Jump to content

பால் சுரக்கும் ஆண்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பால் சுரக்கும் ஆண்கள்.

தாத்தாவை சீண்டி விட்டு 

தாவி ஓடுகையில் தாவிவரும் 

கைத்தடியும் காலில் பட்டுவிட

பாதத்தில் பால் சுரக்கும்.

 

அழுக்கு முந்தானையில்

அதிரசம் முடிந்து வைத்து 

உனக்குத்தான், ஒழிச்சு சாப்பிடு 

என்ற பாட்டியின் பாசத்தில் - என் 

கேசத்தில் பால் சுரக்கும்.

 

கன்னத்தில் நீர் உறைந்திருக்க 

கட்டிலில் தான் படுத்திருக்க 

தான் அடித்த தழும்பில் பரிவுடன்  

தடவிடும் தந்தை கையில் பால் சுரக்கும்.

 

அண்ணனுக்கு அடித்ததென்று 

கன்னத்தில் அடித்துவிட்டு கிட்ட வந்து 

பாக்கட்டில் பணம் வைக்கும் 

சித்தப்புவிடம் பால் சுரக்கும்.

 

ஆடுபுலி ஆடடத்தில் அளாப்பி 

விளையாட அக்காவும் அழுதுநிக்க 

அங்குவரும் மாமாவின் கையின் 

கிளுவந் தடியில்  பால் சுரக்கும்.

 

எண்ணை வைக்க அடம்பிடிக்கும் 

என்னை இழுத்துவைத்து ரண்டு குட்டும்

 நாலு குத்தும் அம்மா போட உச்சியிலும்

முதுகிலும் உண்மையாய் பால் சுரக்கும்.

 

களைத்து வரும் வேளை காத்திருந்து 

முத்தத்தால் முகம் துடைத்து 

கட்டியவள் காப்பிதர இரு 

கண்களிலும் பால் சுரக்கும்.

 

எகிறிவரும் எட்டுவயது மகள் 

பாய்ந்து மார்பினில் ஒட்ட 

பக்குவமாய் பற்றிக் கொள்ளும் 

பத்து விரலும் பால் சுரக்கும்.

 

எழுதும் பேனாவை ஒன்று பறிக்க - எழுதிய

தாளை இரண்டு இழுக்க தாத்தாவை 

தள்ளி விட்டு  முதுகில்  துள்ளியாட 

பேரனின் தேகமெங்கும் பால் சுரக்கும்....!

 

யாழ் இணையம், சுய ஆக்கம் சுவி....!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர்ரை சுய சரிதை போலை கிடக்கு....:)
பழைய நினைவுகளை கிளறிய கவிதை.....tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது வீடுகளில் அன்றாடம் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளை பால் சுரக்கும் மூலம் அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையெனும் வீணையின் நரம்புகளை....அனுபவங்கள் எனும் விரல்கள் அழகாக மீட்டியிருக்கின்றன!

விளைவு....சுவியரின் கவிதை!

அழகு...சுவியர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

கடந்த கால அனுபவங்களை மீட்க வைக்கும் அழகிய கவிதை  வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதும் பேனாவை ஒன்று பறிக்க - எழுதிய

தாளை இரண்டு இழுக்க தாத்தாவை 

தள்ளி விட்டு  முதுகில்  துள்ளியாட 

பேரனின் தேகமெங்கும் பால் சுரக்கும்....!

 

 மிக மிக அருமை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14.3.2017 at 11:08 AM, suvy said:

கன்னத்தில் நீர் உறைந்திருக்க 

கட்டிலில் தான் படுத்திருக்க 

தான் அடித்த தழும்பில் பரிவுடன்  

தடவிடும் தந்தை கையில் பால் சுரக்கும்.

அருமையான நினைவு மீட்டல், சுவி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய கவிதை  

Link to comment
Share on other sites

ஆண்கள் தோற்றத்தில் முரடாயினும் பாசத்தில் மிக மென்மையானவர்கள். பெண்கள் அழுது கரைந்தாலும் ரப்பர் போன்றவர்கள் லேசில் உடைய மாட்டார்கள். ஆண்கள் அன்பு பாசம் போன்றவற்றில் அதிகம் உடைந்துபோவர்கள்.

Link to comment
Share on other sites

நல்ல கவிதை சுவி அண்ணா. அப்பாவி ஆண்கள் எங்களுக்காக நாங்கள் தான் எழுதி ஆறுதல் பட வேண்டி இருக்கு

4 hours ago, சண்டமாருதன் said:

ஆண்கள் தோற்றத்தில் முரடாயினும் பாசத்தில் மிக மென்மையானவர்கள். பெண்கள் அழுது கரைந்தாலும் ரப்பர் போன்றவர்கள் லேசில் உடைய மாட்டார்கள். ஆண்கள் அன்பு பாசம் போன்றவற்றில் அதிகம் உடைந்துபோவர்கள்.

 

உண்மை உண்மை உண்மை...!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 14/03/2017 at 3:40 PM, குமாரசாமி said:

சுவியர்ரை சுய சரிதை போலை கிடக்கு....:)
பழைய நினைவுகளை கிளறிய கவிதை.....tw_thumbsup:

அதே...! அதே ! கு. சா....! அன்று உடலில் வலித்தது , இன்று உணர்வினில் வருடுது....! நன்றி கு. சா...   tw_blush:

On 14/03/2017 at 5:52 PM, ஈழப்பிரியன் said:

எமது வீடுகளில் அன்றாடம் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளை பால் சுரக்கும் மூலம் அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

சில நினைவுகள் வீட்டில் தினமும் வடிக்கும் சாதம்போல. எங்கும் நிகழ்ந்திருக்கும்....! நன்றி ஈழப்பிரியன்....!  tw_blush:

On 14/03/2017 at 10:54 PM, புங்கையூரன் said:

வாழ்க்கையெனும் வீணையின் நரம்புகளை....அனுபவங்கள் எனும் விரல்கள் அழகாக மீட்டியிருக்கின்றன!

விளைவு....சுவியரின் கவிதை!

அழகு...சுவியர்!

அதே...அதே.... வெரி நைஸ்....! நன்றி புங்கை....!  tw_blush:

On 14/03/2017 at 11:02 PM, Kavallur Kanmani said:

கடந்த கால அனுபவங்களை மீட்க வைக்கும் அழகிய கவிதை  வாழ்த்துக்கள்

நீங்களும் நல்லா வாங்கிக் கட்டியிருக்கிறீங்கள் போல.... நன்றி சகோதரி....!  tw_blush:

On 15/03/2017 at 0:05 AM, நிலாமதி said:

எழுதும் பேனாவை ஒன்று பறிக்க - எழுதிய

தாளை இரண்டு இழுக்க தாத்தாவை 

தள்ளி விட்டு  முதுகில்  துள்ளியாட 

பேரனின் தேகமெங்கும் பால் சுரக்கும்....!

 

 மிக மிக அருமை  

இதுதான் இன்றைய யதார்த்தம் சகோதரி.......நன்றி சகோதரி....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/03/2017 at 4:55 AM, தமிழ் சிறி said:

அருமையான நினைவு மீட்டல், சுவி. 

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சிறியர்....!  tw_blush:

On 17/03/2017 at 8:36 PM, Ahasthiyan said:

அழகிய கவிதை  

நன்றி அகஸ்தியன்....!  tw_blush:

On 24/03/2017 at 4:57 PM, சண்டமாருதன் said:

ஆண்கள் தோற்றத்தில் முரடாயினும் பாசத்தில் மிக மென்மையானவர்கள். பெண்கள் அழுது கரைந்தாலும் ரப்பர் போன்றவர்கள் லேசில் உடைய மாட்டார்கள். ஆண்கள் அன்பு பாசம் போன்றவற்றில் அதிகம் உடைந்துபோவர்கள்.

உண்மை சண்டமாருதன் ..... பெண்கள் எதையும் உடனுக்குடனே அழுது கவலையை கரைத்து விடுவார்கள். ஆண்கள்தான் எதையும் தாங்கிக்கொண்டு கடந்து போக வேண்டி உள்ளது....!  tw_blush: 

On 24/03/2017 at 9:31 PM, நிழலி said:

நல்ல கவிதை சுவி அண்ணா. அப்பாவி ஆண்கள் எங்களுக்காக நாங்கள் தான் எழுதி ஆறுதல் பட வேண்டி இருக்கு

 

உண்மை உண்மை உண்மை...!!

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நிழலி.....!  tw_blush:

கருத்துக்கள் பகிர்ந்தவர்களுக்கும் மேலும் விருப்பு புள்ளி இட்டு ஊக்குவித்தவர்களுக்கும் அன்புடன் நன்றிகள்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

On ‎14‎.‎03‎.‎2017 at 11:08 AM, suvy said:

அழுக்கு முந்தானையில்

அதிரசம் முடிந்து வைத்து 

உனக்குத்தான், ஒழிச்சு சாப்பிடு 

என்ற பாட்டியின் பாசத்தில் - என் 

கேசத்தில் பால் சுரக்கும்.

 

எண்ணை வைக்க அடம்பிடிக்கும் 

என்னை இழுத்துவைத்து ரண்டு குட்டும்

 நாலு குத்தும் அம்மா போட உச்சியிலும்

முதுகிலும் உண்மையாய் பால் சுரக்கும்.

இவை என் அனுபவங்கள். மீட்டிப்பார்த்துப் பழைய நினைவுகளைத் தேனாகச் சுவைக்கவைத்த சுவியருக்கு நன்றிகள். Bildergebnis für அழகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யிறதுபாஞ்ச்....வீட்டுக்கு வீடு வாசல்படி.....! நன்றி பாஞ்ச்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.