Jump to content

இரண்டே வாரங்களில் விமான நிலையம் தயார்; ஆனால் மக்களுக்குப் பயனில்லை!


Recommended Posts

இரண்டே வாரங்களில் விமான நிலையம் தயார்; ஆனால் மக்களுக்குப் பயனில்லை!

 

 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் திருத்த வேலைகள் மற்றும் விமான ஓடுபாதைகளைச் சீரமைக்கும் பணிகள் இன்னும் இரு வாரங்களில் பூர்த்தியாகும் எனத் தெரியவருகிறது.

13_BIA.jpg

இது பற்றித் தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரியொருவர், இன்னும் இரண்டு வாரங்களில் விமான நிலையத்தை முழுமையாகத் திறந்துவிட ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், எனினும், இதனால் பயணிகளுக்கு எந்தவித நன்மையும் உடனடியாகக் கிடைத்துவிடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

விமான நிலையத் திருத்தப் பணிகள் நிறைவுற்றாலும் சர்வதேச விமான சேவைகள் உடனடியாகத் தமது பயணத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்வதில் சிக்கல்கள் இருப்பதால், சர்வதேச விமானச் சேவைகள் தற்போது நடைமுறையில் இருப்பது போலவே மாலை 6 மணி முதல் காலை 8.30 மணிவரை மட்டுமே நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், இந்தியாவுக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சேவைகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை உடனடியாகச் செய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பெரும்பாலான சீனர்கள் மத்தள விமான நிலையத்தையே பயன்படுத்துவதாகவும், இதனால் பண்டாரநாயக்க விமான நிலையம் இயல்பு நிலைக்கு வரும் வரையில் மத்தள விமான நிலையப் பயன்பாட்டை நிறுத்திவிட வேண்டாமென்றும் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பயண நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

http://www.virakesari.lk/article/17783

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ கடவுளேயெண்டு இஞ்சத்தை சமர் லீவு வரேக்கை அங்கையெல்லாம் ஓகே ஆகிடணும்.:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஏதோ கடவுளேயெண்டு இஞ்சத்தை சமர் லீவு வரேக்கை அங்கையெல்லாம் ஓகே ஆகிடணும்.:(

ஏன் அண்ண அங்க போற  ஜடியா  ஏதும்  இருக்கா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நந்தன் said:

ஏன் அண்ண அங்க போற  ஜடியா  ஏதும்  இருக்கா 

சீ..ச்சீ....நானாவது போறதாவது tw_angry:
உவன் ஏகாம்பரத்தின்ரை மூத்தவன் சமர் லீவுக்கு ஒருக்கால் வெள்ளைச்சியோடை நல்லூருக்கு போகோணுமெண்டு ஆசைப்படுறான்.அதுதான் சும்மா ஒரு வேண்டுதல் :grin:

Link to comment
Share on other sites

14 hours ago, நவீனன் said:

விமான நிலையத் திருத்தப் பணிகள் நிறைவுற்றாலும் சர்வதேச விமான சேவைகள் உடனடியாகத் தமது பயணத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்வதில் சிக்கல்கள் இருப்பதால், சர்வதேச விமானச் சேவைகள் தற்போது நடைமுறையில் இருப்பது போலவே மாலை 6 மணி முதல் காலை 8.30 மணிவரை மட்டுமே நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த தகவல் சரியான தகவல் இல்லை எண்டு நினைக்கிறன். எனனென்றல், பெரும்பாலான விமான நிறுவனங்கள் (கத்தார் ஏர்வேஸ், எமிரேட்ஸ் airline, Ethiad airline ....) தங்களது இணையத் தளத்தில், ஏப்ரல் முதல் வாரத்துக்கு பின்னர், காலை 8.30கு பிறகும் கொழும்பில் தரையிறங்கும் விமானங்களிற்கான thicketsஐ விற்பனைக்கு விட்டுள்ளன.  அந்தந்த விமான நிறுவனங்களின் இணையத் தளத்தில் இதை செக் பண்ண முடியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.