக்கிறார். இதை இப்படி உருவாக்கியதே சோபா தான். 

இயக்கத்தை விட்டுவெளியேறி தெற்கில் தண்டவாளத்தில் நடந்த பதின்மப் பையன் முதற்கொண்டு, எந்தப் படைப்பாகட்டும் சோபாவின் ஆண் குறியும் அதிலிருந்து வெளியேறும் சுரப்புக்களும் வாசகர்களிற்கு நன்கு பரிட்சயமானவை. இரண்டு வகை வாசகர்கள் சோபாவிற்கு இருக்கிறார்கள்., ஒன்று ஆயத்தப்படாத ஆரம்பநிலையில் தெரியாத்தனமாகச் சோபாசத்தியின் கதையினை வாசிக்க ஆரம்பித்துப் பதின்வயதுப் பையன் பார்த்த நீலப்படம் போன்று அரைவேக்காட்டாய் சோபாவின் கதைகளை விளங்கி அதன் நிமித்தம் ஒரு பயங்கர விம்பத்தைக் கதைசொல்லி சார்ந்து உருவாக்கிக் கொண்டவர்கள். மற்றையவர்கள், நன்கு புரிந்து படித்து, கதைசொல்லியின் படைப்பாளி அனுமதிப்பத்திரத்தை அங்கீகரித்துக் கொண்டவர்கள். இங்கு வேடிக்கை என்னவெனில், இந்த இரு சாராரில் எவராலும் சோபா இரஞ்சும் நீதியினை இக்கதை மூலம் அவரிற்குக் கொடுக்க முடியப்போவதில்லை. ஏனெனில் முதலாமவர் கட்டமைத்து வைத்திருக்கும் பயங்கர பாத்திரத்திற்குள் இந்தப் பாவம் மிகச்சாதாரணம். இரண்டாமவரிற்கோ, இதை ஏன் பாவன் என்று சொல்ல வேண்டும் என்ற மனநிலை இம்சைப் படுத்தும். 

கதைக்கு மேலால் இந்தவாக்குமூலம் சார்ந்து மேற்படி எழுகின்ற அதிர்வுகள் அடக்கமுடியா ஆர்ப்பரிப்பை உள்ளார்ந்து உண்டுபண்ணுகின்றன.

இனிக் கதைக்குள் வந்தால். அட அட அட, எத்தனை இலகுவாக இந்த மனிதரால் இப்பிடிப் பின்னிப் பெடலெடுக்க முடிகிறது. கதையினைப் படிக்கின்ற புனிதர்களிற்குத் தாம் சுயவின்பத்தில் ஈடுபட்டோம் என்று தன்னும் தமக்குள்ளாகவேனும் ஒத்துக்கொள்வது கூடச் சிலசமயம் அசாத்தியமாகலாம். ஆனால், முதன் முதலில் பதின்மத்தில் அதுவும் இலங்கையில் இந்த அனுபவத்தைக் கதைசொல்லி வருணித்த விதத்தில் உணரவில்லை என்று எவரேனும் கூறின், ஒன்றில் அவர்கள் பொய் சொல்லுகிறாhகள் அல்லது அவர்கள் ஜடங்களாவே பிறந்திருக்கிறார்கள். முதற் தடைவ விந்து வெளியேறியதும், பயப்படாதவர் இருப்பது, அதுவும் பேசாப்பொருட்கள் கோலோச்சிய யாழ்ப்பாணத்தில் சாத்தியமாயின் அவர்கள் அசாதாரண மனிதர்கள். ஐம்பதுகளை எட்டும் சோபா சக்த்தியால் அந்தத் தருணத்தை இத்தனை தத்ரூபமாக விளக்க முடிவது மலைப்பேற்படுத்துகிறது. அது மட்டுமன்றி வேளாங்கன்னியினை அதற்குள் கொண்டுவந்து...பின்னிப் பெடலெடுத்திட்டான்யா..

பதின்மத்தில் தொடங்கி ஐம்பது வரை, காமம் புரியாத புதிராகக் கதைக்குள் இழையோடித் தொடர்கிறது. காமம் சார்ந்து பயங்களும், புரியாமைகளும் குளப்பங்களுமே வெளிப்படுகின்றன. "குற்றவுணர்வு என்பது உள்ளார்ந்ததாக, நன்கு புரியப்பட்டதாக, உண்மையானதாக, தன்னுடையதாகக் கதைசொல்லியால் முன்வைக்கப்படுகின்ற அதே நேரம் காமம் என்பது வெளியில் இருந்து வந்ததாக, விசித்திரமானதாக, புரியாததாக, தண்டனை பெற்றுக் கொடுப்பதாகவே வெளிப்படுகிறது. இதனால்த்தான், நூலகராக இருந்த திருவின் அக்காவைத் தூக்கி அப்புறப்படுத்தி விட்டு, மாயோளைக் கதைக்குள் கதைசொல்லி கொண்டுவருகிறார். மாயோளை வெளியில் இருந்து வந்தவளாக, விசி;த்திரமான பெயருடையளவாக, தனக்குத் தெரியாத ஆங்கிலம் தெரிந்தவளாக, மதிலில் பார்த்த தூசணவார்த்தை போன்றிருக்கிறது ஆனால் அவள் பெயர் அதுவல்ல என்பதாக, புரிகிறது ஆனால் புரியவில்லை என்பதைக் குறியிடுவதற்காக மாயோள் என்று பெயரிடுகிறார்.

அதாவது. தனக்கும் தனது வாசகரிற்கும் நன்கு தெரிந்த ஒரு வார்த்தையினை எடுத்து அதில் ஒரு எழுத்தை மாற்றி அதன் முன்னால் மாயை என்ற சொல்லைச் சேர்த்துக் கதைசொல்லி மாயோளைப் பிரசவிக்கிறார்;. அதனால் தான் இந்தக் கதைக்கு 'மாயோள்' என்பது அற்புதமான தலைப்பாக இருந்திருக்கும் என்றேன். ஆனால் அது இலக்கியத்திற்கு. இங்கு வாக்குமூலமாக விடுதலை கோரப்படுவதால் 'காயா' என்ற தலைப்புத் தவிர்க்கமுடியாததாகிப் போகின்றது.

என்னதான் சோபாசக்த்தி வாக்குமூலத்தை வைத்து விடுதலை கோரினும், நெஞ்சை நிமிர்த்திப் பிளந்து காட்டினும் தனியே அவரால் சமூகத்தை எதிர்கொள்ளவோ அல்லது சமூகம் எடுக்கிற முடிவை எடுக்கட்டும் என்று விட்டுவிடவோ முடியாதபடி பாதியில் பயம் அவரைப் பற்றிக் கொள்கிறது.
அங்கங்கு தனக்காகத் தானே வாதிட்டுகொள்வதை அவரால் தவிர்க்கமுடியவில்லை. தான் அத்தனை கெட்டமனிதன் அல்ல என்றும் சொல்லிக் கொள்ளுகிறார். ஆதானால் தான் பெரதேனியாவில் படித்த மீசை மளித்த திருச்செல்வம் மாயோளின் மார்பைப் பிடித்த கதையும் அதற்காக இயக்கப் பொறுப்பாளனாகத் தான் வளங்கிய தண்டனை பற்றியும் இந்தக் கதைக்குள் பேசுகிறார். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற யாழ்ப்பாணத்தானின் பாவபுண்ணிய மனநிலையையும் தனக்குத் துணைக்களைக்கிறார். திருவின் வாயாலேயே அதனைச் சொல்லவும் வைக்கிறார். திருகோணமலைச் சாமியாரும் பவானியும் குவியமும் என்று பேசுகிறார். ஒரு முனையில் நீதிகோரித் திறந்த கையுடன் முன்வரும் சோபா பாதியில் பயம் பற்றிக் கொள்ள நாயகன் கமலகாசனைப் போல் 'அவனை நிறுத்தச் சொல்லு இவனை நிறுத்தச் சொல்லு' என்று புலம்புவதையும் தவிர்கமுடியாதவராகிப் போகிறார். அந்தத் தவிப்புக் கதையினை இலக்கியத்தரத்தில் எங்கோ உயரத்தில் தூக்கி அமர்த்துகிறது.

பெறுமதிகளிலிருந்து விட்டுவிடுபடல் என்பது ஞானிக்கும் முற்றாகச் சாத்தியப்பட்டுவிடுவதில்லை. அத்தனை பெறுமதிகளையும் எத்தனை நக்கல் பண்ணினும் பெடபீலியாவினைக் கடந்து சென்றுவிட முடியாதவராகக் கதைசொல்லி பாவமன்னிப்புக் கோரிப் பம்முவதைப் பாத்ததுச் சமூகம் தனது முப்பதாயிரம் வருடத்து வேரைக் காட்டி முறுவலிக்கிறது.

இன்றைய நாள் முழுவதும் நான் ஏறி மிதந்து திரிந்த அலாடினின் பாயாக இக்கதை எனக்குள் பதிகிறது.

Edited by Innumoruvan
  • Like 13

Share this post

Link to post
Share on other sites

நீண்ட நாட்களின் பின்னர் இன்னுமொருவனின் விமர்சனத்தை நுகர்கிறேன். மகிழ்ச்சி நண்பரே.

Share this post

Link to post
Share on other sites

இன்னுமொருவனைக் கண்டது மிகவும் மகிழ்ச்சி!

மிகவும் அருமையான விமரிசனம்!

எனது இளவயதில்...எஸ்.பொ. எழுதிய தீ, வீ, சடங்கு  போன்ற நூல்களைத் தேடி வாசித்தேன்!

அதில் ஒரு விலை மாதை....புணர்ச்சியை...அதில் அவர் வர்ணித்த விதம் என்னுள் ஒரு அருவருப்பை..அந்த நேரத்தில் என்னுள் உருவாக்கி விட்டிருந்தது!

அவரது சரியான வர்ணிப்பு இப்போது நினைவில் இல்லை!

இருப்பினும் சில வார்த்தைகள் நன்றாக நினைவிருக்கின்றன!  அவளது பெண்குறி ..என்பதும்...பலரின் விந்துப் பீச்சல்களால்...அவளது மன்மத பீடம் ஈரமாக நனைந்திருந்தது என்பதும் அவளது தொடைகளின் இடைவெளிகள் விந்துகள் வழிந்தோடிய வாய்க்கால்கள் போல இருந்தன என்பதும் நினைவில் உள்ளது!

பின்னர் அந்த அதிசயமான மனிதரை...சிட்னியில் சந்தித்து அளவளாவவும்..அவரை எனது மகிழுந்தில் ஏத்தி ..இறக்கும் அருமையான சந்தர்ப்பங்களும் எனக்குக் கிடைத்தும்....அந்த இளமைக்கால எழுத்தின்...அருவருப்பை....என்னிலிருந்து கழட்டி எறியவே முடியவில்லை!

இருவருமே..அவரது அற்புத படைப்புகளைப் பற்றி...அலசி ஆராய்ந்த போதும்...அந்த வர்ணனையைப் பற்றி என்னால் அளவளாவ முடியவில்லை!

அது ஏன் என்ற கேள்விக்கு எனக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை!

என்னுள்ளும் ஒரு பலவீனம் மறைந்துள்ளது என்று தான் நினைக்கிறேன்!

அதே ....அசிங்கமான உணர்வு...மீண்டும்... சோபாவின் கதையை வாசித்த போதும் ஏற்படுவதை ,,என்னால் தவிர்க்க முடியவில்லை!

Share this post

Link to post
Share on other sites

முகமூடியின்றி எழுதப்பட்ட கதைக்கு இன்னுமொருவனின் விமர்சனம் மிக அருமை. பிரசவம் அருவருப்பென்று பிள்ளையை தூக்கிக் கொஞ்சாமலா இருக்கிறோம். நல்லதொரு விமர்சனம்.

  • Like 3

Share this post

Link to post
Share on other sites
39 minutes ago, Kavallur Kanmani said:

முகமூடியின்றி எழுதப்பட்ட கதைக்கு இன்னுமொருவனின் விமர்சனம் மிக அருமை. பிரசவம் அருவருப்பென்று பிள்ளையை தூக்கிக் கொஞ்சாமலா இருக்கிறோம். நல்லதொரு விமர்சனம்.

அருமையான கருத்து அக்கா.

Share this post

Link to post
Share on other sites

இன்னுமொருவன்,  இப்போது தான் முதன் முதல் உங்கள் எழுத்தை வாசிக்கிறேன்.
மிகவும் ஆழமான அவதானிப்போடு, மிக அழகாக எழுதப்பட்டிருக்கும் விமர்சனம் / கருத்து.

Share this post

Link to post
Share on other sites

சோபாசக்தியின் கதையை இன்னுமொருவனின் குறிப்புக்களைப் படித்த பின்னர் மீண்டும் ஒருதடவை படித்தேன். இத்தோடு முன்று தரம் படித்திருப்பேன். ஆனாலும் நான் தேடும் ஏதோ ஒன்று கதையில் இல்லை. அது என்னவென்று எனக்கும் புரியவில்லை.

கதை பெறுமதிகளும், விழுமியங்களும் கொண்ட ஒரு சிறு கிராமத்தில் இருந்து வந்த சாதாரணனின் கதை. சமூகப் பயங்களும், சமயப் பின்னணிகளும் நிறைந்த இடத்தில் வளர்ந்ததால் ஊத்தையான விடயங்கள் என்று தொடர்ந்தும் சொல்லப்படுபவற்றை அப்படியில்லை என்று முழுவதுமாக மறுதலிக்க முடியாது. 

கதை சொல்லியைவிட அவரது நண்பன் திருவின் பாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது. !

Share this post

Link to post
Share on other sites

சோபா சுத்தியின் ஆக்கங்களைப் படிப்பதில்லை. காரணம்.. தனது அரைகுறை விளக்கங்களை சமூகத்தின் பிம்பமாக பிரதிபலிக்க முயல்பவர் அவர். இந்த விமர்சனத்தின் படி பார்த்தாலும்.. இன்னும் அவர் பழைய உலகுக் குரங்காகவே உள்ளார் என்று தெரிகிறது. மனிதனாகவில்லை. :rolleyes:

Share this post

Link to post
Share on other sites

நீண்ட நாட்களின் பின் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி. ஆம், சஹாரா, மிக நீண்டநாட்களின் பின் உரையாடுகிறோம், மகிழ்ச்சி.

புங்கையூரான், உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. கேழ்விகள் பிறந்துவிட்டால், விடைகள் வந்தே தீரும்.
 
நன்றி காவலூர்கண்மணி மற்றும் சசிவர்ணம் உங்கள் கருத்திற்கும் ஊக்கத்திற்கும். 

காவலுர்கண்மணியிடம் பலதடவை கேட்கவேண்டும் என்று பின் மறந்து போவது, இன்று ஞாபகம் இருப்பதால் கேட்கிறேன், உங்கள் பின்னூட்டங்கள் அனேக நேரங்களில் தாய்மை நிறைந்தவகையாக, நம்பிக்கையூட்டுவனவாக தலைமைத்துவப் பண்புகளுடன் வெளிப்படுவதை அவதானிதிருக்கிறேன். அனேகமாக யாராவது உங்களிடம் மனப்பாரத்துடன் வந்தால் இழகிய மனதோடு செல்ல வைப்பீர்கள் என்று தோன்றுகிறது. ஆலோசனைத் துறையில் அல்லது கற்பித்ற் துறையில் பணி புரிகிறீர்களா?

கிருபன், நீங்கள் சொல்வது சரி. வுழமையாகக் கதைசொல்லி ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பணியினையும் செய்து எடிற்றிங்கும் முடித்துப் படமாகக் கொடுப்பார். இம்முறை ஒரு தயாரிப்பாளரிடம் கதைசொல்வது போன்று கருவை மட்டும் போட்டிருக்கிறார். ஏனெனில் அவரும் ஒரு கதைமாந்தராய் இருப்பதனால். எனவே, ஒளிப்பதிவு, இயக்கம், தொகுப்பு, வசனம் அனைத்தும் வாசகரிடம் விடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு 'ஓப்பின் சோர்ஸ்' காப்புரிமம் போல. எனவே இதைப் படமாக்குவது முற்றுமுழுதாக வாசகரின் கைகளில். இன்னமும் சொல்வதானால் கதைக்களம் மட்டுமே சொல்லப்ட்டிருகிறது, கதை எழுதுவது வாசகரிடம் விடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் தேடுவது முடிக்கப்பட்ட படமாக இருக்குமோ?

நன்றி நெடுக்காலபோவான் உங்கள் கருத்திற்கு. விம்பம் என்பது ஒரு பெரிய பூதம். சோபாசக்தி வில்லன் வேடத்தை ஆர்ப்பாட்டமாகத் தானே போட்டுக்கொண்டிருந்தார். ஏறத்தாள கட்டின்றி வாழ முனைந்ததாகத் தோன்றுகிறது. எனினும், இக்கதையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றம் பெடபீலியா மட்டுமல்ல. இக்கதையில் ஒரு இடத்தில் பவானி பாத்திரம் 'எழுத்தில் மட்டும் தான் உங்களிற்கெல்லாம் புரட்சி' என்று சொல்லும். இது விதவைக் கலியாணம் என்ற சலிப்பேற்றும் முனையில் கதைக்குள் வந்திருந்தாலும், நிஜத்தில் இது சோபாசக்த்தியின் சுயவிமரிசனம். ஏனெனில், கதைபடித்துக் காட்டிய குழந்தையினைக் குழந்தையாகப் பார்க்கமுடியாது அவளின் அடிப்படைப் பெண்மையில் சிக்குண்டமை உண்மையில் மிகப்பாரிய பிற்போக்குத் தனம். அடிப்படையில் மனிதன் விலங்கு என்பதைத் தாண்டி மனவெளியில் தான் மனிதன் மனிதனாகிறான். மனவெளயில் குவியம் அவசியம் என்றபோதும் பன்முகப் பார்வை தவிர்க்க முடியாதது. உலகில் 'ஓடிப்பஸ் சின்ட்றோம்' போன்ற ஏகப்பட்ட விடயங்கள் இருப்பது புரியப்பட்டுப் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், மனிதன் என்ற கட்டமைப்பு அத்தகைய விலங்கிச்சைகளை வென்றதாக முன்வருகிறது. ஒழுக்கம் போன்ற சொல்லாடல் வாயிலாக அவை கட்டுப்படுத்தப்படினும் விஞ்ஞான விளக்கங்கள் பின்னணி ஆகின்றன.

அந்தவகையில், நண்பனிற்குத் துரோகம் மற்றும் பெடபீலியா போன்றன மேலோட்டமாகப் பேசப்படினும், அடிப்படையில் கதைசொல்லி தனது பிறழ்வைத் தானுணர்ந்து, அதனைப் புரியமுடியாமல் உழன்று, புரியாதன அனைத்தும் கொடுக்கும் பயத்தால் பாதிக்கபட்டு அந்தப் பயத்திற்கு நிவாரணி தேடி எழுதுகிறார். எந்தப் பயத்திற்கும் நிவாரணி பயத்தை அதன் முகத்தில் பார்ப்பது தான். அந்தவகையில் இதைத் திறந்தவெளியில் கிறியேற்றிவாகப் பேசத்துணிந்த பாத்திரத்தைப் பார்த்துப் பிரமிக்காதிருக்க முடியவில்லை. நிச்சயம் இது மிகவும் 'கருப்புப் பக்கம்'. ஆனால் கருப்புப் பக்கங்களைப் பேசாப்பொருட்கள் ஆக்குவதால் சமூக முன்னேற்றம் சாத்தியமாகப் போவதில்லை. 
 
  • Like 2

Share this post

Link to post
Share on other sites

'காயா' கதையை கிருபன் இணைத்த அன்று அது ஷோபா சக்தி எழுதிய கதை என்பதால் தவற விடாமல் வாசிக்க வேண்டும் என குறித்து வைத்து இருந்தேன். பின் இன்னுமொருவன்  (இன்னுமொருவன் என்று இங்கு குறிப்பிடினும் உங்களை 'இன்னொருவன்' என்றே மனது உச்சரிக்கின்றது) நீங்கள் தனித்து ஒரு விமர்சனத்தினை இக் கதைக்கு எழுதியிருப்பதால், கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என நினைத்து கதையை நேற்று வாசித்து முடித்தேன்.

வாசித்து முடித்தபின்,உங்கள் விமர்சனம் என் பின்னூட்டத்தில் செல்வாக்கு செலுத்தி விடும் என் நினைத்து  எனது பின்னூட்டங்களை இட்ட  பின் தான் உங்கள் பதிவை  வாசிக்க வேண்டும் என முடிவெடுத்து இப்பதான் வாசித்தேன்.

உங்கள் விமர்சனம் கதையை இன்னொரு தளத்தில் வைத்து பார்க்க தூண்டுகின்றது. இது நான் பார்க்காத ஒரு கோணம். கதை சொல்லி தான் இயக்கத்தில் இருக்கும் போதும் சுய இன்பம் அனுபவிக்க இயக்கம் தடை செய்யவில்லை என்று சொன்னது கூட ஒரு விதத்தில்  தனக்காக வாதிட்டுக் கொண்டதாக இருக்கலாம் என இப்ப நினைக்கின்றேன். ஆனால் பவானியை இறுதியில் கண்டா பின் ஏன் அவளை தவிர்க்க நினைக்கின்றார் என்பதை புரிய முடியவில்லை. ஆண்களின் பாவ மன்னிப்பையா கதை சொல்லி எதிர்பார்க்கின்றார்?

தன்னை வெளிக் காட்டாது  இன்னொரு புனை பெயரில் ஷோபா இக் கதையை எழுதியிருப்பேன் எப்படியான கருத்துக்கள் எம்மிடம் இருந்து வரும்  எனவும் யோசித்து பார்க்கின்றேன்.

Share this post

Link to post
Share on other sites

இன்னொரு பெண்ணின் மார்பில் கை வைச்ச திரு தன்னுடைய மனிசி குழந்தை இல்லை என்பதற்காக அந்த சாமியாரிட்ட போய் தனிமையில் போய் இருந்திட்டு வந்திடுவா என்று பயப்படுறது இருக்கே...ஆண்களது குணமே அது தான்tw_dissapointed:

On ‎16‎/‎03‎/‎2017 at 0:02 PM, Innumoruvan said:

நீண்ட நாட்களின் பின் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி. ஆம், சஹாரா, மிக நீண்டநாட்களின் பின் உரையாடுகிறோம், மகிழ்ச்சி.

புங்கையூரான், உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. கேழ்விகள் பிறந்துவிட்டால், விடைகள் வந்தே தீரும்.
 
நன்றி காவலூர்கண்மணி மற்றும் சசிவர்ணம் உங்கள் கருத்திற்கும் ஊக்கத்திற்கும். 

காவலுர்கண்மணியிடம் பலதடவை கேட்கவேண்டும் என்று பின் மறந்து போவது, இன்று ஞாபகம் இருப்பதால் கேட்கிறேன், உங்கள் பின்னூட்டங்கள் அனேக நேரங்களில் தாய்மை நிறைந்தவகையாக, நம்பிக்கையூட்டுவனவாக தலைமைத்துவப் பண்புகளுடன் வெளிப்படுவதை அவதானிதிருக்கிறேன். அனேகமாக யாராவது உங்களிடம் மனப்பாரத்துடன் வந்தால் இழகிய மனதோடு செல்ல வைப்பீர்கள் என்று தோன்றுகிறது. ஆலோசனைத் துறையில் அல்லது கற்பித்ற் துறையில் பணி புரிகிறீர்களா?

கிருபன், நீங்கள் சொல்வது சரி. வுழமையாகக் கதைசொல்லி ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பணியினையும் செய்து எடிற்றிங்கும் முடித்துப் படமாகக் கொடுப்பார். இம்முறை ஒரு தயாரிப்பாளரிடம் கதைசொல்வது போன்று கருவை மட்டும் போட்டிருக்கிறார். ஏனெனில் அவரும் ஒரு கதைமாந்தராய் இருப்பதனால். எனவே, ஒளிப்பதிவு, இயக்கம், தொகுப்பு, வசனம் அனைத்தும் வாசகரிடம் விடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு 'ஓப்பின் சோர்ஸ்' காப்புரிமம் போல. எனவே இதைப் படமாக்குவது முற்றுமுழுதாக வாசகரின் கைகளில். இன்னமும் சொல்வதானால் கதைக்களம் மட்டுமே சொல்லப்ட்டிருகிறது, கதை எழுதுவது வாசகரிடம் விடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் தேடுவது முடிக்கப்பட்ட படமாக இருக்குமோ?

நன்றி நெடுக்காலபோவான் உங்கள் கருத்திற்கு. விம்பம் என்பது ஒரு பெரிய பூதம். சோபாசக்தி வில்லன் வேடத்தை ஆர்ப்பாட்டமாகத் தானே போட்டுக்கொண்டிருந்தார். ஏறத்தாள கட்டின்றி வாழ முனைந்ததாகத் தோன்றுகிறது. எனினும், இக்கதையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றம் பெடபீலியா மட்டுமல்ல. இக்கதையில் ஒரு இடத்தில் பவானி பாத்திரம் 'எழுத்தில் மட்டும் தான் உங்களிற்கெல்லாம் புரட்சி' என்று சொல்லும். இது விதவைக் கலியாணம் என்ற சலிப்பேற்றும் முனையில் கதைக்குள் வந்திருந்தாலும், நிஜத்தில் இது சோபாசக்த்தியின் சுயவிமரிசனம். ஏனெனில், கதைபடித்துக் காட்டிய குழந்தையினைக் குழந்தையாகப் பார்க்கமுடியாது அவளின் அடிப்படைப் பெண்மையில் சிக்குண்டமை உண்மையில் மிகப்பாரிய பிற்போக்குத் தனம். அடிப்படையில் மனிதன் விலங்கு என்பதைத் தாண்டி மனவெளியில் தான் மனிதன் மனிதனாகிறான். மனவெளயில் குவியம் அவசியம் என்றபோதும் பன்முகப் பார்வை தவிர்க்க முடியாதது. உலகில் 'ஓடிப்பஸ் சின்ட்றோம்' போன்ற ஏகப்பட்ட விடயங்கள் இருப்பது புரியப்பட்டுப் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், மனிதன் என்ற கட்டமைப்பு அத்தகைய விலங்கிச்சைகளை வென்றதாக முன்வருகிறது. ஒழுக்கம் போன்ற சொல்லாடல் வாயிலாக அவை கட்டுப்படுத்தப்படினும் விஞ்ஞான விளக்கங்கள் பின்னணி ஆகின்றன.

அந்தவகையில், நண்பனிற்குத் துரோகம் மற்றும் பெடபீலியா போன்றன மேலோட்டமாகப் பேசப்படினும், அடிப்படையில் கதைசொல்லி தனது பிறழ்வைத் தானுணர்ந்து, அதனைப் புரியமுடியாமல் உழன்று, புரியாதன அனைத்தும் கொடுக்கும் பயத்தால் பாதிக்கபட்டு அந்தப் பயத்திற்கு நிவாரணி தேடி எழுதுகிறார். எந்தப் பயத்திற்கும் நிவாரணி பயத்தை அதன் முகத்தில் பார்ப்பது தான். அந்தவகையில் இதைத் திறந்தவெளியில் கிறியேற்றிவாகப் பேசத்துணிந்த பாத்திரத்தைப் பார்த்துப் பிரமிக்காதிருக்க முடியவில்லை. நிச்சயம் இது மிகவும் 'கருப்புப் பக்கம்'. ஆனால் கருப்புப் பக்கங்களைப் பேசாப்பொருட்கள் ஆக்குவதால் சமூக முன்னேற்றம் சாத்தியமாகப் போவதில்லை. 
 
கண்மனி அக்காவை பற்றி எழுதினது சரி...ரதியின் எழுத்துக்களை வாசிக்கும் போது எப்படியான ஆள் ஞாபகத்திற்கு வருகிறார்?

Share this post

Link to post
Share on other sites

நன்றி விசுகு தும்பளையான் நந்தன் அபாரிஜதன் இணையவன்.

ரதியின் கேழ்விக்கு சிறிய பதில் என்பதால் அதை முதலில் எழுதிவிட்டு செல்லலாம். ஒவ்வொரு முகமூடி சார்ந்து ஒவ்வொரு விம்பம் மனதில் இருக்கும். ரதியின் பதிவுகளை வாசிக்கும் போது எனது மனதில் வரும் உருவம் மின்சாரக்கனவு படத்தின் வெண்ணிலவே பாடல் காட்சியில் வரும் கஜோல். ஏன் என்று சொல்லத் தெரியவில்லை. அது அப்படித்தான் பதிவாகியிருக்கிறது.

நிழலி, உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. காயா கதை ஏற்கனவே இணைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருப்பதை இப்போது தான் பார்;த்தேன். சுவாரசியமாக இருக்கிறது. நீங்கள் சொல்வதும் சரி, இயக்கம் கூட சுயவின்பத்தைத் தடைசெய்யவில்லை என்பதும் கூட நீங்கள் சொல்வதுபோல் அவர் தனக்காகத் தானே வாதிடுவது தான். 

பவானியை அவர் தவிர்த்தது, இந்தக் கதை எழுதிய பின்னர் அல்லவே. குறிப்பிட்ட சம்பவம் குழந்தை சார்ந்து திருவின் வீட்டில் நிகழ்ந்த அடுத்த நொடிகளில், அவர் திரு வீட்டில் இருந்து கிழம்பிவரும் போது தானே பவானியைத் தவிர்த்தார். அந்த நாளில் அவர் பவானியை மட்டும் தவிர்க்கவில்லை. திருவையும் தவிர்த்தார், குழந்தை காயாவையும் தவிர்த்தார், இன்னமும் சொல்வதானால் தனது விம்பத்தைத் தான் கண்ணாடியில் பார்ப்பதைக் கூட அவர் தவிர்க்கவே முனைந்தார். எங்காவது ஒரு பொந்திற்குள் ஓடிச்சென்று ஒளித்துவிடத் துடித்த தருணம் அது அவரிற்கு. குற்ற உணர்வின் உச்சக் கட்டம். 

நிச்சயம் இந்தக் கதை சோபா சக்த்தி எழுதினார் என்று தெரிவதனால் எமது கதைசொல்லி பற்றிய எண்ணங்கள் அதிகமாகின்றன. இதை வெறும் இலக்கியமாக வைத்துப் பார்க்க முடியவில்லை. இதை ஒத்த தருணங்கள் இலக்கியத்தில் அற்புதமாகக் கையாளப்பட்டு நிறைந்து கிடக்கின்றன. ஆனால் இங்கு சோபா எழுதிய வாக்குமூலம் என்பது தான் இந்தக் கதைக்கு ஒரு மேலதிக பரிமாணத்தைக் கொடுகிறது. அவர் கோரும் ஆன்ம ஈடேற்றத்தை எம்மால் அவரிற்குக் கொடுக்க முடியாது (அது அவரே தவம் செய்து அடைய வேண்டியது. மனவெளியில் ஆழத்தோண்டி அகழ்வாராய்ச்சி அவரிற்கு அவசியப்படும். விடுதலை கிடைக்கும் ஆனால் அது அவரால் மட்டுமே பெறப்படக்கூடியது) என்றபோதும், இலக்கியத் தரத்தில் இந்தக் கதையின் அடுக்கடுக்கான பரிமாணங்கள் சார்ந்து மனந்திறந்து கைதட்டலாம். மிகவும் திறமைசாலி.

நான் ஏற்கனவே எனது பின்னூட்டதில் குறிப்பிட்டதைப் போல, இது குழந்தையுடன் நிகழ்ந்த அந்த ஒரு சம்பவத்தோடு மட்டும் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. 'விட்டு விடுதலையான' ஒரு மனிதனாகத் தன்னை வரித்துக் கொண்டு, சமூகத்தின் தன்னைப் பற்றிய மதிப்பீடுகளை காலால் உதைத்த படி வாழ்ந்த அல்ல வாழத்தலைப்பட்ட ஒரு மனிதன் சமூகம் தனது கழுத்தில் கட்டிப் பிடித்திருக்கும் சுருக்குக் கயிற்றை உணர்ந்த தருணம். சமூகம் என்பது வெளியில் அல்ல அது தனக்குள்ளாக இருக்கிறது என்பதை அவர் உணர்ந்த தருணம். அவை அனைத்துக்கும் மேலால் கதை வாசித்துக் காட்டிய குழந்தையினைக் குழந்தை பாத்திரமாகப் பார்க்க முனைந்து தோற்றுப் போய், அந்தக் குழந்தையின் அடிப்படை விலங்கியல் தன்மையில் மட்டும் புதையுண்டு போன ஒரு இலக்கிய ஜாம்பவான் தனது அறிவின் வங்குறோத்துத் தனத்தைத் தானுணாந்து தளர்ந்து போன தருணம். இங்கு அவரிற்குள் வெளிப்படும் பயம் தனது அறிவு தன்னைக் கைவிட்டதை நினைத்தும் தான் எழுகிறது.

எனக்கு இங்கு மிகப்பிரமிப்பாக இருந்தது என்னவெனில். சோபாசக்தி எமது மனங்களில் அவரைப் பற்றி உண்டாக்கி வைத்திருக்கும் விம்பம் உண்மையாயின், அவர் உண்மையில் ஒரு 'ப்ளேபோயாக' இருந்து பெண்கள் சார்ந்து நன்கு பரிட்சயமுடையவராயிருப்பின், இக்கதையில் அவர் குறிப்பிடும் கட்டுப்பாட்டை மீறிய விந்து வெளியேற்றத்தை என்னால் புரிந்து கொள்ள முடியாதிருக்கிறது. இது ஒரு பதின்மப் பையனிற்கு நிகழ்ந்திருப்பின் புரிவது இலகு. ஒரு வேளை ஒரு இலக்கிய ஜாம்பவானின் மனத்தில் கற்பனையின் வீச்சு என்னைப் போன்ற சாதாரண மனிதர் புரியமுடியாப் பரிமாணத்தில் இருக்கலாம்.

Edited by Innumoruvan

Share this post

Link to post
Share on other sites

நன்றி உங்கள் பார்வைக்கு..

இக் கதை என்னுள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இதை இலக்கியப் படைப்பு சார்ந்த ஒரு Head Game என்ற அடிப்படையிலேயே அணுகினேன். இம்முறை ஒரு தற்கொலைத் தாக்குதல் முயற்சியை செய்துள்ளார். 

அவருக்கு குற்ற உணர்வு இருப்பின் மன வள மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம் தவிர அவரின் இப் பதிவு சமூகத்தின் இருட்டுப்பக்கங்களை பார்பதற்கு வழிசெய்கின்றது எனபதற்கில்லை. அலலது சமூகத்தின் இருட்டுப்பக்கங்கள் இப்படியானது என்று இருட்டின் இயல்பாகவும் இதைக் கருத முடியாது. சமூகத்தில் அங்காங்கே நடக்கும் நடைமுறையில் இருந்து விலகிய செயற்பாடுகளை சமூகத்தின் இருட்டுப்பக்கத்தின் இயல்பு என சொல்வதற்கில்லை. 

சமூகம் தனது பண்பாடு பாரம்பரியத்தின் ஊடாக ஒழுக்க விதிகளின் ஊடாக காம உணர்வுகளை அகமும் புறமுமாக கட்டுப்படுத்தி வைத்துள்ளது. ஒரு விலங்கு நிலையில் இருந்த மானுடத்தின் பண்பட்ட நிலை என்பது புறச்சூழலை அனுசரித்தல் கட்டுபடுதல் போராடுதல் போன்ற அமசங்களை அடக்கியது. சனக்கூட்டம் நிரம்பிய பொது இடத்தில் உடலின் காம அசைவுகள் அறைக்குள் இருப்பது போல் இருக்காது. உடல் அதற்கு பண்பட்டது. மகள் அககா தங்கை குழந்தைகள் போனற விடயத்திலும் எமது உடல் அசைவுகள் பண்பாட்டால் பழக்கவழக்கத்தால் ஒரு இயல்புநிலைக்கு உட்பட்டு கட்டுப்பட்டது. ஒரு சமூகம் சார் படைப்புகளை செய்யும் ஒருவரின் இத்தகைய அனுபவத்தில் இருந்து எதையும் புரிவதற்கில்லை.

வள்ளுவன் அற ஒழுக்கத்தை எழுதியதன் பின்னால் ஒழுக்க கேடுகள் நிறைந்த சமூகத்திற்கான தேவைகள் அதற்கு காரணமாக இருந்தது. எப்போதும் இவ்வாறன படைப்புகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். அது சார்ந்தே சமூகம் நகரும்.  

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

சுகன்,அப்படியாயின் சமூகத்தின் இருட்டு பக்கங்களை ஒருத்தரும் எழுதக் கூடாதா?....அப்படி எழுதினால் சமுதாயம் கெட்டு விடுமா?...இருட்டு பக்கங்கள் மூலம் எப்படி ஒரு மனிதன் இந்த உலகத்தில் வாழ்க் கூடாது எனத் தெரிந்து கொள்ளமாம் தானே:unsure:

Share this post

Link to post
Share on other sites

நன்றி உங்கள் கருத்திற்கு சுகன். உண்மையில் விவாதங்கள் இன்றைய நிலையில் பண்டைய விடயமாகிப்போய்விட்டன. சந்தை அதையே விரும்புகிறது. அதனால் உங்களைப் போன்ற ஆழ்ந்த விவாதங்கள் எதிர்த்தரப்பி;ல் அமையும் போது மகிழ்வாக இருக்கிறது—விவாதிக்கச் சந்தர்ப்பம் கிடைப்பதனால்.

உங்கள் கருத்தில் இருக்கும் கோபம் புரிகிறது. ஆனால் என்னால் உடன் படமுடியவில்லை. அதற்கான காரணத்தைச் சொல்ல முன்னர், இப்படி சோபாசக்த்தி எழுதியதால் அவரிற்கு கிடைக்கும் உளவியல் பற்றி பேச முனைவதற்கு முன்னர், குறைந்தபட்ச பொதுநலம் என்று ஒன்றைத் தன்னும் கூறலாம். 

அதாவது, சோபா தன்னாலே புரியமுடியாத பிறழ்வு ஒன்று தனக்குள் நிகழ்வதாகத் தானே கூறுகிறார். இது சார்ந்து அவர் விமோசனம் தேடுகையில், சோபாசக்த்தியினைத் தெரிந்த, திரு போன்ற இதர பெற்றோர்கள், சோபாவின் மடியில் குழந்தைகள் அமர்வதைத் தவிர்க்கலாம். உலகில் கட்டுப்பாட்டை மீறிய பிறழ்வுகள் இருக்கவே செய்கின்றன. மிகப்பெரும்பான்மையான நேரங்களில் அத்தகைய பிறழ்வுகளை தம்மில் உணர்பவர்கள் இருட்டிற்குள் சென்றுவிடுகிறார்கள். தீர்வைத் தேடுவதற்குப் பதில் தொடர்ந்து துன்பம் விளைவித்தபடி வாழ்கிறார்கள். அந்தவகையில், தனது பிறழ்வைப் பொதுவெளியில் பேசுவதைப் பாராட்ட வேண்டும். குறைந்தபட்சம், இருட்டில் ஒரு குருடன் விளக்கினை எடுத்துச் செல்வது போலாவது இதனைப் பார்க்கலாம். தனக்குத் தான் ஒளி தெரியவில்லை என்றாலும், மற்றையவர்கள் அந்த ஒளியினைப் பார்த்துத் தன்னோடு மோதாது செல்லட்டும் என்ற அளவிலேனும் இந்தக் கதையினை ஒரு குப்பி விளக்காகவேனும் பார்க்க முடியும். 

இனி சமூகம் என்பது என்னதான் பொதுமையானதாய் உணரப்பட்டுப் போதிக்கபடினும், அதன் பிரயோகம் என்பது ஒவ்வொரு மனிதனதும் தனித்துவத்தில் தான் தங்கியிருக்கிறது. சமூகமாக வாழ்வதற்கு இன்ன விடயங்கள் அனுகூலமானவை என்பதில் பொது உடன்பாடு அடையப்படினும், சமூகத்தால் சராசரி மனிதனிற்கான விதிகளையே அடையமுடியும். விதிமுறித்தல் நாளாந்தம் அனைத்து முனைகளிலும் நடந்தவண்ணமே இருக்கின்றன--இல்லாது போனால் சமூகத்தில் ஏழை பணக்காரன் எங்கனம் சாத்தியம்? 

சுpல விதிமீறல்களைச் சமூகம் வியப்புடன் பார்க்கும், கைதட்டவும் கூடும். சுpலவற்றைக் காறித்துப்பும். சுமூகம் காறித்துப்பும் அனைத்து விதிமுறித்தல்களில் சமூக்தினைப் பயப்பிடுத்தும் விடயங்கள் இருக்கும். பயம் பிறப்பதற்கு இரண்டு அம்சங்கள் அடிப்படை, மிகமுக்கியமானது புரியாமை. அடுத்தது, புரியாத விடயங்களில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள முடியாது என்ற அங்கலாய்ப்பு. புரியாத விடயங்களைப் புரிவதற்கு முனைவது கடினமானது, அதற்கு ஒரு விலை உண்டு, அந்த விலையினைப் கொடுப்பதற்குப் பதில் பொதுப்புத்தி புரியாத விடயங்களை அகற்றிவிடல் வினைத்திறன் மிக்கது என்று எடுத்துரைக்கும். உடனே புரியாதன சார்ந்து நாம் காறித்துப்பத் தொடங்கி விடுகிறோம்.

சனநெரிசலான இடத்தில் ஒரு மனிதனின் காம உணர்வுகள் அறைக்குள் இருப்பதைப் போல் இருக்காது என்ற உங்களின் உதாரணத்திற்கு வருவோம். சமூகம் பொதுவெளி நாகரிகம் என்று ஒன்றை வரையறுத்துள்ளது. ஓத்துக்கொள்கிறேன். அவ்விதிப்படி மனிதன் உடைகளிற்குள் உடலை மறைத்துத் தான் வருகிறான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அனைவரது மனங்களும் விதிகளின் பரிந்துரைக்கேற்ப மட்டுமே சிந்திக்கும் என்பது ஏற்புடையதல்ல. சனக்கூட்டத்தில் சில மனிதர்கள் காமம் சார்ந்து விதிமுறித்துச் சிந்திக்கமுடியும். சுpலர் உடமைகளைக் கொள்ளையடித்தல் சார்ந்து விதிமுறித்துச் சிந்திக்கமுடியும். சுpலரிற்கு அர்த்தமின்றி துவேசம் மற்றும் வெறுப்பு உணர்வுகள் தோன்றி கூட்டத்தில் சிலரைக் கொன்றுவிடத்தோன்றும். இப்படி சமூக ஒழுங்குகளி;ற்கு முரணான எத்தனையோ எண்ணங்கள் சர்வசாதாரணமாய் சனக்கூட்டத்தில் நிகழும். 

ஆனால் பெரும்பான்மை மனிதரிற்குள் புகுத்தப்பட்டிருக்கும் ஒழுக்கம் என்ற மென்பொருள் அத்தகைய விதிமுறித்தல்களை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தும். சிலர் சற்று சாகச உணர்வில் கட்டுண்டு கொஞ்சம் விதிமுறிப்பர் (நமது திரைப்படங்கள் காட்டும் பேருந்து உரசல்கள் போல). மிகச்சிலரில் ஒழுக்க மென்பொருள் வினைத்திறனற்றுப் போகும். அதை நாம் மறுத்து விட முடியாது.
சமூகத்தின் ஒழுக்கம் என்பது தன்னைத் தக்கவைத்தல் என்ற ஒரே நோக்கத்தில் எழுவது. இது அனைத்து உயிரனத்திற்குமான பொதுப்பெறுமதி என்பதனால் ஒழுக்கம் சாத்தியப்படுகிறது. ஆனால் பிறழ்வுகள் இல்லாது கூர்ப்பு இல்லை. மரபணுக்களின் திரிபுகள் கூட ஒருவகையில் பார்த்தால் பிறழ்வுகள் தானே. அக்கா அம்மா தங்கை மகள் ஏன் நண்பி சார்ந்து கூட மனிதனின் மனம் ஒழுக்க விதிகளின் படி மட்டும் தான் சிந்திக்கும் என்ற நிலை நன்றாகத் தான் இருக்கும் ஆனால் இயற்கை அவ்வாறானது அல்ல. பிறழ்வான எண்ணங்கள் தோன்றும் போது அதை மனதின் அடி ஆழத்திற்குள் புதைத்துவிட முனைவது இயல்பு. பலரிற்கு அது சாத்தியப்படும். சுpலரிற்கு இது முடியாது இருக்கும். 

பெண்களின் உடலியல் வளர்ச்சிகள் சார்ந்து சமூகம் கூட்டாக அணுகுகிறது. ஆனால் ஆண்களின் உடல் சார்ந்து பொதுப்பேச்சு மிகக்குறைவு, அதுவும் பேசாப்பொருட்கள் கோலோச்சும் புராதன சமூகங்களில் இது அதிகம். பதின்மத்தில் உடல் வளர்சியில் நித்திரையில் நிகழும் விந்துவெளியேற்றங்களோடு சம்பந்தப்பட்ட கனவுகளில் மிகப்பெரும்பான்மையானவை ஒழுங்களை மீறுவனவாகவே அமையும். அப்படி இருக்கையில் சித்தசுவாதீனம் உள்ள மனிதரின் மனங்களில் அனைத்தும் ஒழுக்கங்களின் பிரகாரம் மட்டுமே நிகழும் என்று நினைப்பது சாத்தியமற்றது.

இந்தக்கதை ஒருவேளை சோபாசகத்திக்கு நிகழாது, இது வாக்குமூலமாக அல்லாது, திரு குடும்பம் உண்மையில் இல்லாது, வெறும் கற்பனையில் நிகழ்ந்ததாகக் கூட இருக்கலாம். இது ஒருவேளை சோபாசக்தியின் கவனிப்புப் பெறுவதற்கான தற்கொலைத்தாக்குதல் முயற்சியாகக் கூட இருக்கலாம். ஆனால் இங்கு பேசப்பட்ட விடயம் சமூகத்தில் இல்லாது இல்லை. 

  • Like 3

Share this post

Link to post
Share on other sites

இங்கு நடந்த சகல கருத்தாடல்களை மட்டும் தான் பார்த்துள்ளேன்.கதை வாசிக்கவில்லை.வாசித்து பின் கருத்து எழுதாலாம் என்று இருக்கிறேன்.இன்நொருமவன் அடிக்கடி களத்துக்கு வர வேண்டும் என விரும்பிருவர்களில் நானும் ஒருவன்.

Share this post

Link to post
Share on other sites

இன்னுமொருவன் நீங்கள் என்னிடம் பல முறை கேட்கநினைத்து மறந்து போன விடயங்களை எழுதியிருந்தீர்கள் உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருப்பதால் பதில் எழுத  தயக்கமாக இருந்ததால் பதில் எழுத தாமதித்து விட்டேன். மன்னிக்கவும்.; உங்கள் கணிப்புக்கு நன்றிகள்.

Share this post

Link to post
Share on other sites
On 24/03/2017 at 3:08 PM, ரதி said:

சுகன்,அப்படியாயின் சமூகத்தின் இருட்டு பக்கங்களை ஒருத்தரும் எழுதக் கூடாதா?....அப்படி எழுதினால் சமுதாயம் கெட்டு விடுமா?...இருட்டு பக்கங்கள் மூலம் எப்படி ஒரு மனிதன் இந்த உலகத்தில் வாழ்க் கூடாது எனத் தெரிந்து கொள்ளமாம் தானே:unsure:

சமூகத்தின் இருட்டுப் பக்கத்தை யாரும் எழுதக் கூடாது என்பது எனது கருத்தல்ல. இதை இருட்டுப் பக்கத்திற்கு அடயாளப்படுத்துவது தான் ஏற்புடையதல்ல என்பதே எனது கருத்து. இந்த சம்பவத்தின் ஊடாக சமூகத்தின் இருட்டுப் பக்கத்தை நாம் புரிந்துகொள்ளதில் உடன் பாடு இல்லை. 

சம்மந்தப்பட்டவர் பாலிலயல் வரட்சிக்கு உட்பட்டவர் இல்லை. அவருக்கு பெண் உடல் முன்போல் ஈர்பதில்லை என்றும் கூறுகின்றார். சிறுமியின் தகப்பன் பாலியல் ரீதியான அத்துமீறலை செய்து அதற்கு நபர் தண்டனையும் வழங்கியுள்ளார். சம்மந்தப்பட்டவர் பாலியல் சார்ந்த நூல்களைப் படித்துள்ளார். சம்மந்தப்பட்டவருக்கு தூக்கத்தில் ஸ்கலிதமாகியதையும் சொல்லியுள்ளார். காந்திக்கு எழுபது வயதில் நடந்ததை உதாரணமா கூறியுள்ளார். 

சம்மந்தப்பட்டவர் சிறுமியைய வன்புணர்வுக்கு உட்படுத்தவில்லை. எதுவிதமான துஸ்பிரயோகமும் செய்யவில்லை. சிறுமிக்கு எதுவும் தெரியாது. சிறுமியால் உணரப்படவில்லை. சட்டட ரிதியில் எந்த சிக்கலுக்குள்ளும் இந்த சம்பவம் செல்லாது. சிறுமி இறுக்காவிட்டால் இந்த சம்பவம் வெளிவந்திருக்குமா இல்லையா என்பது சந்தேகமே !

இந்த சம்பவத்தில் சிறுமி நபர் மடியில் எவ்வளவு நேரம் இருந்தார் என்பது தெரியாது. அது குறித்த குறிப்பு இல்லை. இவர் உடலில் மாறுதல் ஏற்படும் போது வாஷ்ரூம் போகவேணும் என்று சந்தர்ப சூழலை மாற்ற முனையவில்லை. 

இங்கே குற்றம் ? அல்லது குற்ற உணர்வை முன்வைப்பது அதை நியாயப்படுத்துவதற்கான பின்புலக் காரணங்களை விபரிப்பது ஏன் நடந்தது என்று சிந்திப்பது காறித்துப்பி தனக்குத் தானே தண்டிப்பது என அனைத்தும் நபரே செய்கின்றார்  விரும்பினால் குற்றவாளியும் அவரே நீதிபதியும் அவரே. வாசகனுக்கு இங்கே மிச்சம் இருப்பது எதுவும் இல்லை. 

தீவிரமான பாலியல் வரட்சிக்கு உட்பட்டு. விரக்கதி பாதிப்புகளை பின்புலத்தில் சந்தித்து குற்ற உணர்வுக்கு அப்பாற்பட்டு ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்து அது உளவியல் சார்ந்தோரல் ஆரயப்பட்டு அதை நாம் அறியும் பட்சத்தில் அதன் புரிதல் வேறு. இந்தச் சம்பவத்தின் புரிதல் வேறு.

இதை ஒரு சமூக இருட்டை அடயாளப்படுத்தும் விளக்கக அதைக் கொண்டு தேட முற்படின். இருட்டுக்குள் ஒருவர் நபர் போலவே நிற்பார். என்ன செய்ய முடியும் ? ஐயோ பாவம் என்று விட்டு திரும்ப வேண்டியதுதான்.

இதிலிருந்து சுதாரித்துக்கொள்வதானால் குடும்பத்தில் தந்தையின் நண்பர்கள் வரும்போது பெண் குழந்தைகளை "அங்கிள் வாரர் ஓடி ஒழிந்துகொள்ளுங்கள் "  என்பது போல் ஆகிவிடும்.

இது சமூக்தின் இருட்டுப்பக்கத்தின் இயல்பு அல்லது அடயாளம் என்பது ஒரு விபரீதத்தை ஆமோதிப்பதாகும். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற எங்கள் வழக்கும் அன்பு பாசம் நட்பு நண்பன் என்ற மானுடத்தின் உயர்ந்த குணங்களும் நிர்மூலமாகும். விதிவிலக்குகள் விதிகளாக அடயாளப்படுத்த முடியாது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

மற்றபடி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம் உண்டு. அவைகளை உள்வாங்கிக் கொள்கின்றேன். 

On 25/03/2017 at 10:42 AM, Innumoruvan said:

நன்றி உங்கள் கருத்திற்கு சுகன். உண்மையில் விவாதங்கள் இன்றைய நிலையில் பண்டைய விடயமாகிப்போய்விட்டன. சந்தை அதையே விரும்புகிறது. அதனால் உங்களைப் போன்ற ஆழ்ந்த விவாதங்கள் எதிர்த்தரப்பி;ல் அமையும் போது மகிழ்வாக இருக்கிறது—விவாதிக்கச் சந்தர்ப்பம் கிடைப்பதனால்.

உங்கள் கருத்தில் இருக்கும் கோபம் புரிகிறது. ஆனால் என்னால் உடன் படமுடியவில்லை. அதற்கான காரணத்தைச் சொல்ல முன்னர், இப்படி சோபாசக்த்தி எழுதியதால் அவரிற்கு கிடைக்கும் உளவியல் பற்றி பேச முனைவதற்கு முன்னர், குறைந்தபட்ச பொதுநலம் என்று ஒன்றைத் தன்னும் கூறலாம். 

அதாவது, சோபா தன்னாலே புரியமுடியாத பிறழ்வு ஒன்று தனக்குள் நிகழ்வதாகத் தானே கூறுகிறார். இது சார்ந்து அவர் விமோசனம் தேடுகையில், சோபாசக்த்தியினைத் தெரிந்த, திரு போன்ற இதர பெற்றோர்கள், சோபாவின் மடியில் குழந்தைகள் அமர்வதைத் தவிர்க்கலாம். உலகில் கட்டுப்பாட்டை மீறிய பிறழ்வுகள் இருக்கவே செய்கின்றன. மிகப்பெரும்பான்மையான நேரங்களில் அத்தகைய பிறழ்வுகளை தம்மில் உணர்பவர்கள் இருட்டிற்குள் சென்றுவிடுகிறார்கள். தீர்வைத் தேடுவதற்குப் பதில் தொடர்ந்து துன்பம் விளைவித்தபடி வாழ்கிறார்கள். அந்தவகையில், தனது பிறழ்வைப் பொதுவெளியில் பேசுவதைப் பாராட்ட வேண்டும். குறைந்தபட்சம், இருட்டில் ஒரு குருடன் விளக்கினை எடுத்துச் செல்வது போலாவது இதனைப் பார்க்கலாம். தனக்குத் தான் ஒளி தெரியவில்லை என்றாலும், மற்றையவர்கள் அந்த ஒளியினைப் பார்த்துத் தன்னோடு மோதாது செல்லட்டும் என்ற அளவிலேனும் இந்தக் கதையினை ஒரு குப்பி விளக்காகவேனும் பார்க்க முடியும். 

இனி சமூகம் என்பது என்னதான் பொதுமையானதாய் உணரப்பட்டுப் போதிக்கபடினும், அதன் பிரயோகம் என்பது ஒவ்வொரு மனிதனதும் தனித்துவத்தில் தான் தங்கியிருக்கிறது. சமூகமாக வாழ்வதற்கு இன்ன விடயங்கள் அனுகூலமானவை என்பதில் பொது உடன்பாடு அடையப்படினும், சமூகத்தால் சராசரி மனிதனிற்கான விதிகளையே அடையமுடியும். விதிமுறித்தல் நாளாந்தம் அனைத்து முனைகளிலும் நடந்தவண்ணமே இருக்கின்றன--இல்லாது போனால் சமூகத்தில் ஏழை பணக்காரன் எங்கனம் சாத்தியம்? 

சுpல விதிமீறல்களைச் சமூகம் வியப்புடன் பார்க்கும், கைதட்டவும் கூடும். சுpலவற்றைக் காறித்துப்பும். சுமூகம் காறித்துப்பும் அனைத்து விதிமுறித்தல்களில் சமூக்தினைப் பயப்பிடுத்தும் விடயங்கள் இருக்கும். பயம் பிறப்பதற்கு இரண்டு அம்சங்கள் அடிப்படை, மிகமுக்கியமானது புரியாமை. அடுத்தது, புரியாத விடயங்களில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள முடியாது என்ற அங்கலாய்ப்பு. புரியாத விடயங்களைப் புரிவதற்கு முனைவது கடினமானது, அதற்கு ஒரு விலை உண்டு, அந்த விலையினைப் கொடுப்பதற்குப் பதில் பொதுப்புத்தி புரியாத விடயங்களை அகற்றிவிடல் வினைத்திறன் மிக்கது என்று எடுத்துரைக்கும். உடனே புரியாதன சார்ந்து நாம் காறித்துப்பத் தொடங்கி விடுகிறோம்.

சனநெரிசலான இடத்தில் ஒரு மனிதனின் காம உணர்வுகள் அறைக்குள் இருப்பதைப் போல் இருக்காது என்ற உங்களின் உதாரணத்திற்கு வருவோம். சமூகம் பொதுவெளி நாகரிகம் என்று ஒன்றை வரையறுத்துள்ளது. ஓத்துக்கொள்கிறேன். அவ்விதிப்படி மனிதன் உடைகளிற்குள் உடலை மறைத்துத் தான் வருகிறான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அனைவரது மனங்களும் விதிகளின் பரிந்துரைக்கேற்ப மட்டுமே சிந்திக்கும் என்பது ஏற்புடையதல்ல. சனக்கூட்டத்தில் சில மனிதர்கள் காமம் சார்ந்து விதிமுறித்துச் சிந்திக்கமுடியும். சுpலர் உடமைகளைக் கொள்ளையடித்தல் சார்ந்து விதிமுறித்துச் சிந்திக்கமுடியும். சுpலரிற்கு அர்த்தமின்றி துவேசம் மற்றும் வெறுப்பு உணர்வுகள் தோன்றி கூட்டத்தில் சிலரைக் கொன்றுவிடத்தோன்றும். இப்படி சமூக ஒழுங்குகளி;ற்கு முரணான எத்தனையோ எண்ணங்கள் சர்வசாதாரணமாய் சனக்கூட்டத்தில் நிகழும். 

ஆனால் பெரும்பான்மை மனிதரிற்குள் புகுத்தப்பட்டிருக்கும் ஒழுக்கம் என்ற மென்பொருள் அத்தகைய விதிமுறித்தல்களை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தும். சிலர் சற்று சாகச உணர்வில் கட்டுண்டு கொஞ்சம் விதிமுறிப்பர் (நமது திரைப்படங்கள் காட்டும் பேருந்து உரசல்கள் போல). மிகச்சிலரில் ஒழுக்க மென்பொருள் வினைத்திறனற்றுப் போகும். அதை நாம் மறுத்து விட முடியாது.
சமூகத்தின் ஒழுக்கம் என்பது தன்னைத் தக்கவைத்தல் என்ற ஒரே நோக்கத்தில் எழுவது. இது அனைத்து உயிரனத்திற்குமான பொதுப்பெறுமதி என்பதனால் ஒழுக்கம் சாத்தியப்படுகிறது. ஆனால் பிறழ்வுகள் இல்லாது கூர்ப்பு இல்லை. மரபணுக்களின் திரிபுகள் கூட ஒருவகையில் பார்த்தால் பிறழ்வுகள் தானே. அக்கா அம்மா தங்கை மகள் ஏன் நண்பி சார்ந்து கூட மனிதனின் மனம் ஒழுக்க விதிகளின் படி மட்டும் தான் சிந்திக்கும் என்ற நிலை நன்றாகத் தான் இருக்கும் ஆனால் இயற்கை அவ்வாறானது அல்ல. பிறழ்வான எண்ணங்கள் தோன்றும் போது அதை மனதின் அடி ஆழத்திற்குள் புதைத்துவிட முனைவது இயல்பு. பலரிற்கு அது சாத்தியப்படும். சுpலரிற்கு இது முடியாது இருக்கும். 

பெண்களின் உடலியல் வளர்ச்சிகள் சார்ந்து சமூகம் கூட்டாக அணுகுகிறது. ஆனால் ஆண்களின் உடல் சார்ந்து பொதுப்பேச்சு மிகக்குறைவு, அதுவும் பேசாப்பொருட்கள் கோலோச்சும் புராதன சமூகங்களில் இது அதிகம். பதின்மத்தில் உடல் வளர்சியில் நித்திரையில் நிகழும் விந்துவெளியேற்றங்களோடு சம்பந்தப்பட்ட கனவுகளில் மிகப்பெரும்பான்மையானவை ஒழுங்களை மீறுவனவாகவே அமையும். அப்படி இருக்கையில் சித்தசுவாதீனம் உள்ள மனிதரின் மனங்களில் அனைத்தும் ஒழுக்கங்களின் பிரகாரம் மட்டுமே நிகழும் என்று நினைப்பது சாத்தியமற்றது.

இந்தக்கதை ஒருவேளை சோபாசகத்திக்கு நிகழாது, இது வாக்குமூலமாக அல்லாது, திரு குடும்பம் உண்மையில் இல்லாது, வெறும் கற்பனையில் நிகழ்ந்ததாகக் கூட இருக்கலாம். இது ஒருவேளை சோபாசக்தியின் கவனிப்புப் பெறுவதற்கான தற்கொலைத்தாக்குதல் முயற்சியாகக் கூட இருக்கலாம். ஆனால் இங்கு பேசப்பட்ட விடயம் சமூகத்தில் இல்லாது இல்லை. 

நன்றி இன்னுமொருவன்

உங்கள் பார்வையின் பெரும்பான்மையான நியாயம் ஏற்றுக்கொள்ளக் கூடியது. இந்தச் சம்பவத்தை சமூக வெளிக்குள் நகர்த்தி அதன் இருட்டுப் பக்கத உணர்வது என்பதில் உடன் பாடு இல்லை. ஏனேனில இக்கதையில் ஒரு புத்திசாலித்தனம் உளவியல் கேம் ஆடியிருந்தால்... என்றோரு சந்தேகம் விசாரணைக் கோணத்திலேயே இக்கதையை அணுக என்னை தூண்டுகின்றது. சந்தேகத்துக்கு உட்பட்ட எதுவும் சமூகத்தின் எந்தப் பக்கத்தையும் அடயாளப்படுத்துவதில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் விருப்பம் இல்லை.  

மேலும் கதையை விட உங்கள் பதிவினூடாக நிறைய சிந்திக்க முடிந்தது. அந்தவகையில் உங்களுக்கு நன்றி. அடிக்கடி எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். 

Share this post

Link to post
Share on other sites
On ‎28‎/‎03‎/‎2017 at 2:27 AM, சண்டமாருதன் said:

சமூகத்தின் இருட்டுப் பக்கத்தை யாரும் எழுதக் கூடாது என்பது எனது கருத்தல்ல. இதை இருட்டுப் பக்கத்திற்கு அடயாளப்படுத்துவது தான் ஏற்புடையதல்ல என்பதே எனது கருத்து. இந்த சம்பவத்தின் ஊடாக சமூகத்தின் இருட்டுப் பக்கத்தை நாம் புரிந்துகொள்ளதில் உடன் பாடு இல்லை. 

சம்மந்தப்பட்டவர் பாலிலயல் வரட்சிக்கு உட்பட்டவர் இல்லை. அவருக்கு பெண் உடல் முன்போல் ஈர்பதில்லை என்றும் கூறுகின்றார். சிறுமியின் தகப்பன் பாலியல் ரீதியான அத்துமீறலை செய்து அதற்கு நபர் தண்டனையும் வழங்கியுள்ளார். சம்மந்தப்பட்டவர் பாலியல் சார்ந்த நூல்களைப் படித்துள்ளார். சம்மந்தப்பட்டவருக்கு தூக்கத்தில் ஸ்கலிதமாகியதையும் சொல்லியுள்ளார். காந்திக்கு எழுபது வயதில் நடந்ததை உதாரணமா கூறியுள்ளார். 

சம்மந்தப்பட்டவர் சிறுமியைய வன்புணர்வுக்கு உட்படுத்தவில்லை. எதுவிதமான துஸ்பிரயோகமும் செய்யவில்லை. சிறுமிக்கு எதுவும் தெரியாது. சிறுமியால் உணரப்படவில்லை. சட்டட ரிதியில் எந்த சிக்கலுக்குள்ளும் இந்த சம்பவம் செல்லாது. சிறுமி இறுக்காவிட்டால் இந்த சம்பவம் வெளிவந்திருக்குமா இல்லையா என்பது சந்தேகமே !

இந்த சம்பவத்தில் சிறுமி நபர் மடியில் எவ்வளவு நேரம் இருந்தார் என்பது தெரியாது. அது குறித்த குறிப்பு இல்லை. இவர் உடலில் மாறுதல் ஏற்படும் போது வாஷ்ரூம் போகவேணும் என்று சந்தர்ப சூழலை மாற்ற முனையவில்லை. 

இங்கே குற்றம் ? அல்லது குற்ற உணர்வை முன்வைப்பது அதை நியாயப்படுத்துவதற்கான பின்புலக் காரணங்களை விபரிப்பது ஏன் நடந்தது என்று சிந்திப்பது காறித்துப்பி தனக்குத் தானே தண்டிப்பது என அனைத்தும் நபரே செய்கின்றார்  விரும்பினால் குற்றவாளியும் அவரே நீதிபதியும் அவரே. வாசகனுக்கு இங்கே மிச்சம் இருப்பது எதுவும் இல்லை. 

தீவிரமான பாலியல் வரட்சிக்கு உட்பட்டு. விரக்கதி பாதிப்புகளை பின்புலத்தில் சந்தித்து குற்ற உணர்வுக்கு அப்பாற்பட்டு ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்து அது உளவியல் சார்ந்தோரல் ஆரயப்பட்டு அதை நாம் அறியும் பட்சத்தில் அதன் புரிதல் வேறு. இந்தச் சம்பவத்தின் புரிதல் வேறு.

இதை ஒரு சமூக இருட்டை அடயாளப்படுத்தும் விளக்கக அதைக் கொண்டு தேட முற்படின். இருட்டுக்குள் ஒருவர் நபர் போலவே நிற்பார். என்ன செய்ய முடியும் ? ஐயோ பாவம் என்று விட்டு திரும்ப வேண்டியதுதான்.

இதிலிருந்து சுதாரித்துக்கொள்வதானால் குடும்பத்தில் தந்தையின் நண்பர்கள் வரும்போது பெண் குழந்தைகளை "அங்கிள் வாரர் ஓடி ஒழிந்துகொள்ளுங்கள் "  என்பது போல் ஆகிவிடும்.

இது சமூக்தின் இருட்டுப்பக்கத்தின் இயல்பு அல்லது அடயாளம் என்பது ஒரு விபரீதத்தை ஆமோதிப்பதாகும். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற எங்கள் வழக்கும் அன்பு பாசம் நட்பு நண்பன் என்ற மானுடத்தின் உயர்ந்த குணங்களும் நிர்மூலமாகும். விதிவிலக்குகள் விதிகளாக அடயாளப்படுத்த முடியாது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

மற்றபடி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம் உண்டு. அவைகளை உள்வாங்கிக் கொள்கின்றேன். 

நன்றி இன்னுமொருவன்

உங்கள் பார்வையின் பெரும்பான்மையான நியாயம் ஏற்றுக்கொள்ளக் கூடியது. இந்தச் சம்பவத்தை சமூக வெளிக்குள் நகர்த்தி அதன் இருட்டுப் பக்கத உணர்வது என்பதில் உடன் பாடு இல்லை. ஏனேனில இக்கதையில் ஒரு புத்திசாலித்தனம் உளவியல் கேம் ஆடியிருந்தால்... என்றோரு சந்தேகம் விசாரணைக் கோணத்திலேயே இக்கதையை அணுக என்னை தூண்டுகின்றது. சந்தேகத்துக்கு உட்பட்ட எதுவும் சமூகத்தின் எந்தப் பக்கத்தையும் அடயாளப்படுத்துவதில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் விருப்பம் இல்லை.  

மேலும் கதையை விட உங்கள் பதிவினூடாக நிறைய சிந்திக்க முடிந்தது. அந்தவகையில் உங்களுக்கு நன்றி. அடிக்கடி எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். 

உந்த சம்பவம் அவரின்ட மனதை உறுத்தியிருக்கும்...யாருக்காவது சொல்லோனும் என்று நினைச்சிருப்பார்...எழுத்தாற்றல் இருப்பதால் எழுதி தன்ட மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்திருக்கலாம்.

Share this post

Link to post
Share on other sites
On 25/03/2017 at 4:56 AM, சண்டமாருதன் said:

அவருக்கு குற்ற உணர்வு இருப்பின் மன வள மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம் தவிர அவரின் இப் பதிவு சமூகத்தின் இருட்டுப்பக்கங்களை பார்பதற்கு வழிசெய்கின்றது எனபதற்கில்லை. அலலது சமூகத்தின் இருட்டுப்பக்கங்கள் இப்படியானது என்று இருட்டின் இயல்பாகவும் இதைக் கருத முடியாது. சமூகத்தில் அங்காங்கே நடக்கும் நடைமுறையில் இருந்து விலகிய செயற்பாடுகளை சமூகத்தின் இருட்டுப்பக்கத்தின் இயல்பு என சொல்வதற்கில்லை

On 18/03/2017 at 10:39 AM, Innumoruvan said:

. ஒரு வேளை ஒரு இலக்கிய ஜாம்பவானின் மனத்தில் கற்பனையின் வீச்சு என்னைப் போன்ற சாதாரண மனிதர் புரியமுடியாப் பரிமாணத்தில் இருக்கலாம்.

 பிராண்ஸில் வெளியான‌ குறும்பட‌ வட்டத்தில் உள்ளவ்ர்களின் மத்தியில் உருவாக்கி வைத்துள்ள‌ விமபமும் தமிழ்ர்களின் இலக்கிய மட்டத்தில் உருவாக்கிய விம்பமும் வேறு வேறாக  இருக்கும் என்பது எனது கணிப்பு....

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this